ஶ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் V. ரவிச்சந்திரன் தயாரிப்பில், மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “நாளை நமதே”. கதைப்படி.. சிவகங்கை மாவட்டம் சிவதாணுபுரம் ஊராட்சியில் ஆதிக்க சாதியினர் […]
விமர்சனம்
சென்னை புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் எழில் இனியன் தயாரிப்பில், மாஸ் ரவி, லட்சுமி பிரியா, மஞ்சு, சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், தங்கதுரை பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடிப்பில், மாஸ் ரவி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “காத்துவாக்குல […]
விமர்சனம்
ஶ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், மாணிக்கம் தயாரிப்பில், விக்னேஷ், மனிஷா ஜித், நாசர், ஒய்ஜி மகேந்திரன், தலைவாசல் விஜய், யோகி, அஜய் ரத்னம், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில், ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ரெட் ஃபிளவர்”. கதைப்படி.. […]
விமர்சனம்
சேலம் அய்யனார் ஶ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் நிறுவனம் சார்பில், அவதார் இயக்கத்தில் விரைவில் படப்பிடிப்பு பணிகளை துவங்க உள்ள “லில்லி புட்” படத்தின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் “லில்லி புட்” படத்தின் கதை குறித்து தயாரிப்பாளரும், நடிகருமான சேலம் […]
சினிமாசேலம் அய்யனார் ஶ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் நிறுவனம் சார்பில், அவதார் இயக்கத்தில் விரைவில் படப்பிடிப்பு பணிகளை துவங்க உள்ள “லில்லி புட்” படத்தின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் “லில்லி புட்” படத்தின் கதை குறித்து தயாரிப்பாளரும், நடிகருமான சேலம் அய்யனார் பேசுகையில், லில்லி புட் என்பது ஒருவகையான மிருகம். அதை வீட்டில் வைத்து வணங்கினால் நினைத்ததை சாதிக்கும் வல்லமை வரும். இந்தியாவில் மிகப்பெரிய அரசியல்வாதி ஒருவர் வைத்துள்ளதாக நம்பப்படுகிறது. திரையுலக முன்னனி நடிகர் நாயகனாக நடிக்க இருப்பதாகவும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இப்படத்தை அவதார் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடிப்பில் “என்டர் தி டிராகன்” என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் வெற்றி நாயகனாகவும், சேலம் அய்யனார் அரசியல்வாதியாகவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பார்த்திபன். ஜெ இயக்கி வருகிறார்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் வினோத், இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு […]
மாவட்ட செய்திகள்இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் வினோத், இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் பரமக்குடியில் சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து வினோத் பரமக்குடி நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு மனுதாரருக்கு ரூபாய் 14 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்ற உத்தரவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இழப்பீடு வழங்காமல் காலதாமதம் செய்துள்ளனர்.

இதனையடுத்து அரசு பேருந்தை ஜப்தி செய்ய பரமக்குடி சார்பு நீதிமன்ற நீதிபதி சதீஷ் உத்தரவிட்டுள்ளார். அதனையடுத்து பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்த பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வந்துள்ளனர். அப்போது பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
Komala Hari Pictures & One Drop Ocean Pictures தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சமூகத்தில் குடும்ப அமைப்பை பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை […]
சினிமாKomala Hari Pictures & One Drop Ocean Pictures தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சமூகத்தில் குடும்ப அமைப்பை பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜென்டில்வுமன் ”.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஹரிபாஸ்கர் பேசுகையில்.. இந்தப்படத்தின் கதை கேட்டவுடனே படு இண்ட்ரஸ்டிங்காக இருந்தது. இயக்குநர் சொன்ன மாதிரியே படத்தை எடுத்தார். எந்த செலவும் இழுத்து விடவில்லை, மிக அழகாக படத்தை எடுத்துள்ளார். எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். படம் மிக நன்றாக வந்துள்ளது என்றார்.

One Drop Ocean Pictures சார்பில் தயாரிப்பாளர் லியோ பேசுகையில்.. ஜென்டில்வுமன் கதையை ஜோஷ்வா சொன்ன போது, இப்படத்தில் அழுத்தமான கதை இருப்பது புரிந்தது. மிகத் தெளிவாக சமூகம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து கதையிலிருந்தது. இந்தக்கதை பிடித்து எதையும் யோசிக்காமல் தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர்கள் ஹரி பாஸ்கர், கோமளா இருவருக்கும் நன்றி. இப்படத்தைப் புரிந்து கொண்டு, உழைப்பைத் தந்த கலைஞர்கள், நடிகர்கள் லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி. லிஜோமோல் ஜெய்பீமில் பார்த்ததை விட, மிகச்சிறப்பாக நடித்துள்ளார். லாஸ்லியாவுக்கு மிக அழுத்தமான பாத்திரம், ஒரு காட்சியில் லிஜோமோல், லாஸ்லியா இருவரும் கலக்கியிருக்கிறார்கள். வசனம் பாடல் வரிகள் யுகபாராதி, அவர் இப்படத்திற்குக் கிடைத்தது வரம். எந்த சாதியிலும் ஆணாதிக்கம் இன்றும் இருக்கிறது, அதைச் செருப்பால் அடித்த மாதிரி மிக அழுத்தமாகச் சொல்லியுள்ளார் இயக்குநர். ஹரி என்ன கேரக்டர் கொடுத்தாலும் தனித்துவமாகச் செய்வதைப் பார்த்து வியந்திருக்கிறேன். இப்படத்தில் கண்ணிலேயே நடித்துள்ளார். படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் , படத்தை வெளியிடும் உத்ரா புரடக்சனுக்கும் நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் காத்தவராயன் பேசியதாவது.. லிஜோமோல் ஜோஷ், ஹரி கிருஷ்ணன் இருவரும் நடிப்பார்கள் எனத் தெரியும், அவர்களுடைய படங்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் லாஸ்லியா எப்படி நடிப்பார் எனத் தயக்கமாக இருந்தது, ஆனால் படம் பார்த்த பிறகு தான் தெரிந்தது, மூன்று பேரும் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா 96 பார்த்த போதே பிடிக்கும், இப்படத்தில் இன்னும் அட்டகாசமாக இசையமைத்துள்ளார். பாடல் வரிகள், வசனம் மிக அருமையாகத் தந்த யுகபாரதிக்கு நன்றி. இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் உதவி இயக்குநராக இருக்கும் போதே, நிறைய டார்ச்சர் செய்வான், இப்போது என்ன பண்ணப் போகிறானோ? என நினைத்தேன், ஆனால் இப்படத்தை மிக அமைதியாக அழகாக எடுத்துள்ளார் என்றார்.
உத்ரா புரடக்சன்ஸ் சார்பில் ஹரி உத்ரா பேசியதாவது… ஜென்டில்வுமன் இதுவரை நாங்கள் வெளியிட்ட படத்திலிருந்து, வித்தியாசமான படமாக இருக்கும். இந்த படத்தை வெளியிட எங்களுக்கு வழி ஏற்படுத்தித் தந்த, ரிஸ்வானுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் ஹரி பாஸ்கர், கோமளா மற்றும் நேதாஜி ஆகியோருக்கு நன்றி. இயக்குநர் ஜோஷ்வா எந்தவொரு விசயத்தையும் மிக எளிதில் ஒத்துக் கொள்ள மாட்டார், எந்த விஷயமாக இருந்தாலும், மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார். இந்த படத்தின் ரிலீஸுக்கு அவரும் நானும் இணைந்து, நிறைய ஐடியாக்கள் ரெடி செய்து வைத்திருக்கிறோம். மார்ச் ஏழாம் தேதி இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றார்.
இயக்குநர் லெனின் பாரதி பேசியதாவது.. டிரெய்லர் மிக அற்புதமாக இருந்தது. 19 நாட்களில் எடுத்ததாகச் சொன்னார்கள், அப்படி எடுக்கும் போது போதாமையால், பல தவறுகள் காட்சிகளில் தெரியும், ஆனால் இந்தப்படம் படு கச்சிதமாக இருந்தது. அதிலிருந்த அடர்வு மிக அருமையாக இருந்தது. பார்க்கப் பிரமிப்பாக இருந்தது. ஜோஷ்வாவை பார்த்தால், நம்மாலும் முடியும் எனும் நம்பிக்கை வருகிறது. பல கோடி போட்டு எடுக்கும் படங்களை விடக் கச்சிதமாக இருக்கிறது. லிஜோமோல் பலர் தயங்கும் பாத்திரங்களை எடுத்து நடிக்கிறார். ஹரி, லாஸ்லியாவுக்கும் வாழ்த்துக்கள். மனித வரலாற்றில் அன்பைப் பேசும் யுகபாரதி எழுத்தில் படம் உருவாவது பெருமை. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது.. இயக்குநர் ஜோஷ்வா முதலில் இந்தக் கதையைச் சொன்ன போது இந்த படத்தின் பெயரே வேறு, ஆனால் அதைவிட ஜென்டில்வுமன் டைட்டில் மிக பொருத்தமாக உள்ளது. ஜென்டில்மேன் பற்றி மட்டும் பேசும் உலகில், ஜென்டில்வுமன் பற்றியும் பேச வேண்டும் அதை ஜோஷ்வா செய்துள்ளான். சென்சாரில் இருந்து ஒரு நாள் போன் செய்தான், இத்தனை கட் என்ன செய்வது என்றான், சென்சாரால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான் தான், அதனால் இதையெல்லாம் செய் என சொல்லித் தந்தேன். இன்றைய நிலைமை அப்படித்தான் இருக்கிறது. இங்கு எல்லாவற்றையும் புனிதப்படுத்துவது தான் மிகப்பெரிய பிரச்சனை, புனிதப்படுத்த நீ யார் ?. பலர் நம் காலத்துக்கு முன்பே வழக்கத்தை உடைத்து, என்னென்னவோ செய்து விட்டார்கள் ஆனால் நாம் அதைத் தாண்டவே இல்லை. இப்படியான உலகில் புனிதப்படுத்துவதைக் கட்டுடைப்பது முக்கியம். பெண்களை சக மனுஷியாகப் பார்க்காமல் கடவுளாகப் பார்க்கும் சமூகம் தான் மிக ஆபத்தான சமூகம் என நினைக்கிறேன். பெண்களை சக மனுஷியாகப் பார்த்து, அவர்களோடு அவர்கள் மொழியில் பேசுவது தான் இந்த ஜென்டில்வுமன். இது போன்ற படத்தைத் தயாரித்து திரைக்குக் கொண்டு வரும் தயாரிப்பாளருக்கு என்றார்.
இயக்குநர் த செ ஞானவேல் பேசியதாவது. இயக்குநரிடம் ஏன் ஜென்டில்வுமன் எனப் பெயர் வைத்தீர்கள் எனக் கேட்டேன். இந்த மாதிரியான தலைப்புகளில் ஒன்று ஏதாவது கருத்து இருக்க வேண்டும், இல்லை எனில் கவன ஈர்ப்பு இருக்க வேண்டும். அவர் மிக அற்புதமான பதில் ஒன்றைத் தந்தார். சராசரி வழக்கத்தை உடைப்பது, இதுவரை ஜென்டில்மேன் மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறோம் அதை மாற்ற ஜென்டில்வுமன் வைக்கலாம் என வைத்தேன் என்று சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு ஸ்டீரியோ டைப்பை உடைப்பது சமூகத்தில் மிகவும் முக்கியம் என நான் கருதுகிறேன். கலைஞனாக ஸ்டீரியோ டைப்பை உடைப்பது மிகவும் முக்கியம். ஸ்டீரியோ டைப்பை உடைத்துத் தான் அனைத்து மாற்றங்களும் வந்துள்ளது. அதனால் இன்றைய சமூகத்தில் அந்த முயற்சியில் வரும் அனைத்து படைப்புகளையும் நாம் வரவேற்க வேண்டும். இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கும், உழைத்த கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

பாடலாசிரியர் வசனகர்த்தா யுகபாரதி பேசியதாவது…
25 ஆம் ஆண்டுகால திரை வாழ்வில் நிறையத் தம்பிகளை நான் சந்தித்திருக்கிறேன், அவர்களில் சிலரைச் சந்திக்கும் போது, இவர்கள் கண்டிப்பாக இயக்குநர் ஆகி விடுவார்கள் என நினைப்பேன், அப்படியான தம்பிதான் ஜோஷ்வா. இந்த திரைப்படத்தில் உள்ள கலைஞர்கள், நடிகர்கள் பற்றிச் சொல்ல வேண்டும், எல்லோரும் ஜோஷ்வா மீது வைத்த அன்பு தான் இந்த திரைப்படம். அவர் எப்போதும் தன் வேலை மீது கவனமாக இருப்பார். அவர் 19 நாளில் இப்படத்தை முடிக்க முடியும் எனச் சொன்ன போது, நான் நம்பவில்லை, ஆனால் அடுத்தடுத்து நல்ல கலைஞர்கள் நம்பி வந்த போது அது நடந்தது. ஜோஷ்வாவிற்கு வாழ்த்துக்கள் என்றார்.
இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் பேசியதாவது.. சினிமா மீது நான் வைத்த காதல்தான் இந்தத் திரைப்படம். 19 நாளில் படத்தை முடிக்க முடியும் எனத் திட்டமிட்டது நான் அல்ல, அது என் திட்டம் அல்ல, அது நடக்கக் காரணம் என்னுடைய படக் குழுவினர் தான், எனக்காக என்னை நம்பி உழைத்தார்கள். அதனால் தான் இது நடந்தது. சென்சாரின் போது, ராஜுமுருகன் தான் அறிவுரை சொன்னார், அவர் அறிவுரையால் தான் சென்சார் முடித்தேன். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவைப் பற்றிச் சொல்ல வேண்டும், அவரது இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும், கிட்டத்தட்ட 20 நிமிட காட்சிகள் வெறும் இசையில் மட்டுமே நகரும். அற்புதமாக இசையமைத்துள்ளார். ஆர்ட் டைரக்டர் அமரன் 20 நாட்களும் என்னுடன் இருந்தார். எடிட்டர் இளையராஜா சேகர், அவரை நான் நிறைய டார்ச்சர் செய்துள்ளேன், ஆனால் அதைத்தாண்டி என்னுடன் நின்றார். இந்தக்கதை எழுதியவுடன் இதை லிஜோ மோலிடம் சொல் என்றார் யுகபாரதி. அவரிடம் இந்த கதையைச் சொன்ன போது, அவர் ஒரு கேள்வி கேட்டார் அந்த கேள்விதான் படம் பார்க்கும்போது ரசிகர்கள் கேட்பார்கள், அதன் பதில் சொன்னவுடன் அவர் ஒத்துக்கொண்டார். லாஸ்லியா எனக்குப் பழக்கம். நான் இந்தக்கேரக்டர் சொல்லி அனுமதி எல்லாம் கேட்காமல், நடிக்கக் கூப்பிட்டேன், அவர் என்னை நம்பி வந்தார். ஹரியைப் படப்பிடிப்பிற்கு மூன்று நாட்கள் முன் தான் கூப்பிட்டேன், எனக்காக வந்தார். தயாரிப்பாளர்கள் பற்றி சொல்ல வேண்டும், என்னிடம் இந்தப்படத்தில் காமெடி கமர்ஷியல் இருக்கிறதா? என எதுவும் கேட்கவில்லை நான் கேட்ட அனைத்தும் தந்தார்கள். நேதாஜி மூலம் தான் தயாரிப்பாளர்கள் அறிமுகம், அவருக்கு நன்றி என்றார்.

நடிகர் ஹரி கிருஷ்ணன் பேசுகையில்.. இந்தத் திரைப்படம் ஆரம்பிக்க மூன்று நாட்கள் இருக்கும்பொழுது தான் ஜோஷ்வா என்னை அழைத்தார், அவர் இந்த கதை சொன்ன போது, எப்படி இந்த கேரக்டர் செய்யப் போகிறேன் எனப் பயமாக இருந்தது. அவர் சொல்லும் கதைகள் எல்லாமே கொஞ்சம் பயமாகவே தான் இருக்கும். ஜோஷ்வா எனக்கு நல்ல நண்பர், அவரும் நானும் அயனாவரத்தைச் சேர்ந்தவர்கள். என் அப்பா ஆபாவாணன் படங்கள் பற்றிச் சொல்வார், அந்த படங்கள் எல்லாம் ஒரு இம்பாக்ட் கிரியேட் செய்யும். அது போலத் தான் நான் ஜோஷ்வாவை பார்க்கிறேன். இந்தப்படம் எப்படி வரும் எனப் பயம் இருந்தது, தினமும் ஜோஷ்வாவை கேட்டுக் கொண்டிருப்பேன். இந்த மாதிரி கதைகள் கண்டிப்பாகத் திரையில் பேசப்பட வேண்டும். யுகபாரதி மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். லிஜோ மோல் ஜெய்பீம் படத்திலேயே பிடிக்கும், அவருடன் நடிக்க ஆவலாக இருந்தேன், ஆச்சரியமாக லாஸ்லியாவும் இருந்தார், அவரும் அட்டகாசமாக நடித்துள்ளார். தயாரிப்பாளர்களுக்கு என் நன்றி. 19 நாளில் படத்தை முடித்தது சாதனை தான் என்றார்.
நடிகை லாஸ்லியா பேசியதாவது.. எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர் ஜோஷ்வாவிற்கு நன்றி. அவர் நினைத்தது போல், இந்தக் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறேன் என நம்புகிறேன், லிஜோ மோல் உடன் நடித்ததைப் பெருமையாக நினைக்கிறேன். அவர் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஹரி உடன் நடித்தது நல்ல அனுபவம், இருவருக்கும் நன்றி. ஃபிரேம் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக இருக்கும் ஒளிப்பதிவாளர் காத்தவராயனுக்கு நன்றி. கோவிந்த் வசந்தா இசை சூப்பராக இருக்கும். யுகபாரதியின் வசனங்கள் அற்புதம். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’. இப்படத்தை GRR மூவிஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். பிப்ரவரி 21 வெளியாகும் இப்படத்தின் முன்வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. […]
சினிமாஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’. இப்படத்தை GRR மூவிஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். பிப்ரவரி 21 வெளியாகும் இப்படத்தின் முன்வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில், ‘சாட்டை’ பட இயக்குநர் அன்பழகன், ‘சங்கத்தலைவன்’ பட இயக்குநர் மணிமாறன், ‘வெள்ளை யானை’ இயக்குநர் சுப்ரமணிய சிவா, ‘சித்திரைச் செவ்வானம்’ இயக்குநர் ஸ்டன்ட் சில்வா, ‘ரைட்டர்’ பட இயக்குநர் பிராங்க்ளின், ‘திரு. மாணிக்கம்’ பட இயக்குநர் நந்தா பெரியசாமி, ‘தலைக்கூத்தல்’ பட இயக்குநர் ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, இயக்குநர் மலையன் கோபி, இயக்குநர் கார்த்திக், பிக்பாஸ் வெற்றியாளர் முத்துக்குமரன், நடிகர் தீபக், ஹரீஷ் ஆகியோருடன் சமுத்திரக்கனி, இயக்குநர் தனராஜ், தயாரிப்பாளர் பிருத்தவி போலவரபு, கதாநாயகி மோக்ஷா, ப்ரமோதினி, பாடலாசிரியர் முருகன் மந்திரம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் பிருத்தவி பேசுகையில், தந்தைக்கும் மகனுக்குமான பிணைப்பைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது. இந்தப் படத்தைப் பார்த்து முடித்ததும் அப்பாவை அழைத்து, ‘ஐ மிஸ் யூ’ என படம் பார்ப்பவர்கள் சொல்வார்கள் என்றார்.
இயக்குநர் நந்தா பெரியசாமி பேசுகையில், கல்லா இருந்த என்னை மாணிக்கக்கல்லாக மாற்றினார் சமுத்திரக்கனி. ராமரால் அகலிகைக்கு வாழ்க்கை கிடைச்சது போல், அவரால் எனக்கு வாழ்க்கை கிடைத்தது. அவர் சிறகில்லா தேவதை. அனைவரையும் கை பிடிச்சு உயர கூட்டிட்டுப் போவார். ‘ராமம் ராகவம்’ பத்தின் ட்ரெய்லர் பார்க்கும்போது, என் மனதில் அப்பா மின்னல் போல் வந்துட்டுப் போனார். இதுதான் இந்தப் படத்தோட வெற்றி என்றார்.

இயக்குநர் சுப்ரமணிய சிவா பேசுகையில், ராமம் என்றால் புகழ்; ராகவம் என்றால் மகன். தாயாக யார் வேண்டுமானால் வாழ்ந்துடலாம். தாயின் வயிற்றில் பத்து மாதம் இருப்பதால் தாய்மை அனைவரிடமும் இருக்கு. ஒரு மனிதன் தாயாக வாழ்வது இயற்கையான விஷயம். ஆனால் ஒரு மனிதன் தந்தையாக மாறுவதென்பது தவம். 40 வயதில், ஒருவனது முகம் அவனோட தந்தை முகமாக மாறும். சின்ன வயதில் என் முகம் என் அம்மா அமுதவல்லியின் முகமாக இருந்தது. நாற்பதைத் தாண்டியதும், என் அப்பா வடிவேலுவின் முகமாக மாறிவிட்டது. பெண்மையும் அன்பும் சேரும் போது தந்தை உருவாகிறான். தந்தை மட்டுமே மகனிடம் தோற்க ஆசைப்படுவான். வேறெந்த உறவும் யாருடனும் தோற்க ஆசைப்படுவதில்லை. ராமாயணத்தில் தசரதனும் கஷ்டப்படுறான், மகாபாரதத்தில் கெட்ட பிள்ளை பெற்ற திருதுராஷ்ட்ரனும் கஷ்டப்படுகின்றான். பெரிய வெற்றி பெற்ற தந்தையின் மகன், தந்தையை வெல்ல முடியாமல் வாழ்நாளெல்லாம் கஷ்டப்படுவான். அவன் எப்படி வெற்றி பெறலாம் என்றால் நல்ல பெயர் எடுத்து ஜெயிக்கலாம்.

காந்தியை சுயசரிதையை எழுதச் சொல்றாங்க. ‘சுயசரிதை என்றால் தன் புகழைப் பாடுவது’ன்னு முன்னுரையில் எழுதுறார். ‘அது எனக்குக் கூச்சமா இருக்கு’ என்று சொல்லிவிட்டு, ‘நான் சத்தியத்தை எழுதுகிறேன்’ எனச் சொல்லியிருப்பார். காந்திக்கு 14 வயசு இருக்கும். பீடி பிடிப்பார், புலால் சாப்பிடுவார், திருடுவார். படுக்கையில் இருக்கும் அவர் அப்பாவிற்குக் கால் அமுக்கிக் கொண்டே, துளசிதாஸின் ராமாயணத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். ‘சிறந்த மகனான ராமன் பற்றியக் கதையைக் கேட்கிறோம். தான் நிறைய செய்கிறோம்’ என காந்திக்குக் குற்றவுணர்வு எழுகிறது. நேராகத் தந்தையிடம் பேச பயம். அதனால் வீட்ல இருந்து கொண்டே தந்தைக்குக் கடிதம் எழுதுறார். ‘ராமாயணம் மிகச் சிறந்த மகனைப் பற்றிய கதையா இருக்கு. ஆனா நான் நிறைய தவறு பண்றேன்’ என எழுதி போஸ்ட் பண்ணுகிறார். காந்தியின் அப்பாக்குக் கடிதம் வருது. காந்தியின் எதிரிலேயே அவரது அப்பா அந்தக் கடிதத்தைப் படிப்பார். காந்தி மூலையில நிப்பாரு. ‘அப்பா அடிப்பார்’ என காந்தி நினைக்கிறார். ஆனா காந்தியின் அப்பா அழுதுட்டே அந்த லெட்டரைப் படிப்பார். அதைப் பார்த்து காந்தியும் அழுகிறார். காந்தியை அவர் அப்பா எதுவும் கேட்காமல், அழுதுட்டே, ‘நீ போ’ என்கிறார். ‘அஹிம்சை தான் சிறந்த ஆயுதம் என நான் கண்டுபிடிச்ச இடம் இதுதான்’ என்கிறார் காந்தி.
தந்தையின் கண்ணீர் என்பது சாதாரண விஷயமில்லை. கண்ணீர் அமிர்தம் போன்றது. ஒரு ஏழைக்காகக் கண்ணீர் விட்டால் நீங்க கடவுள் ஆகிடுறீங்க. கஷ்டப்படும் மனிதனுக்காகக் குரல் கொடுத்தால் பாதி கடவுள். சத்தமிடப் பயந்து, மனதால் அங்கே நல்லது நடக்கணும் என நினைத்தால் கால் கடவுள். இறங்கித் தடுத்துட்டா முழுக் கடவுள். தந்தையின் மனம் என்பது கடவுளின் மனது. கடவுள் மாதிரி ஆகணும்ன்னா நீங்க தந்தை ஆகணும். புது இயக்குநர் தன்ராஜ் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.

அறிமுக இயக்குநர் தனராஜ் பேசுகையில், கனி அண்ணாக்கு ரொம்ப நன்றி. எதற்கு நன்றி என்றால், என் முதற்படத்துக்கு தோள் மீது கை போட்டு உதவியதற்கு. அந்தக் கை இதுவரை எனக்குத் துணையாக இருக்கு. அப்பாவாக 21 படங்கள் சமுத்திரக்கனி நடித்திருக்கிறாராம். படத்தின் தேதி 21 ஆகக் கிடைச்சிருக்கு. இந்தப் படம் பார்த்தால், ‘ஒரு புது இயக்குநர் நல்லா படம் பண்ணான்’னு பெயர் வரும். நான் மகிழ்ச்சியா இருக்கேன். தசரதன் சொன்னதுக்காக ராமன் வனத்துக்குப் போனார். அது ராமாயணம். ராமுடு சொல்றதுக்காக அப்பா எங்க போனார் என்பதுதான் ‘ராமம் ராகவம்’. எனக்கு அப்பா இல்லை. இப்போ சமுத்திரக்கனி அப்பா இருக்காங்க. எனக்கு இந்தப் படம் குடும்பத்தைக் கொடுத்துச்சு. எனக்கு அம்மாவும் இல்லை. இப்போ இருக்காங்க. எந்த வீட்டிலும் ராகவன் போல் ஒரு மகன் இருக்கக் கூடாது. அதுதான் இந்தப் படம் என்றார்.

நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி பேசுகையில், தன்ராஜ் போகிற போக்கில் ஒன்றரை நிமிஷத்துல கதை சொன்னான். கேரவன்ல இருந்து இறங்கி ஷாட்க்குப் போற கேப்பில், கதையைச் சொன்னான். ‘நிமிர்ந்து நில்’ தெலுங்கு ஷூட்டிங்கில் எல்லா வேலையும் செய்வான். அப்போ அவன் மீது தனிக் கவனம் வந்தது. ‘ஒரு கதை கேட்டேன். நீ நடிச்சா நல்லாயிருக்கும்’ என விமானம் கதையைக் கேட்க வச்சது அவன்தான். விமானம் இயக்குநரின் கதை தான் ராமம் ராகவம். இவன் கேட்டு வாங்கியிருக்கான். கதையைக் கேட்டதும், ‘அப்பா கேரக்டரா சரி பண்ணிடுவோம் போடா’ என்றேன். ‘அண்ண !’ என்றான். ‘நீ சொல்ல வர்றது முக்கியமான விஷயம். சமூகத்துக்குத் தேவையான விஷயம். தமிழ்நாட்டுல கூட இப்படி 15 கேஸ் நடந்திருக்கு. வெளில இருந்து பார்த்தா அப்பா-மகன் கதையா தெரியும். ஆனா உள்ளுக்குள்ள வச்சிருக்கிறது ரொம்ப ஸ்ட்ராங்கான விஷயம். இந்தப் படம் பார்த்து, ஒரே ஒரு பையன் திருந்திட்டா போதும், இந்தப் படம் மாபெரும் வெற்றி. நல்ல படைப்பை ரசிகர்கள் என்றுமே கைவிட்டதில்லை. பணத்தை விட, எத்தனை பேரை மனசு கொள்ளை அடிக்குதுங்கிறதுதான் ஒரு படைப்புக்கு முக்கியம். ராமம் ராகவம் அப்படிப்பட்ட படம்” என்றார்.
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ ஐயப்பா மூவிஸ் நிறுவனங்கள் சார்பில் பொள்ளாச்சி எஸ்.மகாலிங்கம், டி.கண்ணன் மற்றும் ஆயிஷா அக்மல் இணைந்து தயாரிக்கும் படம் ‘மிக்ஸிங் காதல்’. இயக்குநர் என்.பி.இஸ்மாயில் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ஷிண்டே நாயகனாக நடித்திருக்கிறார். சம்யுக்தா வின்யா […]
சினிமாபிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ ஐயப்பா மூவிஸ் நிறுவனங்கள் சார்பில் பொள்ளாச்சி எஸ்.மகாலிங்கம், டி.கண்ணன் மற்றும் ஆயிஷா அக்மல் இணைந்து தயாரிக்கும் படம் ‘மிக்ஸிங் காதல்’. இயக்குநர் என்.பி.இஸ்மாயில் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ஷிண்டே நாயகனாக நடித்திருக்கிறார். சம்யுக்தா வின்யா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஸ்ரேயா பாவ்னா, பிரியங்கா, திவ்யா, அம்பானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘மிக்ஸிங் காதல்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஜாக்குவார் தங்கம், இசையமைப்பாளர் தினா, தயாரிப்பாளர்கள் சங்க இணைச் செயலாளர் செளந்தர பாண்டியன், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் மற்றும் பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி, இயக்குநர் ரஷீத், மூத்த பத்திரிகையாளர் உமாதி உள்ளிட்ட ஏராளமானவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

மிக்ஸிங் காதல் படத்தின் இசைத்தட்டை வெளியிட்ட பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வம்ணி பேசுகையில், இயக்குநர் இஸ்மாயில் எனக்கு நெருங்கிய நண்பர், அவர் என்னை அழைத்த போது, நீண்ட நாட்களுக்குப் பிறகு படம் பண்ணியிருக்கே, நிச்சயம் நான் வருவதாக சொன்னேன். இன்று காதலர் தினம், அதனால் என் மனைவியை டின்னர்க்கு அழைத்துச் செல்வதாக கூறினேன், அவரும் இதற்காக ஊரில் இருந்து வந்திருக்கிறார். அதனால், காலதாமதம் பண்ணி மிக்ஸிங் காதல் மூலம் என் காதலை கெடுத்துவிடாதே, என்று சொன்னேன். அவரும் உங்களை உடனடியாக அனுப்பி வைத்துவிடுகிறேன், என்றார். ஆனால், இங்கு வந்தால் 7.30 மணி நிகழ்ச்சி தொடங்கவில்லை, இதுபோன்ற சூழ்நிலை சில நேரங்களில் ஏற்படத்தான் செய்யும், நாம் அதை பொறுத்துக் கொள்ள வேண்டும். நானும் இஸ்மாயிலுக்காக பொறுத்துக் கொண்டேன். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை பார்த்தேன், மிக சிறப்பாக இருந்தது. ஒளிப்பதிவு, இசை, பாடல் வரிகள் அனைத்துமே ஈர்க்க கூடியதாக இருந்தது. இஸ்மாயில் இந்த படத்தை மிக சிரமப்பட்டு எடுத்திருக்கிறார்.

தற்போதைய காலக்கட்டத்தில் திரையுலகம் கொரோனா காலக்கட்டம் போல் தான் சென்று கொண்டிருக்கிறது. இன்று சினிமாவின் தேவை சமூகத்திற்கு அதிகமாக தேவைப்படுகிறது. அனைவரும் அனைத்து படங்களையும் பார்க்கிறார்கள், ஆனால் அவர்கள், படங்களை எதில் பார்க்கிறார்கள் என்பது தான் தயாரிப்பாளர்களுக்கு தெரியவில்லை. ஒரு திரைப்படத்தின் மூலம் பல வழிகளில் வருமானம் வருகிறது, ஆனால் அவை தயாரிப்பாளருக்கு கிடைக்காத ஒரு நிலை தான் இங்கிருக்கிறது. ஆண்டுக்கு சுமார் 250-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறது. அதன் மூலம் திரைப்படத்துறையில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி வியாபாரம் நடைபெறுகிறது. அதன் மூலம் ஜி.எஸ்.டியாக ரூ.540 கோடியும், லோக்கல்பாடி வரியாக ரூ.100 கோடி மற்றும் வருமான வரி என சினிமாத்துறை மூலம் அரசுக்கு சுமார் ரூ.1000 கோடி கிடைக்கிறது. ஆனால், சினிமாத்துறைக்கான ஒரு முறையான கட்டமைப்பு இல்லை. இன்று ஒரு திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது என்றால், அது என்ன ஷோவில் ஓடுகிறது, என்று சரியாக தெரிவதில்லை. மல்டிபிளக்ஸில் ஓடிகொண்டிருக்கும் படத்தை குறிப்பிட்ட ஸ்கிரீனில் போட்டிருக்கிறார்கள், சென்று பார்க்கலாம் ஒரு நாள் 11 மணி காட்சியில் ஓடிக்கொண்டிருக்கிறது, மறுநாள் 3 மணி காட்சியாக மாற்றபப்டுகிறது. எப்படி வேண்டுமானாலும், எந்த நேரத்தி வேண்டுமானாலும் திரையிடலாம் என்ற ஒரு சூழல் தான் நிலவுகிறது. அதுவும் இதுபோன்ற சிறிய படங்களுக்கு தான் அது நிகழ்கிறது. என் காலத்தில் திரைப்படம் எடுப்பது சிரமமான விசயமாக இருந்தது, ஆனால் படத்தை எடுத்து முடிவிட்டால் அது நிச்சயம் வெளியாகி விடும். தற்போதைய காலகட்டத்தில் ஒரு படத்தை எடுப்பது சுலபம் ஆனால் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் மிகவும் சிரமமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் படம் தயாரிப்பவர்கள் இரண்டு விசயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆங்கிலப் படம் போல் எடுக்கிறேன், என்று சொல்லிக் கொண்டு, நம் கலாச்சாரத்தை தாண்டிய படங்களை எடுக்க கூடாது. காரணம், ஆங்கில படங்கள் நமக்கு இப்போது சாதாரணமாக ஆகிவிட்டது. ஓடிடி போன்றவற்றின் மூலம் எந்த ஒரு நாட்டின் படத்தையும் நாம் பார்த்து விடுகிறோம். அதனால், ஆங்கிலப் படம் போல் எடுக்கிறேன், என்று முயற்சிக்காமல் நம் கலாச்சாரம், நம் வாழ்வியலை எதார்த்தமாக எடுத்தாலே அதை மக்கள் கொண்டாடுவார்கள், நம் மக்கள் மட்டும் இன்றி உலக மக்களும் அதுபோன்ற படங்களை தான் பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள். இன்று ஒரு தமிழ் படத்தை அர்ஜெண்டினா நாட்டில் பார்க்கிறார்கள், அதே போல் அர்ஜெண்டினா படத்தை நாமும் பார்க்க முடிகிறது. எனவே, நம் கதைகளை குறைந்த முதலீட்டில் சொல்லக்கூடிய படங்களை எடுக்க வேண்டும், அதேபோல் அந்த படங்களை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்ற யுக்தியை சரியாக கையாள வேண்டும், இந்த இரண்டு விசயங்களை மனதில் வைத்து படம் தயாரித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

மிக்ஸிங் காதல் படத்தை பார்க்கும் போதே அதில் ரசிகர்களுக்கான அனைத்து விசயங்களும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இஸ்மாயில் எடுத்திருக்கிறார், என்பது தெரிகிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த சிறிய படத்தின் நிகழ்ச்சிக்கு இவ்வளவு மீடியாக்கள் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கேமரா வைப்பதற்கே இடம் இல்லாத அளவுக்கு நிறைய கேமராக்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறது என்றால் இஸ்மாயில் ஏதோ ஒரு வகையில் ஊடகத்தினருடன் நட்பாக இருக்கிறார், என்று தெரிகிறது. எனவே, இந்த படத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்து ஒத்துழைக்க வேண்டும், என்று மீடியாக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என அனைவருக்கும் வாழ்த்துகள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.
கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்து மொண்டோடி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், ஆடுகளம் நரேன், மைம் கோபி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம்”கண்டேன்”. கதைப்படி.. ஆந்திராவில் உள்ள மீணவ கிராமத்தில், ராஜூ ( நாக சைதன்யா ), […]
விமர்சனம்கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்து மொண்டோடி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், ஆடுகளம் நரேன், மைம் கோபி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம்”கண்டேன்”.
கதைப்படி.. ஆந்திராவில் உள்ள மீணவ கிராமத்தில், ராஜூ ( நாக சைதன்யா ), சத்யாவும் ( சாய் பல்லவி ) இருவரும் சிறு வயது முதலே ஒன்றாக பழகி காதலித்து வருகின்றனர். இந்த ஊர் மீனவர்கள் குஜராத் மாநிலத்தின் அரபிக்கடல் பகுதியில் மீன் பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடலுக்குச் சென்றால் ஒன்பது மாதங்களுக்குப் பிறகுதான் ஊருக்கு திரும்புவார்கள். இந்த தொழிலில் ஆபத்துகளும் நிறைந்து இருப்பதால், ஊர் திரும்பிய ராஜூவை மீண்டும் கடலுக்கு செல்ல வேண்டாம் என சத்யா வற்புறுத்தி சத்யம் வாங்குகிறார். பின்னர் சத்தியத்தை மீறி கடலுக்குச் சென்றால் காதல் அவ்வளவுதான் என்கிறார் சத்யா.

இதற்கிடையில் கோவில் திருவிழாவில், ஊருக்காகவும், தன்னோடு இருப்பவர்களுக்காகவும் முன்னாள் நிற்கும் ராஜூ தான் “தண்டேல்” ( அந்த ஊர் வழக்கப்படி தலைவர் ) அறிவிக்கப்படுகிறார். அதன்பிறகு அந்த நாள் வந்ததும் வழக்கமாக ஊர் மக்களுக்காக நண்பர்களுடன் கடலுக்கு செல்கிறார் ராஜூ. கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில், கடுமையான புயல் காரணமாக பாகிஸ்தான் எல்லைக்குள் நிலை தடுமாறி செல்கிறது இவர்களின் படகு. அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படை இவர்களை கைதுசெய்து சிறையில் அடைக்கின்றனர்.
இதற்கிடையில் தனது பேச்சைக் கேட்காத ராஜூ மீதான கோபத்தில் இருந்த சத்யா, கருணாகரனை திருமணம் செய்ய சம்மதிக்கிறார். திருமண ஏற்பாடுகளும் நடைபெறுகிறது.
பின்னர் ராஜூ உள்ளிட்ட மீனவர்கள் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்களா ? ராஜூ, சத்யா மீண்டும் சந்தித்தார்களா ? இல்லையா என்பது மீதிக்கதை..

நாக சைதன்யா தனது நடை, உடை, தோற்றம், உடல் மொழி என ஒரிஜினல் மீனவராக வாழ்ந்திருக்கிறார். அதேபோல் சாய் பல்லவியும் சந்தோஷம், சோகம், துக்கம், நடனம் என அனைத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார்.
ஆடுகளம் நரேன் இதுவரை நடித்திராத கதாப்பாத்திரத்தில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கருணாகரன் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்துள்ள இயக்குநர், மீனவ குடும்பங்களின் கண்ணீர் நிறைந்த வாழ்க்கையை கண்முன்னே நிறுத்தி கண் கலங்க வைத்துள்ளார். வேதனை மிகுந்த மீனவ சமூகத்தின் வாழ்க்கையை, அற்புதமான படைப்பாக கொடுத்த இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ் ஸ்டோரி”. வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் […]
சினிமாசிட்டி லைட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ் ஸ்டோரி”. வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வினில்.. இயக்குநர் திரு பேசுகையில், தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கும், இயக்குநர் சுசீந்திரனுக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்கள் இருவருமே எனது குடும்பம் போல் தான். அவர்களைப் போலவே நானும் இப்படத்தின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறேன். தனஞ்செயன் இருக்கும் அபார்ட்மெண்டில் தான் நானும் வசிக்கிறேன், தினமும் வாக்கிங் செல்லும் போது அவர் யாரிடமாவது ஃபோனில் பேசிக் கொண்டே இருப்பார், அப்படித்தான் போன் செய்து, 2K கிட்ஸ் படம் பற்றி என்னிடம் சொன்னார், முழு கதையும் அவர் அவ்வளவு ரசித்துச் சொன்னார். அதன் பிறகு சுசீந்திரன் போன் செய்தபோது, தேவாவே சொல்லிவிட்டார் உங்கள் படத்தைப் பற்றி என்று சொன்னேன். அந்த அளவு இந்தத் திரைப்படம் அவரை பாதித்திருக்கிறது. ஒரு படத்தை அவர் பாராட்டுவது அத்தனை எளிதான விஷயமில்ல, அவரே சொன்ன பிறகு நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.
இயக்குநர் செல்லா அய்யாவு பேசுகையில், இயக்குநர் சுசீந்திரன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான களத்தில் கதை சொல்லுவார். இந்தப் படத்தில் 2K கிட்ஸ் பசங்களின் கதையைச் சொல்லி இருக்கிறார். இந்த கால இளைஞர்களின் வாழ்க்கையை, அவர்கள் ரிலேஷன்ஷிப்பை, அவர்கள் வாழ்க்கையை அணுகும் விதத்தை, அவர்கள் எப்படி சரியாக இருக்கிறார்கள் என்பதை, மிக அழகான கதையாகக் கோர்த்து, இந்த படத்தில் சொல்லி இருக்கிறார். முந்தைய ஜெனரேஷன் இந்த தலைமுறையைப் பார்த்து தவறாக நினைப்பார்கள், ஆனால் அதெல்லாம் இல்லை என்று, மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். கிளைமாக்ஸ் மிக அற்புதமாக இருந்தது. ஒளிப்பதிவு, இசை, இரண்டும் அட்டகாசமாக இருந்தது. படம் மிக சூப்பராக வந்திருக்கிறது, படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி பேசியதாவது, இரண்டு நாட்களுக்கு முன் சுசீந்திரன் எனக்கு போன் செய்து, இந்த விழாவிற்கு வர முடியுமா ? என்று கேட்டார் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஸ்கூல் படிக்கும் காலத்தில் அவருடைய படங்கள் பார்த்து நிறைய விவாதித்து இருக்கிறோம், அவர் நடிகர்களைக் கையாளும் விதம், எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் படத்தில் நடிகர்கள் நடிப்பது மாதிரியே தெரியாது, அவ்வளவு அருமையாக அவர்களைக் கையாளுவார். பல விஷயங்களில் அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்தைக் காலை சில நண்பர்களோடு பார்த்தேன், எப்போதும் அடுத்த தலைமுறை பற்றி நமக்குப் பெரிய அளவில் தெரியாது, ஆனால் இவர் 2K கிட்ஸ் வாழ்க்கையை மிக அற்புதமாகக் கையாண்டிருந்தார். படம் சூப்பராக வந்துள்ளது, படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.
இயக்குநர் ஹரிஹரன் பேசியதாவது, என்னுடைய ஜோ படம் வந்தபோது, இரண்டு நாள் கழித்து ஒரு ஷோ போட்டு இருந்தோம், அப்போது படத்தின் இயக்குநர் யார் என்று விசாரித்து, என்னைத் தேடி வந்து கட்டியணைத்துப் பாராட்டினார். அப்போது இருந்தே சுசீந்திரன் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. அவரது படங்களுக்கு நான் ரசிகன். இந்த படத்தின் ஆரம்பத்திலிருந்து நான் இந்த படத்தை ஃபாலோ செய்து வருகிறேன். என் படத்தில் நடித்த கவின் இந்த படத்திலும் நடித்துள்ளார். அவர் படம் பற்றிச் சிலாகித்துச் சொல்வார். படத்தை நான் பார்த்தேன் ஒரு விஷயத்தை எடுத்தால், அதை மிகச் சரியாக முடிப்பதில் சுசீந்திரன் வல்லவர். ஆதலால் காதல் செய் போன்ற அட்டகாசமான படங்களைத் தந்தவர், இந்த படத்திலும் மிக அழுத்தமான ஒரு கதையைச் சொல்லி இருக்கிறார். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது, நண்பர் சுசீந்திரன் இந்த படத்தின் டைட்டில் டிசைன் செய்த போது, எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அப்போதே எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. இந்த தலைமுறைக்கு மிகவும் பிடித்த டைட்டில், மிகவும் பிடித்த கதை, இது அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். குடும்பத்தோடு ரசிக்கும் வகையில் ஒரு நல்ல படமாக இருக்கும். நான் இந்த திரைப்படத்தைப் பார்த்து விட்டேன், இந்த படத்தின் கிளைமாக்ஸ் மிக அற்புதமாக இருந்தது. அந்த சோஷியல் மெசேஜ், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். விழாவின் நாயகன் இமான், இந்த படத்தில் இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இமானும் பிரபு சாலமனும் சேரும்போது, பாடல்கள் எல்லாமே மிகப்பெரிய ஹிட் அடிக்கும், அதே போல தான் சுசீந்திரன், இமான் கூட்டணி சேரும்போது, பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடிக்கும். இருவரின் காம்போ இன்னும் மிகப்பெரிய வெற்றிகளைத் தர வேண்டும். நடிகர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர், குட்டு பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் எனச் சொல்வார்கள், சுசீந்திரன் அறிமுகப்படுத்திய விஷ்ணு விஷால், சூரி என இருவரும் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தில் இருக்கிறார்கள். சுசீந்திரனால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள், அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், இன்று பெரிய இடத்தில் இருக்கிறார்கள், சுசீந்திரனுக்கு என் வாழ்த்துக்கள். அதேபோல் இந்த படத்தை நம்பி வாங்கிய தனஞ்செயனுக்கு எனது நன்றிகள். இப்படத்தை நம்பி, புதிய அறிமுகங்களை நம்பி, தயாரித்த தயாரிப்பாளருக்கு என்னுடைய நன்றிகள். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.
இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் பேசியதாவது, ஆபீஸ் போடாமல் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் இது. ஆனால் ஆறு மாதத்தில் இதை இத்தனை அற்புதமாக எடுத்து முடிக்க சுசியால் மட்டும் தான் முடியும். எல்லோருமே புது முகங்கள், ஆனால் அவர்களை வைத்துக் கொண்டு, மிகச் சரியாக திட்டமிட்டு, மிகக்குறுகிய காலத்தில், படத்தை முடித்து இருக்கிறார். நாயகன் ஜெகவீர், முதல் படம் காதலர் தினத்தன்று படம் ரிலீஸ் ஆகிறது, அவருக்கு எனது வாழ்த்துக்கள். படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இமானின் இசை மிக அற்புதமாக வந்திருக்கிறது. என்னுடைய நடிப்பிற்கும் அவர் வாசித்திருக்கிறார் என்பது எனக்குப் பெருமையாக உள்ளது. இத்தனை புதுமைகளை நம்பி, சுசீந்திரனின் திறமையை நம்பி, தயாரிப்பாளர் உள்ளே வந்திருக்கிறார். நமக்கொரு நல்ல தயாரிப்பாளர் கிடைத்திருக்கிறார் அவருக்கு நன்றி. படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் என்றார்.
இயக்குநர் முருகானந்தம் பேசியதாவது, இந்த படத்தில் நானும் நடித்துள்ளேன், அதனால் படத்தைப் பற்றி அதிகம் சொல்ல முடியாது. படத்தை நான் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் என்பது ஏதாவது ஒரு உணர்வை அழுத்தமாகச் சொல்ல வேண்டும், இந்தக் கால தலைமுறைக்கு ஒரு சிறு குழப்பம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது, அந்த குழப்பத்திற்கு விடை தரும் படமாக இந்த திரைப்படம் இருக்கும். இசையமைப்பாளர் இமான் இசை மிக அற்புதமாக வந்திருக்கிறது. புதுமுக நடிகர் ஜெகவீர் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். புகழ் பெற்ற இயக்குநர்கள் இப்படத்தை ஆதரிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் செல்வ சேகரன் பேசியதாவது, இயக்குநர் சுசீந்திரனிடம், ஏன் திரும்ப புது முகங்களை வைத்து இயக்குகிறாய் ? என்று கேட்டேன். இது மீண்டும் ஒரு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் போல் இருக்கும், நமக்கு புது மாற்றத்தைத் தரும் என்று சொன்னார். நல்லபடியாக செய் என்று வாழ்த்தினேன், படம் நன்றாக வந்துள்ளதாக, அனைவரும் பாராட்டுவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் மிகப்பெரிய வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.ஞ
இயக்குநர் பிரபு சாலமன் பேசியதாவது, என்னுடைய நண்பர் ஜெகவீர் அவருடன் வேறு ஒரு ப்ராஜெக்ட் செய்வதற்காக ஒரு வருடம் டிராவல் செய்து உள்ளேன், அவரின் உழைப்பு, ஆர்வம் பற்றி எனக்குத் தெரியும். இந்தத் திரைப்படம் அவருக்கு ஒரு மிகச் சிறந்த அறிமுகத்தைத் தரும். படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இன்றைய விழாவின் நாயகன் இமான் ஒரு நல்ல இசை இல்லாமல் ஒரு நல்ல கதையை உங்களால் சொல்லவே முடியாது. எவ்வளவுக்கு எவ்வளவு நம் வாழ்க்கையை, மண் சார்ந்து நம் படங்கள் பிரதிபலிக்கிறதோ அந்தளவு நம் படங்கள், உலகத் திரைப்படங்களாக உலகிற்குத் தெரியும். இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, இன்றைய சினிமா உலகில் முதலில் பாசிடிவாக ஒரு படத்தை எடுக்க வேண்டும் என நினைத்த இயக்குநர் தான். நம் மண்ணின் கதையைச் சொல்ல வேண்டும் என நினைத்து, அதை மிக அழகாக இந்த திரைப்படத்தில் சொல்லி இருக்கிறார். அந்த துணிச்சலுக்கு சுசீந்திரனுக்கு வாழ்த்துக்கள். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல போன்ற படங்களைப் போல எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம், அந்த இடத்தை இந்தத் திரைப்படம் நிறைவு செய்யும். எந்த இடத்திலும் தொய்வில்லாமல் மிக அருமையாகத் திரைக்கதையை எடுத்துச் சென்றுள்ளீர்கள், நடித்த நடிகர்கள் அனைவரும், மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். யாருமே தனியாகத் தெரியவில்லை, அந்தந்த பாத்திரங்களாகத்தான் எனக்குத் தெரிந்தார்கள். இன்றைய தலைமுறையைப் பற்றி மிக அழுத்தமான ஒரு விஷயத்தை, மிகத் தைரியமாகப் பேசியிருக்கிறார். காதல் தாண்டி, நாயகனும் நாயகியும் நண்பர்களாக இருக்க முடியுமா ? என்ற ஒரு விஷயத்தை இந்த திரைப்படம் பேசுகிறது. இதை முன்பே எனது இயக்குநர் அகத்தியன் தன்னுடைய காதல் கோட்டை திரைப்படத்தில் பேசி இருந்தார். கதாநாயகியும் கதாநாயகனும் சந்திக்காமல் ஒரு காதல் கதை எடுத்தார். அது இந்தியாவையே புரட்டிப் போட்டது. அதே போல் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றார்.
தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது, சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், இது எங்கள் முதல்ப்படம். சுசீந்திரன் மீதான நம்பிக்கையில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் இது. சொன்னது போல 40 நாளில் இப்படத்தையே முடித்து விட்டார். ஜெகவீர் என் நண்பர் அவர் மூலம் தான் சுசி அறிமுகம். 2 கே ஜெனரேஷனை நெகடிவாக காட்டுகிறார்கள் ஆனால் சுசி மிக அருமையாக இதைக் கையாண்டுள்ளார். தனஞ்செயன் எங்கள் படத்தைப் பார்த்து விட்டு, நானே ரிலீஸ் செய்கிறேன் என எடுத்துக்கொண்டார். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை வழங்கிய சுசிக்கு நன்றி. இது எல்லோருடைய உழைப்பு. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என்றார்.

இசையமைப்பாளர் இமான் பேசியதாவது, இந்த திரைப்படத்தை இன்று காலை பார்த்த அத்தனை முக்கியமான இயக்குநர்களுக்கும், அவர்களுடைய நேரத்தை செலவிட்டு, இப்படம் பார்த்துப் பாராட்டிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இத்தனை குறுகிய காலத்தில், ஒரு திரைப்படத்தைத் திட்டமிட்டு, அத்தனை வேலைகளையும் கச்சிதமாக முடிக்கக் கூடிய, ஒரே இயக்குநர் சுசீந்திரன் மட்டுமே, அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உடலாலும், மனதாலும், பலத்தாலும் மிக நன்றாக இருக்க வேண்டும் என ஆசைப்படும் பல நண்பர்கள் உள்ளனர், அதில் நானும் ஒருவன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த திரைப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, திட்டமிடலில் சுசீந்திரனை மிஞ்ச முடியாது, இந்த விழாவையே சரியாக ஒரு மணிக்குத் திட்டமிட்டு இருந்தார், திடீரென போன் செய்து, 12:30 மணிக்கு ஆரம்பித்து விடலாம் என்றார். எல்லோரையும் வரவைத்து ஸ்கிரீனில் பாடல் ஓடிக்கொண்டிருக்கும் போது, இங்கு மேடையை ஒருங்கிணைத்தார், அவரின் இந்த திட்டமிடல் தான், அவரிடம் இருக்கும் சிறப்பு. ஒரு படத்தை எப்படி மிகக் குறுகிய காலத்தில் முடிக்க முடியும் என்பதை, அவரிடம் கற்றுக் கொள்ளலாம். ஒரு படத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, படத்தின் செலவினங்களை இழுத்து விட்டு, இறுதியில் படத்திலும் ஒன்றும் இல்லாமல், செலவையும் அதிகமாக்கிவிடும் இயக்குநர்கள் இந்த காலத்தில் இருக்கிறார்கள். ஆனால் அதை உடைத்துத் திட்டமிடலில் சாதித்து காட்டுகிறார் சுசீந்திரன். ஒரு பக்கம் இந்த விழா நடந்து கொண்டிருக்கும்போது, இன்னொரு பக்கம் கல்லூரியில் படத்தை விளம்பரம் செய்கிறேன் என்று சொன்னார். அவரின் இந்த ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்தது, ஒரு இயக்குநர் இறங்கி வேலை செய்யும்போது ,எப்போதும் மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும், நான் அவர் எது சொன்னாலும் ஓகே சொல்லிவிடுவேன். தயாரிப்பாளர் விக்னேஷுக்கு என்னுடைய வாழ்த்துக்கள், சுசீந்திரனிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருப்பீர்கள். ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பது மிக எளிது, ஆனால் அதை வியாபாரம் செய்வது என்பது மிகவும் கடினம், அதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த திரைப்படம் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது, வெண்ணிலா கபடி குழு படத்திற்குப் பிறகு முதல் படம் போன்ற உணர்வை இந்தப்படம் தந்துள்ளது, இந்தப்படத்தை என் நெருங்கிய நண்பர்கள் இயக்குநர்களுக்குப் போட்டுக் காட்டினேன். படம் பார்த்து விட்டு வாழ்த்தியதற்கு நன்றி. இப்படத்திற்கு உறுதுணையாக இருந்த ஒளிப்பதிவாளர் ஆனந்த் கிருஷ்ணனுக்கு நன்றி. என்னுடன் நின்ற இசையமைப்பாளர் இமானுக்கு நன்றி. புதுமுகமாக அறிமுகமாகும் ஜெகவீருக்கு வாழ்த்துக்கள், துஷ்யந்த் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்துள்ளார் வாழ்த்துக்கள், மீனாக்ஷிக்கு வாழ்த்துக்கள், அனைத்து நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். இந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருக்கும் விக்னேஷுக்கு நன்றி, இப்படம் கண்டிப்பாக அனைவரையும் மகிழ்விக்கும், அனைவருக்கும் என்றார்.
யாசோ எண்டர்டெயின்மெண்ட் ( YASHO ENTERTAINMENT ) சார்பில், Dr. சத்யா M தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், மதுரை மற்றும் சென்னைப் பின்னணியில், ஒரு மாறுபட்ட கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “கருப்பு […]
சினிமாயாசோ எண்டர்டெயின்மெண்ட் ( YASHO ENTERTAINMENT ) சார்பில், Dr. சத்யா M தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், மதுரை மற்றும் சென்னைப் பின்னணியில், ஒரு மாறுபட்ட கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “கருப்பு பல்சர்”. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுமையாக முடிந்த நிலையில், தற்போது வெளியீட்டுக்கான பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. பிரபல இயக்குநர் எம் ராஜேஷிடம் உதவி இயக்குநராகவும், அவரது படங்களில் திரைக்கதையிலும் பணியாற்றிய முரளி கிரிஷ் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

மதுரை பின்னணியில் கருப்பு காளையுடன் வாழும் ஒரு இளைஞன், சென்னையில் பல்சருடன் வாழும் இளைஞன் என, இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், அதை எப்படி கடந்து வருகிறார்கள் என்பது தான் கதை. அசத்தலான காமெடியுடன், பரபர திருப்பங்களுடன், அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. லப்பர் பந்து படத்தின் வெற்றிக்குப்பிறகு மதுரை கிராமத்து இளைஞனாகவும், சென்னை மாடர்ன் இளைஞனாகவும் இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் நடித்துள்ளார் கெத்து தினேஷ்.

படம் குறித்து இயக்குநர் முரளி கிரிஷ் கூறியதாவது… இதுவரையில் தமிழில் மிகச்சிறந்த இரட்டை வேடப் படங்கள் பல வந்திருக்கிறது. இந்தப்படம் அந்தப்படங்கள் போல இருக்காது. இப்படம் மக்கள் மனம் விட்டுச் சிரித்து மகிழும் வகையில் முழுக்க முழுக்க நகைச்சுவையுடன், ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக இருக்கும், பொல்லவாதவன் பட கருப்பு பல்சர், ஜல்லிக்கட்டு போராட்டம் இந்த இரண்டும் தான் இப்படத்தின் கரு உருவாகக் காரணமாக இருந்தது. மதுரையின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை படத்தில் லைவ்வாக காட்டியுள்ளோம். இப்படத்தின் கதை கேட்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் தினேஷ். இந்தப்படத்தில் அவரின் உழைப்பு அபாரமானது. இரண்டு நாட்கள் ஜல்லிக்கட்டில் உண்மையாகவே மாடுகளைப் பிடித்தார். அப்போது அவருக்கு அடிபட்டது அதையும் பொருட்படுத்தாமல் நடித்துத் தந்தார். சென்னை இளைஞனாகவும் கலக்கியிருக்கிறார். சென்னை, மதுரையில் 28 நாட்களில் படத்தை முடித்துவிட்டோம். லப்பர் பந்துக்குப் பிறகு ரசிகர்களுக்கு விருந்தாக இந்தப்படம் இருக்கும் என்றார்.

இப்படத்தில் தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ரேஷ்மா வெங்கட், மதுனிகா நடித்துள்ளனர். இவர்களுடன், மன்சூர் அலிகான், கலையரசன், சரவண சுப்பையா, பிரின்ஸ் அஜய், பிராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இன்பராஜ் ராஜேந்திரன் பாடல் எழுதி இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், தற்போது வெளியீட்டிற்கான பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டிரெய்லர், மற்றும் இசை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், உருவாகியுள்ள படம் “பேபி & பேபி”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, […]
சினிமாயுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், உருவாகியுள்ள படம் “பேபி & பேபி”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் தயாரிப்பாளர் யுவராஜ் பேசியதாவது, எனக்கு தொழில் சினிமா இல்லை, ஆனால் சினிமா மீது சிறுவயதிலிருந்தே எனக்கு ஆர்வம். இயக்குநர் பிரதாப் சொன்ன கதை, எனக்கு மிகவும் பிடித்திருந்தது, உடனே தயாரிக்கலாம் என இறங்கினோம். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். ஒரு நல்ல படத்தை தமிழ்த் திரைத்துறைக்கு கொடுத்துள்ளோம் எனத் திருப்தியாக உள்ளது. இமான் அற்புதமாக இசையமைத்துள்ளார். அவருக்கு இப்படத்தில் இசை வள்ளல் எனப் பட்டம் தந்துள்ளோம். ஜெய், சத்யராஜ், யோகிபாபு என எல்லோரும் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். வெளியிலிருந்து பார்க்க சினிமா ஈஸியாக தெரிகிறது. திரைத் துறைக்குள் வந்த பின் தான், இங்குள்ள கஷ்டம் தெரிகிறது. பிரதாப் சொன்ன கதையால் தான் இந்தப்படம் நடந்தது. அவருக்கு நன்றி. பிப்ரவரி 14 ஆம் தேதி இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். புதிதாக திரைக்கு வந்துள்ளோம் என்றார்.

நடிகை பாப்ரி கோஷ் பேசியதாவது, நான் தொலைக்காட்சியில் நடித்து வந்தேன். இந்தப்படத்தில் சத்யராஜூக்கு மகளாக நடித்துள்ளேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். யோகிபாபுடன் விஸ்வாசம் படத்திலேயே நடித்துள்ளேன். இப்படம் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. கீர்த்தனாவுடன் ஷூட்டிங்க் ஸ்பாட் ஜாலியாக இருந்தது. ஜெய், பிரக்யா நிறைய ஆதரவு தந்தார்கள். படம் மிக நன்றாக வந்துள்ளது.

நடிகர் பழைய ஜோக் தங்கதுரை பேசியதாவது, கண்ணுக்கு மையழகு இந்தப்படத்துக்கு ஜெய் அழகு, எங்கேயும் எப்போதும் படத்தில் அவருடன் நடித்தேன், இப்போது தான் மீண்டும் நடித்துள்ளேன் நன்றி. தெலுங்குல மகேஷ்பாபு மாதிரி, தமிழுக்கு யோகிபாபு, அவர் மாஸாக நடிப்பார் இவர் கிளாஸாக காமெடியில் அசத்துவார். சத்யராஜ் எல்லா கேரக்டரிலும் அசத்திவிடுகிறார். நிறைய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மொட்டை ராஜேந்திரனுடன் எனக்கு காம்பினேசன் காட்சிகள், ஜாலியாக வந்துள்ளது. எல்லா தொழில் நுட்ப கலைஞர்களும், கடினமாக உழைத்துள்ளனர். எல்லோரும் பேபியோட ஹேப்பியா பார்க்க கூடிய படம். அனைவரும் வந்து படம் பாருங்கள் என்றார்.
நடிகை கீர்த்தனா பேசியதாவது,
பேபி & பேபி எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு, தயாரிப்பாளருக்கு நன்றி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்துள்ளேன், முதலில் ஜெய் அம்மா என்றவுடன் தயங்கினேன், சத்யராஜூக்கு ஜோடி என்றவுடன் ஒகே சொல்லிவிட்டேன். எனக்கு நல்ல கேரக்டர், பேபியை வைத்து அழகாக கதை சொல்லியுள்ளார்கள். பிரதாப்புக்கு நன்றி என்றார்.

இசையமைப்பாளர் இமான் பேசியதாவது, இசை வள்ளல் டைட்டில் கொஞ்சம் ஓவர் தான், அன்பால் தந்துள்ளார்கள் நன்றி. இப்படம் ஆரம்பிக்கும்போது இருந்த பாஸிடிவிடி படம் முழுக்க இருந்தது. படம் முழுக்க நிறைய நட்சத்திரங்கள், இத்தனை பெரிய நடிகர்கள் முதல் படத்தில் கிடைப்பது அரிது. அதை மிகச்சரியாகப் பயன்படுத்தி, அனைவரும் கொண்டாடும் வகையில், சிரித்து மகிழும் படமாகத் தந்துள்ளார் பிரதாப். யோகிபாபுவை கேரக்டர் ரோலில் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. ஜெய் அவர் பாத்திரத்தை மிக அருமையாகச் செய்துள்ளார். சினிமாவில் புதிதாகத் தயாரிப்புக்கு வருவது எளிதல்ல. யுவராஜூக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றியடையவும், அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் என்றார்.
நடிகர் விஜய் ஆதிராஜ் பேசியதாவது, சத்யராஜ் புரட்சித் தமிழன் இல்லை, இனிமேல் அவர் பான் இந்தியன் ஸ்டார். சத்யராஜூடன் இரண்டு படங்கள் செய்யும் ஆசீர்வாதம் எனக்குக் கிடைத்தது நன்றி. இங்கு அவரைப் பார்த்தது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் யுவராஜ் சமீபத்தில் தான் பழக்கம். படம் மிக நன்றாக வந்துள்ளது என்றார். பிரதாப்புக்கு என் வாழ்த்துக்கள். யோகிபாபு மின்னும் ஸ்டார் எங்கு பார்த்தாலும் அவர் முகம் தான். ஜெய் இன்னும் நிறையப் படங்கள் நடிக்க வேண்டும். பேபி & பேபி படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் பிரதாப் பேசியதாவது,
இந்தக்கதையை எழுதியவுடன் யோகிபாபுவிடம் தான் முதலில் போனேன். அவருக்குக் கதை பிடித்திருந்தது. பின் பல தயாரிப்பாளர்களிடம் போனேன், இறுதியாக யுவாராஜ் சாரை சந்தித்தேன். அவர் கதை கேட்டு, மிகவும் ஆர்வமாகி இந்த கதாப்பாத்திரத்துக்கு இவரை போடலாம், அல்லது இவரைப் போடலாம் என, அவர் தான் எல்லா நடிகர்களையும் ஒருங்கிணைத்தார். நான் தான் பட்ஜெட் பற்றிக் கவலைப்பட்டேன். இந்தக்கதையை சத்யராஜிடம் சொன்னதும் அவர் ஒத்துக்கொண்டார், அவர் படத்திற்குள் வந்ததும் படமே மாறிவிட்டது. ஜெய் இப்படத்திற்காக அவ்வளவு உழைத்தார். ரம்ஜான் நோம்பினில் மூன்று வேளை சாப்பிடாமல் நடித்தார். யோகிபாபு தான் இந்தப்படம் நடக்கக் காரணம். கீர்த்தனா முதலில் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்றார் ஆனால் சத்யராஜ் ஜோடி என்றதும் உடனே ஓகே சொல்லிவிட்டார். பிரக்யா நல்ல ஒத்துழைப்பை தந்தார். ஒளிப்பதிவாளர் மிக அருமையாக செய்து தந்துள்ளார். நான் இமான் இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன், தயாரிப்பாளரும் அவரையே சொன்னார். அவர் கதை கேட்டு உடனே ஒத்துக்கொண்டார். அவர் இசையில் எல்லாப்பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். கண்டிப்பாக இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும். படம் நன்றாக எடுத்துள்ளோம் என்றார்.

நடிகர் யோகிபாபு பேசியதாவது,
இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த பிரதாபுக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. பிரதாப் 17 வருட நண்பர். 17 வருடம் முன்பு ஒரு படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துள்ளோம். இன்னக்கி அவர் இயக்குநர், நான் காமெடி நடிகன். நாம் உண்மையாக உழைத்தால் நமக்கானது தானாக வந்து சேரும். இந்தப்படம் மிக நல்ல அனுபவம். சத்யராஜூடன் எப்போதும் கவுண்டமணி பற்றி பேசி சிரிப்போம். ஜெய் இன்னும் எப்படி இளைமையாகவே இருக்கிறீர்கள் எனக்கேட்டேன், அவர் சிங்கிளா இருப்பதால் யங்கா இருக்கேன் என்றார். சீக்கிரம் அங்கிளா ஆகிவிடப்போகிறீர்கள், கல்யாணம் செய்து கொள்ளுங்கள். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் என்றார்.

நடிகர் சத்யாராஜ் பேசியதாவது,
இந்தப்படம் மிக மிக நல்ல அனுபவமாக இருந்தது. இப்படத்தில் நிறைய நடிகர்கள், ஆனால் இத்தனை பேரை ஒருங்கிணைத்து மிக அழகாக எடுத்துள்ளார்கள். தயாரிப்பாளர் எளிமையாக அவரது மொழியில் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படித்தான் நமக்கு வரும் மொழியில் பேச வேண்டும். நானும் ஜெய்யும் இன்னொரு பெரிய வெற்றிக்காக காத்திருக்கிறோம். ராஜா ராணி வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. பார்ட்டி படம் இன்னும் வரவில்லை, மதகதராஜா போல் அந்தப்படம் வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறும். இந்தப்படத்தில் அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்த கீர்த்தனா எனக்கு ஜோடி. நாமளும் இன்னும் இளைஞர் தான். தயாரிப்பாளர் அப்பாவி போல் இருந்தாலும், ரொம்பவும் விவரமானவர். பிரதாப் இத்தனை நடிகர்களை வைத்து, வெகு அழகாக வெகு சீக்கிரமாக திட்டமிட்டு படத்தை எடுத்துள்ளார் வாழ்த்துக்கள். நானும் இப்படத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன் என்றார்.

நடிகர் ஜெய் பேசியதாவது,
இயக்குநர் கதை சொல்ல வந்த போது, சத்யராஜ், யோகிபாபு டார்லிங் எல்லாம் ஓகே சொல்லிவிட்டார்கள் என்றவுடனே நானும் ஒகே சொல்லிவிட்டேன். ஷூட்டிங்கில் பட்டினியாக நடித்தது கஷ்டமாக தெரியவில்லை. பட ஷூட்டிங்கில் சத்யராஜ், யோகிபாபு என எல்லோரும் வயிறு வலிக்க வலிக்க சிரிக்க வைத்து விடுவார்கள் அது தான் கஷ்டமாக இருக்கும். இயக்குநர் பக்காவாக திட்டமிட்டு எடுத்தார், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெரிய ஆர்டிஸ்ட் இருப்பார்கள், ஆனால் அதை மிக அழகாக எடுத்துள்ளார். இரத்தம் வெட்டுக் குத்து இல்லாமல், மனம் விட்டுச் சிரித்து மகிழும் படமாக இப்படம் இருக்கும் என்றார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு பைனான்ஸியராகவும், விநியோகஸ்தர் ஆகவும் உள்ள சஞ்சய் லால்வாணியின் சமூக பணியை பாராட்டி, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி கௌரவித்துள்ளார். தேசத்தின் முன்னேற்றத்தில் மக்களவையின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், […]
சினிமா சென்னைதமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு பைனான்ஸியராகவும், விநியோகஸ்தர் ஆகவும் உள்ள சஞ்சய் லால்வாணியின் சமூக பணியை பாராட்டி, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.
தேசத்தின் முன்னேற்றத்தில் மக்களவையின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், மக்களவை ( லோக்சபா ) செயலக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி 96 வது லோக்சபா செயலக தினம், சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நாடாளுமன்ற இல்லத்தில் கொண்டாடப்பட்டது.

சமூகத்தில் விளிம்பு நிலை மக்களின் வாழ்கையை மேம்படுத்துவதற்காக, காந்தி மண்டேலா அறக்கட்டளையின் மூலம் எண்ணற்ற பணிகளை மேற்கொண்டதோடு, பின்தங்கிய கிராமப்புற குழந்தைகளின் கல்வி, சுகாதார வசதி மற்றும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரின் நிலையான வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தும் எண்ணற்ற முயற்சிகளில் ஈடுபட்டு, சஞ்சய் லால்வாணி முன்னணி வகித்து வருகிறார். குறிப்பாக விளிம்பு நிலை சமூக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில், லால் வாணியின் விரிவான பணிகள் அவருக்கு பரவலான பாராட்டைப் பெற்றுத்தந்துள்ளது.
அந்த விழாவில் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா பேசியபோது.. லால் வாணியின் குறிப்பிடத்தக்க சமூகப் பணிகளை பாராட்டி பேசியதோடு, அதிர்ஷ்டம் குறைந்தவர்களை உயர்த்த சஞ்சய் லால் வாணியின் அர்ப்பணிப்பு, மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலாவின் கொள்கைகளை பிரதிபலிக்கிறது. அப்படிப்பட்ட முன் முயற்சிகளால் எவ்வாறு சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதற்கு லால் வாணியின் பணி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என பாராட்டி பேசியுள்ளார்.
அதன்பிறகு பிரகாஷ் லாவாணி, சஞ்சய் லால்வாணி என இரண்டு தலைமுறைகளாக, சமுகப் பணிகளில் ஈடுபட்டு வரும் சஞ்சய் லால்வாணி பேசுகையில்.. இந்த மரியாதை எனக்கு மட்டுமல்ல, இந்த முயற்சிகளில் எனக்கு ஆதரவளித்து ஒத்துழைத்த அனைத்து மக்களுக்குமானது. ஒவ்வொரு தனி நபரும், அவர்களின் தகுதியான வாய்புகளை அணுகக்கூடிய சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்றார்.
96 வது லோக்சபா செயலக தின கொண்டாட்டம், தேசத்தின் வளர்ச்சியில் மக்களவையின் பங்களிப்பை அங்கீகரித்ததோடு, ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்தில் பாடுபடும், சஞ்சய் லால் வாணியை முன்னிலைப் படுத்தியது, தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளது.