ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’. இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும், ஆராதியா நாயகியாகவும் நடிக்க, சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு, செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய், சாய்தீனா, மீசை […]
சினிமாதர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்.தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில், விஜித் கதாநாயகனாகவும், கண்மணி […]
சினிமாசச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில், மாறுபட்ட கதைக்களத்தில், அட்டகாசமான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “அகமொழி விழிகள்”. வரும் மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை […]
சினிமாஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் “கடைசி உலகப்போர்”. மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம். ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, […]
சினிமாஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் “கடைசி உலகப்போர்”. மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம். ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில், இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது.. என்னோட மகள் கல்லூரியில், புதிதாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறார், அதை என் மனைவி வீடியோ எடுத்து அனுப்பி வைத்தார். அதைப்பார்த்த போது, எனக்குக் கண்ணீர் வந்தது. அதே போல் தான் என் தம்பிகளைப் பார்க்கும்போதும் வருகிறது. என்னிடம் வெறும் தன்னம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு வந்து, இன்று தயாரிப்பு நிறுவனம் வரை வளர்ந்து வந்திருப்பது மகிழ்ச்சி. ஆதியை மட்டும் தான் நான் அறிமுகப்படுத்தினேன், ஆனால் அவர் பல பேரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் படத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை எனக்குத் தருமளவு, என் மீது அவர்கள் வைத்துள்ள மரியாதைக்கு நன்றி. இன்னும் மென்மேலும் வளர என் வாழ்த்துகள் என்றார்.
நடிகர் நட்டி (எ) நட்ராஜ் பேசியதாவது.. இந்தப்படத்தில் என் பெயரிலேயே நடித்திருக்கிறேன். நானும் சுந்தர் சி குடும்பத்திலிருந்து வந்தவன் தான். ஹிப் ஹாப் ஆதியைப் பார்த்து மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்படத்தின் கதையைக் கேட்டுப் பிரமித்துவிட்டேன், இந்த வயதில், இப்படி ஒரு கதை எழுதி, எடுப்பது சாதாரணமல்ல, படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் என்றார்.
நடிகர் தலைவாசல் விஜய் பேசியதாவது.. மூன்று நாள் தான் நடித்தேன். இந்தப்படத்தின் டிரெய்லர் பார்க்கும் போது, பிரமிப்பாக இருக்கிறது. இந்த டீம் அத்தனை தெளிவாக இருக்கிறார்கள். இந்தப்படம் பார்க்கும் போது நம் பார்லிமெண்ட் ஞாபகம் வரும். படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர், நடிகர் அழகம் பெருமாள் பேசியதாவது.. புதுப்பேட்டைக்குப் பிறகு எனக்கு அமைந்த மிகச்சிறந்த படமென இதைச் சொல்வேன். எல்லோருமே புதுப்பேட்டை மாதிரி ஒரு படம் வரவில்லையே எனக்கேட்பார்கள், அவர்களுக்கான பதில் தான் இந்தப்படம். புலிப்பாண்டி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளேன். புதுப்பேட்டையிலிருந்து, மாறுபட்ட வித்தியாசமான அரசியல்வாதியாக இருக்கும். இந்த மாதிரி படம் தமிழ் சினிமாவில் வந்ததே இல்லை. நிச்சயம் ஒரு கல்ட் சினிமாவாக இப்படம் இருக்கும். ஆதியைப் பார்த்துப் பிரமிப்பு வருகிறது. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவரது அண்ணனாக என்னையும் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி. இந்தக்குழு அத்தனை நுணுக்கமாக அயராத உழைப்பைத் தந்துள்ளனர். என் உடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் சிங்கம்புலி பேசியதாவது…
ஹிப் ஹாப் ஆதியை முதன் முதலில் சுந்தர் சி யுடன் தான் பார்த்தேன், உங்களை மிகவும் பிடிக்கும், என் முதல் படத்திலிருந்து உங்களை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டுமென ஆசைப்பட்டேன் என்றார். இந்தப்படத்தில் நீங்கள் இருக்க வேண்டும் என்றார். இந்தப்படத்தில் நடிக்கும் போது அத்தனை அக்கறையாகப் பார்த்துக்கொண்டார். ஒரு கமர்ஷியல் படத்தை எடுப்பதை விட்டுவிட்டு, கடைசி உலகப்போர் என ஒரு அழுத்தமான படத்தை எடுக்கும் அவரது மனதுக்கு வாழ்த்துகள். பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடக்கும் போது, ஆதிக்கு அம்மை வந்துவிட்டது ஆனாலும் ஷூட்டிங் வர்றேன் என்றார். ஆனால் நான் தான் அவரை சமாதானப்படுத்தி ஓய்வெடுக்க வைத்தேன். அவரது அர்ப்பணிப்பிற்கும் உழைப்பிற்கும் வாழ்த்துகள் என்றார்.
நடிகர் ஹரீஷ் உத்தமன் பேசியதாவது.. ஹிப்ஹாப் ஆதி சினிமாவுக்கு வந்ததிலிருந்து, அவர் செய்த ஒவ்வொரு விசயத்திலும், ஏதாவது ஒரு நல்ல விசயத்தை சொல்லுணும் என்று தான் செய்வார். இந்தப்படத்தில் நடிக்கும் முன், இப்படத்தில் ஃப்ரீ விஷுவல் காட்டினார், அதுவே எனக்குப் பிரமிப்பைத் தந்தது. அவர் எப்படி தான் இவ்வளவு வேலை செய்கிறார் எனத் தெரியவில்லை, இந்தப்படத்தில் பிரக்யோக் சிங் எனும் கேரக்டர் செய்துள்ளேன், தனி ஒருவனுக்குப் பிறகு மீண்டும் ஒரு சிங் கேரக்டர், பிஸிகலாக சவாலான கேரக்டர், உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். இன்று ஹிப் ஹாப் தமிழா ஒரு பிராண்ட் என்பதை விட, ஒரு மூவ்மெண்ட் என்பதாகத் தான் பார்க்கிறேன். இளைஞர்கள் அவரை பின் தொடர்கிறார்கள். ஜீவாவும் ஆதியும் எனக்கும் பலருக்கும் இன்ஸ்பிரேஷன் என்றார்.
நடிகர், நடன இயக்குனர் கல்யாண் பேசியதாவது.. நான் நடித்து பல வருடமாகிவிட்டது. ஆதி சொன்ன பிறகு, இந்தப்படத்தில் நடித்தேன். இவ்வளவு சின்ன வயதில் மிக மெச்சூர்டாக படம் செய்வது, மிகப்பெரிய விசயம். மொத்த டீமும் அவ்வளவு சிரத்தையாக அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். இந்தப்படத்தில் நட்டியிடன் ஒரு நல்ல பாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள் என்றார்.
நடிகர் குமரவேல் பேசியதாவது..,
மீசைய முறுக்கு படத்திற்குப் பிறகு மீண்டும் ஹிப்ஹாப் ஆதியுடன் நடித்திருக்கிறேன். மகிழ்ச்சி. சுந்தர் சி இரண்டு நல்ல மனமுள்ள இளைஞர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப்படத்தில் அவரது மொத்த டீமும் அற்புதமாக உழைத்துள்ளார்கள் என்றார்.
நடிகர் இளங்கோ குமரன் பேசியதாவது.., 20 வயது ஆட்களை மட்டுமல்ல, 60 வயதில் என்னையும் அறிமுகப்படுத்தியது ஆதி தான். எனக்கு நடிப்பு தெரியாது, ஆனால் என்னை நடிகனாக்கியது அவர்தான். என்னை மிக மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார். சிவகுமாரின் சபதம் படத்தில் என்னை முழு நேரப் பாத்திரத்தில் நடிக்க வைத்தார். இந்தப்படத்தில் மீண்டும் ஒரு நல்ல பாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். அவர் பயணத்தில் தொடர்ந்து நாங்களும் இருப்போம் என்றார்.
நடிகர் சாரா பேசியதாவது.. கடைசி உலகப் போர். ஆதி ப்ரோ இயக்கி நான் ஹீரோவாக நடிச்சிருக்க படம், நான் இங்கு நிற்க காரணம் மூன்று பேர். என்னை அறிமுகப்படுத்திய லோகேஷ் கனகராஜ், என்னை உலகம் அறிய வைத்த ஆதி, என்னை பயன்படுத்தச் சொன்ன சுந்தர் சி மூவருக்கும் நன்றி. ஆதியுடன் வேலை பார்ப்பது அவ்வளவு எளிதாக இருக்கும், மிக ஃபிரண்ட்லியாக இருப்பார். சித்தர் ஜீவா ஆசையே இல்லாத மனிதனாக என்னைப் பிரமிக்க வைக்கிறார். எனக்கு இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்றார்.
நடிகை அனகா பேசியதாவது.. ஆதியுடன் இரண்டாவது படம், கதையே மிக வித்தியாசமாக இருந்தது, நடிக்கக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது, ஆதி தைரியம் தந்தார். மிக அழுத்தமான படம். மிகப்பெரிய நடிகர்கள் நடித்துள்ளார்கள், ஆதி மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார். நான் இதுவரை செய்யாத மிக வித்தியாசமான ரோல், படக்குழுவினரின் ஒத்துழைப்பில் ரொம்ப ஈஸியாக நடித்தேன். ஜீவா முதல் படக்குழு அனைவருக்கும் நன்றிகள். இந்தப்படம் மிக மிக வித்தியாசமான படமாக இருக்கும் என்றார்.
ஒளிப்பதிவாளர் அர்ஜூன்ராஜா பேசியதாவது.. இந்தக்கதை சொல்லும் போதே வித்தியாசமாக இருந்தது. புதிதாக ஒரு விசயத்தை முயற்சி செய்துள்ளோம். இப்போது நீங்கள் பார்க்கும் தியேட்டரில் ஸ்கோப் வரும், மிகப் புதுமையான அனுபவமாக இருக்கும். படம் நன்றாக வந்துள்ளது என்றார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி பேசியதாவது.. என்னை அறிமுகம் செய்த சுந்தர் சி இங்கு வந்து எங்களை வாழ்த்தியது மகிழ்ச்சி. நட்டிக்கு இப்படத்தில் மிக முக்கியமான ரோல், மிக சூப்பராக நடித்திருக்கிறார். சிங்கம் புலியும் சிறப்பாக நடித்துள்ளார். சாரா, அனகா, அழகம்பெருமாள் என நிறையப் பேர் நடித்துள்ளார்கள். விஜயன் எனும் ஒரு துணை நடிகரை வில்லனாக நடிக்க வைத்துள்ளோம். அவர் கண்டிப்பாகப் பெரிய நடிகராக வருவார். இந்தப்படம் மற்ற படங்களிலிருந்து புதிதாக இருக்கும். இப்படி ஒரு படத்தை எடுக்க மிக முக்கிய காரணம் தொழில்நுட்ப கலைஞர்கள் தான், அர்ஜூன் மிக அட்டகாசமான விஷுவலை தந்துள்ளார். ஏகப்பட்ட செட் ஒர்க், வார் சீக்வன்ஸ் செய்துள்ளோம். நாகு அட்டகாசமாக வேலை பார்த்துள்ளார். எடிட்டர் பிரதீப் அற்புதமாக எடிட் செய்துள்ளார். எங்கள் டீம் தான் மொத்த வேலையும் செய்துள்ளோம். ஜீவா தான் விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்துள்ளார். தயாரித்த அனுபவமே புதிது தான். ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே ! எனும் சித்தர் வாக்கு தான் இந்தப்படத்தின் அடிப்படை, நாம் சண்டையிட்டுக்கொண்டால் உலகம் அழிந்து போய் விடும் என்பது தான் இப்படம். ரசிகர்களுக்குக் கண்டிப்பாக புதிய அனுபவமாக இருக்கும்.
இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ். ( இ.ஆ.ப ) தலைமையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாலைப்பாதுகாப்பு குறித்து, மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர், சாலை விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் […]
மாவட்ட செய்திகள்மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ். ( இ.ஆ.ப ) தலைமையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாலைப்பாதுகாப்பு குறித்து, மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர், சாலை விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில் இன்றைய தினம், திருப்பூர் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
மேலும், பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, விபத்துக்கான காரணங்களாக இருச்சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர் இருவரும் தலைகவசம் அணியாதது, வாகனம் ஓட்டும் போது அலைபேசியை பயன்படுத்துவது, மோட்டார். கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாதது வலியுறுத்தி சாலைகளின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள் நெடுஞ்சாலைகள் துறையின் சார்பில் வாகன ஓட்டிகள் எளிதில் அறியும் வண்ணம் வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சாலை வளைவுகள். சாலை சந்திப்புகள். குறுகிய சாலைகள். போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்கள் போன்ற பகுதிகளில், அதிக வேகம் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் சாலைகளில் எதிர் திசையில் வாகனத்தை ஓட்டுவதாலும், சாலைகளில் செல்லும் போது உரிய செய்கை இல்லாமல் வாகனத்தை திருப்புவதாலும், சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சமந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்து தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மன அளவிலும், பொருளாதார நிலையிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். திருப்பூர் மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்படவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, “மார்டின்” படத்திலிருந்து, முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. “ஜீவன் நீயே”, எனும் இப்பாடல், மனதை துளைத்து இன்பம் பொங்கச் செய்வதுடன், கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் அசத்துகிறது. ஆக்ரா, ஜோத்பூர், காஷ்மீர் மற்றும் பாதாமி […]
சினிமாஇந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, “மார்டின்” படத்திலிருந்து, முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. “ஜீவன் நீயே”, எனும் இப்பாடல், மனதை துளைத்து இன்பம் பொங்கச் செய்வதுடன், கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் அசத்துகிறது.
ஆக்ரா, ஜோத்பூர், காஷ்மீர் மற்றும் பாதாமி போன்ற இந்தியாவின் மிக மிக முக்கியமான இடங்களில், படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல், சத்யா ஹெக்டேயின் ஒளிப்பதிவில், கண்களுக்கு விருந்தாக உள்ளது. இம்ரான் சர்தாரியாவின் நடன இயக்கத்தில், இந்தப் பாடலில், காதலின் சாரத்தை அழகாகப் படம்பிடித்து காட்டுகிறது.
இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைப்பில், ஐந்து மொழிகளிலும் இசை ரசிகர்களை, மயக்கும்படி இந்தப்பாடல் அமைந்துள்ளது. பாடலாசிரியர் விவேகாவின் அருமையான வரிகள், காதலின் பல கோணங்களை அழகாக எடுத்துக்காட்டுகிறது. ஹரிசரண் மற்றும் ஸ்ருத்திகா ஆகியோரின் அற்புதமான குரல்களில், இப்பாடல் மனதை மயக்குகிறது.
துருவா சர்ஜா நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்டின்’ படம் கன்னட சினிமாவிலிருந்து வெளிவரும் மிகப்பெரிய அதிரடி முயற்சியாக, இந்திய சினிமாவில், ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையிலான படைப்பாக, உருவாகியுள்ளது. இப்படம் உலகம் முழுக்க 13 மொழிகளில் டப் செய்யப்பட்டு, வெளியாக உள்ளது.
வாசவி எண்டர்பிரைசஸ் மற்றும் உதய் கே மேத்தா புரொடக்ஷன் இணைந்து “மார்டின்” படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளர். AP அர்ஜூன் இயக்கியுள்ள இப்படத்திற்கு, ஆக்சன் கிங் அர்ஜூன் சர்ஜா கதை, திரைக்கதை எழுதியுள்ளார். சத்யா ஹெட்ஜ் ஒளிப்பதிவு செய்ய, KGF புகழ் ரவி பஸ்ரூரின் பரபரப்பான பின்னணி இசையுடன், மணி ஷர்மா இசையமைத்துள்ளார். இப்படம் 11 அக்டோபர் 2024 அன்று கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் பிற சர்வதேச மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
வாசவி எண்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜூன் இயக்கத்தில், ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் […]
சினிமாவாசவி எண்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜூன் இயக்கத்தில், ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் மார்டின். இப்படம் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாகப் படக்குழுவினர், தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜூன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா பேசியதாவது…
பிரத்தியேகமாக பாடல்களை முதன் முறையாக திரையிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்க வேண்டுமென, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த நீண்ட பயணத்தில், அர்ஜூன் மிகவும் உறுதுணையாக இருந்தார். துருவா சர்ஜா இப்படத்திற்காக மிக மிகக் கடினமான உழைப்பைத் தந்துள்ளார். இயக்குநர் மிக அற்புதமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றார்.
நடிகர் அர்ஜூன் சர்ஜா பேசியதாவது, என் அன்பான துருவாவை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. இந்தப்படத்தில் எனக்கு ரெண்டு ரோல், துருவாவின் மாமா ஆனால் அவனை நான் என் மகனாகத் தான் நினைக்கிறேன். இன்னொன்று திரைக்கதை எழுத்தாளர். துருவாவின் ஐந்தாவது படம் இது. ஒவ்வொரு படமும் பெரிய பிளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது. அவனுக்கென பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவனுக்கு என்ன மாதிரி கதை எழுத வேண்டுமென, நிறைய யோசித்து இந்தக்கதையை எழுதியிருக்கிறேன். உண்மையில் தயாரிப்பாளர் தான் ஹீரோ, இந்தப்படத்திற்கு அப்படி செலவு செய்துள்ளார். 100 கோடிக்கு மேல் செலவு செய்து, ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தர பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். நடிகை வைபவிக்கு என் வாழ்த்துகள். 13 மொழிகளில் இப்படம் டப்பாகி ரெடியாகி இருக்கிறது. உலகம் முழுக்க யார் பார்த்தாலும், இந்தப் படம் பிடிக்கும். ஆக்சன் எமோஷன் என எல்லாம் இருக்கிறது. வித்தியாசமான திரைக்கதை. நிறைய ஃபாரின் ஆர்டிஸ்ட் நடித்துள்ளார்கள், துருவாவிற்கு இந்தப்படம் பெரிய பிளாக்பஸ்டர் ஆக இருக்கும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், நன்றி என்றார்.
சரிகம நிறுவனம் சார்பில் ஆனந்த் பேசியதாவது.. அர்ஜூன் சொன்னது மாதிரி, உலகம் முழுக்க ரசிக்கும்படியான படம் இது. எல்லோருக்கும் பிடிக்கும். 3 ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது. கண்டிப்பாக எல்லா மொழிகளிலும் ஹிட்டடிக்கும், பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கிய உதய் மேத்தாவுக்கு நன்றி. துருவா இப்படத்தை பிரபலப்படுத்த முழுமையாகக் களமிறங்கியுள்ளார். கதை எழுதியுள்ள அர்ஜூன் அசத்தியுள்ளார். ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இப்படம் இருக்கும்.
நடிகை வைபவி பேசியதாவது…
இது எனக்கு மிகவும் சிறப்பான நாள், இந்தப்படத்தில் வேலை பார்த்தது அற்புதமான அனுபவம், மிக சிறப்பான படமாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் என்றார்.
நடிகர் துருவா சர்ஜா பேசியதாவது, தமிழில் எனக்கு ரெண்டாவது படம், செம்ம திமிரு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. என் காட்ஃபாதர், எனக்காக எல்லாம் செய்யும் அர்ஜூனுக்கு நன்றிகள். இந்தப்படத்தை முழுமையான ஆக்சன் படமாக, புதிய தளத்தில் இருக்கும்படியான, படைப்பாக எடுத்துள்ளோம். அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் என்றார்.
பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம், அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் 13 மொழிகளில், வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்தின் முன்னெடுப்பில் அஸ்மிதா கேலோ இந்திய மகளிர் லீக் சைக்கிளிங் நிகழ்வு (தெற்கு மண்டலம்) ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1, 2024 ஆகிய தேதிகளில் திருப்போரூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியை இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை இயக்குனர் […]
சென்னைதமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்தின் முன்னெடுப்பில் அஸ்மிதா கேலோ இந்திய மகளிர் லீக் சைக்கிளிங் நிகழ்வு (தெற்கு மண்டலம்) ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1, 2024 ஆகிய தேதிகளில் திருப்போரூரில் நடைபெற்றது.
இந்தப் போட்டியை இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை இயக்குனர் திருமதி. ஸ்வேதா விஸ்வநாத், சோழிங்கநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு. அரவிந்த் ரமேஷ், SDAT இன் முன்னாள் பொது மேலாளர் ரெஜின, திருப்போரூர் காவல் ஆய்வாளர் சரவணன் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத் தலைவர் M சுதாகர், செயலாளர் விக்னேஷ் குமார், பொருளாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் மூன்று வெவ்வேறு போட்டிப் பிரிவுகள் உள்ளன:
1. மகளிர் எலைட் 36 kms
2. இளம்பெண்கள் ஜூனியர் (18 வயதுக்குட்பட்டோர்) 30 kms
3. துணை ஜூனியர் & இளம்பெண்கள் (16 வயதுக்குட்பட்டோர்) 18 kms
இந்த பிராந்திய போட்டியில் தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த திறமையான பெண் சைக்கிள் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு வயது மற்றும் திறன் பிரிவுகளில் உள்ள பெண் சைக்கிள் வீராங்கனைகளின் திறமைகளையும், உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தும் தளமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு போட்டி ரீதியிலான சைக்கிள் ஓட்டுதலை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், விளையாட்டுத் துறையில் பெண்களின் பங்கேற்பையும் ஊக்குவித்து, பங்கேற்பாளர்களிடையே விளையாட்டு உணர்வையும், நட்புணர்வையும் வளர்க்கும் வகையில் நடத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு சைக்கிளிங் விளையாட்டிற்கு பெரும் ஆதரவு அளித்து வருகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். பல்வேறு முன்முயற்சிகள் மூலமாகவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Sports development authority of Tamilnadu ஆதரவுடனும், தமிழக அரசு சைக்கிளிங் விளையாட்டை குறிப்பிடத்தக்க அளவில் ஊக்குவித்துள்ளது. இந்த முயற்சிகள் சைக்கிளிங் மூலம் விளையாட்டுத் திறமையை வளர்ப்பதிலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதிலும் தமிழக அரசின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றன.
உடற் தகுதியை நேர்த்தியாக பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அறியப்படும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது அவர் நடித்து வரும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும், தற்காப்பு கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்பு கலைக்கான ( மிக்ஸ்ட் மார்சியல் ஆர்ட்ஸ்) பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு […]
சினிமாஉடற் தகுதியை நேர்த்தியாக பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அறியப்படும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது அவர் நடித்து வரும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும், தற்காப்பு கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்பு கலைக்கான ( மிக்ஸ்ட் மார்சியல் ஆர்ட்ஸ்) பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது இந்த முயற்சி, அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. மேலும் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் தருணத்திலும் தன்னுடைய உடற்பயிற்சி முறையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இருப்பதையும் காண முடிகிறது.
சமீபத்தில் நடிகை சுருதிஹாசன் தன்னுடைய சமூக ஊடகத்தில், தான் பயிற்சி பெற்று வரும் தற்காப்பு கலை தொடர்பான திறன்களை வெளிப்படுத்தும் காணொளியை பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடும்போது, எனது தந்தையும், பழம்பெரும் நடிகருமான கமல்ஹாசன் ‘தேவர் மகன்’ படத்தில் நிகழ்த்திய அதே தற்காப்பு கலையைத் தான் பயிற்சி செய்து வருகிறேன் என தெரிவித்திருக்கிறார்.
சென்னையின் முன்னணி சைவ கான்டினென்டல் பார்பிக்யூவான கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ, தி. நகரில் அதன் இரண்டாவது கிளையை திறந்துள்ளது. சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ரெஸ்ட்டாரண்டைத் திறந்து வைத்தார். இவருடன் ஏ. ராமதாஸ் […]
சென்னைசென்னையின் முன்னணி சைவ கான்டினென்டல் பார்பிக்யூவான கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ, தி. நகரில் அதன் இரண்டாவது கிளையை திறந்துள்ளது. சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ரெஸ்ட்டாரண்டைத் திறந்து வைத்தார்.
இவருடன் ஏ. ராமதாஸ் ராவ் (சென்னை ஹோட்டல் சங்கத்தின் கௌரவத் தலைவர்), ஏ.எம். விக்ரம ராஜா (தமிழ்நாடு வணிகர் சங்க மாநிலத் தலைவர்), டாக்டர்.எழிலன் எம்.எல்.ஏ, ஏ.எம்.வி பிரபாகர ராஜா எம்.எல்.ஏ., கருணாநிதி எம்.எல்.ஏ., வெங்கடேஷ் பட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர். மேலும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
2019ஆம் ஆண்டில் இதன் முதல் கிளை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திறக்கப்பட்டதிலிருந்து பார்பிக்யூ பிரியர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுத்து வருகிறது. செயற்கை உணவூட்டிகளோ நிறமூட்டிகளோ எதுவும் இல்லாமல் இயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்ட பொருட்களையே கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ பயன்படுத்துகிறது. இதன் தரம், அர்ப்பணிப்பு, வாடிக்கையாளர்கள் சேவை போன்றவையே கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் வெற்றி ரகசியம்.
இதன் முதல் கிளையை போலவே மேம்படுத்தப்பட்ட டைனிங் அனுபவத்தை தி.நகர் கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ வாடிக்கையாளர்களுக்குத் தர இருக்கிறது. இந்த புதிய கிளையில் உள்ள பஃபேயில் சூப், ஸ்டார்டர், சாலட், கபாப், இனிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களுக்கு இதன் இரண்டாவது கிளை திறப்பு என்பது கொண்டாட்டம் ஆகும்.
ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் […]
சினிமாஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras).
இப்படம் ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியுள்ளது. கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் பிஜிஎஸ் பேசுகையில், இந்தப் படத்தின் கதை தொடங்கி, திரைக்கதையாக ஒன்றரை ஆண்டுகள் ஆனது, இப்படம் ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த புதுமையான அனுபவமாக இருந்தது, அது போக படத்தில் அனைத்து கதாபாத்திரங்களிலும் பெரிய நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒப்புகொண்டு நடித்த அனைவருக்கும் நன்றி. இயக்குனர் பிரசாத் என்னிடம் சொன்ன கதையை அப்படியே அற்புதமக எடுத்துவிட்டார், படம் அருமையாக வந்துள்ளது. பரத்திற்கு மிகவும் நன்றி, எங்களது கதையை நம்பி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அனைவரும் கதையை கேட்டதும் சரி என சொன்னது எங்களுக்கு மேலும் ஒரு நம்பிக்கையை தந்தது. ஒட்டு மொத்த குழுவிற்கும் நன்றி. அனைவரும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். அதற்கு பெரிய நன்றி என்றார்.
இணை தயாரிப்பாளர் ஹாரூன் பேசியதாவது, இந்தப் படத்தில் நான் இணைய காரணம் அருண் தான், இந்தப் படத்தில் ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது, இந்தக் கதையை இயக்குநர் மிக அழகாக சொன்னார், அதை விட இயக்குநர் படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார். இந்தப் படம் இந்த தலை முறை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தயாரிப்பாளர் பெரிய உதவியாக இருந்தார். படம் நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
ஒளிப்பதிவாளர் கண்ணன் பேசியதாவது, இந்தப் படம் எனக்கு கிடைக்க காரணம் ஹாரூன் தான், அதிகமாக தயாரிப்பாளரை பாடு படுத்தியுள்ளேன், நடிகர்கள் அனைவரும் என்னுடைய வேலையை நம்பி நடித்தனர். படம் நன்றாக வந்துள்ளது. பரத் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், பட்டியல் படம் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். அதே போல, இந்தப் படமும் அவருக்கு ஒரு பெரிய படமாக இருக்கும். நானும் இயக்குநரும் அதிக சண்டை போட்டுள்ளோம் எல்லாமே படத்திற்காக தான், படம் சிறப்பாக வந்துள்ளது, அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.
நடிகை மிருதலா சுரேஷ் பேசியதாவது, எனக்கு இதுதான் முதல் படம், எனக்கு இந்தப் படம் கிடைத்தது வரம், பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தில் நானும் நடித்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இயக்குநர் எனக்கு இது முதல் படம் என தெரிந்து கொண்டு பொறுமையாக சொல்லித்தந்து இந்தப் படத்தில் என்னை நடிக்க வைத்தார் என்றார்.
நடிகை சினிசிவராஜ் பேசியதாவது.., எனக்கு கொஞ்சம் புது அனுபவமாக இருந்தது, முதல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன், பரத்துக்கு மிகவும் நன்றி, எனக்கு பெரிதும் உதவியாக இருந்தார். இயக்குநர் எனக்கு ஒரு கைடாக இருந்தார், பொறுமையாக இருந்து என்னிடம் வேலை வாங்கினர், இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. அதற்கு ஒட்டு மொத்த குழுவிற்கும் நன்றி என்றார்.
இசையமைப்பாளர் ஜோஷ் பிராங்க்ளின் பேசியதாவது.., தயாரிப்பாளர் ஆனந்த்துக்கு மிகவும் நன்றி, என்னை அவர்தான் தேர்வு செய்தார். இது போன்ற ஒரு சஸ்பென்ஸ் படத்திற்கு நான் இசை அமைத்ததில்லை, இந்தப் படத்தில் 3 பாடல்கள் இசையமைத்துள்ளேன், அதற்கு ஜெகன் தான் வரிகள் எழுதினார் அவருக்கு மிகவும் நன்றி. படம் சிறப்பாக வந்துள்ளது, மொத்த குழுவிற்கும் நன்றி என்றார்.
தயாரிப்பாளர் கேப்டன் எம்.பி. ஆனந்த் பேசியதாவது… இப்படத்தின் உருவாக்கத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் செய்து கொடுத்துள்ளோம். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படம் எல்லோரையும் மகிழ்விக்கும் படமாக இருக்கும் என்றார்.
நடிகை பவித்ரா லக்ஷ்மி பேசியதாவது, இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்த அனைத்து தயாரிப்பாளருக்கும் நன்றி, இந்தப் படத்தின் கதை தாண்டி, படத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதை கிடைத்தது. ஒரு பெரிய நடிகருக்கு கொடுத்த அதே மரியாதையை அனைத்து நடிகரிடமும் காட்டினார்கள். இயக்குநருக்கு வாழ்த்துகள், இந்தப் படத்தில் பெரிய நடிகர்களுடன் நடித்தது நல்ல அனுபவம். பெரிய பயிற்சி கிடைத்தது, ஒட்டு மொத்த குழுவிற்கும் நன்றி, பரத்துக்கும் அபிராமிக்கும் நன்றி என்றார்.
நடிகர் ஷான் பேசியதாவது, இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் எனக்கு பெரிய உறுதுணையாக இருந்தனர். பரத் மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் பெரிய நன்றி. இந்தப் படத்தில் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன், எனக்கு அது ஒரு பாக்கியம் என்றார்.
பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் பேசியதாவது.., இந்தப் படம் நடுநிலையை பற்றி பேசியுள்ளது, இயக்குநர் கதையை சொன்னதும், இது தான் எனக்கு தோன்றியது. அருணுக்கு நன்றி இந்தப் படம் உருவாக முக்கிய காரணம், அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர், என் தம்பி ஜோஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார், இரண்டு பாடல்கள் நான் எழுதியுள்ளேன், பாட்டு அருமையாக வந்துள்ளது. படம் சிறந்த படைப்பாக வந்துள்ளது என்றார்.
இயக்குநர் பிரசாத் முருகன் பேசியதாவது, முதலில் இந்தக் கதையை கேட்டதும் அதற்கு ஆதரவு கொடுத்தது ஆனந்த், அன்றிலிருந்து இன்று வரை என் மீது நம்பிக்கை வைத்தார்கள். பரத், அபிராமி என அனைவரும் பெரிய நடிகர்கள், என்னுடைய கதையை நம்பி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தப் படம் ஒரு புது அனுபவமாக இருக்கும், ஒரு ஹைப்பர் லிங்க், நான்லீனியர் படம் சுவாரஸ்யமான படமாக இருக்கும் என்றார்.
நடிகை அபிராமி பேசியதாவது..
எங்கள் படக்குழு அனைவருக்கும் பெரிய வாழ்த்துகள், இப்போது தான் நான் இந்தப் படத்தை பார்த்து விட்டு வந்தேன், எங்கள் குழு மீது எனக்கு பெரிய நம்பிக்கை வந்துள்ளது. ஒரு சில படங்கள் தான், ஒரு பெரிய ஈடுபாட்டுடன் நம்மளை பயணிக்க வைக்கும், அது போன்ற படம் தான் இது. இயக்குநர் என்னிடம் கதையை சொல்லும்போது மொத்த ஸ்கிரிப்ட்டையும் கொடுத்தார், மிகவும் தெளிவாக இருந்தார், இந்தப் படத்தில் பல உணர்வுகளை மிக அழகாக கடத்தியுள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது, எனக்கு மட்டுமல்ல மொத்த குழுவுக்கும், இது ஒரு முக்கிய படமாக அமையும் நன்றி என்றார்.
நடிகர் பரத் பேசியதாவது.., எனக்கு மிச்சம் வைக்காமல், அனைவரும் அனைத்தையும் பேசிவிட்டனர், என்ன பேசுவது என்று தெரியவில்லை, இந்தப் படத்தில் நான் கதையின் நாயகனாக நடித்துள்ளேன், கடந்த ஐந்து ஆறு வருடங்களில், தமிழ் சினிமா வேறொரு இடத்திற்கு சென்று விட்டது. அதே போல தான் இந்தப் படமும் இருக்கும். எனக்கு இது ஒரு புதுமையான கதாபாத்திரம், நான் மொத்த கதையையும் கேட்கவில்லை, அவர் சொன்ன சிறு நேரத்திலே, எனக்கு அவர் மீது நம்பிக்கை வந்தது. அதை நம்பித்தான் இந்த படத்தில் நடித்தேன். அதை சரியாக செய்தும் காட்டி விட்டார். படம் பார்த்தேன் நன்றாக வந்துள்ளது. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர், முழு ஈடுபாட்டைக் கொடுத்து இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இசை மற்றும் ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது, படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள், கண்டிப்பாக ஒரு வெற்றி கிடைக்கும். இப்படம் ரசிகர்களை கண்டிப்பாக சுவாரசியப்படுத்தும் என்றார்.
இப்பபடத்தில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் கன்னிகா, தலைவாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் என்றாலே மலை குன்றுகள் நிறைந்து காணப்படும் இடமாகும். இம்மாவட்டத்தில் ஆன்மிக தலங்கள், சுற்றுலா தலங்கள் என பல சிறப்பு வாய்ந்த அழகான இடங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகே ஒட்டங்கரடு […]
தமிழகம்திண்டுக்கல் மாவட்டம் என்றாலே மலை குன்றுகள் நிறைந்து காணப்படும் இடமாகும். இம்மாவட்டத்தில் ஆன்மிக தலங்கள், சுற்றுலா தலங்கள் என பல சிறப்பு வாய்ந்த அழகான இடங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகே ஒட்டங்கரடு என்ற மலை குன்று உள்ளது.
ஒட்டன்சத்திரம் தாலுக்காவிற்கு உட்பட்ட பெரிய கரட்டுப்பட்டி , சின்ன கரட்டுப்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களுக்கு நடுவில் உள்ள பல மலை குன்றுகளில் ஒட்டங்கரடு மலை குன்றும் ஒன்று.
கடந்த சில மாதங்களாக இந்த மலையின் பாறைகளை உடைத்து மலையின் அடிவாரத்தில் கிரஷர் மெஷின்கள் மூலமாக M SAND மணல், சிறிய வகையிலான கற்கள் என தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
மலையை உடைத்து வியாபார நோக்கத்துடன் செயல்பட்டு வரும் மர்ம கும்பல் யார் என அந்த பகுதியில் உள்ள சிலரிடம் விசாரணை செய்ததில்,
மலையிலுள்ள பாறைகளை உடைத்து விற்பனை செய்வது யார் என தெரியவில்லை. பல மாதங்களாகவே இந்த மாதிரியான வேலைகள் தான் இங்கே நடந்து வருகிறது. எந்த அதிகாரியும் இதுவரை இந்த பகுதிக்கு வந்து பார்வையிடவில்லை. ஒட்டங்கரடு மலையை சுற்றியுள்ள பல மலைகளுக்கு, இந்த மலை தான் பெரிய மலை, ஆனால் இந்த மலையை குடைந்து எடுக்கின்றனர். பகல் நேரத்தில் பாறைகளை குடைந்து எடுப்பதால் விவசாயம் செய்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஆடு மாடு மேய்க்கவும் பெரும் சிரமமாக உள்ளது.
இதேபோல் மலைகளை உடைத்து எடுப்பதால் பிற்காலத்துல பெரிய ஆபத்து ஏற்படும். அரசியல்வாதிகள் வியாபாரத்துக்காக இதுபோன்ற வேலைகளை சாதாரணமாக செய்து விட்டு போய் விடுகின்றனர். பிறகு பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற கனிம வளங்களை கொள்ளை அடிக்கும் செயல்களை அதிகாரிகள் அனுமதிக்க கூடாது, அமைச்சரின் சொந்த தொகுதியில் கனிம வளம் திருடப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.
டெண்டர்கள் மூலமாக பாறைகளை உடைக்க அனுமதி பெற்று, பெரும் மலைகளை உடைத்து கனிம வளங்களை முழுமையாக அழித்து வரும் கொள்ளையர்கள் மீது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தற்போதைய நிலைமை அனைத்து மாவட்டங்களிலும் கனிம வளங்களை சூரையாடுவதில் முக்கிய பங்கு வகித்துவரும் அரசியல் பிரமுகர்கள், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை குறிவைத்து கனிம வளங்களை சுரண்டிச் செல்லும் நபர்கள் மீது உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.-சாதிக்பாட்ஷா.
-சாதிக்பாட்ஷா.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதிக்குட்பட்ட பந்தலூர் தாலுக்கா, சேரம்பாடி பஜாரில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. ( கடை எண் : 8225 ) இந்த டாஸ்மாக் கடை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் செயல்பட்டு வந்தபோது, பொதுமக்களுக்கு […]
தமிழகம்நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதிக்குட்பட்ட பந்தலூர் தாலுக்கா, சேரம்பாடி பஜாரில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. ( கடை எண் : 8225 ) இந்த டாஸ்மாக் கடை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் செயல்பட்டு வந்தபோது, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த காரணத்தால் கோரஞ்சால் பகுதிக்கு மாற்றம் செய்தனர்.
இந்நிலையில் கடந்த 16.08.2024 அன்று மீண்டும் சேரம்பாடி பஜாரில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடை இருக்கும் இடத்திற்கு அருகில் அரசு பள்ளிகள் , தனியார் மருத்துவமனைகள் , தனியார் பள்ளிகள், அனைத்து மதத்தினரும் வழிபடும் வழிபாட்டு தலங்கள் என அனைத்தும் இயங்கி வருகிறது. குறிப்பாக டாஸ்மாக் கடை இருக்கும் இடத்தில் கடையின் இருபுறங்களிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தனியார் மருத்துவமனை செயல்படுகிறது.
பஜார் பகுதி என்பதால் பொதுமக்கள் பலரும் பொருட்களை வாங்குவதற்காக அந்த பகுதியை அதிகமாக பயன்படுத்துவது உண்டு, மது பிரியர்கள் பகல் நேரத்தில் குடித்து விட்டு பல அட்டகாசங்களை செய்து வருவதாக பலர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர்கள் , சிகிச்சைக்காக வரும் பெண்கள் என பலர் இந்த இடத்தை கடக்க பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள் இருக்கும் காரணத்தால்தான் பொதுமக்கள் நலன் கருதி இந்த டாஸ்மாக் கடை மாற்றம் செய்யப்பட்டது.
இந்த பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வந்தது , அப்படி ஒருநாள் இந்த வழியாக வந்த யானை, மது குடித்துக் கொண்டிருந்த இருவரை தாக்கியது , யானை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். அந்த சம்பவத்திற்கு பிறகு டாஸ்மாக் கடை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்தனர். மேலும் மது குடித்து விட்டு போதையில் அவ்வப்போது தகராறு செய்வதால் வாகன ஓட்டிகள் முதல் நடந்து செல்பவர்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த பிரச்சனை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சம்பந்தப்பட்ட கூடலூர் அதிமுக எம்.எல்.ஏ பொன். ஜெயசீலனும் இதனை கண்டுகொள்ளவில்லை. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத, இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதில் அரசுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்பதே தெரியவில்லை.
டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட இடத்தை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைவருடைய பாதுகாப்பு நலன் கருதி கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது.