ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றபின் வழங்கப்படும் பணி நீட்டிப்பை, மே 31 வரை நீட்டித்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ ஜியோ […]
தமிழகம்ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பெயர் சூட்ட வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை முன்பு தென் தமிழர் கட்சியின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ம. பாலமுரளி தலைமையில் […]
மாவட்ட செய்திகள்மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ், கீதா கைலாசம் மற்றும் பலர் […]
சினிமாஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றபின் வழங்கப்படும் பணி நீட்டிப்பை, மே 31 வரை நீட்டித்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ ஜியோ […]
தமிழகம்ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றபின் வழங்கப்படும் பணி நீட்டிப்பை, மே 31 வரை நீட்டித்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் போது, கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெற்றால், மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணியில் தொய்வு ஏற்படும் என்பதற்காக, ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு இறுதி நாள் வரை (மே-31) பணிநீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை 115-ல், இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இடையில் பணி ஓய்வு பெற்றால், அவர்கள் கல்வி ஆண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரைதான் பணி நீட்டிப்பு பெற முடியும் என்று அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு இருந்ததால் அரசாணை செயல்படுத்தப்படாமல் பழைய நிலையே தொடர்ந்து இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 13.06.25 ல் பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செயல்முறையில், கல்வி ஆண்டின் இடையில் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, கல்வி ஆண்டின் பள்ளி இறுதி வேலைநாள் வரைதான் பணி நீட்டிப்பு வழங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாணை 115 மற்றும் இயக்குநரின் செயல்முறைகள் பல ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற இருக்கும் ஆசிரியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. அரசின் கூற்றுப்படி பார்த்தால், ஆசிரியர்கள் மே மாதம் பணியே செய்வதில்லை என்ற கருத்தை வைத்து, அதனடிப்படையில்தான் அரசாணையும், அதனை தொடர்ந்து செயல்முறையும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை என்றாலும், ஆசிரியர்கள் மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்தல் மற்றும் தேர்ச்சி அறிக்கை தயாரித்து வெளியிடுதல் போன்ற கல்வி செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பிரச்சாரங்கள் மற்றும் வகுப்பறைகள், பள்ளி வளாகத்தை தயார் செய்தல் போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர்.
எனவே, கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டியின் இறுதி நாளான மே-31 வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பெயர் சூட்ட வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை முன்பு தென் தமிழர் கட்சியின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ம. பாலமுரளி தலைமையில் […]
மாவட்ட செய்திகள்ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பெயர் சூட்ட வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை முன்பு தென் தமிழர் கட்சியின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ம. பாலமுரளி தலைமையில் வருகிற ஜுன் 23 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அக்கட்சியின் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த ஆர்பாட்டத்தில், தாய்தமிழர் கட்சியின் தலைவர் பி.ம. பாண்டியன், த.மு.மு.க மாவட்ட செயலாளர் கே.அப்துல் ரஹீம், தமிழர் முன்னனியின் பொதுச்செயலாளர் இமயம், சரவணன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர். மேலும் பல்வேறு சமுதாய இயக்க நிர்வாகிகள், அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ், கீதா கைலாசம் மற்றும் பலர் […]
சினிமாமெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ், கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்களும் நல்ல படைப்பு என்ற விமர்சனத்தை வழங்கி வருகிறது. இதனால் இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் ‘லொள்ளு சபா’ சாமிநாதன் பேசுகையில், இந்தப் படத்தில் என்னுடைய வழக்கமான பாணியில் நடிக்காமல் இயக்குநர் சொன்னதை கேட்டு நடித்தேன். படப்பிடிப்பு தளத்திற்கு மதியம் ஒரு மணிக்கு சென்றேன். இரண்டு மணிக்கு காட்சிகளை படமாக்க தொடங்கினர். நான்கு மணிக்கு என்னுடைய பங்களிப்பு நிறைவு என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு படத்திற்கு பின்னணி பேசுவதற்காக சென்றேன். அங்கும் எனக்கு வித்தியாசமான அனுபவம் தான் கிடைத்தது. இப்படத்தின் இயக்குநரை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் ரசனையுடன் சொல்லிக் கொடுத்தார் என்றார்.
இசையமைப்பாளர் கே. சி. பால சாரங்கன் பேசுகையில், படத்தை தங்களுடைய படமாக நினைத்து அனைவரிடமும் பகிர்ந்து கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. இந்த படத்திற்கு சிறப்பான திரையரங்க அனுபவத்தை ஒலி மூலம் வழங்கிய தொழில்நுட்பக் கலைஞர் ரூபனுக்கு நன்றி. என்றார்.
நடிகர் விஷ்வா பேசுகையில், இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி. வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் வித்தியாசமான அனுபவங்களை சந்திக்கிறேன். எனக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. குறிப்பாக என் மீது நம்பிக்கை வைத்து தினேஷ் கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் .
நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் பேசுகையில், சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் எங்களின் கனவு பெரிதாக இருந்தது. கனவும், ஆசையையும் வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொடங்கும்போது பேப்பரில் இருந்த இந்த கதையை திரைக்கு கொண்டு வந்து, அந்த உணர்வை அனைவரும் உணர்ந்து ரசித்து பாராட்டும் போது அதை சொல்வதற்கு வார்த்தை இல்லை. நாங்கள் அனைவரும் இணைந்து நடித்த ஒரு படத்திற்கு அனைவரும் தங்களின் இதய பூர்வமான ஆதரவை தெரிவித்ததை நேரில் பார்க்கும் போது உற்சாகமாக இருந்தது. ரசிகர்கள், ரசிகைகள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தை வெளியிட்ட ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், இந்த படத்தை பார்த்து பாராட்டிய திரையுலக பிரபலங்களுக்கும் நன்றி என்றார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விநியோகிஸ்தர் குகன் பேசுகையில், இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவும், வரவேற்பும் மிக அதிகம். இதற்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் கோடான கோடி நன்றிகள். இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டிய திரையுலக பிரபலங்களுக்கு நன்றி. மெட்ராஸ் மேட்னி’ நடுத்தர குடும்பத்து மக்களின் கதை. இதில் என்ன கதையை இவர்கள் சொல்ல வருகிறார்கள்..? இது ஒரு சாதாரண கதை. ஆனால் இதை ஒரு திரைப்படமாக உருவாக்குவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். மேலும் இந்த கதை மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்.
சாதாரண கதையை, அசாதாரணமான திரைக்கதை மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருந்தார். அதனால் தான் இந்தப் படத்தை பார்த்த மக்கள் அனைவரும் பாராட்டினார்கள். படத்துடன் உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்டார்கள். படம் வெளியான பிறகு படத்தைப் பார்த்த ரசிகர்களிடத்தில் அதன் தாக்கம் அதிகம் இருந்தது. படத்தின் கதையை கேட்டு நடித்த நடிகர்கள் அனைவரும் இதனை எப்படி புரிந்து கொண்டிருப்பார்கள். அதை திரையில் வழங்கிய விதம் இன்னும் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.
இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என அனைவரும் புதுமுக கலைஞர்கள். சினிமா மீது அர்ப்பணிப்புடன் கூடிய ஆர்வத்துடன் இருப்பவர்கள். இதன் காரணமாகத்தான் இவர்களால் இப்படி ஒரு படைப்பை உருவாக்க முடிந்தது என நான் நினைக்கிறேன். இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனத்துடன் இணைந்து பயணித்த திரையரங்கு உரிமையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் நிறுவனம் கலந்து கொள்ளும் மூன்றாவது நன்றி அறிவிப்பு விழா இது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் மூன்று படங்களில் பணியாற்றியவர்கள் அனைவரும் புதுமுக படைப்பாளிகள் என்பது தான் என்றார்.
இயக்குநர் கார்த்திகேயன் மணி பேசுகையில், மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படத்தை ஏன் முதலில் இயக்கினேன் என்றால்.. இது வரை சொல்லப்படாத ஒரு கதை. உண்மையான ஹீரோ யார் என்பதை சொல்லும் கதை இது. தான் முன்னேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் ஓயாமல் ஓடும் நம்முடைய அப்பா அம்மாக்கள் தான் என்னைப் பொறுத்தவரை ரியல் ஹீரோ.
அவர்களுடைய கதையை ஒரு திரையரங்க அனுபவத்துடன் கூடிய கதையாக சொல்ல வேண்டும் என நினைத்தேன். இந்த நோக்கத்தில் உருவானது தான் இந்த திரைப்படம்.
புது தயாரிப்பு நிறுவனம், புது இயக்குநர், புது தொழில்நுட்பக் கலைஞர்கள், சின்ன பட்ஜெட் படம், நாங்கள் எளிதாக காணாமல் போயிருக்கலாம். அதற்கான வாய்ப்பும் அதிகம் இருந்தது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எனும் பிரபலமான நிறுவனம் எங்களுடன் இணைந்ததால் இந்த வெற்றி சாத்தியமானது. இதற்காக அந்த நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு மற்றும் குகனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நடிகர் காளி வெங்கட் பேசுகையில், இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசரான அபிஷேக் ராஜா மூலம் இயக்குநர் அறிமுகமாகி கதையை சொன்னார். அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தை சொன்னார். அது என்னுடைய தந்தையை நினைவு படுத்தியது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்தப் படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை தெரிந்து கொள்வதற்காக திரையரங்கத்திற்கு சென்ற போது, சிலர் என்னை கட்டிப்பிடித்து அழுதனர். என் சட்டை ரசிகர்களின் கண்ணீரால் நனைந்தது. இந்த அனுபவம் புதிதாக இருந்தது மறக்க முடியாததாகவும் ஆகிவிட்டது. நடிக்கும்போது அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. கலையில் மட்டும் தான் அழுவதை கூட ரசிக்க முடியும். இது சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். நான் இதற்கு முன்பு அதிகமாக பார்த்த படம் கார்கி. தற்போது அதைவிட அதிகமாக பார்த்த படம் மெட்ராஸ் மேட்னி. ஏனெனில் இந்தப் படத்தின் ஒலி அமைப்பு மிகச் சிறப்பாக இருந்தது.
ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை படமாக்குவதில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு இயக்குநர் இந்த படத்தை பதிலாக அளித்திருக்கிறார். இதனால் நான் இயக்குநரை மனதார பாராட்டுகிறேன். மேலும் இந்தக் கதையை.. அவர் சொன்ன விதத்தை நான் முக்கியமானதாக பார்க்கிறேன். ஒரு கவிதையை மொழிபெயர்த்து அதனை திரைப்படமாக உருவாக்குவது போல் இருந்தது. இயக்குநர் கார்த்திகேயன் மணி தொடர்ந்து இது போன்ற படங்களையும் இயக்க வேண்டும். மேலும் இந்தப் படம் ஏராளமானவர்களுக்கு புது நம்பிக்கையை அளித்திருக்கிறது. இதற்காகவும் இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி கிஷோர், ரோஷினி, ஜார்ஜ் மரியம் உள்ளிட்டோர் நடிப்பில், கார்த்திகேயன் மணி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “மெட்ராஸ் மேட்னி”. கதைப்படி.. ஆட்டோ ஓட்டுநரான காளி வெங்கட் மனைவி மற்றும் மகள், […]
விமர்சனம்மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி கிஷோர், ரோஷினி, ஜார்ஜ் மரியம் உள்ளிட்டோர் நடிப்பில், கார்த்திகேயன் மணி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “மெட்ராஸ் மேட்னி”.
கதைப்படி.. ஆட்டோ ஓட்டுநரான காளி வெங்கட் மனைவி மற்றும் மகள், மகனுடன் அன்றாட கிடைக்கும் வருமானத்தை வைத்து சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தான் பட்ட கஷ்டங்களை தனது பிள்ளைகள் படக்கூடாது என நன்றாக படிக்க வைக்கிறார். தனது மகள் வேலைக்குப் போனதும், குடும்ப சுமையை பிள்ளை தலையில் சுமத்திவிட்டோமே என, மனம் வருந்தி மகளின் திருமணத்திற்கு ஏதாவது பணம் சேர்க்க வேண்டும் என கார் ஓட்ட முயற்சிக்கிறார்.
மகள் தேர்வு செய்த பையனை வேண்டாம் என உதறிய வருத்தத்தில், வேறு ஒருவரை தேர்வு செய்து மகளை பார்க்கச் சொல்கிறார். பையனின் குடும்பத்தினர் மகளின் மனம் வருந்தும் படியாக சில தகவல்களை கேட்கின்றனர்.
அதன்பிறகு என்ன ஆனது என்பது மீதிக்கதை…
அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை கண்முன்னே நிறுத்திய இயக்குநர், படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். வந்த காட்சிகளே மீண்டும் மீண்டும் வருவதால் எப்போது படம் முடியும் என்கிற மனநிலை உருவாகிறது.
காளி வெங்கட் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றிருக்கிறார். அதேபோல் அவரது மனைவியாக நடித்துள்ள ஷெல்லி கிஷோர் சிறப்பாக நடித்திருக்கிறார். மகள் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ரோஷினி, மகனாக நடித்துள்ள இருவருமே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ராஜ் கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், கமல், அபிராமி, த்ரிஷா, சிம்பு, ஐஸ்வர்ய லெட்சுமி, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், பகவதி பெருமாள், நாசர், வடிவுக்கரசி, வையாபுரி உள்ளிட்டோர் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “தக் லைஃப்”. […]
விமர்சனம்ராஜ் கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், கமல், அபிராமி, த்ரிஷா, சிம்பு, ஐஸ்வர்ய லெட்சுமி, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், பகவதி பெருமாள், நாசர், வடிவுக்கரசி, வையாபுரி உள்ளிட்டோர் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “தக் லைஃப்”.
கதைப்படி.. டெல்லியில் சக்திவேல் ( கமல்ஹாசன் ) பெரிய கேங்ஸ்டராக இருக்கிறார். அவரது அண்ணன் நாசர், ஜோஜூ ஜார்ஜ், பகவதி பெருமாள் ஆகிய மூவரும் சக்திவேலுக்கு துணையாக இருக்கிறார்கள். இவரை சுட்டுக்கொள்ள வில்லன் மஞ்ச் ரேக்கர், போலீஸ் துணையிடன் திட்டம் தீட்டி, போலீஸ் கமலை சுற்றி வளைக்க, எதிர் தாக்குதலில் பேப்பர் போட வந்தவர் குண்டு பாய்ந்து பழியாகிறார். அருகில் பேப்பர் போட்டுக்கொண்டிருந்த சிறுவன் சிம்பு கதறி அழுகிறான்.
பின்னர் அந்தப் பையனை கமல் வளர்க்கிறார். காலப்போக்கில் கமலும் தொழிலில் அபார வளர்ச்சி அடைகிறார். கமல் செய்யும் பல சம்பவங்களுக்கு சிம்புவம் துணையாக இருக்கிறார். இவர்களின் சாம்ராஜ்யத்தை அழிக்க எதிர் அணியினர் தீட்டும் திட்டத்தில், கமல் சிறை செல்ல நேரிடுகிறது. அப்போது கமலின் இடத்திற்கு வர நாசர் ஆசைப்படுகிறார். அவர் சிம்புவின் துணையோடு திட்டம் தீட்டுகிறார். இந்நிலையில் தன் மகன் போல் வளர்த்த சிம்புவும் கமலுக்கு எதிராக, கமலை பழிவாங்க நினைக்கிறார்.
பின்னர் நாசரின் திட்டம் நிறைவேறியதா ? சிம்பு கமலை பழிவாங்க தீட்டும் திட்டம் என்னானது ? என்பது மீதிக்கதை..
வழக்கமான கேங்ஸ்டர் கதைதான் என்றாலும், மணிரத்தினத்தின் மேக்கிங் பிரமிக்க வைக்கிறது. கமலின் அசாத்தியமான நடிப்பு, சிம்பு கூட்டனி, அபிராமி, த்ரிஷா கதாப்பாத்திரங்கள் சிறப்பு. இடையிடையே நிகழ்கால டெல்லி அரசியல் வசனங்கள் என மணிரத்னம் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
லெட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு, இயக்கத்தில், விமல், சாயாதேவி, எம்.எஸ் பாஸ்கர், அருள்தாஸ், கூல் சுரேஷ், ஶ்ரீ ரஞ்சனி, மணோஷ் குமார், காதல் சுகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “பரமசிவன் பாத்திமா”. கதைப்படி.. திண்டுக்கல் மாவட்டத்தில் […]
விமர்சனம்லெட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு, இயக்கத்தில், விமல், சாயாதேவி, எம்.எஸ் பாஸ்கர், அருள்தாஸ், கூல் சுரேஷ், ஶ்ரீ ரஞ்சனி, மணோஷ் குமார், காதல் சுகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “பரமசிவன் பாத்திமா”.
கதைப்படி.. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமம் ஒன்றில் இந்து, முஸ்லிம், கிருஸ்தவம் என மூன்று பிரிவுகளாக பிரிந்து தனித்தனி குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்து இளைஞர்களும், கிருஸ்தவ இளைஞர்களும் அடிக்கடி மோதலில் ஈடுபடுகின்றனர். பின்னர் கிருஸ்தவ குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் ஒருவரையும், இந்துக்கள் வாழும் குடியிருப்பில் ஒரு இளைஞரையும் பரமசிவன் ( விமல் ), பாத்திமா ( சாயாதேவி ) இருவரும் கொலை செய்கிறார்கள். இதனால் இரண்டு குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இருவரும் மேலும் சிலரை கொலைசெய்ய திட்டமிடுகின்றனர்.
இதற்கிடையில் இரண்டு குடியிருப்பு மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தி, கொலையாளியை கண்டுபிடிக்க போலீஸ் முயற்சி செய்கிறது. ஆனாலும் குற்ற சம்பவங்களும், மோதலும் தொடர்கிறது. கொலை செய்யப்பட்டவர்களுக்கும் பரமசிவன், பாத்திமா ஜோடிக்கும் என்ன சம்பந்தம் ? எதற்காக கொலை செய்கிறார்கள் என்பது மீதிக்கதை…
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், பிறப்பால் அனைவரும் சமம், மதங்களால் பிளவுபட்டு சண்டையிடாமல், மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தியதோடு, வசதி வாய்ப்புகளுக்காக சிலர் மதம் மாறினாலும், மனதளவில் மாறவில்லை என்பதையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குநர்.
விமல் பரமசிவன் கதாப்பாத்திரத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் சாயா தேவியும் சிறப்பாக நடித்திருக்கிறார். எம்.எஸ் பாஸ்கர் ஃபாதர் கதாப்பாத்திரத்தில் உடல், மொழி அனைத்திலும் கச்சிதமாக பொருந்தி, கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
E-5 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில், காமாட்சி ஜெய கிருஷ்ணன் தயாரிப்பில், விஜித் பச்சன், ஷாலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், கீதா கைலாசம், பவா செல்லத்துரை உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “பேரன்பும் பெருங்கோபமும்”. கதைப்படி.. அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் […]
விமர்சனம்E-5 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில், காமாட்சி ஜெய கிருஷ்ணன் தயாரிப்பில், விஜித் பச்சன், ஷாலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், கீதா கைலாசம், பவா செல்லத்துரை உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “பேரன்பும் பெருங்கோபமும்”.
கதைப்படி.. அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு, போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை கூறி சிறை செல்கிறார் ஜீவா ( விஜித் பச்சன் ). இவரது பின்னணியை விசாரணை செய்ய அவரது சொந்த கிராமத்திற்கு செல்கிறது போலீஸ். அங்கு குறிப்பிட்ட ஆதிக்க சாதியினர் வீட்டுப் பெண்ணை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பையன் காதலித்ததால், அடக்குமுறைக்கு ஆளாகி தீயிட்டு கொளுத்தப்படுகிறான். பின்னர் அந்தப் பெண்ணும் சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டு பைத்தியமாக சுற்றித்திரிகிறார்.
அதேபோல் ஜீவா கேராளாவில் படிக்கப்போன இடத்தில் காதலித்து அழைத்து வரும் சாராவும் ( சாலி நிவேகாஸ் ) சாதிய அடக்குமுறைக்கு ஆளாகி பலியானதும் போலீஸ் விசாரணையில் தெரியவருகிறது. இதற்கிடையில் அமைச்சர் ( மைம் கோபி ) ஜீவா விஷயத்தில் கோபமாகிறார்.
போலீசாரிடம் ஜீவா சொன்ன திடுக்கிடும் தகவல்கள் என்ன ? அமைச்சர் ஏன் ஜீவாவை கொள்ள துடிக்கிறார் என்பது மீதிக்கதை..
இளமையில் தான் பட்ட வேதணைகளுக்கு, முதுமையில் பழிவாங்கத்துடிக்கும் ஜீவா கதாப்பாத்திரத்தில் விஜித் பச்சன், இன்னும் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு நடித்திருக்க வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும். நாயகி ஷாலி நிவேகாஸ் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கிராமம், நீதிமன்றம் காட்சிகளில் லாஜிக் இல்லாமல் செயற்கைத் தனமாக காட்சிகள் நகர்வது அப்பட்டமாக தெரிகிறது. இயக்குநர் திரைக்கதையிலும், நடிகர்களை வேலை வாங்கியதிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒளிப்பதிவாளர் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி பரமக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், மாவட்ட அவைத் தலைவர் ராமநாதன் […]
அரசியல்ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி பரமக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், மாவட்ட அவைத் தலைவர் ராமநாதன் திருவாடானை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தர்மராஜ் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், மாவட்ட துணைச் செயலாளர் அசோகன் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள நான்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுக்கும் மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், மாவட்ட, நகர், ஒன்றிய, பேரூர், ஊராட்சி, கிளை மற்றும் வார்டு தே.மு.தி.க நிர்வாகிகள் அனைவரும் 2026-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக முழு ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், ராணி அஹில்யா பாய் 300-வது பிறந்தநாள் இன்று மாலை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சார்பில் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்ள பா.ஜ.க தேசிய அமைப்பு இணைச்செயலாளர் சிவப்பிரகாஷ், தமிழக பா.ஜ.க மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இன்று […]
அரசியல்ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், ராணி அஹில்யா பாய் 300-வது பிறந்தநாள் இன்று மாலை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சார்பில் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்ள பா.ஜ.க தேசிய அமைப்பு இணைச்செயலாளர் சிவப்பிரகாஷ், தமிழக பா.ஜ.க மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க அலுவலகம் வந்தடைந்தனர். அவர்கள் இருவருக்கும் மாவட்ட பொதுச்செயலாளர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். சண்முகநாதன் தலைமையில் பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
பின்னர் அச்சுந்தன்வயல் பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது.. மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை திட்டமிட்டே நடத்த விடாமல் தி.மு.க அரசு தடுக்கிறது. இம்மாநாடு நடைபெற்று விட்டால் எங்கே பெரும் எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் தி.மு.க உள்ளது. யாருக்கும் தொந்தரவு இல்லாத முருக பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் பொதுவான இடத்தில் நடைபெற உள்ள இந்த மாநாடு எங்கே வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டால் தமிழகத்தில் பா.ஜ.க அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து விடும் என்கிற பயமும் தி.மு.க-விற்கு வந்துவிட்டது.
அ.தி.மு.க-பா.ஜ.க எப்போது கூட்டணி அமைத்ததோ அன்றிலிருந்தே தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு தோல்வி பயம் வந்துள்ளது. கூட்டணி தொடர்பான விமர்சனம் நாளொரு வண்ணம், பொழுதொரு மேனியுமாக அரங்கேறி வருகிறது. மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு நீதிமன்றத்தின் அனுமதியுடன் நடைபெறும். எதிர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்காளர்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள் என கூறினார்.
முன்னதாக பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர்கள் பொன். பாலகணபதி, கருப்பு முருகானந்தம், முன்னாள் கயறு வாரிய தலைவர் குப்புராமு, ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் கி.முரளிதரன், மாவட்ட பொதுச்செயலாளர் கவுன்சிலர் ஜி.குமார், மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துச்சாமி, சௌந்தரராஜன், மாவட்ட செயலாளர்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன், சிவசங்கர், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் எஸ்.பி.குமரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பு அழைப்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
தமிழ் சின்னத்திரை உலகில், மக்களின் பேராதரவைப் பெற்ற, தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் “சின்ன மருமகள்”. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் தற்போது […]
சினிமாதமிழ் சின்னத்திரை உலகில், மக்களின் பேராதரவைப் பெற்ற, தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் “சின்ன மருமகள்”. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
பொதுவாகவே தமிழில் நெடுந்தொடருக்கு, தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப கதைகள், குடும்பத்தில் சிக்கி உழலும் பெண்களின் வலிகளைச் சொல்லும் கதைகளுக்கு, நம் தமிழ்ப்பெண்களிடம் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் மருத்துவராகும் கனவோடு திருமண வாழ்க்கையில் உழலும், தமிழ்செல்வியின் கதையை சொல்லும், “சின்ன மருமகள்” தொடர், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
இத்தொடரின் கதை, இப்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. மருத்துவருக்குப் படிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் தமிழ்ச்செல்வி, திருமணமான நிலையில், மாமியார் வீட்டின் சிக்கல்களால், தான் கர்ப்பமாக இருப்பதாகப் பொய் சொல்கிறாள். அந்த உண்மை தெரியவர, அவள் தந்தை வீட்டுக்கு விரட்டப்படுகிறாள். ஆனால் தந்தையும் கடன் வாங்கி குடித்துவிட்டுத் திரிய, தந்தை வீட்டை உதறுகிறாள். அவள் உண்மையிலேயே கர்ப்பம் என்பது தெரிய வர, அதை நம்ப மறுக்கும் கணவனையும் உதறி, நான் தனியாக என் கனவை அடைவேன் எனச் சவால் விட்டுக் கிளம்புகிறாள்.
தனியாகக் கணவனையும், தந்தையையும் எதிர்த்து வெளியே வரும் தமிழ்ச்செல்வி எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வாள்? தடைகளை மீறி அவள் ஜெயிப்பாளா?, அவள் மருத்துவகனவு என்னவாகும்? என, இந்தத் தொடர் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொடரின் புதிய எபிஸோடுகளை, விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்