ஆரஞ்ச் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ் தயாரிப்பில், ஶ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில், பிஜேஷ் நாகேஷ், அக்ஷயா, தீபா சங்கர், நாஞ்சில் விஜயன், பேபி வர்ஷா, ஆதேஷ் பாலா, ஜூனியர் டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “வானரன்”. […]
விமர்சனம்
அட்லெர் எண்டர்டெயின்மெண்ட் ( Adler Entertainment ) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் S ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”. வரும் ஆகஸ்ட் […]
சினிமா
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு […]
சினிமா
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தண்டேல்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு […]
சினிமாதெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தண்டேல்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரகாஷ் பெலவாடி, கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரிலான இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இதனை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசுகையில், தண்டேல் என்றால் என்ன? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்திருக்கும். இந்திய சினிமாவில் தற்போது அனைவரும் மொழி என்ற எல்லையை கடந்து வந்து கொண்டிருக்கிறோம். தற்போது வெளியாகும் படத்தின் டைட்டில்கள் அனைவரையும் கவர்வது போல் இருக்கும். ‘பாகுபலி’க்கு பிறகு இதற்கு நாம் பழகிவிட்டோம். பாகுபலி என்றால் என்ன? என்று இதுவரை யாரும் கேள்வி எழுப்பியதில்லை. அதேபோல் தண்டேல் என்பதற்கும் யாரிடமும் கேள்வி எழாமல் பெரும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். இருந்தாலும் தண்டேல் என்றால் லீடர் என இப்படத்தில் ட்ரெய்லர் மூலம் தெரிந்து கொண்டிருப்போம்.

இந்த திரைப்படத்தை பார்க்கும் போது அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பான் இந்திய அளவிலான திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற நெருக்கடி இல்லாமல், ஒரு கதையை உருவாக்கி, அது பான் இந்திய ரசிகர்களுக்கு சென்றடையும் எனும் நம்பிக்கையில் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்கான வாய்ப்பை எங்களுடைய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியதற்காக தயாரிப்பாளர் அல்லு அரவிந்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைத் துறையில் தயாரிப்பாளராக 10, 15 ஆண்டுகளை கடந்து செல்வது என்பது சவாலாக இருக்கும் தருணத்தில் தொடர்ந்து 50 வருடங்களாக திரைப்படங்களை வழங்கி வருகிறார் கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான அல்லு அரவிந்த். இந்த வகையில் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது. நாக சைதன்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பி இருக்கிறேன். ஆனால் தற்போது அவர் நடித்த படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சாய் பல்லவி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால்.. அந்தத் திரைப்படம் நன்றாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையை சாய் பல்லவி தமிழக மக்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறார். அவர் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் இந்த திரைப்படம் நன்றாக இருக்கும் என்று நானும் நம்புகிறேன்.
நடிகர் கருணாகரன் தற்போது பான் இந்திய நடிகராக உயர்ந்திருக்கிறார் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி அன்று திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கும் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் தருணத்தில் நடிகர் கருணாகரன் இப்படத்தைப் பற்றி சொல்லி இருக்கிறார். அப்போதிலிருந்து இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு என்னிடமிருக்கிறது. இயக்குநர் சந்துவின் முந்தைய திரைப்படங்கள் நன்றாக இருக்கும். நாக சைதன்யா – சாய் பல்லவி போன்ற திறமையான நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு இடையேயான காதல் கதை. இதற்கு தனித்துவமான பின்னணி என்பதால் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
கருணாகரன் விவரிக்கும் போது நிறைய பயணம் செய்ததாக குறிப்பிட்டார். கதை நிகழும் இடத்தைப் பற்றி சொல்லும் போதும், அதனை முன்னோட்டத்தில் பார்க்கும் போதும், சுவாரஸ்யமாக இருந்தது. ராக்ஸ்டாரின் பாடல்களும் நன்றாக இருந்தது. படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நடிகர் கருணாகரன் திறமையானவர். காமெடி மட்டுமல்ல அவர் எந்த கேரக்டரிலும் நடிக்க கூடியவர். இந்தப் படத்தின் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். அவருக்கும் தெலுங்கிலும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். படம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.

இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு நாக சைதன்யாவை இப்போதுதான் சந்திக்கிறேன். அவருடைய ஸ்கிரிப்ட் செலக்சன் என்பது தனித்துவமானதாக இருக்கும். நாக சைதன்யாவை கண்வின்ஸ் செய்வது கடினம். இந்த ஜானர் புதிது. படத்தைப் பற்றி கருணாகரன் என்னிடம் சொல்லும் போது உண்மை சம்பவத்தை தழுவி தயாரான படம் இது என்றார். படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போதே படக்குழுவினரின் கடின உழைப்பு தெரிகிறது. கடலில் படப்பிடிப்பு நடத்துவது என்பது கடினமானது. சவாலானது. ஆனால் அதனை அழகாகவும், நேர்த்தியாகவும் படமாக்கி இருக்கிறார்கள். இயக்குநருக்கும், ஒட்டுமொத்த குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

நான் சாய் பல்லவியின் பெரிய ரசிகன். நான் மட்டுமல்ல ஏராளமான இயக்குநர்கள் உங்களுடைய ரசிகர்கள். நீங்கள் மீண்டும் திரையில் ஜோடியாக இணைந்திருப்பதை வரவேற்கிறேன். உங்கள் இருவரையும் திரையில் பார்க்கும்போது பாசிட்டிவ்வான எனர்ஜி இருக்கிறது.
நானும் டிஎஸ்பியும் சிறிய வயதில் இருந்து ஒன்றாக – வெட்டியாக சுற்றிக் கொண்டிருந்தோம். தற்போது தான் இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பம் பிரபலமாகி இருக்கிறது ஆனால் 90 களிலேயே தேவி ஸ்ரீ பிரசாத் – எஸ் பி பி சரண் ஆகியோர் இணைந்து இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பத்தினை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்தக் குழுவில் நான் இருந்தாலும் என்னை பாட அனுமதிக்க மாட்டார்கள். அவரும் இந்த படத்திற்காக தன்னுடைய கடும் உழைப்பை வழங்கியிருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இயக்குநர் சந்து – இதற்கு முன் இயக்கிய ‘ கார்த்திகேயா ‘ உள்ளிட்ட படங்களை பார்த்திருக்கிறேன். அவரும் நாக சைதன்யாவும் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறார்கள். இயக்குநர் சந்து வெவ்வேறு ஜானர்களில் படங்களை இயக்கி வருகிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். எங்களின் கருணாகரனை தெலுங்கில் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். இதற்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாக சைதன்யா திறமையானவர். அர்ப்பணிப்புடன் உழைப்பவர். நன்றாக தமிழ் பேச கூடியவர். தமிழ் இயக்குநர்கள் அவரிடம் சென்று கதையையும் , காட்சியையும் தமிழிலேயே விளக்கி சொல்லலாம். அவரும் ஒரு காட்சியை மேம்படுத்துவதற்காக நிறைய மெனக்கெடுவார். நாங்கள் இருவரும் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசை. ஆனால் அது தெலுங்கு படமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் தெலுங்கு – தமிழ் என கலவையாக இருக்கக் கூடாது. மிகப்பெரிய திரையுலக ஆளுமை மிக்க குடும்பப் பின்னணியில் இருந்து வந்தாலும் எளிமையாக பழகக் கூடியவர். இதற்காகவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று புதிய உயரத்தை தொட வேண்டும் என வாழ்த்துகிறேன்’ என்றார்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேசுகையில், ரொம்ப மகிழ்ச்சி. ‘தண்டேல்’ எனக்கு ஸ்பெஷலான திரைப்படம். தண்டேல் படத்தை பற்றி தயாரிப்பாளர் பன்னி வாஸ் மற்றும் இயக்குநர் சந்து ஆகியோர் என்னை சந்தித்து படத்தை பற்றி ஒரு வரி கதையாக சொன்னார்கள். அதுவே சுவாரஸ்யமாக இருந்தது. அந்த சுவாரஸ்யம் படம் முழுவதும் இருந்தது. அதனால் பணியாற்றுவதற்கு உற்சாகமாக இருந்தது. இது உங்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன். கடல் என்று வந்து விட்டால், அந்தப் படத்திற்கும் சென்னைக்கும் தொடர்பு எளிதாக அமைந்து விடும். இந்த படத்திலும் கடல்- கடற்கரை- மீனவர்கள்- காதல் என அனைத்தும் இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் தமிழக ரசிகர்களுக்கும் நெருக்கமானதாக இருக்கும்.
அல்லு அரவிந்துக்கு என்னை சிறிய வயதில் இருந்தே தெரியும். அவரும் சிறந்த இசை ரசிகர். இந்தத் திரைப்படத்தை தயாரித்ததற்காகவும், எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாக சைதன்யா என் நண்பர். என் சகோதரர். திறமையானவர். தண்டேல் படத்தின் போஸ்டரை பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டேன். அவர் இந்த கதாபாத்திரத்திற்காக தன்னுடைய உடல் அமைப்பை மாற்றி அமைத்து இருந்தார். இது நம்முடைய வழக்கமான நாக சைதன்யா இல்லையே..! என்ற எண்ணம் வந்தது. படத்திற்காக கடும் உழைப்பை வழங்கிய அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

சாய் பல்லவி இந்த பெயரை உச்சரித்தாலே போதும். அனைவருக்கும் பிடித்து விடும். இந்தியாவின் சிறந்த இயக்குநரான மணிரத்தினமே சாய் பல்லவியின் ரசிகர் தான். இந்த திரைப்படத்தில் அவரும் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அவர் சிறந்த நடிகை மட்டுமல்ல. நன்றாக நடனம் ஆடக்கூடிய கலைஞர். அவருடைய படங்களில் இடம்பெறும் பாடல்களில் அவர் நடனமாடி இருக்கிறாரா..? என்பதை நான் ஆவலுடன் எதிர்பார்ப்பேன். ஒரு பாடலுக்கு என்ன தேவையோ அதனை அந்த பாடலுக்குள்ளேயே சின்ன சின்ன நடன அசைவுகள் மூலம் அழகூட்டுபவர்.
இந்த படத்தின் காட்சிகள் எல்லாம் சிறப்பாகவும், பிரமிப்பாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருக்கும் கார்த்தி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் , வெங்கட் பிரபு ஆகியோருக்கும் என்னுடைய நன்றிகள். நான் பாடலாசிரியர்களுக்கு எப்பொழுதும் முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்குவேன். ஏனெனில் நான் பிரபல கதாசிரியர் சத்தியமூர்த்தியின் மகன். அவர் கதாசிரியர் மட்டுமல்ல. பாடலாசிரியரும் கூட. ஒரு பாடலுக்கு அழகாக டியூன் அமைத்தாலும் அதனை வெளிப்படுத்துவது பாடல் வரிகள் தான். இந்த வகையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேகா எழுதியிருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
பிப்ரவரி 7ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் தண்டேல் திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நடிகை சாய் பல்லவி பேசுகையில், இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் கார்த்தி – வெங்கட் பிரபு – கார்த்திக் சுப்புராஜ் – ஆகியோருக்கு நன்றி. நீங்கள் அனைவரும் உங்களுடைய பரபரப்பான வேலைகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி இங்கு வந்து படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி. தண்டேல் படத்தின் கதையை கோவிட் காலகட்டத்தின் போது இயக்குநர் சந்து ஒரு உண்மை சம்பவத்தை தழுவி, 20 பக்க அளவிலான கதையாக சொன்னார். அதை இவ்வளவு அழகான காதல் கதையாக மாற்றி வழங்கி இருக்கிறார்கள். இதற்காக மூன்றாண்டு காலம் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஒன்றரை ஆண்டு காலம் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த பயணம் மறக்க முடியாதது.
சக நடிகரான நாக சைதன்யா ஒன்றரை ஆண்டு காலத்தை இந்த கதாபாத்திரத்திற்காக வழங்கி, கடுமையாக உழைத்திருக்கிறார். இன்னும் இதற்காக உழைக்க வேண்டும் என்றாலும் அதற்கும் அவர் தயாராக இருக்கிறார். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத இனிய அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தின் பாடல்கள் தெலுங்கு ரசிகர்களிடத்தில் மிகவும் பிரபலம். இதற்காக பணியாற்றிய டிஎஸ்பிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
தெலுங்கு திரையுலகத்திற்கு அறிமுகமாகும் கருணாகரனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அவரை தெலுங்கு திரையுலகம் சார்பாக வரவேற்கிறேன். படப்பிடிப்பில் மொழி தெரியாவிட்டாலும் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். தண்டேல் படக் குழுவுடன் பணியாற்றிய ஒன்றரை ஆண்டு காலத்தில் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். எதிர்வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்குச் சென்று படத்தை பார்க்க வேண்டும். அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் என்றார்.

தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசுகையில், நான் சென்னையில் தான் படித்தேன். பிழைப்பிற்காகத்தான் ஹைதராபாத் சென்றேன். சென்னை அரசு கலை கல்லூரியில் தான் பட்டப் படிப்பினை படித்தேன். அதன் பிறகு சட்டக் கல்லூரியில் சட்ட படிப்பினை படிக்கத் தொடங்கினேன். இரண்டு வருடத்திற்கு பிறகு தொடர்ந்து படிக்காமல் வெளியேறி விட்டேன். முதலில் நடிகர் கார்த்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் மற்றும் வெங்கட் பிரபுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தில் நாக சைதன்யா- சாய் பல்லவி இருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். தரமான படைப்பாக ‘தண்டேல்’ உருவாகி இருக்கிறது.
இயக்குநர் சந்து அற்புதமான திறமைசாலி. நேர்த்தியாக உழைத்து தண்டேலை உருவாக்கி இருக்கிறார். கதை சிறியது தான். ஆனால் அதனை அவர் வழங்கிய விதம் சிறப்பானது. இந்தப் படத்தின் கதைக்காக 20 பேரிடம் ரைட்ஸ் வாங்கி இருக்கிறோம். அந்த 20 பேரும் பாகிஸ்தானுக்கு சென்று அங்குள்ள சிறையில் கைதியாக இருந்து அதன் பிறகு விடுதலையானவர்கள். அவர்களின் கதை இது. இயக்குநர் அதனை இரண்டு மணி நேர கதையாக விவரித்திருக்கிறார். இந்த கதையை அற்புதமான படைப்பாக உருவாக்கியதற்காக இயக்குநர் சந்துவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் எனக்கு மகன் போல. அவரை சிறிய வயதில் இருந்தே எனக்கு தெரியும். அவரிடம் இங்கிருந்தே ஒரு கேள்வியை கேட்கிறேன். எப்படிடா இப்படி 25 வருடமாக தொடர்ந்து ஹிட் பாடல்கள் வழங்கிக் கொண்டிருக்கிறாய்? அவருடைய அப்பா எனக்கு நல்ல நண்பர். கருணாகரன் இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். படத்தில் அவருடைய நடிப்பு பேசப்படும். ஆடுகளம் நரேனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்தத் திரைப்படத்தை தமிழில் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தவுடன் என் நினைவுக்கு வந்தவர் எஸ். ஆர். பிரபு மட்டும் தான். அவர் இந்த திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதால் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திரைப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நடிகர் கார்த்தி பேசுகையில், இது எனக்கு முக்கியமான மேடை. தெலுங்கு திரையுலகிலிருந்து எனக்கு ஏராளமான அன்பு கிடைத்திருக்கிறது. அந்த அன்பை திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்பாக இதனை கருதுகிறேன். இங்கு வந்த பிறகுதான் நாக சைதன்யா என்னிடம், இந்த கதை 2018 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவம் என்று சொன்னார். கேட்பதற்கு இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. நம் ஊரில் மீன் பிடிக்கும் மீனவர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு சென்று மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் குஜராத்திற்கு சென்று படகில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி பாகிஸ்தானுக்கு சென்று மாட்டிக் கொள்கிறார்கள் என்றார். பிறகு அங்கிருந்து எப்படி தப்பித்து வந்தார்கள் என்பதை ஒரு அழகான காதல் கதையாக இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.
எவ்வளவு பெரிய திரில்லாக இருந்தாலும் அது டைட்டானிக்காக இருந்தாலும் அதற்குள் ஒரு லவ் ஸ்டோரி தேவைப்படுகிறது. அந்த லவ் தான் மனதில் நிற்கிறது. 20 பேரிடம் ரைட்ஸ் வாங்கி அதை ஒரு அழகான காதல் கதையாக உருவாக்கி வழங்கியிருக்கிறார்கள் என்றால் இந்த கதை மீது தயாரிப்பாளர் எவ்வளவு நம்பிக்கை இருக்க வேண்டும். இந்தப் படத்திற்காக ஒன்றரை ஆண்டு காலம் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாகவே இந்த படத்தை இந்தியா முழுவதும் நம்பிக்கையுடன் வெளியிடுகிறார்கள்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இதற்கு முன் இயக்கிய படங்களும் வெற்றி படங்கள்தான். கடல் பின்னணியில் நிறைய படங்களை பார்த்திருக்கிறோம். தற்போது மீண்டும் ஒரு புதிய அனுபவத்திற்கு தயாராகி இருக்கிறோம். இதற்காக அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் திரை உலகில் பீஷ்மரை போன்றவர். திரை உலகிற்கு தயாரிப்பாளர்கள் வருவார்கள். செல்வார்கள். நீண்ட காலம் தாக்குப் பிடிப்பது கடினம். பெரிய பெரிய நிறுவனங்களே படத் தயாரிப்பு வேண்டாம் என நிறுத்திவிட்டார்கள். இந்த சூழலில் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார் அல்லு அரவிந்த். அவர் சினிமாவில் படங்களை வியாபார நுணுக்கங்களுடன் தயாரிக்கிறார். அவர் தேவி ஸ்ரீ பிரசாத் பார்த்து எப்படிடா இத்தனை ஆண்டுகளாக ஹிட்டு கொடுக்கிறாய்? என கேட்கிறார். அதை போல் நான் அவரைப் பார்த்து, எப்படி தொடர்ந்து ஹிட் படங்களை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? என கேட்கிறேன். அவர் வேறு வேறு ஆட்களுடன், வேறு வேறு கூட்டணியுடன் தொடர்ந்து படங்களை பெரு விருப்பத்துடன் தயாரித்து வருகிறார். எல்லா மொழிகளிலும் படங்களை தயாரித்திருக்கிறார். சினிமா மீதான அவருடைய பற்று எனக்கு இன்று வரை ஆச்சரியத்தை அளித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் படங்களை தெலுங்கு திரையுலகிற்கு எடுத்துச்சென்று விளம்பரப்படுத்தும் போது அவர் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டே இருப்பார். ஒரு தயாரிப்பாளர் என்றால் எப்படி இருக்க வேண்டும், அவருடைய படத்தை எவ்வளவு நேசிக்க வேண்டும், படத்தை எப்படி கொண்டு மக்களிடம் சேர்க்க வேண்டும் நடிகர் நடிகைகளை எப்படி பாதுகாக்க வேண்டும், படத்தை தயாரிக்கத் தொடங்கியதிலிருந்து அந்தத் திரைப்படத்தை ரசிகர்களுக்காக திரையரங்கத்திற்கு கொண்டு சேர்க்கும் வரை எப்படி உழைக்க வேண்டும் என்பதனை அவரைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். அவரை எனக்குத் தெரியும் என்பதிலேயே நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக இந்தத் தருணத்தில் அவருக்கு மனதார வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாகவே இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கருணாகரன் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். அவரும் ஒரு அற்புதமான நடிகர். அவர் தெலுங்கிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஆடுகளம் நரேன் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அவருக்கு தொடர்ந்து சீரியசான கதாபாத்திரங்களை வழங்கி சீரியசான நடிகராக்கிவிட்டார்கள். ஆனால் அவர் அற்புதமாக காமெடியும் செய்வார். ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் காமெடியில் கலக்கியிருப்பார்.
நான் துருக்கி நாட்டிற்கு சென்றிருந்தபோது அங்கும் டிஎஸ்பி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. இதுதான் அவருக்கு கிடைத்திருக்கும் புகழ். அவர் எப்போதும் உழைத்துக் கொண்டே இருப்பார். அவருடைய ஸ்டுடியோவுக்கு சென்றால், இசையை பற்றி மட்டுமே பேசிக் கொண்டே இருப்பார். அவர் இந்த நாட்டிற்கு சொந்தம். அவை எப்போதும் எனர்ஜியுடன் இருக்கிறார். இதற்காகவே நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். இந்தப் படத்தின் பாடல்களும் அற்புதமாக இருக்கிறது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா இசையமைப்பாளர்களுக்கும் காதல் கதை கிடைத்து விட்டால் போதும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவார்கள். இந்த திரைப்படத்திலும் டிஎஸ்பி தன் திறமையை வெளிப்படுத்தி அனைத்து பாடல்களையும் ஹிட் ஆக்கி இருக்கிறார்.
சாய் பல்லவி மிகவும் ஸ்பெஷல் ஆனவர். அவர் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தன் திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். காதலிப்பதாகட்டும் அதில் காதலை கொட்டி தீர்ப்பார். இதனாலேயே இளைஞர்கள் எல்லாம் உங்கள் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். நடனம் சொல்லவே வேண்டாம். வலியை கடத்துவதாக இருந்தாலும் அதிலும் முத்திரை பதிக்கிறீர்கள். வயதிற்கு மீறிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அனுபவமும் வித்தியாசமாக இருக்கிறது.

அமரன் படம் பார்த்துவிட்டு உங்களிடம் பேசியிருக்கிறேன். ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியின் தியாகம் என்ன? என்று பொதுமக்களுக்கு தெரியாது. அதை அமரன் படத்தில் நீங்கள் விவரித்திருந்த விதம் அவர்களின் வலியை எங்களுக்கு புரிய வைத்தது. இதற்காக நன்றி. நாக சைதன்யா அவருடைய தாத்தா எனக்கு தெரியும். அவரைத் தொடர்ந்து நாகார்ஜுனாவை தெரியும். அவர் ‘இதயத்தை திருடாதே’ படத்தை பார்த்த பிறகு அவரைப் போல் டிரஸ் செய்து கொள்வது அதேபோல் ஓடுவது.
என பல முயற்சிகளை பலரும் செய்தார்கள். ஆனால் அவர் செய்த ஸ்டைலில் யாராலும் செய்ய முடியவில்லை. அவரைப் போல் அழகாக பேசவும் தெரியாது. அவருடன் தெலுங்கு திரைப்படத்தில் பணியாற்றிருக்கிறேன்.
நான் அங்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்வார். அவ்வளவு அக்கறையுடன் பார்த்துக் கொள்வார். அன்பை பொழிவதில் தன்னிகரற்றவர். அவருடன் பணியாற்றி 10 வருடங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் தற்போது நான் என்ன படம் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து வைத்திருப்பார். அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று சொல்வார். படம் பார்த்து பிடித்து விட்டால் உடனடியாக ட்வீட் செய்வார். இது போல் எனக்காக எப்போதும் அன்பு காட்டி வரும் அவருக்கு நான் திருப்பி என்ன செய்வதென்று தெரியவில்லை.

நாக சைதன்யாவை முதன் முதலில் திரையில் பார்த்த போது கூச்ச உணர்வு உள்ள ஒரு இளைஞரை அழுத்தம் கொடுத்து நடிக்க வைக்கிறார்களோ..! என தோன்றியது. ஆனால் அவர் முகத்தில் ஒரு அப்பாவித்தனம் தெரியும்.அந்த அப்பாவித்தனத்தை தான் ஏராளமான பெண்கள் ரசிக்கிறார்கள். அவருடைய அப்பாவித்தனமும் பிடித்தது. அவருடைய அப்பாவையும் பிடித்தது. அவருடைய தாத்தாவையும் பிடித்தது.
நாக சைதன்யா கடுமையாக உழைப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படத்தில் அவருடைய வளர்ச்சி தெரிகிறது. இந்தத் திரைப்படத்திற்காக ஒன்றரை ஆண்டு காலம் தன் உடலமைப்பையும் மாற்றி நடித்திருக்கிறார். உழைப்பு ஒரு போதும் வீண் போகாது. உங்களுடைய கடும் உழைப்புக்கு இந்த படம் சரியான பரிசை வழங்கும். இந்தப் படம் தமிழிலும் பெரிய வெற்றியை பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.
விவேகா- தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஹிட்டான பாடல்கள்- சாய் பல்லவி திரைத்தோற்றம்- உண்மை சம்பவம் – புது ஐடியா – என பல பாசிட்டிவ்வான விசயங்கள் இருப்பதால் இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெரும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

நடிகர் நாக சைதன்யா பேசுகையில், ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன். சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷலானது. சென்னை ரசிகர்களின் அன்பிற்காகவும், ஆதரவிற்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருப்பேன். இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டதற்காக நடிகர் கார்த்திக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நடிப்பில் வெளியான ‘ மெய்யழகன்’ படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறேன். அதில் அவருடைய உணர்வுபூர்வமான நடிப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன். அப்பா என்னிடம் எப்போதும் சொல்வார். சென்னைக்கு செல்கிறாய் என்றால் சொல். கார்த்திக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறேன் என்று’. அந்த அளவிற்கு கார்த்தி எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர்.
இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை தொழில் ரீதியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். நீங்களும் இங்கு வருகை தந்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஹைதராபாத்திற்கு வருகை தந்து என்னை சந்தித்து கதை சொல்லி கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்ததற்கும் நன்றி. கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி. உங்களுடைய இயக்கத்தில் வெளியாகும் ‘ரெட்ரோ’ படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். தண்டேல் படத்தின் தொடக்கம் என்பது, இயக்குநர் என்னை சந்தித்து உண்மை சம்பவத்தை ஒரு சின்ன ஐடியாவாக டாக்குமென்டரி ஸ்டைலில் சொன்னார். ஸ்ரீகாகுளம் எனும் கிராமத்தில் இருந்து குஜராத்திற்கு சென்று அதன் பிறகு ஒன்றரை வருஷம் பாகிஸ்தானுக்கு சென்று திரும்பவும் வருவது, என ஒரு பெரிய நீண்ட பயணம் இதில் இருக்கிறது. அந்த உண்மைக் கதையை கேட்டவுடன் ஒரு நடிகராக நான் ஆச்சரியமடைந்தேன்.

அதன் பிறகு ஸ்ரீகாகுளம் சென்று அங்குள்ள கிராமத்தில் வசிக்கும் மீனவர்களிடத்தில் பழகி அவர்களுடைய வாழ்வியல் முறையை தெரிந்து கொண்டேன். அந்தப் பயணம் மறக்க முடியாதது. அந்த அனுபவமும் மறக்க முடியாதது. இது போன்ற வாய்ப்பு மிகவும் அரிதாகத்தான் கிடைக்கும். இதற்காக என்னை நான் மாற்றிக் கொண்டேன். இது போன்ற கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்பதால் இதனை உருவாக்கி இருக்கிறோம். ஸ்ரீகாகுளம் மீனவர்கள் தான் இப்படத்தின் உண்மையான நாயகர்கள்.
தயாரிப்பாளர்கள் பன்னி வாஸ் மற்றும் அல்லு அரவிந்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய மூன்றாவது படமான 100% லவ் படத்திற்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் அல்லு அரவிந்துடன் இணைந்து இருக்கிறேன். இந்த படமும் பெரிய வெற்றியை பெறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். ஒவ்வொரு லவ் ஸ்டோரி திரைப்படத்திலும் பாடல்கள் ஹிட்டாக அமைய வேண்டும். இதிலும் தேவி ஸ்ரீ பிரசாத் எல்லா பாடல்களையும் ஹிட்டாக்கி இருக்கிறார். இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்த படத்திற்கு பாடல்களுக்கு மட்டும் இசையமைக்காமல் அந்தப் பாடல்களை காட்சிப்படுத்தும் போதும் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து உற்சாகப்படுத்தினார்.

சாய் பல்லவி அனைவரும் சொல்வது போல் எனக்கும் அவர் ஸ்பெஷலானவர். ஒவ்வொரு நடிகரும், ஒவ்வொரு இயக்குநரும், ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் உங்களைப் பற்றி பேசுவார்கள். அனைவரும் உங்களுடைய ரசிகர்கள் தான். உங்களுடன் பணியாற்றுவது இனிமையான அனுபவம். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தமிழில் வெளியிடுகிறார். இதற்காக அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரும் நானும் பல கதைகளை பேசி இருக்கிறோம். விரைவில் இணைந்து பணியாற்றுவோம் என்று நம்புகிறேன்.
கருணாகரனுடன் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் அவருடைய பங்களிப்பு நன்றாக இருந்தது. அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தண்டேல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், ‘TeeJay’ அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான “Bad […]
சினிமாஅனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், ‘TeeJay’ அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான “Bad Girl” படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் கேஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், படத்தின் எடிட்டரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி S தானு, இயக்குனர் மிஷ்கின், நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த Bad Girl படத்தின் டீசரை பார்த்தபின் விருந்தினர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

தயாரிப்பாளராக வெற்றிமாறன் இந்த படத்தைப் பற்றி பேசும் பொழுது, கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியில் வரும் கதைகளில்,
எந்தக் கதை வித்தியாசமாக தெரிந்தாலும், அனுராக் கேஷ்யப்பிடம் பகிர்ந்து கொள்வது வழக்கம். அப்படி இந்த கதையை பகிர்ந்து கொள்ளும் போதே நாங்கள் இருவரும் சேர்ந்து பண்ணும் ஐடியா இருந்தது. வேறு சில காரணங்களுக்காக தள்ளிப் போனது. ஆனால் விடுதலை_2 பட சூட்டிங்கின் போது, இந்தப் படத்தின் முதல் பாதியை பார்த்த அனுராக், படத்தை மிகவும் பாராட்டி நானே இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என்று கூறினார். ஆக அனுராக் கேஷ்யப் தயாரிக்கும் முதல் தமிழ் படம் இதுதான். மேலும் அனுராக் கேஷ்யப் இந்தப் படத்தின் இசைக்காக அமித் திருவேதியை நானே தொடர்பு கொண்டு பேசுகிறேன் என்று கூறி, அமித் திரிவேதியை இந்த படத்தின் இசைக்கு கொண்டு வந்தார். ஆக அமித் திரிவேதிக்கும் இதுதான் முதல் படம். மேலும் ரோட்டர் டாம் திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதில் முக்கிய பிரிவான Tiger Competetion பிரிவில், முதல் பெண் இயக்குனரான வர்ஷா பரத்தின் Bad Girl படமும் இடம்பெற்று இருப்பது, தனிச்சிறப்பு. இப்படி பல ‘முதல்’ விஷயங்கள் இருப்பதால் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இந்த நிகழ்வை பெரிதாக நடத்துகிறது என்று கூறினார்.

மூத்த நடிகை சாந்தி பிரியா பேசும் பொழுது, செண்பகமே செண்பகமே பாடல் மூலம் இன்னும் என்னை மக்கள் ஞாபகம் வைத்துக் கொண்டதற்கு நன்றி. இப்பொழுது ‘Bad Girl’ படத்தின் மூலம் மீண்டும் என்னை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள். நான் மீண்டும் சினிமாவில் ஒரு come back கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சமயத்தில், casting director வர்ஷாவிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது, வெற்றிமாறன் படத்தில் நடிக்க வேண்டும் எனக் கூறியதும், நானும் உடனே சரி என்று ஒத்துக் கொண்டேன். ஆனால் படம் முழுவதும் மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும், ஒரே ஒரு போட்டோ மட்டும் அனுப்ப முடியுமா ? என்று கூறியதும் ஒரு நிமிடம் திடுக்கிட்டேன், பின் Sun
light ல் ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுத்து அனுப்பினேன். பின் இயக்குனர் வர்ஷா பரத் இந்தக் கதையை சொல்லி முடித்த பின், நான் அவரிடம், இந்தப் படம் ரிலீஸ் ஆனவுடன் உங்களுக்கு சிகப்பு கம்பளம் காத்துக் கொண்டிருக்கிறது என்று கூறினேன். ஏனெனில் இந்தப் படம், அப்படி ஒரு கதையைத்தான் அழுத்தமாக கூறி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த கதை, எனக்கும் எனது பெற்றோருக்கும் உள்ள உறவு மற்றும் எனக்கும் எனது மகனுக்கும் உள்ள உறவு என்று பல நிகழ்வுகளை சம்பந்தப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. படம் வெளிவந்தவுடன், பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையிலும் இந்தக் கதை கனெக்ட் பண்ணக்கூடியதாகவே இருக்கும் என்று கூறினார்.

படத்தின் கதை நாயகி அஞ்சலி சிவராமன் பேசும் பொழுது, இயக்குனர் இந்த கதையை எனக்கு சொல்லும் பொழுது, ஒரு உண்மைத் தன்மை இருப்பதை உணர்ந்தேன். மேலும் இந்த கதையில் வரும் ரம்யா கதாபாத்திரம், எனது ரியல் லைஃப் கதாபாத்திரத்தை பிரதிபலிப்பது போல் இருந்தது. முதல்முறையாக ‘ஒரு முழு கதையும் என்னை வைத்து நகர்கிறது’ எனும்போது எனக்கு சிறிது தயக்கமாக இருந்தது, ஆனால் வெற்றிமாறன் மற்றும் வர்ஷா பரத் என் மீது வைத்திருந்த நம்பிக்கை இந்த கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறது. என் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி என்று கூறினார்.

இயக்குனர் மிஷ்கின் இந்தப் படத்தைப் பற்றி பேசும் பொழுது, இந்தப் படத்தின் டிரைலர் பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது. வர்ஷா பரத் எப்படிப்பட்ட ஆளுமை என்று பார்க்கும் பொழுது, வெற்றிமாறன் போன்ற மிகப்பெரிய ஆளுமையிடம் ஏதோ இரண்டு வருடம் அசிஸ்டெண்டாக வேலை பார்த்து ஒரு படம் பண்ணினோம் என்று இல்லாமல், முழுக்க முழுக்க சினிமாவை உயிராக நேசித்து, அதை ஒவ்வொரு இடத்திலும் கற்றுத் தெரிந்து,தன் குருவுக்கு மரியாதை செலுத்தும் ஆளுமையாகத்தான் இந்தப் படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது வர்ஷா பரத் தெரிகிறார். பொதுவாக close up shots எடுப்பது மிகவும் கடினம், ஆனால் இந்த ட்ரெய்லரை பார்க்கும் பொழுது, close up shots நிறைய உள்ளது. ஹீரோயின் அஞ்சலி சிவராமனின் கண் அழகாக உள்ளது. இந்த மாதிரியான படங்கள் தான் சினிமாவிற்கு வர வேண்டும். ஏனெனில் Bad Girl என்ற பெண் சார்ந்த உளவியல் படத்தை, ஒரு ஆண இயக்குனரால் எடுக்க முடியாது பெண்ணிய இயக்குனரால் மட்டுமே எடுக்க முடியும். மேலும் இந்த மாதிரியான கதையை எடுப்பதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

நடிகை டாப்ஸி பண்ணு படத்தைப் பற்றி கூறும்பொழுது, 15 வருடத்தில் வெற்றிமாறன் இந்தப் படத்திற்கு தான் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார். நான் எப்பொழுதுமே நினைப்பதுண்டு, ஏன் எப்பொழுதுமே ஆண்களைப் பற்றிய படங்களே வருகிறது? ஏன் பெண்களைப் பற்றிய படம் பெரிதாக வரவில்லை? என்று யோசிப்பேன், ஆனால் இந்த படம் பெண்களைப் பற்றி பேசும் படமாக மட்டும் இல்லாமல், படத்தின் இயக்குனரே பெண்ணாக இருப்பது தனி சிறப்பு. இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறினார்.

இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் கேஷ்யப் இந்த படத்தை பற்றி பேசும்பொழுது, விடுதலை பட சூட்டிங்கின் போதுதான் வெற்றிமாறன் இந்த படத்தின் கதையை பற்றி கூறினார். படத்தின் முதல் பாதியை பார்க்கும் பொழுது, நான் பிரமித்து போயிட்டேன். பொதுவாக ஏதாவது ஒரு படத்தின் கதையை பார்க்கும் பொழுது, இதை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று எனக்கு தோன்றும், ஆனால் இந்தப் படத்தை பார்க்கும் பொழுது இயக்குனர் வர்ஷா பரத்தால் மட்டுமே இப்படி எடுக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது. மேலும் பெண்கள் உலகம் எப்படிப்பட்டது என்று ஆண்கள் புரிந்து கொள்வதற்காகவே இந்தப் படம் எடுக்கப்பட்டது போல் இருந்தது. இந்த படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள் என்று கூறினார்.

படத்தின் இயக்குனர் வர்ஷாபரத் இந்த படத்தைப் பற்றி பேசும் பொழுது, பொதுவாக வெற்றிமாறனிடம், நாங்கள் ஏதாவது ஒரு ஐடியாவை சொல்லிக் கொண்டே இருப்போம். அதைக் கேட்டு அவர் இந்த கதை தேரும், தேராது ! படமாக வரும், வராது என்று feed back கொடுத்துக் கொண்டே இருப்பார். அப்படித்தான் இந்தப் படத்தின் கதையைப் பற்றி கூறும் பொழுது, இது ஒரு படமாக வரும் என்று கூறினார். இப்படித்தான் “Bad Girl” படத்தின் கதை உருவானது.
நம் தமிழ் சினிமாவில் பெண் என்றால் தாய், கடவுள், தேவதை இப்படி பல விதமாக காட்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் என்ன நினைக்கிறாள், அவளின் உண்மையான உணர்வு என்ன என்பதை சொல்லக்கூடிய கதை தான் இந்த Bad Girl. பெண்களை புனிதர்களாக பார்க்காதீர்கள், மனிதர்களாக பாருங்கள் என்று தான் இந்த படம் கூறுகிறது என்று கூறினார்.

விழா நிறைவாக இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தைப் பற்றி பேசும் பொழுது, இந்தக் கதை எனக்கு முன்பே தெரிந்தாலும் கூட, கடைசியாக தான் இந்தப் படத்தில் இணைந்தோம். இந்தப் படத்தின் சூட்டிங்கிக்கு நான் எப்பொழுதாவது செல்லும் பொழுது, முதல்முறையாக சாந்தி பிரியாவை சந்தித்தேன். அப்பொழுது அவர், இந்த படம் எல்லா Festvel லையும் ஹிட் அடிக்கும். நேஷனல் அவார்டு கூட கிடைக்கும் என்று கூறினார். அப்பொழுது நான் வர்ஷாவிடம், இந்தப் படத்தை உன்ன விட, உன் படத்துல நடிக்கிறவங்க ரொம்ப அதிகமா நம்புறாங்க. அதனால இந்த படத்தை நல்லா எடுத்துடுமா? என்று கூறினேன். வர்ஷாவும் எனக்கு கொடுத்த கமிட்மெண்டை விட 100% அதிகமாகவே கொடுத்துள்ளார். மேலும் இந்தப் படம் Gross Root Film Company ய பெருமைப்பட வைக்கும்.
நிறைவாக படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் சேர்ந்து இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்.
ப. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், வெளிவந்துள்ள “பாட்டல் ராதா” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, மேடை நாகரீகம் இல்லாமல் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியதோடு, இசையமைப்பாளர் இளையராஜாவை ஒருமையில் பேசிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் […]
சினிமாப. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், வெளிவந்துள்ள “பாட்டல் ராதா” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, மேடை நாகரீகம் இல்லாமல் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியதோடு, இசையமைப்பாளர் இளையராஜாவை ஒருமையில் பேசிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொது மேடைகளில் நாகரீகம் இல்லாமல் பேசுவதையும், தான் ஒரு அறிவாளி போல் பேசுவதையும் வாடிக்கையாக கொண்டவர் மிஷ்கின். சினிமாவில் இவருக்கு பெரும்பாலும் வாய்ப்புகள் இல்லாததால், மிஷ்கின் உலருவதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மிஷ்கினை இதுவரை யாரும் கண்டிக்காததால் தலைக்கனம் அதிகரித்து எல்லோரையும் அவன் இவன் என ஒருமையில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

பாட்டல் ராதா இசை வெளியீட்டு விழாவில், பிரபல இயக்குநர்கள் அமர்ந்திருக்கும் மேடையில், அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி தான்தோன்றித்தனமாக மிஷ்கின் பேசியதை யாரும் கண்டிக்காமல் கலைந்து சென்றது ஏன் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. மிஷ்கின் பேசும்போதே கண்டித்திருக்க வேண்டும், மிஷ்கின் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நபர் இல்லை. அவரே குடிகாரன், திருடன் என பொது மேடையில் பேசி ஒத்துக்கொண்ட கேடுகெட்ட நபர் தானே ! அந்த இடத்திலேயே கண்டித்திருக்க வேண்டும் சினிமா சங்கங்களின் நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.
சினிமா விழாக்களில் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அருவருப்பாக பேசிவரும் மிஷ்கினை, அவர் உறுப்பினராக உள்ள தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இதுவரை கண்டிக்காமல் இருப்பதும் வேடிக்கையாக உள்ளது.
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில், அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் பாட்டல் ராதா. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா […]
சினிமாஇயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில், அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் பாட்டல் ராதா. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர், மிஸ்கின் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய லிங்குசாமி இந்த படம் தமிழில் மிகச்சிறந்தபடமாக இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒருபடமாக வந்திருக்கிறது. ஜனரஞ்சகமாக, அதேசமயம் கருத்துள்ள படமாக இருக்கிறது. இந்தப்படம் அரசாங்கத்திற்கு போடும் மனு போல, அவசியமானதொரு படம். இந்தப்படம் பெரும்வெற்றியடையும் என்றார்.

விழாவில் பேசிய அமீர், இந்த கதையைப்போல குடி நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப்பற்றி நான் ஒரு படம் இயக்குவதாக இருந்தேன் அதற்காக கள ஆய்வுகள் செய்தும் வைத்திருந்தேன். பாட்டல் ராதாவை பார்த்தபிறகு இனி அந்த படம் செய்தால் பாட்டல் ராதா பார்த்து எடுத்ததைபோல இருக்கும். எனவே அதை எடுக்கப்போவதில்லை. குடி நோயாளிகளைப்பற்றி இவ்வளவு சிறப்பாக இனி யார் படம் எடுத்தாலும் அது பாட்டல் ராதா படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது. இந்தப்படம் தமிழில் மிகச்சிறந்தபடம் என்றார்.

நிகழ்வில் பேசிய மிஸ்கின்
பாட்டல் ராதா திரைகதை எழுதப்பட்ட விதம் மிகச்சிறப்பானது. முதல் படத்திலேயே இவ்வளவு சிறப்பாக எழுதி எடுத்திருக்கும் இயக்குனர் தினகரன் சிவலிங்கத்திற்கு பாராட்டுக்கள். அதுவும் இப்படி ஒரு கதைகளத்தை எழுதியதற்கு என் பாராட்டுக்கள். இந்தப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிப்பை பார்த்து வியந்துவிட்டேன். குறிப்பாக குருசோமசுந்தரம் நடிப்பில் மிரட்டிவிட்டார். மொத்தமாக படக்குழுவுக்கு என் அன்பும் பாராட்டும். இப்படிப்பட்ட படங்களை தயாரிக்கும் ரஞ்சித்துக்கு என் அன்புகள் என்றார்.

நிகழ்வில் பேசிய வெற்றிமாறன்
பாட்டல் ராதா திரைப்படம் நன்றாக எழுதி மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டபடம் , இந்தப்படத்தின் முதல் பாதி சிரிக்கவும், இரண்டாம் பாதி சிந்திக்கவும் வைக்கும். கூடவே இந்த சமூகத்திற்கு இப்போதைய காலகட்டத்திற்கு அதுவும் அடிக்சனுக்கு ஆளாகியிருக்கும் இந்த சமூகத்திற்கு மிக அவசியமான படமாக வந்திருக்கிறது.
இந்தப்படம் உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் என்று பேசினார்.

நிகழ்வில் பேசிய பா.இரஞ்சித் குடியால் பல குடும்பங்கள் அழிந்துபோனதை நான் கண்டிருக்கிறேன். இந்த கதையை என்னிடம் தினகர் தரும்பொழுது அதிலிருந்த உண்மைத்தன்மை என்னை வெகுவாக ஆட்கொண்டது.
வசனங்களும், வாழ்வும், நமக்கு நெருக்கமான ஒரு உணர்வை தந்தது. தினகர் மிக அருமையாக இயக்கியிருக்கிறார். தொடர்ந்து இந்த தமிழ்சினிமாவில் அவசியமான படங்களை தரவேண்டும் என்பது நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் விருப்பம். இன்னும் நல்ல படங்கள், பொழுதுபோக்கோடு சமூகக்கருத்துள்ளபடங்கள் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டேயிருப்போம்.
பாட்டல் ராதா உங்களை ரசிக்கவைப்பதோடு உங்களுக்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்றார்.
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஒளிப்பதிவாளர் சுஜித் சுப்ரமணியன் பேசுகையில், […]
சினிமாசினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் ஒளிப்பதிவாளர் சுஜித் சுப்ரமணியன் பேசுகையில், இயக்குநர் ராஜேஷூடைய கதைக்கு தொழில்நுட்பக் கலைஞர்களாக நாங்கள் ஆதரவு கொடுத்திருக்கிறோம் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் வேலை செய்தது ஆசிர்வதிக்கப்பட்டதாக இருந்தது. எடிட்டர் கண்ணன் என்னுடைய கிளாஸ்மேட். இருவரும் ஒரே படத்தில் அறிமுகமாகிறோம் என்பது மகிழ்ச்சி. டெக்னீஷியன்ஸ் எங்கள் மேல் அழுத்தம் கொடுக்காமல் இருந்த புரொடக்ஷன் டீமுக்கு நன்றி என்றார்.

இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் வைசாக் பேசுகையில், இந்த படத்தை அறிமுகம் செய்த மாதேவனுக்கு நன்றி. நிறைய புதுவிஷயங்கள் இந்தப் படத்தில் கற்றுக் கொண்டேன். படம் நன்றாக வந்திருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என்னுடைய மியூசிக்கல் டீமுக்கும் நன்றி என்றார்.
எழுத்தாளர் பிரசன்னா பாலச்சந்தர் பேசுகையில், நக்கலைட்ஸ் என்ற யூடியூப் சேனலில் ஆரம்பித்த இந்த பயணம் இப்போது முழுமையான விஷயமாக திரைப்படம் எடுத்திருக்கிறோம். இந்தப் படம் சாத்தியமாவதற்கு பலபேர் காரணம். ‘குடும்பஸ்தன்’ என்ற பெயர் பழையதாக இருந்தாலும் கதை எப்போது பார்த்தாலும் புதிதாக இருக்கும். இதன் கதாநாயகன் நம்மில் ஒருவராக சராசரியாக எந்நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் ஒருவனாக இருக்க வேண்டும் யோசித்தபோது, மணிகண்டன் சரியாக இருப்பார் என நானும் ராஜேஷூம் அவரிடம் பேசினோம். எங்களை விட மணிகண்டன் இந்த கதையை நம்பினார். நடிகராக மட்டுமல்லாது கதைக்கும் அவர் நிறைய இன்புட் கொடுத்தார். இந்த கதை அறுசுவை உணவு சாப்பிட்ட உணர்வு கொடுக்கும் என்றார்.

நடிகர் ஜென்சன் பேசுகையில், ரொம்ப ஜாலியாக, எதார்த்தமாக ஆரம்பித்த படம் இது. யூடியூப் ஆரம்பித்து இப்போது படம் செய்யும் அளவுக்கு நாங்கள் வளர்ந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஓரளவுக்கு நல்ல நடிகன் என எல்லாரும் சொல்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் பிரசன்னாதான். இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். மணிகண்டனின் மிகப்பெரிய ரசிகன் நான். குரு சாரின் ‘பாட்டல் ராதா’ படத்திற்கும் வாழ்த்துக்கள் என்றார்.
நடிகை ஷான்வி பேசுகையில், இந்தப் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த தயாரிப்பாளர் வினோத், இயக்குநர் ராஜேஷூக்கு நன்றி. நம்ம எல்லோர் வீட்டிலும் நடக்கும் கதைதான் இது. டிரெய்லர் எப்படி சிரித்து ரசித்தீர்களோ அதேபோலதான் படமும் இருக்கும் என்றார்.

நடிகர் குரு சோமசுந்தரம் பேசுகையில், இந்தப் படத்தின் கதை எனக்குப் பிடிச்ச ஜானர், சீரியஸான காமெடி கதை கொண்ட படம் இது. நான் எதிர்பார்த்திருந்த சமயத்தில் இயக்குநர் ராஜேஷ் இந்த கதையோடு வந்தார். எல்லா விதத்தில் இருந்தும் சினிமாவில் நுழையலாம். இவர்கள் யூடியூப் வழியாக வந்திருப்பது மகிழ்ச்சி. இவர்களுக்கு பார்வையாளர்கள் நீங்கள் நல்ல வரவேற்பு கொடுக்க வேண்டும். ‘விக்ரம் வேதா’, ‘காலா’வில் மணிகண்டனைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் மிகவும் கனிவானவர். தொழில்நுட்பக் குழுவினரின் உழைப்பு என்னை பிரமிக்க வைத்தது. படம் ரொம்ப நன்றாக இருக்கிறது என்றார்.

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி பேசுகையில், இது என்னுடைய குடும்ப விழா. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்கு ஒரு தயாரிப்பாளரிடம் கதை துல்கர் டேட் வாங்கி வேலை ஆரம்பிக்க இருந்த சமயத்தில் அந்தத் தயாரிப்பாளர் படத்தில் இருந்து விலகினார். அந்த சமயத்தில் எனக்கு பக்கபலமாக இருந்தது வினோத் சாரும் குமார் சாரும்தான். அந்தப் படம் நான் நினைத்த மாதிரி வந்ததற்கு காரணம் வினோத் சார்தான். அவர் எடுத்திருக்கும் படம்தான் ‘குடும்பஸ்தன்’. யதார்த்தமான கதை இது. எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்றார்.
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி பேசுகையில், என்னுடைய கனவை அடைய ஆதரவு கொடுத்த என் குடும்பத்திற்கு நன்றி. நக்கலைட்ஸூம் என் குடும்பம்தான். தொழில்நுட்பக் குழுவினர் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். முத்தமிழ், நிவி, ஜென்சன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். ஜென்சன் தமிழ் சினிமாவின் அடுத்த நாகேஷ். பிரசன்னா எனக்கு பல விஷயங்களில் வழிகாட்டியுள்ளார். அவருக்கு நன்றி. படம் சிறப்பாக வந்திருக்கிறது என்றார்.

நடிகர் மணிகண்டன் பேசுகையில், இரண்டரை வருஷத்திற்கு முன்பு ராஜேஷை இந்தக் கதைக்காக சந்தித்தேன். ‘குட்நைட்’, ‘லவ்வர்’ படம் ஏற்கனவே ஒத்துக் கொண்டதால் இந்தப் படத்தில் நான் நடித்தாக வேண்டும் என காத்திருந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. முதலில் இயக்குநர் ராஜேஷ் ஒரு அட்வென்ச்சர் கதை எழுததான் நினைத்தார். பிறகு இன்றைய தேதியில் ஒரு குடும்பம் நடத்துவதே பெரிய அட்வென்ச்சர் என்பதால் அதையே படமாக்கியிருக்கிறார். பார்வையாளர்களுக்கும் பல வழியில் இது கனெக்ட் ஆகும். குரு சோமசுந்தரத்தின் ‘பாட்டல் ராதா’ படமும் ‘குடும்பஸ்தன்’ படத்தோடு வருகிறது. நான் ஒரு படம் பார்த்து எமோஷனல் ஆகி அழுவது அரிது. அது ’பாட்டல் ராதா’ படத்தில் நடந்திருக்கிறது. அவருக்கும் வாழ்த்துக்கள். ‘குடும்பஸ்தன்’ படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கொங்கு தமிழை நக்கலைட்ஸ் டீம் எனக்கு பயிற்சி கொடுத்தார்கள். பிரசன்னா எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார்.
டெக்னிக்கல் டீமும் கஷ்டப்பட்டு சிறப்பாக செய்திருக்கிறார்கள். கோபப்படாத கனிவான தயாரிப்பாளர் வினோத். எங்கள் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. என் வாழ்க்கையில் அதிக சண்டை போட்ட நபர்களில் இயக்குநர் ராஜேஷூம் ஒருவர். அது எல்லாம் படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காகதான். அதை சரியான விதத்திலும் அவர் புரிந்து கொண்டார். சினிமாவில் சின்ன பெயர் எடுக்கவே பெரிய உழைப்பு தேவையாய் இருக்கிறது. நான் செய்த சின்ன வேலைகளுக்கு எல்லாம் பெரிய பாராட்டு கொடுத்த அனைவருக்கும் என்றார்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், காரத்தொழுவு கிராமத்தில் ஊர் பொதுச்சாவடி முன்பாக அஇஅதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 108 ஆவது பிறந்தநாள் மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை உடற்கல்வி ஆசியர்கள் கார்த்திக், […]
மாவட்ட செய்திகள்திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், காரத்தொழுவு கிராமத்தில் ஊர் பொதுச்சாவடி முன்பாக அஇஅதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 108 ஆவது பிறந்தநாள் மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை உடற்கல்வி ஆசியர்கள் கார்த்திக், அழகேசன், மணிகண்டன், ரத்தினமூர்த்தி, வெங்கடேஷ் ஆகியோர் நடத்தினர். முன்னதாக காலை 9 மணியளவில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக சார்பு அணி மாவட்ட செயலாளர் சேம்பர் கண்ணன் ( எ ) கோபாலகிருஷ்ணன் துவங்கி வைத்தார். மடத்துக்குளம் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் மகாலட்சுமி பெரியசாமி மற்றும் அக்கட்சியின் கிளைக்கழக செயலாளர்களான J.செந்தில் ( எ ) பொன்னுச்சாமி , A.ராசலிங்கம், A.கோவிந்தராஜ் , K.கிருஷ்ணன், K.K.நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாலை வரை நடைபெற்ற போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் , மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சி.மகேந்திரன் பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட சுமார் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் காளீஸ்வரன், மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய கழக துணை செயலாளர் சரவணன் மற்றும் கட்சியின் தொண்டர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், பாலா இயக்கத்தில், அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், ரிதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “வணங்கான்”. கதைப்படி.. உலகையே நடுங்க வைத்த சுனாமி பேரலை யின் போது பெற்றோரை இழந்து, […]
விமர்சனம்வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், பாலா இயக்கத்தில், அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், ரிதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “வணங்கான்”.
கதைப்படி.. உலகையே நடுங்க வைத்த சுனாமி பேரலை யின் போது பெற்றோரை இழந்து, அனாதையாக திரியும் அருண் விஜய் ( கோட்டி ), அதேபோல் அழுது கொண்டிருக்கும் பெண் குழந்தைக்கு ஆதரவு கொடுத்து, தன் தங்கையாக வளர்க்கிறார். இவருக்கு காது கேட்காது, வாய் பேசவும் முடியாது. ஆனால் பயங்கரமான முன் கோபக்காரர். இவர்கள் இருவருக்கும் பாதிரியார் ஆதரவாக இருக்கிறார். தன் கண்முன்னே தவறு நடந்தால் உடனடியாக தட்டிக்கேட்கும் சுபாவம் கொண்ட இவர், ஊர் வம்பு வேண்டாம் என ஆதரவற்றோர் இல்லத்தில் வேலை வாங்கித் தருகிறார் பாதிரியார்.

அங்கு பார்வையற்ற பெண்கள் குளிப்பதை மூன்றுபேர் பார்த்து ரசிக்கிறார்கள். அதை உணர்ந்த பெண்கள் கதவை பூட்டி விட்டு அருண் விஜயிடம் தகவல் கூற, அதில் இருவரை கொடூரமான முறையில் கொலை செய்கிறார். பின்னர் தானாகவே போலீஸில் சரணடைகிறார். எதற்காக கொலை செய்தார் என்பதை போலீசாரிடம் கூற மறுக்கிறார். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் ஒருவரை கொலை செய்கிறார். எதற்காக கொலை செய்தார் என்கிற காரணத்தைத் தேடி போலீஸாரிடம் சொல்ல மறுக்கிறார்.
போலீஸார் கொலைக்கான காரணத்தை தேடி கண்டுபிடித்தார்களா இல்லையா என்பது மீதிக்கதை…

பாலா இயக்கத்தில் ஏற்கனவே விக்ரம் பிதாமகன் படத்தில் ஏற்று நடித்த சித்தா கதாப்பாத்திரம் தான் வணங்கானில் கோட்டி கதாப்பாத்திரம். நடை, உடை, பாவனை அனைத்தும் பிதாமகன் சாயலில் அப்படியே அச்சு பிசகாமல் நடித்திருக்கிறார் அருண் விஜய். இந்த படத்தின் மூலம் நல்ல நடிகராக உருமாறி இருக்கிறார் அருண் விஜய். அவரது நடிப்பில் வெளிவந்துள்ள எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்பார்ப்பு இந்தப் படத்திற்கு இருந்தது.
வழக்கமான பாலா படங்களுக்கு ஒருவித எதிர்பார்ப்பு ஏற்படும். ஆனால் இந்தப் படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதுமைகள் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு பாலா படம் வெளியாவதால், பாலாவுக்காக தியேட்டருக்கு வரும் கூட்டம் குறையவில்லை என்றாலும், மிஞ்சியது ஏமாற்றமே. சமுத்திரக்கனி வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மிஷ்கின் இந்தப் படத்தின் மூலம் நடிப்பில் தேரியிருக்கிறார்.
கதாநாயகி, தங்கை கதாப்பாத்திரம் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அரவிந்த் ஶ்ரீனிவாசன் இயக்கத்தில், கிஷன்தாஸ், ஸ்மிருதி வெங்கட், ராஜ் அய்யப்பன், பால சரவணன், கீதா கைலாசம், ஶ்ரீஜா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “தருமன்”. கதைப்படி.. சி.ஆர்.பி.எப் ( Central Reserve Police Force ) […]
விமர்சனம்ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அரவிந்த் ஶ்ரீனிவாசன் இயக்கத்தில், கிஷன்தாஸ், ஸ்மிருதி வெங்கட், ராஜ் அய்யப்பன், பால சரவணன், கீதா கைலாசம், ஶ்ரீஜா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “தருமன்”.
கதைப்படி.. சி.ஆர்.பி.எப் ( Central Reserve Police Force ) அதிகாரியாக இருக்கும் கிஷன்தாஸ், ஒரு ஆபரேஷனில் தன் நண்பரை சுட்டுக் கொன்றதற்காக பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். அந்த விசாரணைக்காக சென்னைக்கு வந்து நண்பரின் வீட்டில் தங்குகிறார். அந்த சமயத்தில் ஸ்மிருதி வெங்கடை பார்க்க, இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி, இருவர் வீட்டிலும் பேசி நிச்சயதார்த்தம் செய்ய நாள் குறிக்கப்படுகிறது.

அந்த சமயத்தில் ஸ்மிருதி வெங்கட் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவரும் ராஜ் அய்யப்பன் வீட்டிற்கு வருகிறார். அப்போது ஸ்மிருதி ராஜ் அய்யப்பனை கொலை செய்துவிடுகிறார். அதே நேரத்தில் கிஷன்தாஸ் ஸ்மிருதி வீட்டிற்குள் வருகிறார். இருவரும் சேர்ந்து அந்த கொலையை மறைக்க முயற்சிக்கின்றனர். சிறுது நேரத்தில் ராஜ் அய்யப்பனின் அம்மாவும் மகனைத் தேடி ஸ்மிருதி வீட்டிற்கு வருகிறார்.
ராஜ் அய்யப்பனை எதற்காக ஸ்மிருதி கொலை செய்தார், இருவரும் கொலையை மறைத்தார்களா ? மாட்டிக்கொண்டார்களா ? என்பது மீதிக்கதை..

சஸ்பென்ஸ், த்ரில்லர் கதை விருவிப்பாக இல்லாமல், நிதானமாக நகர்கிறது. கிஷன்தாஸ், ஸ்மிருதி வெங்கட் இருவருக்குமான காதல் காட்சிகளை அதிரித்திருக்கலாம். திரைக்கதையில் இயக்குநர் கொஞ்சம் கவணம் செலுத்தியிருக்கலாம். பால சரவணன், கீதா கைலாசம் இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
12 வருடங்களுக்கு முன் தயாரான ஒரு படம் சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிறது என்றால் இது சினிமா வரலாற்றிலேயே இதுவரை நிகழாத […]
சினிமா12 வருடங்களுக்கு முன் தயாரான ஒரு படம் சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிறது என்றால் இது சினிமா வரலாற்றிலேயே இதுவரை நிகழாத அதிசயம். அதை நிகழ்த்தி காட்டி இருக்கிறது இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘மதகஜராஜா’ திரைப்படம்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, விஜய் ஆண்டனி (இசை) உள்ளிட்டோரின் கூட்டணியில் பாரம்பரியம் மிக்க ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் தயாரிப்பில் உருவான ‘மதகஜராஜா’ (MGR) திரைப்படம் தடைகள் பல கடந்து லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பது போல வெளியாகி இந்த பொங்கல் ரேஸில் நம்பர் 1 குதிரையாக ஓடிகொண்டு இருக்கிறது. அந்தவகையில் பொதுமக்களுக்கு உண்மையான பொங்கல் கொண்டாட்டமாக ‘மதகஜராஜா’ படம் அமைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

13 வருடங்களுக்கு முன் இந்தப்படம் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இப்போது வரை இந்தப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கும் பத்திரிகை, மீடியா, சோஷியல் மீடியா உள்ளிட்ட ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பை ‘மதகஜராஜா’ படக்குழுவினர் இன்று சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடத்தினர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது.. எனக்கு தெரிந்து என்னுடைய எந்த படத்திற்கும் நான் சக்சஸ் மீட் வைத்தது கிடையாது. கடைசியாக ஹிட் அடித்த அரண்மனை_4 படம் உட்பட, என் படம் வெளியான பின்பு அடுத்த படத்திற்கு அப்படியே நகர்ந்து விடுவேன். ஆனால் இந்த படம் அதை எல்லாவற்றையும் மீறிய ஒரு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. மற்ற படங்களை விட இது ஒரு ஸ்பெஷல். 13 வருடம் கழித்து இந்த படம் வருகிறது, என்ன பெரிதாக சாதித்து விடப்போகிறது என்று கூட திரையுலகில் சிலர் சொன்னார்கள். ஆனால் மக்களுக்கு இந்த படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் இந்த படத்தை நாங்கள் அறிவித்த சமயத்திலேயே எங்களுக்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு அபரிமிதமானது. தயாரிப்பாளர் மனோகர் பிரசாத், இந்தப் படத்தைப் பார்த்து அதை ரிலீஸ் பண்ணுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட திருப்பூர் சுப்பிரமணியம். ஏசி சண்முகம். ஏ சி எஸ் அருண்குமார். உறுதுணையாக இருந்த மதன் உள்ளிட்ட பலருக்கு நான் இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படம் வெற்றி பெறும் என நான் நம்பினேன். ஆனால் நூற்றுக்கு 99 சதவீதம் பேர் படம் பார்த்துவிட்டு இது நன்றாக இருக்கிறது என்று சொன்னபோது என்னால் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அவர்களுக்கு என்னால் திருப்பிக் கொடுக்க முடிந்தது என் நன்றியும் சில சொட்டு கண்ணீரும் தான். இந்த படத்தில் நடித்த மணிவண்ணன், மனோபாலா, 13 வருடங்கள் கழித்தும் கூட இப்போதும் ரசிகர்களின் கனவுக்கன்னிகளாக வலம் வரும் இந்த படத்தின் கதாநாயகிகளான அஞ்சலி, வரலட்சுமி ஆகட்டும் அனைவருக்கும் நன்றி. வரலட்சுமி கடைசி நேரத்தில் தான் இந்த படத்திற்குள்ளே வந்தார். முதலில் வேறு கதாநாயகி நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் ஒரு வாரம் தள்ளித்தான் வர முடியும் என்கிற சூழல். முதல் நாள் திடீரென வரலட்சுமியை அழைத்து விஷயம் சொன்னதும் உடனே கிளம்பி வந்தார். கலகலப்பு, மதகஜராஜா என என்னுடைய இரண்டு சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்த ராசியான ஹீரோயின் அஞ்சலி. கார்த்திக், விஷால் போன்ற ஹீரோக்கள் என்னை முழுமூச்சாக நம்பி தங்களை ஒப்படைத்து விடுவார்கள். ஒரு கதாநாயகி அப்படி ஒப்படைப்பது என்பது சிரமம் தான். ஆனால் அஞ்சலி அப்படி இயக்குனரை நம்பி தன்னை ஒப்படைக்கும் நடிகை.

சந்தானமும் நானும் எனது பல படங்களில் பணியாற்றி இருக்கிறோம். இந்த படத்திற்காக 40 நாட்கள் கால்சீட் ஒதுக்கி கொடுத்து நடித்தார். 13 வருடம் கழித்து படம் சிறப்பாக இருக்கு என சொல்கிறார்கள். ஆனால் பாடல்களும் பின்னணி இசையும் கூட அதே பிரஷ் ஆக இருக்கிறது என்று பலரும் சொல்கிறார்கள். பாட்டு மட்டும் இல்லாமல், ஹீரோவுக்கான பின்னணி இசை ஆகட்டும், காமெடிக்கான பின்னணி இசை ஆகட்டும், என்னுடைய படங்களிலேயே இது அதிக பெஸ்ட் என்று சொல்லலாம். அதற்காக விஜய் ஆண்டனிக்கு நன்றி.

இந்த படத்தில் இடம்பெற்ற தொம்பைக்கு தொம்பை என்கிற பாடலை விஜய் ஆண்டனியை டார்ச்சர் செய்து ஐந்து நாட்கள் வேலை வாங்கி உருவாக்கினேன். ஆனால் பாடல் வெளியான சமயத்தில் அவ்வளவு வரவேற்பு பெறவில்லை என்று எனக்கு வருத்தம் இருந்தது. ஆனால் இப்போது பார்த்தால் அந்த பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகி உள்ளது. வானமாமலை என்பவர் எழுதிய புத்தகத்திலிருந்து தூய தமிழ் வார்த்தைகளை எடுத்து இதில் பயன்படுத்தியிருந்தோம். அதேபோல சிக்குபுக்கு ரயிலு வண்டி பாடல் இதில் வந்ததே சுவாரசியமான விஷயம். விஜய் ஆண்டனியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் வேறு ஒரு படத்திற்காக உருவாக்கி ஆனால் அவர்கள் வேண்டாம் என்று சொன்ன அந்த பாடலை போட்டு காட்டினார். அற்புதமாக இருந்தது. இதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று வாங்கிக் கொண்டேன். இப்போது எல்லா திருவிழாவிலும் இந்தப்பாடல் ஒலிக்காத இடமே கிடையாது என்பது போல இவ்வளவு பெரிய ஹிட் ஆகிவிட்டது.

மேன்மக்கள் மேன்மக்களே என்பதற்கு ஏற்ப ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தில் எந்த ஒரு விஷயத்திலும் குறுக்கீடு செய்யாமல் என்ன கேட்டாலும் கொடுத்து உதவினார்கள். இந்த மதகஜராஜா மூலம் மீண்டும் ஜெமினி பிக்சர்ஸ் கொடி பறக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த படத்திற்காக விஷால் பட்ட கஷ்டங்கள் ஏராளம். தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சியில் காரில் எல்லாம் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார். இப்போது இந்த படத்திற்கு மக்கள் கொடுத்திருக்கும் வெற்றி, நாம் உண்மையாக, நேர்மையாக முழு உழைப்பை கொடுத்தால் மக்கள் நமக்கு திருப்பி அன்பை கொடுப்பார்கள் என்பதற்கு விஷாலின் உழைப்பும் மிகப்பெரிய உதாரணம். விஷாலின் மார்க்கெட் இப்போது வரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்த படத்தின் வெற்றி என் தம்பி விஷாலுக்கு மிகப்பெரிய மருந்தாக அமைந்துள்ளது.
நான் எம்ஜிஆரின் மிக தீவிரமான ரசிகன். காலையில் கண்விழித்ததுமே ஏதோ ஒரு இடத்தில் அவரது புகைப்படமோ அல்லது போஸ்டரோ பார்த்தால் அல்லது அவரது பாடலை எங்கேயாவது கேட்டால் அன்றைய தினம் முழுவதும் சந்தோஷமாக இருக்கும். அப்படி ஒரு சென்டிமென்ட் எனக்கு இருக்கிறது. அவருடைய பெயரை இந்த படத்திற்கு வைத்ததாலோ என்னவோ அவருடைய ஆசிர்வாதமும் கூடவே அதிர்ஷ்டமும் சேர்ந்து வந்துள்ளது என்றார்.

நடிகர் விஷால் பேசும்போது, ஒரு நாள் செய்தித்தாளில் ஏதோ ஒரு விஷயம் வரும்.. மறுநாள் மறந்து விடுவார்கள்.. ஆனால் விஷாலின் நடுக்கம் உலக அளவில் ரீச் ஆகி விஷால் நல்லா இருக்கணும், விஷால் மீண்டு வரவேண்டும், விஷாலுக்கு உடம்புக்கு என்ன பிரச்சனை, விஷாலை இப்படி பார்த்ததே கிடையாது என மருத்துவர்கள், நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் இன்னும் பல வெளிநாடுகளில் இருந்து பலரும் தொடர்ந்து அன்பாக விசாரித்தார்கள். அன்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடிந்தபோது எத்தனை பேர் என்னை நேசிக்கிறார்கள், நேசிக்காதவர்கள் கூட என்னை நேசிக்க ஆரம்பித்து விட்டார்கள், பிடிக்காதவர்களுக்கு கூட என்னை பிடிக்க ஆரம்பித்து விட்டது என்பதை உணர்ந்தேன். மருத்துவர்கள் என்னிடம் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாம், உங்களுக்கு 103 டிகிரிக்கும் அதிகமான கடுமையான காய்ச்சல் இருக்கிறது என என் உடல்நிலையை காரணம் காட்டி அறிவுரை கூறினார்கள். ஆனால் நான் பிடிவாதம் பிடித்து இந்த நிகழ்ச்சிக்கு கிளம்பியதற்கு காரணம் இயக்குனர் சுந்தர் சி தான்.

இந்த 12 வருடங்களில் நாங்கள் ஒவ்வொரு வருடமும் இந்த படம் பற்றி பேசும்போது எனக்கு அவ்வளவு உற்சாகம் கொடுத்தார். அவருக்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். சண்டக்கோழிக்கு பிறகு நான் ரொம்பவே விரும்பி எதிர்பார்த்த படம் மதகஜராஜா. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூட நிச்சயம் இந்த படம் வெளிவரும் என ஊக்கம் கொடுத்தார். 12 வருடம் கழித்து ஒரு படம் வந்து மெகா பிளாக்பஸ்டர் ஆனது இந்த படமாக தான் இருக்கும். காரணம் நான்கைந்து வருடங்களாக வெளிவராமல் இருந்து வெளிவரும் படங்களை கூட மக்கள் புறக்கணித்து இருக்கிறார்கள். இறைவன் இதை தாமதப்படுத்தினாலும், வேறு படங்கள் நீங்கள் பண்ணிக் கொண்டிருங்கள் உங்களுக்கு ஒரு நல்ல நேரத்தை நான் கொடுக்கிறேன் என்று சொல்லித்தான் இந்த 9 நாட்கள் பண்டிகை தொடர் விடுமுறை காலத்தில் இந்த படம் வெளியாகும் விதமாக செய்திருக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன்.
விஷால் போதைக்கு அடிமையாகி விட்டார்.. நரம்புத் தளர்ச்சி என்பது போன்று பலர் தங்கள் கற்பனை உலகத்தில் பல செய்திகளை உருவாக்கி வெளியிட்டார்கள். நீங்கள் எப்போதும் என்னை தொடர்பு கொண்டு உண்மை என்ன என என்னிடமே கேட்டு அதை வெளியிடலாம். ஆனால் இதிலும் ஒரு நல்ல விஷயம், எத்தனை பேர் என்னை நேசிக்கிறார்கள் என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. மருத்துவமனை, டாக்டரிடம் போவது என்றால் எனக்கு பயம். ஆனால் சுந்தர்.சி படங்களில் நடிப்பது என்றால் எனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சீக்கிரமே குணமாகும். சந்தோஷமாக இருக்கும். சுந்தர் சி யின் படங்களில் நடிப்பது என்பது ஒரு மருந்து போல தான். ஒரு இயக்குநர் 30 வருடங்களாக திரையுலகில் நீடித்திருப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.
தயாரிப்பாளர் மனோகர் பிரசாத்துடன் நாங்கள் குடும்ப ரீதியாக ரொம்பவே நெருக்கம். நீண்ட நாட்களாகிவிட்டது அவருடைய முகத்தில் இப்படி ஒரு சிரிப்பை பார்த்து. தேவி தியேட்டரில் நான்கு தியேட்டர்களில் சேர்த்து மொத்தம் 8000 பேர் ஒரே நாளில் பார்த்திருக்கிறார்கள். நீங்கள் மீண்டும் முழு வீச்சுடன் இந்த திரையுலகில் வரவேண்டும். உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் வர வேண்டும். ஜிஎஸ்டி, டிடிஎஸ் எதையும் கட்ட மாட்டார்கள்.. சம்பள பாக்கி வைக்கிறார்கள்.. நம்மையே புரொமோஷன் செய்ய வைக்கிறார்கள் உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் இருந்தால் எங்களைப் போன்ற நடிகர்கள் உயிரைக் கொடுத்து வேலை செய்ய தயாராக இருக்கிறோம்.

இடையில் எனது குருநாதர் விஜய் ஆண்டனி என்னை கர்நாடக சங்கீதம் எல்லாம் பாடவைத்து, நாளை 40 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கும் லைவ் கான்சர்ட்டில் கூட என்னை பாட வைக்கப் போவதாக சொல்லி இருக்கிறார். அவருக்கு எப்படித்தான் இதற்கெல்லாம் மனசு வருகிறதோ தெரியவில்லை. 1994ல் கல்லூரியில் படிக்கும்போது நாம் இருவரும் பாடல் கம்போசிங் செய்தோம். அதன்பிறகு 2013ல் இந்த படத்திற்காக ஒரிஜினல் ஆகவே கம்போசிங் செய்தோம்.
இந்த படத்தின் எழுத்தாளராக வெங்கட் மிகப்பெரிய பலம். மலையாளத்தில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். தமிழில் குறைவுதான். இந்த படத்தின் வெற்றிக்கு அவர் ஒரு தூணாக இருந்திருக்கிறார். இத்தனை வருட அன்பான தோழி வரலட்சுமி, ஏதோ பிரிட்ஜில் வைத்தது போல அப்படியே பிரெஷ் ஆக இருக்கிறார். ஒரே ஒரு படம் தான் பண்ணி இருந்தாலும் கூட ஏதோ கல்லூரியில் படித்து நண்பர்களாக இருப்பது போல நாங்கள் பழகுவோம். நான் பல பிரச்சினைகளை, தடைகளை சந்தித்து இருக்கிறேன். ஆனால் எப்போதும் அழும் பழக்கம் கிடையாது. கண்ணாடியின் முன் நின்று பேசுவேன். எதையும் தாண்டி சென்று விடலாம் என எனக்கு நானே பேசி தைரியம் சொல்லிக் கொள்வேன். ஆனால் நான் முதன்முறையாக கண்கலங்கியது ஹனுமன் படத்தில் வரலட்சுமி நடித்த ஒரு காட்சியை பார்த்து அதற்கு தியேட்டரில் ரசிகர்களிடம் கிடைத்த கைதட்டலை பார்த்து நான் கண் கலங்கினேன்.
மீடியாக்களில் மட்டுமல்ல சோசியல் மீடியாக்களிலும் சமீப காலத்தில் ஒரு படத்திற்கு ஆதரவு கொடுத்தார்கள் என்றால் அது மதகஜராஜா படத்திற்கு தான். பிடிக்காத நபர் கூட சத்தம் இல்லாமல் சென்று இந்த படத்தை பார்த்து விட்டு வந்து ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளில், எங்கள் எம்ஜிஆரின் (மதகஜராஜா) சக்சஸ் மீட் கொண்டாடுகிறோம். இதைவிட வேறென்ன வேண்டும். மார்க் ஆண்டனியில் அவர் பெயரை பச்சை குத்தினேன். இந்தப் படத்தில் அவர் பெயர் இதில் அவர் பெயர் வைத்த டைட்டிலில் நடித்தேன். இரண்டுமே பிளாக் பஸ்டர்கள். எங்கிருந்தோ அவர் என்னை வாழ்த்துகிறார் என்றே நினைக்கிறேன்.

மதகஜராஜா எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் போகும் டிரெயின். ஏனென்றால் குடும்ப ரசிகர்களுக்கு பிடித்து விட்டது. நாளை என்னுடைய கர்நாடக சங்கீத பாடலை கேட்பதற்காக 40 ஆயிரம் பேர் வருகிறார்கள் என்பதும் விஜய் ஆண்டனிக்கு நான் பெருமை செலுத்தப் போகிறேன் என்பதையும் நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
மக்கள் எந்த அளவிற்கு காய்ந்து போய் இருக்கிறார்கள் என்பதை இந்த படத்தின் அந்த நான்ஸ்டாப் 20 நிமிட காமெடி காட்சியை அவர்கள் ரசித்த விதத்தில் இருந்து தெரிந்து கொண்டேன். சந்தானத்திற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நம் காம்பினேஷன் எப்போதுமே ராக்கிங் தான். எல்லோரும் ஒரு வெற்றிடம் இருக்கிறது சொல்கிறார்கள் அவர்கள் சொல்வது போல சந்தானம் மீண்டும் சில படங்களிலாவது விண்டேஜ் காமெடியனாக வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
அடுத்ததாக இயக்குனர் கவுதம் மேனனுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற இருக்கிறேன். அஜய் ஞானமுத்து டைரக்ஷனில் ஒரு படம், துப்பறிவாளன்_2 என வரிசையாக படங்கள் இருக்கிறது. மீண்டும் சுந்தர்சியுடன் இணைந்தும் பணியாற்ற காத்திருக்கிறேன். அவர் சொல்லிவிட்டால் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு அடுத்த நாளே கிளம்பி வந்து விடுவேன். மீண்டும் எங்கள் காம்பினேஷனில் எப்போது படம் வரப்போகிறது என்று மக்கள் கேட்கிறார்கள். இதற்கிடையில் எங்களுடைய ஆம்பள படத்தை ரீ ரிலீஸ் செய்யப் போகிறோம் என்றார்.
ரெட்ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ரவி மோகன், நித்யா மேனன், யோகிடுக்கிறார்க பாபு வினய், லால், ஜான் கொகேய்ன், லெட்சுமி ராமகிருஷ்ணன்,டி.ஜெ. பானு ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “காதலிக்க நேரமில்லை”. கதைப்படி.. பெங்களூரில் வசிக்கும் சித்தார்த் ( […]
விமர்சனம்ரெட்ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ரவி மோகன், நித்யா மேனன், யோகிடுக்கிறார்க பாபு வினய், லால், ஜான் கொகேய்ன், லெட்சுமி ராமகிருஷ்ணன்,டி.ஜெ. பானு ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “காதலிக்க நேரமில்லை”.
கதைப்படி.. பெங்களூரில் வசிக்கும் சித்தார்த் ( ரவி மோகன் ) மாடலிங் பெண்னை காதலிக்கிறார். திருமணத்திற்கு பிறகு குழந்தை வேண்டாம் என காதலியிடம் கூறுகிறார். இதற்கிடையில் நண்பர்களுடன் ஸ்பெர்ம் சென்டரில் வருங்கால தேவைக்காக ஸ்பொர்ம் கொடுத்து வைக்கிறார். பின்னர் சித்தார்த்துக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. அந்த பெண் வராததால் நிச்சயதார்த்தம் நின்று போகிறது.

இதேபோல் சென்னையில் வசிக்கும் ஸ்ரேயா ( நித்யா மேனன் ) காதலினால் ஏமாற்றப்பட்டு வேதனையில் இருக்கிறார். ஆண் துணை இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார். ஃபெர்ட்டிலிட்டி சென்டரில் ஸ்பெர்ம் டோனர் மூலம் தாயாகவும் ஆகிறார். தனது குழந்தையின் தந்தை யாராக இருக்கும் என டோனரின் முகவரியைத் தேடி செல்கிறார். அங்கு சித்தார்த், ஸ்ரேயா நண்பர்களாக ஆகிறார்கள்.

வெவ்வேறு எண்ணங்கள் கொண்ட இருவரும் நண்பர்களாக தொடர்ந்தார்களா ? காதலர்களாக இணைந்தார்களா ? என்பது மீதிக்கதை..
இன்றைய காலகட்டத்தில் நகர்புறங்களில் பெரும்பாலான இடங்களில் ஃபெர்ட்டிலிட்டி சென்டர்கள் அதிகமாக உருவாகிவருகிறது. துணை இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் சிங்கிள் பெற்றோர், வளர்ந்துவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என காலாச்சாரத்திற்கு மாற்றான சிக்கலான கதையை தேர்வுசெய்து, சுவாரஸ்யமாக திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆங்காங்கே சலிப்பு தட்டுகிறது. இருந்தாலும் பிரபல இயக்குநர்கள் யாரும் தொடாத இந்த சேனரை தேர்வு செய்வதற்கே தைரியம் வேண்டும்.

ரவி மோகன் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வித்தியாசமான கதைகளை தேர்வுசெய்து நடிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ள நித்யா மேனன் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் வினய், யோகி பாபு உள்ளிட்ட நடிகர், நடிகைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.