மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டியூட்’. படத்தின் வெற்றியை கொண்டாடும் […]
சினிமா
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் […]
சினிமா
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் […]
சினிமா
கடலூர் மாவட்டம் ஶ்ரீ முஷ்ணம் வட்டாரத்தில் உள்ள ஶ்ரீ நெடுஞ்சேரி கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பயன்பாட்டிற்காக 2023-2024 ஆம் நிதியாண்டில் கழிவறை கட்டிடம் கட்டப்பட்டது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான கழிவறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுகளைக் கடந்தும், மக்களின் பயன்பாட்டிற்கு […]
தமிழகம்கடலூர் மாவட்டம் ஶ்ரீ முஷ்ணம் வட்டாரத்தில் உள்ள ஶ்ரீ நெடுஞ்சேரி கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பயன்பாட்டிற்காக 2023-2024 ஆம் நிதியாண்டில் கழிவறை கட்டிடம் கட்டப்பட்டது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான கழிவறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுகளைக் கடந்தும், மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருப்பது மிகவும் வேதனையான விஷயமாக அப்பகுதியினர் கருதுகின்றனர்.
மேலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு களை கடந்தும், பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் மெத்தனமாக இருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்வதோடு, கழிவறை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக திறக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
_ பாலகிருஷ்ணன்
தமிழ் திரையுலகின் முன்னணி சண்டை பயிற்சி இயக்குநர் சில்வா. ஸ்டண்ட் சில்வா என அறியப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். சண்டை காட்சிகளில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி […]
சினிமாதமிழ் திரையுலகின் முன்னணி சண்டை பயிற்சி இயக்குநர் சில்வா. ஸ்டண்ட் சில்வா என அறியப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். சண்டை காட்சிகளில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி வரும் ஸ்டண்ட் சில்வா வித்தியாசம் கலந்த விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளை படமாக்குவதில் கைத்தேர்ந்தவர்.
ஸ்டண்ட் மட்டுமின்றி திரையுலகின் பல பரிவுகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார் ஸ்டண்ட் சில்வா. அதன்படி திரைக்கு பிந்தைய பணிகள் தவிர்த்து, பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார். முன்னணி இயக்குநர்கள், திரையுலகின் உச்ச நடிகர்கள் என ஸ்டண்ட் இயக்கத்திலும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதிலும் உச்சம் தொட்டவர் ஸ்டண்ட் சில்வா.

இவரது தலைசிறந்த பணிகளை பாராட்டி பல்வேறு திரைப்படங்களுக்காக இவர் பலமுறை SIIMA விருது, எடிசன் விருது மற்றும் தமிழ் நாடு மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார். இந்த வரிசையில் ஸ்டண்ட் சில்வா தற்போது மனோரமா கேரளா மாநிலம் சார்பில் வழங்கப்பட்ட 2025-ம் ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருதை வென்றுள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கி, நடித்து வெளியான எம்புரான் L2 மற்றும் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற துடரும் ஆகிய படங்களுக்காக ஸ்டண்ட் சில்வாவுக்கு 2025 ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வழங்கி கேரளா மாநில அரசு கவுரவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில், ரஜினிகாந்த், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், அமீர்கான், உபேந்திரா, சவுபின் சாஹிர் உள்ளிட்டோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கூலி”. கதைப்படி.. சென்னையில் மேன்சன் நடத்திவரும் தேவா ( ரஜினி ), […]
விமர்சனம்சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில், ரஜினிகாந்த், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், அமீர்கான், உபேந்திரா, சவுபின் சாஹிர் உள்ளிட்டோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கூலி”.
கதைப்படி.. சென்னையில் மேன்சன் நடத்திவரும் தேவா ( ரஜினி ), தனது நண்பர் ராஜசேகர் ( சத்யராஜ் ) திடீரென மரணம் அடைந்த தகவல் அறிந்து, அவருடைய இறுதிச்சடங்கில் பங்கேற்க விசாகப்பட்டினம் செல்கிறார். அங்கு அவரின் மூத்த மகள் ப்ரீத்தி ( ஸ்ருதிஹாசன் ) தேவாவை அவமானப்படுத்தி வெளியே அனுப்புகிறார். தனது நண்பனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விசாரிக்க தொடங்குகிறார். சில தகவல்கள் அவரை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சின் பின் ஏற்றுமதி நிறுவனம் 14 ஆயிரம் கூலி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் சைமன் ( நாகர்ஜுனா ), அவருக்கு எல்லாமுமாக செயல்படும் தயாளன் ( சவுபின் சாஹிர் ) பற்றியும் கிடைத்த தகவல்கள், தேவாவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, அந்த துறைமுத்திற்குள் சென்று சைமனை சந்திக்க முற்படுகிறார் தேவா.
சைமனின் தொழில்கள் மற்றும் பின்னணி ? தயாளன் யார் ? அவரது பின்னணி என்ன ? இவர்களுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு ? ராஜசேகர் எதற்காக, எப்படி மரணம் அடைந்தார் ? தேவா, ராஜசேகர் நட்பு எத்தகையது ? என்பது மீதிக்கதை..

மேன்சன் ஓனராக ரஜினிகாந்த் தோன்றும் காட்சிகள் தொடங்கி அடுத்தடுத்த காட்சிகள் நகரும்போது, ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிர வைக்கும் அளவுக்கு விருவிருப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். ஆனால் ரஜினியின் வழக்கமான படங்களைவிட சற்று திசைமாறிய திரைக்கதை என்றும் கூட சொல்லலாம். ரஜினி கொடுத்த அழகான வாய்ப்பை இயக்குநர் பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டார் என்றும் சொல்லலாம்.
இளைஞர்களின் இதயத்துடிப்பாக மூன்று தலைமுறைகள் தாண்டியும் எதிர்பார்க்கும் நாயகன் ரஜினியின் தோற்றமும், நடிப்பும் சிறப்பு. ஸ்ருதிஹாசன் இதுவரை நடித்திராத குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்து, எந்த கதாப்பாத்திரத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடிக்கக் கூடிய நடிகை என பெயரெடுத்துள்ளார். திரைக்கதை சற்று மிதமாக நகரும்போது, அனிருத்தின் இசை அந்த குறையை நிவர்த்தி செய்கிறது. அனிருத்தின் இசையே படத்திற்கு பக்கபலம் எனலாம்.
அமீர்கான், ரஜினி சந்திக்கும்போது சொல்லப்படும் ஃப்ளாஷ் பேக் ரசிக்க வைக்கிறது. சவுபின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு […]
சினிமாஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.
‘பேய் கதை’ திரைப்படத்தில் வினோத், ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், ஜீ.வி. மகா, மைக்கேல், ஸ்ரீசுமந்த், ஆஷிக் பீட்டர், ரோடஸ், ஜீவிதா, ருச்சி பிங்க்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரவீண் எஸ். ஜி. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். கலகலப்பும் திகிலும் நிறைந்த குதூகல திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஜெர்ரி’ஸ் ஜர்னி இன்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் ஜெர்ரி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சுரேஷ் வழங்குகிறார்.

ஆகஸ்ட் 29ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஜுன் மோசஸ் பேசுகையில், எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறேன் என நம்புகிறேன்.
படத்தின் இசையமைப்பாளரான போபோ சசி என்னுடைய பால்ய கால நண்பர். அவரும் நானும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். இந்த விழாவிற்கு இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி அவர்களை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தோம். அவர்களும் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் இணைந்து பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை பார்த்து உற்சாகமடைந்து தமிழகம் முழுவதும் வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் சுரேஷூக்கும் நன்றி.
‘பேய் கதை’ கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னர். திரில்லர்-காமெடி -சஸ்பென்ஸ் என ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்களில் ரத்தம், வன்முறை, பயங்கரம் ஆகியவை இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அவை எதுவும் இருக்காது. குழந்தைகள் கூட இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். அவர்களுக்கும் இது ஒரு திரில்லிங்கான தருணமாக இருக்கும். இப்படத்தின் திரைக்கதையில் புதிய முயற்சிகளை செய்திருக்கிறோம். கதை சொல்லும் பாணியிலிருந்தும், அதனை விவரிக்கும் வகையிலும், அதில் உள்ள தொழில்நுட்ப விஷயங்கள் வரை புதிதாக முயற்சித்து இருக்கிறோம். திரையரங்க அனுபவத்திற்காக பல விஷயங்களை புதிதாக செய்திருக்கிறோம். படத்தில் எட்டு நிமிட அளவிற்கு வி ஆர் மோஷன் (V. R. Motion) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறோம். தற்போதுள்ள குழந்தைகள் வி ஆர் மோஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். அவர்களை கவர்வதற்காக தொடர்ந்து எட்டு நிமிட அளவிற்கு இந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இருக்கிறோம். படம் முழுவதும் எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்கள் இருக்கின்றன. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தும். இந்தப் படத்தில் பார்வையாளர்கள் முகம் சுழிக்கும் வகையில் எந்த காட்சியும் இடம்பெறவில்லை. சிறிய முதலீட்டில் உருவாக்கப்பட்ட நல்லதொரு முயற்சி. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

வசனகர்த்தா நவீன் பேசுகையில், இந்தப் படத்திற்காக வசனம் எழுதிய அனுபவமும், அதற்கான பயணமும் வித்தியாசமாக இருந்தது. இயக்குநர் என்னிடம் ரசிகர்களின் கோணத்திலிருந்து உரையாடலை எழுது என்றார். முதல் 15 நிமிடங்களை மட்டும் தான் என்னிடம் எழுதுவதற்காக வழங்கினார்கள். பத்து நாட்கள் எடுத்துக்கொண்டு எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகு படத்தின் முதல் பாதி வரை எழுதிக் கொடுங்கள் என கேட்டனர். அப்போதும் நான் குழம்பினேன். அதன் பிறகு இரண்டாம் பாதி கதையை முழுவதுமாக என்னிடம் விவரித்தார். அதைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியம் அதிகமாகி விட்டது. ஏனெனில் இந்த படத்தில் திரில்லர், சஸ்பென்ஸ் என நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதுவரை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே உரையாடல்களை எழுதி வந்த எனக்கு முதன் முதலாக பெரிய திரையில் உரையாடல் எழுத வாய்ப்பு அளித்துள்ளனர். இதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பாடலாசிரியர் யூகி பிரவீண் பேசுகையில், 2017ம் ஆண்டில் வெளியான ‘அட்டு’ படத்திற்கு அனைத்து பாடல்களையும் எழுதி இருந்தேன். போபோ சசி எனக்கு எல்லா பாடல்களையும் எழுதுவதற்கு வாய்ப்பளித்தார். நான் இதுவரை 30 பாடல்களை எழுதி இருக்கிறேன். இதில் 20 பாடலை போபோ சசிக்காக எழுதியிருக்கிறேன். எங்கள் கூட்டணியில் இன்னும் ஏராளமான ஹிட் பாடல்கள் வரவேண்டும் என பிரார்த்திக்கிறேன். இந்த படத்திலும் எல்லா பாடல்களையும் எழுதும் வாய்ப்பை போபோ சசி அளித்திருக்கிறார். இதற்கு ஒப்புதல் அளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகை ஆஷ் மெலோ பேசுகையில், கன்னடத்தில் நடிகர் துனியா விஜய் உடன் நடித்திருக்கிறேன். தமிழில் நான் நடித்திருக்கும் முதல் படம் இது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள் என்றார்.
நடிகை எலிசபெத் பேசுகையில், இளம் திறமைசாலிகள் இணைந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இப்போது இளம் திறமைசாலிகள் பலரும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்கள். எங்களைப் போன்ற மூத்த நடிகைகளை மறந்து விடுகிறார்கள். இந்தப் படத்திற்கு இசை மிக சிறப்பாக அமைந்திருக்கிறது, படமும் நன்றாக வந்திருக்கிறது, நாயகனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். அனைவரும் பார்த்துவிட்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நடிகை ஜீ.வி.மகா பேசுகையில், இந்தப் படத்தின் மூலமாகத்தான் நான் நடிகையாக அறிமுகமாகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் என்னுடைய நண்பராக இருந்தாலும் ஆடிஷன் வைத்து தான் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு என்னை தேர்வு செய்தார். அத்துடன் எனக்கு அவர் அளித்த ஊக்கம் காரணமாகவே இப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்த திரைப்படம் ஏனைய பேய் படங்களை போல் இல்லை, புதுமையான நாகரீகமான நல்லதொரு ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது என்றார்.

இசையமைப்பாளர் போபோ சசி பேசுகையில், இயக்குநரும், நானும் 25 ஆண்டு கால நண்பர்கள். நாங்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் அதற்கான தருணம் தற்போது தான் அமைந்திருக்கிறது. ‘பேய் கதை’ படத்தை தனித்துவமாக உருவாக்கியிருக்கிறார். தற்போது தான் இப்படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு பணிகளை நிறைவு செய்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது, பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன என்றார்.
இசையமைப்பாளர் சபேஷ் பேசுகையில், படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இயக்குநர் எதையோ புதுமையாக செய்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. படம் சிறப்பாக இருக்கிறது. இந்த விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக இயக்குநர் எங்களை சந்தித்தார். அப்போது நான் உங்களை பார்த்திருக்கிறேன் என அவர் கூறினார் அப்போது அவரிடம் நாங்கள் வருடத்திற்கு 25 திரைப்படங்களில் பணியாற்றினோம். அப்போது கழுத்தை திருப்பி பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு கூட நேரம் இருக்காது. எங்கள் பார்வை முழுவதும் திரையிலும், கீ போர்டிலும் தான் இருக்கும் என்று விளக்கம் அளித்தேன்.
எங்கள் குடும்பத்தை சேர்ந்த இசையமைப்பாளர் போபோ சசி இதில் பணியாற்றி இருக்கிறார். தற்போதெல்லாம் ஒரு பாடல் நிலைத்து நிற்கிறது என்றால் அது வெஸ்டர்ன் பாணியிலான பாடலாக இருந்தாலும் அதில் சிறிதளவு மெலோடி இடம்பெற்றிருக்க வேண்டும். மெலோடி இருந்தால்தான் அந்தப் பாடல் ஹிட் ஆகும். இது நூறு சதவீதம் போபோ சசி பாடல்களில் இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார்.

இசையமைப்பாளர் முரளி பேசுகையில், இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இசையும், ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. இந்த திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. அதற்கு ஏற்றாற் போல் பின்னணி இசையும், பாடல்களும் அமைந்திருக்கின்றன.
இயக்குநர் ஜுன் மோசஸை சிறிய வயதில் இருந்தே பார்த்திருக்கிறேன். அவர் எப்போதும் எங்களுடைய வீட்டில் போபோ சசியுடன் தான் இருப்பார். இந்த இருவரும் சின்ன வயதிலிருந்து எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அதனால் தான் தற்போது இருவரும் திரையில் ஜொலிக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

நாயகன் வினோத் பேசுகையில், இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளியின் ரசிகன். ஏனெனில் ‘வாலி’ படத்திற்கு பின்னணி இசையமைத்தது இவர்கள்தான். அவர்கள் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி.
இயக்குநர் ஜுன் மோசஸ் என்னுடைய நண்பர் தான். நானும் அவரும் பிசினஸ் பார்ட்னர்ஸ். ஒரு நாள் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும்போது திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை சொன்னவுடன் அவர் ஒரு வரியில் கதையை சொன்னார். அதன் பிறகு அதனை விரிவுபடுத்தி பணியாற்றத் தொடங்கி அந்தப் பணி தற்போது இங்கு வரை வந்திருக்கிறது. அவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நான் கார்ப்பரேட் நிறுவனத்தில் 22 ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறேன். அங்கு கற்றுக் கொள்ளாத பல விஷயங்களை சினிமாவில் ஒரே வருடத்தில் கற்றுக் கொண்டேன் என்றார்.
ஶ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் V. ரவிச்சந்திரன் தயாரிப்பில், மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “நாளை நமதே”. கதைப்படி.. சிவகங்கை மாவட்டம் சிவதாணுபுரம் ஊராட்சியில் ஆதிக்க சாதியினர் […]
விமர்சனம்ஶ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் V. ரவிச்சந்திரன் தயாரிப்பில், மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “நாளை நமதே”.
கதைப்படி.. சிவகங்கை மாவட்டம் சிவதாணுபுரம் ஊராட்சியில் ஆதிக்க சாதியினர் அதிகமாக வசித்து வருகின்றனர். இங்கு ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் காலனியும் இருக்கிறது. ஆதிக்க சாதியினர் சார்பில் விருமாண்டி குடும்பத்தினர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த ஊராட்சியை தனி தொகுதியாக மாற்றி அறிவிப்பு வெளியாகிறது. தேர்தலில் போட்டியிட ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் முன்னாள் இராணுவ வீரர் வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும்போது கொலை செய்யப்படுகிறார். பின்னர் ஆதிக்க சாதியினர் ஒருவரை வெட்டி ஊரில் கலவரத்தை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்துகின்றனர். மீண்டும் பொதுத் தொகுதியாக மாற்றப்படுகிறது.

பின்னர் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனி தொகுதியாக மாற்றப்படுகிறது. இம்முறை தனது வீட்டில் வேலை பார்க்கும் தாழ்த்தப்பட்டவரான பெருமாள் என்பவரை வேட்பாளர் ஆக்குகின்றனர். ஆனால் பெருமாளின் மருமகள் அமுதா அவரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதனால் வெகுண்டெழுந்த ஆதிக்க சாதியினர் அமுதாவின் கதையை முடித்து பெருமாளை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என மும்முரமாக வேலை செய்கின்றனர்.
பின்னர் தேர்தல் நடந்ததா ? அமுதாவுக்கு என்னானது ? அதன்பிறகு என்ன ஆனது என்பது மீதிக்கதை..

கடந்த காலங்களில் பொதுத் தொகுதியாக இருந்த ஊராட்சிகள், தனி தொகுதியாக மாறியதால் அந்த கிராமங்களில் நடைபெற்ற சம்பவங்களை வைத்து, சினிமாவுக்காக தனது கற்பனைகளை திரைக்கதையில் புகுத்தி, ஆதிக்க ஜாதியினருக்கு எதிராக ஜாதிய வன்மத்தை தினித்திருக்கிறார் இயக்குநர். அமைதியாக இருக்கும் சமூகத்தில், பழைய கதைகளை பேசி கலவரத்தை தூண்ட நினைப்பதும் ஒருவகை வன்முறை தானே !
அமுதாவாக நடித்துள்ள மதுமிதா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது குரல்வளமும் அருமை. அதேபோல் வேல்முருகன் காமெடி கதாப்பாத்திரம் என்றாலும், சில இடங்களில் சலிப்படைய வைக்கிறார். பங்காளிகளாக நடித்துள்ள இருவர், நாயகியின் அம்மா, பெருமாள் கதாப்பாத்திரம் உள்ளிட்ட அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சென்னை புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் எழில் இனியன் தயாரிப்பில், மாஸ் ரவி, லட்சுமி பிரியா, மஞ்சு, சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், தங்கதுரை பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடிப்பில், மாஸ் ரவி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “காத்துவாக்குல […]
விமர்சனம்சென்னை புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் எழில் இனியன் தயாரிப்பில், மாஸ் ரவி, லட்சுமி பிரியா, மஞ்சு, சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், தங்கதுரை பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடிப்பில், மாஸ் ரவி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “காத்துவாக்குல ஒரு காதல்”.
கதைப்படி.. ஜீவாவும் ( மாஸ் ரவி ) மேகாவும் ( லட்சுமி பிரியா ) ஒருவரையொருவர் உண்மையாக நேசித்து காதலித்து வருகின்றனர். இதற்கிடையில் வடசென்னை பகுதியில் டாஸ்மாக் பார் ஏலம் உள்ளிட்ட பல்வேறு தொழில் போட்டியில் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா உள்ளிட்ட ரவுடிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு பலபேர் கொல்லப்படுகின்றனர். சாய் தீனா அனைத்து தாதாக்களையும் அழித்துவிட்டு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார். இந்நிலையில் காதலர் தினத்தன்று தனது காதலை சொல்ல வருவதாக கூறிய காதலன் ஜீவா வராததால் அவனோடு பழகிய இடங்களிலெல்லாம் தேடி அழைக்கிறார் மேகா.

சாய் தீனா தனது சுயநலத்திற்காக அப்பகுதி இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார். இளைஞர்கள் கத்தியை பிடிக்காமல் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என ஜிம் நடத்திவரும் மாஸ் போராடுகிறார். அவரை பல்லவி ( மஞ்சு ) காதலிக்கிறார். ஆனால் மாஸ் காதலுக்கு முற்றிலும் எதிரான மனநிலையில் இருந்து வருகிறார். மாஸ் தாக்குதலுக்கு உள்ளாகி ரவுடிகளை விரட்டிச் செல்கிறார். அப்போது தனது காதலன் ஜீவாவை தேடி மேகா அந்த வழியாக செல்லும் போது, மாஸ் ரவுடிகளை விரட்டி செல்வதைப் பார்த்து, தனது ஜீவா மாதிரி இருந்ததால் அவனை பின் தொடர்கிறார்.

மேகா தனது காதலன் ஜீவாவுடன் இணைந்தாரா ? மாஸ் யார் ? வடசென்னை ரவுடிகள் கலாச்சாரத்திலிருந்து மீண்டதா ? என்பது மீதிக்கதை..
காத்துவாக்குல ஒரு காதல் என படத்திற்கு பெயர் வைத்துவிட்டு, படம்முழுவதும் ரவுடிகள் கலாச்சாரத்தை புகுத்தி பார்வையாளர்களை ஏமாற்றமடைய செய்திருக்கிறார் இயக்குநர். கதாப்பாத்திர தேர்விலும் கோட்டைவிட்டாரா ? அல்லது வேண்டுமென்றே செய்தாரா என தெரியவில்லை. எல்லா கதாபாத்திரங்களும் எண்ணெய் வடிந்த முகத்துடன் ஒரே கலரில் தேர்வு செய்தால், சினிமாவிற்கான அழகியல் குறைவாகவே உள்ளது. வட சென்னையில் பெண்களைத் தவிர ஆண் கதாப்பாத்திரங்கள் அனைவரும் கருப்பு நிறம் தான் என காட்சிப்படுத்தியது ஏனோ ?
ஶ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், மாணிக்கம் தயாரிப்பில், விக்னேஷ், மனிஷா ஜித், நாசர், ஒய்ஜி மகேந்திரன், தலைவாசல் விஜய், யோகி, அஜய் ரத்னம், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில், ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ரெட் ஃபிளவர்”. கதைப்படி.. […]
விமர்சனம்ஶ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், மாணிக்கம் தயாரிப்பில், விக்னேஷ், மனிஷா ஜித், நாசர், ஒய்ஜி மகேந்திரன், தலைவாசல் விஜய், யோகி, அஜய் ரத்னம், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில், ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ரெட் ஃபிளவர்”.
கதைப்படி.. உலகத்தில் பெரும்பாலான நாடுகளை ( 2047 ஆம் ஆண்டு ) மால்கம் டைனஸ்டி ( தலைவாசல் விஜய் ) தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இந்தியாவை அதிக வரி செலுத்த வேண்டும் என நிர்பந்திக்கிறார். இந்திய பிரதமர் ( ஒய்ஜி மகேந்திரன் ) மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் கொந்தளித்த மால்கம் உலக நாடுகளில் வசிக்கும் இந்திய பெண்களை கொடூரமாக கொலை செய்ய உத்தரவிடுகிறார். அதோடு இந்திய பொருளாதாரத்தை அழித்து, மக்களை அனாதைகளாக்க முக்கியமான இடங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்கிறார். இதற்கிடையில் இந்தியாவின் சீக்ரெட் ஏஜெண்டான விக்னேஷ், மால்கம் டைனஸ்டியின் திட்டங்களை முறியடிக்க முயற்சி செய்து வருகிறார்.

நாடு இக்கட்டான நிலையில் இருப்பதால், பிரதமர் முப்படை தளபதிகளை அழைத்து ஆலோசனை நடத்துகிறார். அப்போது 1947 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் ரெட் ஃபிளவர் ஆபரேஷன் என்கிற பெயரில் போரிட்டு, எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற்றதால், அதே பெயரில் ஆபரேஷன் மேற்கொண்டு எதிரிகளை வீழ்த்தி நாட்டை காப்பாற்றலாம் என்கின்றனர்.
மால்கம் டைனஸ்டியின் ஆக்ரோஷத்திற்கு இந்தியா அடிபணிந்ததா ? ரெட் ஃபிளவர் ஆபரேஷன் என்னானது என்பது மீதிக்கதை..

மூன்றாம் உலகப்போர் நடந்தால் என்னவெல்லாம் நடக்கும், 2047 ஆம் ஆண்டு இந்தியா எந்த சக்தியாலும் அழிக்க முடியாத ஒரு வல்லரசு நாடாக இருக்கும் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குநர். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரமாண்டமான ஒரு படத்தில் நடிகர் விக்னேஷ் நடித்திருக்கிறார் என்பதால் அவருக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. இதுவரை அவர் நடித்திராத புதுவிதமான பரிணாமத்தில், இரட்டை வேடங்களில் தோன்றி தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார் என்றே சொல்லலாம். அதேபோல் நாயகி மனிஷா ஜித், ரசிகர்கள் மனங்களில் இடம்பிடிக்கும் வகையில், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம்.
ஆரஞ்ச் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ் தயாரிப்பில், ஶ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில், பிஜேஷ் நாகேஷ், அக்ஷயா, தீபா சங்கர், நாஞ்சில் விஜயன், பேபி வர்ஷா, ஆதேஷ் பாலா, ஜூனியர் டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “வானரன்”. […]
விமர்சனம்ஆரஞ்ச் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ் தயாரிப்பில், ஶ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில், பிஜேஷ் நாகேஷ், அக்ஷயா, தீபா சங்கர், நாஞ்சில் விஜயன், பேபி வர்ஷா, ஆதேஷ் பாலா, ஜூனியர் டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “வானரன்”.
கதைப்படி.. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனுமந்தராவ் ( பிஜேஸ் ) பிழைப்புக்காக தமிழகத்தில் ஆஞ்சநேயர் வேடமிட்டு கோவில் திருவிழாக்களில் மக்களை சந்தோசப்படுத்துவது, விஷேச நாட்கள் இல்லாத சமயத்தில் தெருக்களில் பணம் வசூலித்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தபோது, ஒயிலாட்டம் கற்றுக்கொடுக்கும் பெண் கலைஞரை சந்திக்கிறார். சமூகத்தில் பெண் கலைஞர்கள் சந்திக்கும் துயரங்களையும், வலிகளையும் கேட்டு வேதனையடைந்து, அந்தப் பெண்ணுக்கு பாது காவலராக வலம் வருகிறார். பின்னர் இருவரும் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. மனைவி இறந்த நிலையில், தனது குழந்தையே உலகம் என வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஒருநாள் அந்த குழந்தை பள்ளியில் மயங்கி விழுகிறது. பின்னர் மருத்துவமனையில் பரிசோதித்தபோது மூளையில் கட்டி இருப்பதாகவும், உடனடியாக அற்றவேண்டும், அதற்கு நான்கு லட்சம் ரூபாய் தேவைப்படும் என மருத்துவர் கூற செய்வதறியாது தவிக்கிறார் அனுமந்தராவ். பின்னர் ஹஜ் பயணத்திற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை கொடுக்கிறார் ( குணா பாபு ) இஸ்லாமியர். பணத்துடன் பேருந்தில் வரும்போது பணம் காணாமல் போகிறது.
அதன்பிறகு என்ன நடந்தது ? அனுமந்தராவ் தனது குழந்தையை காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பது மீதிக்கதை…

கூத்து கலைஞர்களின் வலி, ஒற்றுமை, காதல், மத நல்லிணக்கம், மனிதாபிமானம், தந்தை, மகள் அன்பு என திரைக்கதை அமைத்து நிகழ்காலத்தை கண்முன்னே நிறுத்தி, யோசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
அனுமன் வேடமிட்டு தெருத்தெருவாக சுற்றி யாசகம் பெறுவது, பொறுப்பான கணவர், பாசமுள்ள தந்தை என கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் பிஜேஷ். அதேபோல் விஜயகாந்த் வேடத்தில் நடித்துள்ள நாமக்கல் விஜயகாந்த், ஆதேஷ் பாலா, குழந்தை நட்சத்திரம் என அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் செய்திருக்கிறார்கள்.
அட்லெர் எண்டர்டெயின்மெண்ட் ( Adler Entertainment ) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் S ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”. வரும் ஆகஸ்ட் […]
சினிமாஅட்லெர் எண்டர்டெயின்மெண்ட் ( Adler Entertainment ) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் S ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”. வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள, இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ள, கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகர் ஆனந்த் பாண்டி பேசுகையில், எனக்கு இதில் வித்தியாசமான ஒரு கேரக்டர், சாதா ஹீரோவாக இருந்த என்னை, பான் இண்டியன் ஹீரோவாக மாற்றிவிட்டீர்கள். இப்படத்தில் எல்லோரும் செம்மையாக நடித்துள்ளனர். பாடல்கள் எல்லாம் அருமையாக உள்ளது. எல்லோரும் குழந்தைகளோடு ஃபேமிலியாக இப்படத்தைப் பாருங்கள் என்றார்.

நடிகை வர்ஷிணி வெங்கட் பேசியதாவது…
சொட்ட சொட்ட நனையுது. இப்படத்தில் முடி எவ்வளவு முக்கியம் என்றும், அதே நேரம் எவ்வளவு முக்கியம் இல்லை என்றும் சொல்லியிருக்கிறோம். நாயகி ஆகும் கனவு, இந்தப்படம் மூலம் நனவாகியுள்ளது. இப்படம் ஷீட்டிங் மிக கலகலப்பாக இருக்கும். எல்லோரும் கேர்கடராக கலக்கலாக நடித்துள்ளனர். ஷீட்டிங் ரொம்ப ஜாலியாக இருந்தது. எல்லோரையும் தியேட்டரில் சந்திக்கிறோம். பல புதுமுகங்கள் பணியாற்றியிருக்கும் படம், புதிய முயற்சிக்கு ஆதரவைத் தாருங்கள் என்றார்.
கலக்கப்போவது யாரு புகழ் ராஜா பேசுகையில், கலக்கப்போவது யாரு ஆரம்பித்து 6, 7 வருடமாக தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறேன். எல்லோருக்கும் இருக்கும் கனவு வெள்ளித்திரையில் தெரிய வேண்டும் என்பது தான் அது நிறைவேறியுள்ளது. இயக்குநர் நவீத் அவரால் தான் இது சாத்தியமானது. எல்லா பிரஸரையும் அவர் எடுத்துக்கொண்டு, எங்களை ஈஸியாக வைத்துக்கொண்டார். படத்தை வெறும் 18 நாட்களில் முடித்தோம். அவரால் தான் இது நடந்தது. எல்லோரும் இணைந்து உழைத்ததால் தான் இது சாத்தியமானது. இந்தப்படத்தில் நான் நடித்திருக்கிறேன், வசனம் எழுதியுள்ளேன், உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன். இந்தப்படம் குடும்பத்தோடு ரசிக்கும் படியான படமாக இருக்கும். விஜய் டிவி திறமைகள் பலபேர் இதில் வேலை பார்த்துள்ளனர். எனக்காக வந்த நண்பர்களுக்கு நன்றி. ரஞ்சித் உன்னி அழகான பாடல்களைத் தந்துள்ளார் என்றார்.

நடிகை ரியா பேசியதாவது… நன்றியைத் தவிர பெரிதாக எதுவும் சொல்ல தோணவில்லை. ராஜா பேப்பரே இல்லாமல் மொத்த சீனையும் மனதிலிருந்தே சொல்வார். இயக்குநர் மிக அற்புதமாகக் காட்சிகளை எடுத்து விடுவார். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் என்றார்.

நடிகர் நிஷாந்த் ரூஷோ பேசியதாவது, எனது ஐந்தாவது படம். இந்தக்கதையைக் கேட்டவுடன் சொட்டையை வைத்து ஒரு கதை, எப்படி அந்த வலியைச் சொல்ல முடியும் என்று தோன்றியது. இயக்குநர் நவீத் நிஜ வாழ்க்கையில் சொட்டையாய் இருப்பவர்களைப் பார்க்கச் சொன்னார். என் உறவுகளில் அப்படி சிலரைச் சந்தித்தபோது தான் அவர்களது வலி புரிந்தது. அப்போது தான் கதையின் வலிமை புரிந்தது. சொட்டை என்பது இயற்கை தான் ஆனால் அதைக் குறையாகச் சொல்லி, இப்போது அது அவர்களது வாழ்க்கையையே பாதிக்கிறது. எங்கள் படம் பார்த்தால், சொட்டைத்தலையை இனிமேல் யாரும் மோசமாக நடத்த மாட்டார்கள். இப்படம் உங்கள் மனதை மாற்றும். இப்படத்தில் கூட நடித்த அனைவரும் மிகச்சிறப்பாகச் செய்துள்ளனர். படத்தில் கேமராமேன், எடிட்டர், மியூசிக் டைரக்டர் எல்லோரும் முழு உழைப்பைத் தந்துள்ளார்கள் என்றார்.
நடிகை பிரியங்கா நாயர் பேசியதாவது… எனது முதல் படம் இது. என்னைத் திரையில் பார்க்கப் போகிறேன் என ஆவலாக உள்ளேன். இயக்குநர் எனக்கு கால் செய்து ஒரு பாடலில் கேமியோ இருக்கிறது நடிக்க வேண்டும் என்றார். ஷீட்டிங் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றார்.

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது, இது என் ஜாதிக்காரன் படம், அது வேறேதுமில்லை நகைச்சுவை ஜாதி தான். முழுக்க முழுக்க நகைச்சுவைப்படம் இது. நீங்கள் ரசித்துச் சிரிக்கும் படமாக இப்படம் இருக்கும். இயக்குநர் நவீத் S ஃபரீத் அவ்வளவு அருமையாக இயக்கியுள்ளார். 5 படம் நடித்த ஹீரோ, தன் இமேஜை உடைத்து மேடைக்கும் அதே கெட்டப்பில் வருவது மிகப்பெரிய விசயம். அவருக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். கல்லூரி வினோத் அவன் மிகச்சிறந்த எழுத்தாளர், அவன் சீக்கிரம் படம் இயக்க வேண்டும். விரைவில் நான் இயக்கும் படத்தில் கலக்கப்போவது யாரு ராஜாவும், வினோத்தும் பணியாற்றுவார்கள் என்றார்.
இசையமைப்பாளர் ரெஞ்சித் உன்னி பேசியதாவது… எனது பருந்தாகுது ஊர்க்குருவி படம் பார்த்து இயக்குநர் நவீத் இந்தப்படத்திற்காக என்னை ஓப்பந்தம் செய்தார். ஒரு காட்சியை சொல்லி பாடல் கேட்டார். நான் தந்த பாடல் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு டியூன் அனுப்பிய உடனே அது பிடிக்கிறதா? இல்லையா? என உடனே சொல்லிவிடுவார். அதனால் வேலை பார்ப்பது மிக ஈஸியாக இருந்தது. பாடல்கள் எல்லாம் அனைவருக்கும் பிடிக்கும். என்னை மாதிரி புது இசையமைப்பாளருக்கு ஆதரவைத் தாருங்கள் என்றார்.

நடிகர் கல்லூரி வினோத் பேசியதாவது… சொட்ட சொட்ட நனையுது ஒரு பயஙகரமான லவ் சாங் லிரிக்சை, முழுக்க முழுக்க காமெடியா மாற்றி வைத்திருக்கிறார்கள். புரடியூசர் பார்க்கும் போது எல்லார் முகத்திலயும் அவ்வளவு சந்தோசம் இருக்கும். இந்த விழாவை ஆடி மாத விழா மாதிரி மாத்தின ரோபோ சங்கர் அண்ணாவுக்கு நன்றி. விழாவுக்கு வர யோசிக்கிற ஹீரோ இருக்க இன்ட்ஸ்ட்ரில சொட்டைத்தலை கெட்டப்போட வந்திருக்க ஹீரோ ரூஷோவுக்கு வாழ்த்துக்கள். என் தம்பி கலக்கப்போவது ராஜாவுக்கு வாழ்த்துக்கள். படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு தாருங்கள் என்றார்.
Adler Entertainment சார்பில் அசார் பேசியதாவது… நானும் நவீத்தும் தியேட்டர், தியேட்டராக படம் பார்க்க அலைந்திருக்கிறோம். அவன் கதை சொல்வான், நான் எழுதுவேன். அவன் 10 வருட கனவு இப்போது தான் நனவாகியுள்ளது. இது மிகப்பெரிய பயணம். நிஷாந்தை எனக்கு 6 வருடங்களாகத் தெரியும். எங்களிடம் இருந்த மொத்த பணத்தையும் உழைப்பையும் போட்டு இப்படத்தை எடுத்துள்ளோம். அடுத்து ஒரு பெரிய திட்டம் வைத்துள்ளோம் என்றார்.

இயக்குநர் நவீத் S ஃபரீத் பேசியதாவது… இது எனக்கு முதல் மேடை பதட்டமாக உள்ளது. யார்க்கர் என ஒரு படம் எடுக்கலாம் என்று தான் முதலில் ஆரம்பித்தோம், ஆனால் அதற்க்கான ஃபண்ட் கிடைக்கவில்லை. அதனால் முதலில் ஒரு காமெடி படம் செய்யலாம் என நினைத்தோம். Adler எங்கள் கம்பெனி தான் அதில் பல பிஸினஸ் செய்து வருகிறோம், படம் செய்யத்தான் அந்த கம்பெனியே நடத்தி வருகிறோம். இப்போதைக்கு ஒரு படம் பண்ணலாம் என ஆரம்பித்து இந்தப்படம் வந்துள்ளது. 10 நாள் ஷீட்டிங் நடத்த தான் எங்களிடம் இருந்தது, அதை வைத்து தான் படம் எடுத்தோம். 18 நாளில் இந்தப்படத்தை முடித்தோம். அப்பாவை நடிக்க வைத்து அவரிடம் பணம் வாங்கி படத்தை எடுத்தோம். அம்மா நகையையும் அடகு வைத்து விட்டேன். Generous Entitlement டீசர் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் உடனே அவர்களை படத்தை ரிலீஸ் செய்ய வைத்து விட்டோம். நிஷாந்தை ஓகே செய்து விட்டு தான் கதை எழுதினோம். படத்தை முடித்து விட்டோம். ரோபோ அண்ணன் 4 நாள் ஷீட் வந்தார் எங்களுக்காக நடித்து தந்துள்ளார். ஷாலினி நல்ல எதிர்காலம் இருக்கிறது. வர்ஷிணி ஏற்கனவே 4 படம் கமிட்டாகிவிட்டார். ரெஞ்சித் உன்னி படம் எடுக்கும் முன்னாலேயே 4 பாடல் போட்டு தந்துவிட்டார். கேமராமேன் ரயீஷ் கடைசியாகத் தான் வந்தார். முழு ஆதரவாக இருந்தார். படத்தில் எல்லோரும் பணத்தை யோசிக்காமல் உழைத்தார்கள் என்றார்.

கேபிள் சங்கர் பேசியதாவது… நிஷாந்த் “பன்றிக்கு நன்றி சொல்லி” படத்தின் மூலம் தான் பழக்கம். அந்தப்படம் ரிலீஸாகமல் இருந்தது. அதைப்பார்த்து கடைசியில் எங்கள் முயற்சியில் ஞானவேல் ராஜா ரிலீஸ் செய்தார். இப்போது அவரது ஐந்தாவது படத்தில் சந்திப்பது மகிழ்ச்சி. இயக்குநர் நவீன் ஜாலியான ஆள் இல்லை, தன் டென்ஷனை எல்லாம் மனதிற்குள் வைத்துக்கொண்டு ஜாலியாக நடித்துக்கொண்டிருக்கிறார். படத்தை மிக நன்றாக இயக்கியுள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக ஜெயிக்கும். பல பிரபலமான ரீல்ஸ் முகங்களைப் படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள், ஜாலியாக படத்தை எடுத்துள்ளார்கள். படம் பெரிய வெற்றிபெறும். முடி இல்லாததைப் பற்றி படம் எடுத்தவர்கள் தோற்றதே இல்லை. அனைவரும் ஜெயிக்க வாழ்த்துக்கள் என்றார்.
தயாரிப்பாளர் C V குமார் பேசியதாவது… நிஷாந்த் நடித்த பன்றிக்கு நன்றி சொல்லி படம் பார்த்த போது, ரொம்பவும் பிடித்திருந்தது. அந்தப்படம் என் மூலம் ஞானவேல் ராஜா ரிலீஸ் செய்து நன்றாகப் போனது. அதே போல் இந்தப்படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள். இயக்குநர் நவீன், கூல் என சொல்கிறார்கள் உண்மையில் அப்படி இருக்க முடியாது. படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். நடித்தவர்களும் நன்றாக நடித்துள்ளனர். சினிமாவை நேசிப்பவர்களை சினிமா விடாது என்றார்.
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு […]
சினிமாசிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் இயக்குநர், கிரியேட்டிவ் புரொடியூசர் சக்திவேல் பேசுகையில், இதன் திரைக்கதையை படிப்பதற்கே சுவாரஸ்யமாக இருந்தது. வெவ்வேறு இடங்களில் டிராவல் ஆகிக் கொண்டே இருந்தது. அதை சரியாக படமாக்கிவிட முடியுமா என்ற கேள்வியும் இருந்தது. சவாலான இந்த விஷயத்தை செய்ய ஆர்ட் டைரைக்ஷன், இசை, ஸ்டண்ட் என அனைத்திலும் சரியாக இருக்க வேண்டும். அந்த குழு சரியாக வேலையும் பார்த்தார்கள். படம் முடிந்ததும் அதை பிசினஸ் செய்ய வேண்டும் என்றபோது, சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து கால் வந்தது. அவர் படம் பார்த்துவிட்டு, ‘உங்கள் குழுவின் முயற்சிக்கு என்னால் ஆன சின்ன சப்போர்ட்’ என்று சொல்லிவிட்டு படத்தை வழங்குவதற்கு மிகவும் நன்றி. எனக்கு காளி வெங்கட்டை மிகவும் பிடிக்கும். அவருக்கும் தர்ஷன் பிரதருக்கும் மற்ற நடிகர்களுக்கும் நன்றி! பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் போல இந்த படத்திலும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்றார்.

நடிகர் அப்துல் லீ பேசுகையில், நான் இதற்கு முன்பு நடித்த ‘கேப்டன் மில்லர்’, ‘இரும்புத்திரை’ போன்ற படங்களில் என்னுடைய கேரக்டர் சின்னதாக இருந்தாலும் கதையின் போக்கை மாற்றும்படி முக்கியமானதாக இருக்கும். அது போன்ற ஒரு கதாபாத்திரம் தான் ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்திலும். பொதுவாக புதுமுக இயக்குநர்களுக்கும் எனக்கும் நல்ல ராசி இருக்கிறது. இந்த படம் நிறைய பேருக்கு முதல் படம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! காளி வெங்கட் நான் நடிக்க நுழைந்த சமயத்தில் பெரிய இன்ஸ்பிரேஷன். தர்ஷனை எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்த இயக்குநருக்கு நன்றி என்றார்.
நடிகை வினோதினி பேசுகையில், இந்த நல்ல படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. இந்தப் படம் நல்ல படம் என்பதை மிகவும் நம்பிக்கையாக என்னால் சொல்ல முடியும். சக்திவேல் கிரியேட்டிவ் புரொடியூசர் ஆக இந்த படத்தில் வேலை பார்த்திருக்கிறார். நல்ல படங்களில் எப்போதும் அவருடைய பங்கு இருக்கும். இந்த சின்ன படத்தில் சிவகார்த்திகேயன் உள்ளே நுழைந்ததும் பெரிய படமாக மாறிவிட்டது. அவருக்கும் நன்றி. தர்ஷன், காளி வெங்கட் இருவரின் வளர்ச்சியும் பிரம்மிக்க வைக்கிறது. படம் வெளியானதும் நிச்சயம் அனைவரின் நடிப்பும் பாராட்டப்படும் என்றார்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், ‘குடும்பஸ்தன்’, ”டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்குப் பிறகு இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. இந்த வருடத்தில் எனக்கு அமைந்த மற்றொரு நல்ல படம். சிவகார்த்திகேயன், தர்ஷன், காளி வெங்கட் இவர்கள் அனைவருடனும் பணிபுரிந்தது மகிழ்ச்சி. நிச்சயம் ‘ஹவுஸ்மேட்ஸ்’ உங்களால் மறக்க முடியாத படமாக இருக்கும் என்றார்.
தயாரிப்பாளர் விஜய பிரகாஷ் பேசுகையில், ராஜவேலும் நானும் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். அப்போது சண்டை போட்டதில்லை. ஆனால், படம் எடுக்கும்போது நிறைய சண்டை போட்டோம். சக்திவேல் உள்ளே வந்ததும் டீம் செட் ஆகி படம் விறுவிறுப்பாக நடந்தது. அதன் பிறகு சாந்தி டாக்கீஸ் அருண் பார்த்தார். பின்பு சிவகார்த்திகேயன் உள்ளே வந்தார். படத்திற்கு எல்லா விஷயங்களையும் பார்த்து செய்த சிவகார்த்திகேயன் & டீமுக்கு நன்றி என்றார்.
இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், இந்தப் படத்தை பார்க்க SK நட்பு ரீதியில் அழைத்த போது சென்று பார்த்தேன். படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது இயக்குநரிடம் வெற்றி படம் கொடுத்திருக்கிறீர்கள் என்று வாழ்த்தினேன். டிரெய்லரை விட படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கும். SK புரொடக்சன்ஸ் மூலமாக இந்தப் படத்தை வெளியிடுவது படக்குழுவினருக்கு எவ்வளவு சந்தோஷமான விஷயம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசுகையில், படம் பார்த்தது முடித்ததும் இயக்குநரை கட்டிப்பிடித்துக் கொண்டேன். வெற்றி படமாக இதைக் கொண்டு வந்திருக்கிறார்கள். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள். நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். எஸ்கே புரொடக்க்ஷன் படத்தை வாங்கியுள்ளது என்பதே படத்தின் முதல் வெற்றி. படம் கண்டிப்பாக அடுத்த லெவல் சென்றிருக்கிறது என்றார்.
SK புரொடக்சன்ஸ், இணைத் தயாரிப்பாளர் கலை அரசு பேசுகையில், நல்ல கதை மற்றும் புது திறமையாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் இயங்கி வருகிறோம். அந்த வகையில் ‘கனா’ படத்தில் இருந்து ஆரம்பித்து இப்போது ‘ஹவுஸ் மேட்ஸ்’ எட்டாவது படமாக வெளியிட இருக்கிறோம். ஃபேமிலி எண்டர்டெயினராக படம் உருவாகி இருக்கிறது. படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
நடிகை ஆர்ஷா பைஜூ பேசுகையில், தமிழில் இது என்னுடைய முதல் படம். என்னை நம்பி இந்த கதாபாத்திரம் கொடுத்த ராஜவேலுக்கு நன்றி. சிறப்பான குழுவோடு பணியாற்றி இருக்கிறேன். தர்ஷன் சிறந்த கோ- ஆக்டர். கடின உழைப்பாளி. காளி வெங்கட், வினோதினி போன்ற திறமை வாய்ந்த நடிகர்களுடன் நடித்தது மகிழ்ச்சி என்றார்.

இயக்குநர் ராஜவேல் பேசுகையில், இந்த படம் சாதாரணமாக தான் ஆரம்பித்தது. ஆனால், இவ்வளவு பெரிய மேடை இந்த படத்திற்கு அமைந்தது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் தான். முதல் படம் எடுப்பது சவாலான விஷயம். எடுத்த படத்தை வெளியிடுவது இன்னும் சவாலானது. அதை SK புரொடக்க்ஷன் எளிமையாக செய்து கொடுத்தது. சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். நான் கஷ்டப்பட்ட சமயத்தில், கூட இருந்த விஜய்க்கு நன்றி. தர்ஷன், காளி வெங்கட், வினோதினி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நிறைய சின்ன சின்ன சர்ப்ரைஸ் இருக்கிறது. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.
நடிகர் காளி வெங்கட் பேசுகையில், எனக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் இது முக்கியமான படமாக இருக்கும். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படம் பார்த்துவிட்டு வாழ்த்திய சிவகார்த்திகேயன், கலை மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு என்றார்.
நடிகர் தர்ஷன் பேசுகையில், இதுபோன்ற கதையில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தில் அமைந்திருக்கிறது. என்னை நம்பி இந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்துள்ளனர். படத்தின் ஐடியா, திரைக்கதை இதெல்லாம் சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு மிகவும் பிடித்தது. படத்தை பிரசண்ட் செய்ய ஒத்துக்கொண்டதற்கு அண்ணாவுக்கு நன்றி. டிரெய்லர் பார்த்துவிட்டு நிறைய பேர் ஹாரர் படமா என்று கேட்டார்கள். அதையும் தாண்டி எங்கேஜிங்கான திரைக்கதையும் ஆச்சரியங்களும் கொண்ட ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படம் இது. காளி வெங்கட் அண்ணாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றார்.