திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், காரத்தொழுவு கிராமத்தில் ஊர் பொதுச்சாவடி முன்பாக அஇஅதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 108 ஆவது பிறந்தநாள் மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை உடற்கல்வி ஆசியர்கள் கார்த்திக், அழகேசன், மணிகண்டன், ரத்தினமூர்த்தி, வெங்கடேஷ் ஆகியோர் நடத்தினர். முன்னதாக காலை 9 மணியளவில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக சார்பு அணி மாவட்ட செயலாளர் சேம்பர் கண்ணன் ( எ ) கோபாலகிருஷ்ணன் துவங்கி வைத்தார். மடத்துக்குளம் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் மகாலட்சுமி பெரியசாமி மற்றும் அக்கட்சியின் கிளைக்கழக செயலாளர்களான J.செந்தில் ( எ ) பொன்னுச்சாமி , A.ராசலிங்கம், A.கோவிந்தராஜ் , K.கிருஷ்ணன், K.K.நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாலை வரை நடைபெற்ற போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் , மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சி.மகேந்திரன் பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட சுமார் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் காளீஸ்வரன், மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய கழக துணை செயலாளர் சரவணன் மற்றும் கட்சியின் தொண்டர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
