விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் […]
சினிமா
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் […]
சினிமா
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் […]
சினிமா
அப்பீட் பிக்சர்ஸ் ( Upbeat Pictures ) சார்பில், தயாரிப்பாளர் VRV குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சரண்டர்”. இப்படம் வரும் ஆகஸ்ட் […]
சினிமாஅப்பீட் பிக்சர்ஸ் ( Upbeat Pictures ) சார்பில், தயாரிப்பாளர் VRV குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சரண்டர்”. இப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்… இசையமைப்பாளர் விகாஸ் படிஸா பேசியதாவது.. ‘எனக்குத் தமிழில் திரையரங்கில் வெளிவரும் முதல் படம், இதற்கு முன் தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் செய்திருந்தேன், எனக்கு முதல் வாய்ப்பளித்த அறிவழகனுக்கு நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர் குமாருக்கு நன்றி. இப்படத்தில் எல்லோருமே கலக்கியிருக்கிறார்கள். இயக்குனர் கௌதம் படத்தை வேற லெவலில் செய்துள்ளார். நிறைய உழைத்துள்ளார். தர்ஷன் இதில் கலக்கியிருக்கிறார். படம் பார்த்து அவரா இது என ஆச்சரியப்பட்டேன். என் மியூசிக் குழுவிற்கு நன்றி, எல்லோரும் ஆதரவு தாருங்கள் என்றார்.
கலை இயக்குநர் மனோஜ் பேசியதாவது… இது என் மூன்றாவது படம், அறிவழகன் தான் என்னை அறிமுகப்படுத்தினார், அவரது அஸிஸ்டெண்ட் கௌதம் இப்படத்தில் வாய்ப்பு தந்துள்ளார். செட் எல்லாம் ரியலாக இருக்க வேண்டும் என முதலிலேயே சொல்லி விட்டார். அப்படித்தான் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளோம். படம் மிக நன்றாக வந்துள்ளது என்றார்.

நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது., தயாரிப்பாளர் அமெரிக்காவிலிருந்து வந்து இப்படத்தை எடுத்துள்ளார். தயாரிப்பாளர் குமாருக்கு வாழ்த்துகள். இயக்குனர் கௌதம், ஈரம் அன்பழகனிடமிருந்து வந்து இப்படத்தை எடுத்துள்ளார். மிக அற்புதமாக இப்படத்தை எடுத்துள்ளார். செட் எல்லாம் அப்படியே ஒரிஜினலாக இருந்தது. தர்ஷன் அருமையாக நடித்துள்ளார். இந்த மாதிரி புதியவர்களை ஊக்குவிக்கும் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துகள். சினிமாவில் தொடர்ந்து ஒரே மாதிரி படங்கள் மட்டுமே வருகிறது அது மக்களுக்கு போரடிக்கிறது. அவர்களுக்கு வித்தியாசமான படங்களைக் கலைஞர்கள் தர வேண்டும். அதே மாதிரியான படமாக சரண்டர் சரியான நேரத்திற்கு வருகிறது. இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.

நடிகை பாடினி குமார் பேசியதாவது, சரண்டர் படம் ஹார்ட் ஒர்க், விடாமுயற்சி எல்லாம் சேர்ந்தது தான் இப்படம். கேமராவுக்கு முன்னும் பின்னும் எல்லா கலைஞர்களும் மிகவும் கடினமாக உழைத்துள்ளனர் என்றார்.
எடிட்டர் சாபு ஜோசப் பேசியதாவது, என்னோட அஸிஸ்டெண்ட் ரேணு கோபால் படம் செய்துள்ளார். மகிழ்ச்சி. இயக்குநர் கெளதமை முதலில் பார்க்கும் போதே அவர் ஒரு இயக்குனர் போலத் தான் இருந்தார். அவரிடம் நிறையக் கதைகள் இருந்தது. கோடம்பாக்கத்தில் முதல் படம் செய்துவிடக் கனவுகளோடு பலர் காத்திருக்கின்றனர். அந்த வகையில் கௌதம் இப்படம் செய்துள்ளது மகிழ்ச்சி. இப்படத்தில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு தந்துள்ள தயாரிப்பாளர் குமாருக்கு நன்றி. அஸிஸ்டெண்ட் ரேணு கோபால் 6 வருடம் என்னுடன் வேலை செய்தவர். சினிமாவில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அவர் பெரிய அளவில் வருவார். இந்த டீமில் எல்லாருமே என் நண்பர்கள் தான், அனைவரும் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.

இயக்குனர் கௌதம் கணபதி பேசியதாவது… இது எனக்கு முதல் மேடை, என் குரு அறிவழகன் இங்கு வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இப்படத்தை மிக நேர்மையாக எடுத்துள்ளோம். படத்தில் பாட்டு இல்லை, தேவைப்படவில்லை, தர்ஷனும் எனக்கு இது மாதிரி வேண்டும் என எதையுமே கேட்கவில்லை. கேமராமேன், எடிட்டர், இசை என எல்லாமே அறிவழகனிடமிருந்து வந்தவர்கள் தான். ஒரு டீமாக எல்லோரும் உழைத்துள்ளோம். படம் மிக நேர்த்தியாக வந்துள்ளது என்றார்.
இயக்குனர் அறிவழகன் பேசியதாவது… என்னுடைய உதவி இயக்குனர் கௌதம் இயக்கியுள்ள படம் சரண்டர். இந்த மொத்த குழுவும் என்னுடன் வேலை செய்தவர்கள் தான், இவர்களுக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் குமாருக்கு நன்றி. டிரெய்லர் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. மனோஜ் சப்தம் படம் செய்தவர். இப்படத்தில் மிக நேர்த்தியாகச் செய்துள்ளார். எடிட்டர் ரேணு என் எடிட்டர் சாபுவின் அஸிஸ்டெண்ட். மிக நுணுக்கமாகப் படத்திற்கு என்ன தேவையோ அதைச் சிறப்பாகச் செய்பவர். இப்படத்திலும் சிறப்பாகச் செய்துள்ளார். ஸ்டண்ட் மாஸ்டர் சிறப்பாகச் செய்துள்ளார். இசையமைப்பாளர் விகாஷ் படிஸா தமிழ் ராக்கர்ஸ் செய்தார். அவர் என்னிடம் அறிமுகமானபோது, முதலில் ஒரு டிராக் செய்யுங்கள் எனக் கேட்டேன், அதிலேயே அசத்திவிட்டார். மிகத்திறமைசாலி. படத்திற்கான முழு உழைப்பை எப்போதும் தந்துவிடுவார். தர்ஷன் அவர் வந்த பிக்பாஸ் தான் நான் முழுமையாகப் பார்த்தது. நான் லவ் சப்ஜெக்ட் எடுத்தால் அவரை ஹீரோவாக போட வேண்டும் என நினைத்தேன். கௌதம் அவரை இப்படத்தில் நடிக்க வைத்தது மகிழ்ச்சி. கௌதம் மிகச்சிறப்பான ஒரு படத்தைத் தந்துள்ளார் என்றார்.

நடிகர் தர்ஷன் பேசியதாவது..
இயக்குநர் கௌதம் எப்போதும் என்னை மிகப்பெரிய ஹீரோ போல தான் நடத்தினார். எனக்காக என்னுடன் எப்போதும் நிற்கிறார். தயாரிப்பாளர் குமார் ஒரு கதையை நம்பி, புது டீமை நம்பி, இவ்வளவு செலவு செய்து படம் செய்துள்ளார். அவருக்கு நன்றி. நாங்கள் ஷூட்டில் எவ்வளவு டிஸ்கஸ் செய்தாலும் ரேணுவிடமும் கேட்டுக்கொள்வோம் என்று சொல்வார்கள். அவர் நாங்கள் என்ன எடுத்தாலும் பெரிதாகப் பாராட்ட மாட்டார். ஓகே என்று தான் சொல்வார். எனக்கு இப்போது புதிதாக கதை சொல்ல வந்தவர்கள் அவர் தான் என்னை ரெஃபர் செய்ததாகச் சொன்னார்கள் நன்றி. என்னை அழகாகக் காட்டிய கேமராமேனனுக்கு நன்றி. மன்சூர் அலிகான் போல ஒரு சீனியர் ஆக்டருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். படத்தில் எல்லோரும் கடின உழைப்பைத் தந்துள்ளனர் என்றார்.
இப்படத்தில் தர்ஷன் நாயகனாக நடித்துள்ளார், பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மன்சூர் அலிகான், லால், சுஜித் ஷங்கர், முனிஷ் காந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே. சுபாஷினி வழங்கிய ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தை பி. மணிவர்மன் இயக்கி இருந்தார். தமன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படம் கடந்த ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியானது. ரோமியோ பிக்சர்ஸ் […]
சினிமாஅமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே. சுபாஷினி வழங்கிய ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தை பி. மணிவர்மன் இயக்கி இருந்தார். தமன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படம் கடந்த ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியானது. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்ட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ்வான ரெஸ்பான்ஸ் இருந்தது. இந்த ஆதரவினால் படத்திற்கான திரைகளின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இதன் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.
நிர்வாகத் தயாரிப்பாளர் ஆடிட்டர் விஜயன் பேசுகையில், இந்தப் படம் புதுவிதமான சந்தோஷமான வெற்றி அனுபவத்தைக் கொடுத்துள்ளது. எங்களுக்கு இது முதல் படம் என்பதால் ரிசல்ட் எப்படி இருக்கும் என பயந்து கொண்டே இருந்தோம். ஆனால், மக்களின் ரிசல்ட் பார்த்ததும் பெருமையாகவும் திருப்தியாகவும் இருந்தது. அனைவரின் ஆதரவுக்கு நன்றி. கிளைமாக்ஸ் முடிந்தும் ரசிகர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதை தியேட்டர் விசிட்டில் பார்த்தோம். அனைத்து தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் நடிகர்களுக்கு நன்றி என்றார்.

இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் பேசுகையில், இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. எல்லாருடைய கடின உழைப்பும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. சவுண்ட் மிக்சிங் அகமதுவின் பணி முக்கியமானது. மற்ற தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் நடிகர்களுக்கு நன்றி என்றார்.
ஒளிப்பதிவாளர் கேஜி பேசுகையில், ஜென்ம நட்சத்திரம் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. கஷ்டப்பட்டுதான் இந்தப் படம் எடுத்தோம். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் பார்த்து ரசித்த அனைத்து பார்வையாளர்களுக்கும் நன்றி என்றார்.

நடிகை மால்வி மல்ஹோத்ரா பேசுகையில், படத்திற்கு அன்பும் ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் நன்றி. எல்லோரும் கடின உழைப்பு கொடுத்திருக்கிறோம். தமிழ் பார்வையாளர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பு மறக்க முடியாதது. இன்னும் படம் பார்க்காதவர்கள் திரையரங்கிற்கு வந்து பார்க்க வேண்டும் என்றார்.

நடிகர் முனீஷ்காந்த் பேசுகையில், என்னுடைய படக்குழுவினருக்கு நன்றி! ஹாரர் படம் என்பதால் காமெடி நாங்களே சேர்த்து செய்தால் அந்த எஸ்சென்ஸ் போய்விடும் என இயக்குநர் நினைக்கவில்லை. எங்களுக்கான இடம் கொடுத்தார். சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. யாசரும் நன்றாக காமெடி செய்தார் என்றார்.
கேபிள் சங்கர் பேசுகையில், இந்த டீம் எனக்கு மிகவும் பழகினதுதான். இந்தப் படம் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெறும் என ரிலீஸூக்கு முன்பே சொல்லியிருந்தேன். அது நிரூபணமாகி உள்ளது மகிழ்ச்சி. சவுண்ட், ஆர்ட் என தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் அதே தரத்தில் எல்லா திரையரங்கிலும் வருமா என பயந்தார்கள். ஆனால், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் கூட அதே தரத்தில் கொடுத்திருக்கிறார்கள். ரோமியோ பிக்சர்ஸ் அட்டகாசமாக ரிலீஸ் செய்து கொடுத்திருக்கிறார்கள். எல்லா சின்ன படங்களுக்கும் கமர்ஷியல் வெற்றி தேவை என்றார்.
நடிகர் யாசர் பேசுகையில், தொடர்ச்சியாக நெகட்டிவ் கதாபாத்திரம் செய்து வந்தேன். ஆனால், எனக்கு காமெடி கதாபாத்திரம் நடிக்க பிடிக்கும். அந்த வாய்ப்பு இந்தப் படத்தில் வந்தது மகிழ்ச்சி. முதல் முறையாக காமெடி கதாபாத்திரம் நன்றாக நடித்திருக்கிறேன் எனப் பாராட்டு வந்தது நெகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

இயக்குநர் மணிவர்மன் பேசுகையில், நினைத்ததை விட இந்தப் படம் நன்றாக போய் கொண்டிருப்பதால் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த நன்றி தெரிவிக்கும் விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார். மல்டிஃபிளக்ஸ் திரையரங்கை விட சிங்கிள் ஸ்கிரீனில் படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. நேரில் ஆடியன்ஸ் ரியாக்ஷன் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாரம் போலவே அடுத்த வாரமும் படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். இந்த வாய்ப்பு கொடுத்த அமோகம் ஸ்டுடியோஸ் சுபாஷினி மற்றும் விஜயனுக்கு நன்றி. நிச்சயம் அடுத்து சக்சஸ் மீட்டில் சந்திப்போம். படம் ஆரம்பித்ததில் இருந்தே ஆதரவு கொடுத்து வரும் கேபிள் சங்கர் மற்றும் ஈரோடு மகேஷூக்கு நன்றி என்றார்.

நடிகர் தமன் பேசுகையில், என்னுடைய முந்திய படமான ‘ஒரு நொடி’ அதன் பட்ஜெட்டை எங்களுக்கு திரும்ப கொடுத்தது. ஆனால், ‘ஒரு நொடி’ படத்தின் மொத்த பட்ஜெட்டை ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் மூன்று நாள் கலெக்ஷன் கொடுத்துள்ளது. இதற்கு ரோமியோ பிக்சர்ஸ் ராகுலின் ஆதரவு முக்கியமானது. படத்தை அருமையாக மார்க்கெட்டிங் செய்த அமோகம் பிக்சர்ஸூக்கும் நன்றி. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு படக்குழுவில் யாரும் சரியாக தூங்கவில்லை. ஆனால், படம் ரிலீஸ் ஆன பின்பு கலெக்ஷன் பார்த்த பின்புதான் நிம்மதியாக இருந்தது. தமிழ்நாட்டில் 150 திரையரங்குகளில்தான் முதலில் படம் திரையிட்டோம். மக்கள் கொடுத்த ஆதரவிற்கு பிறகு 200- 250 என்ற எண்ணிக்கையில் ஸ்கிரீன் எண்ணிக்கை அதிகரித்தார்கள். ஒவ்வொரு படத்திலும் கற்றுக் கொள்ள விஷயங்கள் இருக்கும். ஆனால், இந்தப் படம் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தது. ரசிகர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி என்றார்.
ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், தமிழ் தயாளன் இயக்கத்தில், ஆதவன், ஷீலா, ஜாக்குலின், சார்லஸ், விணோத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “கெவி”. கதைப்படி.. கொடைக்கானல் அருகே உள்ள வெள்ள கெவி மலைக்கிராம மக்கள் சாலை, மருத்துவம் உள்ளிட்ட […]
விமர்சனம்ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், தமிழ் தயாளன் இயக்கத்தில், ஆதவன், ஷீலா, ஜாக்குலின், சார்லஸ், விணோத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “கெவி”.
கதைப்படி.. கொடைக்கானல் அருகே உள்ள வெள்ள கெவி மலைக்கிராம மக்கள் சாலை, மருத்துவம் உள்ளிட்ட மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வசித்து வருகின்றனர். குறிப்பாக பிரசவ காலங்களில் பெண்கள் படும் வேதனைகளை சொல்லிமாளாது என்கிற அளவுக்கு சிற்பத்தை அனுபவிக்கிறார்கள். சில நேரங்களில் ஏதாவது ஒரு உயிர் மட்டுமே மிஞ்சுகிறது என்கிறார்கள். இந்நிலையில் ஷீலாவுக்கு பிரசவ வழி ஏற்பட்டு வழியால் துடிக்கிறார். மருத்துவமனையும், சாலையும் இல்லாததால் ஊர் மக்கள் தொட்டில் கட்டி இரவு நேரத்தில் மலைகளில் மருத்துவமனைக்கு சுமந்து செல்கிறார்கள். இதற்கிடையில் தங்களின் ஊருக்கு தேவையான சாலையை அமைத்துத் தர வேண்டும் என கேட்டதற்காக ஷீலாவின் கணவர் ஆதவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துகின்றனர் காவல்துறையினர்.

மருத்துவர் வர மறுத்த நிலையில், இருள் சூழ்ந்த மலைப்பகுதியில் தீப்பந்தம் வெளிச்சத்தில் பல்வேறு இடையூறுகளை கடந்து, பதட்டத்துடன் கற்பமான பெண்ணை தொட்டிலில் சுமந்து செல்கின்றனர்.
பின்னர் மருத்துவமனையை அடைந்தார்களா ? ஷீலாவிற்கு பிரசவம் ஆனதா ? அவரது கணவர் என்ன ஆனார் என்பது மீதிக்கதை…
அறிவியல் வளர்ச்சியால் கிராமங்களில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருந்தாலும், சுதந்திர இந்தியாவில் குறிப்பாக தமிழக மலைப்பிரதேசமான கொடைக்கானல் அருகே வசிக்கும் மலைக்கிராம மக்களின் வலியையும், துயரங்களையும் சினிமாத்தனம் இல்லாமல் எதார்த்தமாக ஆட்சியாளர்கள் உணரும் வகையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இனிமேலாவது கெவி மலைக்கிராம மக்களின் வேதனைகளுக்கு தீர்வு கிடைக்குமா ? என்கிற கேள்வியோடு பார்வையாளர்கள் கலைந்து செல்வதே இயக்குநரின் வெற்றியாக கருதலாம்.
இதுபோன்ற படங்களுக்கு மானியத்துடன் விருதும் வழங்கி அரசு கௌரவப் படுத்த வேண்டும். அதேபோல் இயற்கையோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்துவரும் மலைக்கிராம மக்களின் அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது நமது விருப்பமும் கூட…
ரெய்ன் ஆப் ஆரோஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில், சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில், ராகவ் மிர்தாத் இயக்கத்தில், ராஜூ, ஆதித்யா, பவ்யா, மைக்கேல், விக்ராந்த், சார்லி, சரண்யா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “பன் பட்டர் ஜாம்”. கதைப்படி.. சந்த்ரு ( […]
விமர்சனம்ரெய்ன் ஆப் ஆரோஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில், சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில், ராகவ் மிர்தாத் இயக்கத்தில், ராஜூ, ஆதித்யா, பவ்யா, மைக்கேல், விக்ராந்த், சார்லி, சரண்யா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “பன் பட்டர் ஜாம்”.
கதைப்படி.. சந்த்ரு ( ராஜூ ), ஆதித்யா ( மதுமிதா ) ஆகிய இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களது அம்மாக்கள் சரண்யா, தேவதர்ஷினி ஆகிய இருவரும் முடிவு செய்கின்றனர். ஆனால் அந்த திருமணம் அவர்கள் இருவரும் காதலித்து, பெற்றோர் முடிவு செய்த திருமணம் போல் உணர வேண்டும் என பேசி முடிவு செய்கின்றனர். பின்னர் சந்த்ரு கல்லூரியில் நந்தினியை பார்த்ததும் அவர்மீது காதல் வயப்பட, இருவரும் காதல் பறவைகளாக பறக்கத் தொடங்குகிறார்கள். அதேபோல் ஆதித்யாவும் வேறோரு பையனை காதலிக்கிறார்.

இதற்கிடையில் சந்த்ரு தனது நண்பன் சரவணன் ( மைக்கேல் ) மீது அதீத பாசம் வைத்திருக்கிறார். இவர்கள் சிறு வயதிலிருந்தே சந்தோஷமாக நேரத்தை செலவிடும் இடம் பன் பட்டர் ஜாம் கடை தான். அவருக்காக கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களை அடித்து விரட்டுகிறார் சந்த்ரு. பின்னர் சந்த்ரு, சரவணன் நட்பில் விரிசல் ஏற்படுகிறது. பின்னர் சந்த்ரு தனது காதலியையும் ஆதித்யா தனது காதலனையும் பிரிகிறார்கள்.

அதன்பிறகு என்ன ஆனது ? பெற்றோர்களின் ஆசை நிறைவேறியதா ? பிரிந்த காதல் ஜோடிகள் இணைந்தார்களா ? என்பது மீதிக்கதை…
தற்போதைய சமூகத்தில் இளசுகளின் பருவ மாற்றங்களுக்கேற்ப, மனமாற்றம் ஏற்படுவதை நகைச்சுவையோடு திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். பிள்ளைகளின் மனதை புரிந்துகொண்டு, அவர்களின் போக்கில் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதையும் இயக்குநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்மாக்களாக நடித்துள்ள சரண்யா தேவதர்ஷினி இருவரும் தங்களது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை ரசித்து, சிரிக்க வைத்துள்ளனர். சார்லி கதாப்பாத்திரம் ரசிக்கும்படியாக உள்ளது. நட்பு, காதல், பிரிவு, கோபம் என அனைத்து இடங்களிலும் ராஜூ சிறப்பாக நடித்திருக்கிறார். விக்ராந்த் சில இடங்களில் வந்து சென்றாலும் அவரது கதாபாத்திரம் சிறப்பு.
மற்றபடி படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
M/s. JDS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’. ஆகஸ்ட் 1 அன்று வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு […]
சினிமாM/s. JDS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’. ஆகஸ்ட் 1 அன்று வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் அமல்ராஜ் பேசுகையில், படப்பிடிப்பு முடிந்து கடைசி 8 நாட்கள் மட்டும் ஷூட் முடிக்க முடியாமல் இருந்தது. அதற்கு பக்கபலமாக இருந்து உதவி செய்தவர் ஜி.வி. பிரகாஷ். படத்திற்காக அவர் பாதி சம்பளம்தான் வாங்கி இருக்கிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் டப்பிங் முடித்து ஆடியோ லான்ச் வரை வந்திருக்கிறார். அவருக்கு என்றுமே கடமை பட்டிருக்கிறேன் என்றார்.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசுகையில், 30 வருடங்களுக்கு முன்னால் ‘பிளாக்மெயில்’ என்ற இந்தி படம் பார்த்தேன். காதலன் வில்லனாக மாறும் கதை அது. அந்தப் படத்தின் ஈர்ப்பு இந்த ‘பிளாக்மெயில்’ படத்தில் பார்த்தேன். அந்த அளவுக்கு கதையும் ஒளிப்பதிவும் அருமையாக அமைந்துள்ளது. ஜிவி பிரகாஷ் அருமையாக நடித்துள்ளார். இளையராஜாவுக்கு அடுத்து அருமையான இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தான். தயாரிப்பாளர்கள் படம் முடியும்போதும் பெரும்பாலும் சோகமாக இருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். ஜிவி பிரகாஷால் ஒரு தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது பெருமையான விஷயம். படத்தின் ஹீரோ, ஹீரோயின் என எல்லோரும் வந்திருக்கும் ஆடியோ லான்ச் இதுதான் என நினைக்கிறேன். சாம் சிஎஸ் இசை அற்புதமாக வந்துள்ளது. படம் வெற்றிப் படமாக அமைய வாழ்த்துக்கள் என்றார்.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசுகையில், இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை அடுத்து மாறனுடன் பணிபுரியும் இரண்டாவது படம் இது. நான்கு பாடல்களில் மூன்று பாடல்கள் மற்றும் பின்னணி இசை நான் செய்திருக்கிறேன். ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் படங்களில் அவரது நடிப்பு இதில் உச்சமாக இருக்கும். படத்திற்கு வில்லன் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். வில்லனை விட துரோகிகள் பயங்கரம். நம் கூட இருப்பவர்கள் துரோகி ஆகும்போது என்னவாகும் என்பதுதான் கதை. இந்த மாதிரியான கதைகள் அதிகம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. வசனம் இல்லாமல் இசை மூலமாக கதை சொல்ல வேண்டும் என்ற இந்த படம் எனக்கு திருப்தியாக அமைந்தது. எல்லோரும் நன்றாக செய்திருக்கிறார்கள். எதாவது ஒரு வகையில் இந்தப் படம் உங்களுக்கு நெருடலையும் எச்சரிக்கையையும் கொடுக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசுகையில், ஜிவி இசையில் நிறைய படங்களுக்கு பாடல் எழுதி இருக்கிறேன். ஆனால், அவர் நடிக்கும் படத்திற்கு இதுதான் முதல் முறை பாடல் எழுதுகிறேன். சாம் சிஎஸ் அருமையாக இசை கொடுத்துள்ளார். அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை தேஜூ அஸ்வினி, இந்தப் படம் வெகு சீக்கிரம் நடந்தது. ஜிவியிடன் ஒரு நிமிட வீடியோ செய்திருந்தேன். அங்கிருந்துதான் இந்த வாய்ப்பு கிடைத்தது. யங் டேலன்ட்ஸூக்கு இதுபோல தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வரும் ஜிவி பிரகாஷுக்கு நன்றி. இந்த கதாபாத்திரத்தில் என்னை பொருத்தி பார்த்த இயக்குநர் மாறனுக்கும் நன்றி. சப்போர்ட் செய்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். வித்தியாசமான தேஜூவை பார்ப்பீர்கள் என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், இந்தப் படத்தின் பாடல்கள் டிரெய்லர் அனைத்தும் சிறப்பாக உள்ளது. குடும்ப செண்டிமெண்ட் கதை நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறும். ’கண்ணை நம்பாதே’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படங்களை அடுத்து இந்தப் படமும் மாறனுக்கு வெற்றி பெறும். ஜிவி இந்தப் படத்திற்கு பாதி சம்பளதான் வாங்கி இருக்கிறார் என்பது பெருமையான விஷயம். தயாரிப்பாளர், இயக்குநர் மீது அதிக அன்பு கொண்டவர் ஜிவி பிரகாஷ். முதல் மூன்று நாட்கள் ரிவியூ செய்ய வேண்டாம் என்று விஷால் முன்பு இதே மேடையில் சொல்லியிருந்தார். அதை நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். மூன்று நாட்கள் ரிவியூ வரவில்லை என்றால் பெரும்பாலான படங்கள் வந்ததா என்று ரசிகர்களுக்கு தெரியாமலேயே போய்விடும். கொஞ்சம் கனிவாக, பேலன்ஸ்டாக ரிவியூ கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.
தயாரிப்பாளர் கதிரேசன் பேசுகையில், படத்தின் டைட்டில் ரசிகர்கள் மத்தியில் போய் சேர்ந்திருக்கிறது. ரசிகர்களுக்கு பிடித்த படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சாம் சிஎஸ் இசையில் பின்னியிருக்கிறார். தயாரிப்பாளருக்கு ஆதரவாக இருக்கும் ஜிவி பிரகாஷூக்கு நன்றி. முன்பு இதுபோல அதிகம் செய்தவர் ரஜினிகாந்த் அவர்கள். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், பிளாக்மெயில் என்ற வார்த்தை என்னை ரொம்பவே இம்ப்ரஸ் செய்தது. இந்த வார்த்தை எப்படி வந்திருக்கும் எனத் தேடினேன். மெயில் என்றால் வாடகை, கட்டணம் என்ற அர்த்தத்தில் வரும். 16 ஆம் நூற்றாண்டின் வார்த்தை இது. இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்துக்கு இடையில் இல்லீகல் இமிக்ரண்ட்ஸ் இருந்த இடத்தில் தலைவர்கள், கொள்ளையர்கள் சென்று சூறையாடி இருக்கிறார்கள். அப்படி எங்களை கொள்ளையடிக்காதே, சூறையாடாதே என்பதற்காக கொடுக்கப்பட்ட கட்டணம்தான் மெயில். பிளாக்காக அதை கொடுத்ததால் பிளாக்மெயில் என்று பெயர் வந்தது. படத்தின் டிரெய்லர் பார்க்கும்போதே விறுவிறுப்பாக இருந்தது. இயக்குநர் மாறனுக்கு வாழ்த்துக்கள். சாம் சிஎஸ் ‘விக்ரம் வேதா’வுக்கு அருமையாக இசையமைத்திருந்தார். அந்தப் படத்தை திரையரங்கிற்கு வந்து ரசிகர்களை பார்க்க வைத்த பெருமை சாமுக்கும் உண்டு. 17 வயது பையனாக என் கண் முன்னே வந்து வளர்ந்தவர் ஜிவி பிரகாஷ். மகிழ்ச்சியாக உள்ளது. யாரையும் காயப்படுத்தாத குணம் கொண்டவர். அவரது குடும்ப விஷயத்தில் எந்தளவுக்கு பக்குவமாக நடந்தார் என்பது வியப்பாக இருந்தது. எனக்காக இரண்டு படங்கள் விட்டுக்கொடுத்தார். அவர் இல்லை என்றால் படம் வெளியாகி இருக்காது. படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசுகையில், இசையமைப்பாளர் சாம் சி.எஸ். அவர்களுக்கு வாழ்த்துக்கள். மாறனுடைய முந்தைய படங்களுக்கு நான் ரசிகன். அவர் பெரும்பாலும் இருளில் தான் படம் எடுப்பார். எனக்கு ஜிவி பிரகாஷ் பல இடங்களில் ஆதரவு கொடுத்திருக்கிறார். படத்தில் செண்டிமெண்ட்டாக விஷயம் இருக்கிறது. படம் வெற்றி பெறும் என்று ஜிவியிடம் சொன்னேன் என்றார்.
’ட்ரீம் வாரியர்ஸ்’ சிஇஓ குகன் பேசுகையில், இந்தப் படத்தின் கனெக்ட் எனக்கு அமல்ராஜ் மூலமாகதான் வந்தது. விழா நாயகன் சாம் சிஎஸ்ஸூக்கு வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநர் மாறன் தன்னுடைய முந்தைய படங்களைப் போலவே இதிலும் மேஜிக் செய்திருப்பார். ஜிவி ரசிகர்கள் மற்றும் த்ரில்லர் ஜானர் ரசிகர்களுக்கு இந்தப் படம் பெரிய விருந்தாக அமையும். படத்தில் நடித்துள்ள மற்றும் பணிபுரிந்த அனைவருக்கும் இந்தப் படம் முக்கியமான படமாக அமையும். படத்திற்கு பாடல்கள்தான் முக்கியம். சமீபகாலங்களில் பாடல்களை படத்தில் முழுதாக வைப்பதற்கு தயங்குகிறார்கள். திரைக்கதை எழுதும்போதே இயக்குநர்கள் அதை முடிவு செய்து விடுங்கள். இது என் வேண்டுகோள் என்றார்.

இயக்குநர் மாறன் பேசுகையில், கதையை சுவாரஸ்யமாக படமாக்கி உள்ளோம். நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் தயாரிப்பாளர் அமல்ராஜ் இருவருக்கும் நன்றி. இவர்களுடன் பயணித்தது எங்கள் பாக்கியம். படத்தின் தொழில்நுட்பக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. த்ரில்லர் மட்டுமல்லாது செண்டிமெண்ட், காமெடி என ஜனரஞ்சகமாக படம் இருக்கும். நம் வீட்டிலேயே பிளாக்மெயில் உள்ளது. அதுபோல பாதிக்கப்பட்டவர்களின் கதையாக படம் இருக்கும் என்றார்.

நடிகர் ஜிவி பிரகாஷ்குமார் பேசுகையில், மாறன் திறமையான இயக்குநர். தயாரிப்பாளராக அறிமுகமாகும் அமல்ராஜுக்கு வாழ்த்துக்கள். நல்ல கதைகள் நிச்சயம் கவனம் பெறும். அதுபோல, ‘பிளாக்மெயில்’ படமும் பேசப்படும் என நம்புகிறேன். தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்ஸ்டாகிராமில் தேஜூவுடன் நடனம் ஆடியிருந்தேன். வைரல் ஆனது. அங்கிருந்துதான் இந்தப் படத்திற்கு தேஜூ கதாநாயகியாக தேர்வு ஆனார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் ஆகியோர் இப்படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினர் […]
சினிமாநடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் ஆகியோர் இப்படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.
அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஜி ஆர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கிறார். சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பாளராக இருக்கும் இந்த திரைப்படத்தை மீடியா மைண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் & நடிகர் மகேஸ்வரன் தேவதாஸ் பேசுகையில், ஒன்பது வயதில் நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டேன். என்னுடைய இந்த விருப்பத்தை என் ஆசிரியரிடம் தெரிவித்தேன். அவர் எனக்கு அறிவுரை வழங்கினார். நான் கமல்ஹாசனின் ரசிகன். 11 வயதில் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தை தேர்வு நேரத்தில் பார்த்தேன். ஆசிரியர் நடிப்பின் மீது கவனம் செலுத்தாதே என்று அறிவுரை சொன்னாலும் என் மனதில் அந்த ஆசை பதிந்திருந்தது. அதன் பிறகு திருமணம் ஆனது. பிள்ளைகளும் பிறந்தார்கள். பிசினஸ் இருந்தது. கோவிட் வந்தது. அனைவரும் நெட்பிளிக்ஸ், அமேசான் என டிஜிட்டல் தளங்களில் தங்களது பொழுதை கழித்தனர். அந்த தருணத்தில் எல்லோரும் எல்லா படங்களையும் பார்க்கத் தொடங்கினர். சிங்கப்பூரில் என்ன சிறப்பு என்றால், டாப் 10 என திரைப்படங்களை பட்டியலிடுவார்கள். அங்கு சீனர்கள், மலாய்காரர்கள் என அனைவரும் படங்களை பார்ப்பார்கள். இதில் டாப் 1, 2 ஆகிய இடங்களில் தமிழ் படங்கள் தான் இருக்கும். எல்லோருக்கும் தமிழ் படங்களை பார்க்கத்தான் ஆசை. இதை நான் உன்னிப்பாக கவனித்தேன். அதன் பிறகு என்னை தயார்படுத்திக் கொண்டு 46 வயதில் சிங்கப்பூரில் கட்டுமஸ்தான தேசிய ஆணழகன் என்ற பட்டத்தை வென்றேன். அதன் பிறகு இந்த உடலமைப்பை எப்படி எங்கு வெளிப்படுத்திக் கொள்வது என யோசித்தேன். எனக்கு வில்லன்களை மிகவும் பிடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வில்லன்கள் தான் முதுகெலும்பு போல் இருப்பார்கள். நான் பேட்மேன் படத்தை பார்த்துவிட்டு வில்லனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று வரை கில்லி, துப்பாக்கி, தனி ஒருவன் போன்ற படங்களை திரும்பத் திரும்ப பார்ப்பேன். விஜய்க்காக மட்டுமல்ல அந்தப் படத்தில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், ஹிந்தி வில்லன் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரின் வில்லத்தனமான நடிப்பிற்காக அந்தப் படங்களை பார்ப்பேன்.

எனக்கு தமிழ் திரையுலகம் பற்றி எதுவும் தெரியாது. இதற்காக இரண்டு ஆண்டுகள் ஹோம் ஒர்க் செய்தேன். தமிழ் திரையுலகில் எத்தனை துறைகள் இருக்கின்றன, அவை எப்படி இயங்குகின்றன என்பது குறித்து ஹோம் ஒர்க் செய்தேன். இதில் என்னை ஏமாற்றுவதற்கும் சிலர் முயற்சித்தனர். அதன் பிறகு தான் அஷ்ரஃப் அறிமுகமானார். அங்கிருந்து இந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கு இரண்டு ஆண்டுகளானது. எனக்கு சிங்கப்பூரில் தொழில் இருக்கிறது, குடும்பம் இருக்கிறது, இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் சர்வதேச அளவிலான மேடைப் பேச்சாளர், எழுத்தாளர். கால்பந்து பயிற்சி அகாடமியை நடத்தி வருகிறேன். இத்தனை பணிகளையும் நிர்வகித்துக் கொண்டே இடையில் இந்த படத்தின் பணிகளை கவனித்தேன். சரியாக திட்டமிட்டு பணியாற்றினால் நல்ல படத்தை வழங்க இயலும் என்பதில் உறுதியாக இருந்தேன். கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமா தான்.
என்னுடைய தாத்தாவின் பெயரில்தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். ஆபாச காட்சிகள் இடம் பெறக் கூடாது, பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெறக் கூடாது என்ற இரண்டு நோக்கத்தை மனதில் வைத்து தான் என் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். பொழுதுபோக்காகவும் இருக்க வேண்டும், குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து திரையரங்க அனுபவத்தையும் பெற வேண்டும் என்பதற்காக படங்களை தயாரிக்க திட்டமிட்டேன். இதைத்தான் இயக்குநர் அஷ்ரஃப்பிடம் தெளிவாக தெரிவித்தேன். கதை நன்றாக இருக்கிறது. இருந்தாலும் இப்படத்தின் டீசர் என்ன, ட்ரெய்லர் என்ன என்பது வரை விவாதித்தோம். அதனால் தான் அவரை முதலில் ஒரு குறும்படத்தை இயக்கச் சொன்னேன். இந்தப் படத்தில் முக்கியமான சோஷியல் மெசேஜ் இருக்கிறது. இதனை கிரைம் திரில்லர் ஜானரில் சொல்ல முடியும் என்பதை முதன்முதலாக முயற்சித்து இருக்கிறோம். அந்த வகையில் இது முதல் முயற்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்தின் அனைத்து பணிகளையும் 2023ம் ஆண்டு டிசம்பரில் நிறைவு செய்தோம். அதன் பிறகு இப்படத்தினை நேர்த்தியாக செதுக்குவதற்கு ஓராண்டு காலம் எடுத்துக் கொண்டோம். ஏனெனில் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். படத்தின் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அன்று வெளியாகிறது அனைவரும் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
படத்தின் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் பேசுகையில், இப்படத்தை இயக்குநர் அஸ்ரப் நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். அனைத்து கலைஞர்களும் கடின உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படத்தில் நான்கு பாடல்கள் இருக்கின்றன, அனைத்தும் நன்றாக உள்ளன. இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் என்றார்.
நாயகி ஷில்பா மஞ்சுநாத் பேசுகையில், தொடர்ந்து வாய்ப்பளிக்கும் தமிழ் திரையுலகத்திற்கு நன்றி. தமிழில் அறிமுகமாகும் போது தமிழ் தெரியாது. நடிப்பும் தெரியாது. இருந்தாலும் தமிழ்நாட்டில் தான் திறமைசாலிகளை கண்டறிந்து, வாய்ப்பளித்து அவர்களை பாராட்டுகிறார்கள். தொடர்ந்து ஆதரவும் தருகிறார்கள். ‘காளி’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘சிங்க பெண்ணே’ என தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறேன். நிறைய படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் பத்திரிகையாளராக நடித்திருக்கிறேன். இதற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் மூலம் மகேஸ்வரன் தேவதாஸ் நடிகராக அறிமுகமாகிறார். அவரை தமிழ் திரையுலகம் சார்பில் வரவேற்கிறேன் என்றார்.

இயக்குநர் அனீஸ் அஷ்ரஃப் பேசுகையில், நான் ஏ ஆர் முருகதாஸிடம் உதவியாளராக பணிபுரிந்திருக்கிறேன். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘பிசாசு ‘ திரைப்படத்தை கன்னடத்தில் ‘ராட்சசி’ என்ற பெயரில் இயக்கி இருக்கிறேன். தமிழில் முதன் முதலாக நான் இயக்கி இருக்கும் படம் இது. படத்தின் பெயர் ‘சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்’. தமிழில் எனக்கு இது முதல் பக்கம். என்னுடைய தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாசுக்கும் இதுதான் முதல் படம். இது ஒரு முக்கியமான மேடை. இந்த மேடை மீது விருப்பப்படாத உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனக்கு இன்று இந்த மேடை சாத்தியமாகி இருக்கிறது. அனைவருக்கும் விரைவில் சாத்தியமாக வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
எனக்கு சிங்கப்பூரில் உள்ள ஒரு நண்பர் வாயிலாக தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் போன் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு வில்லனாக நடிக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் தெரிவித்தார். அவரது புகைப்படத்தை பார்த்த பிறகு உங்களை வில்லனாக அறிமுகப்படுத்துகிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தேன். ஏனென்றால் அவருடைய கட்டுமஸ்தான உடலமைப்பு தான் முக்கிய காரணம். அதன் பிறகு அவருக்காக குறும்படம் ஒன்றை இயக்கினேன். அந்தக் குறும்படத்தில் அவர் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பிறகு இப்படத்தின் கதையை அவரிடம் முழுமையாக விவரித்தேன். அவருக்கும் பிடித்திருந்தது. படத்தின் பணிகள் தொடங்கின. தயாரிப்பாளராக இருந்தாலும் நண்பராகவும், நடிகராகவும் பழக தொடங்கினார். அவருடைய ஈடுபாடு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. திட்டமிட்டபடி படத்தின் படப்பிடிப்பை தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்புடன் நிறைவு செய்தோம். முதல் பக்கம் என்பது கதைக்கு பொருத்தமானதாக இருந்ததால் வைத்திருக்கிறோம். சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் என்பது சென்னையில் நடைபெற்ற ஒரு குற்ற சம்பவத்தின் முதல் பக்கத்தில் இடம் பிடித்திருக்கும் தகவல் என வைத்துக் கொள்ளலாம்.

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸுடன் பணியாற்றிய போது அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயம் என்னவெனில், அவர் ஒரு கதையை விவாதிக்க தொடங்குவதற்கு முன் சோஷியல் மெசேஜ் ஒன்றை தீர்மானித்து, அதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என முடிவு செய்வார். இதற்காகத்தான் அவர் கதையையும், காட்சிகளையும், திரைக்கதையையும் உருவாக்குவார். அதனால் தான் நானும் இந்த படத்தில் ஒரு சோஷியல் மெசேஜை வைத்து கதையையும், திரைக்கதையையும் உருவாக்கி இருக்கிறேன். கிரைம் திரில்லராக நிறைய படங்கள் வெளியாகி இருக்கின்றன. பேய் படங்களும், திரில்லர் படங்களும் தயாரிப்பாளர்களின் முதலீட்டிற்கு பாதுகாப்பானவை என சொல்வார்கள். க்ரைம் திரில்லர் ஜானரில் சோஷியல் மெசேஜை வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இது ரசிகர்களை கவரும் என நம்புகிறேன்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த், இசையமைப்பாளர் ஏ ஜி ஆர், படத்தொகுப்பாளர் வி எஸ் விஷால் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். அதற்காக அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்திற்கு நாயகனாக வெற்றியை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று என்னிடம் பலர் கேட்டனர். இந்தப் படத்தின் கதையை தயாரிப்பாளரிடம் சொன்ன பிறகு, யார் ஹீரோ என அவர் கேட்டபோது, வெற்றி என்று ஒரே ஒரு பெயரை தான் நான் சொன்னேன். மதுரையிலிருந்து வரக்கூடிய ஒரு கிரைம் நாவலாசிரியரின் மகன் எனும் அந்த கதாபாத்திரத்திற்கு வெற்றி தான் பொருத்தமாக இருப்பார் என நான் உறுதியாகச் சொன்னேன். அத்துடன் இப்படத்தின் வில்லன் உடன் மோத வேண்டும் என்றால் அதற்கு இணையான உடல் தோற்றம், உடல் மொழி கொண்ட நடிகர் வெற்றி மட்டும்தான் என விளக்கமும் அளித்தேன், இதனை தயாரிப்பாளரும் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு வெற்றியை சந்தித்து இப்படத்தின் கதையை முழுவதுமாக சொன்னேன். அவர் கதையை கேட்ட பிறகும் முழு திரைக்கதையை வாசித்த பிறகும் நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாயகி ஷில்பா மஞ்சுநாத்தை தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினேன். அவர் அப்போது டெல்லியில் இருந்ததால் கதை முழுவதையும் போனில் சொன்னேன். அப்போது அவர் நான் நடிக்கும் படத்தில் என் கதாபாத்திரம் வலிமையாக இருக்கிறதா என பார்ப்பேன், அல்லது அந்தத் திரைப்படம் வெற்றி பெறும் திரைப்படமாக இருக்குமா என்பதை பார்ப்பேன். இந்த படத்தில் இரண்டுமே இருப்பதால் நான் நடிக்கிறேன் என்று சொன்னார். இந்தப் படத்தில் அவர் ரிப்போர்டராக தான் நடிக்கிறார். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்தத் திரைப்படத்தில் தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நாயகன் வெற்றி பேசுகையில், இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘சென்னை பைல்ஸ் – முதல் பக்கம்’ படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று என்னை தேர்வு செய்த இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. அவருடைய குறும்படத்தை பார்த்தேன். பார்த்ததும் நம்பிக்கை பிறந்தது. அதில் அவருடைய திறமை பளிச்சிட்டது. அதேபோல் சொன்ன நாட்களில் சொன்னபடி படப்பிடிப்பை நிறைவு செய்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படத்தை உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு தளத்தில் குடும்பமாக இணைந்து பணியாற்றினோம். படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிப்பில், விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ஃப்ளவர்” (Red flower). ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆகஸ்ட் 8 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் […]
சினிமாஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிப்பில், விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ஃப்ளவர்” (Red flower). ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆகஸ்ட் 8 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில், இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா, நடிகர் விஷால், இயக்குனர்கள் பி.வாசு, சுராஜ் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்.. ரெட் ஃப்ளவர் படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் பேசியதாவது,
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸின் முதல் மற்றும் மிக பிரமாண்டமான தயாரிப்பு இந்த ரெட் ஃப்ளவர். மேடையில் இருப்பவர்கள் மட்டும் சிறப்பு விருந்தினர்கள் அல்ல, இங்கு வந்திருக்கும் எல்லோருமே என்னுடைய சிறப்பு விருந்தினர்கள் தான். இந்த படம் தொடங்கிய நாளிலிருந்து இந்த நொடி வரை மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சத்துக்கு மிகப்பெரிய நன்றி. இரண்டு படங்கள் எடுத்து முடித்தும் இதுவரை ரிலீஸ் செய்யவில்லை. முதல் படமாக இந்த படம் தான் ரிலீஸாக வேண்டும் என்பது தான் என் ஆசை. இது ஒரு காதல் கதையோ, குடும்பக் கதையோ அல்ல. இந்தியாவை உயர்த்தி சொல்லும் ஒரு படம். இந்தியா வல்லரசு என்று சொன்னால் யாராலும் அதை மறுக்க முடியாது. இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இந்த தலைமுறையின் ஒரு சிறந்த இயக்குனராக வருவார் என்றார்.
நடிகை காவ்யா பேசியதாவது,
2047ல் ஒரு மூன்றாம் உலகப் போர் நடந்தால் எப்படி இருக்கும், போர் நடக்கும் போது என்னவெல்லாம் நடக்கும் என்பதை மிகச்சிறப்பாக திரையில் காட்டியுள்ளார் இயக்குனர். 2047 காலகட்டத்தில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார். கிரீன் மேட் காட்சிகள் எடுத்தால் நன்றாக இருக்காது என்பதால் முழுக்க முழுக்க ரியல் லொகேஷன்களில் படத்தை எடுத்திருக்கிறார். இப்படம் நிச்சயம் ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் என்றார்.

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசியதாவது, இந்த படம் வெற்றி அடைந்தால் அதற்கு ஒரே காரணம் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன். அவருக்கு பக்கபலமாக தயாரிப்பாளரும், நடிகர் விக்னேஷூம் இருக்கிறார்கள். இது ஒரு Futuristic பாகுபலி. future-ல் நடக்கும் கதை என்பதால் பாகுபலியை விட இது தான் கஷ்டம். மிஷன் இம்பாஸிபிள், மேட்ரிக்ஸ் படங்களைப் போல இந்த படம் இருக்கும். நான் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கதாபாத்திரத்தை எனக்கு தந்திருக்கிறார். 2047-ல் இந்தியாவின் பிரதமர் கதாபாத்திரம். நேதாஜி கனவு கண்ட இந்தியா வந்து கொண்டிருக்கிறது. இந்த படம் இளைஞர்களை கவரும், அதே சமயத்தில் நாடு நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்றார்.
தலைவாசல் விஜய் பேசியதாவது,
இந்த படத்துக்கு தேவையான இசையை தந்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ். இந்த படத்தின் வில்லன் நீங்க தான் என சொன்னார் இயக்குனர். என் 32 வருட சினிமா கேரியரில் இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்தது இல்லை. இந்த வாய்ப்பை தந்த இயக்குனருக்கு நன்றி. அவரின் விஷனை திரையில் பார்ப்பீர்கள் என்றார்.
நடிகர் ஜான் விஜய் பேசியதாவது,
கல்லூரியில் ஒன்றாக என்னுடன் படித்தவர் விஷால், இந்த மேடையில் ஒன்றாக அவருடன் இருப்பது மகிழ்ச்சி. விஷால் எப்போதுமே எல்லோருக்காகவும் வந்து நிற்பவர். ஆத்தங்கரை மரமே பாடல் கேட்டிருப்போம், அன்று முதல் இன்று ரெட் ஃப்ளவர் வரை அதே இளமையுடன் இருக்கும் ஒரு ஹீரோ விக்னேஷ். மிகச்சிறப்பான ஒரு கதாபாத்திரத்தை எனக்கு தந்திருக்கிறார்கள் என்றார்.

இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் பேசியதாவது, 2047-ல் மால்கம் வரி செலுத்த மறுக்கும் நாடுகளின் மீது போர் தொடுக்கிறது, நேதாஜியால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் ரெட் ஃப்ளவர். அதை இந்தியா எப்படி அணுகுகிறது. இந்தியா எப்படி அதை முறியடிக்கிறது. கேமரா மேன் ஒரு நாளைக்கு 300 முதல் 350 ஷாட்ஸ் எடுப்பார். அவ்வளவு வேகமாக வேலை செய்பவர். எடிட்டரின் பங்கு அபரிமிதமானது என்றார்.
நடிகர் அஜய் ரத்னம் பேசியதாவது, இயக்குனரின் கனவு திரையில் வந்திருக்கிறது. நம்பிக்கை எப்போதுமே வெற்றியைடையும். ரெட் ஃப்ளவர்னா சிவப்பு மலர், சிகப்பு ரோஜாக்கள் போல இந்த படமும் மிகப்பெரிய வெற்றியடையும் என்றார்.

நடிகர் விக்னேஷ் பேசியதாவது,
எனக்கு இயக்குனர் பாரதிராஜா மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. அவருக்கு இணையாக பி.வாசு சாரை பிடிக்கும். புரட்சித் தளபதி விஷால் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். மனிதாபிமானம் மிக்கவர். நடிகர் சங்கத்தில் யாருக்கு எந்த பிரச்சினை என்றாலும், உதவி தேவைப்பட்டாலும் உடனே இறங்கி வேலை செய்பவர். ஒய்ஜி மகேந்திரனின் ஆர்வம் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தை பற்றி தினமும் கேட்டுக் கொண்டே இருப்பார். ஜான் விஜய், அஜய் ரத்னம், சுரேஷ் மேனன் என அத்தனை நடிகர்களும் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்களை பொறுத்தவரை எல்லோருமே இளைஞர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. இயக்குனர் ஆண்ட்ரூ நல்ல மனிதர், நேர்மையான உழைப்பை தந்துள்ளார். நிறைய பேர் விக்னேஷை வைத்து படம் எடுக்காதீர்கள் என தயாரிப்பாளரை தடுத்தனர். ஆனால் மாணிக்கம் சார் பின்வாங்காமல் படத்தை முடித்திருக்கிறார். அவர் சினிமாவில் சம்பாதிக்க வரவில்லை. சினிமா மீது பற்று வைத்துள்ளார். அவருக்காக மிகப்பெரிய வெற்றி அடையும். இந்த படம் வெற்றி அடைந்தால் அவர் அடுத்தடுத்து பல படங்களை தயாரிப்பார்.
30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் கஷ்டப்பட்டிருக்கிறேன். எவ்வளவோ உழைத்திருக்கிறேன். சினிமா தான் எனக்கு எல்லாமே. சினிமாவை அவ்வளவு பிடிக்கும். அதனால் தான் இவ்வளவு நாள் கழித்தும் மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். நான் தோற்கலாம், ஆனால் என் முயற்சி தோற்கக்கூடாது. முன்பெல்லாம் முதல் வாரம் கூட்டமே இல்லாமல் இருந்தால் கூட, ஓரிரு வாரங்கள் கழித்து லேட் பிக்கப் ஆகி வெற்றி பெறும். என்னுடைய சின்னத்தாயி, ராமன் அப்துல்லா போன்ற படங்கள் எல்லாமே லேட் பிக்கப் தான். ஆனால் இப்போது முதல் நாளே நன்றாக ஓடினால் தான் படம் வெற்றி அடையும். அதனால் ஒரு வாரம் கழித்து பார்க்கலாம், அப்புறம் பார்க்கலாம் என நினைக்காதீர்கள். தியேட்டரில் சென்று பாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இயக்குனர் சுராஜ் பேசியதாவது,
நான் ஏற்கனவே விஷாலை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். எங்கள் படப்பிடிப்பில் பலர் அவரைத் தேடி, அவரின் உதவி நாடி வருவார்கள். அத்தனை பேருக்கும் உதவி செய்வார். அவர் இந்த விழாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி. நடிகர் விக்னேஷ் உங்கள் கஷ்டத்துக்கும், கடின உழைப்புக்கும், நீங்கள் பட்ட அவமானங்களுக்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும். தயாரிப்பாளர் மாணிக்கம் என் உறவினர், என் மாப்பிள்ளை. ஒரு படம் எடுக்க வேண்டும் எனறார், சின்ன பட்ஜெட்டில் எடுப்பார் என நினைத்தால் மிக பிரமாண்டமாக எடுத்து வைத்திருக்கிறார். 9 கோடி பட்ஜெட்டில் 2.5 கோடி சிஜிக்கு மட்டுமே செலவு செய்திருக்கிறார்.
இதற்கு முன் இரண்டு படங்களை அவர் தயாரித்துள்ளார், ஆனாலும் அதை ரிலீஸ் செய்யவில்லை. ஏன் என்று கேட்டால் முதல் படம் பெரிய படமாக இருக்க வேண்டும் என்றார். இந்த படம் வெற்றி பெற்றால் அவர் இன்னும் பல படங்களை தயாரிப்பார், அதற்காகவே இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்றார்.

இயக்குனர் பி. வாசு பேசியதாவது, விக்னேஷ் 2 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனரை அழைத்து வந்து கதையை சொன்னார். அதை எப்படி படமாக்கப் போகிறார்கள் என்ற வியப்பு எனக்கு இருந்தது. அதீதமான தொழில்நுட்ப விஷயங்கள் இந்த படத்தில் இருக்கிறது. சிஜி என்பது சாதாரண விஷயம் இல்லை, பல பேரின் உழைப்பு அடங்கியது. ஒரு சாதாரண விஷயத்தை செய்யவே மிகப்பெரிய உழைப்பு தேவை. இந்த படத்தில் 90 நிமிட சிஜி காட்சிகள் இருக்கிறது என சொன்னார்கள். விக்னேஷ் ரொம்ப துறுதுறுவென இருப்பவர். கடின உழைப்பாளி. உங்கள் உழைப்பு நிச்சயம் வீண் போகாது. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். சினிமா இன்று ரொம்பவே போட்டி நிறைந்த ஒரு துறையாக மாறி விட்டது. இளம் இயக்குனர்க்ள் எல்லாம் மிக மிக திறமையானர்வர்கள். ஓடிடி வந்த பிறகு பல மொழி படங்களையும் பார்க்க தொடங்கியபோது அவர்களின் கண்டெண்ட் மிகச்சிறப்பாக இருக்கிறது. அவர்களுக்கு இணையாக, போட்டியாக நாமும் படங்களை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு நடிகன் பல விதமான கதாபாத்திரங்களை செய்ய வேண்டி இருக்கிறது. அந்த வேலையை இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.
விஷால் வீட்டில் தான் வால்டர் வெற்றிவேல் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அவரின் தந்தை ஜிகே ரெட்டி சினிமாவின் மிகச்சிறந்த ஒரு ரசிகர். அவரின் வாரிசு விஷால் எப்படி சோடை போவார். அவர் அடுத்தவர்களின் வெற்றியை பார்த்து மகிழ்பவர். இயக்குனரின் முதல் வேலை தயாரிப்பாளரிடம் கதை சொல்லி சம்மதிக்க வைப்பது. பின் படத்தை எடுத்து முடித்து தயாரிப்பாளரை திருப்திப்படுத்துவது. அதன் பின் விநியோகஸ்தர்களை மகிழ்விப்பது. ஆண்ட்ரூ அந்த வகையில் இந்த கதையை ரிலீஸ் கட்டம் வரை மிகச்சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார்.
சந்திரமுகி படத்தில் காத்தாடி பாடலில் சிஜி செய்திருப்போம். அதற்கே ரொம்ப கஷ்டப்பட்டோம். ஆனால் இந்த படத்தில் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் சிஜி. இயக்குனரின் தெளிவு தான் இந்த படத்தை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது என்றார்.

ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது, விக்னேஷ் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் இந்த படம் அவருக்கு மிக முக்கியமான படமாக, வெற்றிப்படமாக அமையும். தயாரிப்பாளர் விக்னேஷ் மீது நம்பிக்கை வைத்து படத்தை எடுத்திருக்கிறார். இப்போதெல்லாம் நடிகர்கள், இயக்குனர்கள் தயாரிப்பாளருக்கு நன்றியாக இருப்பதில்லை. விக்னேஷ் தயாரிப்பாளரை என்றும் மதிக்க வேண்டும்.
பி வாசு, கேஎஸ் ரவிக்குமார் எல்லாம் தயாரிப்பாளர்களின் இயக்குனர்களாக இருந்தார்கள். சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுத்தனர். தற்போது இயக்குனர்கள் சொன்ன பட்ஜெட்டில் படங்களை எடுப்பதில்லை. தெலுங்கு சினிமாவில் ஒரு படத்தின் பட்ஜெட் அதிகமாகும்போது நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்கிறார்கள். நலிந்து போன பல தயாரிப்பாளர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுங்கள். ஓடிடி நிறுவனங்கள் படத்தை பார்த்து விட்டு தான் வாங்குகிறார்கள். அதனால் ஷூட்டிங்குக்கு முன்பே கொஞ்சம் திட்டமிட்டு படத்தை எடுங்கள் என்றார்.
நடிகர் விஷால் பேசியதாவது,
பி.வாசு சார் அன்றிலிருந்து இப்போது வரை நிற்கிறார் என்றால் அவரின் படங்கள் மற்றும் அவரின் உழைப்பு. இப்போதெல்லாம் நிறைய பேருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள், ஆனால் சுராஜ் அவர்களுக்கு கண்டிப்பாக டாக்டர் பட்டம் தரணும். அவர் இயக்கிய படங்கள் பல பேருக்கு மெடிஷன். அவர் வடிவேலுவை வைத்து இயக்கிய நகைச்சுவை காட்சிகள் தான் இன்றும் பலருக்கும் மருந்தாக இருக்கிறது. இந்த அரங்கம் நிறைந்து இருப்பது போல அரங்கம் நிறைந்த காட்சிகளாக இந்த படம் ஓடணும். இங்கு சின்ன படம் பெரிய படம் என்று எதுவும் இல்லை. இந்த படத்தின் விழாவுக்கு வருவது என் கடமை. என் நண்பன் போராளி விக்னேஷூக்காக நான் வந்திருக்கிறேன். அதற்கு காரணம் அவர் கஷ்டம், அவமானங்களை தாண்டி இங்கு வந்திருக்கிறார். அவர் வெற்றி பெற வேண்டும். மாணிக்கம் என்ற ஒரு பொக்கிஷம் உங்களுக்கு தயாரிப்பாளராக கிடைத்திருக்கிறார்.
2025-ல் என்ன நடக்கிறது என்பதை படமாக எடுக்கவே இன்று பல இயக்குனர்கள் திண்டாடுகிறார்கள். ஆனால் இயக்குனர் ஆண்ட்ரூ 2047-ல் என்ன நடக்கும் என்பதை திரைக்கதையாக்கி படமாக எடுத்துள்ளார். எனக்குப் பிடித்த இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் பகத் சிங், நேதாஜி. அதில் நேதாஜிக்கு இந்த படத்தில் Tribute செய்தது மகிழ்ச்சி. திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒரு கோரிக்கை. ஒரு திரைப்படம் வெளியாகும்போது முதல் 3 நாட்களுக்கு மட்டும் திரையரங்க உரிமையாளர்கள் பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம். வெளியில் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு முக்கியமான கோரிக்கை. தமிழ் சினிமாவில் ஒரே நாளில் 10 படங்கள் வெளியாகிறது, எந்த படத்துக்கும் சரியான அளவில் தியேட்டர் கிடைப்பதில்லை. அதனால் ரிலீஸை ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும். விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க வேலைகள் நடந்து வருகின்றது. ஆகஸ்ட் 29 என் பிறந்த நாள். கண்டிப்பாக நல்ல செய்தி காத்திருக்கிறது. திருமண தேதியை விரைவில் அறிவிப்பேன் என்றார்.
ரெட் ஃப்ளவர் திரைப்படத்தில் நடிகர் விக்னேஷூக்கு ஜோடியாக மனிஷா ஜஷ்னானி நடிக்கிறார். படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன், டி.எம்.கார்த்திக், கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன், ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி […]
சினிமாபிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன், ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் உதயா, ‘தயா’ என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் முதல் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் பன்னீர்செல்வம் பேசுகையில், இப்படத்தின் பணிகளை இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதியன்று தொடங்கி, ஆகஸ்ட் ஒன்றாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிடுகிறோம். ஒரு படத்தை இவ்வளவு விரைவாக நிறைவு செய்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக முழு ஒத்துழைப்பினை வழங்கிய நடிகர் உதயாவிற்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தின் கதையை இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், உதயா மூலமாக எங்களை சந்தித்து சொன்னார். அவர் சொன்ன கதை பிடித்துப் போனதால், அடுத்த நாளே படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கினோம். உதயாவை தொடர்ந்து கதையில் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகர் அஜ்மல் மற்றும் யோகி பாபு ஒப்பந்தமானார்கள். இவர்களைத் தொடர்ந்து நாயகி ஜான்விகா, பவன், பிரபாகர், பெங்களூரூ டானி, சுபத்ரா என அந்தந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர்களை இயக்குநரும் உதயாவும் தேர்வு செய்தனர்.
குறிப்பாக யோகி பாபு ரஜினி படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது உதயாவிற்காக பதினான்கு நாட்களை ஒதுக்கி முழு ஒத்துழைப்பை வழங்கினார்.
ஒளிப்பதிவாளர் மருதநாயகம், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, எடிட்டர் ஷ்யாம் என திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கினார்கள். இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் உதயாவின் கடும் உழைப்பை இந்த படத்தில் நாங்கள் நேரில் பார்த்திருக்கிறோம். அவருடைய கடும் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என ரசிகர்களிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

படத்தொகுப்பாளர் ஷ்யாம் பேசுகையில், எடிட்டர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு திரில்லர் ஜானர் ஆக்ஷன் ஜானர் படங்களுக்கு படத்தொகுப்பு செய்ய வேண்டும் என்பது கூடுதல் உற்சாகத்தை அளிக்க கூடியது. அந்த வகையில் அக்யூஸ்ட் திரைப்படத்தின் திரைக்கதை படத்தொகுப்பின் போது உற்சாகத்தை அளித்தது. இந்த திரைப்படம் சீட் எட்ஜ் திரில்லராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் உதயாவும், இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸும் ஒன்றிணைந்து பணியற்றிருக்கிறார்கள். நாங்கள் இந்தப் படத்தின் திரைக்கதையின் வேகத்தை குறைப்பதற்காக சில உத்திகளை கையாண்டிருக்கிறோம். ஏனெனில் இந்தப் படத்தின் திரைக்கதை மிக வேகமாக இருக்கும். இது போன்றதொரு படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை செய்வதற்கு வாய்ப்பளித்த எடிட்டர் பிரவீணுக்கும், உதயாவுக்கும், இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸுக்கும் நன்றி. இப்படத்தின் இசையும் மிகப் பிரமாதமாக இருக்கிறது. இந்தப் படம் அனைவரையும் கவரும் வகையிலான டீசன்டான சீட் எட்ஜ் திரில்லர் படம் என்றார்.
நடிகர் டானி பேசுகையில், ”ஓ மரியா பாடலில் நடிகை ரம்பாவுடன் நடனமாடிய பாடல் 1999ம் ஆண்டில் வெளியானது. அதன் பிறகு மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறேன். இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் சினிமா வேண்டாம் என்று அமெரிக்காவிற்கு சென்றார். அவரிடம் கேட்டபோது சின்ன பிரேக் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார். ஆனால் நான் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டேன். அதன் பிறகு அவர் எனக்கு போன் செய்து உதயா நடிக்கும் படத்தை இயக்க வாய்ப்பு வந்துள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்தத் தருணத்தில் விஜய் டிவியில் ‘ஓ மரியா..’ பாடலை ரீ கிரியேட் செய்தனர். அதற்காக பெங்களூரில் இருந்து சென்னை வந்து நடனம் ஆடினேன். அந்தத் தருணத்தில் இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸிடமிருந்து அழைப்பு வந்தது. நான் நேராக இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். அங்கு எனக்கு உதவி காவல் ஆய்வாளர் வேடத்தில் நடிக்க வேண்டும் என சொன்னார்.
ஒவ்வொரு கலைஞனுக்கும் விமான நிலையத்தில், பொதுவெளியில், வணிக வளாகத்தில் ரசிகர்கள் சந்தித்து, ‘உங்கள் படத்தை நான் பார்த்திருக்கிறேன்’ என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், அது அந்த கலைஞனுக்கு மிகப்பெரிய போதையை தரும். ஆனால் என்னை யாரும் அங்கீகரிக்கவில்லை, அடையாளப்படுத்தவில்லை. அதற்காக ஏங்கிக் கொண்டிருந்தேன். இந்த தருணத்தில் உதவி காவல் ஆய்வாளர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்றால் தலை முடியை கட் செய்ய வேண்டும் என்று சொன்னார். நான் யோசித்தேன்.
‘மின்னலே’ படத்தில் நாகேஷ் உடன் நடித்தேன். ‘காதலர் தினம்’ படத்தில் கவுண்டமணியுடன் நடித்திருக்கிறேன். ‘கவிதை’ படத்தில் வடிவேலுவுடன் நடித்தேன். பல காமெடி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். அந்த வகையில் யோகி பாபு உடன் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காகவும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். யோகி பாபு உடன் மட்டுமல்லாமல் அஜ்மல் – உதயா என அனைவரிடமும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதால் இந்தப் படத்தில் நடித்தால் மீண்டும் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடிக்க ஒப்புக்கொண்டேன். தலைமுடியை கட் செய்யவும் சம்மதித்தேன். இந்தப் படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர் சேது பேசுகையில், நாங்கள் பெரிதாக எதிர்பார்த்து முதல் முதலாக தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் படம் இது. இதற்கு உதயா தான் காரணம். அவருடன் நடைபெற்ற ஒரு சாதாரண சந்திப்பு தான் இப்படத்தில் எங்களை இணைய வைத்தது. இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ் எங்களிடம் என்ன கதையை சொன்னாரோ, அதை அப்படியே எடுத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு எல்லாம் பாசிட்டிவ் ஆகவே அமைந்தது. இந்தப் படத்தின் கதை தனக்கு என்ன தேவையோ, அதை அதுவே இழுத்துக் கொண்டது. நாங்கள் எதையும் செய்யவில்லை. கதை என்ன கேட்டதோ அதை நாங்கள் செய்து கொடுத்தோம். படம் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும் , நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் பேசுகையில், அக்யூஸ்ட் படத்தில் பணியாற்றியது எனக்கு நல்லதொரு அனுபவம். ஜனவரியில் தான் இப்படத்திற்கான பாடல்களை உருவாக்கினோம். ஆறு மாதத்திற்குள் ஃபர்ஸ்ட் காப்பி ரெடி ஆகிவிட்டது. நான் இந்த குழுவில் இணைந்ததற்கு முக்கியமான காரணம் உதயா தான். அவருக்கு என்னுடைய முதல் நன்றி. இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்று இருக்கின்றன. இந்தப் படத்தின் திரைக்கதையை மேம்படுத்தும் வகையில் பின்னணி இசை அமைத்திருக்கிறேன் என நம்புகிறேன் என்றார்.

நடிகர் பிரபாகர் பேசுகையில், கன்னடத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் நான் நடித்திருக்கும் முதல் படம் இது. இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியான கன்னட திரைப்படங்களில் நான் நடித்திருக்கிறேன். அவர்தான் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கினார். அவர் உன் திறமையை வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக்கொள்கிறேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். இப்படத்தின் கதையை அவர் சொன்னதும் சந்தோஷமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் இங்கு வந்த பிறகு தமிழைக் கற்றுக் கொண்டேன். அத்துடன் இப்படத்தில் தமிழக, கர்நாடக எல்லையோரத்தில் உள்ள கதாபாத்திரம் என்பதால் படத்திலும் நான் நடித்த காட்சிகளுக்கு சொந்தக் குரலில் பின்னணி பேசவும் வாய்ப்பளித்தனர். இதற்காக நடிகர் உதயாவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பஸ், கார், ஓட்டம் என சேசிங்கிலேயே இருக்கும். இதனால் நான் மிகவும் விரும்பி நடித்தேன். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம். இந்த அனுபவம் மறக்க இயலாது என்றார்.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் பேசுகையில், கன்னடத்தில் திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் என்னுடைய திரையுலக வாழ்க்கை தமிழில் தான் தொடங்கியது. சுந்தர் சி, தனுஷ், அர்ஜுன் ஆகியோர் நடித்த படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். கிட்டத்தட்ட 400 பாடல்களுக்கு மேல் நடன இயக்குநராக பணியாற்றிவிட்டு, கன்னடத்தில் திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு சென்று படத்தை இயக்கினேன். ஒரே தயாரிப்பாளருடன் தொடர்ந்து ஐந்து திரைப்படங்களை இயக்கினேன். அதன் பிறகு சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து இயக்கினேன். இது என்னுடைய இயக்கத்தில் வெளியாகும் ஏழாவது படம். ஆனால் தமிழில் முதல் படம்.

கன்னடத்தில் ஆக்ஷன் ஃபிலிம் டைரக்டர் என்ற பெயரை சம்பாதித்து இருக்கிறேன். தமிழில் அறிமுகமாகும் போது மிக பிரம்மாண்டமான படத்தை இயக்க வேண்டும் என்று தான் எண்ணியிருந்தேன். இதற்காக லாரன்ஸ், விஷால் போன்ற சில ஹீரோக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன். ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை. இந்தத் தருணத்தில் என் குடும்ப உறுப்பினர்கள் ‘நீங்கள் அப்படி நினைக்க கூடாது. நீங்கள் கன்னடத்தில் படத்தை இயக்கும் போது சின்ன படமாகத் தான் இருந்தது. ஆனால் அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனால் நீங்கள் இயக்கும் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என நினைத்து உருவாக்குங்கள்’ என ஆலோசனை சொன்னார்கள். அதன் பிறகு ஆறு மாதம் அமெரிக்காவிற்கு சென்று விட்டேன்.
அதன் பிறகு பிஆர்ஓ நிகில் முருகன் தான் இந்த அக்யூஸ்ட் படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டார். அவர்தான் உதயா கதை கேட்டுக் கொண்டிருக்கிறார். அவரை சந்தித்து கதையை சொல்லுங்கள் என்றார். அதன் பிறகு அவரை சந்தித்து கதையைச் சொன்னேன். கதையை முழுவதுமாக கேட்டுவிட்டு, கதை நன்றாக இருக்கிறது. குறிப்பாக என்னுடைய கேரக்டர் நன்றாக இருக்கிறது. நாளை தயாரிப்பாளரை சந்திக்கிறோம் என்றார். அடுத்த நாள் தயாரிப்பாளர்கள் பன்னீர்செல்வம், தங்கவேல்- உதயா ஆகியோர் இருந்தனர். தயாரிப்பாளர்களுக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால் அனைவரும் பட்ஜெட் அதிகம் என சொன்னார்கள். ஆனால் படப்பிடிப்பு நடைபெற்ற 60 நாட்களிலும் எந்த குழப்பமும் இல்லாமல் நான் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து படப்பிடிப்பை நிறைவு செய்தனர். எனக்கு கிடைத்த தொழில்நுட்ப கலைஞர்களும் திறமையானவர்கள். அதனால் படத்தை உருவாக்குவதற்கு எனக்கு முழு சுதந்திரம் இருந்தது. ஒன்றரை கோடி ரூபாய்க்கு பஸ் ஒன்றை விலைக்கு வாங்கி, அதனை படப்பிடிப்புக்கு பயன்படுத்திய பின் ஸ்கிராப்பிற்கு அனுப்பினோம். இதற்கும் உதயா தான் முழு காரணம்.

இந்தக் கதையில் நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் அஜ்மல் நடித்தார். அவருக்கு கதை சொன்ன தருணத்திலிருந்து தற்போது வரை முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். கதையில் இடம்பெறும் மற்றொரு கதாபாத்திரத்திற்கு யோகி பாபு விடம் பேச்சுவார்த்தை நடத்தினோம் கதையைக் கேட்ட அவர் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தொடர்ந்து 14 நாட்கள் கால்ஷீட் கொடுத்து ஒத்துழைப்பு அளித்தார்.
இந்தப் படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். என்னுடைய உறவினர் இசையமைப்பாளராக இருந்தாலும், இந்தப் படத்திற்கு புது இசையமைப்பாளர் வேண்டும் என விரும்பினேன். இதற்காக உதயா அவருடைய ‘உத்தரவு மகாராஜா’ படத்திற்கு இசையமைத்த நரேன் பாலகுமாரை அறிமுகப்படுத்தினார். அவரது பாடலைக் கேட்டவுடன் பிடித்து விட்டது. இந்தப் படத்தில் அவரின் இசையில் உருவான பாடல்கள் எனக்கும் பிடித்தது. என் மகன்களுக்கும் பிடித்தது. ஒரு பாடலை சிறிய வயதில் இருக்கும் பிள்ளைகள் பாடினால் அந்தப் பாட்டு ஹிட் ஆகும். பாடல்களைப் போல் பின்னணி இசையிலும் நரேன் மெஸ்மரைஸ் செய்திருக்கிறார். இந்தப் படத்தைப் பற்றி நான் எதையும் மிகையாக சொல்லவில்லை, படம் பார்த்தால் புரியும். இந்தப் படம் அனைவரையும் மெஸ்மரைஸ் செய்யும். இந்த படத்தைப் பற்றிய ஏதேனும் எதிர்பார்ப்பு இருந்தால் அதைவிட அதிகமாகவே இருக்கும். திரைக்கதையில் யாரும் யூகிக்காத திருப்பங்கள் இருக்கும். படம் தொடக்கம் முதல் இறுதி வரை கண் இமைக்காமல் பார்க்கும் படி இருக்கும் என்றார்.
நடிகர் அஜ்மல் பேசுகையில், ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்று துணிந்து செயலில் ஈடுபட்டால், அவருக்கு இந்த உலகமே துணை நிற்கும் என்பார்கள். இதற்கு மிகப்பெரிய உதாரணம் உதயா. அவர் இந்த படத்திற்காக எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதை படத்தின் பணிகள் தொடங்கிய முதல் நாளிலிருந்து எனக்குத் தெரியும். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்களும் நடிகைகளும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து பணியாற்றினார்கள். இந்தப் படத்திற்கு கடவுளின் மிகப்பெரிய ஆசீர்வாதம் இருக்கிறது. அந்த ஆசி இன்று வரை தொடர்கிறது. இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் என் கதாபாத்திரத்தை மட்டுமல்ல மலர் என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தையும் உதயாவின் கதாபாத்திரத்தையும் நன்றாக செதுக்கியிருந்தார். படத்தில் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றியிருக்கிறார்கள்.
‘அஞ்சாதே’ படத்தில் பணியாற்றிய போது எனக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது. ‘கோ’ படத்தில் பணியாற்றிய போதும் பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது அதேபோன்று பாசிட்டிவ் எனர்ஜி இந்தப் படத்தில் பணியாற்றிய போதும் எனக்கு கிடைத்தது. அதனால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

நாயகன் உதயா பேசுகையில், மூன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அக்யூஸ்ட் ‘ திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த மேடை எனக்கு மிகவும் பிடித்த மேடை. நிறைய போராட்டங்களுக்குப் பிறகு சினிமாவை நிறைய நேசித்ததன் காரணமாக இங்கு நின்று கொண்டிருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டு காலத்தில் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறேன். அதன் பிறகு மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் பயணிக்க தொடங்கிய போது கேட்ட கதை தான் இந்த அக்யூஸ்ட் படத்தின் கதை. இன்றைய தமிழ் சினிமாவில் கன்டென்ட் தான் முக்கியம். அதற்காக நல்ல கன்டென்டுக்காக காத்திருந்தேன். நான் இன்று வரை எந்த படமாக இருந்தாலும் தியேட்டருக்கு சென்று பார்த்து ரசிப்பவன். எது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது, பிடிக்கும் என்பதனை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் தான் கதையை கேட்கத் தொடங்கினேன்.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் முதலில் கன்னடத்தில் வெளியான படம் ஒன்றை தமிழில் ரீமேக் செய்யலாம் என்று சொன்னார். அது டார்க் காமெடி, எனக்கு ஒத்து வராது என்று சொல்லி புதிதாக கன்டென்ட் இருந்தால் அதை சொல்லுங்கள் என்றேன். அத்துடன் எனக்கான பட்ஜெட் இதுதான் என்றும் சொன்னேன். ஆனால் அவர் சொன்ன அக்யூஸ்ட் கதை பெரிய பட்ஜெட் படம். இதை தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவர்கள் தான் இதற்கு ஆதரவாக இருந்தார்கள். அதனால் தான் இந்த படம் உருவானது. இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் கிளாரிட்டியான டைரக்டர். அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் எதிர்காலம் இருக்கிறது. அத்துடன் பிரபு ஸ்ரீநிவாஸ் தயாரிப்பாளர்களின் இயக்குநராகவும் இருக்கிறார் என்றார்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் ஜூலை 25ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் […]
சினிமாசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் ஜூலை 25ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன், தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் ரோஹன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் பேசுகையில், மூன்றாவது தலைமுறையாக திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறோம். தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘தலைவன் தலைவி’ அற்புதமான குடும்பத் திரைப்படம். இயக்குநர் பாண்டிராஜ் ஒரு சுயம்பு. அவருடைய தனிப்பட்ட முயற்சியில் மிகப் பெரும் இயக்குநராக உருவாகி இருக்கிறார். அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் தான். அவர் கதை சொன்னபோது அப்பாவுக்கு பிடித்திருந்தது. எங்களுக்கும் பிடித்திருந்தது.

விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அவருடைய புகழ் இன்று சீனா வரை பரவி இருக்கிறது. அவர் நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் அங்கு இந்திய மதிப்பில் எண்பது கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. ஹாங்காங்கில் அவர் ஹாலிவுட் நடிகர் டென்செல் வாஷிங்டனுக்கு இணையாக புகழ் பெற்றிருக்கிறார். அந்த அளவிற்கு அவர் ரசிகர்களிடம் சென்றடைந்திருக்கிறார். கொல்கத்தாவிலும் அவரைப் பற்றி பேசுகிறார்கள். அவர்கள் ‘தமிழ் சினிமா என்றால் விஜய் சேதுபதி தான்’ என சொல்கிறார்கள். அவருடைய புகழ் எங்களுக்கு மிகவும் பொக்கிஷமாக இருந்ததுடன், அவருடன் இணைந்து பணியாற்றுவதும் பெருமிதமாக இருக்கிறது.
நித்யா மேனனை பற்றி குறிப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும், அவருடன் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் நடித்தாலும், அவருடைய தனி திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடிப்பவர். அவருடன் இணைந்து பணியாற்றுவதும் எங்களுக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறோம்.
இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தையும் அற்புதமாக வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். புதிய புதிய ஓசைகளையும் கொடுத்திருக்கிறார். ஆதி கால தமிழர்களின் இசையை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார். ‘தலைவன் தலைவி’ மிகப்பெரிய கேளிக்கை படமாக அமையும். ரசிகர்கள் இந்த படத்திற்கு பேராதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நாயகன் விஜய் சேதுபதி பேசுகையில், இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது ஏராளமான சண்டை, சச்சரவுகள் இருந்தன. அதற்கு இடையில் தான் இப்படத்தின் பணி தொடங்கியது. படத்தின் இயக்குநரும், நாயகனும் ஒன்று சேர்ந்த தருணம் இருக்கிறதே, அதை நாங்களே எதிர்பார்க்கவில்லை. இவருடன் இணைந்து பணியாற்றக்கூடாது என்று அவரும், இவரது இயக்கத்தில் பணியாற்றக் கூடாது என்று நானும் இருந்த காலகட்டம் அது. இரண்டு பேருக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் இல்லை. அதனால் அழகான தருணத்தில் ஒரு சிறிய பூ எப்படி இயல்பாக மலருமோ, அதேபோல் எங்களுக்கு இடையேயான கோபம் மறைந்து, அன்பு மலர்ந்தது. அதன் பிறகு எல்லா விஷயங்களும் படபடவென நடந்தன. கிட்டத்தட்ட இயக்குநரை எனக்கு 2009ம் ஆண்டிலிருந்து தெரியும். ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்காக தேசிய விருதினை வென்ற போது நாங்கள் இருவரும் சந்தித்து உரையாடி இருக்கின்றோம். இப்போது இணைந்திருப்பது எப்படி இருக்கிறது என்றால். ஒரு மிகப்பெரிய வட்டம் நிறைவடைந்தது போல் இருந்தது.
இந்த படத்தின் பணிகள் தொடங்கியது ஒரு அற்புதமான அனுபவம். சத்யஜோதி நிறுவனத்தை பற்றி தெரியும். ‘மூன்றாம் பிறை’ படத்தின் மூலம் தான் இவர்கள் தங்களுடைய தயாரிப்பை தொடங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது. இவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் நான் நடித்ததும், இணைந்து பணியாற்றியதும் எனக்கு மிகவும் சந்தோஷம். இந்த நிறுவனத்துடன் முதன் முதலாக நான் இணைந்து பணியாற்றியதை பெருமிதமாக கருதுகிறேன்.
நித்யா மேனனுடன் 2020ம் ஆண்டில் ’19 (1) (ஏ) ‘ என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். அது கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படம். இயக்குநர் இந்துவின் வேண்டுகோளை ஏற்று, அவர் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்ததால் அந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தேன். அப்போது நித்யா மேனன் தான் கதாநாயகி என எனக்கு தெரியாது. படப்பிடிப்பு தளத்தில் இணைந்து பணியாற்றிய போது.’வாய்ப்பு கிடைத்தால் நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவோம்’ என பேசிக்கொண்டோம். ஆனால் அந்த வாய்ப்பு ‘தலைவன் தலைவி’ படத்தில் இப்படி அமையும் என்று எதிர்பார்க்கவில்லை.

நித்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் இப்படி ஒரு வேடத்தில் அவர்களுடன் இணைந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இது படம் பார்த்த பிறகு அனைவருக்கும் புரியும். அவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அந்த கதாபாத்திரத்தில் நித்யாவை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க இயலாது. கிட்டத்தட்ட அவர் நடித்த எல்லா கதாபாத்திரமும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். நித்யா ஒரு படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்றால் அந்த கேரக்டரில் வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாது. அப்படியொரு அற்புதமான நடிப்பை வழங்குபவர்.
படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தோம், இதுதான் காட்சி, இதுதான் வசனம், இதுதான் நடிப்பு, இதுதான் நடனம் என்று இயல்பாக கடந்து செல்ல மாட்டார். அதை முழுமையாக உணர்ந்து அந்த கதாபாத்திரத்திற்காக என்ன செய்யலாமோ அல்லது அதனை எப்படி எல்லாம் திரையில் காண்பிக்கலாமோ அல்லது இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறாரோ இவை அனைத்தையும் சரியாக புரிந்து கொண்டு அதை சரியாக வழங்கிட வேண்டும் என்று மெனக்கெடும் அற்புதமான நடிகை தான் நித்யா. அவருடன் இணைந்து பணியாற்றியதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில், ருத்ரா, விஷ்ணு விஷால், மிதிலா பால்கர், கருணாகரன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில், கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஓஹோ எந்தன் பேபி”. கதைப்படி.. சினிமாவில் இயக்குநராகும் கனவோடு உதவி இயக்குநரான ருத்ரா பிரபலமான […]
விமர்சனம்விஷ்ணு விஷால் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில், ருத்ரா, விஷ்ணு விஷால், மிதிலா பால்கர், கருணாகரன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில், கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஓஹோ எந்தன் பேபி”.
கதைப்படி.. சினிமாவில் இயக்குநராகும் கனவோடு உதவி இயக்குநரான ருத்ரா பிரபலமான நாயகன் விஷ்ணு விஷாலிடம் இரண்டு கதைகள் சொல்கிறார். இரண்டு கதைகளும் நாயகனுக்கு திருப்தி இல்லாமல் போனதால் விரக்தியுடன் கிளம்புகிறார். பின்னர் ஒரு காதல் கதை படத்தின் முதல்பாதியாக சொல்ல, அந்தக் கதை நாயகனுக்கு பிடித்து விட, உடனடியாக படத்தை ஆரம்பிக்கலாம் என்கிறார். ஆனால் படத்தின் இரண்டாம் பாகம் என்ன எனக் கேட்க, இதுவரை நான் சொன்னது எனது சொந்தக் கதை. அதன்பிறகு எனது காதல் முறிந்து விட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்து விட்டோம் என்கிறார்.

படத்தின் இரண்டாம் பாகத்தையும் சொந்தமாகக் தான் எழுத வேண்டும். நீங்கள் உங்கள் காதலியை மீண்டும் சந்தித்து பேசுங்கள் என அனுப்பி வைக்கிறார். நாயகனும் தனது காதலியை தேடி மனிபால் செல்கிறார்..
இவர்களின் காதல் கை கூடியதா ? இயக்குநர் ஆகும் கனவு நிறைவேறியதா ? என்பது மீதிக்கதை…

பள்ளிப் பருவத்தில், இனம் புரியாத வயதில் ஏற்படும் அனுபவங்களை அழகான காதல் உணர்வோடும், கல்லூரியில் ஏற்படும் காதலை எதார்த்தமாக ஜனரஞ்சகமான முறையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். நீண்ட நாட்களுக்குப் பிறகு படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் தனது மலரும் நினைவுகளை அசைபோடும் அளவுக்கு திரைக்கதை அமைத்துள்ளார்.
நாயகன், நாயகி இருவரும் தங்களது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். விஷ்ணு விஷால் கதைக்கு ஏற்ப தான் ஒரு பெரிய ஹீரோ என்கிற பில்டப் இல்லாமல், ஆங்காங்கே தனது சொந்த கதையையும் நகைச்சுயாக சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார். ரெடின் கிங்ஸ்லி எல்லாப் படத்திலும் தனது ஒரே மாதிரியான வாய்ஸுடன் பேசுவதை மாற்றிக்கொண்டு, படத்திற்கு ஏற்றவாறு புதுவிதமாக மாற்றி யோசித்து இருக்கலாம்.