0 1 min 2 mths

இராமநாதபுரத்தில் சட்டமன்ற தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியை மெரா யுவா பாரத் (MY Bharat), நேரு யுவா கேந்திரா (NYK), இராமநாதபுரம் மற்றும் இளையோர் மன்றங்கள் இணைந்து Block Level Sports Meet 2025– ஐ, இராமநாதபுரம் SDAT மைதானத்தில் சிறப்பாக நடத்தியது.

இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக சு. சுபாஷ் சீனிவாசன் ( சிறப்பு சார்பு ஆய்வாளர், பொருளாதார குற்றப்பிரிவு, இராமநாதபுரம் ) கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினார். மேலும் மாவட்ட இளையோர் அலுவலர் சம்யாக் மேஷ்ராம் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கினார்.

ஆண்கள் பிரிவில் வாலிபால், 400 மீட்டர் ஓட்டம், சிலம்பம் மற்றும் பெண்கள் பிரிவில் டக் ஆப் வார், 200 மீட்டர் ஓட்டம், சிலம்பம் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வை NYV ஒருங்கிணைப்பாளர் ஆயிஷா பர்வீன், வினிதா, பால் பாண்டியன், பானு பிரியா, மற்றும் ராதிகா இணைந்து வெற்றிகரமாக நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *