விஜயாமேரி யுனிவர்சல் நிறுவனம் தயாரிப்பில், வடிவுக்கரசி, கஜராஜ், சிங்கம்புலி, திலீபன், ஆனந்த் நாக் உள்ளிட்டோர் நடிப்பில், விஜய குமாரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “க்ராணி”. கதைப்படி.. இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் ஒரு வயதான பாட்டி நடந்து செல்கிறார். பின்னால் பாட்டி.. பாட்டி […]
விமர்சனம்
சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ட்ரீம் கேர்ள்’. இப்படத்தில்ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். மற்றும் பிரபு சாஸ்தா, துருவன், […]
சினிமா
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love […]
சினிமா
விஜயாமேரி யுனிவர்சல் நிறுவனம் தயாரிப்பில், வடிவுக்கரசி, கஜராஜ், சிங்கம்புலி, திலீபன், ஆனந்த் நாக் உள்ளிட்டோர் நடிப்பில், விஜய குமாரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “க்ராணி”. கதைப்படி.. இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் ஒரு வயதான பாட்டி நடந்து செல்கிறார். பின்னால் பாட்டி.. பாட்டி […]
விமர்சனம்விஜயாமேரி யுனிவர்சல் நிறுவனம் தயாரிப்பில், வடிவுக்கரசி, கஜராஜ், சிங்கம்புலி, திலீபன், ஆனந்த் நாக் உள்ளிட்டோர் நடிப்பில், விஜய குமாரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “க்ராணி”.
கதைப்படி.. இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் ஒரு வயதான பாட்டி நடந்து செல்கிறார். பின்னால் பாட்டி.. பாட்டி என பெண் குழந்தை செல்கிறது. பின்னர் அதிகாலையில் தோட்டத்தில் பெண் சடலம் கிடக்கிறது. அதுவும் மிகவும் கொடூரமான முறையில் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறது. பின்னர் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்குகின்றனர். இதற்கிடையில் லண்டனில் இருந்து மனைவி, இரு குழந்தைகளுடன், சாஃப்ட் வேர் வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வேண்டும் என அந்த ஊரில் உள்ள பெரிய வீட்டில் தங்குகிறார் ஆனந்த் நாக். அந்த சமயத்தில் வயதான பாட்டி அந்த வீட்டிற்கு வரும்போது, மயங்கி கீழே விழுகிறார். அந்த தம்பதியினர் அவரை உள்ளே கொண்டுவந்து அவர்மீது கரிசனம் காட்டுகிறார்கள்.

இதற்கிடையில் ஊரில் உள்ளவர்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரில் நடந்த சம்பவங்களை கூறுகின்றனர். அதனை நம்ப மறுக்கிறார் ஆனந்த் நாக். பின்னர் வீட்டிற்குச் செல்கிறார். அங்கு பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதை பார்க்கிறார். அதன்பிறகு என்னானது என்பது மீதிக்கதை…
படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை எதிர்பார்ப்புடன் பார்வையாளர்களை அமர வைத்திருக்கிறார் இயக்குநர்.

வடிவுக்கரசிக்கு மேக்கப் சிறப்பாக அமைந்திருக்கிறது. அவருக்கு வசனங்கள் குறைவாக இருந்தாலும், தனது நடிப்பின் மூலம் நிறைய பேசியிருக்கிறார். அதேபோல் சிங்கம்புலிக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். மாற்றுத்திறனாளிகளாக நடித்துள்ள இரண்டு குழந்தைகளின் நடிப்பு சிறப்பு. படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ட்ரீம் கேர்ள்’. இப்படத்தில்ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். மற்றும் பிரபு சாஸ்தா, துருவன், […]
சினிமாசாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ட்ரீம் கேர்ள்’. இப்படத்தில்
ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். மற்றும் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் எம். ஆர். பாரதி பேசும்போது, இது ஒரு காதல் கதை, கதாநாயகனுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது கனவு. கதாநாயகிக்கோ தான் ஒரு பாடகியாக வேண்டும் என்று கனவு. இப்படி இருவரும் கனவைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி இருவருமே ஜாலியாக வாழ்க்கையை, அதன் போக்கில் போகவிட்டு மகிழ்ச்சியின் தருணங்களை ஒரு சொட்டு கூட வீணடிக்காமல் வாழத் துடிப்பவர்கள் .

நவீன உலகத்தின் சமகாலப்பிரதியாகவும் பிரதிநிதியாகவும் அந்த இருவரும் இருக்கிறார்கள். அவர்களுக்குள் காதல் வருகிறது. கனவைத் துரத்தும் அவர்களுக்குள் ஒரு கனவும் வருகிறது. அது சில மாயங்களைச் செய்கிறது. அதன் வர்ணஜால விளைவுகளைச் சொல்வதுதான் ‘ட்ரீம் கேர்ள்’ படம். இது மசாலா கலப்பில்லாத ஒரு முழுமையான காதல் கதை. படத்தில் வில்லனே கிடையாது, வேண்டுமானால் கனவு தான் வில்லன் என்று கூறலாம். கதையில் குளுமை இருப்பதால் இதன் படப்பிடிப்பை முழுக்க முழுக்க ஊட்டியிலேயே நடத்த திட்டமிட்டேன். அதன்படியே நடைபெற்றுள்ளது என்கிறார்.
படப்பிடிப்பு அனுபவத்தைக் கேட்டபோது, இது 20 நாட்களில் முழுப் படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்ட படம். ‘சில்ட்ரன் ஆப் ஹெவன்’ மிகக்குறைந்த நாளில் எடுக்கப்பட்ட படம். ஆறு – ஏழு லட்சத்தில் முடிந்த படம். பெரிய படமான ‘ப்ரேவ் ஹார்ட் ‘கூட 80 கால்ஷீட்டில் முடிக்கப்பட்ட படம் என்றால் நம்ப முடியாது அல்லவா?
இன்று வருகிற மிகச் சாதாரண படங்களுக்குக் கூட 60 நாட்கள் 70 நாட்கள் என்று படப்பிடிப்பு நடைபெறுகின்றன. ஒரு கோடி இரண்டு கோடி என்று செலவு செய்கிறார்கள்.
இது மிகவும் தவறான போக்கு. சரியான திட்டமிடல் இல்லாதது, சினிமாவைப் புரிந்து கொள்ளாதது, தொழில்நுட்பங்களைக் கையாளத் தெரியாதது போன்றவைதான் இதற்கெல்லாம் காரணம்.

சரியாகத் திட்டமிட்டால் 25 லட்ச ரூபாயில் ஒரு நல்ல படம் எடுக்க முடியும் .
நல்ல படம் ஓடினால் அது பெரிய படம். ஆனால் அதே படத்துக்கு இரண்டு கோடி செலவழிக்கிறார்கள். சில லட்சங்கள் என்றால் ஒரு தயாரிப்பாளர் தாங்குவார். ஆனால் கோடி ரூபாய் இழப்பு என்றால் அவர் எப்படித் தாங்க முடியும்? இப்படிப்பட்ட திட்டமிடாத சிலரால் தான் சினிமா நெருக்கடியில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது.
வணிக மதிப்புள்ள கதாநாயகர்களுக்குக் கோடிக்கணக்கில் செலவு செய்வதைக் குறை சொல்ல முடியாது. எப்படியாவது வியாபாரம் ஆகிவிடும். சமாளித்துக் கொள்வார்கள். ஆனால் இப்படியான சிறு முதலீட்டுப் படங்களுக்குச் சில லட்சங்களைத் தாண்டினால் தயாரிப்பாளரால் இழப்பைத் தாங்க முடியாது என்றார்.
இதைத் தடுப்பதற்குரிய வழியாக அவர் கூறுவது என்ன? சரியாகத் திட்டமிட்டு நன்றாக நடிக்கத் தெரிந்த புதுமுகங்களை வைத்து எடுத்தால் அந்தப் படம் நிச்சயமாக கவனிக்கப்படும். அதிக திரையரங்குகளில் வெளியிடாமல் குறைந்த திரையரங்குகளில் வெளியிட்டு நல்ல படம் என்று பெயர் பெற்றால் போதும். படம் தப்பித்து விடும். நல்ல படம் ஓடினால் அது பெரிய படமாக மாறிவிடும். அந்தப் படம் வெளியான முதல் காட்சி – அந்த ஒரு காட்சியே படத்தின் தலைவிதியைச் சொல்லிவிடும். இப்போது படம் நன்றாக உள்ளது என்று சொன்னால் போதும். செய்தி தீ போல பரவிவிடும். ஒரு காட்சியை வைத்தே அதன் தலைவிதி தெரிந்து விடும்.

அந்த நம்பிக்கையில் தான் நான் இந்தப் படத்தை சில லட்சங்களில் எடுத்து இருக்கிறேன். ஏழு லட்ச ரூபாயுடன் ஊட்டிக்குச் சென்றேன். சரியாகத் திட்டமிட்டோம். அதனால் ஒருநாளும் படப்பிடிப்பு தடை பட்டதில்லை. நண்பர்கள் உதவினார்கள் இயற்கை உதவியது. பனியும் மழையும் நாங்கள் எதிர்பார்த்த நேரத்தில் வந்து உதவி செய்தன. சரியாகத் திட்டமிட்டுப் படப்பிடிப்பு நடக்கும் இயற்கை நிலைகளைத் தேர்வு செய்தோம். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்து நேரத்தை வீணடிக்கவில்லை. எல்லாமே சுமுகமாக நடந்தது என்றவர், நடிகர்கள் தேர்வு பற்றிப் பேசும்போது,
நான் இந்தக் கதையை வைத்துக் கொண்டு தயாரிப்பாளரைத் தேடி அலையவில்லை. திறமைசாலிகளை மட்டுமே தேடினேன். அதற்குரிய பலன் கிடைத்தது. இதில் நடித்திருக்கும் நாயகனும் சரி, நாயகியும் சரி, பிற பாத்திர நடிகர்களும் சரி அருமையாக நடித்திருக்கிறார்கள். நான் அவர்களை அழகையும் தோற்றத்தையும் வைத்து தேர்வு செய்யவில்லை. நடிப்புத் திறமையை மட்டுமே வைத்து தேர்வு செய்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இதில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் அனைவரும் திறமையின் வழியாகத்தான் இந்தப் படத்திற்குள் வந்தார்கள்.
நான் இதற்கு முன்பு ‘அழியாத கோலங்கள் 2’ என்ற படத்தை இயக்கி இருந்தேன். அதன் படப்பிடிப்பை 12 நாள்களில் முடித்திருந்தேன். நான் செலவு செய்த தொகையை கலைஞர் டிவியிலிருந்தே எனக்குக் கொடுத்து விட்டார்கள்.
தேவையில்லாமல் செய்த சில செலவுகள்தான் எனக்கு இழப்பு. மற்றபடி இன்று ஏராளமான வியாபார வழிகள் உள்ள சினிமாவில் சரியாகப் புரிந்து கொண்டு திட்டமிட்டுப் படமெடுத்து வெளியிட்டால் இழப்புக்கு வழியே இல்லை என்பது என் கருத்து என்கிறார்.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love […]
சினிமாZion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்.., இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசியதாவது.., சிவாஜி திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில்தான் தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் அவர்களை முதன்முறையாக சந்தித்தேன். அன்றிலிருந்து நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம். அப்போது இவர் இப்படியொரு திறமையான, முன்னணி தயாரிப்பாளராக வளர்வார் என்று நான் நினைக்கவே இல்லை, இப்போது அற்புதமான படங்கள் செய்கிறார். சௌந்தர்யா மேடம் இந்தப் படத்தை ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டுமென, ஒவ்வொரு அம்சத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். அவரின் அந்த நேர்மை காரணமாகவே இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். இயக்குநர் மதன் அவர்களின் முதல் படம் போலவே தெரியவில்லை. மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். அபிஷந்த் அபாரமான நடிப்பை வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் அவர் ஒரு பெரிய ஹீரோவாக வருவார். அனஸ்வரா ராஜன் மிக அருமையாக நடித்துள்ளார் . ஷான் ரோல்டன் மிக அழகான இசையைத் தந்துள்ளார். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசியதாவது.., வித் லவ் ஒரு பக்காவன ஹிட் திரைப்படம். அபிஷந்த் அனஸ்வரா ஜோடி, மிகவும் க்யூட்டாக இருக்கிறது. காவ்யா அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தின் எடிட்டிங் சிறப்பாக இருக்கிறது. அவரது முதல் படம் போலவே தெரியவில்லை. எடிட்டருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த திரைப்படம் நிச்சயம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்றார்.

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பேசியதாவது.., படம் பார்த்துவிட்டேன் மிக அருமையாக உள்ளது. சௌந்தர்யா மேடம் பெரிய ஹீரோவை வைத்து இப்படத்தை எடுத்திருக்கலாம். ஆனால் அவர் இந்த புது டீமை நம்பி தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் என்னிடம் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டார். நான் அவரிடம், படம் அருமையாக இருக்கிறது; பணம் மழையாகப் பொழியப் போகிறது என்று சொன்னேன். அதை கேட்ட உடனே தயாரிப்பாளர் கனவு காண ஆரம்பித்துவிட்டார். இயக்குநர் மதன் மிகவும் நம்பிக்கை தரும் இயக்குநராக இருக்கிறார். இன்றைய இளைஞர்கள் இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையிலான படமாக இது இருக்கும் என்றார்.

தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசியதாவது.., ஒரு உண்மையான சினிமா ரசிகனுக்கு, படம் மூலம் கிடைக்கும் பணத்தை விட, ஒரு நல்ல படத்தை பார்த்த பிறகு மனதில் உருவாகும் திருப்திதான் பெரியது. அந்த படத்தை பார்த்து, அதை மனதில் அசைபோட்டு யோசிக்கும் ஒரு நிறைவு கிடைக்கும். அந்த உணர்வை நான் சிறை படத்தை பார்த்த பிறகு அனுபவித்தேன். அதே உணர்வு வித் லவ் படத்தை பார்த்த பிறகும் மீண்டும் கிடைத்தது. தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் தொடர்ந்து புதுமுக இயக்குநர்களுக்கு ஆதரவளித்து வருகிறார். மகேஷ் போன்ற தயாரிப்பாளர்கள் வெற்றி பெறும்போதுதான், மேலும் மேலும் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஆகவே, இப்படிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு நாம் அனைவரும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.
நடிகர் மணிகண்டன் பேசியதாவது.., நான் இரண்டு நாள் முன்னால் இந்தப் படத்தை பார்த்தேன். உண்மையிலேயே படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம், இதோட சிம்பிளிஸிட்டி. சின்ன சின்ன எமோஷன்ஸை எவ்வளவு அழகா, பிரமாண்டமா படமாக்கியிருக்காங்கன்னு பார்க்கும்போது ஆச்சர்யமா இருந்தது. பெர்ஃபார்மன்ஸ், ரைட்டிங், சினிமேட்டோகிராஃபி, எடிட்டிங் எல்லாமே ஸ்கிரிப்ட்டுக்காக வேலை செய்திருக்கிறார்கள். எதுவுமே ஸ்கிரிப்ட்டை கெடுக்காமல் மிக அழகாக இணைந்திருந்தது இந்தப் படத்தோட பெரிய பலம். அபிஷந்த் நடிப்பு , அனஸ்வராவின் நடிப்பு, ஜாஃபர் பண்ணிய கேரக்டர், அனிஷா ரோல் எல்லாமே ரொம்ப பிரமாதம். குறிப்பா ஒரு சீன், இரண்டு நாள் கழிச்சும் மனசை விட்டு போக வில்லை. இயக்குநர் மதன், மோகன் ராஜ் ஐயா, ஷான் ஐயா, புரொட்யூசர்ஸ் எல்லாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றிகள் தொடர்ந்து வரட்டும் வரணும். இந்த படம் ஒரு பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது.., இந்தப் படத்தில் பணியாற்றிய ஒருவராகச் சொல்கிறேன், இந்த படம் பல காரணங்களுக்காக எனக்கு மிகவும் நெருக்கமானது. டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் கதையை முதலில் அபிஷன் சொல்ல வந்த போது, கொஞ்சம் தயக்கமாக இருந்தார். ஆனால் கதை சொல்ல ஆரம்பித்ததும், அவர் ஒரு புதிய ஆளாக மாறிவிட்டார். ஒவ்வொரு காட்சியையும் நடித்துக் காட்டுவார். கண்டிப்பாக ஒரு நடிகராக அவர் மிகப் பெரிய உயரத்திற்கு செல்வார். ஒரு பெண் கதாபாத்திரத்திற்காக நான் விசில் அடிப்பேன் என்று நான் நினைத்ததே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் அனஸ்வராவின் நடிப்பு என்னை அவரின் ரசிகனாக மாற்றிவிட்டது. எனக்கு ரொம்-காம் படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் இவ்வளவு ஆழமான விஷயத்தை பேசிக்கொண்டே, அதே நேரத்தில் லேசான, ரசிக்கத்தக்க எண்டர்டெய்னராக உருவான ஒரு ரோம்-காம் படமாக இப்படம் இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. படம் மிக அருமையாக வந்துள்ளது. சௌந்தர்யா ரஜினிகாந்த் மேம், ரஜினி சார்க்கு மகளாக இருப்பது அத்தனை எளிதல்ல. அவருக்கு எந்தவிதமான ஆடம்பரமும் இல்லை. சினிமா துறையில் எனக்கு கிடைத்த ஒரு உண்மையான நண்பர் அவர். அவருக்கு என் நன்றி. இப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.

இயக்குநர் மதன் பேசியதாவது.., இந்தப் படத்திற்கு உறுதுணையாக நின்ற முழு உதவி இயக்குநர்கள் குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அபிஷந்தின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் பணியாற்றினேன். அப்போது அவர் அந்தப் படத்தில் வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில், என்னுடைய இந்தக் கதையை வாசித்தார். கதையைப் படித்த பிறகு, ‘ரொம்ப நல்ல ஸ்கிரிப்ட்’ என்று சொன்னார். நான் அவரிடம் இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பீர்களா என்று கேட்டபோது, அதை லைட்டாக எடுத்துக்கொண்டு, ‘கதை நல்லா இருக்கு… ஒரு நல்ல நடிகரை நடிக்க வை’ என்று சொன்னார். அந்த நேரத்தில் அவர் தனது முதல் படத்தின் ரிலீஸுக்காக ஒரு இயக்குநராகவே பெரிய மன அழுத்தத்தில் இருந்தார். அதற்குப் பிறகு, நாயகனைத் தேட ஆரம்பித்தேன். பலரைப் பார்த்தோம்… ஆனால் எதுவுமே சரியாக அமையவில்லை. இதற்கிடையில் டூரிஸ்ட்ஃபேமிலி படம் வெளியானது, அதன்பிறகு அபிஷந்த் ஒரு பெரிய இயக்குநராக உருவெடுத்தார். அதனால் அவரை மீண்டும் அந்த கதாபாத்திரத்திற்காக அணுக கூட எனக்குத் தயக்கமாக இருந்தது. .ஒரு நாள் நான் மனம் தளர்ந்த நிலையில் இருந்தபோது, என் நண்பர் பாலாவை சந்தித்தேன். ஸ்கிரிப்ட்டை மதிப்பிடுவதில் அவரை நான் மிகவும் உயர்வாக மதிக்கிறேன். அவர் என் ஸ்கிரிப்ட்டை வாசித்து, மிகவும் பாராட்டினார். அதே நேரத்தில், ‘இந்த கதைக்கு அபிஷந்த்தான் சரியான தேர்வு’ என்று சொன்னார். அதற்கு நான், இப்போ அவர் பெரிய இயக்குநர் ஆகிட்டாரே என்று கூறினேன். அதற்கு பாலா, நான் உன் சார்பாக அவரிடம் பேசுகிறேன என்றார். பாலா பேசினதும், அபிஷந்த் மிக சந்தோசமாக ஒப்புக் கொண்டார். ஆனால், முதலில் மதனுக்கு ஓகேவா கேளுங்க என்று பாலாவிடம் சொன்னார். நான் முழு மனதோடு சம்மதம் தெரிவித்தேன். அபிஷந்தை நாயகனாக முடிவு செய்த பிறகு, தயாரிப்பாளர் மகேஷ் அண்ணாவை சந்தித்து இந்தப் படத்தை தயாரிக்க கேட்டோம். அவர் ஸ்கிரிப்ட்டை மிகவும் ரசித்தார். ஆனால், இந்தப் படத்தை நான் சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம் உடன்தான் செய்யப்போகிறேன். அவருக்கு ஸ்கிரிப்ட் பிடித்தால்தான் நான் தயாரிப்பேன் என்று கூறினார். அதற்கு பிறகு, சௌந்தர்யா மேடமிடம் கதை சொல்ல ஆரம்பித்தோம். இரண்டாம் பாதியை நான் சொல்ல ஆரம்பிப்பதற்குள், இந்தப் படத்தை நாம பண்ணலாம் என்று அவர் சொன்னது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. உடனே பரபரப்பாக ஆரம்பித்தோம், ஒரே வேகத்தில் படம் முடிந்துவிட்டது. எல்லோரது உழைப்பு தான் காரணம். மேனேஜர் பிரசாந்த், சுரேஷ் எனக்கு மிக உதவியாக இருந்தார்கள். எல்லோரும் தங்கள் சொந்தப்படம் போல வேலை பார்த்தார்கள். ஷான் ரோல்டன் மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார். அபிஷந்திற்கு என்னைப் பிடிக்கும், அவர் என்னை உடனே படம் செய்யுங்கள் என ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் எனக்கு மிக நெருங்கிய நண்பராகிவிட்டார். அனஸ்வரா மிக நன்றாக நடித்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகை அனஸ்வரா ராஜன் பேசியதாவது.., என் முழு குழுவிற்கும் ஒரு பெரிய நன்றியை சொல்லிக்கொள்கிறேன். மதன் என்னிடம் கதை சொல்ல வரும் போது, ஒரு காட்சியை படமாக்கி காட்டினார் அது எனக்கு மிகவும் பிடித்தது உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். இப்படத்தில் என்னுடன் நடித்த அனைவரும் மிகச்சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தனர். காவ்யா உங்களை தமிழ் ரசிகர்கள் நிச்சயம் மனதார காதலிப்பார்கள். இந்த குழு என்னை நிறைய சிரிக்க வைத்தது. இந்த சினிமா துறையும், இந்த நகரமும் எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்கக் காரணமாக இருந்தது. இந்த அனுபவம் தான். சௌந்தர்யா மேடம் எனக்கு ஒரு பெரிய அக்கா போல அன்பும் ஆதரவையும் வழங்கினார்.
மதன் நான் வேலை செய்த இயக்குநர்களில் மிகவும் க்யூட்டானவர். அதே சமயம், அவர் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தவர், எனக்கு அவர் தந்த மோனிஷா பாத்திரம் ரொம்பவே பிடிக்கும். அந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. மோனிஷா, சத்யா இடையேயான கெமிஸ்ட்ரி திரையில் வேலை செய்ததற்குக் காரணம், திரைக்கு வெளியே நடிகர் அபிஷந்த் உடன் எனக்கு இருந்த நட்பு தான். மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்த அபிஷந்திற்கு நன்றி. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது என்றார்.

தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான் பேசியதாவது, நாங்கள் ஒரு நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம். அதை பிப்ரவரி 6-ஆம் தேதி மக்களிடம் கொண்டு செல்கிறோம். மக்கள் இந்தப் படத்தை ஆதரித்து, பாதுகாப்பார்கள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து விருந்தினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. அபிஷந்த் எதிர்காலத்தில் ஒரு மிகப் பெரிய இயக்குநராக உருவெடுப்பார். அபிஷன் ஒரு தூய மனம் கொண்டவர். அவர் மாறாமல் அப்படியே இருக்க வேண்டும். சௌந்தர்யா அக்காவின் பெயருக்கு பக்கத்தில் என் பெயர் வருவதையே நான் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் நினைக்கிறேன். வித் லவ் படத்திற்கு முன் நீங்கள் பார்த்த சௌந்தர்யா அக்கா, இந்தப் படத்திற்கு பிறகு நீங்கள் பார்க்கும் சௌந்தர்யா அக்காவிலிருந்து வேறுபட்டவராக இருப்பார் என்றார்.
அபிஷந்திற்குள் இருந்த ஒரு insecurity-யை மாற்றியதற்காக ரஜினிகாந்த் சாருக்கு என் நன்றிகள். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து உதவி இயக்குநர்களுக்கும், இயக்கத்தில் வாய்ப்புகள் கிடைக்கும்படி நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று சௌந்தர்யா அக்காவிடம் கேட்டுக் கொள்கிறேன். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியதாவது.., நான் உண்மையிலேயே மிகுந்த உணர்ச்சிவசப்பட்டுள்ளேன். கோவா படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. தயாரிப்பாளர் என்ற பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டதற்கும் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. சிபி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. தலைவர் 173 ஒரு மிகப் பெரிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. அந்தப் படம் டெட்லியாக இருக்கும். மதன் எதிர்காலத்தில் ஒரு பெரிய இயக்குநராக உருவெடுப்பார் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். அபிஷந்த் உள்ளே ஒரு இயக்குநர் இருந்தாலும், இந்த படம் 100 சதவீதம் மதனின் படம் தான். மதன் மிக இனிமையானவர், அந்தக் கணத்தில் வாழத் தெரிந்தவர். படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கிறது அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகர் அபிஷந்த் ஜீவிந்த் பேசியதாவது.., என் முதல் நன்றிகள் அனைத்தும் ரஜினிகாந்த் சாருக்கே. நான் நடிப்பை தொடரலாமா என்ற பல சந்தேகங்கள் எனக்குள் இருந்த காலத்தில், சூப்பர் ஸ்டார் என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்தார். அப்போது அவர், ‘நீ நடி கண்ணா’ என்று சொன்னார். அந்த ஒரு வார்த்தையிலேயே என் எல்லா இன்செக்யூரிட்டிகளும் உடைந்துவிட்டது. அன்றே என்ன நடந்தாலும் இந்தப் படத்தை நான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்தப் படத்தின் வெற்றியை முழுவதுமாக சூப்பர் ஸ்டாருக்கே அர்ப்பணிக்கிறேன். இயக்குநர் மதனுக்கு நன்றி , டூரிஸ்ட் ஃபேமிலி பட ஷீட்டிங் போதே என்னை நடிக்கக் கேட்டார், இந்தப் படத்தை நான் செய்ததற்காக எப்போதும் பெருமைப்படுவேன். டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்குப் பிறகு எனக்கு நிறைய மரியாதை கிடைத்தது. ஆனால் இந்த படம் வெளியான பிறகு, மதனுக்கு அதைவிட இரட்டிப்பு மரியாதை கிடைக்கும். மகேஷ் அண்ணா ஒரு தயாரிப்பாளர் அல்ல எனக்கு எப்போதும் என் அண்ணன் தான். சௌந்தர்யா மேடம் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் போதே என்னை ஒரு ஸ்டார் என வாழ்த்தினார் அவர் நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன் என நம்புகிறேன். ஷான் எனக்காக வந்தார் அவருக்கு நன்றி. அனஸ்வரா பெயர் தான் முதலில் வர வேண்டும் அத்தனை அற்புதமாக நடித்துள்ளார். படத்தில் நடித்த மற்ற அனைவருமே சூப்பராக நடித்துள்ளனர். படம் மிக சிறப்பாக வந்துள்ளது என்றார்.
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம், விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா. இப்படத்திற்கு ஷரத் இசையமைத்துள்ளார். ஷாஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் […]
சினிமாபெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம், விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா. இப்படத்திற்கு ஷரத் இசையமைத்துள்ளார். ஷாஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் மட்டும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர்கள் கே எஸ் அதியமான், மனோஜ் குமார், ராஜ்கபூர் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இயக்குநர் கே.எஸ் அதியமான் பேசும்போது, தம்பி நகுலின் ஒரு துடிப்பான நடிப்பை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். ஆகாஷ் மும்பையில் பெரிய தயாரிப்பாளர். இந்தப் படத்தை வெளியிடுவதற்காக வந்துள்ளார். இயக்குநர் சனில் என் தம்பி மாதிரியானவர். நான் இசை அமைப்பாளர் ஷரத்தின் விசிறி என்றே சொல்ல வேண்டும்.
பல திறமைசாலிகள் சரியான நேர்கோட்டு பாதை கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து இப்போது இணைந்துள்ளார்கள். கடவுள் இவ்வளவு தூரம் இந்த படத்தைக் கொண்டு வந்துள்ளார். படம் வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன். படத்தின் கதை உண்மை கலந்து, சுவாரசியமாக இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும். இப்போது உணர்ச்சிகரமாக இருக்கிறது. இந்தப் படம் வெளிவந்து வெற்றி பெற வேண்டும். மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என்றார்.

இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் பேசும்போது, இப்போது எவ்வளவோ ஏஐ தொழில் நுட்பங்கள் வந்துள்ளன. ஆனால் எந்த தொழில்நுட்பத்தையும் இலகுவாகக் கையாளர் தெரிந்தவர் இந்த இசையமைப்பாளர் ஷரத். அவரால் இந்த தொழில்நுட்பம் இல்லாமலும் அருமையான இசையைக் கொடுக்க முடியும்.
நாட்டில் இசையில் உள்ள நான்கு திறமைசாலிகளில் அவரும் ஒருவர். அந்த அளவுக்கு இசையில் ஞானம் உள்ளவர். அவரால் எந்த இசையையும் அசலாகக் கொடுக்க முடியும். அவர் என் நண்பர் என்பதில் மகிழ்ச்சி என்றார்.
இசையமைப்பாளர் ஷரத் பேசும்போது, ஏற்கெனவே நான் தமிழில் ஜூன் 6, 180 போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இந்தப் படம் வெளியாகுமா என்கிற கேள்விக்குறி இருந்தது. இப்போது எல்லாம் கூடி வந்திருக்கிறது. இது ஒரு கனவு மாதிரி இருக்கிறது. இது கடவுளின் விருப்பம் என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு திரைப்படம் உருவாக்குவதை விட அது வெளிவரும்போது தான் அது முழுமை பெறுகிறது. தமிழ்த் திரை உலகில் உள்ள எம் எஸ் விஸ்வநாதன் இளையராஜா போன்றவர்களின் இசையைக் கேட்டு வளர்ந்தவன் நான். மலையாளத்தில் இசையமைக்கும் போது கூட தமிழில்தான் டம்மி வரிகளை எழுதிக் கொள்வேன். அப்படி ஒரு இனிமையான மொழி தமிழ். எனக்கு தமிழ் மொழி மீது அன்பு பற்று பாசம் மதிப்பு மரியாதை உண்டு. நான் இங்கே ஒரு படம் இசையமைத்தேன். மெட்டு போட்டு பாடல்கள் வரிகள் எல்லாம் எழுதி சித்ரா, மனோ பாடினார்கள். ஒலிப்பதிவும் செய்யப்பட்டு விட்டது.

அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மிகவும் நல்லவர் எப்போதும் பளபளவென்று ஜிப்பா போட்டிருப்பார். நான் எந்த இசைக் கருவியைத் தொட்டாலும், இசைத்தாலும் உடனே அவர் அற்புதம் என்று எனக்கு ஒரு உம்மா கொடுப்பார் அடுத்த கருவியைத் தொட்டால் இன்னொரு உம்மா கொடுப்பார். இப்படி அவர் பல முத்தங்கள் கொடுத்தார். ஆனால் எல்லாம் முடிந்து சம்பளம் என்று வருகிறபோது அவர் ஆளைக் காணவில்லை. ஓடிப்போனவர் வரவே இல்லை. எனக்கு அப்படி ஒரு ஏமாற்றம். அவர் எங்கிருக்கிறார் அவரைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. நான் சாவதற்குள் அவரைப் பார்த்துவிட வேண்டும் எனக்கு ஆஸ்கார் அவார்டு வாங்க வேண்டும் என்றோ ரஜினி சார் படத்தில் இசையமைக்க வேண்டும் என்றோ ஆசை இல்லை. அவரை எப்படியாவது பார்த்து விட வேண்டும். நான் 180 திரைப்படத்திற்கு இசையமைத்தது மறக்க முடியாது. அந்தப் படத்தின் இயக்குநர் ஜெயேந்திரா சாதாரணமாகத் திருப்தி அடைய மாட்டார். அந்த படத்தில் நான் 180 மெட்டுகள் போட்டிருப்பேன். அந்த அனுபவம் மறக்க முடியாது.

நான் இளையராஜா சாருடைய விசிறி இல்லை. புரப்பல்லர் என்றே சொல்ல வேண்டும். அவர் இசையில் எல்லாம் பாட முடியுமா என்று நான் நினைப்பேன். அது ஒரு கனவு போல இருந்தது. ஆனாலும் அது ஒரு நாள் நடந்தது. ‘தாரை தப்பட்டை ‘படத்தில் ‘என் உள்ளம் கோயில் அங்கே உண்டு தெய்வம்’ என்ற பாடலைப் பாடினேன். ஒரு நாள் நண்பர்கள் அழைத்த போது பிரசாத் ஸ்டுடியோ சென்றேன் அங்கே எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. வேறு வேறு அறையில் இருந்து பாடினால் அவருக்கு பிடிக்கவில்லை என்றால் அப்படியே ஓடிவிடலாம். ஆனால் அவர் கண்ணெதிரே நின்று பாட வேண்டும் எனக்குப் பயமாக இருந்தது. இரண்டு முறை வாசித்துக் காட்டிப் பாட வைத்தார். பாடலைக் கேட்ட பிறகு இரண்டு முறை ஓட விட்டுப் பார்த்தார். எனக்குப் பதற்றம். அருகில் அழைத்து என் கன்னத்தைத் தடவினார். இதுவரை நீ எங்கே இருந்தாய் என்றார். அது மட்டுமல்ல என்னை அழைத்து ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அது என் வீட்டில் இன்னும் இருக்கிறது. மறுநாள் அழைத்தார். இசைக்கு எந்த விலையும் இல்லை பணம் கொடுக்க முடியாது தெரியுமா? என்றார். ஆமாம் அவரது இசையில் பாடியதற்குப் பணம் வாங்க முடியாது. வேறு ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்கிறேன், அடி கொடுத்தால் கூட சரி என்றேன். அவர் என் கையை விரித்து ஒன்று கொடுத்தார். அது ஒரு மோதிரம் அதுவும் நவரத்தின மோதிரம். எனக்கு அதைவிட வேறென்ன விருது வேண்டும்? ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது போல ஒரு மகிழ்ச்சியில் இருந்தேன். ஓ…என்று அழுதுவிட்டேன். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்தால் கூட அப்படி அழுது இருக்க மாட்டேன் அப்படி ஒரு அழுகை.அப்படியெல்லாம் அனுபவம் உள்ளது. இங்கே வந்திருக்கும் என் நண்பன் ரமேஷ் விநாயகம் நல்ல திறமைசாலி. அவருக்கும் பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் என்றார்.
இயக்குநர் சனில் பேசும்போது,
மலையாளத்தில் தாய் தமிழ் மொழி. தமிழ்நாட்டில் இங்கே பேசுவதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் தமிழகத்தில் ஒரு படம் இயக்குவது என்பது எனது ஒரு கனவாக இருந்தது. மலையாளிகளின் கனவு தேசமாக தமிழ்நாடு இருக்கிறது. எனது சிறுவயதில் நான் உதவியாளராக இருந்தபோது இங்கே பிரசாத் லேப் வந்து ஃபிலிம் எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறேன். மீண்டும் இங்கே என் படத்திற்காக வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ப் படம் இயக்குவது என்பது எனக்கு ஒரு கனவாக இருந்தது. திரையுலகில் வெற்றி தோல்வி முக்கியமல்ல. ஒரு திரைப்படம் எடுக்கும் போது மனது நிறைய வேண்டும். இங்கே இத்தனை பேரை சேர்த்து வைத்திருப்பது சினிமா தான். கே. எஸ். அதியமான் எனக்கு காட்ஃபாதர் மாதிரி. இங்கே மலையாளம் தமிழ் என்ற மொழி முக்கியமில்லை. திறமை தான் முக்கியம். தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அவரது முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்றார்.

இயக்குநர் மனோஜ் குமார் பேசும்போது, இங்கே இருக்கிற நடிகர் நகுலைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் ஆடும் ஆட்டத்தைப் பார்த்துப் பொறாமையாக இருக்கிறது. அவரது வயது என்ன என்று கேட்க வேண்டும் போல் இருக்கிறது. அவர் ஆட்டத்தைப் பார்த்து பலரும் அவரைக் காதலிப்பார்கள். அந்த கூட்டத்தை குறைக்க வேண்டும் என்று எனக்குப் பொறாமையாக இருக்கிறது .
படத்தின் பாடல் காட்சிகளை பார்த்தேன். உதட்ட அசைவுக்கு இடமில்லாமல் பின்னணியில் பாடல் காட்சிகளை உருவாக்கி எடுத்து இருக்கிறார்கள், காட்சிகள் நன்றாக இருக்கின்றன. ஒரு இயக்குநர் என்பவருக்குள் அனைத்து தொழில்நுட்ப கலைஞரும் இருக்கிறான். அப்படி எல்லாம் எல்லாவிதமான திறமைகளும் இருந்தால் தான் இப்படி எடுக்க முடியும். நல்ல படம் கொடுத்தால் நிச்சயம் மக்கள் பார்ப்பார்கள், பாராட்டுவார்கள். சமீப காலமாக சிறிய படங்கள் வெற்றி பெறுவது இதைத்தான் கூறுகிறது என்றார்.
இயக்குநர் ராஜ்கபூர் பேசும்போது,
இந்தப் படத்தின் டிரைலரை பார்த்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது. இது போல் பார்த்து நீண்ட நாள் ஆகிறது. துப்பாக்கி சத்தம் என்றுதான் படங்கள் வருகின்றன. அந்த வகையில் இந்தப் படத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது .ஸ்ரீதர் சார் படத்தை பார்க்கிற உணர்வைத் தருகிறது. அப்படி ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கிறார்கள். நகுல் இந்தப் படத்திற்குப் பிறகு நல்ல ஆட்டம் போடுவார். இந்த ஆண்டு நகுல் ஆண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். இன்னொரு காதல் கோட்டை போல் இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

கதாநாயகி நடிகை ரித்திகா சென் பேசும்போது, எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றார்.
கூல் சுரேஷ் பேசுகையில், நான் இளமையாக ஸ்மார்ட் ஆக இருப்பதாகச் சொன்னார்கள் இதற்கெல்லாம் காரணம் நகுல்தான்.அவரைப் பார்த்து . அவரது தூண்டுதலில் தான் நான் இப்படி இருக்கிறேன். நான் அலப்பறை செய்வதாகவும் கூறினார்கள் .அதற்கும் நகுல் தான் காரணம். என் முதல் படம் காதல் அழிவதில்லை. என்னை அய்யா டி ஆர் அறிமுகப்படுத்தினார். அதே போல் இந்த படமும் வெற்றி பெறும் என்றார்.

நடிகர் நகுல் பேசும் போது, காதல் கதை சொல்லவா என்கிற இந்தப் படத்தின் தலைப்பை பார்க்கும் போதே எனக்கு பிடித்திருக்கிறது. காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. காதல் பற்றி ஏதாவது தத்துவார்த்தமாகப் பேச வேண்டும் என்று யோசித்துக் கொண்டே வந்தேன். பாய்ஸ் படத்தில் நடிக்கும் போது சினிமா தொழில் மீது, கலை மீது எனக்குக் காதல் வந்தது. அதை நினைத்துப் பார்க்கும்போது எனது லவ் அதிகமாகிறது. முதலில் அம்மா என்னை நேசித்தார்கள். என்னை சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அவர்கள் கனவு கண்டார்கள். அம்மாவின் நேசத்தை நினைத்துக் கொள்கிறேன். என் உடலின் மீது ஒரு காதல் வந்தது அதற்குப் பிறகு உடற்கட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தேன். அதேபோல் எனது திருமணம் குழந்தை என்று காதலுக்கு அர்த்தம் வந்தது. காதல் என்பது வாழ்க்கையின் அடிப்படையான ஒன்று. இங்கே இத்தனை பேர் ஒன்று சேர்ந்து இருப்பதற்கும் காதல் தான் காரணம். இந்தப் படத்திற்கு நான் வருவதற்கு காரணம் அதியமான் அண்ணன் அவர்கள் தான். நான் சென்னைக்கு வருவதற்கே அவர்தான் காரணம். அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அவர் எப்போது என்னை அழைத்தாலும் ஹலோ ஹாய் என்று சொல்ல மாட்டார். தம்பி என்று தான் கூப்பிடுவார். எப்படிடா இருக்குற ரொம்ப நாளாச்சு ? என்பார். அவர் மூலம் தான் இந்த வாய்ப்பு வந்தது. நல்ல வித்தியாசமான கதை.

வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். நான் மாசிலாமணி படத்தில் பேச வேண்டிய ஒரு வசனம் இருக்கும். எது எப்போது நடக்குமோ அது அப்போது நடக்கும், அதுதான் எனது வாழ்க்கையில நடக்கிறது. இந்தப் படத்தில் வித்தியாசமான கதை உள்ளது. இதில் வித்தியாசமான பாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இங்கே எல்லோருக்கும் ஒரு காதல் கதை இருக்கிறது. இந்தக் கதையை அனைவரும் தொடர்பு படுத்திப் பார்த்துக் கொள்ள முடியும். அனைவரும் நன்றாக உழைத்திருக்கிறோம். அருமையான இந்த படக் குழுவிற்கு நன்றி. 15 நாள் தான் இதில் பணியாற்றினேன். ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவம் வித்தியாசமான அனுபவம் என்றார்.
நிகழ்ச்சியில் பாடல்களை எழுதியுள்ள கண்மணி ராஜா முகமது, முத்தமிழ், கவிதா ரவி, பார்த்திபன், தயாரிப்பாளர் பத்ரகாளி பிலிம்ஸ் வெங்கட்ராவ், கன்னட நடிகர் ரஞ்சித் குமார், தயாரிப்பாளர்கள் ராஜேந்திரகுமார், வேலாயுதம், படத்தை தயாரித்திருக்கும் ஆகாஷ் அமையா ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து ‘ப்ராமிஸ்’ என்றொரு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில்கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார். நாயகியாக நதியா நடித்துள்ளார். சங்கமித்ரன் ப்ரொடக்ஷன், அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. N.நாகராஜ் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் […]
சினிமாசத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து ‘ப்ராமிஸ்’ என்றொரு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில்
கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார். நாயகியாக நதியா நடித்துள்ளார். சங்கமித்ரன் ப்ரொடக்ஷன், அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. N.நாகராஜ் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன், தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், நடிகர் காதல் சுகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவுக்குப் படக் குழுவினர் அனைவரும் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார்கள்.

அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள தயாரிப்பாளர் N. நாகராஜன் அனைவரையும் வரவேற்று பேசும்போது, இந்த இயக்குநரை 2023 ல் வேலூரில் சந்தித்தேன். அவர் ஒரு கதையைச் சொன்னார். நீங்கள் தான் தயாரிப்பாளர் என்றார். எனக்கு உடனே ஒன்றும் சொல்ல முடியவில்லை. யோசித்துச் சொல்கிறேன் என்றேன். ஆறு மாதம் போனது. இதை என் மனைவியிடம் கூறிய போது செய்யலாம் என்றார். 2024 ஆகஸ்ட் 15 இல் படம் பூஜை போடப்பட்டது. அப்படியே படக்குழு உருவாகி இந்தப் படத்தை முடித்து விட்டோம். இயக்குநர் நல்ல திறமைசாலி, உழைப்பாளி. அவரைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.தலைப்பு ஆங்கிலத்தில் இருந்தாலும் படத்தில் வசனங்கள், பாடல்கள் எல்லாம் முடிந்தவரை தமிழில் இருக்க வேண்டும் என நினைத்தோம். வேறு வழியில்லாமல்தான் தலைப்பை ’ப்ராமிஸ்’ என ஆங்கிலத்தில் வைத்தோம். இப்போது படம் முடிந்து வெளியிடுவதற்குத் தயாராக இருக்கிறது. மக்களை நோக்கித் தேர்வு எழுதுவது போல் ஒரு மன நிலையில் இருக்கிறோம். இந்தப் படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். முடிவு மக்கள் கையில் இருக்கிறது. இந்தப் படத்திற்காக அனைவரும் நன்றாக உழைத்தார்கள், ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதை மறக்க முடியாது. தங்கள் சொந்தப் படம் போல் நினைத்து வேலை பார்த்தார்கள். அனைவருக்கும் நன்றி என்றார்.
பாடலாசிரியர் பாலா பேசும்போது,
இப்போது வருகிற படங்களில் நல்ல பாட்டு இல்லை என்கிற குறை, வருத்தம் இருக்கிறது. உண்மை என்னவென்றால் அதற்கான நல்ல பாடலாசிரியர்களும் இசை அமைப்பாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் அதற்கான களங்கள் குறைந்து வருகின்றன. நல்ல வாய்ப்பு கொடுத்தால் நல்ல பாடல்கள் வரும். திரைப்படங்களில் பாடல்களை ஸ்பீட் பிரேக்கர் என்று சொல்கிற போக்கு இருக்கிறது. பாடல்கள் ஸ்பீடு பிரேக்கர் அல்ல, அவை படங்களுக்கு மைலேஜ் என்றுதான் சொல்ல வேண்டும்.
‘குணா’ படத்தின் பாடல் காலம் கடந்தும் ரசிக்கப்படுகிறது. அது ஓர் அடையாளமாக இருக்கிறது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற பாடல் ஓர் அடையாளமாக மாறி இருக்கிறது. இப்படிப் பாடல் ஒரு படத்தைக் கொண்டு செல்வதற்கு உதவியாக இருக்கும். இந்தப் படத்தில் பாடல் எழுதியது நல்ல அனுபவம் என்றார்.

இயக்குநர் அருண்குமார் சேகரன் பேசும்போது, எங்களுக்கு எந்தப் பின்புலமும் இல்லை, இந்தப் படத்தில் பெரிய நட்சத்திரங்களோ பிரமாதமான பட்ஜெட்டோ கிடையாது. எங்களைத் தூக்கி விடுவதற்கு ஆட்கள் இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்குச் சினிமா மிகவும் பிடிக்கும். நன்றாக இருந்தால் சினிமாவைக் கொண்டாடுவார்கள். நன்றாக இல்லை என்றால் விமர்சனமும் பலமாக செய்வார்கள். நான் ஊடகத்தில் 2015 – லிருந்து 21 வரை வேலை பார்த்தேன். பிறகு ஒரு பைலட் பிலிம் எடுத்தேன். நண்பர்கள் ஆதரவாக இருந்தனர். ‘வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்’ என்ற அந்த ஒரு மணி நேரப் படத்தை எடுத்து எங்கள் பகுதியில் எல்இடி யில் திரையிட்டேன். அதிலிருந்து நகர்ந்து இந்தப் படத்தின் தயாரிப்பாளரைச் சந்தித்து இந்த நிலைக்கு வந்து நிற்கிறேன்.
வாய்ப்பு கேட்டு எங்கே போனாலும் அனுபவம் வேண்டும், அனுபவம் வேண்டும் என்று கேட்டார்கள். அந்த நிலையில் இவர் என்னை நம்பினார். அதுமட்டுமல்ல இந்தப்படம் உருவாகும் போது
என்னை ஒவ்வொரு கட்டத்திலும் கைப்பிடித்து அழைத்துச் சென்ற இந்தத் தயாரிப்பாளரை மறக்க முடியாது. இந்தப் படத்துக்கு உயிரோட்டமாக சரவண தீபனின் இசை இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் பாதிக்குத்தான் ட்ரெய்லர் வெளியிட்டுள்ளோம். சுவாரஸ்யம் போய்விடும் என்று இரண்டாம் பாதியைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. படம் பார்ப்பவர்களுக்கு அது தெரியும்.
இதை விளம்பரப்படுத்துவதற்கு ஹெச். வினோத்தின் உதவியைக் கேட்டோம். உதவுவதாகச் சொன்னார். அவருக்கு நன்றி. ஆனால் அவரோ ’ஜனநாயகன் ’ பிரச்சினையில் இருக்கும் போது நாங்கள் எப்படிக் கேட்பது ?அதனால் அவரை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நட்டி சாருக்கு நன்றி.
நாங்கள் அதிக ஆட்கள் இல்லாமல் 12 பேர் மட்டும் கொண்ட குழுவாக இருந்து பல வேலைகளையும் செய்தோம். இந்தப் படத்தை எடுத்து முடித்து இருக்கிறோம். ஒரு கட்டத்தில் இந்தப் படம் நிறுத்தப்பட்டு விடுமோ என்கிற பயம் இருந்தது. அந்த கஷ்டமான காலத்தில் அப்போது கதாநாயகி நதியா கைகொடுத்து உதவினார். அதை மறக்க முடியாது. இப்படிப் பலரும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்கள் என்றார்
இசையமைப்பாளர் சரவண தீபன் பேசும்போது, இது எனக்கு முதல் படம் முடிந்தவரை செய்திருக்கிறேன். அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார்.

நடிகர் காதல் சுகுமார் பேசும்போது , நான் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதைப்பற்றி இங்கே குறிப்பிட்ட போது ,
எனக்கே திடுக்கென்று இருந்தது. சினிமாவில் நான் சாதிக்கவில்லை என்றாலும் சினிமாவில் இவ்வளவு நாள் இருப்பதே ஒரு சாதனைதான். இந்த படக்குழுவினரை வாழ்த்துகிறேன் என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது,
சத்தியம் என்ற வார்த்தைக்கு ஒரு மதிப்பு உள்ளது. ஒரு காலத்தில் சத்தியம் செய்து விட்டால் அதைப் பெரிதாக நினைப்பார்கள். அது இப்போது மாறி வருகிறது. சிலர் அப்படி நடந்து கொள்வதில்லை. அவர்களைப் பார்த்து அப்போது சொல்வார்கள் ’சத்தியம் அவனுக்குச் சர்க்கரைப் பொங்கல்’ என்பார்கள்.
நான் படிக்கும்போது புத்தகத்தின் மீது சத்தியம் பண்ணச் சொல்வார்கள். தவறாகச் சத்தியம் செய்தால் படிப்பு வராது என்று பயந்தார்கள். கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் குழந்தை மீது சத்தியம் பண்ணச் செல்வார்கள். இன்று சத்தியத்துக்கு யாரும் பயப்படுவதில்லை அதனால் தான் இந்த நாட்டில் இவ்வளவு வன்முறைகள், அநியாயங்கள் நடக்கின்றன. நாடு மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் இயக்குநர்தான் கதாநாயகன். ஆனால் இங்கே கதாநாயகி வரவில்லை. இங்கே ஒரு படம் ஆரம்பிக்கும் போதே கதாநாயகன், கதாநாயகியிடம் பட விழாக்களுக்கு வருவேன் என்று படத்தின் மீது சத்தியம் வாங்க வேண்டும்.

நீண்ட நாள் கழித்துதான் இப்படிப் பார்க்கிறோம் இங்கே திரையிடப்பட்ட மூன்று பாடல்களுமே ஈர்ப்பாக உள்ளன. பாடல்களும் சரி, வரிகளும் சரி நன்றாக உள்ளன. சில இசை கொண்டாட வைக்கும், சில இசை இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும். அப்படி இதயத்திற்குப் பாலமாக இருக்கும் படி இந்தப் பாடல்களும் இசையும் இருந்தது. இசையமைப்பாளர், பாடலாசிரியருக்கு வாழ்த்துக்கள்.
ட்ரெய்லர் பார்க்கும்போது கதை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் படத்தில் கதாநாயகன் கதாநாயகி தலையில் அடிக்கடி அடித்துச் சத்தியம் செய்வதைப் பார்க்கும் போது ஏதோ கதையில் இருக்கிறது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. அதிக சத்தியம் செய்பவன் ஆபத்தானவன். படத்தில் செய்யும் சத்தியங்களைப் பார்க்கும்போது கதை விறுவிறுப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சின்ன திரைப்படங்கள் என்றாலே நல்ல கதைதான் முக்கியம். பெரிய நடிகர்களோ பெரிய செலவுகளோ இல்லாத பட்சத்தில் நல்ல கதையை நம்பித்தான் படம் எடுக்க வேண்டும். நல்ல கதை, வித்தியாசமான கதை இருந்தால் தான் அது சிறந்த படம். கமர்சியல் படம் என்பது வேறு சிறந்த படம் என்பது வேறு. வணிகத்திற்குத் தேவையான கதை, வாழ்க்கைக்குத் தேவையான கதை என்று இரண்டு உண்டு. ‘ப்ராமிஸ்’ திரைப்படம் வாழ்க்கைக்குத் தேவையான கதை என்று நினைக்கிறேன்.
மக்கள் சின்ன படங்களைப் பார்க்க வருவதற்குப் பயப்படுகிறார்கள் அதற்குக் காரணம் சில சின்ன படங்கள்தான். அனுபவம் இல்லாதவர்கள் படம் எடுக்கிறார்கள். அது பார்க்கும் படியாக இருப்பதில்லை. ஆனால் இந்தப் படம் ஒரு நம்பிக்கையைத் தருகிறது. எந்தப் படம் வந்தாலும் இது ஓடும் என்கிற நம்பிக்கையைத் தருகிறது. அந்த அளவிற்குக் கதை உள்ளது என்றார்.
தயாரிப்பாளர் (கில்டு) சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, நான் வர்மக்கலை கற்றுக் கொள்ளும் போது எங்கள் வாத்தியார் என்னிடம் என் ஆள்காட்டி விரலில் பிளேடால் கீறி,’ இது சத்தியம் என் உயிருக்கு ஆபத்து என்று வந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்துவேன்’ என்று வெற்றிலையில் எழுதி சத்தியம் வாங்கினார். அதற்கு இன்று வரை பயந்து கொண்டிருக்கிறேன். பயன்படுத்துவதற்கும் பயம், சொல்லிக் கொடுப்பதற்கும் பயம்.
சத்தியம் என்ற வார்த்தைக்கு உள்ள பலம் பிராமிஸுக்குக் கிடையாது. அம்மா என்ற வார்த்தைக்குள்ள பலம் மம்மிக்குக் கிடையாது. ‘ப்ராமிஸ்’ படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக உள்ளது. படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று கூறி வாழ்த்தினார்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசும்போது, நல்ல ஒரு திருப்தியான படத்தின் ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்த்தோம். அருமையான பாடல்களைப் போட்டுக் காட்டினார்கள், பாடல்கள், காட்சிகள், எடிட்டிங் எல்லாமே நன்றாக உள்ளது என்று அனைவரும் சொன்னார்கள். ஆனாலும் படம் வெற்றி பெற வேண்டும். உண்மையாக வாழ்த்த வேண்டும் என்று தான் நாங்கள் வந்திருக்கிறோம். அதற்காகவே அவர்களை வாழ்த்துகிறேன். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். நிச்சயம் இந்தத் தயாரிப்பாளர் அடுத்த படம் எடுப்பார். எடுத்தால் சினிமாவுக்கு லாபம், தொழிலாளர்களுக்கு லாபம். சத்தியமாகச் சொல்கிறேன் இந்த ‘ப்ராமிஸ்’ படம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
விழாவில் ‘ப்ராமிஸ்’ படக்குழுவினருடன் வேலூர் பகுதியில் இருந்து திரளாக வந்திருந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில், மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றை பற்றி தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக’ #L367′ என பெயரிடப்பட்டுள்ளது. தனது முதல் படமான ‘மெப்படியான் ‘ படத்தின் மூலம் தேசிய […]
சினிமாஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில், மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றை பற்றி தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக’ #L367′ என பெயரிடப்பட்டுள்ளது. தனது முதல் படமான ‘மெப்படியான் ‘ படத்தின் மூலம் தேசிய விருதை வென்ற இயக்குநர் விஷ்ணு மோகன் இப்படத்திற்கு கதை எழுதி, இயக்குகிறார். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் #L367 எனும் திரைப்படம் – ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் வரலாற்றின் மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக அமையவிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை பைஜு கோபாலன் மற்றும் வி.சி. பிரவீன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். கிருஷ்ணமூர்த்தி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

மிகப்பெரிய அளவில் உருவாகும் இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் பாலிவுட் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இணைய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. படக் குழுவினர் படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தற்போது ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் – சுரேஷ் கோபியின் ‘ஒட்டக்கொம்பன்’, ஜெயராம் - காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘ஆசைகள் ஆயிரம் ‘, ஜெயசூர்யாவின் ‘கதனார்’, நிவின் பாலி- பி. உன்னிகிருஷ்ணன் இணையும் ஒரு படம் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் ‘கில்லர் ‘ உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறது. இந்த வரிசையில் #L367 படமும் இணைவதன் மூலம் மலையாள திரையுலகில் ஒரு சக்தி வாய்ந்த தயாரிப்பு நிறுவனமாக ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தன்னுடைய பணியையும், பங்களிப்பையும் மேலும் வலுப்படுத்தி கொள்கிறது.
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில், மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றை பற்றி தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக’ #L367′ என பெயரிடப்பட்டுள்ளது. தனது முதல் படமான ‘மெப்படியான் ‘ படத்தின் மூலம் தேசிய […]
சினிமாஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில், மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றை பற்றி தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக’ #L367′ என பெயரிடப்பட்டுள்ளது. தனது முதல் படமான ‘மெப்படியான் ‘ படத்தின் மூலம் தேசிய விருதை வென்ற இயக்குநர் விஷ்ணு மோகன் இப்படத்திற்கு கதை எழுதி, இயக்குகிறார். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் #L367 எனும் திரைப்படம் – ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் வரலாற்றின் மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக அமையவிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை பைஜு கோபாலன் மற்றும் வி.சி. பிரவீன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். கிருஷ்ணமூர்த்தி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

மிகப்பெரிய அளவில் உருவாகும் இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் பாலிவுட் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இணைய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. படக் குழுவினர் படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தற்போது ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் – சுரேஷ் கோபியின் ‘ஒட்டக்கொம்பன்’, ஜெயராம் - காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘ஆசைகள் ஆயிரம் ‘, ஜெயசூர்யாவின் ‘கதனார்’, நிவின் பாலி- பி. உன்னிகிருஷ்ணன் இணையும் ஒரு படம் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் ‘கில்லர் ‘ உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறது. இந்த வரிசையில் #L367 படமும் இணைவதன் மூலம் மலையாள திரையுலகில் ஒரு சக்தி வாய்ந்த தயாரிப்பு நிறுவனமாக ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தன்னுடைய பணியையும், பங்களிப்பையும் மேலும் வலுப்படுத்தி கொள்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ், தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். […]
சினிமாதமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ், தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது, ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஊடகங்களை ஏதேனும் ஒரு வகையில் சந்திப்பது என்னுடைய வழக்கம். ‘கூலி’ படத்திற்குப் பிறகு… ஊடகங்களை சந்தித்து பேச வேண்டும் என நினைத்து, தற்போது தான் சந்திக்கிறேன். சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி வெளியாகும் செய்திகளுக்கு என்னுடைய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகவும் உங்களை சந்திக்கிறேன்.
‘கூலி’ திரைப்படம் 35 நாட்கள் திரையரங்குகளில் ஓடி உள்ளது. இதற்காக முதலில் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வசூல் பற்றி நான் பேச விரும்பவில்லை. இது லாபகரமான படம் என்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் எங்களிடம் தெரிவித்து விட்டது. ஆயிரம் விமர்சனங்களை கடந்து அந்த திரைப்படம் 35 நாட்கள் ஓடியதற்கும், வசூலித்ததற்கும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.
சமூக வலைதளங்களில் வெளியான இப்படத்தை பற்றிய விமர்சனம் என்னை யோசிக்க வைத்தது. என்னிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள், இப்படி கதை சொல்வதை தான் விரும்புகிறார்கள் என பல விசயங்களை நானும் அதிலிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். இதனை என்னுடைய அடுத்தடுத்த படங்களில் இடம்பெறச் செய்து, எதிர்மறை விமர்சனங்கள் அல்லாத படைப்புகளை அளிப்பதற்கு முயற்சி செய்வேன்.

‘கூலி’ திரைப்படம் வெளியாகும் நேரத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரையும் சந்தித்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறோம்’ என்றார்கள். அது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. கிட்டத்தட்ட 46 வருடங்கள் கழித்து இருவரும் ஒன்றிணைந்து நடிக்கிறார்கள் என்றால் அது மிகப்பெரிய வாய்ப்பு. அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தை என்னை இயக்கச் சொன்னதே எனக்கு பெரிய விசயமாக இருந்தது.
அந்த சூழலில் ‘கைதி_2’ என்பதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது. அதன் பிறகு இதன் தயாரிப்பு நிறுவனத்திடம் இதைப்பற்றி எடுத்துச் சொல்லி இது போன்ற வாய்ப்பு மீண்டும் கிடைக்காது என்பதையும் சொல்லி அந்த படத்தை நிறைவு செய்துவிட்டு வருகிறேன் என்று கேட்டுக் கொண்டேன். அதன் பிறகு ஒன்றரை மாதங்கள் இருவருக்காகவும் சின்சியராக கதை எழுதினேன். இருவரையும் வைத்து ஒரு படத்தை உருவாக்க நினைத்தேன். அதன் பிறகு அவர்கள் இருவரையும் தனித்தனியாக நேரில் சந்தித்து கதையையும் விவரித்தேன். கதையைக் கேட்டு இருவரும் வியப்படைந்தார்கள். ஆனால் இருவரும் தொடர்ந்து ஆக்சன் படங்களில் தான் நடித்துக் கொண்டே இருந்தனர். தற்போது நடித்து வரும் ‘ஜெயிலர் 2 ‘ மற்றும் அன்பறீவ் இயக்கத்தில் உருவாகும் கமல்ஹாசனின் படம் வரை ஹெவியான ஆக்சன் படங்கள்தான். அதனால் இருவரும் ஆக்ஷன் இல்லாமல் மென்மையான திரைக்கதையாக இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினர். இதை அவர்கள் இருவரும் என்னிடமும் தெரிவித்தனர். அத்தகைய ஸ்டைலில் எனக்கு படத்தை இயக்கத் தெரியாது. இதை அவர்களிடம் தெரிவித்துவிட்டு விலகி விட்டேன்.
நான் எப்போது திரும்பி வருவேன் என்று தெரியாததால், ‘கைதி 2’ படத்திற்கான கால்ஷீட்டை நடிகர் கார்த்தி மற்றொரு இயக்குநருக்கு வழங்கி விட்டார். இதுதான் நடந்தது.
இதற்கிடையில் கிடைத்த நேரத்தில், ஆறு ஆண்டுகளுக்கு முன் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்குவதற்கு முன் பணம் வாங்கியிருந்தேன். அந்த கமிட்மெண்ட்டை கிளியர் செய்து விடலாம் என்று இருந்தபோது, எனக்கு மூன்று ஆண்டுகளாக அல்லு அர்ஜுனுடன் தொடர்பு இருந்தது. நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றவும் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தோம். எல்லாம் கூடி வந்ததால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்காக அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறேன்.
இதற்கு இடையில் ஊதியத்தை அதிகமாக கேட்டதால் தான் ‘கைதி_2’ படத்தின் பணிகள் நடைபெறவில்லை என செய்தி வெளியானது. இது முற்றிலும் தவறு. ஒரு இயக்குநருக்கான சம்பளம் என்பது தயாரிப்பாளரும், சந்தையும் தான் தீர்மானிக்கிறது. நான் எவ்வளவு கேட்டாலும் மார்க்கெட்டில் எனக்கு என்ன மதிப்போ, அதற்கு ஏற்ற வகையில் தான் எனக்கு சம்பளம் தருவார்கள். கடந்த வாரம் ‘கைதி 2 ‘படத்தின் தயாரிப்பாளரையும், மற்றவர்களையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி விட்டேன். என்னுடைய அடுத்த திரைப்படம் ‘கைதி 2’ வாகத்தான் இருக்கும்.
இதற்கிடையில் LCU நிறைவு பெற்றது என செய்திகள் வெளியானது. LCU என நான் பெயர் வைக்கவில்லை. ரசிகர்கள் தான் ஏற்படுத்தினர். நான் அதை பின்தொடர்கிறேன். இதை நான் மட்டும் முடிவு செய்து, இனி LCU வில் படம் வராது என்று சொல்ல முடியாது. ‘கைதி 2’, ‘விக்ரம் 2’, ‘ரோலக்ஸ்’ இதெல்லாம் என்னுடைய கமிட்மெண்ட். இது எல்லாம் உருவாக்காமல் என்னால் போக முடியாது. அதனால் LCU தொடர்கிறது. அல்லு அர்ஜுன் படம் வெளியான பிறகு இவை மீண்டும் திறக்கப்படும். எங்களுடைய தயாரிப்பில் உருவாகும் ‘பென்ஸ்’ எனும் படமும் LCU வை சார்ந்தது தான்.
நானும், அமீர் கானும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதாக இருந்தது. அந்த பேச்சுவார்த்தை தற்போதும் தொடர்கிறது. அவருக்கும் நிறைய திட்டமிட்ட பணிகள் இருக்கிறது. அதனால் இருவரும் நாளடைவில் இணைந்து பணியாற்றுவோம். என்றார்.
ஜே.கே.பி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில், அஷ்வின், பவானி ஶ்ரீ, ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன், பிரியா பவானி ஷங்கர், சஞ்சனா திவாரி, எம்எஸ் பாஸ்கர், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிப்பில், விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஹாட் ஸ்பாட்_2”. கதைப்படி… ஒரு […]
விமர்சனம்ஜே.கே.பி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில், அஷ்வின், பவானி ஶ்ரீ, ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன், பிரியா பவானி ஷங்கர், சஞ்சனா திவாரி, எம்எஸ் பாஸ்கர், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிப்பில், விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஹாட் ஸ்பாட்_2”.
கதைப்படி… ஒரு தயாரிப்பாளரிடம் பெண் இயக்குநர் ( பிரியா பவானி ஷங்கர் ) கதை சொல்ல ஆரம்பிக்கிறார். அதுவே காட்சிகளாக நகர்கிறது. அதாவது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இருவரின் தீவிர ரசிகர்கள் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக மோதிக் கொள்கிறார்கள். இந்நிலையில் இரு நாயகர்களின் படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது. இரண்டு ரசிகர்களின் குடும்பத்தினரையும் கடத்தி வைத்துக்கொண்டு, இரு நாயகர்களும் ஒரே லைனில் பேச வேண்டும். பேசினால் குடும்பத்தினரை விடுவிப்பதாக கெடுவிதிக்கிறது கடத்தல் கும்பல். அதன்பிறகு என்னானது என்பது மீதிக்கதை…

வெளிநாட்டில் படித்துவிட்டு ஊர் திரும்பும் மகளை ( சஞ்சனா ) அழைத்துவர தந்தை ( தம்பி ராமையா ) விமான நிலையம் செல்கிறார். மகள் அரைகுறை ஆடையுடன் ஒரு பையனுடன் வருகிறார். தந்தை தமிழ் கலாச்சாரம் பண்பாடு, பழக்க வழக்கத்தில் ஊரிப்போனவர் என்பதால் மகளின் நடவடிக்கையை பார்த்து அதிர்ச்சி ஆகிறார். பின்னர் அவரது முதலாளி தனது மகனுக்கு பெண் கேட்கிறார். அப்போதும் அரைகுறை ஆடையில் வந்து, வெளிநாட்டு கலாச்சாரத்துடன் பேசி இதுதான் மாடர்ன் என்கிறார். குடும்பத்தில் ஈகோ உருவாகி குழப்பம் நீடிக்கிறது. அதன்பிறகு என்னானது என்பது மீதிக்கதை..

இதேபோல் மேலும் இரண்டு கதைகள். ஒரு படத்தில் நான்கு கதைகள். நான்கும் வெவ்வேறு திசைகளில் பயணித்து விறுவிறுப்பாக நகர்கிறது.
தயாரிப்பாளரிடம் கூறிய நான்கு கதைகளில், எந்த கதை தேர்வானது, எந்த நோக்கத்திற்காக இந்த கதைகள் சொல்லப்பட்டது என்பது மீதிக்கதை.
கறிக்கோழி உற்பத்தி விவசாயிகள் கூலி உயர்வு கேட்டு கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழக முழுவதும் பல இடங்களில் கடந்த சில நாட்களாக, கறிக்கோழி உற்பத்தி விவசாயிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், தனியார் […]
தமிழகம்கறிக்கோழி உற்பத்தி விவசாயிகள் கூலி உயர்வு கேட்டு கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழக முழுவதும் பல இடங்களில் கடந்த சில நாட்களாக, கறிக்கோழி உற்பத்தி விவசாயிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், தனியார் நிறுவனங்கள், பண்ணைகளுக்கு கோழி குஞ்சுகள் மற்றும் தீவனங்களை விநியோகம் செய்ய விடாமல் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் தடுத்து வருவதாகக் கூறி, கறிக்கோழி உற்பத்தி தனியார் நிறுவனங்கள் புகார் அளித்துள்ளனர். கடந்த 14 ஆம் தேதி அதிகாலை திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் காவல் நிலையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் உடுமலை காவல் நிலையத்திலும் விவசாய சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து தமிழகத்தில் பல இடங்களில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஈசன் முருகசாமி மற்றும் சங்க நிர்வாகிகள் கைதானதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சி சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து உடுமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு குற்றவியல் நீதிபதி உமாதேவி பிப்ரவரி 3 ஆம் தேதியன்று ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து உடுமலை காவல் நிலையத்தில் இது தொடர்பான மற்றொரு வழக்கில் உடுமலை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். அப்போது பிப்ரவரி 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஈசன் முருகசாமி உடுமலை நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்படும் தகவலறிந்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், விவசாயிகள் ஏராளமானோர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. கைது நடவடிக்கையின் போது விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபடலாம் என கருதப்பட்ட நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.