தமிழ் திரையுலகின் முன்னணி சண்டை பயிற்சி இயக்குநர் சில்வா. ஸ்டண்ட் சில்வா என அறியப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். சண்டை காட்சிகளில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி […]
சினிமா
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில், ரஜினிகாந்த், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், அமீர்கான், உபேந்திரா, சவுபின் சாஹிர் உள்ளிட்டோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கூலி”. கதைப்படி.. சென்னையில் மேன்சன் நடத்திவரும் தேவா ( ரஜினி ), […]
விமர்சனம்
ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு […]
சினிமா
நீதிகேட்டுப் போராடும் ஒரு நாயின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘கூரன்’ திரைப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள். நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் படத்தைப் பார்த்துவிட்டு, பேசும்போது, எப்போதும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர். அவர் எவ்வளவு […]
சினிமாநீதிகேட்டுப் போராடும் ஒரு நாயின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘கூரன்’ திரைப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள். நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் படத்தைப் பார்த்துவிட்டு, பேசும்போது,
எப்போதும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர். அவர் எவ்வளவு பெரிய இயக்குநர் என்பது உலகத்திற்கே தெரியும். அவர் ஒரு சிறந்த நடிகராக இந்த ‘கூரன்’ படம் பார்த்தபோது எனக்குத் தெரிந்தது. இதற்கு முன்பு அவர் நடித்த சில படங்களை நான் பார்த்திருந்தாலும் இதில் நடித்திருந்த அவரது பாத்திரம் சிறப்பாக இருந்தது.

இந்த ‘கூரன்’ படம் பார்க்கும் முன்பு கதையைக் கேட்டு விட்டுத்தான் சென்றேன். இதில் ஒரு நாய் தனது குட்டிக்காகத் தனக்கு வழக்காடுவதற்காக ஒரு வழக்கறிஞரைப் போய் பார்க்கிறது. அந்த வழக்கறிஞர் தான் எஸ்.ஏ.சி. எனக்கு இந்தக் கதையே புதிதாக இருந்தது. இந்த நாய் தனது உணர்வை எப்படி வெளிப்படுத்தும் ? அதற்காக இவர் எப்படி வழக்காடுவார் ? இந்த ஆர்வத்தோடு தான் நான் படம் பார்த்தேன். படத்தில் அது கொஞ்சமும் குறையாமல் இருந்தது.
இந்தப் படத்தின் இயக்குநர் நிதின் வேமுபதி. இது அவருக்கு முதல் படம். ஆனால் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு அழகாகத் திரைக்கதை அமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் வழக்கமான பாதையை விட்டுவிட்டுப் புதிதாகச் சிந்திக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அந்த வகையில் அமைந்துள்ள இந்தப் படத்தில் பெரிய பலமாக இருப்பது நடிக்காத அந்த நாய். இயல்பாக இருக்கிற அதன் உணர்வுகளைப்படம் பிடித்து, சரியாகப் பயன்படுத்தி உள்ளார்கள்.

அதன் பிறகு படத்தில் பிடித்தது மிகச் சிறப்பாக நடித்து இருக்கும் எஸ்.ஏ.சி. அவர் தான் இந்தப் படத்தின் கதாநாயகன். அவர் நடித்திருக்கும் காட்சிகள், பேசி இருக்கும் வசனங்களுக்குப் பல இடங்களில் கைத்தட்டல் கிடைக்கும். இந்தப் படம் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ள படம் என்று நினைக்கிறேன்.
வீட்டில் நம் எல்லோருக்கும் குழந்தைகள் பிடிக்கும்; குழந்தைகளுக்குச் செல்லப் பிராணிகளைப் பிடிக்கும், குழந்தைகளுக்குச் செல்லப் பிராணிகள் பிடிப்பது போல் இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும். எஸ்.ஏ.சி எப்போதும் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருப்பவர், வெற்றி பெற நினைப்பவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள் ! இவ்வாறு பார்த்திபன் பாராட்டிக் கூறியுள்ளார்.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் அடுத்ததாக, வெளிவரும் நெடுந்தொடர் “தனம்”. ஆட்டோ ஓட்டும் பெண்ணை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சீரியலை, விளம்பரப்படுத்தும் விதமாக, 50 பெண் ஓட்டுநர்களை அழைத்து, பாராட்டி விருந்தளித்துள்ளனர் படக்குழுவினர். சின்னத்திரையுலகில் தொடர்ந்து பல புதுமையான […]
சினிமாதமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் அடுத்ததாக, வெளிவரும் நெடுந்தொடர் “தனம்”. ஆட்டோ ஓட்டும் பெண்ணை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சீரியலை, விளம்பரப்படுத்தும் விதமாக, 50 பெண் ஓட்டுநர்களை அழைத்து, பாராட்டி விருந்தளித்துள்ளனர் படக்குழுவினர்.
சின்னத்திரையுலகில் தொடர்ந்து பல புதுமையான படைப்புகளை வழங்கி, மக்களை கவர்ந்து வரும், விஜய் தொலைக்காட்சியில், அடுத்ததாக இந்த பிப்ரவரி 17 முதல் ஒளிபரப்பாகி வருகிறது “தனம்” சீரியல். ஒரு குடும்பத்தில் திருமணமாகி வரும் புதுப்பெண், எதிர்பாராத விதமாக கணவனை இழந்த பின், அந்த மொத்தக் குடும்பத்தையும், ஆட்டோ ஓட்டி காப்பாற்றுகிறாள், மொத்தக் குடும்பத்தின் சுமைகளையும் தன் தோளில் சுமக்கிறாள். ஆட்டோ ஓட்டும் தனத்தை மையப்படுத்தி, இந்த சீரியலின் கதை பயணிக்கிறது.
தனம் கதாப்பாத்திரத்திரத்தில் சத்யா நடிக்க, ரூபஸ்ரீ, ஐஸ்வர்யா, Vj கல்யாணி, கிஷோர், அர்ஜுன், ஜெயஸ்ரீ, ரேணுகா, கோகுல், சமிக்ஷா சொர்ணா, மதன், ரவிவர்மா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

பிப்ரவரி 17 முதல் ஒளிப்பரப்பாகி வரும் இந்த புதிய சீரியல், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆட்டோ ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றி வரும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களான நிஜ ஹீரோக்களை கௌரவப்படுத்தும் விதமாக, தனம் சீரியல் குழுவினர் 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு அறுசுவை விருந்தளித்து கொண்டாடினர்.
இந்நிகழ்வினில் 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களும் இத்தொழிலுக்கு வந்த தங்களின் கதைகளை பகிர்ந்து கொண்டனர். அவர்களுடன் படக்குழுவினர் கலந்துதுரையாடி, சிறு சிறு விளையாட்டுக்கள் விளையாடி, அவர்களை உற்சாகப்படுத்தினர். இந்த மொத்த நிகழ்வும் மிக இனிமையான, மகிழ்வுடன் கூடிய கொண்டாட்டமாக அமைந்தது.
இந்த நிகழ்வின் வீடியோ இப்போது வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
“தனம்” சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும். மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் ஒளிபரப்பாகிறது.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், இவானா, மிஷ்கின், கேஎஸ் ரவிக்குமார், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், இந்துமதி, தேனப்பன் உள்ளிட்டோர் நடிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “டிராகன்”. கதைப்படி.. […]
விமர்சனம்ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், இவானா, மிஷ்கின், கேஎஸ் ரவிக்குமார், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், இந்துமதி, தேனப்பன் உள்ளிட்டோர் நடிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “டிராகன்”.
கதைப்படி.. பன்னிரண்டாம் வகுப்பில் 96 சதவீதம் மதிப்பெண் பெற்று, வேலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்கிறான் ராகவன் ( பிரதீப் ரங்கநாதன் ). கல்லூரியில் டிராகன் என்கிற பெயரில் வகுப்பிற்கு செல்லாமல் அடாவடித்தனம் செய்து கெத்தாக சுத்தி வருகிறான். படிக்காமல் ரவுடித்தனம் செய்து அனைவரையும் மிரட்டி திரியும் ராகவனை காதலிக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். ஜாலியாக வருடங்கள் நகர, கல்லூரி வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. இறுதியில் ராகவனுக்கு 48 அரியர் விழுகிறது.

பின்னர் இரண்டு ஆண்டுகள் வேலைக்கு செல்வதாக, பெற்றோரை ஏமாற்றி நண்பர்கள் அறையில் கூத்தடித்துக் கொண்டு சுற்றுகிறார். ஒருநாள் வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாக ராகவனிடம் காதலி கூற, இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிகின்றனர். அவர் வேறொருவரை திருமணம் செய்து கொள்கிறார். காதலியை பழிவாங்கும் நோக்கத்தில் அவரது கணவரை விட நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என நினைத்து, குறுக்கு வழியில் சான்றிதழ் தயார் செய்து பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறான் ராகவன். பின்னர் பெரிய தொழிலதிபரின் மகளுக்கும் ராகவனுக்கும் திருமணம் செய்ய பேசி முடிவு செய்யப்படுகிறது.

ஒருநாள் எதார்த்தமாக ராகவனை பார்த்த கல்லூரியின் முதல்வர் மிஷ்கின் அவனை பின்தொடர்ந்து, அவனது நிறுவனத்தில் சந்திக்கிறார். அப்போது ராகவன் தனது போர்ஜரி வேலை நிறுவனத்திற்கு தெரிந்தால் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் என கெஞ்சுகிறார். அப்படியானால் நீ மீண்டும் கல்லூரிக்கு வந்து மூன்று மாதங்கள் வகுப்பை கவனித்து தேர்வு எழுதி 48 அரியரையும் தேர்ச்சி பெற்றால், நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்றார். இது நடக்கிற காரியமா என கெஞ்சுகிறான் ராகவன்.
ராகவன் மீண்டும் கல்லூரிக்கு சென்று மூன்று மாதங்கள் படித்து தேர்வு எழுதி 48 அரியரையும் முடித்தானா ? தொழிலதிபரின் மகளுக்கும் ராகவனுக்கும் திருமணம் நடந்ததா ? இல்லையா என்பது மீதிக்கதை..

வாழ்க்கையில் பெற்றோரை ஏமாற்றி குறுக்குவழிகளில் பணம் சம்பாதித்து ஆடம்பரமான வாழ்வை தேடி அலையும் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு பாடம் எடுக்கும் வகையில், திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர்.
நாயகனாக பிரதீப் ரங்கநாதன் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இளைய சமுதாயத்தினரின் வரவேற்பை பெற்றுள்ளார். அவரது தாய், தந்தையாக நடித்துள்ள இருவரும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் மிஷ்கின் டிராகன் மூலம் நடிகராக தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் கேஎஸ் ரவிக்குமார் கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்து, ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் பா. விஜய் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி வெளியாகும் […]
சினிமாவேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்து, ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் பா. விஜய் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி வெளியாகும் ‘அகத்தியா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜானரில் கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் ‘அகத்தியா’ திரைப்படம் பிப்ரவரி 28ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய இந்திய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், இயக்குநர் பா.விஜய், நடிகர் ஜீவா, நடிகை ராஷி கண்ணா, ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நடிகை ராஷி கண்ணா பேசுகையில், ‘நான் ஏற்கனவே ‘அரண்மனை 3’ , ‘அரண்மனை 4’ போன்ற ஹாரர் படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்தத் திரைப்படத்தில் ஹாரருடன் புதிய எலிமெண்ட்டும் இருக்கிறது. அதற்காக இயக்குநர் பா. விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் பா விஜயை பாடலாசிரியராக தெரிந்திருக்கும். ஆனால் இந்தப் படம் வெளியான பிறகு அவர் இயக்குநராகவும் வெற்றி பெறுவார். படத்தில் புது எலிமெண்ட் கிளைமாக்ஸில் இடம் பிடித்திருக்கிறது. புது தொழில்நுட்பத்துடன் இணைந்து அது உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தின் தரத்திற்காக தயாரிப்பாளர் கணேஷ் அர்ப்பணிப்புடன் கூடிய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். இப்படம் அவருக்கும் வெற்றி படமாக அமையும். ஜீவா உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான அனுபவம். அவருடன் தொடர்ந்து படங்களில் நடிக்க விரும்புகிறேன். என் மீது அன்பு செலுத்தி வரும் தமிழ் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன் என்றார்.

இயக்குநரும், நடிகரும், பாடலாசிரியருமான பா. விஜய் பேசுகையில், ‘அகத்தியா- வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மதிப்புமிகுந்த திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்நிறுவனத்துடன் வேம் இந்தியா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது.
இது மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் கொண்ட தருணம். இந்தப் படத்தின் கதை எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து மிகப்பெரிய தேடல் இருந்தது. முதலில் இந்த கதையை எப்படி ஜனரஞ்சகமாக சொல்ல வேண்டும். அப்படி வெகுஜன ரசனையுடன் சொல்ல வேண்டும் என்றால் வலிமையான தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணி தேவை என்பதை உணர்ந்தேன். அதனால் கதை எழுத தொடங்கும் போது இது வழக்கமான ஹாரர் படமாக இல்லாமல், அதிலிருந்து சற்று வித்தியாசப்பட்டு ஹாரர் ஃபேண்டஸியாகவும் உருவாக்க வேண்டும் என எழுதத் தொடங்கினேன். ஏனெனில் நான் சொல்லவரும் கன்டென்ட் அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்க வேண்டும் என விரும்பினேன். இதனால் கதையின் ஒரு மிகப்பெரிய பகுதியை பீரியட் ஃபிலிமாக காட்ட வேண்டிய சூழல் கதை களத்தில் ஏற்பட்டது.
திரைக்கதையை எழுதி முடித்த பிறகு இதனை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றால் பிரம்மாண்டமான பொருட்செலவு செய்யக்கூடிய தயாரிப்பாளர்கள் தேவை. மிகப் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் – நட்சத்திர நடிகர்களின் பிஸினஸைப் பற்றி கவலைப்படாமல் சொல்லவரும் கன்டென்ட்டை புரிந்து கொண்டு தயாரிக்கும் தயாரிப்பாளர்களால் மட்டுமே இதனை தயாரிக்க இயலும். அப்படி ஒரு தயாரிப்பாளரை நானும், ஒளிப்பதிவாளர் தீபக் குமாரும் தேட தொடங்கினோம்.
அந்தத் தருணத்தில் தான் நடிகர் ஜீவாவின் தொடர்பு கிடைத்தது. அவருடன் ஏற்கனவே ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தேன். அந்த நட்பின் காரணமாக அவரிடம் இந்தப் படத்தின் கதையை விவரித்தேன். ஜீவாவும், ‘ஹாரர் படமா.. வேண்டாமே..!’ என தயங்கினார். ஆனால் நானோ, ‘இது ஹாரர் படம் இல்லை. ஹாரர் ஃபேண்டஸி படம். இந்த திரைப்படத்தில் நல்ல விஷயம் இருக்கிறது. அது மக்களிடம் சென்றடைய வேண்டும். இது ஒரு ஹாரர் அட்வென்ச்சர் படமும் கூட’ என்றேன். அதன் பிறகு அவரும் தயாரிப்பாளரை தேடுகிறேன் என்றார்.
பின்னர் இந்த கதையை நம்பி தயாரிக்கும் ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார், வாருங்கள் அவரை சந்திப்போம் என்று அழைத்துச் சென்ற இடம் தான் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். அவரை அவருடைய வீட்டில் சந்தித்தோம். கதையை முழுவதுமாக கேட்டதும் தயாரிக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்தார். நாங்கள் கேட்டது, கேட்க நினைத்தது, கேட்கத் தயங்கியது, இதையெல்லாம் கேட்கலாமா என்று யோசித்தது என அனைத்தையும் அவராக முன்வந்து செய்து கொடுத்தார். இந்த திரைப்படத்தில் பான் இந்திய நட்சத்திர நடிகையான ராஷி கண்ணா இடம் பிடித்தார். அதன் பிறகு மற்றொரு அழுத்தமான வேடத்தில் நடிக்க அர்ஜுன் பொருத்தமாக இருப்பார் என்று சொன்னோம். அவர் இந்தப் படத்தில் இணைந்தார். அதன் பிறகு சில ஹாலிவுட் நட்சத்திர நடிகர்கள் நடித்தால் கதையில் நம்பகத்தன்மை அதிகம் இருக்கும் என்று சொன்னேன். மெடில்டா எனும் ஹாலிவுட் நடிகையும், ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் நடித்த எட்வர்ட் சொனன் பிளேக் என்ற நடிகரும் இணைந்தார்கள். அதன் பிறகு யோகி பாபு, வி டி வி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, ராதாரவி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் பணியாற்றினர். இந்தப் படத்தின் கதைகளத்திற்காக ஏராளமான அரங்குகள் அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அனைத்தும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்க வேண்டியதாக இருந்தது. அதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார்.
ஐசரி கணேஷின் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் இயக்குநர்களுக்கு மிகப்பெரிய படைப்பு சுதந்திரம் கிடைக்கும். இயக்குநர்கள் ஒரு காட்சிக்கு மயில் தோகை வேண்டும் என கேட்டால்.. தயாரிப்பாளர் மயில் ஒன்றை கொண்டு வந்து தருவார். இதுதான் அவரின் பண்பு. இதுதான் அவர் சினிமா மீது வைத்திருக்கும் கட்டற்ற நேசம், அளவற்ற காதல். இதை பார்த்து நான் பல தருணங்களில் வியந்து இருக்கிறேன்.
65 நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்தோம். படத்தொகுப்பு பணிகளை நிறைவு செய்த பிறகு 90 நிமிடங்களுக்கு வி எஃப் எக்ஸ் பணிகள் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்காக ஓராண்டு காலம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டு ஒத்துழைப்புடன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. அந்தப் பணிகளையும் அண்மையில் நிறைவு செய்தோம். உச்சகட்ட காட்சி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறேன். அந்த காட்சிக்கான பணிகளை ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்சர்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு வி எஃப் எக்ஸ் பணிகளை மேற்கொண்ட முன்னணி நிறுவனத்திடம் வழங்கினோம். இந்த இறுதிக் காட்சியில் அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் கூடிய சண்டைக் காட்சியை பிரம்மாண்டமாக அவர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். அந்தக் காட்சி படத்திற்கு வலிமை சேர்க்கும் என நம்புகிறேன்.
‘ஒரு இயக்குநர் எழுதிய திரைக்கதை முழுவதுமாக காட்சி வடிவில் செதுக்கப்பட்டிருந்தால், அந்தப் படம் இயக்குநருக்கு திருப்தி அளித்தால், அதுதான் நல்ல படைப்பாக உருவாகும்’ என என்னுடைய குருநாதர் கே பாக்யராஜ் சொல்வார். இந்த படத்தின் முதல் பிரதியை பார்வையிடும் போது எனக்கு அந்த மனநிறைவு ஏற்பட்டது. இதற்கு காரணம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தான். அவருக்கு வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையின் அளவில் நன்றியை சொன்னாலும் போதாது.
நடிகர் அர்ஜுன் நடிகர் மட்டுமல்ல, சிறந்த இயக்குநரும் கூட அவருடைய இயக்கத்தில் உருவான படத்திற்கு பாடல்கள் எழுதுவது என்பதே சவாலான பணி. அவரை வைத்து இயக்குவது என்பது இன்னும் கூடுதலான சவால் மிக்கது. படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போது அன்றைய தினம் படமாக்கப்படும் காட்சிகளின் முழு விவரத்தையும் கையில் வைத்திருப்பார். அவரிடம் படம் தொடர்பான காட்சி தொடர்பான ஆரோக்கியமான கேள்விகள் இருக்கும். அந்த கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டால் அவர் தன் பங்களிப்பை முழுமையாக அளித்து விடுவார். படப்பிடிப்பிற்கு முதல் நாள் வரும் போது தான் இத்தகைய வினாக்களை கேட்பார். அதற்கு நாங்கள் பதில் அளித்து விட்டோம் என்றால் முழு படப்பிடிப்பிற்கும் அவருடைய ஒத்துழைப்பு சிறப்பானதாக இருக்கும். இந்தப் படத்தில் கதையின் வேர் பகுதியில் இடம்பெறும் கதை களத்தில் அழுத்தமான வேடத்தில் அர்ஜுன் நடித்திருக்கிறார். அவருக்கு நான் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் இந்தப் படத்தில் திறமை மிக்க தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணியும் அமைந்தது. ஒளிப்பதிவாளர் தீபக் குமார், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், கலை இயக்குநர் சண்முகம், சண்டை பயிற்சி இயக்குநர் கணேஷ், ஆடை வடிவமைப்பாளர் சாய், பல்லவி, டீனா ரோசாரியோ என பலரும் எனக்கு பக்க பலமாக இருந்து பணியாற்றினார்கள்.
இவர்களுடன் யுவன் ஷங்கர் ராஜாவும் எனக்காக சிறப்பான பின்னணி இசையை அமைத்திருக்கிறார். இந்தப் படத்திற்காக அவருடைய பிரத்யேகமான தீம் மியூசிக் இடம் பிடித்திருக்கிறது. இதுவும் ரசிகர்களை வெகுவாக கவரும்.
‘அகத்தியா’ இரண்டேகால் மணி நேரம் மனதை ரிலாக்ஸாக வைக்கும் ஜனரஞ்சகமான படம் என்பதுடன் குடும்பத்தினருடன் ரசிக்கும் வகையில் தயாராகி இருக்கிறது. அழகான தமிழ் வசனங்கள்- இனிமையான பாடல்கள்- அனைத்து தரப்பினரும் தற்போது ரசிக்கும் ஹாரர் எலிமெண்ட்ஸ்கள்- இத்துடன் ஃபேண்டஸி என்ற புதிய எலிமெண்ட்டையும் இணைத்து உருவாகியிருக்கிறோம். அதனால் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பது என்னுடைய அழுத்தமான நம்பிக்கை.
படைப்பாளியின் ஒவ்வொரு படைப்பும் மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயன் அளிக்க வேண்டும் என கருதுகிறேன். இதுதான் படைப்பின் இலக்கணமும் கூட. அத்தகைய முயற்சியில்தான் ‘அகத்தியா’ உருவாகி இருக்கிறது. அழகானதொரு கருவை சுமந்து வரும் 28ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
நான் திரைத்துறைக்கு பாடல் ஆசிரியராக அறிமுகமாகி, நடிகராகி, இயக்குநராகி, தயாரிப்பாளராகி என 27 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. இத்தனை ஆண்டுகளில் நான் கற்றுக் கொண்ட விஷயம் ஒன்றுதான். சினிமாவில் வெற்றி என்பது கூட்டு முயற்சி. சினிமாவில் தனிப்பட்டவர்களின் வெற்றி சாத்தியமில்லை. கூட்டு முயற்சியில் தான் ஒரு கலைஞரின் வெற்றி அடங்கியிருக்கிறது என்றார்.

நடிகர் ஜீவா பேசுகையில், ‘இந்த படத்தின் கதையை இயக்குநர் பா விஜய் என்னிடம் சொல்லும் போது அவரிடம் ‘சங்கிலி புங்கிலி கதவை திற’ என்ற ஒரு ஹாரர் படத்தில் நடித்து விட்டேன்’ என சொன்னேன். கதையை முழுவதும் கேட்ட பிறகு ஹாரர் என்பது கதை சொல்வதற்காக பயன்படும் ஒரு கருவியாக மட்டுமே இருந்தது. இந்தியாவில் மட்டும் தான் இது போன்ற மிக்ஸ்டு ஜானரில் படங்கள் உருவாகும். வெளிநாடுகளில் ஹாரர் படம், ரொமான்டிக் படம் என ஒவ்வொன்றும் ஜானர் அடிப்படையில் இருக்கும். பா. விஜய் ‘அகத்தியா’ படத்தை இந்திய ரசிகர்கள் ரசிக்கும் வகையில் மிக்ஸ்டு ஜானரில் தான் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ஒரு நல்லதொரு மெசேஜும் இருக்கிறது. இந்த விஷயம் மக்களை சென்றடைந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினோம். அதற்காக ஹாரர் – திரில்லர் – காமெடி – ஆக்ஷன்- அனிமேஷன்- ஃபேண்டஸி- இவற்றின் கலவையாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் குறிப்பாக குழந்தைகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. குழந்தைகள் முதன்முறையாக தமிழில் இப்படி ஒரு சர்வதேச தரத்துடன் கூடிய கிராபிக்ஸ் காட்சிகளையும் அனிமேஷன் கதாபாத்திரங்களையும் கண்டு ரசிப்பார்கள்.
படத்தின் கிளைமாக்ஸ் முக்கியமானதாக இருக்கும். ஒரு வருடம் காத்திருந்த பிறகு அண்மையில் தான் அந்த கிளைமாக்ஸ் காட்சிகளை பார்த்தோம். உண்மையில் வியந்து போனோம். இயக்குநர் பா. விஜய் கடினமாக உழைத்திருக்கிறார். அவருடைய விடாமுயற்சிக்காக அவரை நான் மனதார பாராட்டுகிறேன்.
இது போன்ற பிரம்மாண்டமான பொருட்செலவில் படத்தை தயாரிக்க வேண்டும் என்றால் நாங்கள் உடனடியாக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளரான ஐசரி கணேஷை தான் சந்திப்போம். அந்த வகையில் இந்த படத்தின் கதையை அவரை வீட்டில் சந்தித்து சொன்னோம். கதையை முழுவதுமாக கேட்டு உடனே தயாரிப்பதற்கும் ஒப்புக் கொண்டார். அந்தத் தருணத்திலேயே இந்த படத்திற்காக நாங்கள் படமாக்கியிருந்த காட்சிகளை அவருக்கு காண்பித்தோம்.
எங்களுடைய இந்த அணுகுமுறையும் அவருக்கு பிடித்திருந்தது. உண்மையிலேயே ஏராளமாக பொருட்செலவு செய்து தான் படத்தை தயாரித்திருக்கிறார். படத்தின் உருவாக்கத்தின் போது எந்த சமரசம் இல்லாமல் இயக்குநருக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். அவர்தான் இந்த படத்தின் விதை. அவரைச் சார்ந்து தான் இப்படத்தின் கதை நகரும். நாங்கள் தற்காலத்திலும், அவர் 1940களிலும் இருப்பார். அவர் உருவாக்கிய ஸ்கேரி ஹவுஸ் மூலமாகத்தான் கதை பயணிக்கும். நானும், நடிகர் ராஷி கண்ணாவும் இரண்டு ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். அவர் எனக்கு இந்தி திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வாக்களித்து இருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் வகையில் உருவாகி இருக்கிறது, என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் பேசுகையில், ‘இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஜீவா – இயக்குநர் பா. விஜய்யையும், ஒளிப்பதிவாளர் தீபக் குமாரையும் அழைத்து எங்கள் வீட்டுக்கு வருகை தந்திருந்தார். இப்படத்தின் கதையை சொன்னார்கள். எனக்கு பிடித்திருந்தது. அப்போது கதைக்கு டைட்டில் வைக்கவில்லை. படத்தில் ஹீரோவுக்கு அகத்தியன் என பெயர். அதனால் படத்திற்கு ‘அகத்தியா’ என பெயர் சூட்டினோம்.
படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தது. அதன் பிறகு படப்பிடிப்பு நிறைவடைந்தது என்றார்கள். அதன் பிறகு இயக்குநரிடம் படத்தை எப்போது பார்க்கலாம் என்று கேட்டேன். கிராபிக்ஸ் வேலைகள் முடிந்தவுடன் பார்க்கலாம் என்றார். இந்தப் படத்தில் சி ஜி மட்டுமே ஒன்றரை மணி நேரம். 14 தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து இந்த பணியை மேற்கொண்டது படக்குழு. இரண்டு மாதத்திற்கு முன்புதான் அனைத்து பணிகளும் முடிவடைந்தது. அதன் பிறகு படத்தை பார்த்தோம். பார்த்தவுடன் எனக்கு முழு திருப்தி ஏற்பட்டது. சந்தோஷமாகவும் இருந்தது. எங்கள் நிறுவனம் இதுவரை 25 படங்களை தயாரித்திருக்கிறது. அதில் இந்த படம் தான் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. அதனால் இந்த படம் எங்கள் நிறுவனத்திற்கு ஸ்பெஷலானது. படத்தை பார்த்த பிறகு, பா விஜய்யிடமிருந்து இப்படி ஒரு படைப்பா என வியப்படைவீர்கள். இதற்காக இயக்குநர் பா விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, வட இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 780க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 28ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. பி வி ஆர் மற்றும் சினி பொலிஸ் ஆகிய திரையரங்குகளில் வெளியாகிறது. ‘அகத்தியா’ திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகி இருப்பதால் இந்தியா முழுவதும் வெளியாகிறது.

என்னுடைய திரைப்பட தயாரிப்பு பாடலாசிரியர் – நடிகர் – இயக்குநர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அகத்தியா’ திரைப்படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, எட்வர்ட், மெடில்டா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை சண்முகம் மேற்கொண்டிருக்கிறார்.
அனுபவத்தில் இந்தப் படத்தின் இயக்குநரையும் , ஒளிப்பதிவாளரையும் தான் அதிக முறை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறேன். இவர்கள் பட உருவாக்கத்தின் போது நடைபெறும் அனைத்து விஷயங்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
இந்தத் திரைப்படத்தில் கிட்டத்தட்ட 25 நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் நடித்திருக்கிறார்கள். அத்துடன் இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு எம்முடைய தயாரிப்பில் உள்ள படங்கள் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதில் வெற்றி பெற்ற படங்களில் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பும் இடம்பெறும். என்னுடைய எல்லா திரைப்படத்தின் இந்தி மொழி உரிமையை வேம் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரும், எனது இனிய நண்பருமான அனீஷ் அர்ஜுன் தேவ் தான் வாங்குவார். இந்தத் திரைப்படம் இந்தியிலும் வெற்றி பெறும் என்பதால் இந்தப் படத்தின் இந்தி பதிப்பு உரிமையை வாங்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்தும் போது படத்தைப் பார்த்துவிட்டு, படத்திற்கு இணை தயாரிப்பாளராக வர விருப்பம் தெரிவித்தார். அவர் இணைந்த உடன் இந்த படம் இன்னும் பிரம்மாண்டமானதாக மாற்றம் பெற்றது. இந்த தருணத்தில் அவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.
திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அஇஅதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு அழகுநாச்சியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக […]
மாவட்ட செய்திகள்திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அஇஅதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக அருள்மிகு அழகுநாச்சியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன், காரத்தொழுவு கிராமத்தை சேர்ந்தவரான நடராஜ், முத்து தம்பதியினருக்கு பிறந்த குழந்தைக்கு சஷ்டிகா என பெயர் சூட்டினார்.

இதனையடுத்து அன்னதானம் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு உணவுகளை பரிமாறினார். அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது. இந்து சமய அறநிலையத்துறை சார்பாக அழகுநாச்சியம்மன் கோயிலில் நாள்தோறும் 25 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இது மிக குறைவான எண்ணிக்கை ஆகும். குறைந்தது நூறு பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும். அது சம்பந்தமாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சருக்கு கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டு, விரைவில் நூறு பேருக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனக்கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் காளீஸ்வரன், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கைத்தறி நெசவாளர் அணி செயலாளர் கண்ணன் (எ) ஆர்.கேபாலகிருஷ்ணன், தாராபுரம் நகர கழக செயலாளர் சி.ராஜேந்திரன், மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் எஸ்.சரவணகுமார், கணியூர் பேரூர் கழக செயலாளர் டி.சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில் மற்றும் A. வெங்கடேஷ் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr X). எஃப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் […]
சினிமாபிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில் மற்றும் A. வெங்கடேஷ் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr X). எஃப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சுவாரியார், அனகா, அதுல்யா ரவி, ரைஸா வில்சன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு சென்னை நெக்சஸ் விஜயா மாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் ஆர்யா பேசும்போது, இந்த படத்துக்கு எனக்கு சிபாரிசு செய்ததே தயாரிப்பாளர் S. லஷ்மன் குமார் தான். இந்தக் கதையைக் கேட்டுவிட்டு இது மிகப்பெரிய பட்ஜெட் ஆகுமே என தயாரிப்பாளரிடம் கேட்டபோது,
ரசிகர்களுக்கு பிரமிப்பான திரையரங்கு அனுபவத்தை கொடுப்பதற்காக சமரசம் இல்லாமல் இந்த படத்தை எடுத்து தான் ஆக வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் கூறினார். இப்போ இருக்கும் காலகட்டத்தில் ஓடிடி எல்லாவற்றையும் தாண்டி திரையரங்குகளை மட்டுமே நம்பி நாம் படம் எடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். அதற்கு மிகப்பெரிய உதாரணம் தான் லப்பர் பந்து. அதனாலேயே அவர் இந்த கதை மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தார்.
இயக்குநர் மனு ஆனந்த் எல்லாவற்றிலும் பர்ஃபெக்சன் ஆக இருக்கக்கூடியவர். எந்த ஒரு காட்சியையும் அழகான முன்கூட்டிய திட்டமிடலுடன் படமாக்கினார். அதனால் தான் திட்டமிட்டதை விட அதிக நாட்கள் எடுக்க வேண்டிய படத்தை சரியான நேரத்திற்குள் எடுத்து முடித்தார். இந்தப் படத்திற்காக மும்பையில் தண்ணீருக்கு அடியில் ஒரு காட்சி படமாக்கப்பட்டது அப்போது என்னுடன் சேர்ந்து ஒளிப்பதிவாளரும் தண்ணீருக்குள் டைவ் அடித்து இந்த காட்சிகளைப் படமாக்கினார். இப்படி ஒரு ஒளிப்பதிவாளரை பார்ப்பது ரொம்பவே அரிது. ஆக்சன் படம் என்பதால் இசை ரொம்பவே முக்கியம். இசையமைப்பாளர் திபு நிணன் அந்த அளவிற்கு இந்த படத்திற்கு தனது ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளார். சில்வா கிட்டத்தட்ட 80 நாட்கள் இந்த படத்தில் பணியாற்றினார். படம் முழுவதுமே ஒரு ஆக்சன் மூடு இருக்கும். நிறைய ஆக்சன் காட்சிகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட படத்தின் இணை இயக்குநர் போலவே அவர் பணியாற்றினார்.

கவுதம் கார்த்திக் ரொம்பவே கூலான, அதேசமயம் ஒரு செக்ஸியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக ஸ்டைலிஷான ஒரு நடிப்பை அவர் கொடுத்துள்ளார். நானும் மனுவும் பேசும் போது கூட “தம்பி கலக்கிட்டான்” என்று தான் அவரது நடிப்பைப் பற்றி கூறுவோம். இந்த கதாபாத்திரத்தை தமிழில் இவரைத் தவிர வேறு யாருமே பண்ண முடியாது என்பது போல சரத்குமாருக்கு என அளவெடுத்து தைத்த சட்டை போன்று அவரது கதாபாத்திரம் அமைந்துவிட்டது. சிங்கிள் ஷாட்டில் ஒரு ஆக்சன் காட்சியில் அவர் நடித்திருந்தார். இப்படி எல்லாம் இந்த வயதில் பண்ண முடியுமா என பிரமித்துப் போனேன்.

மஞ்சுவாரியார் இந்த படத்தில் கதாநாயகியாக கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யப் போகிறேன் என தெரியவில்லை என்று மனு ஆனந்த் புலம்பும் அளவுக்கு இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் ரொம்பவே வலுவானது. கிட்டத்தட்ட ஆறு மாதமாக அவரைப் பின் தொடர்ந்து இந்த படத்திற்கு நடிக்க அழைத்து வந்துள்ளார். நாயகி அனகா ஒவ்வொரு காட்சிக்கும் ஏகப்பட்ட சந்தேகங்கள் கேட்பார். ஒரு படத்தில் கூட இவ்வளவு சந்தேகங்கள் கேட்க முடியுமா என ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் அவை ஆரோக்கியமானதாக இருக்கும். அதுல்யா ரவி, ரைஸா வில்சனும் ஆக்சன் காட்சிகளுக்காக தினசரி ஆறு மணி நேரம் ரிகர்சல் எடுத்தார்கள். காரணம் பெண்கள் சண்டை போடுகிறார்கள் என்றால் பார்ப்பதற்கு அது போலியாக இருப்பது போல் இருக்கக் கூடாது என்பதற்காக அவ்வளவு மெனக்கெட்டார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக இந்த படத்தில் மட்டுமே நடித்தேன். இந்த படம் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன் என்று கூறினார்.

தயாரிப்பாளர் S.லஷ்மன் குமார் பேசும்போது, இந்த படம் நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு படம். மனு ஆனந்த் எஃப்ஐஆர் படத்தை முடித்துவிட்டு இந்த கதையை எங்களிடம் சொன்னார். சொன்னபோது எதுவுமே நம்புகிற மாதிரி இல்லை.. ஆனால் அவர் சொன்ன நான்கு சம்பவங்கள் பற்றி கூறியதும் தான் அவற்றை நம்ப முடிந்தது. 1965ல் இந்தியாவின் உளவுத்துறை அமைப்பு சீனாவை சமாளிப்பதற்காக இமயமலையில் உள்ள நந்தாதேவி மலைக்கு ஏழு புளூடோனியம் கேப்சூல்ஸ் எடுத்துச் செல்கிறார்கள். ஆனால் அங்கு எதிர்பாராமல் அவை தொலைந்து விடுகின்றன. இப்போது வரை அவை கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கின்றன. நினைத்துப் பார்க்க முடியாத ஆபத்து நிறைந்த ஒரு விஷயம் அது. 1977-ல் அமெரிக்காவில் வெளியான ஒரு பத்திரிகை செய்தி மூலமாகத் தான் இது வெளியே தெரிய வந்தது. இந்த படத்தின் ஆரம்பப் புள்ளியே அதுதான்.

அப்படி ஒரு நியூக்ளியர் கேப்ஸ்யூல் காணாமல் போனதன் பின்னணி, அதன் விளைவு ஆகியவற்றை உண்மைக்கு ரொம்ப நெருக்கமாக கொஞ்சம் கற்பனை கலந்து உருவாக்கியுள்ளோம். போலீஸ் அதிகாரிகளுக்கு, ராணுவ வீரர்களுக்கு அவர்களுக்கான செயல்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. ஆனால் நாட்டுக்காக தங்களை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் பணியாற்றும் உளவுத்துறை வீரர்களுக்கு அது கிடைக்காமலேயே போய் விடுகிறது.
சர்தார் படத்திற்காக அந்த படத்தில் பணியாற்றிய இரண்டு நடிகர்களின் தந்தைகளே கூட இப்படி உளவுத்துறையில் பணியாற்றியவர்கள் தான். அந்த சமயத்தில் கதைக்காக பேசும்போது தான் அது அவர்கள் பற்றிய உண்மை தெரிய வந்தது. அவர்கள் இந்த நாட்டின் பாதுகாப்புக்காக தடுத்து நிறுத்திய விஷயங்கள் பல.. அப்படி வெளியே தெரியாமல் போன அந்த வீரர்களின் தேசப்பற்றுக்கு காணிக்கை செலுத்தும் விதமாகத்தான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கதையை எடுத்துக் கொண்டாலும் ரொம்பவே கற்பனையை விரித்து விடாமல் நிஜத்திற்கு பக்கத்தில் இருந்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த். இப்படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய நடிகர்கள் அனைவருமே ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார்கள். இந்த படத்துக்காக போடப்பட்ட செட்டுகளாகட்டும் அல்லது நிஜமான லொகேஷன் ஆகட்டும் எல்லாமே பிரம்மாண்டமானவை தான். ரசிகர்களுக்கு நிச்சயமாக திரையரங்கு அனுபவத்தை இந்த படம் தரும் என நம்புகிறோம் என்று கூறினார்.

நடிகர் கவுதம் கார்த்திக் பேசும்போது, இந்தப் படம் நான் எதிர்பார்த்ததை விட நூறு மடங்கு அதிகமாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளை எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்து உருவாக்கலாம். ஆனால் அதில் நடிப்பவர்களை பாதுகாப்பதில் சில்வா மிகுந்த அக்கறை காட்டினார். அது மட்டுமல்ல ரொம்பவே வித்தியாசமான முறையில் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். குறிப்பாக க்ளைமாக்ஸில் நடக்கும் இறுதிச் சண்டைக் காட்சிக்காக ரைஸா, அனகா, அதுல்யா ரவி ஆகியோர் கடுமையாக ரிகர்சல் செய்ததை பார்த்து ஆச்சரியப்பட்டு போனேன். மஞ்சு வாரியருடன் முதல் காட்சியில் நடிக்கும் போது அவரைப் பார்த்து பிரமித்துப் போய் அப்படியே நின்று விட்டேன்.
ஏற்கனவே ஒரு படத்தில் நடித்த கையோடு மீண்டும் மிஸ்டர் எக்ஸ் படத்தில் சரத்குமாரும் நானும் இணைந்து நடிக்க ஆரம்பித்து விட்டோம். எப்போதுமே அவர் எனக்கு ஒரு தந்தையைப் போன்ற நபராகவே தெரிவார்.

ஆனால் காட்சிகளில் நடிக்கும் போது என வந்துவிட்டால் என்னை விட அவர் பயங்கர பிட்டாக இருக்கிறார். நான் இந்த திரையுலகில் நுழைந்ததிலிருந்து எனக்கு ரொம்பவே கிரஷ் ஆன ஒரு நடிகர் என்றால் அது ஆர்யா தான். இப்போது வரை ஸ்டைலிஷான, அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிக்கக் கூடிய நடிகராக அவர் இருக்கிறார். அவருடன் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய சந்தோஷம். ஆனால் படப்பிடிப்பில் பார்த்தபோது ஒரு ஹல்க் போல மிகப் பிரம்மாண்டமாக தோன்றினார். அந்த அளவிற்கு தனது உடலைக் கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார்.

தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்தில் அங்கே வெள்ளம் வந்தபோது கூட ஆர்யா தங்கி இருந்த இடத்தில் இருந்து வெளியேறி அங்கிருந்தவர்களிடம் ஜிம் எங்கே இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவர் எனக்கு ஒரு ரோல் மாடல் தான். இயக்குநர் மனு ஆனந்த்தும் நானும் பல வருடங்களாக இணைந்து பணியாற்ற வேண்டும் என பேசிக் கொண்டிருந்தோம். அப்படிப்பட்ட சமயத்தில் தான் இந்த கதாபாத்திரத்தில் என்னை அழைத்து நடிக்க வைத்துள்ளார். எனக்குள் இருந்த நடிப்புத் திறமையைக் அவர் சரியாகக் கணித்து வெளிக்கொண்டு வந்துள்ளார். நானும் அதைச் சரியாக செய்துள்ளேன் என நம்புகிறேன் என்று கூறினார்.

நடிகை மஞ்சு வாரியர் பேசும்போது, மிஸ்டர் எக்ஸ் படத்தைப் பொறுத்தவரை எனக்கு இன்ட்ரஸ்டிங்கான படம். அந்தப் படம் சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்கு புதுசு தான். இயக்குநர் மனு இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியை எடுக்கும் போதும் இந்த படத்தின் கதை என்ன என்று ஒவ்வொரு முறையும் விவரித்துக் கூறுவார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயங்களில் நிறைய கடுமையான சவால்கள் இருந்தாலும் அவை எல்லாவற்றையும் எதிர்கொண்டு இந்த படத்தை முடிக்க படக்குழுவினர் மிக பக்கபலமாக இருந்தார்கள். இந்த படத்தில் பணியாற்றும்போது எங்களுக்கு கிடைத்த உற்சாக அனுபவம் போல, படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் திரையரங்குகளில் அதே போன்று கிடைக்கும் என்று கூறினார்.
நடிகர் காளி வெங்கட் பேசும்போது, எப்போதுமே ஒரு படத்தில் காளி வெங்கட் என பெயர் எழுதி விட்டால் எனக்கான உடை லுங்கி அல்லது வேட்டி என்று எழுதி விடுவார்கள். மனு ஆனந்த்தின் குருநாதர் கவுதம் மேனனிடம் இருந்து எனக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. ஆனால் இவரிடம் இருந்து எனக்கு வாய்ப்பு வந்ததும் ஆச்சரியப்பட்டேன். அதன்பிறகு என்னுடைய கதாபாத்திரம் பற்றி அவர் கூறியதும் இன்னும் எனக்கு சந்தேகம் வந்தது. எப்படி என்னை இதற்காக தேர்வு செய்தார்கள் என்று. ஆனால் என்னை இந்த படத்தில் வேறு விதமாக காட்டியிருக்கிறார். கவுதம் கார்த்திக் நடித்த சில காட்சிகளை இயக்குநர் போட்டுக் காட்டினார். மிகவும் பிரமிப்பாக இருந்தது. ஒரு முறை நானும் ஆர்யாவும் படப்பிடிப்பில் இருந்தபோது நான் அவசரமாக விமானத்திற்கு கிளம்ப வேண்டி இருந்தது. சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லை. ஆனால் அதைப் புரிந்து கொண்டு நான் கார் பயணத்தில் சாப்பிடுவதற்காகவே எனக்காக விதவிதமான அசைவ உணவுகளை கொடுத்து அனுப்பினார் ஆர்யா. அதை எப்போதும் மறக்க முடியாது என்று கூறினார்

நடிகை அனகா பேசும்போது, என் மீது நம்பிக்கை வைத்து நடிக்க அழைத்த தயாரிப்பாளர்களுக்கும் இந்த கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்த இயக்குநர் மனு ஆனந்த்திற்கும் நன்றி. படப்பிடிப்பின் போது ஆர்யா எனக்கு சொல்லிக் கொடுத்த பல விஷயங்கள் என்னை நடிப்பில் மேம்படுத்திக் கொள்ள ரொம்பவே உதவியாக இருந்தது. ஒரு காட்சியில் மட்டுமே நடித்திருந்தாலும் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. மஞ்சு வாரியரின் ஒரு ரசிகையாக இருந்து அவருடனேயே இணைந்து நடித்தபோது ஒரு கனவு நனவான தருணமாகவே இருந்தது என்று கூறினார்.
நடிகை அதுல்யா ரவி பேசும்போது, என்னுடைய திரையுலக பயணத்தில் மிஸ்டர் எக்ஸ் முக்கியமான ஒரு படம். என்னால் இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய முடியும் என என் மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குநர் மனு ஆனந்த்துக்கு நன்றி. படப்பிடிப்பில் எனது காட்சிகளை பார்த்துவிட்டு ஆர்யா உடனடியாக பாராட்டுவார். அதேபோல சாப்பாட்டு விஷயத்தில் டயட் உணவு என்றாலும் சுவையான உணவு என்றாலும் ஆர்யாவிடம் இருந்து நிச்சயமாக கிடைக்கும். கவுதம் கார்த்திக்கின் அர்ப்பணிப்பு உணர்வு, கடைபிடிக்கும் ஒழுங்கு முறை, தனக்கென ஒரு பாடி லாங்குவேஜ் வைத்திருந்தது எல்லாமே என்னை ஆச்சரியப்படுத்தியது, மஞ்சு வாரியர் நடிக்கும் காட்சிகளை பார்க்க வேண்டும் என்பதற்காகவே நான் கேரவனுக்கு போகாமல் மானிட்டரின் அருகிலேயே இருந்து அவரது நடிப்பைப் பார்த்து ரசிப்பேன். அந்த அளவுக்கு நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை. ஏற்கனவே இசையமைப்பாளர் திபு நிணன் எனக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது. இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும்” என்று கூறினார்.

ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் பேசும்போது, தயாரிப்பாளர்கள் S. லஷ்மன் குமார், A. வெங்கடேஷ் இருவரும் இரு துருவங்கள் என்றாலும் ஒரு அழகான காம்பினேஷன் என்பதை மறுக்க முடியாது. மஞ்சு வாரியர் இந்திய சினிமாவின் பெருமை என்று சொல்லலாம். ராஜஸ்தான் வெயிலில் காட்சிகளைப் படமாக்கிய சமயத்தில் கூட சரத்குமார் தனது ஷாட் முடிந்தாலும் கேரவன் பக்கம் போக மாட்டார்.. கேட்டால் சூரியன் படத்தில் நடித்த சமயத்தில் எல்லாம் கேரவனா பயன்படுத்திக் கொண்டிருந்தோம் என்று கூலாக சொல்வார். பஞ்சபூதங்கள் இந்த படத்திலும் இருக்கிறது. எங்களுக்குப் படப்பிடிப்பு சமயத்தில் தொடர்ந்தும் வந்தது. அதிலும் குறிப்பாக மழை நாங்கள் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து வந்தது என்று கூறினார்.
இசையமைப்பாளர் திபு நிணன் பேசும்போது, இந்த மாதிரி ஜானரில் ஒரு படம் எனக்கு முதல் தடவையாக கிடைத்திருக்கிறது இயக்குநர் மனு ஆனந்த்திற்கு இசை பற்றிய ஞானம் கொஞ்சம் அதிகமாக இருப்பதால் அவருடன் இணைந்து பணியாற்றுவது எளிதாக இருந்தது என்றார்.

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பேசும்போது, என்னை அறிந்தால் படத்தில் பணியாற்றிய காலத்தில் இருந்து இயக்குநர் மனு ஆனந்த் எனக்கு நல்ல பழக்கம். எப்போதுமே ஒவ்வொரு டீமுக்கும் என்ன தேவை என்பதை தெரிந்துகொண்டு தங்களுடைய குழுவினரை வருத்தி பக்காவாக தயார் செய்து கொடுத்து விடுவார் மனு ஆனந்த். இந்தியாவின் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகள் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் சென்று இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தினோம். ஒரு சிங்கிள் சாட்டில் சரத்குமார் ஒரு காட்சியை நடித்து முடித்த போது பிரமித்துப் போனேன். அந்த அளவிற்கு தன்னை ஃபிட்டாகத் தயார்படுத்தி வைத்துக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடியில் மழை கொட்டி வெள்ளம் போய்க்கொண்டிருந்த போது கூட தனது அறையில் இரண்டு நாற்காலிகளை போட்டுக்கொண்டு விடாமல் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார் ஆர்யா. இந்த படம் பார்க்கும் அனைவருமே கவுதம் கார்த்திக்கை லவ் பண்ணுவார்கள். மஞ்சு வாரியர் உள்ளிட்ட அனைத்து நடிகைகளுமே ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளனர். அதற்காக கடுமையான ரிகர்சலிலும் ஈடுபட்டனர் என்று கூறினார்.

நடிகர் சரத்குமார் பேசும்போது,
கதையைப் பற்றி தயாரிப்பாளர் இங்கே பேசும்போது எனக்கே ஷாக்காக இருந்தது. இயக்குநர் இப்படி எல்லாம் ஒரு விஷயம் தயாரிப்பாளரிடம் சொல்லி இருக்கிறாரா என்று. நாளை இது பற்றி விசாரணை வந்தால் நீங்கள் இதெல்லாம் தெரிந்துதான் நடித்தீர்களா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது ? நாளை பத்திரிகைகளில் பரபரப்பாக பேசும் அளவிற்கு செய்தியைக் கொடுத்து விட்டார். படத்தின் கதையைக் கேட்டு அவ்வளவு பிரமாண்டமாகத் தயாரிக்க ஒப்புக்கொண்டதற்கே தயாரிப்பாளருக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம் உளவுத்துறையில் பணியாற்றுபவர்கள் தான் வெளியே தெரியாத கதாநாயகர்கள். அவர்களது தியாகம் அளவிட முடியாதது. வெறும் ஆக்சன் படமாக மட்டும் அல்லாமல் இதில் நிறைய உணர்வுகளும் பின்னிப் பிணைந்து இருக்கிறது.

ஆர்யா எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தார்.. எனக்கு மட்டும் கொடுக்கவில்லை,, ஸ்வீட் கொடுத்தார் என்று கூட சொன்னார்கள். ஒருவேளை ஸ்வீட் பாயாக இருந்திருக்கலாம். கவுதம் கார்த்திக் கூட இணைந்து நடிக்கும் போது அவருடைய பல ரியாக்சன்களை பார்க்கும்போது எனக்கு அவரது தந்தை கார்த்திக் ஞாபகம் தான் வரும். மனு ஆனந்த் பார்ப்பதற்கு சாஃப்ட் ஆகத் தெரிந்தாலும் நிஜத்தில் அப்படி இல்லை.. படத்தில் எனக்கு ஒரு காதல் காட்சி கூட கொடுக்கவில்லை என்று வருத்தம் இருக்கிறது.. இரண்டாம் பாகத்தில் நிச்சயமாக அதைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.

இயக்குநர் மனு ஆனந்த் பேசும்போது, ஒரு இயக்குநருக்கு இரண்டாவது படம் கிடைக்க வேண்டும் என்றால் அந்த முதல் படம் வெற்றி அடைந்திருக்க வேண்டும். அப்படி ஒரு படத்தைத் தயாரித்து. அதில் நடித்து. எனக்கு இயக்குநராக வாய்ப்பு கொடுத்து கோவிட் காலகட்டத்தில் அந்தப் படத்தை திரையரங்குகளில் தைரியமாக ரிலீஸ் செய்த விஷ்ணு விஷாலுக்கு இந்த சமயத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
எஃப்ஐஆர் இல்லையென்றால் எனக்கு மிஸ்டர் எக்ஸ் வாய்ப்பு கிடைத்திருக்காது. இன்னும் சொல்லப்போனால் எஃப்ஐஆர் பட புரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோதே பிரின்ஸ் பிக்சர்ஸில் இருந்து எனக்கு அழைப்பு வந்து விட்டது . சிலகதைகள் பேசிய போது அது சரிவர அமையவில்லை. அதன் பிறகு தான் வேறு கதை முடிவு செய்தோம்.
ஆர்யாவுக்காக கதை இருக்கிறதா என்று கேட்டார்கள். ஆனால் ஆர்யா ஒப்புக் கொள்வாரா என்ற சந்தேகம் இருந்தது. திரையுலகில் எனக்கு தெரிந்த பல நண்பர்கள் வட்டாரத்தில் ஆர்யா பற்றி விசாரித்தபோது அவரிடம் கதை சொல்வது வேஸ்ட்.. ஏனென்றால் கதையை கேட்டுக் கொள்வார்.. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து, வேண்டாம் என்று சொல்லிவிடுவார் என்று கூறினார்கள். அந்த எண்ணத்தில் தான் அவரிடம் கதை சொல்ல சென்றேன். ஆனால் கதை கேட்க ஆரம்பித்த 20வது நிமிடத்தில் இந்த படத்தை நாம் பண்ணுகிறோம் என உறுதி அளித்து விட்டார்.
இந்த படத்திற்காக கேட்டதெல்லாம் கொடுத்ததற்கு தயாரிப்பாளர் டீம் கொடுத்த ஒத்துழைப்பு தான். இவ்வளவு பிரமாண்டமாக படத்தை எடுக்க உதவியது. இந்த படத்தில் நான் அதிகம் சண்டை போட்டது என்றால் சில்வா மாஸ்டருடன் தான். அந்த அளவுக்கு ஆக்சன் காட்சிகளை நிறைய விவாதித்து கடைசியில் ஒரு புதிய ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டு வருவோம். இசை அமைப்பாளர் திபு நிணன் நாம் போதும் என்று சொன்னாலும் அதையும் தாண்டி நம்மை திருப்திப்படுத்தும் விதமாக ஒன்றைக் கொடுப்பார். அவர் ஒரு மியூசிக்கல் ஜீனியஸ் என்றே சொல்லலாம். இந்த படம் எஃப்ஐஆர்-ஐ விட ரொம்பவே கடினமான ஒரு படம் தான். ஆனால் பிரசன்னா அதை ரசிகர்களுக்கு எளிதாக கடத்தும் விதமாக அழகாக படத்தொகுப்பு செய்துள்ளார். விஎஃப்எக்ஸ் காட்சிகளும் இந்த படத்தில் மிகப்பெரிய அளவில் இருக்கும். இன்று நான் இந்த இடத்தில் ஒரு இயக்குநராக நிற்கிறேன் என்றால் அதற்கு என் மனைவியின் தொடர்ந்த 14 வருட முழு ஆதரவு தான் காரணம்” என்று கூறினார்.
திரையுலக ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் சைன்ஸ் ஃபிக்க்ஷன் ஆக்ஷன் படமான ரெட் ஃப்ளவர் வரும் ஏப்ரலில் திரைக்கு வர உள்ளது. ₹30 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தற்போது அமெரிக்காவில் இறுதிக்கட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகள் நடைபெற்று […]
சினிமாதிரையுலக ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் சைன்ஸ் ஃபிக்க்ஷன் ஆக்ஷன் படமான ரெட் ஃப்ளவர் வரும் ஏப்ரலில் திரைக்கு வர உள்ளது. ₹30 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தற்போது அமெரிக்காவில் இறுதிக்கட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது. ரெட் ஃப்ளவரின் விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குனர் என். பிரபாகரின் வழிகாட்டுதலின் கீழ், புகழ்பெற்ற ஹாலிவுட் VFX நிபுணர்களான டேவிட் டோஸெரோட்ஸ் மற்றும் டாம் கிளார்க் ஆகியோரால் VFX கண்காணிக்கப்படுகிறது.
ஸ்ரீ காளிகாம்பாள் பிச்சர்ஸ், தயாரிப்பாளர் கே. மாணிக்கம், உயர்தர சினிமாவுக்கான தனது மகத்தான பார்வை மற்றும் அர்ப்பணிப்பிற்கு பெயர் பெற்றவர், ரெட் ஃப்ளவர் பார்வையாளர்களுக்கு இதுவரை கண்டிராத சர்வதேச தொழில்நுட்பம் சார்ந்த சினிமா அனுபவத்தை, ஆழமான உணர்ச்சிகள் மற்றும் உயர் ஆக்ஷனுடன் கலந்திருக்கும், மேலும் உலக சினிமா ரசிகர்களுக்கு, இந்தப் படம் ஒரு உண்மையான பிரமாண்டமான உணர்ச்சிகரமான காட்சி விருந்தாக இருக்கும் என்று தயாரிப்பாளர் கே. மாணிக்கம் தெரிவித்தார்.

இப்படத்தில் விக்னேஷ், மனிஷா ஜஷ்னானி இருவரும் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ஒய்.ஜி. மகேந்திரன், லீலா சாம்சன், யோக் ஜேபி, நிழல்கள் ரவி, டி.எம். கார்த்திக், மோகன் ராம், சுரேஷ் மேனன் நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறுகையில், உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடும் வகையில், அனைத்து கலைஞர்களும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.
ரெட் ஃப்ளவர் படம், காட்சிக்கு காட்சி. உணர்ச்சி – உந்துதல் ஒளிப்பதிவு மற்றும் ஹைப்பர் – ரியலிஸ்டிக் கிராபிக்ஸ் பார்வையாளர்கள் மனதை கவரும் மெய்நிகர் படம். ஒளிப்பதிவாளர் தேவ சூர்யாவின் அற்புதமான ஒளிப்பதிவில், பிரான்சிஸ் சேவியரின் அட்டகாசமான கலர் கிரேடிங் ஆகியவற்றின் கீழ், ஒவ்வொரு பிரேமும் டிஜிட்டல் கதை பரிணாமத்திற்கு ஒரு சான்றாகும்,

சந்தோஷ் ராமின் ஆன்மாவைத் தூண்டும் இசை ஒவ்வொரு காட்சியையும் உயர்த்துகிறது, ஆர்கெஸ்ட்ரா பிரம்மாண்டத்தை ஃப்யூட்ரஸ்ட்டிக் ஒலிக் காட்சிகளுடன் கலக்கிறது. மணி அமுதவனின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் உணர்ச்சி ஆழத்தை பெருக்கி, ஒவ்வொரு தருணத்தையும் மறக்க முடியாததாக ஆக்குகிறது, ஸ்டன்ட் மாஸ்டர் இடி மின்னல் இளங்கோவின் விறுவிறுப்பான சண்டை காட்சிஅமைப்பு வியக்க வைக்க, அரவிந்தின் கூர்மையான எடிட்டிங், வேகத்தை இறுக்கமாக வைத்திருக்கிறது, ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் சுவாரஸ்யமான சினிமா பயணத்தை உறுதி செய்கிறது என்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன்.
ஃப்யூட்ரஸ்ட்டிக் கதைக்களம், அதிநவீன விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் அதிரடி ஆக்க்ஷன் காட்சிகளுடன், ரெட் ஃப்ளவர் திரைப்படம், இந்தியாவின் சினிமா வரலாற்றில், ஒரு புதிய அளவுகோலை அமைக்க தயாராகிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 2025 இல் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரெட் ஃபிளவர் திரைப்படம் வெளியாகவுள்ளது.
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி மார்ச் மாதம் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அறிமுக […]
சினிமாசிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி மார்ச் மாதம் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷி காந்த், கனிகா, ஆதிரா, காவ்யா அறிவுமணி, துளசி, ஐரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஏகன், விஜித், ஜீவா சுப்ரமணியம், திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மல்லிகார்ஜுன்- மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராம் – தினேஷ் – சுபேந்தர் – ஆகிய மூவர் கலை இயக்குநர்களாக பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் கவனித்திருக்கிறார். இந்த நிகழ்விற்கு பட குழுவினருடன் ‘பிக் பாஸ்’ முத்துக்குமரன், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் தயாரிப்பாளர் பாலா சீதாராமன் வரவேற்று பேசுகையில், திரையுலகில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடும்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு தொழில்நுட்ப கலைஞராக அனைத்து பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்று வாய்ப்பு தேடிய போதும் கலைத்தாய் எங்களுக்கு சரியான வாய்ப்பை வழங்கவில்லை. இந்த தருணத்தில் என்னுடைய நண்பர்களுடனும், என்னுடைய சகோதரர்களுடனும் இணைந்து வாய்ப்பை உருவாக்குவோம் என எண்ணியும், மற்றவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என தீர்மானித்தும் தயாரிப்பாளராக மாறினோம். எங்களுடைய ஜி எஸ் சினிமாஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், சிக்னேச்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து ‘நிறம் மாறும் உலகில்’ எனும் இப்படத்தை தயாரித்திருக்கிறோம். இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் பிரிட்டோவையும் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். நாங்கள் தொடர்ந்து புதிய இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளிக்க காத்திருக்கிறோம். ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படம் மார்ச் 7ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இசையமைப்பாளர் தேவ்பிரகாஷ் பேசுகையில், ‘இது என்னுடைய முதல் படம். இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஒவ்வொரு கலைஞர்களுக்கும் சிறப்பு என்னவென்றால் அவர்களுடைய முதல் திரைப்படம். என்னுடைய முதல் திரைப்படமாக ‘நிறம் மாறும் உலகில்’ அமைந்ததில் மிகவும் சந்தோஷம். இதில் நடித்திருக்கும் பாரதிராஜா, ரியோ, சாண்டி, நட்டி உள்ளிட்ட பலருக்கும் இசையமைப்பேன் என நான் கனவில் கூட நினைத்ததில்லை. இதனை சாத்தியப்படுத்திய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னிடம் இருக்கும் இசைத் திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்திய நடிகர் ரியோ ராஜுக்கு நன்றி. இயக்குநர் பிரிட்டோ என்னுடைய நண்பர். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது அவரிடம் சில இசையமைப்பாளர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் இசையமைத்தால் சிறப்பாக இருக்கும் என ஆலோசனை கூறிக் கொண்டே இருந்தேன். அனைத்தையும் கேட்டுவிட்டு, இறுதியில் ‘நீ தான் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர்’ என சொன்னார். அதனால் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நடிகை ஜீவா சுப்பிரமணியம் பேசுகையில், இது என்னுடைய 25 ஆவது படம். இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநர் பிரிட்டோவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் போது எனக்கும் முக்கியத்துவம் கொடுத்து பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு இருந்தார்கள். அது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. இந்த திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் எமக்கும் முக்கியத்துவம் கொடுத்ததற்கு தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.

இந்தத் திரைப்படம் சொல்ல முடியாத ஒரு ரணத்தை சொல்ல முயற்சிக்கிறது. அது என்ன? என்பதை மார்ச் 7 ஆம் தேதி அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இயக்குநர் பிரிட்டோ தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக உயர்வார். இப்படத்தில் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகை ஆதிரா பேசுகையில், இந்தப் படத்தில் நான் ரியோ ராஜின் தாயார் பரிமளம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் பிரிட்டோவின் அன்பிற்காக அனைத்து நட்சத்திரங்களும் இந்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பொறுமையுடன் அனைவரையும் மதித்து நடந்து கொண்டார். இதற்காகவே அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு ஆண் இருப்பார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார். இதைத்தான் இந்த திரைப்படம் வலியுறுத்துகிறது என்றார்.

நடிகை விஜி சந்திரசேகர் பேசுகையில், இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு என் மகள் மூலமாக கிடைத்தது. இந்தப் படத்தில் என் மகள் லவ்லின் நடித்திருக்கிறார். அவருடைய அம்மாவாக நடிக்கிறீர்களா? என கேட்டார்கள். இந்தப் படத்தில் நானும், என் மகளும் நடித்திருக்கிறோம். இந்த திரைப்படத்தில் ரசிகர்கள் எதிர்பாராத விசயங்கள் நிறைய இருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் மிகவும் நெருக்கமாக பார்த்த பல விசயங்கள் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கிறது என்றார்.
நடிகர் ஏகன் பேசுகையில், நண்பர்களாக இணைந்து திரைப்படத்தில் பணியாற்றுவது உண்டு. இந்த திரைப்படத்தில் அனைவரும் சகோதரர்களாக இணைந்து பணியாற்றிருக்கிறோம். சகோதரர்களாக இணைந்து பணியாற்றினால்.. அது அம்மாவை பற்றிய படமாக தான் இருக்கும். இது அம்மாவை பற்றிய படம். மார்ச் 7 ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் தனஞ்ஜெயன் பேசுகையில், இந்தப் படத்தின் முன்னோட்டம் மிகச் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக நட்டி நட்ராஜ் பின்னணி குரல் கம்பீரமாகவும், புது வடிவத்தையும் கொடுத்திருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் அவர் காந்த குரலில் அட்டகாசமாக கதையை சொல்லி இருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கு ஏதாவது ஒரு விசயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அது இதுவாக இருக்கும் என்று நம்புகிறேன். இதற்காக நட்டி நட்ராஜ்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் ரியோ ராஜுக்கும் நன்றி. சாண்டி மாஸ்டர் நடனத்தில் மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிப்பிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். ‘மதிமாறன்’ எனும் திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெறும் என வாழ்த்துகிறேன் என்றார்.
நடிகை காவ்யா அறிவுமணி பேசுகையில், இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான தருணம். ஆம்பூர் எனும் ஊரிலிருந்து நன்றாக படிப்பதற்காக ஒரு பெண் சென்னைக்கு வருகிறாள். சென்னையில் அரசு பேருந்தில் அந்தப் பெண் பயணித்துக் கொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த நகைக்கடை ஒன்றின் விளம்பரத்தை பார்க்கிறாள். அந்த விளம்பரத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருக்கிறார். அந்த நகைக்கடை விளம்பரத்தை பார்த்த பிறகு, நாமும் ஏன் இது போன்ற விளம்பரங்களில் தோன்றக் கூடாது? என அந்தப் பெண் நினைத்தாள். அதன் பிறகு அதற்காக அந்தப் பெண் தன்னை தயார்படுத்திக் கொண்டாள். அதன் பிறகு குறும்படங்கள், பைலட் படங்கள், விளம்பர படங்கள், தொலைக்காட்சி தொடர்கள்.. என நடித்து ரசிகர்களின் கவனத்தையும், அன்பையும் சம்பாதித்தாள். அந்தப் பெண் நான்தான்.
முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த தருணத்தில் இயக்குநர் பிரிட்டோவிடமிருந்து அழைப்பு வந்தது. இந்தப் படத்திற்கு தேர்வு செய்யும்போது ‘இந்தப் படத்தில் நீங்கள் கதாநாயகி இல்லை. ஆனால் இந்த படம் வெளியான பிறகு உங்களுடைய நடிப்புத் திறமை பேசப்படும் என இயக்குநர் வாக்குறுதி அளித்தார். அவருடைய வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் கடினமாக உழைத்தார் இயக்குநர் பிரிட்டோ. இந்தப் படம் வெளியான பிறகு அனைவரின் மனதிலும் என்னுடைய கதாபாத்திரம் இடம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார்.
‘பிக் பாஸ்’ முத்துக்குமரன் பேசுகையில், இசை வெளியீட்டு விழா என்று சொன்னார்கள். இங்கு இசை வெளியீட்டு மாநாடாக இருக்கிறது. இந்தப் படம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்கு ஏற்படுகிறது என்றால்.. இப்படத்தின் கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொள்ளும் நடிகர்களின் பட்டியலை பார்க்கும்போது ஏற்படுகிறது. பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், லிஸி ஆண்டனி.. என நீளும் பட்டியலே இதற்கு சாட்சி. ஒரு படத்தில் கதை நாயகர்கள் இருப்பார்கள் கதையின் நாயகர்களால் நிரம்பி வழிகிற திரைப்படமாக இது இருக்கிறது. இதனை உருவாக்கிய இயக்குநர் பிரிட்டோவின் ஆளுமையை நினைத்து பிரமிக்கிறேன். இந்த கதையில் எப்படி பிரபலங்கள் நிரம்பி வழிகிறார்களோ… அதே போல் இப்படம் வெளியான பிறகு திரையரங்கிலும் ரசிகர்கள் நிரம்பி வழிய வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார்.
தயாரிப்பாளர் கேத்ரின் ஷோபா பேசுகையில், நிறைய நட்சத்திரங்களை நடிக்க வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் பிரிட்டோவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த குழுவினர் வெற்றி பெறுவதற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இயக்குநர் பிரிட்டோ பேசுகையில், இது என்னுடைய முதல் திரைப்படம். நான் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதற்காக நிறைய கதைகளையும் எழுதினேன். இருந்தாலும் இந்த கதையை தான் முதலில் இயக்க வேண்டும் என்று தீர்மானித்தேன் காரணம் அம்மா. அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்வதற்கான எல்லா விசயங்களும் அடங்கிய படமாக இது உருவாகி இருக்கிறது. அம்மாவை பற்றி இதற்கு முன் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கலாம். ஆனால் இது தனித்துவமானது. இது எல்லோருக்கும் பிடிக்கும். மார்ச் ஏழாம் தேதி படம் வெளியாகும் போது திரையரங்குகளில் வருகை தந்து பார்த்த பிறகு அனைவருக்கும் புரியும்.
இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நான் இந்த திரைப்படத்திற்காக பிரபலமான நட்சத்திரங்கள் வேண்டும் என கேட்ட போது எந்தவித தயக்கமும் இல்லாமல் என் அனுபவத்தை பற்றி கூட கேள்வி கேட்காமல் ஒத்துழைப்பு வழங்கினார்கள். முதலில் தயங்கினாலும் பிறகு பணிகள் நடைபெற நடைபெற என் மீதான நம்பிக்கை அவர்களுக்கு அதிகரித்தது. எனக்கு நடிகர் ஜெய்வந்த் நண்பர். அவர் மூலமாக பாரதிராஜாவை சந்தித்தேன். அவரிடம் கதை சொன்ன போது முழுவதையும் கேட்டுவிட்டு மனதார பாராட்டினார். வயதான தம்பதிகளை கதையின் நாயகனாகவும், நாயகியாகவும் உருவாக்கி கதை எழுதி இருக்கிறாய். இதனாலேயே நீ வெற்றி பெறுவாய் என ஆசீர்வதித்தார். அந்தத் தருணத்தில் தான் இந்த படத்தின் வெற்றியை உணர்ந்தேன். அவரை இயக்கியதற்காகவும், அவரிடம் வாழ்த்து பெற்றதற்காகவும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நட்டி நட்ராஜ் இந்தப் படத்திற்காக பெரிய ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார். மும்பை பின்னணியாக கொண்ட பகுதியில் அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்தை பற்றி நான் இப்போது முழுமையாக விவரிக்க இயலாது. நான் கேட்டுக் கொண்டதற்காகவே முன்னோட்டத்திற்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார். அதுவும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரியோ என் நண்பன். அவருடன் இன்றும் இணைந்து பயணிக்கிறேன். இப்படத்தில் அவர் வழங்கிய ஒத்துழைப்பிற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
‘லியோ’விற்கு பிறகு சாண்டி மாஸ்டரை இந்த திரைப்படத்தில் மிகவும் வித்தியாசமாக காண்பீர்கள். உற்சாகமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கதை நரேட்டிவ் ஸ்டோரி. யோகி பாபுவில் தொடங்கி வித்தியாசமான உச்சகட்ட காட்சி வரை பயணிக்கும். இது அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாலும்.. இந்த கதை அம்மாவை பற்றிய கதை என்பதால் தான்.. அதன் மீதான ஈர்ப்பின் காரணமாகவே நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். அவர்கள் அனைவரும் அவர்களுடைய அம்மாவுடனான கனெக்சனை திரையில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மார்ச் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினம். இதற்குள் இந்த படத்தை ரசிகர்களிடம் சென்றடைய செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் மார்ச் 7ஆம் தேதியை தேர்வு செய்தோம். இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன் என்றார்.

நடிகர் சாண்டி மாஸ்டர் பேசுகையில், நண்பர் ரியோ தான் பிரிட்டோவிடம் கதை இருக்கிறது. அதை நீங்கள் கேட்டுப் பாருங்கள். பிடித்திருந்தால் நடிக்கலாம் என ஆலோசனை சொன்னார். பிரிட்டோ என்னிடம் கதை சொன்ன போது அவர் கதை சொன்ன விதமும், கதையும் நன்றாக இருந்தது. ஏனெனில் ‘லியோ’விற்கு பிறகு என்னை தொடர்பு கொள்ளும் இயக்குநர்கள் அனைவரும் சைக்கோ வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத்தான் அணுகினார்கள். அதனால் அதற்கு உறுதியாக மறுப்பு தெரிவித்து விட்டேன்.
இந்தப் படத்தின் கதையில் என் கதாபாத்திரம் ஜாலியானது. எனக்கு பாடல் இருக்கிறதா? எனக் கேட்டேன் இருக்கிறது என்று சொன்னார். இன்னும் உற்சாகமடைந்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப் படத்தில் நடிகை ஐரா கிருஷ்ணன் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது என்றார்.

நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், நானும் இப்படத்தின் இயக்குநரான பிரிட்டோவும் திரையுலகில் நடிப்பதற்கான வாய்ப்புகளை ஒன்றாகத்தான் தேடத் தொடங்கினோம். அதன் பிறகு திடீரென்று ஒரு நாள் நான் இயக்குநராக போகிறேன் என்று சொன்னார். நண்பரான எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு கதையை எழுதி சொன்ன பிறகு உண்மையிலேயே வியந்தேன். அவர் இயக்கும் முதல் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடித்த முதல் மியூசிக் ஆல்பத்தின் இயக்குநரும் அவர்தான். அறிமுக இசையமைப்பாளரும் , என்னுடைய நண்பருமான தேவ் பிரகாஷின் திறமை – இந்த படம் வெளியான பிறகு பெரிய அளவில் பேசப்படும் என நம்புகிறேன்.
ஒரு நல்ல திரைப்படத்திற்கான அடையாளமாக நான் எதனை பார்க்கிறேன் என்றால் திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்கான பங்களிப்பை முழுமையாக செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது தான். அதனால் இந்த படத்தில் படத்தொகுப்பாளரும் கடுமையாக உழைத்திருக்கிறார். நானும், சாண்டி மாஸ்டரும் எப்போதும் ஜாலியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருப்போம். அது இந்த படத்தில் சாத்தியமாகி இருக்கிறது. நாங்கள் இருவரும் இணைந்து இன்னும் பல படங்களில் பணியாற்றுவோம்.
இந்த திரைப்படத்தில் திறமையான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், அறிமுக இயக்குநர்கள் என்னிடம் கதையை சொல்வார்கள். கதையை கேட்டு விட்டு இரண்டு நாள் கழித்து சொல்கிறேன் என்று தான் பதிலளிப்பேன். ஆனால் இயக்குநர் பிரிட்டோ இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது… கதையை கேட்டவுடன் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்தப் படத்திற்காக நான் முதல் நாள் கலந்து கொண்ட போது, இயக்குநர் அதற்கு முன் படமாக்கிய காட்சிகளை என்னிடம் காண்பித்தார். அது அவர் இயக்கத்தில் உருவாகும் முதல் படம் போல் இல்லை. நேர்த்தியாக உருவாக்கி இருந்தார்.
இயக்குநர் பிரிட்டோ விரைவில் பான் இந்திய இயக்குநராக உயர்வார். அந்த அளவிற்கு சிறப்பாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பாரதிராஜாவும் வடிவுக்கரசியும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அவர்களுடைய காட்சியிலும் இயக்குநர் தன் தனித்திறமையை காண்பித்து இருக்கிறார். அதை அனைவரும் ரசிப்பார்கள். நான் மும்பையில் சுற்றித் திரியாத தெருக்களே இல்லை. அந்த அளவிற்கு மும்பை எனக்கு பரிச்சயம். ஆனால் இந்தப் படத்தில் நான் மும்பை போல் வடிவமைக்கப்பட்ட அரங்கத்திற்கு சென்றவுடன் வியந்து போனேன். ஒவ்வொரு சிறிய விசயத்தையும் கலை இயக்குநர் நேர்த்தியாக உருவாக்கி இருந்தார். அவருக்கும் இந்த தருணத்தில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தில் என்னுடன் நடித்த நடிகர்களுக்கும், இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மார்ச் 7ஆம் தேதி ‘ நிறம் மாறும் உலகில்’ வெளியாகிறது. அனைவரும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
7G ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் 7G சிவா தயாரிப்பில், ஈரம் படத்தின் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் “சப்தம்”. காமெடி, ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக, ஒலியை மையமாக வைத்து, இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் […]
சினிமா7G ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் 7G சிவா தயாரிப்பில், ஈரம் படத்தின் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் “சப்தம்”. காமெடி, ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக, ஒலியை மையமாக வைத்து, இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வினில் ஓளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் பேசியதாவது,
இயக்குனர் அறிவழகனின் ஈரம் திரைப்படத்தில் நான் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன். அதன் பிறகு தான் நான் ஒளிப்பதிவாளராக பணிபுரிய ஆரம்பித்தேன். எனது முதல் படமான “மகாமுனி” திரைப்படத்தை பார்த்து, அறிவழகன் என்னை இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக மாற்றினார். அதற்கு அவருக்கு நன்றிகள். இந்த திரைப்படம் எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிக முக்கியமான படம். இது போல ஒரு படம் மீண்டும் அமைவது கடினம். இந்த படத்திற்காக குழுவாக இணைந்து கடினமான உழைப்பை வழங்கியுள்ளோம். இந்த படத்தில் ஹீரோ முதல், படக்குழுவினர் அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்கினர். இந்த குழுவோடு பயணித்தது மிக்க மகிழ்ச்சி.

எடிட்டர் சாபு ஜோசப் பேசியதாவது.. இந்த மேடையில் நான் நிற்க காரணம், 15 வருடம் முன் ஈரம் படத்தின் டிரெய்லரை எடிட் செய்ய, இயக்குநர் அறிவழகன் தந்த வாய்ப்பு தான். அதன் பிறகு வல்லினம் அதிலிருந்து, வாழ்க்கை இங்கு வரை என்னைக் கொண்டு வந்துள்ளது. இப்போது சப்தம், இப்படத்தைப் பொறுத்தவரை ஹோம்கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடுவது போலத் தான். கிரியேட்டிவாக வேலை பார்க்க முழு சுதந்திரம் இருந்தது. சின்ன சின்ன விசயங்கள் இதில் நிறைய சேர்த்திருக்கிறார் அறிவழகன். சவுண்டுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்துள்ளோம், கண்டிப்பாக ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஹீரோ ஆதி எனக்கு நண்பர், அவரிடம் என்ன வேண்டுமானாலும் பேச முடியும், இப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகக் கடினமாக உழைத்துள்ளனர். இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் என்றார்.

ஆடியோகிராஃபர் உதயகுமார் பேசியதாவது.. அறிவழகனின் ஈரம் தவிர அனைத்து படத்திலும் வேலை பார்த்துள்ளேன், ஈரம் வேலை பார்க்க வில்லை என்ற வருத்தம் இருந்தது, அது இந்தப் படத்தில் நீங்கி விட்டது. பொதுவாக இயக்குநர்கள் கதை சொல்லும் போது, சவுண்டுக்கு என்றே இரண்டு காட்சிகள் வைத்திருக்கிறேன் என்று சொல்வார்கள், ஆனால் இந்தப்படம் முழுவதுமே சவுண்டை வைத்துத் தான். எங்களுக்கு இந்த மாதிரி படம் கிடைப்பது அரிது. எனக்கு இப்படம் கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. என் குருநாதர் தீபன் சக்கரவர்த்தி, ஊமை விழிகள் படங்கள் எல்லாம் செய்தவர், இந்தப்படம் ஊமை விழிகள் படம் போன்ற உணர்வைத் தரும். இந்த டிரெண்டில் அந்தப்படம் வந்தால் எப்படி இருக்குமோ? அது மாதிரி இருக்கும். தமிழில் ஒரு சில இயக்குநர்கள் தான் டெக்னிகலாக படம் செய்வார்கள், அதில் அறிவழகன் மிக முக்கியமானவர். தொழில் நுட்ப கலைஞர்கள் சவுண்டுக்கு முக்கியத்துவம் தந்து, பெரும் ஒத்துழைப்பு தந்தனர். தமனின் இசை மிகப்பெரிய பலமாக இருக்கும். ஆதி மிக அற்புதமாக நடித்துள்ளனர். இந்தப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்றார்.

இயக்குனர் அறிவழகன் பேசியதாவது.. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, என்னுடைய படம் தியேட்டருக்கு வருகிறது. ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து புதுமை செய்தது போல், இப்படத்தில் சவுண்ட் வைத்துச் செய்யலாம் என்ற போது, நிறைய சவால்கள் இருந்தது. ஈரம் படம் இப்போது வரை டெக்னிகலாக பாராட்டப்படும் படம். தண்ணீரில் ஹாரர் எனும் போது, அந்த ஆவியின் உருவத்தைக் காட்டுவது, மிக எளிதாக இருந்தது. ஆனால் சவுண்டை வைத்து பேயை காட்டுவது எப்படி என, கதை எழுதும் போதே சவாலாக இருந்தது. சவுண்டில் தியேட்டரில் டால்ஃபி சவுண்ட் புரமோ வருமல்லவா, அந்த குவாலிட்டியை திரையில் கொண்டு வர திட்டமிட்டோம். 7G ஃபிலிம்ஸ் நிறுவனம் 7G சிவா இப்படத்திற்கு மிக உறுதுணையாக இருந்தார், இந்தப்படத்தின் பட்ஜெட் பெரிதான போது, இந்தப்படத்தின் டெக்னிகல்களை புரிந்து கொண்டு, இப்படத்திற்கு முழு ஆதரவாக நின்றார். அவர்கள் ஏற்கனவே டிஸ்டிரிபூசனில் இருந்ததால் படத்தினை பற்றிய முழு புரிதல் அவரிடம் இருந்தது. படம் கேட்கும் அனைத்து செலவுகளையும் செய்யுங்கள் என்றார். அவரால் தான் இந்தப்படம் இந்த அளவு தரத்துடன் வந்துள்ளது அவருக்கு என் நன்றி. மேலும் என் தொழில் நுட்ப கலைஞர்களும் மிக உதவியாக இருந்தார்கள். ஆடியோகிராஃபர் உதயகுமார் என்னுடன் பல காலமாக வேலை பார்த்து வருகிறார். எடிட்டர் சாபு, ஒளிப்பதிவாளர் அருண், இசையமைப்பாளர் தமன் எல்லோரும் இணைந்து இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். மற்ற ஹாரர் படத்திலிருந்து இந்தப்படத்தில் என்ன வித்தியாசம்? ஹாரரில் பல ஜானர்கள் இருக்கிறது எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஈரம் படம் உங்களை ஒரு அனுபவத்திற்குள் கொண்டு சென்றது போல, இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஒளிப்பதிவாளர் இந்தப்படத்தில் புளூ டோன் வைக்கலாம் என்றார், அது மிக வித்தியாசமாக இருக்கும். சாபு ஜோசப் அவரும் இப்படத்தில் நிறைய புதுமைகள் செய்துள்ளார். படத்தில் என் வியூ தவிர அவரோட வியூ எப்படி இருக்கிறது எனப் பார்ப்பேன், அதில் அவர் கடினமாக உழைத்துள்ளார். அவருக்கு நன்றி. விவேகா என் எல்லாப்படங்களிலும் வேலை பார்த்துள்ளார், இந்தப்படத்திலும் பாடல்கள் நன்றாக இருக்கும். ஆர்ட் டைரக்டர் மனோஜ் மிக வித்தியாசமான செட்டை அமைத்துத் தந்தார். சவுண்ட் உதயகுமார், பல விஷயங்கள் புதுமை செய்துள்ளார். அவர் நிறைய பெரிய படங்கள் செய்து வருகிறார். இந்தப்படத்தில் எங்கே சவுண்ட் வேண்டும், எங்கு வேண்டாம் என நிறைய விவாதித்தோம். அதை மிகக் கச்சிதமாக செய்துள்ளார். ரொம்ப நாட்களாக ஆதியும் நானும் வேலை செய்ய, பேசி வந்தோம், இந்தப்படத்தை கதை சொன்னவுடன் செய்யலாம் என்றார், அவர் தயாரிப்பில் ஃபர்ஸ்ட் காப்பியில் இப்படத்தைச் செய்துள்ளேன், தமனை நிறையத் தொந்தரவு செய்துள்ளேன், ஆனால் அதை எல்லாம் கடந்து, அவர் பின்னணி இசை வரும் போது பிரமிப்பாக இருந்தது. நாம் நினைத்த கதையை ஒருவர் நம்பி உள்ளே வர வேண்டும், அது தான் எனக்கு வசதி, ஆதி என்னை நம்பி உள்ளே வந்தார். இந்தப்படம் மிகவும் வித்தியாசமான ஹாரர் அனுபவமாக இருக்கும். என் நேர்மை தான் என்னை இங்கு கொண்டு வந்துள்ளது என நம்புகிறேன், இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் என்றார்.

நடிகர் ஆதி பேசியதாவது.. இந்த மேடை மிக முக்கியமானது. “சப்தம்” என் நண்பர்களிடம் இந்தப்படம் பற்றி சொல்லும் போது ஏன் ஹாரர் எனக் கேட்பார்கள், ஹாரர் என்றாலே கொஞ்சம் கீழாக பார்க்கும் பார்வை இருக்கிறது, அப்போ ஈரமும் ஹாரர் தானே என்பேன், ஈரம் சூப்பராக இருக்கும் என்று பாராட்டுவார்கள். அது ஹாரரில் வித்தியாசமாக இருக்கும் என்று பாராட்டுவார்கள், அது தான் அறிவழகன், அவர் இயக்கத்தில் ஈரம் மாதிரி இன்னொரு படம் கிடைக்குமா? என நினைத்துள்ளேன், அதை மீண்டும் அறிவழகன் எனக்குத் தந்துள்ளார். இந்தப்படத்தில் பாராநார்மல் இன்வஸ்டிகேட்டராக நடித்துள்ளேன், இது முழுக்க முழுக்க இந்த டீமின் படம், அவர்கள் உழைப்பு தான் முழுப்படமும். ஹாலிவுட் படம் மாதிரி என அடிக்கடி சொல்வோம் ஆனால் இங்கு நம்ம சினிமாவை ஹாலிவுட்டை தாண்டிய தரத்தில் உருவாக்கியிருக்கும் படம் தான் சப்தம் என்றார்.
இப்படத்தில் ஆதி நாயகனாக நடிக்க லக்ஷ்மிமேனன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி ஆகியோர் மிக முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஆர் ராம் எண்டர்டெயினர்ஸ் நிறுவனம் சார்பில், பிரகாஷ் எஸ்.வி தயாரிப்பில், சூரியன் ஜீ இயக்கத்தில் உருவாகியுள்ள “DEXTER” படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, நடிகர் ரோபோ ஷங்கர், நடிகை […]
சினிமாஆர் ராம் எண்டர்டெயினர்ஸ் நிறுவனம் சார்பில், பிரகாஷ் எஸ்.வி தயாரிப்பில், சூரியன் ஜீ இயக்கத்தில் உருவாகியுள்ள “DEXTER” படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, நடிகர் ரோபோ ஷங்கர், நடிகை வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசுகையில், கடந்த காலங்களில் 175 நாட்கள் தியேட்டரில் படங்கள் ஓடினால் தான் படக்குழுவினருக்கு கேடயம் வழங்கி படத்தின் வெற்றியை கொண்டாடினார்கள். ஆனால் அந்த நிலை, தற்போது கிடையாது. இப்போதெல்லாம் படம் வெளியாகி இரண்டாவது நாளே, படத்தின் வெற்றி விழாவை கொண்டாடுகின்றனர். அப்போதுதான் ஓடிடியில் படத்திற்கு நல்ல விலை கிடைக்கும். தற்போது படங்களை தியேட்டரில் வெளியிடுவதற்கே தயாரிப்பாளர்கள் போராட வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்படுகின்றனர். சினிமாவை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் சிறிய படங்கள் கொண்டாடப்படும், ஆனால் சிலரின் ஆக்கிரமிப்பால் சிறு பட தயாரிப்பாளர்கள் தியேட்டர் கிடைக்காமல் திண்டாடுகின்றனர் என வேதனையிடன் தனது ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார். பின்னர் படக்குழுவினர் அனைவரையும் வாழ்த்தி விடைபெற்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், DEXTER படத்தின் டிரெய்லர் சிறப்பாக இருந்ததாகவும், அதில் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளரின் பணிகளை பாராட்டியதோடு, பாடலாசிரியர் மோகன்ராஜின் கவிதை வரிகளை புகழ்ந்து பேசினார். நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்கு மொழிகள் தேவையில்லை, விழிகள் இருந்தால் போதுமானது என, தமிழகத்தில் தற்போது நிலவும் மும்மொழி பிரச்சினையை சூசகமாக சுட்டிக்காட்டி, படக்குழுவினரை வாழ்த்தி விடைபெற்றார்.

பின்னர் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில், படக்குழுவினருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள், படக்குழுவினருடன் படத்தின் இசைத்தட்டை வெளியிட்டு சிறப்பித்தனர்.