ரெய்ன் ஆப் ஆரோஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில், சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில், ராகவ் மிர்தாத் இயக்கத்தில், ராஜூ, ஆதித்யா, பவ்யா, மைக்கேல், விக்ராந்த், சார்லி, சரண்யா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “பன் பட்டர் ஜாம்”. கதைப்படி.. சந்த்ரு ( […]
விமர்சனம்
M/s. JDS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’. ஆகஸ்ட் 1 அன்று வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு […]
சினிமா
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் ஆகியோர் இப்படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினர் […]
சினிமா
எல்ரெட்குமார் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஶ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “விடுதலை-2”. கதைப்படி… கைது செய்யப்பட்ட மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியாரை போலீசார் காட்டப்பாதையில் அழைத்துச் செல்கின்றனர். அப்போது தன்னுடைய […]
விமர்சனம்எல்ரெட்குமார் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஶ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “விடுதலை-2”.
கதைப்படி… கைது செய்யப்பட்ட மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியாரை போலீசார் காட்டப்பாதையில் அழைத்துச் செல்கின்றனர். அப்போது தன்னுடைய இளமைக்காலத்தில் தான் கம்யூனிஸ்டு தொண்டனாக உருவானதிலிருந்து, காதல், போராட்டம், இல்லற வாழ்க்கை, அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக, பொதுமக்களுக்கு ஆதரவாக, கருப்புச் சட்டையும், சிவப்புத் துண்டும் போராடியவிதம் என பழைய சம்பவங்களை போலீசாரிடம் கதையாகக் கூறுகிறார். அதேபோல் உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இவரது கைதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டுகின்றனர். அதேநேரத்தில் மக்கள் படையைச் சேர்ந்த இளைஞர்கள் பெருமாள் வாத்தியாரை, போலீசாரிடமிருந்து மீட்க திட்டம் தீட்டி ஆயுதங்களுடன் புறப்படுகின்றனர்.

போலீசாரின் பிடியிலிருந்து மக்கள் படையினர் பெருமாள் வாத்தியாரை மீட்டார்களா ? அதிகாரிகளின் திட்டம் நிறைவேறியதா ? பெருமாள் வாத்தியார் என்ன ஆனார் என்பது மீதிக்கதை…

பெருமாள் வாத்தியார் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, கதாப்பாத்திரமாவே வாழ்ந்திருக்கிறார். நடை, உடை, உடல் மொழியால் பழைய கம்யூனிஸ்ட் தலைவர்களை ஞாபகப்படுத்துகிறார். அதிகார வர்க்கத்தினரின் அடக்குமுறைக்கு எதிராக, கூலி உயர்வு கேட்டு, தொழிலாளர்களை தன்னலம் கருதாது கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றுதிரட்டி போராடுவது, சனாதனத்திற்கு எதிராக, எல்லோருக்கும் எல்லாம் எனும் திராவிட சித்தாந்தம் என பழைய சம்பவங்களை நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

முதல் பாகத்தில் நாயகானாக அறியப்பட்ட சூரி, பணியின் போது தனக்கு கிடைத்த அனுபவங்களை கடிதம் மூலம் தனது தாய்க்கு தகவல் சொல்வது போல் படம் நகர்கிறது. பெரும்பாலான காட்சிகளில் விஜய் சேதுபதி சூரிக்கு வாய்ப்பு இல்லை என்றாலும், அவ்வப்போது அவரது குரல் திரையில் ஒலிக்கிறது.
படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
முதல் பாகம் அளவுக்கு சுவாரஸ்யம் இல்லை என்றாலும், கடந்தகால வரலாற்றை அறிந்துகொள்ள அனைவரும் காணவேண்டிய படம்.
ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான “பரோஸ்”, திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி […]
சினிமாஆசிர்வாத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான “பரோஸ்”, திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை இப்படத்தை வழங்குகிறார். இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு படக்குழுவினர் கலந்துகொள்ள, கோலாகலமாக நடைபெற்றது.,
இந்நிகழ்வினில், வசனகர்த்தா ஆர்.பி. பாலா பேசியதாவது…
மோகன்லாலுடன் புலிமுருகன் படத்தில் பணியாற்றினேன் பின்னர் இப்படத்தில் பணியாற்றியுள்ளேன். 3 வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக இப்படம் ஆரம்பித்தது. நான் இதுவரை 2டியில் தான் பார்த்திருக்கிறேன். இன்று தான் இங்கு டிரெய்லர் 3 டியில் பார்த்தேன். இந்தளவு நேர்த்தியாக ஒரு திரைப்படம் இந்திய சினிமாவில் வந்ததில்லை. டெக்னீசியன்ஸ் எல்லோருமே மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளனர். இந்தப்படத்தில் பணியாற்றியது மிகப்பெரிய பாக்கியம். மோகன்லாலுடன் பணிபுரிந்த பிறகு தான், எனக்கு ஒரு அடையாளம் கிடைத்தது. எனது வாழ்க்கையைப் புலி முருகனுக்கு முன்னால், பின்னால் என்றே சொல்லலாம். அவரில்லாமல் நான் இல்லை. எனக்கு இந்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் பேசியதாவது… பரோஸ் என்னுடைய அறிமுகத் திரைப்படம், இது மோகன்லாலின் முதல் படைப்பு. அவர் இயக்கும் முதல் படத்தில் நான் இசையமைப்பாளராக அறிமுகமாவது மகிழ்ச்சி. பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், ‘பரோஸ்’ படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார் வாழ்த்துகள். 2019ல் அமெரிக்காவில் ஒரு போட்டியில் வெற்றிபெற்று வந்த பிறகு, முதல் ஆளாக மோகன்லால் தான் வாழ்த்தினார். பின்னர் இந்தப்படம் பற்றிச் சொல்லி, இசையமைக்க வேண்டும் என்றார். மிகப்பெரிய சந்தோசம். கோவிட் வந்தது, அந்த தடைகளைத் தாண்டி, இப்போது படம் வருகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நானும் நிறைய இசை கற்றுக்கொண்டுள்ளேன். எனக்கு முழு ஆதரவாக இருந்த மோகன்லாலுக்கு நன்றி. இப்படத்தில் பணியாற்றியுள்ள இசைக் கலைஞர்கள், பாடகர்கள் அனைவருக்கும் நன்றி. கண்டிப்பாக இப்படம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் என்றார்.
கிரியேடிவ் ஹெட் ராஜிவ் குமார் பேசியதாவது… நான் இந்தப் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து வேலை பார்த்தது ஏதேச்சையான ஒரு அதிசயம். இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டிச்சாத்தான் படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றினேன். இத்தனை வருடங்கள் கழித்து, முழுமையான 3டி படத்தில் மோகன்லாலுடன் இணைந்து வேலை பார்த்தது மகிழ்ச்சி. அவர் எப்போதும் எனக்கு இனிய நண்பராக இருந்து வருகிறார். அவருடைய கற்பனையை உருவாக்கும் இந்தப் படத்தில் பணிபுரிந்தது, நல்ல அனுபவமாக இருந்தது. மோகன்லால் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் கலக்கியிருக்கிறார். முக்கியமாக டெக்னாலஜுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். படத்தில் நிறைய டெக்னாலஜு இருக்கிறது, ஆனால் அதைத்தாண்டி நடிகர்களின் நடிப்பு தான் உங்களைக் கவரும். இந்தப்படம் பார்க்கும் போது 3டி என்பதை மறந்து விடுவார்கள். மோகன்லால் மிகச்சிறந்த நடிகர், அவர் உருவாக்கிய ஃபேண்டஸி கதாப்பாத்திரங்களுடன் அவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். லிடியன் இத்தனை இளம் வயதில் முதிர்ச்சியான இசையைத் தந்துள்ளார். பாலா மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். பல மொழிகளில் அவர் தான் டயலாக் தந்துள்ளார். இப்படம் மிக அர்ப்பணிப்புடன் மிகப்பெரிய உழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது, கண்டிப்பாக எல்லோரையும் கவரும் என்றார்.

நடிகர், இயக்குநர் மோகன்லால் பேசியதாவது… 47 வருடமாக திரைத்துறையில் இருக்கிறேன். இயக்குநராக என் முதல் படம். எப்படி இது நடந்தது ? என எல்லோரும் கேட்டார்கள், இது அதுவாகவே நடந்தது, அவ்வளவு தான். இது ஒரு ஃபேண்டஸி, அட்வென்சர் படம். முழுக்க 3டியில், இரண்டு கண்களில் பார்ப்பது போல, இரண்டு கேமராவை வைத்து, படம்பிடித்துள்ளோம். அதை எடிட் செய்து பார்க்கும் போது, புது அனுபவமாக இருக்கும். இப்படத்தில் மிக முக்கியமான திறமையான கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் இப்படத்தில் பணியாற்றியுள்ளார். ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், ‘பரோஸ்’ படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். மிகச்சிறந்த கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். லிடியன் முதன் முதலில் எங்களைப் பார்க்க வந்த போது 13 வயது தான், மிகச்சிறந்த இசையைத் தந்துள்ளார். 2 நடிகர்கள் தான் இந்தியா, மற்றவர்கள் எல்லோரும் போர்ச்சுகல், ஸ்பெயின், க்ரீஸ், ரஷ்யா என நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர். பிரிடிஷ் குழந்தை தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. படத்தின் கதைப்படி ஒரு இன்னொசன்ஸான இளமையான இசை வேண்டும் என்பதால் தான், லிடியனை அழைத்தேன். அவரும் மிகச்சிறப்பான இசையைத் தந்துள்ளார். இப்படத்தில் பெரும் துணையாக இருந்த ராஜிவ் குமாருக்கு நன்றி. இப்போது கூட வேலை நடந்து வருகிறது. படத்தில் ஒரு அனிமேடட் கேரக்டர் வருகிறது. இங்குள்ள ஒருவரை நடிக்க வைத்து, அதைத் தாய்லாந்து கலைஞர்களை வைத்து, அனிமேடட் கேரக்டராக மாற்றியுள்ளோம். மிகப்பெரிய உழைப்பு. பாலா, அவரும் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். ஒரு மேஜிக் உலகிற்கு இப்படம் உங்களை அழைத்துச் செல்லும். உங்களுக்குள் இருக்கும் குழந்தை மனதை, இப்படம் எழுப்பி விடும். அனைவரும் ரசிப்பீர்கள். இப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி என்றார்.
பரோஸ் எனும் பூதத்திற்கும், ஒரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை ஃபேன்டஸி கலந்து, அனைவரும் ரசிக்கும் வகையில், பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மோகன்லால்.
சென்னையைச் சேர்ந்த 11 வயது இளம் வீரர் ரிவான் தேவ் பிரீத்தம், இந்திய தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப் (International Karting Championship) பட்டத்தை இருமுறை வென்றுள்ளார். மேலும், 2024 அக்டோபர் மாதத்தில் ஸ்பெயின் நாட்டின் வலென்சியாவில் நடைபெற்ற FIA மோட்டார்ஸ்போர்ட் கேம்ஸில் […]
இந்தியா தமிழகம்சென்னையைச் சேர்ந்த 11 வயது இளம் வீரர் ரிவான் தேவ் பிரீத்தம், இந்திய தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப் (International Karting Championship) பட்டத்தை இருமுறை வென்றுள்ளார். மேலும், 2024 அக்டோபர் மாதத்தில் ஸ்பெயின் நாட்டின் வலென்சியாவில் நடைபெற்ற FIA மோட்டார்ஸ்போர்ட் கேம்ஸில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார்.

இளம் சாதனையாளரான ரிவான் தமிழ்நாடு மாண்புமிகு துணை முதலமைச்சர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான, உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில், இளம் வீரருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள காசோலையை
துணை முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார்.

தமிழக அரசின் புதிய முன்னோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்தின் கீழ், மோட்டார் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர் ஒருவருக்கு அரசு நிதியுதவி வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இச்சாதனை, தமிழக விளையாட்டுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் […]
சினிமா1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவும் சென்னை வர்த்தக மையத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முன்னிலையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த படங்களின் ஹிட் பாடல்களைப் பாடி அசத்தினார்கள். அடுத்து வந்த தப்பாட்டம் அரங்கை அதிரவைத்து அடங்கியது.
இவ்விழாவில் அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, ஒருமுறைதான் சிவகுமார் சாரை சந்தித்தேன். அவர் ஓர் அற்புதமான மனிதர். நாம் பலரையும் இழந்துவிட்டோம். சிவகுமார் அவர்கள்தான் தமிழ் சினிமாவுக்கே தந்தையாக இருந்துவருகிறார். 25 ஆண்டு விழாவை கொண்டாடவேண்டும் என்று பாலாவிடம் கேட்டேன். நான் என்ன செய்துவிட்டேன். எனக்கு ஏன் விழா எடுக்கிறீர்கள் என்றார். நிச்சயமாக விழா எடுத்தே தீரவேண்டும் என்று அப்போது உறுதியாக நினைத்தேன். சினிமாவில் சாதனை படைத்த பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரையா போன்றவர்களை நாம் பாராட்டவில்லை. இனிமேலாவது நாம் எல்லோருக்கும் விழா எடுத்துப் பாராட்டத் தொடங்கவேண்டும் என்று சுருக்கமாகப் பேசினார்.

நிகழ்வின் இடையே தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் மணிரத்னம் முன்னிலையில் இயக்குநர் பாலாவுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர். பொன்னாடையுடன் மேடையேற்றி தயாரிப்பாளர்கள் தாணு, தியாகராஜன், கதிரேசன், சிவா, தனஞ்ஜெயன் போன்றவர்கள் பாலாவின் இயக்கத்தைப் பற்றியும் அவரது கடும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிப் பேசினார்கள். அடுத்து பாலாவுடன் கதை விவாதங்களில் ஈடுபட்ட பவா செல்லதுரை, சிங்கம்புலி, அஜயன் பாலா, யூகி சேது ஆகியோரை இயக்குநர் மிஷ்கின் சுவாரசியமான கேள்விகளுடன் பேட்டி எடுத்தார்.
விழா தொடங்கிய சில நிமிடங்களில் பரபரப்பாக அரங்கிற்குள் நுழைந்தார்கள் சிவகுமாரும் சூர்யாவும். முதலில் சூர்யா பேச அழைக்கப்பட்டார். அப்போது நடிகர் சிவகுமார், இயக்குநர் பாலாவுக்கு தங்கச் செயினை அணிவித்து மகிழ்ந்தார். இயக்குநர் பாலாவின் மீதான பேரன்பையும், நன்றியையும் தன் பேச்சில் சூர்யா நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார்.

நடிகர் சூர்யா பேசும்போது, அண்ணன் பாலாவின் ‘சேது’ திரைப்படம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நடிகரால் இப்படியெல்லாம் நடிக்க முடியுமா ? ஒரு இயக்குநரால் இப்படி ஒரு படத்தை இயக்கமுடியுமா என்று நினைத்தேன். பல நாட்கள் சேதுவின் தாக்கம் இருந்தது. அடுத்த படம் உன்னை வைத்து இயக்குகிறேன் என பாலா சொன்ன ஒரு வார்த்தை எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. 2000 ஆம் ஆண்டு எனக்கு அந்த தொலைபேசி அழைப்பு வரவில்லை என்றால் எனக்கு இந்த வாழ்க்கையே இருந்திருக்காது.
‘நந்தா’ படம் பார்த்துவிட்டு தான் கவுதம் வாசுதேவ் மேனன் ‘காக்க காக்க’ படத்தில் நடிக்க அழைத்தார். அதன்பிறகு இயக்குநர் முருகதாஸ் அழைத்தார். இவை எல்லாவற்றிற்கும் காரணம் இயக்குநர் பாலாதான். உறவுகளுக்கு தனது படங்களில் பாலா மதிப்புக் கொடுப்பார். பாலா அண்ணன் என்கிற ஒரு வார்த்தை வெறும் வார்த்தையல்ல. அது ஓர் உறவு. நிரந்தரமான உறவு. இந்த வாழ்க்கை கொடுத்ததற்கு என்னுடைய அன்பும், மரியாதையும். ‘வணங்கான்’ முக்கியமான படமாக இருக்கும் என்று உருக்கமாகப் பேசினார் சூர்யா.
சூர்யா பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பாலாவிடம் தொகுப்பாளினி கேட்க, மிகுந்த தயக்கத்துடன் ஓர் அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார். சூர்யா முன்னே நான் சிகரெட் பிடிக்கமாட்டேன். தம்பி வருத்தப்படுவான். ஒருமுறை படப்பிடிப்பில் மறைந்து சிகரெட் குடித்தேன். ஆனால் படப்பிடிப்பில் எத்தனை முறை சிகரெட் குடித்தேன் என்று நினைவு வைத்து கேட்பான். என் உடம்பு மேல என்னைவிட அவனுக்கு அக்கறை அதிகம் என்று நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் பாலா.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, சேது படம் வரும்போது எனக்கு 14 வயது. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எனக்கு ரொம்பவே பாதிப்பை கொடுத்தது. அவரது படங்களை எல்லாம் திரையரங்கில் பார்த்தது இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். அமரன் படம் இந்த தீபாவளிக்கு வெளியானபோது படத்தின் க்ளைமாக்ஸ் எதிர்மறை முடிவாக இருக்கிறதே என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் பாலா அண்ணனின் பிதாமகன் படம் இதேபோல தீபாவளிக்கு எதிர்மறை முடிவுடன் வந்து ஹிட் அடித்தது என்றும் சொன்னார்கள். அதே போல தான் நடந்தது. அவருடைய அவன் இவன் பட விழாவை நான் தான் தொகுத்து வழங்கினேன். இன்றும் அது என் மனதில் என் நினைவிருக்கிறது. அருண் விஜய் அண்ணன் தான் இந்த விழாவிற்கு நீ கட்டாயம் வர வேண்டும் தம்பி என கூப்பிட்டார். எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் முயற்சி செய்வதுதான் அவருடைய உண்மையான வெற்றியாக நான் பார்க்கிறேன். ஒரு தம்பியாக அவரது இந்த படத்தின் வெற்றிக்கு நான் வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

நடிகர் சிவகுமார் பேசும்போது, பாலா சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இப்போதும் சேது படத்தில் அவர் வைத்த ஷாட்டுகள் எல்லாம் எனக்கு அப்படியே நினைவில் இருக்கின்றன. கிளைமாக்ஸில் விக்ரமின் கையை நான் பிடிக்கும்போது அவர் தட்டி விட்டு செல்வார். அப்போது நான் நிமிர்ந்து பார்ப்பேன். அந்த காட்சியை எல்லாம் என்னால் மறக்கவே முடியாது என்றார்.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி பிரகாஷ் குமார் பேசும்போது, நான் சினிமாவிற்கு வருவதற்கு மிக முக்கிய தூண்டுதலாக இருந்தவர்களில் முக்கியமானவர் இயக்குநர் பாலா. அவருடைய 25வது வருட விழா என்பது எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏனென்றால் அவரது பல படங்களில் நான் இசையமைத்திருக்கிறேன். அவரது டைரக்ஷனில் நடித்திருக்கிறேன். அந்த வகையில் எனக்கு நடிப்பில் அவர்தான் குரு. ‘வணங்கான் படத்திற்கு’ நான் பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். சாம் சி.எஸ் பின்னணி இசை அமைத்திருக்கிறார் என்று கூறினார்.
இயக்குநர் விக்ரமன் பேசும்போது, தமிழ் சினிமா எவ்வளவோ மாறி இருக்கிறது. டெக்னாலஜி மாறி இருக்கிறது. எஐ தொழில்நுட்பம் பயன்படுத்தும் அளவிற்கு வந்து விட்டோம். ஆனால் மாறாத ஒன்று என்றால் அது இயக்குனர் பாலாவும் அவரது எளிமையும் மட்டும் தான் என்று கூறினார்.

இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் சரியாக போகாத நிலையில் அப்படியே சோர்வுடன் அண்ணன் பாலா ஆபீஸ் இருந்த தெரு வழியாக வந்து கொண்டிருந்தேன். அப்போது என்னை பார்த்து பாலா உள்ளே அழைத்து ஆறுதல் படுத்தினார். கண்ணீரும் விட்டார். அடுத்து உடனே என்னிடம் நான் தயாரிக்கும் படத்தை நீ இயக்குகிறாயா என்று ஒரே வார்த்தை தான் கேட்டார். அப்படி அவர் எனக்கு மறுவாழ்வு கொடுத்த படம் தான் பிசாசு. தோல்வியால் என் மீது எனக்கே நம்பிக்கை குறைந்திருந்த நிலையில் என்னை உற்சாகப்படுத்தி மேலே அழைத்து வந்தவர் அண்ணன் பாலா தான். இந்த விழாவுக்கு நான் மதியமே வந்து விட்டேன் ஏனென்றால் இது என்னுடைய வீட்டு விழா போல என்று கூறினார்.
நடிகர் கருணாஸ் பேசும் போது, இன்று நான் உங்கள் முன்னால் ஒரு நடிகனாக நிற்கிறேன் என்றால் இதற்கான அடையாளத்தை கொடுத்தது எனது குருநாதர் அண்ணன் பாலா தான். அவருடைய இந்த 25 ஆவது வருட விழாவிலும் அவர் இயக்கியுள்ள இந்த வணங்கான் பட இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன் என்று கூறினார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, என் தம்பி பாலா இந்த தேதியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்து இருப்பது போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியது என்றார்.
நடிகை வேதிகா பேசும்போது, பாலா சாரின் ஒரு மாணவியாகத்தான் நான் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன். அவர் ஒரு இயக்குநர் மட்டுமல்ல.. அற்புதமான கதை சொல்லியும் கூட என்று கூறினார்.

நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது, இயக்குனர் பாலா ஒரு ஒப்பீடற்ற உலகத்தரம் வாய்ந்த இயக்குநர். ஜாதி, மதம், இனம் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு கொரியன், அமெரிக்கன் போன்ற படங்களுடன் போட்டி போடக்கூடிய வகையில் மக்களுடைய வாழ்வியலை சரியாக படம் பிடித்து தன்னுடைய படங்களில் காட்டியவர். அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது என்று கூறினார்.
நடிகை வரலட்சுமி பேசும்போது, இயக்குநர் பாலாவை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் என்னுடைய குரு அவர்தான். அவருக்காக தான் இந்த விழாவிற்கு நான் வந்திருக்கிறேன். என்னுடைய அம்மா இந்த படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகி இருக்கிறார். இரட்டிப்பு சந்தோஷத்துடன் வந்திருக்கிறேன் என்று கூறினார்.
இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது,
எங்கள் பாலு மகேந்திரா சார் பட்டறையிலிருந்து முதன்முதலாக இயக்குநராகி அந்த நம்பிக்கை ஒளியை ஏற்றியவர் அண்ணன் பாலா தான். பாலு மகேந்திரா பட்டறையின் தலை மகன் என்று அவரை சொல்லலாம். அவருடைய ஒவ்வொரு பல தலைப்புகளும் அவரின் சுபாவத்தை, அவரது நம்பிக்கையை, கருணையை கேள்வியை வெளிக்காட்டுவது போலவே இருக்கும் என்று கூறினார்.
நடிகரும் சண்டை பயிற்சியாளருமான ஸ்டண்ட் சில்வா பேசும்போது, ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு இயக்குனர்கள் தங்களது படங்களால் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள் அந்த வகையில் இயக்குனர் பாலாவும் தன் பங்களிப்பை அதில் கொடுத்திருக்கிறார். அவரது படங்களை பார்த்து ரசித்து வளர்ந்த எனக்கு தற்போது வணங்கான் படத்தின் மூலம் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு முதன் முறையாக கிடைத்துள்ளது. பாலா ஒரு டெரரான மனிதர் என்று என்னை பயமுறுத்தினார்கள். ஆனால் அவருடன் பழகும் போது தான் தெரிந்தது அவர் ஒரு குழந்தை என்று என்று கூறினார்.

விழாவில் இயக்குநர்கள் சீமான், மிஷ்கின், சமுத்திரக்கனி, ஏ.எல். விஜய், லிங்குசாமி, ராம், மணிரத்னம், கே. பாக்கியராஜ், மாரி செல்வராஜ், விக்ரமன், ஆர். வி. உதயகுமார், கே.எஸ். அதியமான், வினோத் ( கொட்டுக்காளி ), பிருந்தா சாரதி, வசந்த பாலன், சீனுராமசாமி, கஸ்தூரி ராஜா, பேரரசு, பொன்ராம், V.Z. துரை, சிங்கம் புலி, சரண், அரவிந்த் ராஜ், எழில், கோபிநாத் (ஜீவி), பி. எஸ் வினோத் ராஜ், பாரி இளவழகன், ஜி.ஆர். ஆதித்யா, நாகேந்திரன், சுரேஷ், அஜயன் பாலா, கேபிள் சங்கர், அறிவழகன் (ஈரம்), சுசீந்திரன், மீரா கதிரவன், மூர்த்தி, நித்திலன், நம்பிராஜன்,
நடிகர்கள் சிவக்குமார், விஜயகுமார், சூர்யா, சிவகார்த்திகேயன், ஜி.வி பிரகாஷ், கருணாஸ், தம்பி ராமையா, மன்சூரலிகான், வெற்றி, பிரஜின், பிரதீப், சிவாஜி, அரீஷ் குமார், ஆர்.கே சுரேஷ், கூல் சுரேஷ், சூப்பர் குட் சுப்பிரமணி, வீரா, அப்புக்குட்டி, ஏ.எல். உதயா, ஆர்.கே. கிரண் ( ஆர்ட் டைரக்டர்),
தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், ஏ.எல். அழகப்பன், தனஞ்செயன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, P L தேனப்பன், சித்ரா லஷ்மண், வெற்றிக்குமரன் ,நடிகைகள் கருத்தம்மா ராஜஸ்ரீ, சாயா தேவி, வரலஷ்மி, காயத்ரி ரகுராம், அபிதா, வேதிகா, ரித்தா, வசுந்தரா, மதுமிதா, பிரிகிடா, ஜுலி, ஸ்வேதா டோரத்தி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, […]
சினிமாஇயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, திரையுலக முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் நடிகர் சாம்ஸ் பேசியதாவது… இம்மாதிரி ஒரு நல்ல படத்தைத் தயாரித்ததற்காக ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்படத்திற்குப் பிறகு என் நண்பர் இயக்குநர் நந்தா பெரியசாமி, மோஸ்ட் வாண்டட் இயக்குநர் லிஸ்டில் இடம் பிடிப்பார். மிக அழகான சூட்சமத்தைப் பிடித்துவிட்டார். அவர் தொட்டதெல்லாம் ஹிட்டுதான். சில பேர் மட்டும் தான் நேர்மையான நல்ல விசயத்தைப் பேசப் பொருத்தமாக இருப்பார்கள். சமுத்திரகனி அதற்குப் பொருத்தமானவர். அவர் மிக நன்றாக நடித்துள்ளார். அடுத்ததாக பாரதிராஜா. அவர் ஒரு முறை சிவாஜியிடம் தான் நடிக்க வந்ததாக சொன்ன போது, உங்க ஊரில் கண்ணாடியே இல்லையா ? எனக்கேட்டதாகச் சொல்வார்கள். அவரே இப்போது இருந்திருந்தால் பாரதிராஜா நடிப்பைப் பார்த்து உச்சி முகர்ந்திருப்பார். விஷால் சந்திரசேகர் அற்புதமான இசையைத் தந்துள்ளார். இப்படி ஒரு அற்புதமான படத்தில் எனக்கும் வாய்ப்பு தந்ததற்கு நன்றி என்றார்.

நடிகை வடிவுக்கரசி பேசியதாவது… இப்படத்தைப் பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றி. எப்போதும் என்னுடைய கேரக்டர் எல்லாம் போனிலேயே சொல்லிவிடுவார்கள். ஆனால் இயக்குநர் நந்தா பெரியசாமி, நான் வீட்டுக்கு வந்து கதை சொல்கிறேன் என்றார். யாருக்கு அம்மா யாருக்கு பாட்டி என்று தான் கதை கேட்பேன், ஆனால் இவர் வந்து கதை சொன்னதும், தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன். ஏன் அந்த ஹீரோ அவ்வளவு நேர்மையாக கஷ்டப்பட வேண்டும் எனக்கேட்டேன். என் கேரக்டர் சின்னது தான் ஆனால் என் குரு பாராதிராஜாவுக்கு ஜோடி என்றதும் அவ்வளவு சந்தோசம். சமுத்திரகனியைப் பார்த்து எனக்கு அவ்வளவு பொறாமையாக இருக்கும். தெலுங்கில் வில்லனாகக் கலக்குகிறார். இங்கு இப்படி அற்புதமாக நடிக்கிறார். இந்தப்படம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. மிக மிக எதார்த்தமான கதை, எல்லோரும் மிக நன்றாக நடித்துள்ளார்கள். நந்தா என்னை மீண்டும் தட்டெல்லாம் கழுவ வைத்தார் அவ்வளவு வேலை வாங்கினார். ஆனால் படத்தை அவ்வளவு அற்புதமாக எடுத்துள்ளார். எல்லோருக்கும் படம் கண்டிப்பாகப் பிடிக்கும். நான் இந்தப்படத்தில் நடித்தது மிகவும் சந்தோசம். என் குருவோடு நடித்தது இன்னும் சந்தோசம் என்றார்.
கவிஞர் சொற்கோ பேசியதாவது…
இயக்குநர் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாட்டு வாய்ப்புத் தருவார். இந்தப்படத்திலும் தந்துள்ளார். இந்த மேடையில் இருப்பதே பெருமையாக உள்ளது. இந்தப்படத்தில் நடித்த சமுத்திரகனிக்கு கண்டிப்பாகத் தேசியவிருது கிடைக்கும். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தேசிய விருது கிடைக்கும். நான் எழுதிய பாடலுக்கும் தேசிய விருது கிடைக்கும் என்றார்.
இயக்குநர் விக்ரமன் பேசியதாவது… பொதுவாக மலையாளத்தில் நல்ல படம் வருகிறது எனச் சொல்வோம், ஆனால் தமிழில் இந்த வருடம் மிகச்சிறந்த படங்கள் வந்துள்ளது. வாழை, லப்பர்பந்து படங்களை விட இந்த திரு மாணிக்கம் படம் மிகச்சிறந்த படமாக இருக்கும். இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் நெகடிவ் இல்லை, நமக்கு என்னானது ஏதானது என்றே புரியாமல் வருவோம் அது தான் இப்படத்தின் வெற்றியாக இருக்கும். தமிழ் சினிமாவில் சிறந்த படமாக இருக்கும். இந்தப்படத்தை நாம் கௌரவப்படுத்த வேண்டும். இயக்குநராக நந்தா பெரியசாமியை ஜெயிக்க வைக்க வேண்டும் என்றார்.

தயாரிப்பாளர் ராஜா செந்தில் பேசியதாவது… இந்தப்படத்தின் கதைக்கு முன் 20 கதைகள் கேட்டிருப்பேன், நந்தா பெரியசாமியிடம் ஒரு ஹீரோயினுக்கு தான் கதை கேட்டேன். கொஞ்ச நேரத்தில் அழுது விட்டேன். உடனே ரவியிடம் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. உடனே ஒரே நாளில் படத்தை செட் செய்து விட்டோம். நேர்மையாக எல்லோரும் வாழ வேண்டும் எனும் விசயம் இப்படத்தில் உள்ளது என்றார்.
பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது… இது மனதுக்கு மிக நெருக்கமான படம். இயக்குநர் நந்தா பெரியசாமியின் கதைகள் கருவில் உயிர் பெறும்போதே எனக்கு வந்துவிடும். ஒவ்வொரு கட்டத்திலும் கதை வளர வளரச் சொல்வார். நேரம் காலமில்லாமல் அவர் சொல்கிற காட்சியை அத்தனை விவரங்களோடு கேட்க அருமையாக இருக்கும். இந்தக்கதையை உருவாக்க அவர் எடுத்துக்கொண்ட கடின உழைப்பு பிரமிப்பானது. நேர்மை என்பது தானே அறம், நேர்மையாகத்தானே வாழ வேண்டும் ஆனால் அதைப் படமாக எடுத்துச் சொல்ல வேண்டிய, இடத்தில், நேர்மையாக இருப்பதையே கொண்டாட வேண்டும் என்கிற நிலையில் நாம் இருப்பது சோகம். நல்லவனுக்கு வாழ்க்கையே இல்லை எனும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் தான் நேர்மையாக வாழ வேண்டிய அவசியத்தை, மனிதத்தைச் சொல்ல வருகிறது இந்தப்படைப்பு. இதை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும் என்றார்.
நடிகர் ரவிமரியா பேசியதாவது…
நானும் நந்தாவும் நண்பர்கள், எல்லோரும் இங்கு படம் பார்த்துவிட்டுத் தான் பாராட்டிப் பேசுகிறார்கள். என்னைப் படம் பார்க்கக் கூப்பிட்ட போது, அமீரே படம் பார்த்து அழுது விட்டார் எனச் சொன்னான் நந்தா, அமீரே அழுது விட்டாரா? எனக்கேட்டேன். படம் பார்த்த பிறகு தான் புரிந்தது. இப்படைப்பிலிருந்த உண்மையும் நேர்மையும் தான் உங்களை அழ வைத்துள்ளது. நந்தா படம் பார்க்கும் எல்லோரையும் அழ வைக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டான். அவன் எழுத்து அத்தனை அற்புதமானது. இந்தப்படத்தை எடுத்த தயாரிப்பாளர்களுக்கு என் நன்றி. சமுத்திரகனி அட்வைஸ் பண்ற ஆள் என சொல்வீர்களே ? அது இந்தப்படத்தில் இல்லை. ஆனால் படம் பார்க்கும் எல்லோரும் அடுத்தவருக்கு அட்வைஸ் செய்வீர்கள் அந்த நிலைமையை இப்படம் ஏற்படுத்தும். பாராதிராஜா எமோசனை கொட்டி நடித்துள்ளார். வடிவுக்கரசி அம்மா வசனமே இல்லாமல் அற்புதமாக நடித்துள்ளார். நேர்மை தான் வெற்றியின் ரகசியம். இப்படத்திற்காக நேர்மையாக உழைத்த அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். இப்படத்தைப் பற்றி தூக்கத்தில் எழுதினால் கூட உங்களால் நேர்மைக்கு மாறாக எழுதிவிட முடியாது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை அனன்யா பேசியதாவது…
மிக மிகச் சந்தோசமாக உள்ளது. இந்தப்படம் என் மனதுக்கு மிக நெருக்கமான படைப்பு. நந்தா இந்தக் கதையைச் சொன்னபோதே பிடித்திருந்தது. அவர் எனக்கு மட்டுமல்லாமல், நடித்த ஒவ்வொருவருக்கும் சின்ன சின்ன விசயங்கள் கூடச் சொல்லித் தந்தார். அது எனக்கு நடிக்க மிக உதவியாக இருந்தது. சமுத்திரகனி தான் என்னைத் தமிழ் படத்தில் அறிமுகப்படுத்தினார். அவருடன் நடிக்கக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் அவர் எனக்கு நிறையச் சொல்லித் தந்தார். இயக்குநர் மிக அழகாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார். எல்லோரும் சொல்வது மாதிரி மிக நேர்மையான படைப்பு என்றார்.
நடிகர் இயக்குநர் தம்பி ராமைய்யா பேசியதாவது….நான் பேசுவதை விட, இங்கு படம் பார்த்தவர்கள் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தம்பி நந்தாவிடம் கதையைத் தோன்றியவுடன் எடுத்து விடு. இம்மாதிரி கதை கிடைக்காது எனச் சொல்வேன். தம்பி லிங்குசாமிக்கு எப்படி ஆனந்தம் படம் அமைந்ததோ அது போல நந்தா பெரியசாமிக்கு இந்தப்படம் இருக்கும். சமுத்திரகனி நடந்து கொள்வது எல்லாம் ஆரம்பத்தில் பார்த்தால் நல்லவனாக நடிக்கிறாரோ என நினைப்பேன். ஆனால் ஒருவனால் தொடர்ந்து நடிக்க முடியாதே அவன் இயல்பிலேயே நல்ல மனதுக்காரன். இந்தப்படத்தில் அசத்தியிருக்கிறான். இது அற்புதமான படம். சமுத்திரகனியை நாயகனாக வைத்து எடுக்கும் ஒரு நல்ல படைப்புக்குப் பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக அற்புதமான படைப்பாக மக்களைச் சென்றடையும் என்றார்.
கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் பேசியதாவது… இந்த மேடையில் இந்த தருணத்தில் இருப்பதைப் பெருமையாக உணர்கிறேன். பொம்மக்கா நான் எழுதிய பாடல். இன்றைய மனிதர்களுக்கு, இன்றைய வாழ்விற்குத் தேவையான ஒரு விசயத்தை நந்தா பெரியசாமி அழகாக பேசியுள்ளார். இந்தப்படத்திற்குப் பிறகு கண்டிப்பாக நந்தா பெரிய சாமி ஒரு பெரிய இயக்குநராக வருவார். இசையமைப்பாளரும், இயக்குநரும் பேசியபோது, ஒரு கேட்சியான வார்த்தை வைத்து இந்தப்பாடலை உருவாக்கலாம் என்றனர். பொம்மக்கா எனும் அழகான வார்த்தையை வைத்து, இந்தப்பாடலை உருவாக்கினோம். தண்ணீர் மற்றும் உணவைப் போல சமூகத்திற்குத் தேவையான ஒரு படைப்பாக இப்படம் இருக்கும் என்றார்.
தயாரிப்பாளர் ரவிக்குமார் பேசியதாவது… ஆந்திர தேசத்திலிருந்து இங்கு வந்து இப்படம் எடுத்துள்ளேன். என் நண்பன் ராஜா செந்தில் தான் இயக்குநரை அறிமுகப்படுத்தி இப்படத்தைப் பற்றிச் சொன்னார். இக்கதை கேட்ட போது நானும் அழுது விட்டேன். அன்றே பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து விட்டோம். படம் பார்த்தவர்கள் படம் பற்றிச் சொன்னார்கள். கண்டிப்பாக அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். டிசம்பர் 27 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது என்றார்.

இயக்குநர் நந்தா பெரியசாமி பேசியதாவது… இந்த திருமாணிக்கம் ஊர் கூடி இழுத்த தேர். இங்கு உள்ள எல்லோரும் இப்படத்திற்காக உழைத்துள்ளார்கள். இந்தக்கதையை முதன்முதலில் திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸிடம் தான் சொன்னேன். அவர் முதன் முதலில் பாராட்டிய கதை இது தான். லிங்குசாமி முதல் எல்லோரும் கேட்டுவிட்டு இது படமாக்கப்பட வேண்டிய கதை என்று ஊக்கம் தந்தார்கள். ரவிக்குமார் இந்தக்கதை கேட்டு ஆரம்பித்தார். சமுத்திரகனி கதை கேட்ட உடனே ஷூட்டிங் போகலாம் என என்னை நம்பி வந்தார். அவரால் தான் இந்தப்படம் உருவாகியது. அமீர் எனக்குப் படம் காட்டுங்கள் என்றார் அவர் படம் பார்த்துப் பாராட்டியது பெருமை. பாராதிராஜா ஐயாவை நான் இயக்கியது எனக்குப் பெருமை. சொன்ன கதையைப் படம்பிடித்துத் தந்த சுகுமாருக்கு நன்றி. உயிர் கொடுத்த விஷால் சந்திரசேகருக்கு நன்றி. பாடலாசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. ரவிக்குமார், ராஜா செந்தில் இப்படத்தைத் தைரியமாக எடுத்ததற்கு நன்றி. ஒரு நல்ல தமிழ் படத்தை எடுத்திருக்கிறார் ரவிக்குமார். அவருக்குத் தமிழ் மக்கள் பத்திரமாகக் கரை சேர்க்க வேண்டும் என்றார்.

நடிகர் சமுத்திரகனி பேசியதாவது, மிக மகிழ்ச்சியான தருணம். தனித்தனியாக எல்லாம் படத்திற்காக உழைப்பதில்லை, எல்லா படத்திற்கும் ஒரே உழைப்பு தான். எல்லோரும் வெற்றிக்காகத் தான் உழைக்கிறோம். பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் போல் நாம் கண்ட வெற்றியைத் தாண்டத் தான் உழைக்கிறோம். அப்பாவுக்குப் பிறகு ஏழு வருடங்கள் கழித்து இந்தப்படம் கிடைத்துள்ளது. இந்தப்படத்தில் நல்ல மனதுக்காரர்கள் இணைந்தார்கள். சில படங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தானாக அமையும். நந்தா கதை சொன்ன போது அய்யா பாரதிராஜாவிடம் போய் சொல் அவர் ஓகே சொன்னால் ஆரம்பித்து விடலாம் என்றேன். அவர் கதை கேட்டு உடனே ஓகே சொன்னார், அப்புறம் ஒவ்வொருத்தராக வந்தார்கள். தயாரிப்பாளர் மிக இனிமையானவர் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். நல்ல கதையைப் படமாக்குகிறோம் என்பது மட்டும்தான் அவர் மனதிலிருந்தது. இயல்பாக இருப்பது தான் நேர்மை, எனக்கும் அமீர் அண்ணனுக்குமான உறவும் கூட, அப்படித்தான் ஆரம்பித்தது. சசியுடனும் அப்படித்தான் ஆரம்பித்தது. உண்மை தான் நேர்மை. நேர்மை என்பது தான் இயல்பு. முன்பெல்லாம் கெட்டவனிடம் சேராதே வம்புல இழுத்து விட்டுவிடுவார்கள். இப்போது நல்லவனைப் பார்த்து அப்படி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். நந்தா எப்போதும் திடீர் திடீரென அழைப்பார். எப்போது அழைத்தாலும் போவேன். நந்தா என்னை விட நல்லவன். சிலருக்குக் காலம் வெற்றியைத் தரும் அவருக்கு நல்ல காலம் வந்துவிட்டது. கதை படித்தவுடன் நான் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அனன்யா நான் கண்டுபிடித்த பெண் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அம்மா வடிவுக்கரசி அசத்தியிருக்கிறார். அப்பா பாரதிராஜா என்னைப்பார்த்துப் பண்பட்ட நடிகனாகிட்டே என்று பாராட்டினார். அவரோடு பணிபுரிந்த ஐந்து நாள் வரம். குழந்தைகள் மிக நன்றாக நடித்துள்ளனர். முன்பெல்லாம் சுகுமாரிடம் பதட்டம் தெரியும் ஆனால் இப்போது மிகப்பெரிதாக வளர்ந்துவிட்டார் மகிழ்ச்சி. இத்திரைப்படத்தைப் பற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி. இப்படம் கண்டிப்பாக வெல்ல வேண்டும். திருமாணிக்கம் களத்தில் நிற்கும் வெகுஜனத்தை கவரும் என்றார்.

இயக்குநர் அமீர் பேசியதாவது…
எனக்கு நந்தாவுக்கு முன்னால் அவரது அண்ணைத் தெரியும். அவரது ஒரு கல்லூரியின் கதை படம் வருவதற்கு முன்னாலே அந்தப்படம் பற்றி நல்ல பேச்சு இருந்தது. அப்போதே என் கம்பெனிக்கு படம் செய்யுங்கள் என 2 லட்சம் தந்தேன். யோகி படம் நான் செய்யும் போது அதை வேண்டாம் என சொன்னது நந்தா தான். ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக ஏதாவது செய்துகொண்டே இருப்பார். மாத்தி யோசி என்றே டைட்டில் வைத்து படமெடுத்தார். நந்தாவிடம் உழைப்பு முயற்சி தேடல் இருந்து கொண்டே இருக்கும். சமுத்திரகனியிடம் இதைப்பார்த்துள்ளேன். அதே மாதிரி நந்தாவிடம் பார்த்தேன். இந்தப்படம் பார்த்தேன் இரு காட்சியில் உண்மையில் கண்கலங்கி விட்டேன். படம் வெற்றி பெறுகிறது இல்லை என்பது வேறு விசயம். ஆனால் நாம் அடைய நினைத்ததை செய்து விட்டோமா என்பது தான் முக்கியம் அதை இந்தப்படம் செய்துள்ளது. வாழைக்குப் பிறகு எனக்கு மிக நெருக்கமான படைப்பு. இந்த காலத்தில் நேர்மையாக வாழ்வது என்பதே கடினமாகிவிட்டது. இது நேர்மையை பற்றிப் பேசும் படைப்பு. வறுமையில் நேர்மையாய் வாழ்வது கடினம், அதை சொல்லித்தருவது தான் இந்தப்படம். கமல் சாரையும், சிவாஜி சாரையும் எதிர்த்து நடித்த ஒரே ஆளுமை வடிவுக்கரசி, இதில் பாராதிராஜாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அசத்தியுள்ளார். பாராதிராஜா சின்ன பாத்திரம் என்றாலும் அத்தனை அற்புதமாக நடித்துள்ளார். அனன்யாவும் சிறப்பாக நடித்துள்ளார். ஒரு நிறைவான படைப்பு. சுகுமார் பிரமாதப்படுத்திவிட்டார். ஒரு நல்ல படைப்பு, தரமான படைப்பு. நந்தா தனக்கான இடத்தை அடைந்து விட்டார். மனித சமூகத்திற்கான படைப்பு. சமுத்திரகனி இந்த கதாப்பாத்திரத்தை இவனை சிறப்பாக யாருமே செய்துவிட முடியாது. தேர்ந்த நடிகனாக மாறிவிட்டார் வாழ்த்துக்கள் என்றார்.
ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன், ஒய். ஜி. மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி […]
சினிமாஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன், ஒய். ஜி. மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார். டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகிற இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றதது.
விழாவில், சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல உரிமைகள் செயல்பாட்டாளரும் , த பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பின் நிறுவனருமான மேனகா சஞ்சய் காந்தி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசும் போது,

இந்த விழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அற்புதமான ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இந்தத் திரைப்பட விழாவுக்கு என்னை அழைத்த போது மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டேன்.
திரைப்படத்தில் சிறிய திரைப்படம் என்று எதுவும் இல்லை. இது பெரிய கருத்தை, சிந்தனையை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் அனைத்து உயிரினங்களும் ஒன்று என்று சொல்கிறது.
உயிரினம் ஒவ்வொன்றும் சோகத்தை உணர்கிறது, மகிழ்ச்சியை உணர்கிறது, பயத்தை உணர்கிறது, வாழ விரும்புகிறது, அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறது. இந்தப் படத்தில் நாய்களைப் பற்றிப் பேசுவதால் நாய்களில் இருந்து தொடங்குவோம்.
நான் பிறந்ததிலிருந்து என் வாழ்க்கையை விலங்குகளுடன் கழித்து வந்திருக்கிறேன்.
நாய்கள் பேசுவதை நான் கண்டிருக்கிறேன், நாய்கள் மட்டுமல்ல. பூனைகள், கோழிகள், பாம்புகள், பன்றிகள், கழுதைகள் இவை அனைத்திற்கும் ஒரு மொழி உள்ளது. அவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன. அவை அனைதுமே மனிதர்களைப் புரிந்து வைத்துள்ளன. ஆனால் நாம் தான் அவைகளைப் புரிந்து கொள்வதில்லை.
நான் உங்களுக்குச் சில சம்பவங்களைக் கூற விரும்புகிறேன். மசூரியில் உள்ள ஒரு பள்ளிக்கு ஒரு தொடக்க விழாவுக்கு நான் சென்றிருந்தேன். நான் ஒரு மனிதருடன் அவரது காரில் சென்று கொண்டிருந்தபோது, விலங்குகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
நாங்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்தோம். அது ஒரு பெரிய சாலை. அது அவரது வீட்டிற்கு சுமார் 400 மீட்டர் தொலைவில் இருக்கும். அவரது நாய் தனது இணையுடன் அங்கே நின்று கொண்டிருந்தது. இதற்கு முன் நான் அவற்றைச் சந்தித்ததே இல்லை. அவை இப்போதுதான் எனக்குப் பாதுகாப்பாக என்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல வந்திருந்தன. நான் அவரிடம் சொன்னேன், உங்கள் நாய் காலையில் தனது பாதத்தை காயப்படுத்தியதாகக் கூறுகிறது, அதற்கு மிகவும் வலிக்கிறது, யாரையும் அதைத் தொட அனுமதிக்கவில்லை என்று.

அந்த மனிதர், இந்த முட்டாள்தனத்தை நான் நம்பவில்லை என்றார். நாங்கள் அவரது வீட்டிற்குச் சென்றோம், அவர் தனது மனைவியிடம் பேசினார். அவரது மனைவி சொன்னார், உங்களுக்குத் தெரியும், உங்கள் நாய் காலையில் இருந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தது. காலில் காயம்பட்டு இருந்தது கட்டுப் போடக் கூட விடவில்லை என்றார். இதுபோன்ற நூற்றுக்கணக்கான அனுபவங்கள் எனக்கு உண்டு.
மரியா என்று ஒரு பெண்மணி இங்கிலாந்தில் இருந்து வந்திருந்தார். அவர் ஒரு புத்தகம் கூட எழுதி இருக்கிறார். அவரால் விலங்குகளுடன் பேச முடியும், பேச முடியாவிட்டாலும் புரிந்து கொள்ள முடியும். இதைச் சொல்வதற்காக இந்தியா வந்திருந்தார். நான் அவரை எனது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன், அது இந்தியாவின் முதல் விலங்கு மருத்துவமனைகளில் ஒன்று. ஒரு பசு அவர் அருகில் வந்தது, பசுவின் தலையில் கையை வைத்தார். பின்னர் அவர் என்னிடம் சொன்னார், பசு நன்றி சொன்னது என்று. அது ஒரு விபத்தில் சிக்கியபோது நீங்கள் அதனை மருத்துவமனைக்கு அழைத்து வந்தீர்கள். அது இப்போது நன்றாக இருக்கிறது. ஆனால் அதன் தலையில் தாக்கப்பட்டதால், அதற்கு இன்னும் தலைவலி வருகிறதாம். ஏதாவது மருந்து இருக்கிறதா ? என்று கேட்டார்.
பின்னர் ஆபரேஷன் மேஜையில் படுத்திருந்த ஒரு நாயிடம் சென்றோம். அதன் கால்கள் அனைத்தும் உடைந்துவிட்டன. நாய் அந்தப் பெண்ணிடம் இன்று காலை, மிஸஸ் காந்தி மருத்துவரிடம், வலி இருப்பதால் அதனால் நிற்க முடியாது, அதைத் தூங்க வைப்போம் என்றாராம் அதற்கு டாக்டர், முடியாது என்றாராம். இதையெல்லாம் அந்த நாயிடமிருந்து புரிந்து கொண்டு அவர் கூறினார்.

நான் முதல் முதலில் தேர்தலில் நின்ற போது, நான் ஒரு கூட்டத்திற்குச் சென்றேன். அங்கே ஒரு மோசமான வாசனை வந்தது. என்னால் அதைத் தாங்க முடியவில்லை. ஏதேனும் ரசாயனங்கள் உள்ளதா, கழிவுநீர் உள்ளதா, வேறு ஏதாவது இருக்கிறதா என்று நான் தேடிக்கொண்டிருந்தேன். மேடையின் அருகே ஒரு கழுதை நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அதன் உடல் முழுவதும் சீழ் நிரம்பி, அழுகிக் கொண்டிருந்தது போல் ஒரு நிலை. எனவே நான் கூட்டத்தை விட்டு வெளியேறினேன். அதை வீட்டிற்குக் கொண்டு சென்றேன், மருத்துவரை அழைத்தேன், சீழைத் துடைத்து, ஆண்டிபயாட்டிக் கொடுத்தோம். மெல்ல மெல்ல சரியானது. பிறகு அது மருத்துவரைச் சந்திக்க விரும்பவில்லை. மருத்துவரைப் பார்த்தால் மரத்தின் பின்னே ஒளிந்து கொள்ளும். அங்கிருந்து வெளியே செல்ல விரும்பியது. தயவுசெய்து போங்கள் என்று கொடுத்த இரைகளை எட்டி உதைத்தது. ஒரு நாள் இரவு, அது முற்றிலும் குணமான தருணத்தில் அது பாடியது. அந்த இரவு என் வாழ்நாளில் மறக்க முடியாத இரவு என்று சொல்வேன். அந்தக் கழுதை வானத்தில் நட்சத்திரங்களைப் பார்த்து பாடுவது போல் ஒரு பாட்டு பாடியது. அது ஒரு அருமையான இசை போல் எனக்கு இருந்தது. அது இசைத்த பாடல் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நன்றி என்று நட்சத்திரங்களைப் பார்த்து கூறுவது போல் இருந்தது. விலங்குகளின் மகிழ்ச்சியையும் வலிகளையும் பார்க்கும் போது, அது நம்முடையதாக உணர வேண்டும். நாம் அனைவரும் ஒன்று என்பதைத்தான் இந்தப் படம் முழுமையாக வெளிப்படுத்துகிறது.
ஒருமுறை நான் எனது தொகுதியில் ஒரு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெரிய நீண்ட கறுப்பு பாம்பு கடந்து கொண்டிருந்தது. நாங்கள் பயணத்தைத் தொடராமல் நிறுத்தி, காத்திருந்தோம், பாம்பு கடந்து சென்றது. பாம்புகளால் நன்றாகப் பார்க்க முடியாது. அவற்றால் கேட்கவே முடியாது. ஒரு இரவில், நான் தூங்கச் சென்றபோது, ஒரு பாம்பு வந்து என் படுக்கையின் கீழ் இரவு முழுவதும் இருந்து விட்டு காலையில் போய்விட்டது. அது உங்களைப் போலவே தூங்க வந்ததைப் போல இருந்தது. இப்படி என் வாழ்க்கையில் நிறைய உண்டு.

நீங்கள், நான், அது, உங்கள் காலடியில் செல்லும் எறும்பு ஆகியவற்றுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை.
கோழிகளுக்கு ஒரு முழுமையான அகராதி உண்டு. அவற்றுக்கான, ஒரு மொழி உள்ளது. கோழிகள், திருமணம் செய்து கொள்கின்றன. பிள்ளைகள் குடும்பம் என்று ஒன்று உண்டு. ஆண் கோழிகளுக்கு மனைவியைப் போல பெண் தோழிகளும் உண்டு. மனைவிக்கும் பெண் தோழிக்கும் சண்டை வருவதுண்டு. பொய்கள் சொல்வதும் உண்டு. இந்தப் படம் நாயின் உரிமை வழக்கு பற்றிப் பேசுகிறது.
நான் எப்போதும் பார்க்கிற குழந்தைகளிடம் சொல்வது போல் உங்களுக்கும் சொல்கிறேன். மும்பையில் ஒவ்வொரு நாளும் நாய்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதை யாரும் நிறுத்த முடியாது. சாலைகளில் அவற்றின் மீது வாகனங்கள் மோதி பல நாய்கள் காயம்படுகின்றன, பலவும் இறக்கின்றன. நாயின் மீது வண்டி ஏற்றிய மனிதருக்கு எதிராக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அது பெரிய விஷயம் இல்லை என்றதுடன் அந்த வழக்கைக் கொண்டு வந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக நீதிபதி பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இது நான் இதுவரை கண்டிராத மிகவும் பயங்கரமான தீர்ப்பாகும்.

நான் சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் இதுபோல ஏராளமான விலங்குகளுக்கு எதிரான தாக்குதல் பிரச்சினைகள் வருகின்றன. இந்தப் படம் அந்த நீதிபதிக்கு மட்டும் காட்டப்படாமல், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வழக்கறிஞர்களுக்கும், அனைத்து நீதிபதிகளுக்கும் காட்டப்பட வேண்டும்.
எஸ். ஏ. சந்திரசேகரன் இந்தப் படத்தைப் பல்வேறு மொழிகளில் வெளியிடுவார் என்று நம்புகிறேன். மேலும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விலங்குகள் நல இயக்க மக்களையும் இதைப் பார்க்கச் சொல்கிறேன். அவர்களை விட நாம் தான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் இதைப் பார்க்க வேண்டும். உயிரினங்களில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். விலங்குகள் மீது போர் தொடுப்பதை நிறுத்தும் வரை, நமக்குள் அமைதி இருக்காது. அனைத்து உயிரினங்களும் ஒன்று என்பதை நாம் உணர்ந்து அங்கீகரிக்க வேண்டும். அதன் பிறகு மனிதர்களின் வாழ்க்கை முறையிலும், நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் முறையிலும் நல்ல மாற்றம் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.

இந்த படம் நகைச்சுவை நிறைந்தது. இது ஒரு பிரச்சார படம் அல்ல, கலகலப்பான படம். மென்மையான உணர்வுகளைக் கூறுகின்ற நல்ல படம். இதற்கு வரி விலக்கு வழங்க அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு முக்கியமான யோசனை. இந்த அற்புதமான திரைப்படத்தை உருவாக்கிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கான வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என்றார்.
இந்தப் பட விழாவில் இயக்குநர்கள் எஸ் .ஏ. சந்திரசேகரன், திருமதி ஷோபா சந்திரசேகரன், எம். ராஜேஷ் பொன்ராம், நடிகர்கள் ஒய். ஜி. மகேந்திரன், விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, விமலா பிரிட்டோ, இசையமைப்பாளர் சித்தார்த் விபின், தொழிலதிபர் சுந்தர்,
தயாரிப்பாளர் விக்கி, படத்தின் இயக்குநர் நிதின் வேமுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தில் பிரதான வேடம் ஏற்றுள்ள நாய் ஜான்சியும் கலந்து கொண்டது.
விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே. செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக […]
சினிமாவிடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே. செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மூர்த்தி, தயாரிப்பாளர் செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
சரண் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். வில்சி ஜெ.சசி படத்தொகுப்பு செய்திருக்கிறார். வரும் ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘சீசா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, பேரரசு, மைக்கேல், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் இயக்குநர் குணா சுப்பிரமணியம் பேசுகையில், பிரசாத் லேபில் பல நிகழ்ச்சிகளை ஒரு ஓரமாக நின்று பார்த்திருக்கிறேன். இன்று இதே அரங்கில் நான் மேடை ஏறியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடத்தில் நிற்க வேண்டும் என்பதற்காக நான் ஓடியிருக்கிறேன். என்னிடம் தீய செயல்கள் அனைத்தும் இருந்தது, அதையெல்லாம் கடந்து இன்று இங்கு நிற்கிறேன். இதற்கு காரணமான சிவன் என் தயாரிப்பாளர், பார்வதியாக அவரது மனைவி சுகுணா, இவர்களால் தான் இங்கு நிற்கிறேன். தயாரிப்பாளரிடம் ஒரு நோயாளியாக தான் நான் அறிமுகம் ஆனேன். அப்போது அவர் என்னை விசாரித்த போது, என்னைப் பற்றி சொன்னேன். அப்போது அவர் சொன்னார், ஒரு நாள் நாம் படம் பண்ணுவோம். அதில் இருந்து அவரை பின் தொடர்ந்தேன், அந்த நாளில் இருந்து என் வாழ்க்கை தொடங்கியது. கதைப் பற்றி பேசும் போது, வெறும் பொழுதுபோக்கிற்கான படமாக மட்டும் அல்லாமல் சமூகத்திற்கு எதையாவது சொல்ல வேண்டும், என்றார். அதன்படி, அவரே ஒரு கதையும் சொன்னார். அந்த கதை மிக நன்றாக இருந்தது, நிச்சயம் சமூகத்திற்கு தேவையான ஒரு கதை. அதற்கு நான் திரைக்கதை அமைத்தேன். தயாரிப்பாளருக்கும், மேடமுக்கும் நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.

அதேபோல், முகம் தெரியாத எனக்கு முகம் கொடுத்த எங்கள் தலைவன் நட்டி, நான் யாரிடமும் முறையாக உதவி இயக்குநராக பணியாற்றவில்லை. சில இயக்குநர்களிடம் பயணித்திருக்கிறேன், அவர்களின் படங்களில் சில வேலைகளை நானே செய்து பல விசயங்களை கற்றுக்கொண்டேன். நடிப்பதற்காக தான் நான் போனேன், அப்படி போய் தான் பல விசயங்களை அவர்களிடம் கற்றுக்கொண்டேன். அப்படி இருந்த என் மீது நம்பிக்கை வைத்து நட்டி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். உலகத்தில் மோசமானவர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், தேடினால் இந்த உலகத்தில் தங்கம், வைரம் கிடைக்கும். அப்படி தான் எனக்கு தங்கமாகவும், வைரமாகவும் கிடைத்தவர் நட்டி, அவரது கம்பீரம் எனக்கு பிடிக்கும். அவர் முன்பு எனக்கு பேச்சே வராது. இன்று அவருக்கு பெரிய பெரிய படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது, அவரை வசதியாக வைத்துக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர் எனக்காக இந்த படத்தில் நடிக்க வந்தார். என்னை டைரக்ட்டரே என்று முதலில் அழைத்தவர் அவர் தான். அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. அவரை நான் சந்திப்பதற்கு முன்பு நல்ல நடிகராக தான் தெரியும், அவரை சந்தித்த பிறகு அவரை விட நல்ல மனிதர் இந்த உலகத்தில் இருக்க மாட்டார்கள், என்று தோன்றியது. அந்த அளவுக்கு மிக சிறப்பானவர். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாது. தம்பி நிஷாந்த் ரூசோ இளம் நடிகர். இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கான இடத்தையும் நட்டி கொடுத்தார். அதற்கும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நிஷாந்த் ரூசோ நிச்சயம் பெரிய நடிகராக வருவார். நாயகி பாடினி குமார், சிறந்த நடிகை. கிளிசரின் கூட இல்லாமல் நடிக்க கூடிய நடிகை. அவங்க தமிழ் சினிமாவில் நல்ல நிலைக்கு வருவாங்க. மூர்த்தி, ஆர்.எஸ்.ரவி, தயாரிப்பாளர் ராஜநாயகம், ஆதேஷ் பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் மேடையில் இருக்கிறார்கள். கஸ்தூரி ராஜாவின், படங்களை பார்த்து நான் அழுவேன், அந்த அளவுக்கு அவரது படங்களில் இருக்கும் செண்டிமெண்ட் பிடிக்கும். நான் நேசித்த, நான் டாப் என்று நினைத்த இயக்குநர்களில் இருக்கும் கஸ்தூரி ராஜா. விஜயை வைத்து பட்டய கிளப்பிய பேரரசு, சிறிய படங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கே.ராஜன ஆகியோரை வரவேற்கிறேன். டிரெண்ட் மியூசிக் குழுவுக்கு நன்றி. என் படத்திற்கு தூணாக இருந்து என்னை இயக்கிய அக்கறை பாலு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என்றார்.

இசையமைப்பாளர் சரண் குமார் பேசுகையில், சீசா ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் படம். நட்டியிடன் முதல் முறையாக பணியாற்றியிருக்கிறேன். அவர் போலீஸ் வேடத்தில் நிறைய நடித்துவிட்டார். இந்த படத்தில் அது வித்தியாசமாக இருக்கும். நிஷாந்த் ரூசோ சிறப்பாக நடித்திருக்கிறார். பாடினி நல்ல நடிகை மற்றும் நடனக் கலைஞர், அவரும் நன்றாக நடித்திருக்கிறார். இயக்குநர் குணாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர் ஒரு குழுவை சிறப்பாக கையாளும் திறன் படைத்தவர். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தொழில்நுட்ப கலைஞர்களிடம் வேலை வாங்கினார். தயாரிப்பாளர் எனக்கு பணியாற்றுவதில், பொருளாதாரத்தில் சுதந்திரம் கொடுத்தார். நான் கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்தார், மூன்று பாடல்களையும் அவர் தான் எழுதியிருக்கிறார். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. பாடல்களை வெளியிட்ட டிரெண்ட் மியூசிக் குழுவுக்கு நன்றி என்றார்.
நடிகர் நிஷாந்த் ரூசோ பேசுகையில், இயக்குநர் குணா என்னை சந்தித்து இந்த கதையை சொல்லும் போது, நிச்சயம் என்னால் நடிக்க முடியாது, என்று சொன்னேன். அந்த அளவுக்கு என் கதாபாத்திரம் வித்தியாசமாக இருந்தது. ஒரே கதாபாத்திரத்தில் மூன்று விதமான வித்தியாசங்களை காட்டி நடிக்க கூடியதாக இருந்தது. என்னை வைத்து காமெடி பண்ணிடாதீங்க என்று சொன்னேன். இல்லங்க, நீங்க நடிச்ச படத்தை பார்த்திருக்கிறேன், நிச்சயம் உங்களால் நன்றாக செய்ய முடியும், என்று நம்பிக்கை கொடுத்தார். அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் நான் நடித்தேன், அவருக்கு நன்றி. நன்றாக வந்திருப்பதாக படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். என்னுடன் நடித்த பாடினி, மூர்த்தி ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். நட்டி எனக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்தார், அவருக்கு நன்றி. படம் ஜனவரி 3 ஆம் தேதி வெளியாகிறது என்றார்.

நடிகை பாடினி குமார் பேசுகையில், குணா என்னிடம் கதை சொல்ல ஆரம்பிக்கும் போது சாதாரணமாக தான் உட்கார்ந்திருந்தேன், ஆனால் அவர் கதை சொல்ல சொல்ல நான் இருக்கையின் நுணிக்கு வந்து விட்டேன். அந்த அளவுக்கு கதை அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படமும் அப்படி தான் இருக்கும், கடைசி வரைக்கும் என்ன நடக்கிறது என்ற எதிர்பார்ப்புடன் திரில்லிங்காக படம் நகரும். தயாரிப்பாளர் என் மீது நம்பிக்கை வைத்து என்னை தேர்வு செய்தார், அவருக்கு நன்றி. நட்டியிடன் நான் இணைந்து நடிக்கும் காட்சிகள் இல்லை, இருந்தாலும் அவர் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. என்னுடன் இணைந்து நடித்த நிஷாந்த் ரூசோ எனக்கு சப்போர்ட்டிங்காக இருந்தார், அனைவருக்கும் எதிர்பார்ப்பை கொடுக்க கூடிய படமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசுகையில், ஒரு தயாரிப்பாளர் திடீரென்று மருத்துவம் பார்க்க முடியாது, ஆனால் ஒரு மருத்துவர் படம் தயாரித்திருக்கிறார். இன்றைய சுழலில் ஒரு படம் தயாரிப்பது என்பது சாதாரண விசயம் இல்லை. அனைத்தும் இருப்பவர்களால் கூட இன்று படம் தயாரிப்பு என்பது கஷ்டமான விசயமாக இருக்கிறது. எதுவுமே இல்லாமல், இவ்வளவு முதலீடு செய்து, படத்தை இந்த அளவுக்கு கொண்டு வருவதற்கு அவர் எத்தனை கஷ்டங்களை கடந்து வந்திருப்பார், என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம். பாடல்கள் நன்றாக இருக்கிறது, இசை, பாடல் வரிகள் என அனைத்தும் நன்றாக இருக்கிறது. இந்த படம் வெற்றி பெற்று டாக்டர் சம்பாதித்தால், நிச்சயம் அடுத்த படம் எடுப்பார், அதில் எனக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று நம்புகிறேன்.

இயக்குநர் குணா குடும்ப கஷ்டத்தை பற்றி பேசினார். சினிமாவில் இருப்பவர்களை கோழை ஆக்குவது குடும்ப கஷ்டம் தான். ஓட்டப் பந்தயத்தில் முதுகில் மூட்டையை கட்டிக்கொண்டு ஓடுவது போல தான் சினிமாக்காரர்களுக்கு குடும்பம் இருப்பது. நானும் அந்த கஷ்டத்தை அனுபவித்திருக்கிறேன். அதே சமயம், சினிமா தன்னை தானே ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். அதற்கு தகுதியானவரை அது தானாக தேர்ந்தெடுக்கும். அப்படிதான் நானும் சினிமாவுக்குள் வந்தேன். கிராமத்தை சேர்ந்த நான் சென்னை என்றால் என்ன ? யாரை பார்க்க வேண்டும், என்று எதுவுமே தெரியாமல் சென்னை வந்தேன். சென்னை வந்து வண்ணாரப்பேட்டை சென்றதும் நான் இறங்கிய இடம் மகாராணி தியேட்டர். அங்கிருந்து நான் போக வேண்டிய முகவரியை தேடிய போது திரும்ப திரும்ப அந்த தியேட்டர் முன்பே வந்து நின்றேன். ஒரு தாய் வயிற்றில் இருந்து எப்படி பிறந்தோமோ அப்படி தான் நான் சென்னை வந்தேன். என் கண் முன் தெரிந்த அந்த மகாராணி தியேட்டர் தான் நான் சினிமாவில் வருவதற்கான முதல் சிக்னல் என்று இன்றும் நினைப்பேன். அதனால், உழைப்பும், சோர்வின்மையும் நம்மிடம் இருந்தால் நம்மை எந்த கொம்பனும் அசைக்க முடியாது. நம்முடைய நாற்காலியில் யாராலும் உட்கார முடியாது. அப்போது கூட நான் வேறு வேலைகளை தான் தேடி அலைந்தேனே தவிர சினிமாவில் வாய்ப்பு தேடவில்லை. அப்படி இருந்தும் சினிமா என்னை அழைத்தது. சினிமாவில் இருக்கும் வசதிகள் எங்கும் இல்லை, அதே சினிமாவுக்கு நாம் நன்றியுடன் இருக்கிறோமா ?, இன்றும் என் பிள்ளைகள் என்னை படம் எடுக்க சொல்கிறார்கள், நான் தான் வேண்டாம் என்று சொல்கிறேன். ஒரு தயாரிப்பாளர் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டால் தான், அந்த படத்தில் பணியாற்றியவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள். 50 லட்சம் ரூபாய் செலவு செய்தால், அதில் 15 லட்சம் தான் படத்திற்கு செலவு செய்யப்படும் நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் செந்தில் வேலன் தைரியமாக படம் தயாரித்திருக்கிறார், அவரை பாராட்ட வேண்டும். சிறிய படம், பெரிய படம் என்று இப்போது சொல்லக் கூடாது, தியேட்டருக்கு வந்தால் தான் தெரியும். இப்போது பல பெரிய படங்கள் சின்ன படங்களாகி விட்டது, சிறிய படங்கள் பெரிய படங்களாகி விட்டது. இசையமைப்பாளர் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார், செந்தில் வேலனின் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.

இயக்குநர் குணா குடும்பம் இருக்கிறது, என்று வருத்தமடைய வேண்டாம். நீங்க பட்ட கஷ்டத்துக்கு நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். நானும் 39 வயதில் தான் என் முதல் படம் எடுத்தேன். எனக்கு இளையராஜா என்ற ஒரு தெய்வம் கிடைத்தார். ராஜ்கிரண் என்ற இஸ்லாமிய கடவுள் எனக்கு வரம் கொடுத்தார். இதையெல்லாம் மீறி அந்த படத்தை ரசிக்கும் ஆடியன்ஸ் இருந்தார்கள். ஆனால், இன்று அந்த படத்தை எடுத்தால் ஓடாது. இன்றைய ஆடியன்ஸ்களுக்கு என்ன தேவையோ அதை படமாக எடுத்தால் நிச்சயம் வெற்றி பெறும். அதனால் நீங்க பயப்பட வேண்டாம், படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் ஜே.செந்தில் வேலன் பேசுகையில், நான் சினிமா துறைக்கு புதியவன். எனக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம். 12ம் வகுப்பு படிக்கும் வரை மொத்தமாக நான்கு திரைப்படங்கள் தான் பார்த்திருக்கிறேன். கல்லூரி சென்ற போது தான் எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்தது. என் கேரில் சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் இருக்கிறார்கள், காலை 9 மணிக்கு மருத்துவமனை சென்றால் இரவு 12 மணி வரை பணியாற்றுவேன். இந்த படத்தின் கதை, எடிட்டிங் உள்ளிட்ட அனைத்திலும் என் பங்களிப்பு இருக்கிறது. இரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சினிமா வேலையை பார்க்கிறேன். ஜனவரி 3 எப்போது வரும் என்று என் மனைவி எதிர்பார்க்கிறார், அப்போதாவது நான் பழையபடி இருப்பேன் என்பதால் தான்.

நீங்கள் நினைப்பது போல் சினிமா சாதாரணமான வேலை கிடையாது. கொத்தனார், சித்தாள் வேலையை விட சினிமா வேலை கடினமானது. அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கிறார்கள், 6 மணிக்கு வண்டி பிடித்து படப்பிடிப்புக்கு செல்கிறார்கள். லைட் மேன் உள்ளிட்ட உதவியாளர்கள் மிக கடுமையாக உழைக்கிறார்கள். இவர்கள் மனிதர்களா மிஷன்களா என்று தெரியாத அளவுக்கு மிக கடுமையாக வேலை செய்கிறார்கள். ஆனால், நமக்கு இந்த கஷ்டங்கள் எதுவுமே தெரியவில்லை. சினிமா என்றால் ஜாலி, ஒரே கூத்து கும்பாளமாக இருக்கும் என்று நினைக்கிறோம். கதை விவாதம் எடுத்துக் கொண்டால் கூட செத்து சுண்ணாம்பாகி விடுகிறோம். ஒரு படம் எடுக்கவே எனக்கு இப்படி இருக்கிறதே, மேடையில் இருப்பவர்கள் இத்தனை படங்களை எப்படி தான் எடுத்தார்களோ.

இயக்குநர் குணா குடிபோதைக்கு அடிமையாகி என்னிடம் வந்தார். அவர் யார் சொல்வதையும் கேட்காத ஒரு நிலையில் இருந்தார். 8 வயதில் ஆர்ம்பித்த சினிமா ஆசையால் அவர் பல தோல்விகளை சந்தித்து, எந்த வேலையும் செய்ய முடியாத ஒரு நிலையில் இருக்கிறார். அவர் முதல் முறையாக மற்றவர் சொல்வதை கேட்டது என்னிடம் தான். அப்போது என்னிடம் ஏதோ தெய்வ சக்தி இருக்கிறது, நீங்க சொல்வதை நான் கேட்கிறேன், என்று சொன்னவர். இதை இந்த அறையில் மட்டும் செய்யாமல் அனைவரும் கேட்கும்படி செய்ய வேண்டும் என்று சொன்னார். அதற்காக என்னை வைத்து ஒரு வீடியோ எடுத்தார். அந்த வீடியோவுக்காக லொக்கேஷன், எனக்கு மேக்கப் என்று என்ன என்னவோ செய்து எடுத்தார். அந்த வீடியோவை பார்த்து நான் பிரமித்து விட்டேன், அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது. அந்த வீடியோ தான் குடி பழக்கத்திற்கு அடிமையானவர்களை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிறகு ஒரு குறும்படம் எடுத்தோம், அனைத்தையும் மென்மையாக சொல்லக்கூடியவர். பிறகு படம் எடுக்கலாம் என்று சொல்லி, என்னிடம் தொடர்பில் இருந்தார். படம் தொடங்கலாம் என்று நான் சொன்ன பிறகு பதற்றமடைந்து விட்டார், அதனாலேயே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு விட்டது. உடனே அவரை அழைத்து, எந்த காலத்திலும் என் காசை ஏமாற்றி விட்டதாக சொல்ல மாட்டேன். படம் ஜெயிக்க வில்லை என்றால் நமக்கு அதிஷ்ட்டம் இல்லை என்று நினைத்துக் கொள்வோம். தோல்வியை சந்திக்காத மனிதர்களே இல்லை, அதனால் எந்தவித பதற்றமும் இன்றி இந்த படத்தை பண்ணுங்க, என்று சொன்னேன். எனக்கு செலவு வைக்க கூடாது என்று கடந்த மூன்று மாதங்களாக இட்லியும், தயிர் சாதமும் தான் சாப்பிடுகிறார், நானும் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. தயாரிப்பாளருக்கு செலவு வைக்க கூடாது என்று இப்படி செய்கிறார். நட்டியை இயக்க வேண்டும் என்பது அவரது ஆசை, ஆனால் அவர் ஒகே சொன்னவுடன் பதற்றமடைந்து விட்டார். அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அந்த நிலையிலேயே படம் எடுத்தார். குணா எப்படிப்பட்டவர் என்றால் சினிமாவுக்காக சாக கூடியவர். ஐந்து பைசா கூட எதிர்ப்பார்க்காமல் சினிமாவுக்காக வாழும் ஒரு நபர் அவர். நானும் இந்த சமூகத்தில் இருந்து தான் முன்னேறியிருக்கிறேன். அப்படிப்பட்ட சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்பதால் தான் நான் இந்த படத்தை தயாரித்திருக்கிறேன்.

நடிகர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நட்டி மிக சிறந்த மனிதர். அவர் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். கேரவன் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை, ரோட்டில் ஒரு சேர் போட்டு உட்கார்ந்திருப்பார். அவர் ஒரு தயாரிப்பாளரின் நடிகர் என்று தான் சொல்ல வேண்டும். நிஷாந்த், பாடினி உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தொகுப்பாளரை கசக்கி பிழிஞ்சி காயப்போட்டிருக்கிறேன். என் இசையமைப்பாளர் திறமையானவர், ஆனால் நாம் கேட்கும் போது பாடல்கள் கொடுக்க மாட்டார். தீபாவளிக்கு பேண்ட் கேட்டால் பொங்கலுக்கு தான் கொடுப்பார், அது ஒன்று தான் அவரது பிரச்சனை. மற்றபடி சிறந்த இசையமைப்பாளர் அவர், எம்.எஸ்.வி உடன் அவரை ஒப்பிடலாம் அந்த அளவுக்கு சிறந்த இசையமைப்பாளர். இவர்களுடன் சேர்ந்து மீண்டும் படம் பண்ணுவேன். ஆறு கதைகள் வைத்திருக்கிறேன், அதில் ஒன்றில் மீண்டும் நட்டி நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதில், வெற்றி தோல்வியை பார்த்து நானும், இயக்குநரும் பயப்பட போவதில்லை. நிச்சயம் தொடர்ந்து படம் பண்ணுவோம், என்றார்.

நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், இந்த படத்திற்காக நான் இயக்குநர் குணாவை சந்தித்த போது, அவர் ஒன்றரை மணி நேரம் கதை சொன்னார். கதையில் அவர் மருத்துவம் சார்ந்த பல விசயங்களை மிக சரியாக கையாண்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி இந்த கதையை புடிச்சீங்க, என்று கேட்டேன். அப்போது தான் அவர் தயாரிப்பாளர் தான் கதை எழுதியதாக சொன்னார். அந்த கதையை அவ்வளவு சாதாரணமாக சொல்ல முடியாது, யோசிக்க முடியாது. பைபோல் டிசாடர் என்பது எப்படி வேண்டுமானாலும் வரலாம். அதை மிக சரியாக கதையில் கையாண்டிருக்கிறார்கள். இயக்குநர் குணா உடல்நிலை பாதிக்கப்படும் போது கூட மன சிதைவு எத்தகைய நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதை நான் உணர்ந்தேன். இந்த கதையில் சொல்லப்பட்டிருக்கும் விசயங்களை இதுவரை யாரும் கையாண்டதில்லை. சில படங்களில் லேசாக சொல்லியிருந்தாலும், இந்த படத்தில் அதை மிக சிறப்பாக முழுமையாக செய்திருக்கிறார்கள். செந்தில் வேலன் வைத்திருக்கும் ஆறு கதைகளிலும் நடிக்க நான் ரெடியாக இருக்கிறேன். நான் பல படங்களில் போலீஸாக நடித்திருக்கிறேன், ஆனால் இந்த படத்தின் போலீஸ் வேடத்தை வித்தியாசமாக கையாண்டிருக்கிறார்கள், அதற்கு கதை எழுதியிருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் குணா பல திறமைகள் கொண்டவர். அவர் ஒரு ஓவியர், கவிதை எழுதுவார், நடனம் ஆடுகிறார், அவர் நிச்சயம் நல்ல நிலைக்கு வருவார். என்னுடன் இணைந்து நடித்த ரூசோ சிறந்த நடிகர். அவர் நடித்த வேடம் எனக்கு கொடுத்திருந்தால் தெறித்து ஓடியிருப்பேன். அந்த அளவுக்கு கஷ்ட்டமான வேடம் அது, அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். நடிகை பாடினியுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு இல்லை, ஆனால் அவரது காட்சிகளை பார்த்து மிரண்டு விட்டேன், ஒரே ஷாட்டில் அந்த காட்சிகளில் நடித்ததாக சொன்னார்கள், சிறப்பாக இருந்தது.

இந்த படத்தை வாழ்த்த வந்த கஸ்தூரி ராஜா, கே.ராஜன், இயக்குநர் மைக்கேல், பேரரசு ஆகியோருக்கு நன்றி. இசையமைப்பாளர் சிறப்பான பாடல்கள் கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் பேசும் போது, தீபாவளி ஃபேண்ட் கேட்டால் பொங்கலுக்கு கொடுப்பதாக சொன்னார். ஆனால், இந்த கதையை புரிந்துக்கொண்டு இசையமைப்பது ரொம்ப கஷ்டம், அதற்கு காலதாமதம் நிச்சயம் ஆகும். சுகுணா மேடமுக்கு சினிமா புதிது என்றாலும் ஒரு வாரத்தில் அதை கற்றுக்கொண்டார். இங்கு என்ன நடக்கிறது, எப்படி கையாள வேண்டும் என்பதை புரிந்துக்கொண்டு சிறப்பாக பணியாற்றினார் அவருக்கு நன்றி. யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் குணா படத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். படம் நன்றாக வந்திருக்கிறது என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் இசை குறுந்தகட்டை இயக்குநர் கஸ்தூரி ராஜா வெளியிட கே.ராஜன், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
லஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி’ & ‘வீனஸ் என்டர்டெய்னர்ஸ்’ சார்பில் ஜி.மனோகரன் & கே.பி. ஸ்ரீகாந்த் தயாரிப்பில், நடிகர் உபேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’Ui’. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் […]
சினிமாலஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி’ & ‘வீனஸ் என்டர்டெய்னர்ஸ்’ சார்பில் ஜி.மனோகரன் & கே.பி. ஸ்ரீகாந்த் தயாரிப்பில், நடிகர் உபேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’Ui’. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் இணைத்தயாரிப்பாளர் நவீன் பேசுகையில், இந்தப் படம் எங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய கனவு. உபேந்திரா இதை அழகாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். இந்தக் கதையை எந்த ஜானரிலும் அடைக்க முடியாது. தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணி புரிந்துள்ளனர் என்றார்.
தயாரிப்பாளர் சமீர் பேசுகையில், ஒரு சிலருக்கு மட்டும்தான் தனித்துவமான சினிமா மொழி கைவரும். அதில் உபேந்திராவும் ஒருவர். டிரெய்லர் அருமையாக வந்துள்ளது. படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில், தனித்துவமான கதைகள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் இயக்குநர்கள் குறைவு. எந்த விஷயம் எடுத்தாலும் அதை மட்டும் தனித்துவமாக காட்டுவதில் மெனக்கெடுவார். இந்தப் படத்திலும் அந்த வித்தியாசமான கதைக்களம் இருக்கும். அவருக்கும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

நடிகர் சண்முகப்பாண்டியன் பேசுகையில், உபேந்திரா சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அப்பாவும் அவரைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். ‘Ui’ படத்தின் டிரெய்லரும் வித்தியாசமாக உள்ளது. ஹாலிவுட் தரத்தில் நம்மால் படம் எடுக்க முடியாதா, அவர்கள் செய்வதை நம்மால் செய்ய முடியாதா என்ற கேள்வி எனக்கு எப்போதும் இருக்கும். அந்த ஏக்கத்தை இந்தப் படம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனை கன்னடப் படம் என்று மட்டும் பார்க்காமல் பான் இந்திய படமாகப் பார்த்து மக்கள் ஆதரவுக் கொடுக்க வேண்டும் என்றார்.

நடிகை ரேஷ்மா பேசுகையில், முதல் முறையாக சென்னைக்கு என் படத்தின் புரோமோஷனுக்காக வந்திருப்பது மகிழ்ச்சி. என் கதாபாத்திரம் பற்றியும் படம் பற்றியும் பெரிதாக நான் பேச முடியாது. ஆனால், படம் நிச்சயம் பல ஆச்சரியங்களைக் கொடுக்கும் என்றார்.

நடிகர் உபேந்திரா பேசுகையில், டிரெய்லரில் நிறைய வித்தியாசமான விஷயங்கள் பார்த்திருப்பீர்கள். இந்தப் படம் ஒரு ஃப்ரூட் சாலட் போல, இங்கு நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களும் இந்தப் படத்தில் இருக்கும். கமர்ஷியல் படத்திற்கு ஏற்ற எல்லா விஷயங்களும் இதில் இருக்கிறது. இன்னொரு சர்ப்ரைஸான விஷயமும் இதில் நீங்கள் பார்த்து என்னிடம் சொல்ல வேண்டும் என காத்திருக்கிறேன். என்னுடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
ரங்கா ஃபிலிம் கம்பெனி சார்பில் அறிமுக இயக்குநர் ரங்கா, நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் தென்சென்னை. இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கதைப்படி.. சென்னைக்கு பிழைப்புத் தேடி வரும் தேவராஜன் தனக்கு தெரிந்த ஹோட்டல் தொழிலில் தன் திறமையால் ஒரு ஹோட்டலை […]
விமர்சனம்ரங்கா ஃபிலிம் கம்பெனி சார்பில் அறிமுக இயக்குநர் ரங்கா, நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் தென்சென்னை. இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கதைப்படி.. சென்னைக்கு பிழைப்புத் தேடி வரும் தேவராஜன் தனக்கு தெரிந்த ஹோட்டல் தொழிலில் தன் திறமையால் ஒரு ஹோட்டலை உருவக்குகிறார். மதுரையில் சந்திக்கும் அண்ணன், தங்கையை தன்னுடன் அழைத்து வந்து அவர்களையும் தன் குடும்பமாக வளர்த்து, தொழிலையும் சேர்த்து வளர்க்கிறார். அவர்களை தன் வாரிசுகளுக்கு திருமணமும் செய்து வைக்கிறார். அவர் மறைவுக்கு பிறகு அந்த ஸ்தாபனத்தை நிர்வகிக்கிறார் அவரின் பேரன் தான் நாயகன் ரங்கா. தாத்தாவிற்கு பிறகு அந்த ஹோட்டலைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நாயகனுக்கு வருகிறது. இன்னொரு பக்கம் வில்லன் பாரில் வைத்து பல தில்லுமுள்ளுகளை செய்கிறார். பண மோசடியில் ஈடுபடும் வில்லனின் கையில் ஹோட்டல் போகும் நிலை ஏற்படுகிறது. அதே நேரத்தில் ஒரு குழந்தையை நாயகன் ரோட்டில் கண்டெடுக்கிறார். அந்த குழந்தை மூலம் நாயகியை சந்திக்கிறார். அது யாருடைய குழந்தை ? ஹோட்டல் தொழில் என்ன ஆனது ? இதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பதை பரபரப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

முதலில் தென் சென்னையில் நடக்கும் கதை பெரும் ஆசுவாசம் தருகிறது. நடுத்தர வர்க்க குடும்பத்தின் வாழ்வியலுக்குள் ஒரு பரபரப்பான த்ரில்லர் அனுபவத்தை முதல் படத்திலேயே தந்து அசத்தியிருக்கிறார். நாயகனாக நடிப்பில் முதல் படம் என்ற தயக்கங்கள் எதுவும் இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார்.
மருத்துவராக நாயகி ரியா அழகான, நடிப்பை வெளிப்படுத்தி அசத்துகிறார். முன்னாள் ராணுவ அதிகாரி இந்நாள் செக்யூரிட்டி ஏஜன்ஸி நடத்தும் நிதின் மேத்தா தோற்றத்திலேயே பாதி ஜெயித்து விடுகிறார். தன் தேர்ந்த நடிப்பின் மூலம் வில்லன் பாத்திரத்தை வெகு சிறப்பாக செய்துள்ளார். இளங்கோ குமரனுக்கு சின்ன வேடம் தான், வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன் எல்லோரும் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

சண்டைக்காட்சிகள் ஒரு பெரிய பட்ஜெட் படத்தை பார்க்கும் உணர்வைத் தருகிறது.
படத்திற்கு மிகப்பெரும் பலமாக பின்னணி இசை அமைந்துள்ளது, ‘டாடா: பிளடி பெக்கர் படங்களுக்கு இசையமைத்த ஜென் மார்டின் பின்னணி இசை அமைத்துள்ளார். சிவ பத்மயன் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக வந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் சரத்குமார் காட்சிகளை பட்ஜெட்டைத் தாண்டி சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தின் பட்ஜெட் சின்னதாக இருந்தாலும், படக்குழு அனைவரும் முழு உழைப்பைத் தந்திருப்பது தெரிகிறது.
புது நடிகர்கள், புது கலைஞர்கள் வைத்துக்கொண்டு, கதை, அதை நகர்த்திய விதம் என எல்லாவற்றிலும் அறிமுக இயக்கத்தை தாண்டி ஜெயித்திருக்கிறார் ரங்கா. திரைக்கதை மட்டும் இன்னும் மெருகேற்றியிருந்தால் சிறப்பான படைப்பாக ஈர்த்திருக்கும். ஆனாலும் தென் சென்னை படத்தை கண்டிப்பாக ஒரு தடவை பார்த்து ரசிக்கலாம்.
தமிழ் திரையுலகின் பிரபல டான்ஸ் மாஸ்டரான ஷெரிப் டான்ஸுகாக பிரத்தியேகமான, இந்தியாவின் முதல் OTT தளமான JOOPOP HOME ஐ துவங்கியுள்ளார். வடபழனி நெக்ஸஸ் விஜயா மாலில் நடைபெற்ற விழாவில், இந்த செயலி (app) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி (app) நடன ஆர்வலர்கள், நடன […]
சினிமாதமிழ் திரையுலகின் பிரபல டான்ஸ் மாஸ்டரான ஷெரிப் டான்ஸுகாக பிரத்தியேகமான, இந்தியாவின் முதல் OTT தளமான JOOPOP HOME ஐ துவங்கியுள்ளார். வடபழனி நெக்ஸஸ் விஜயா மாலில் நடைபெற்ற விழாவில், இந்த செயலி (app) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி (app) நடன ஆர்வலர்கள், நடன கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள், கலை வடிவத்துடன் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
JOOPOP HOME அறிமுக நிகழ்வில் திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் பாபி சிம்ஹா ஆகியோருடன் ஷெரீப்பின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் கலந்து கொண்டனர். பல ஆண்டுகளாக நடனத் துறையில் ஷெரிஃப் ஆற்றி வந்த சிறப்பான பணிகள், இனி இணையம் வழியே நடன உலகில் அனைவரையும் ஊக்குவிக்கும்.

ஷெரீஃப் மாஸ்டரின் வெற்றிக்கான பாதை, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும். ஷெரீஃப் 2003 ல் தனது சொந்த நடனப் பள்ளியான ஷெரீஃப் டான்ஸ் கம்பெனி (SDC) மூலம் டான்ஸ் கற்பிக்கத் துவங்கினார். அவர் தனது தனித்துவமான நடனத் திறமையை மேம்படுத்தி, ஆர்வமுள்ள நடனக் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். இந்த நிறுவனம் மூலமே நடிகை சாய்பல்லவி டான்ஸில் அறிமுகமானார் என்பது குறிப்பிடதக்கது. 2009 இல், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய உங்களில் யாரு அடுத்த பிரபு தேவா என்ற நடனப் போட்டியில் வென்று, தேசிய அளவில் புகழ் பெற்றார் ஷெரீஃப். இந்த பிரம்மாண்ட வெற்றி அவருக்கு அங்கீகாரத்தை அளித்தது மட்டுமல்லாமல், ஒரு திரைப்பட நடன இயக்குநராக அவரது திரை வாழ்க்கைக்கான கதவுகளையும் திறந்து, பல திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று தந்தது.
ஷெரீஃப் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களில் 250 பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அதில் இயக்குநர் ராஜ்குமார் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் அவர் பணிபுரிந்த படங்கள் குறிப்பிடத்தக்கவை. ராஜ்குமாரின் சமீபத்திய பிளாக்பஸ்டர் அமரன் படத்தில் ஹிட் பாடல்களுக்கு ஷெரீஃப் நடனம் அமைத்துள்ளார். மேலும் கார்த்திக்குடன் இணைந்து இறைவி முதல் வரவிருக்கும் சூர்யா 44 வரை தொடர்ந்து பணியாற்றி, அவரது படைப்பாற்றல் மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தி வருகிறார்.

JOOPOP HOME அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள், ஷெரிப்பின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பற்றிய தங்கள் பார்வையைப் பகிர்ந்து கொண்டனர். கார்த்திக் சுப்புராஜ், ராஜ்குமார் பெரியசாமி மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் JOOPOP HOME பற்றிய ஐடியாவை பற்றி, ஷெரிப் சுமார் 6-7 ஆண்டுகளாக பேசிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர். இந்த திட்டத்தின் மீது அவர் இடைவிடாத நம்பிக்கை கொண்டு, இறுதியாக உயிர்ப்பித்தது குறித்து, தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஷெரீப்பின் பயணம் குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறியதாவது, ஆரம்ப காலத்தில் இருந்தே ஷெரீப்பின் அசைக்க முடியாத நடனத் திறமையைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். 2009 இல் நான் இயக்கிய போட்டியில் கூட, அவருடைய தனித்த பார்வையும் ஆர்வமும் வெளிப்பட்டது. அவர் JOOPOP HOME ஐத் தொடங்குவதைப் பார்ப்பது, எனக்கு ஒரு பெருமையான தருணம், ஏனெனில் ஒரு மிகப்பெரிய கனவை காண்பதோடு, அதை அடைய முடியும் என்கிற உற்சாகத்தை இது தருகிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், ஷெரிப் ஒரு நடன இயக்குநர் மட்டுமல்ல, அவர் ஒரு கதைசொல்லி. நாங்கள் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு திரைப்படத்திலும் அவரது படைப்பாற்றலால் உயர்ந்து கொண்டே வருகிறது. JOOPOP HOME எனும் இந்த ஆப் நடனத்தை அடுத்த படிக்கு கொண்டு செல்வதற்கான அவரது உந்துதலுக்கு ஒரு சான்றாகும்.
டான்ஸ் மாஸ்டர் ஷெரிப் கூறுகையில், ஆரம்பத்திலிருந்தே நடனம்தான் என் வாழ்க்கை. எனது நடனப் பள்ளியிலிருந்து தொடங்கி, 2009 இல் போட்டி, இப்போது ஒரு திரைப்பட நடன இயக்குநர் என, நான் எப்போதும், அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். JOOPOP HOME என்பது சமூகத்திற்கு நான் ஆற்றும் பங்களிப்பாகும், நடனக் கலைஞர்கள் உலகளாவிய அரங்கில் பிரகாசிக்க ஒரு இடத்தை உருவாக்குவதற்கு என்னுடைய ஒரு சிறு முயற்சியாக இது இருக்கும்.

பயிற்சிகள், நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் நடன உலகில் பிரத்யேகமான திரைக்குப் பின்னால் உள்ள காட்சிகளை வழங்கும், ஒரு விரிவான தளமாக இந்த செயலி செயல்படும். இது அடுத்த தலைமுறை நடனக் கலைஞர்களை ஊக்குவிக்கும் மற்றும் அவர்களுக்கு இணையற்ற வாய்ப்புகளை வழங்கும் என்று ஷெரிப் நம்புகிறார்.
JOOPOP HOME என்பது நடனத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் இந்தியாவின் முதல் OTT தளமாகும், இது நடனக் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்களை மகிழ்விக்கவும், கற்பிக்கவும், ஊக்கப்படுத்தவும் பரந்த அளவிலான உள்ளடக்கத்தை வழங்குகிறது. வளர்ந்து வரும் உலகளாவிய நடன சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பை வழங்கும், இந்த செயலியை, இப்போது அனைவரும் பதிவிறக்கம் செய்யலாம். ஷெரீஃப் மாஸ்டர் இந்தப் புதிய பயணத்தை துவங்குவது, ஆர்வமும் உறுதியும் இருந்தால், கனவுகளை சாத்தியமாக்க முடியும் எனும் நம்பிக்கையை தந்து, அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது.