அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி […]
சினிமா
தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டீசல்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக […]
சினிமா
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக […]
சினிமா
எஸ்.பி சுராஜ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுமதி. உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், கன்னட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, இராஜ் பி ஷெட்டி இணைந்து நடிக்க, பிரபல இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா […]
சினிமாஎஸ்.பி சுராஜ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுமதி. உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், கன்னட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, இராஜ் பி ஷெட்டி இணைந்து நடிக்க, பிரபல இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், மிரட்டலான ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக உருவாகியுள்ள கன்னட திரைப்படம் 45.
கன்னட திரையுலகின் மூன்று முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து மிரட்ட, மிகப்பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது.
இப்படத்தின் தமிழ் பதிப்பின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் கலந்துகொள்ள, கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் இயக்குநர் அர்ஜுன் ஜன்யா பேசியதாவது… சென்னைக்கு நான் ஃபேன் பாய். 25 வருடமாக இசையமைப்பாளராக வேலை பார்க்கிறேன், சென்னை வந்தாலே எனக்கு இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் நினைப்பு தான் ஞாபகம் வரும். அவர்களின் தீவிர ரசிகன் நான். என் படம் தமிழில் வெளியாவது மகிழ்ச்சி. இந்தக்கதையை ரெடி செய்தவுடன் சிவாண்ணாவிடம் சொன்னேன், நீயே இந்தப் படத்தை பண்ணு என அவர் தான் உற்சாகப்படுத்தினார். இந்தத் திரைப்படம் பொறுத்தவரை, படம் எடுக்கும் முன், ப்ரீ விஷுவலாக ரெடி செய்யலாம் என நினைத்தேன். ஸ்டோரி போர்ட் மாதிரி, கார்டூனில், முழுதாக 2 1/2 மணி நேரம் ரெடி செய்து, அதை எடிட் செய்து, சிஜி செய்து, மியூசிக் போட்டு, டிடிஎஸ் செய்து காட்டினேன். சிவாண்ணா சந்தோசப்பட்டார். இதில் என்ன வசதி என்றால், படமெடுக்கும் போது வேஸ்ட்டாக ஒரு ஃப்ரேம் கூட எடுக்க தேவையில்லை, எல்லாமே தயாராக இருந்தது. எடிட்டிங் கூட வேலை இல்லை. இதை இந்திய திரைத்துறையில் முதல்முறையாக நான் செய்துள்ளேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. உபேந்திரா மிக உற்சாகமாக நடித்துத் தந்தார். ராஜ் பி ஷெட்டி அருமையான ரோல் செய்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. நான் இசையமைப்பாளர் தான் ஆனால் இந்தப்படத்தில் பாடல்கள் இல்லை. இப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றார்.

நடிகர் டாக்டர் சிவராஜ்குமார் பேசியதாவது… சென்னை எப்போது வந்தாலும் எனக்குள் மகிழ்ச்சியாக இருக்கும். நான் பிறந்து, படிச்சு, வளர்ந்தது இங்கு தான். எனக்கு மலரும் நினைவுகள் இங்கு அதிகம் இருக்கிறது. நான் சென்னையில் இருந்த போது தான், எனக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது. நான் ஹீரோவாக என்னை நினைத்ததில்லை, ஹீரோ என்றால் கமல்ஹாசன் மாதிரி அமிதாப் மாதிரி இருக்க வேண்டும் என நினைத்தேன். அவர்கள் தான் என் ஃபேவரைட். நானும் சினிமாவுக்கு வந்தேன், நிறைய தோல்வி, நிறைய வெற்றி பார்த்துள்ளேன். எதையும் தலைக்குள் ஏற்றுக்கொள்ள மாட்டேன். வாழ்க்கையில் பல மரணங்கள், வீழ்ச்சிகள் தொடர்ந்து பார்த்துள்ளேன். எனக்கு தலையில் சர்ஜரி, கேன்சர் என அனைத்தையும் கடந்து வந்தேன், இந்தியா முழுக்க பல ரசிகர்கள் எனக்காக வேண்டினார்கள். இந்த இடத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. இந்தத் திரைப்படம், எனக்கு கதை சொன்னபோதே பிடித்திருந்தது. மிக அருமையாக இப்படத்தை இயக்கியுள்ளார் அர்ஜுன். நாங்கள் மூன்று பேரும் மிக அருமையாக நடித்துள்ளோம். கண்டிப்பாக ரசிகர்களுக்கு இது புதுமையான அனுபவமாக இருக்கும். ஒரு முழுமையான எண்டர்டெயினிங் படமாக இது இருக்கும் என்றார்.

ரியல் ஸ்டார் உபேந்திரா பேசியதாவது… இயக்குநர் அர்ஜுன் மிகப்பெரிய இசையமைப்பாளர், இப்படத்திற்காக மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். அவர் கதை சொன்ன போதே, அவ்வளவு பிடித்திருந்தது. நீங்கள் கண்டிப்பாக இதை இயக்க வேண்டும் என ஊக்கப்படுத்தினேன். தயாரிப்பாளர் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ராஜ் பி ஷெட்டி அருமையாக நடித்துள்ளார். டார்லிங் சிவாண்ணாவுடன், நானும் ஒரு கதாப்பாத்திரம் நடித்துள்ளேன். கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் என்றார்.

தயாரிப்பாளர் எம் ரமேஷ் ரெட்டி பேசியதாவது.., இந்தத் திரைப்படம் முழுக்க இயக்குநர் அர்ஜுன் தான் சூத்திரதாரி. அவர் இந்தப்படத்திற்காக ஒரு வருடம் உழைத்தார். இது பான் இந்தியா படமில்லை. இது இந்தியப்படம். இந்தியாவில் அனைவரும் பார்க்க வேண்டிய படம். பெரிய பட்ஜெட்டில், சிஜி எல்லாம் செய்து, மிகப்பெரிய உழைப்பைத் தந்து உருவாக்கியுள்ளோம். இது டப் படம் இல்லை, இந்தியப்படம். சிவாண்ணா, உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர். படம் அட்டகாசமாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும், அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் என்றார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிக் கொண்டாட்டமாக மாறியுள்ளது. இந்தப் படத்தின் […]
சினிமாநடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிக் கொண்டாட்டமாக மாறியுள்ளது. இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது.
நிகழ்வில் கலந்து கொண்ட படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி பேசியதாவது, “’மார்க் ஆண்டனி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வாய்ப்பு கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நன்றி. இந்தப் படம் ப்ளே கிரவுண்ட் போல. எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற சுதந்திரத்தை இயக்குநர் கொடுத்தார். அஜித் படத்தில் பணிபுரிந்தது எனக்கு பாக்கியம். என்னுடைய அணி மற்றும் படக்குழுவினருக்கு நன்றி என்றார்.
டான்ஸ் மாஸ்டர் கல்யாண் பேசுகையில், குட் பேட் அக்லி’ படத்தின் அனுபவம் செம மாஸ். ஒவ்வொரு ஃபிரேமையும் ஆதிக் செதுக்கி இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் வந்தது மிகப்பெரிய வரம். இந்த டீமுக்கு நான் புதிது. ஆனால், செம ஜாலியாக ஷூட்டிங் இருந்தது. ஜிவி பிரகாஷ் படத்தின் பாடல்களில் கலக்கி விட்டார். பாடல்களுக்கு விஜய் வேலுக்குட்டி செம எடிட்டிங் செய்திருந்தார். அஜித் என்றாலே வேற லெவல் எனர்ஜிதான் என்றார்.
ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் பேசுகையில், ஆதிக் அப்பா ரவிச்சந்திரனுக்கு முதல் நன்றி. அவர்தான் என்னை ‘மார்க் ஆண்டனி’ படத்திலும் சஜெக்ட் செய்தார். எல்லாருமே இந்தப் படத்தில் ஃபேன் பாயாக மாறிதான் வேலைப் பார்த்தோம். இதுபோல படம் எடுக்க மைத்ரியால் மட்டும்தான் முடியும். என்னுடைய டீமுக்கு நன்றி. அனுவின் காஸ்ட்யூம் சூப்பராக இருந்தது. என்னுடைய மனைவி மற்றும் குடும்பத்திற்கு நன்றி என்றார்.
ஃபைட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் பேசுகையில், இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக வாய்ப்புக் கொடுத்த அஜித்துக்கு நன்றி. ஆதிக்குடன் ‘மார்க் ஆண்டனி’படத்தில் வேலை பார்த்தேன். படம் வெளிவருவதற்கு முன்பு ஹால்ஸ், விக்ஸ் எடுத்துக் கொண்டு வாங்க என நான் சொன்னது சர்ச்சை ஆனது. ஆனால், படம் வேலை பார்க்கும்போதே அது ஜெயித்து விடுமா என்பது எங்களுக்குத் தெரிந்து விடும். நெகட்டிவ் எல்லாவற்றையும் தகர்த்து கொடுத்து இருக்கிறது. ஃபைட்டில் வரும் பாடல் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. அர்ஜூன் தாஸ், பிரியா எல்லாருக்கும் நன்றி. படத்தை வெற்றிப் படமாக்கிய அஜித் ரசிகர்களுக்கும் நன்றி என்றார்.

நடிகர் கே.ஜி.எஃப். அவினாஷ், ஏகே ஒரு ரெட் டிராகன். என் இயக்குநர் ஆதிக்கு நன்றி. முதலில் அவரிடம் இருந்து ஃபோன் கால் வந்தபோது நான் நம்பவே இல்லை. என்னை சிறப்பாக காட்டியதற்கு நன்றி. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. அர்ஜூன் தாஸின் குரல் எனக்கு பிடிக்கும். ரசிகர்களுக்கு நன்றி.
நடிகர் ரகு ராம் பேசுகையில், படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தப் படம் பெரிய கொண்டாட்டமாக அமைந்து எனக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்தது. அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு நன்றி என்றார்.
நடிகர் கார்த்திகேய தேவ் பேசுகையில், என் இயக்குநர் ஆதிக்கிற்கு நன்றி. அஜித் மிகவும் இனிமையானவர். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அஜித்- த்ரிஷாவுடன் நடித்தது எனக்கு பெரிய சாதனை. அர்ஜூன், ப்ரியா அனைவருக்கும் நன்றி. படம் திரையரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றார்.
அசார் மாஸ்டர், இதெல்லாம் எனக்கு கிடைக்குமா என்று கனவாகவே இருக்கிறது. கடவுளுக்கும் அஜித்துக்கும் ஆதிக்கிற்கும் நன்றி. ஒட்டுமொத்த பட குழுவுக்கும் நன்றி. அர்ஜுன் ஃபயராக படத்தில் ஆடியிருப்பார் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் நிஜமாகவே ஃபயரில் தான் டான்ஸ் செய்தார். இரண்டு லெஜெண்ட் பாடல்களை ரீகிரியேட் செய்திருக்கிறோம். அதற்கு நியாயம் சேர்த்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன் என்றார்.

நடிகர் அர்ஜூன் தாஸ் பேசுகையில், எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. அனைவருக்கும் நன்றி. சுரேஷ் சந்திராவுக்கு நன்றி. கடந்த 2013ல் இருந்து அஜித் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். அஜித் படத்தில் வேலை செய்வது எனக்கு பெரிய ரெஸ்பான்ஸ்பிலிட்டி. என்னை புஷ் செய்து வேலை வாங்கிய அசார் மாஸ்டருக்கு நன்றி. கல்யாண மாஸ்டர், ஜிவிக்கும் நன்றி. ப்ரியா, கார்த்திகேய தேவ் என படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் பிரசன்னா பேசுகையில், அஜித்துடன் வேலை செய்ய வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அவரைப் பார்த்துதான் நான் சினிமாவில் நடிக்க வந்தேன். ‘மங்காத்தா’ பட சமயத்தில் வெங்கட்பிரபு என்னை அழைத்திருந்தார். ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போனது. அஜித்தின் ஒவ்வொரு படம் அறிவிக்கும்போது வாய்ப்பு அருகில் வந்து நடக்காமல் போகும். முதல் நாள் இந்தப் படத்தின் செட்டில் அவரை சந்திக்கும் போது, என்னை முந்திக் கொண்டு, பல வருடம் தள்ளிப் போனது இப்போது நடந்திருக்கிறது எனச் சொல்லி என்னைக் கட்டிப் பிடித்தார். அந்த ஒரு விஷயம் எனக்கு போதும். என் கனவை நிறைவேற்றியதற்கு ஆதிக்கிற்கு நன்றி. எனக்கு கடைசி வரையும் ஆதிக்கின் ஃபிலிம் மேக்கிங்கை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடைசி வரை புரியாமலேயே நடித்த படம் இது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தை ஹிட்டாக்கிய அனைவருக்கும் நன்றி. நான் தான் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் என்ற இறுமாப்பில் சென்றேன். ஆனால், அஜித்துக்கு ஒவ்வொரு ஃபிரேமும் ஆதிக் பார்த்து பார்த்து வைத்து என் எண்ணத்தை தவிடு பொடியாக்கி விட்டார். மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கும் நன்றி என்றார்.

நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் பேசுகையில், என்னுடைய இரண்டாவது தமிழ் படத்துக்கே இப்படியான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் ’AK64’ என ஒரு ஹிண்ட் கொடுத்திருக்கீங்க ஆதிக். இந்த இடத்தில ஓப்பனாகவே வாய்ப்பு கேட்கிறேன். என்னையும் அந்த படத்துல நடிக்க வைக்க ரெக்கமன்ட் பண்ணுங்க. அஜித்தின் பிரியாணி மற்றும் ரைட் இப்போ என்னுடைய பக்கெட் லிஸ்ட்ல இருக்கு. அவர் இப்போது ரேஸ்ல இருக்காரு. அவருக்காக நாங்க இங்க கடவுளை வேண்டிக்கிறோம். OG சிம்ரன் மேமுக்கு நன்றி சொல்லிக்கிறேன். தமிழ் மக்களுக்கு ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன் என்றார்.
நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி பேசுகையில், நெல்சனுக்கு முதல் நன்றி. 28 வருடங்களுக்கு முன்பு அஜித்தின் ‘அவள் வருவாளா…’ படத்தில் க்ரூப் டான்ஸராக ஆடியிருக்கிறேன். இப்போது இந்த வாய்ப்பு கொடுத்த ஆதிக் மற்றும் அவரின் அப்பா ரவிக்கு நன்றி. இது எனக்கு மிகப்பெரிய கனவு. படத்தில் இரண்டு சீன் தான் வந்தாலும் மிகப்பெரிய ரெஸ்பான்ஸ். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசுகையில், 18 வருடங்கள் கழித்து அஜித் சாருடைய படத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அஜித் சாருக்கு நன்றி. இப்படி ஒரு பிளாக்பஸ்டர் படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக உள்ளது. ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’, ‘மார்க் ஆண்டனி’ இப்போது ‘குட் பேட் அக்லி’ என ஆதிக்குடன் மூன்று ஹிட் படங்கள் கொடுத்திருப்பதில் சந்தோஷம். தயாரிப்பாளர்கள் ரவி, நவீனுக்கும் நன்றி. தமிழில் மிகப்பெரிய படம் மூலம் எண்ட்ரி கொடுத்திருக்கிறீர்கள். என்னுடைய டீமுக்கும் நன்றி. டெக்னிக்கல் டீமும் அருமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்தியா மட்டுமில்லாமல் ஸ்ரீலங்கா, மலேசியாவிலும் படம் நல்ல வசூல் பெற்று வருகிறது. ரசிகர்களுக்கும் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் நவீன் பேசுகையில், படத்திற்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. நடிகர் அஜித் அவர்களுக்கும் இயக்குநர் ஆதிக்கிற்கும் நன்றி என்றார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசுகையில், ஏழாவது படிக்கும் ஒரு பையன், ஒரு நடிகரைப் பார்த்து உத்வேகம் அடைந்து, இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்டு இன்று இந்த இடத்தில் நிற்கிறான். நான் அஜித் ரசிகனாக மாறாமல் இருந்திருந்தால் நான் என்ன ஆகியிருப்பேன் என்று தெரியவில்லை. சினிமாவுக்கு வராமல் வேறு ஏதாவது வேலை செய்து கொண்டு இருந்திருப்பேன். அஜித்தின் ரசிகராக இருந்தால், என்ன நடக்கும் என்பது இந்த தருணத்தில் எனக்கு நிதர்சனம் ஆகியுள்ளது.
நான் எப்போதும் அஜித்துக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். நாங்கள் சந்தித்துக் கொள்ளும் போது நான் சரியான சினிமா வாழ்க்கை இல்லாத இயக்குநர். பெரிய ஹிட் இல்லாத இயக்குநர். எனது முதல் படம் மட்டுமே ஹிட் கொடுத்தது. ஆனால், அஜித்தைப் பொறுத்தவரையில் எப்போதும் யாரிடமும் வெற்றி தோல்வியை பார்த்தது கிடையாது. ஒரு சக மனிதராக தான் பார்ப்பார். என்னிடம் இருந்து அவர் என்ன கவனித்தார் என்பது எனக்கு இப்போதுவரை கேள்வியாக உள்ளது.

படப்பிடிப்புத் தளத்தில் கூட அஜித்திடம் கேட்டேன், ‘ எதை வைத்து சார் நீங்கள் போனி கபூரிடம் நான் பெரிய இயக்குநராக வருவேன்’ எனக் கூறினீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் எதுவும் கூறாமல், சிரித்துக் கொண்டு போய்விட்டார். இந்த தருணத்தில் நான் சுரேஷ் சந்திராவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். அஜித் என்னை நம்பிய அளவுக்கு நீங்களும் என்னை நம்பினீர்கள். இங்கு ஒளிபரப்பப்பட்ட வீடியோக்களைப் பார்க்கும்போது மிகவும் எமோஷ்னலாகிவிட்டேன். அந்த கூட்டத்திற்குள் இருந்தவன்தான் நான்.
அங்கு இருந்த என்னை இங்கு உங்கள் முன் நிறுத்தி அழகு பார்க்க வைத்த அஜித்துக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அஜித் தன்னை எப்போதும் பெரிய ஸ்டாராக கருதியது கிடையாது. அவர் தன்னை ஒரு நடிகராக மட்டுமே நினைக்கிறார். இந்த படம் இந்த அளவிற்கு எனர்ஜியாக இருக்க முக்கிய காரணம், அவரது மொத்த எனர்ஜியும் குட் பேட் அக்லி தான். படத்தின் டைட்டிலை முடிவு செய்தது அஜித் தான். அதில் இருந்து, இரவோடு இரவாக டப்பிங் முடித்துவிட்டு அவர் ரேஸ்க்கு கிளம்பும் வரை தன்னால் முடிந்த அனைத்தையும் இந்த படத்திற்காக கொடுத்துள்ளார். ஐ லவ் யூ அஜித்.
நான் எனது மனைவியிடம் ஐ லவ் யூ சொன்னதை விடவும் உங்களுக்குத்தான் அதிகம் ஐ லவ் யூ சொல்லி உள்ளேன். அதுதான் உண்மையும் கூட. எனது மனைவியை விட உங்களை தான் அதிகம் நேசிக்கிறேன். எனது பெற்றோர்களுக்கு அடுத்து எனது வாழ்க்கையில் இருப்பது நீங்கள் தான் என எமோஷனலாக பேசியுள்ளார்.
தமிழ்நாடு பட்டியலின/பழங்குடியினர் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோவை மாவட்டம் சார்பில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அம்பேத்கரின் உருவபடத்திற்கு, தமிழ்நாடு பட்டியலின/பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினர் செல்வக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். […]
மாவட்ட செய்திகள்தமிழ்நாடு பட்டியலின/பழங்குடியினர் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோவை மாவட்டம் சார்பில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அம்பேத்கரின் உருவபடத்திற்கு, தமிழ்நாடு பட்டியலின/பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினர் செல்வக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில் ஆணையத்தின் உறுப்பினர் எம். பொன்தோஸ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், வேளாண் துறை, நகராட்சி நிர்வாகம், உணவு பொருள் வழங்கல் மற்றும் கூட்டுறவு துறை, தொலைதொடர்பு மற்றும் பொது நூலகத்துறையினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
– ரமேஷ்
தமிழக வெற்றி கழகம் வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என ஆலோசனைகள் செய்து வருகின்றனராம். திமுக, அதிமுக கூட்டணிகள் கிட்டத்தட்ட உறுதியான நிலையில், தனித்துப் போட்டியிட தமிழக […]
அரசியல்தமிழக வெற்றி கழகம் வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என ஆலோசனைகள் செய்து வருகின்றனராம். திமுக, அதிமுக கூட்டணிகள் கிட்டத்தட்ட உறுதியான நிலையில், தனித்துப் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆரோக்கியசாமி ஆலோசனைகளை வழங்கி வழங்கியிருக்கிறார்.

இதை கேட்ட விஜய் 2026 ஆம் ஆண்டு தனியாக தேர்தலை சந்திக்கும் பட்சத்தில், ஒட்டுமொத்தமாக உள்ள 234 தொகுதிகளுக்கும் என்னால் செலவு செய்ய முடியாது என சொல்லி இருக்கிறார். மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் என ஆட்களை தேர்வு செய்யுங்கள். 234 தொகுதிகளிலும் கட்சிக்கு செலவு செய்வது சரியான அணுகுமுறையாக இருக்காது என சொல்லியிருக்கிறார் விஜய். அடுத்த கட்டங்களை யோசித்து வருகிறதாம் ஆரோக்கியசாமி தரப்பினர்.
சென்னை மயிலாப்பூரில் நாயன்மார்கள் வீதி உலாவில் விவேகானந்தர் தேர் எப்படி வந்தது என அறநிலையத்துறையிடம் கேள்வி எழுப்பி உள்ளனர் சிவாச்சாரியார்கள். மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் தேர் திருவிழாவில், 63 நாயன்மார்கள் திருவீதி விழா நடைபெற்றது. அதன் ஒரு அம்சமாக கற்பகாம்பாள், விநாயகர், […]
ஆன்மிகம்சென்னை மயிலாப்பூரில் நாயன்மார்கள் வீதி உலாவில் விவேகானந்தர் தேர் எப்படி வந்தது என அறநிலையத்துறையிடம் கேள்வி எழுப்பி உள்ளனர் சிவாச்சாரியார்கள்.
மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் தேர் திருவிழாவில், 63 நாயன்மார்கள் திருவீதி விழா நடைபெற்றது. அதன் ஒரு அம்சமாக கற்பகாம்பாள், விநாயகர், முருகன் என கடவுள்கள் வீதி உலா வருவது தான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக ராமகிருஷ்ண மடத்திலிருந்து புதிய தேர் ஒன்றில், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், சாரதா தேவி படங்களை வைத்து ஊர்வலமாக வந்துள்ளது.
இதற்கு அறநிலையத்துறை அனுமதி வழங்கியதாக சொல்லப்பட்ட நிலையில், சைவ சமய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இவர்கள் யார் ? இவர்களை எப்படி அனுமதித்தீர்கள் என அறநிலையத்துறை அதிகாரிகளை கேள்வி கேட்டுள்ளனர் சிவாச்சாரியார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தனியார் பள்ளிகளைப் போல் சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் பிறந்த குழந்தைகளின் பெற்றோரின் கைபேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை எடுத்து அந்தந்த […]
சென்னைதனியார் பள்ளிகளைப் போல் சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் பிறந்த குழந்தைகளின் பெற்றோரின் கைபேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை எடுத்து அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கொடுத்ததும், அவர்கள் சம்பந்தப்பட்ட பெற்றோர்களை தொடர்பு கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு ஐந்து வயது பூர்த்தியாகி விட்டது. நீங்கள் ஏன் நமது பள்ளியில் உங்கள் குழந்தையை சேர்க்கக்கூடாது ? அரசுப் பள்ளிகள் சார்பில் 14 வகையான இலவசங்களை வழங்கி வருகிறோம். எங்களை நம்பி உங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேருங்கள். என அழைப்பு விடுக்க சொல்லி இருக்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.
இது நல்ல திட்டமாக இருக்கிறது என நினைத்தாலும், பல பெற்றோர்கள் போன் பண்ணி அழைப்பதால் எங்களுடைய நம்பர் உங்களுக்கு எப்படி கிடைத்தது, போனில் பேசி காசு பறிக்கும் கும்பலோ என சந்தேகத்துடன் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர். இதனால் சென்னை மாநகராட்சியும் முறையாக அறிவிப்பு வெளியிடாத நிலையில், ஆசிரியர் தங்கள் நிலையை எண்ணி நொந்து போய் உள்ளனராம்.
E 5 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில், இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு. பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இந்த […]
சினிமாE 5 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில், இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு. பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஷாலி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் மைம் கோபி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் எஸ்.ஏ சந்திரசேகர், ஆர்.வி உதயகுமார், தங்கர் பச்சான், கரு பழனியப்பன், வசந்த பாலன், திருமலை, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், நடிகைகள் தேவயானி, லட்சுமி ராமகிருஷ்ணன், கவிஞர் சினேகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்,

இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் பேசும்போது, இங்கே இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களைப் பார்த்தவர்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ரசித்திருப்பீர்கள். ஆனால் ஒரு பானை சோற்றையும் ருசிக்கும் வாய்ப்பு சீமானுக்கும் கவிஞர் சினேகனுக்கும் எனக்கும் கிடைத்தது. ஒரு அறிமுக இயக்குநர் தனது படைப்பு இந்த அளவுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என நினைப்பதே அருமையான விஷயம். அதற்காக இயக்குநர் சிவபிரகாஷை பாராட்டியே ஆக வேண்டும். பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவர் என்பதால் இது குறித்து ஆச்சரியப்படவும் தேவையில்லை. சில சமயம் நாம் ஒரு கணக்கு போடுவோம், ஆனால் காலம் அந்த கணக்கை மாற்றும். காரணம் விஜித்தை தங்கர் பச்சான் தான் அறிமுகப்படுத்தவதாக படம் எடுத்தார். ஆனால் காலம் இந்த படத்தின் மூலமாக அவரை அறிமுகப்படுத்த வைத்திருக்கிறது. இதுவே அவருக்கு கிடைத்த முதல் வெற்றியாக நான் பார்க்கிறேன். ஒரு புதுமுக நடிகருக்கு இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அமைவது என்பது பெரிய விஷயம். இந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் விஜித். முதல் படம் என்றாலும் இதில் கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. அதை அருமையாக கொடுத்திருக்கிறார் விஜித். எப்படி மண்வாசனை படத்தில் ஒரு வளையல் கடையில் வேலை பார்த்த பாண்டியனை துணிந்து பாரதிராஜா அறிமுகப்படுத்தினாலும், அந்த கதாபாத்திரத்தின் மூலமாக மக்களிடம் மனதில் ஒட்டிக் கொண்டார் பாண்டியன். அதன் பிறகு 85 படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதேபோன்று ஒரு அறிமுகத்தை தான் இந்த படத்தில் இயக்குநர் சிவப்பிரகாஷ் விஜித்திற்கு கொடுத்துள்ளார். காலம் காலமாக ஒவ்வொரு படத்திற்கும் இளையராஜா எப்படி தனது இசையால் உயிரூட்டுவாரோ அதேபோல இந்த படத்திற்கும் செய்திருக்கிறார். இந்த படம் நிறைவாகவே வந்திருக்கிறது என்றார்.
இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் பேசும்போது, தங்கர் பச்சானின் படங்களை திரைப்படங்களாக இல்லாமல் காவியங்களாக தான் நாம் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்டவர் தன் பையனை அறிமுகப்படுத்த நினைக்கும் போது அவரை நிறைய செதுக்க வேண்டும். அந்த பொறுப்பை இன்னொரு இளைஞரிடம் ஒப்படைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. நான் கூட அதைத்தான் நினைத்தேன் நடக்கவில்லை. 90களில் நான் பிஸியாக இருந்தபோது என் மகன் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட சமயத்தில் நாமே டைரக்ட் செய்தால் நன்றாக இருக்காது என நினைத்து விஜய்யின் ஆல்பத்தை வைத்துக்கொண்டு எத்தனையோ இயக்குநர்களிடம் போய் நின்றேன். ஆனால் தாரிப்பாளர் ஆர்.பி. சவுத்திரி தான்.. நீங்களே டைரக்ட் செய்யுங்கள் என்றார். வேறு வழியின்றி நானே அந்த படத்தை இயக்கினேன். இளைஞனாக தன் மகன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் போய் நன்கு ஒட்டிக் கொள்ள வேண்டும் என்றால் அவரை இன்னொரு இளைஞன் தன் படத்தில் இயக்கினால் தான் சரியாக இருக்கும் என நினைக்கும் தங்கர் பச்சான் புத்திசாலித்தனமாக முடிவு எடுத்துள்ளார்.

அந்த இயக்குநர் முதலில் வெற்றி பெற வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். ஆனால் வெற்றி அடைந்து விட்டார் என படம் பார்த்து சிலர் கூறினார்கள். நடிகர் விஜித் இந்த திரையுலகத்தில் ஒரு மிகப்பெரிய கலைஞனாக வரவேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த படத்தின் டைட்டில் சொல்லும் கதை என்னுடைய பார்முலா தான். என்னுடைய குணாதிசயமும் கூட. அன்புக்கு அடிமையாக இருப்போம்.. அடக்க வேண்டும் என்று நினைத்தால் அவ்வளவுதான்.. எங்கள் கோபத்தை எங்கள் அலையை அடக்க முடியாது.. வருகின்ற இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கவேண்டும் என சொல்லிக் கொண்டே வருகிறேன். சினிமா என்பது பயங்கரமான ஆயுதம். வலிமையான ஆயுதம். சமூகத்தில் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அதை ரொம்ப ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.. இப்போது படம் ஓட வேண்டும் என்று பார்க்கிறார்களே தவிர மக்களுக்கு என்ன செய்தி சொல்ல வேண்டும் என யாரும் நினைப்பதில்லை.. பணம் சம்பாதிப்பது மட்டுமே சினிமா இல்லை என்று கூறினார்.

இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது, ஒரு படம் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காக போராடி செலவு செய்த தயாரிப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களைப் பெற்ற இயக்குநர்கள் பாக்கியசாலிகள். இன்று ஒரே படம் போல பத்து படம் வெளியே வருகிறது. இப்போதைய படங்களில் அழகியல் என்பது வருவதில்லை. ஒரு காலத்தில் மிக தரமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பெயர் பெற்ற ஹீரோக்கள் எல்லாம் இன்று கமர்சியல் என்கிற வட்டத்திற்குள் புகுந்து விட்டார்கள். இந்தப் படத்தின் கதையைக் கேட்பதில் தங்கர் பச்சான் தலையிடவில்லை என்று விஜித் சொன்னார். அப்படி என்றால் நீ ஜெயித்து விட்டாய் என்று கூறினார்.
நடிகர் மைம் கோபி பேசும்போது,
இந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதை சரியாக செய்திருக்கிறேன் என்றால் அந்த புகழ் இயக்குனர் சிவப்பிரகாஷுக்கு மட்டுமே சேரும். ஒருவேளை சரியாக பண்ணவில்லை என்று நீங்கள் நினைத்தால் அந்த குறை என்னுடையதுதான். மிக அழகான நேர்த்தியான கதை. நகரத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் இந்தக் கதையில் சொல்லப்பட்டுள்ள சில விஷயங்களை பார்க்கும்போது இப்படி எல்லாம் நடக்குமா என்று ஆச்சரியமாக இருந்தது. நான் நடித்துள்ள ஒரு படத்திற்கும், எனது காட்சிக்கும் இசைஞானியின் இளையராஜாவின் இசை பின்னணியில் ஒலித்திருக்கிறது என்பது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று கூறினார்.

கவிஞர் சினேகன் பேசும்போது,
இந்த படத்தை சீமானுடன் இணைந்து பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. காலம் காலமாக அவரவர் ஜாதியை அவரவர் கொண்டாடினாலும், பொதுவெளியில் ஜாதிக்கு எதிரானவன் போல தன்னை சித்தரித்துக் கொள்வதில் எல்லாம் முனைப்பாக இருக்கிறார்கள். அந்த முனைப்பில் ஒரு சதவீதம் உண்மையாக இருந்திருந்தால் கூட இந்நேரம் மிகப்பெரிய ஒரு தீர்வு கிடைத்திருக்கும் என்கிற ஆதங்கம் எல்லா படைப்பாளனுக்குள்ளும் இருக்கிறது. இந்த பெரிய யுத்தத்தின் தொடர்ச்சியாக தான் இந்த பேரன்பும் பெருங்கோபமும் படத்தை நான் பார்க்கிறேன். ஜாதிக்கு எதிரான படம் என்றாலும் கூட இது போய் முடியும் இடத்தில் ஒரு ஜன்னலையோ, கதவையோ பார்வையாளனுக்கு திறந்து வைக்கும் என்று கூறினார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, சில திரைப்படங்கள் வெற்றியடையும்போது வியாபார ரீதியாக சினிமா நன்றாக இருக்கும். ஒரு படைப்பாளனாக சிவப்பிரகாஷ் மாதிரியான இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் வெற்றி அடையும்போது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன். நான் மகான் அல்ல, பாண்டியநாடு போன்ற பழிவாங்கும் திரைப்படங்களை நான் பண்ணி இருந்தாலும்,
இந்த பேரன்பும் பெருங்கோபமும் படத்தில் பழிவாங்கும் தன்மை, கிளைமாக்ஸ் என்னை உலுக்கி விட்டது. இதுவரை அப்படி ஒரு கிளைமாக்ஸ் நான் பார்த்ததில்லை. அந்த அளவிற்கு இந்த படத்தின் கிளைமாக்ஸ் மிகப்பெரிய அளவில் பேசப்படுவதுடன், தாக்கத்தையும் ஏற்படுத்தும். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது மிகப்பெரிய பலம் என்று கூறினார்.

நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும்போது, இந்த படத்தின் மேடையை பார்க்கையில் எனக்கு என்னுடைய முதல் படமான ஆரோகணம் தான் ஞாபகம் வருகிறது. அந்த மேடையில் பாரதிராஜா, பாலச்சந்தர், பாலுமகேந்திரா போன்ற ஜாம்பவான்கள் இருந்தார்கள். அதேபோன்ற அதிர்வு இந்த மேடையில் எனக்கு தெரிகிறது. சுசீந்திரன் போன்ற திறமையான இயக்குநர்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு அதன் கிளைமாக்ஸ் பற்றி இவ்வளவு சிலாகித்து பேசும்போது, இந்த படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் இயல்பாகவே ஏற்படுகிறது. இதுதான் மக்களுக்கு பிடிக்கும் என இடையில் இருப்பவர்கள் முடிவு செய்யாமல், எல்லா படங்களையும் மக்களுக்கு பார்க்கும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். அதை உருவாக்க முடிந்தால் மிகப்பெரிய விஷயம் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.

நடிகை தேவயானி பேசும்போது,
விஜித்தை சின்ன குழந்தையில் இருந்து பார்த்து வருகிறேன். அவரது தம்பி குழந்தையாக நட்சத்திரமாக அழகி படத்தில் என்னுடன் நடித்திருக்கிறார். இப்போது அண்ணன் கதாநாயகனா மாறி இருக்கிறார். தங்கர் பச்சானுடன் காதல் கோட்டையில் துவங்கி, எத்தனையோ நல்ல நல்ல படங்கள் நான் பணியாற்றி இருக்கிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.
இன்று அவருடைய மகன் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்ற திருவிழா பாடல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்று வந்தது போன்ற உணர்வைத் தந்தது. இளையராஜாவின் ஆசிர்வாதம் இந்த படத்திற்கு இருக்கிறது. விஜித்திற்கு நல்ல அருமையான மேடை அமைத்துக் கொடுத்து விட்டார்கள். இனி வரும் நாட்களில் அவர்தான் கடினமாக உழைக்க வேண்டும். நம் உழைப்பு தான் நம்மை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும். சினிமாவில் உங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் என்ஜாய் பண்ணுங்க. அது உங்களுக்கு நிறைய பெற்றுத் தரும். ஒரு இளைஞராக உனக்கு என் அறிவுரை இது என்று கூறினார்.

இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது, இயக்குநர் தங்கர் பச்சானின் படங்களை பார்த்து வியந்து இருக்கிறேன் என்னுடைய அங்காடித்தெரு, வெயில் படங்களை பார்த்துவிட்டு வீடு தேடி வந்து என்னை பாராட்டினார். என்னுடைய ஒன்பது ரூபாய் நோட்டு புத்தகத்தை ஏன் படிக்கவில்லை என்று உரிமையோடு சண்டை போடுவார். தவமாய் தவமிருந்து படத்தில் ராஜ்கிரண் நடித்த காட்சிகளுக்கு யாருமே கைதட்டவில்லை. ஆனால் அடுத்த சண்டைக்கோழி படத்தில் அவர் அறிமுகமாகும்போதே கைதட்டில் கிடைத்தது என்றால் அது தவமாய் தவமிருந்து படத்தில் அவருடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இங்கே வெளிப்படுகிறது என்று லிங்குசாமி கூறினார். அதேபோலத்தான் தங்கர் பச்சனின் படங்கள் மீது மக்கள் கொண்ட பேரன்பு விஜித்துக்கு வாழ்த்துக்களாக கைமாறும் என நம்புகிறேன். தீண்டாமை பெருங்குற்றம் என்று தான் சொல்கிறோமே தவிர தீண்டாமையை உருவாக்குகிற ஜாதியை பெரும் குற்றம் என்று சொல்வதில்லை. இது முழுவதுமாக அழியும் வரை இதுபோன்ற படைப்புகளை கொடுத்துக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று கூறினார்.

இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும்போது, இந்த படத்தின் இயக்குநர் சிவப்பிரகாஷ் என் அலுவலகத்தில் நான் இருந்த நாட்களை விட அதிக நாட்கள் இருந்தவர். தினசரி வாழ்க்கைக்கு தேவைப்படும் ஒரு அரசியலை நுட்பமாக அறிந்தவர் சிவப்பிரகாஷ், அவர் அடர்த்தியான திரைப்படத்தை எடுத்திருப்பதாக படம் பார்த்த எல்லோருமே குறிப்பிட்டு சொல்கிறார்கள். படத்தை என்னிடம் காட்டி விடக்கூடாது என்பதில் சிவப்பிரகாஷ் கவனமாக இருந்திருக்கிறார். நான் எப்படி என் இயக்குநருக்கு என் முதல் படத்தை காட்டவில்லையோ அது போல தான் அவரும்.. என் படம் வெளியான போது அதை பார்த்துவிட்டு என்னை விட ரொம்பவே மகிழ்ந்து பாராட்டியவர் இயக்குநர் பார்த்திபன் தான். அது போல இந்த படத்தின் வெற்றி, சிவபிரகாஷை விட எனக்குத்தான் அதிக சந்தோஷத்தை கொடுக்கும். எந்த படத்தையும் வலுக்கட்டாயமாக ஓட வைக்க முயற்சி செய்ய வேண்டாம்.. நல்ல படமாக இருந்தால் அதுவே ஓடும்.. சினிமாவை இங்கே காப்பாற்ற யாரும் போராட வேண்டாம்.. சினிமா இங்கே இருப்பவரை காப்பாற்றும். கதை இல்லாமல் படம் எடுக்கிறார்கள் என்று இங்கு பேசியவர்கள் குறைப்பட்டு கொண்டார்கள் ஆர்வி உதயகுமாருக்கு எஜமான் படம் கிடைத்தது எப்படி ? சின்ன கவுண்டரின் வெற்றியால் தான் ரஜினிகாந்த் தனக்கு படம் இயக்க கூப்பிட்டார். அவரிடமும் நல்ல கதை இருந்தது. இங்கே எல்லாமே வியாபாரம் சார்ந்தது தான். இந்த உலகத்துக்கு வெற்றி பெற்றவர்கள் தான் வேண்டும். இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் சொல்வதைக் கேட்டால் நீங்கள் வெற்றி படத்தில் இருப்பீர்கள் என்பதைத்தான் இந்த நிகழ்வில் தேவயானி பேசியதில் இருந்து விஜித் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சினிமாவில் சமீப வருடங்களாக ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு அந்த படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் வெளியே அனுப்பப்படுகிறார்கள். ஒரு படம் வெற்றி பெறும் என்று அந்த படத்தின் இயக்குநரை விட மிக ஆழமாக நம்புபவன் அந்த படத்தில் உதவி இயக்குநர் தான் அவனுக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் செலவு பண்ணுவதால் ஒன்றும் நட்டமாகி விடாது. இது இந்த அரங்கத்தில் பேசப்பட வேண்டிய விஷயம் என்பதால் பேசுகிறேன். இந்தப் படம் வெற்றி படமாக அமையட்டும். இந்த படத்தை போல வரும் படங்களில் எல்லாம் பேரன்பும் பெரும் கோபமும் நிறைந்திருக்கட்டும் என்று கூறினார்.

நாயகன் விஜித் பேசும்போது,
இந்த படத்தில் ஒரு பங்காக இருப்பதை நானும் பெருமையாக நினைக்கிறேன். இந்த படத்தில் நான் என்ன அனுபவித்தேனோ, படம் பார்க்கும்போது நீங்களும் அதை அனுபவிப்பீர்கள். துரோகம், வலி, வெறுப்பு, ஏமாற்றம் எதையும் பார்க்காமல் வளர்ந்த பையன் நான். ஆனால் இந்த படம் எனக்கு அதை எல்லாம் கற்றுக் கொடுத்தது. தனிமைக்கும் சத்தம் இருக்கிறது என்பதை இந்த பேரன்பும் பெருங்கோபமும் படம் எனக்கு கற்றுக் கொடுத்தது. நான் தனிமையாக இருக்கும் போது இந்த ஜீவா கதாபாத்திரம் என் கூடவே இருந்தது. நடிப்புக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதை இந்த கதாபாத்திரம் என் மீது ஏறும்போது பார்த்தேன். நான் சாமியை எல்லாம் பெரிதாக நம்புபவன் அல்ல. ஏதோ ஒன்று நடந்தது. இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் பொருந்துகிற மாதிரி நான் இந்த படத்தில் பயணித்தேன். இசைஞானி இளையராஜா இந்த படைப்பிற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்று கூறினார்’

நாயகி பேசும்போது, இந்தக் கதை குறித்து இயக்குநர் சிவப்பிரகாஷ் என்னிடம் சொன்ன அந்த காட்சி இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. இந்த கதை ஏதோ ஒரு தாக்கத்தை எனக்குள் உருவாக்கியது. கொஞ்ச நாள் சாராவாக வாழ்ந்து பார்ப்போமே என்கிற எண்ணம் ஏற்பட்டது. என் பெற்றோருக்கு நடந்தது கலப்பு திருமணம் தான். அப்பா மலையாளம்.. அம்மா தமிழ்.. என் அம்மா சொன்னதை வைத்து எல்லா கலப்பு திருமணங்களிலும் இருப்பது போன்ற சிறு மனக்கசப்பு என் அம்மாவிற்கு இருப்பதையும் தெரிந்து கொண்டேன். ஆனால் அவர்கள் எனக்கு பாலூட்டி வளர்த்ததுடன் பாரதியின் வரியையும் ஊட்டியே வளர்த்திருக்கிறார்கள். ஓடி விளையாடு பாப்பா பாடலில் குழந்தை, அம்மா, பிற உயிர்கள், தேசம், தமிழ் என எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசியில் சாதிகள் பற்றியும் சொல்லி இருப்பார். பாரதியின் இந்த வரிகள் என் மனதில் வளரும் பருவத்தில் என்னிடம் உண்டாக்கிய தாக்கத்தை போல, பேரன்பும் பெருங்கோபமும் படம் கண்டிப்பாக பார்ப்பவர்கள் மனதில் ஏதாவது ஒரு விஷயத்தை விதைக்கும். சில கேள்விகளை எழுப்பவும் வாய்ப்பு உண்டு. இந்த படத்தில் சாராவாக நான் வாழ்ந்தபோது நிறைய சிரித்தேன்.. கொஞ்சம் அழுதேன்.. ரொம்ப வலியை அனுபவித்தேன்.. அதெல்லாம் நீங்களும் உணர்வீர்கள் என நம்புகிறேன் என்றார்.

இயக்குநர் தங்கர்பச்சான் பேசும்போது, இந்த திரைப்படம் நான் முதற்கொண்டு நிறைய பேர் பேசத் தவறியதை பேசி இருக்கிறது. இது 40 ஆண்டுகளில் என் படங்கள், என் சிறுகதைகள், நாவல்கள் கூட செய்ய தவறியதை இந்த படம் செய்து இருக்கிறது. இன்றைக்கு சமூகத்தில் இருக்கும் ஒரு பெரிய சிக்கலை இந்த படம் பேசுகிறது. ஒரு படம் என்பது சிரிக்க வைப்பது மட்டும் இல்லாமல் மற்றவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை அடைய வேண்டும். பல அரசியல் இயக்கங்கள் செய்யத் தவறியதை இந்த படம் சாதித்திருக்கிறது. ஒரு போராளி என்பவன் ஆயுதம் வைத்திருக்க வேண்டும் என்பதில்லை. சொல்லை, சிந்தனையை வைத்திருந்தால் போதும். கையில் சரியான கலையை வைத்திருக்கும் இயக்குநர் தான் போராளி.. படம் இயல்பாக இருந்தாலும் வசனங்கள் மனோகரா, பராசக்தி படங்களில் வருவது போன்று தான் இந்த படத்தில் உரையாடல்கள் இருக்கிறது. இந்த படத்திற்கு அப்படித்தான் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு முருகேஷ் பாபு வசனத்தை அவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார். படத்தின் கதாபாத்திரங்களான சாராவும் ஜீவாவும் உங்களை தூங்கவே விட மாட்டார்கள். மைம் கோபி என்ன மாதிரி நடிகர்.. இந்தியாவிலேயே தமிழில் தான் மிகச்சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள்.. தயாரிப்பாளர் ஜெய் கிருஷ்ணன் இன்றைக்கு இருக்கும் பல திறமையான இயக்குநர்களை உருவாக்கியவர். அந்த வேலையை அமைதியாக செய்து வருகிறார். இந்த படத்தின் மூச்சு இசைஞானி தான். நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தாலும் நான் அவருடன் தான் இருக்கிறேன். இந்த படத்தை முழுமையாக புரிந்து வைத்து எப்படி மக்களிடம் கொண்டு போக வேண்டும் என அழகாக செய்து இருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் தனது இசையால் செதுக்கி உள்ளார். இந்த படத்தின் வெற்றியில் இளையராஜாவுக்கு தான் பெரும் பங்கு இருக்கிறது. என்னுடைய மகனுக்கு இரண்டாவது படத்திலேயே இந்த கொடுப்பினை கிடைத்துள்ளது. படத்தை நான் சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன். ஆனால் இந்த படத்தில் என் மகன் நடித்தபோது இந்த படத்தின் கதையை நீங்கள் கேட்க வேண்டாம் என்னை நடிக்க விடுங்கள் என்று கூறிவிட்டார் என்று கூறினார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, பெருங்கோபத்தின் பிறப்பிடமே பேரன்பு என்பது தான். நான் என்னுடைய தம்பி படத்தை எடுத்த போது கீழே துணை தலைப்பாக பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன் என போட்டிருந்தேன். என் தலைவரை மனதில் வைத்து தான் அந்த வார்த்தைகளை போட்டேன். தன் இனத்தின் மீது அவர் வைத்திருந்த பேரன்பு அந்த இனம் அழித்து ஒழிக்கப்படும்போது அதை காக்க வேண்டிய பெரும் கோபத்திற்கு ஆளாகி விட்டார். பாரதியின் பெரும் கோபத்திற்கு இந்த மண்ணை, மக்களை அவர் ரொம்பவே நேசித்தது தான் காரணம். புதியவர்களுக்கு துணிந்து வாய்ப்பு கொடுப்பதே பெரிய சாதனைதான். அதை ஜெய் கிருஷ்ணன் செய்துள்ளார்.
தங்கர் பச்சான் அழகி படத்தை எடுத்து முடித்தபோது எனக்கு போட்டுக் காட்டினார். படம் பார்த்துவிட்டு வந்து கட்டிப்பிடித்து நன்றாக இருக்கிறது என பாராட்டினேன். தங்கர் பச்சானே நம்ப முடியாமல் திகைத்தார். பக்கத்தில் இருந்த அந்த படத்தின் தயாரிப்பாளர், நண்பனை பாராட்டுவதற்காக இப்படியா பொய் பேசுவது என்று சிரித்தார். ஆனால் படம் அபார வெற்றி பெற்ற பிறகு அவரே நீங்கள் சொன்னபடி தான் நடந்தது என்று கூறினார். தன் மகனை வைத்து ஏற்கனவே டக்கு முக்கு டிக்கு தாளம் என்கிற படத்தை தங்கர் பச்சான் எடுத்து வைத்திருந்தாலும் இந்த பேரன்பும் பெருங்கோபமும் படம் முதல் படமாக வரட்டும் என முடிவு செய்து விட்டார்கள். தம்பி விஜித்திற்கு அறிமுகப்படத்திலேயே இவ்வளவு பெரிய கதாபாத்திரத்தை தூக்கி சுமக்கும் ஆற்றல் இருக்கிறது என்பது பெரிய விஷயம் தான். பல படங்களில் நடித்த அனுபவம் பெற்ற நடிகரைப் போல நடிப்பை உரையாடலை உச்சரிப்பை வெளிப்படுத்தி உள்ளது விஜித்திடம் தெரிகிறது. அந்த அளவிற்கு திரை அறிவை நன்றாக உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுத்தியுள்ளார்.

என் தலைவரை பாராட்டிய பாலுமகேந்திராவின் பாசறையில் இருந்து வந்திருக்கும் சிவப்பிரகாஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவரது முதல் படம் போலவே இது இல்லை. படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவரை பார்த்தவுடன் நிஜமான மலையாளி என்று நான் நினைத்து விட்டேன். தன்னை ஒரு கேமரா படம் பிடிப்பது என்கிற உணர்வே இல்லாமல் வெகு இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மைம் கோபி தெலுங்கு, கன்னடம் என எந்த சேனலை திருப்பினாலும் இருக்கிறார். நமக்கெல்லாம் அது பெருமை.. தம்பி அருள்தாஸ் கெட்டவனாக நடிக்கும் போதெல்லாம் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இருவருமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
தேவையற்ற பேச்சுக்கள் இல்லாத, இயல்புக்கு ஏற்ற மாதிரியான அருமையான உரையாடலை முருகேஷ் பாபு எழுதி இருக்கிறார். பசும்பொன் திரைப்படத்தில் பணியாற்றிய போது நான் எழுதி கொடுக்கும் வசன பேப்பர்களை பார்க்காமலே கீழே தூக்கி போட்டு விடுவார் பாரதிராஜா. அதன் பிறகு ஒரு காட்சி எடுக்கும் போது இதற்கு எங்கே வசனம் என்று கேட்பார். அவர் தூக்கி போட்ட பேப்பரை அவரிடமே கொடுப்பேன். இது சரியாக இருக்கிறது என்று அவர் சொல்லும்போது, இதைத்தான் நீங்கள் தூக்கி போட்டீர்கள் என்று சொல்வேன். சில நேரங்களில் கோவித்துக் கொண்டு சென்னைக்கு கிளம்பிய போது என் குரு சித்ரா லட்சுமணன் தான் என்னை தட்டிக்கொடுத்து சாந்தப்படுத்தினார். இன்று தமிழ் சினிமாவின் திரைக்களஞ்சியமாக சித்ரா லட்சுமணன் இருக்கிறார்.

காலம் பல கவிஞர்களை உருவாக்கி இருக்கிறது. நமது காலத்தை உருவாக்கியவன் நம் பாட்டன் பாரதி. சுதந்திரம் கிடைப்பது, மாநிலம் பிரிப்பது, தமிழ்நாடு என பெயர் வைப்பது என எல்லாவற்றையுமே சுதந்திரத்திற்கு முன்பே உணர்ந்து பாடியவன் பாரதி. எல்லா காலங்களிலும் எல்லா மகான்களுமே இந்த சாதிக்கு எதிரான குரலை ஒலித்து இருக்கிறார்கள். ஆனாலும் இப்போது வரை இந்த சாதி சாகமாட்டேன் என்கிறது. சாதி என்பது கொரோனாவை விட மிகப்பெரிய கொடிய நோயாக இருக்கிறது. உலகத்திலேயே புனிதமான ஒன்றான அன்பை அது கொன்று விடுகிறது.
அமெரிக்க அதிபரும் இந்திய பிரதமரும் ஒவ்வொரு நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றால் கடவுச்சீட்டு, விசா கட்டாயம் வேண்டும். ஆனால் அன்னை தெரசாவை அனைத்து நாடுகளும் இது எதுவுமே இல்லாமல் எங்கள் நாட்டுக்கு வாருங்கள் என கைகூப்பி அழைத்தன. காரணம் அன்பால் அத்தனை நாடுகளையும் கட்டிப்போட்டவர் அன்னை தெரசா. சாதி என்பது பெரிய நோய். சாதி, மதம், சாராயம் இந்த மூன்றும் தமிழ் தேசியத்தின் மிகப்பெரிய பகை. எது செத்தாலும் பரவாயில்லை, தன் சாதி சாகக்கூடாது என்று நினைக்கிறவன் அதிகம் பேர் இருக்கிறார்கள். அப்படி நினைக்கிற கூட்டத்திற்கு இடையே இரண்டு காதலர்கள் சிக்கிக் கொண்டால் என்ன நடக்கும் என்பது தான் இந்த படத்தின் கதை.

சாதி என்கிற கொடிய நோயை ஒழிக்காமல் சமநிலை சமூகம் பிறக்காது. எத்தனையோ மகான்கள் வந்து கூறியும் இன்னும் இந்த சாதி ஒழியவில்லை. இன்னொரு தலைமுறை வந்து இந்த சாதியை காலில் போடும் செருப்பாக போட்டு தேய்த்தால் மட்டுமே சாதி மறையும். இந்த சாதிய கொடுமையை, வலியை மிகைப்படுத்தாமல் இரண்டு மணி நேரம் இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள். இனிவரும் தலைமுறையாவது இந்த சிந்தனையில் இருந்து விடுபட்டு எல்லாவற்றையும் தாண்டி மனிதம் நோக்கி, மானுடம் பயணிக்க வேண்டும்.
முதல் படத்திலிலேயே இயக்குனர் சிவப்பிரகாஷுக்கு இசைஞானியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இசைஞானி என்கிற வார்த்தை கூட குறைவுதான்.. இசை இறைவன் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.. எது கேட்டாலும் அருள்வார். உலகில் எத்தனையோ இசைக்கலைஞர்கள் இருந்தாலும் இளையராஜாவுக்கு இணை இல்லை. தளபதி என்ற ஒரு படத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை விதமான பாடல்கள்.. இது எல்லாம் உருவாக்கியவர் ஒரே ஆள் தான் என்று சொன்னால் உலகில் யாராவது நம்புவார்களா ? அது அவரால் மட்டும்தான் முடியும். இயக்குநர் ஒரு திரைக்கதை எழுதினால் இளையராஜா தனது இசையால் இன்னொரு திரைக்கதை எழுதிக் கொண்டிருப்பார். நம் தாய் பாடிய தாலாட்டு யாருக்கு ஞாபகம் இருக்கிறது.. இன்று 40 வருடங்களாக அவர் பாடல்களை தான் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.. கொஞ்சம் கூட சலிக்கவே இல்லை. அவர் இசையை கேட்டால் சோறு தண்ணி எதுவுமே தேவையில்லை. அவர் விஜித் படத்திற்கும் இசையமைப்பார். விஜித்தின் பையன் வந்து இயக்கப் போகும் படத்திற்கும் இசையமைப்பார்.

எப்படி இலக்கிய உலகில் ஒரு பாரதி வந்தாரோ, அது போல தான் இசை உலகில் இளையராஜா.. அது ஒரு வரம். அந்த வகையில் இசை இறைவனின் ஆசி பெற்ற ஒரு படம் இது. தம்பி விஜித் பாலைவனச்சோலை படத்தில் சந்திரசேகர் வெளிப்படுத்தியது போன்று ஒரு அற்புதமான உடல் மொழி, நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிவகுமாரின் மகன்கள் என்கிற அடையாளத்துடன் அறிமுகமானாலும் சூர்யாவும் கார்த்தியும் தங்கள் திறமையால் தான் வெளிச்சம் பெற்றார்கள். அதேபோல எஸ்ஏ சி யின் மகன் என அறிமுகமானாலும் விஜய் தனது ஆற்றலால் தான் இவ்வளவு பெரிய புகழ்பெற்ற ஒரு இடத்திற்கு வந்திருக்கிறார் என்றால் உழைப்பு தான் காரணம். எப்படி பார்த்தாலும் வெற்றிக்கு ஒரே ஒரு வாய்ப்பு கடுமையான உழைப்பு மட்டுமே. எல்லா வேதனைக்கும் ஒரே ஒரு மருந்து தான் சாதனை. சாதனையை வெற்றியின் மூலமாகத்தான் அடைய முடியும்.. வெற்றிக்கு கடின உழைப்பு வேண்டும் என்று கூறினார்.
அந்தகன் படத்திற்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் […]
சினிமாஅந்தகன் படத்திற்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ளார் இயக்குனர் ஹரி.

நடிகர் பிரஷாந்துடன் இணைந்து, இயக்குனர் ஹரி இயக்கிய, அவரது அறிமுக படம் ‘தமிழ்’. அதன் பின் இயக்குனர் ஹரி, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்ததோடு, தொடர்ந்து படங்களை இயக்கி, தான் ஒரு வெற்றி இயக்குனர் என முத்திரை பதித்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்கும் இந்த படத்தில், பெரும் நட்சத்திர பட்டாளமே இருக்கும் எனவும், பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைய உள்ளார்கள் எனவும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். நடிகர் பிரஷாந்த்தின் பிறந்த நாளான ஏப்ரல் 6, இந்த படத்தின் ( பிரஷாந்த் 55 ) அறிவிப்பு வெளியானது. ஸ்டார் மூவிஸின் சார்பாக இப்படத்தை நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் தயாரிக்கிறார்.
ஸ்டோன் எக்ஸ் நிறுவனம் சார்பில் வேல்முருகன் தயாரிப்பில், பிரஜின், விஜய் விஷ்வா, ஜீவா தங்கவேல், சாய் தன்யா, ஆர்த்தி, ஷாலினி உள்ளிட்டோர் நடிப்பில், ராம் பிரபா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “தரைப்படை”. கதைப்படி… ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் இருபதாயிரம் ரூபாய் […]
விமர்சனம்ஸ்டோன் எக்ஸ் நிறுவனம் சார்பில் வேல்முருகன் தயாரிப்பில், பிரஜின், விஜய் விஷ்வா, ஜீவா தங்கவேல், சாய் தன்யா, ஆர்த்தி, ஷாலினி உள்ளிட்டோர் நடிப்பில், ராம் பிரபா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “தரைப்படை”.
கதைப்படி… ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் இருபதாயிரம் ரூபாய் வட்டி தருவதாக, கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்து, கோடிக்கணக்கில் சம்பாதிக்க திட்டம் தீட்டுகிறது ஒரு கும்பல். பின்னர் கும்பல் தலைவனை துப்பாக்கியால் டேவிட் ( பிரஜின் ) சுட்டுவிட்டு, ஒரு சூட்கேஸுடன் செல்கிறார். குண்டடிப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த நபரை மீட்டு ரகசியமாக சிகிச்சை அளித்து அவரிடம் ஏதோ தகவல்களை பெற முயல்கிறார் ஜீவா தங்கவேல். பின்னர் அடிபட்டவரிடம் இருந்த சூட்கேஸ் எங்கே என தேட ஆரம்பிக்கிறார்.

இதற்கிடையில் சூட்கேஸுடன் சென்ற பிரஜினை கொன்றால் ஒரு கோடி தருவதாக, விஜய் விஷ்வாவிற்கு தகவல் வர, அவரும் அதற்கான வேலைகளில் இரங்குகிறார். அவனை கொன்றால் ஒரு கோடி. ஆனால் அந்த சூட்கேஸை அடித்தால் ஆயிரம் கோடி என தெரிய வருகிறது.
இந்நிலையில் தனது சொந்த கிராமத்திற்கு சென்று அந்த ஊருக்கு தேவையான சாலை, பள்ளிக்கட்டிடம் உள்ளிட்ட தேவைகளை செய்து தருவதாகவும், தன்னிடம் உள்ள தங்கக் கட்டிகளை, பணமாக மாற்ற வேண்டும் என உறவினர் மூலம் ஏற்பாடுகள் செய்கிறார் பிரஜின். பின்னர் தனது காதலி தங்கத்தை பார்க்க வேண்டும் எனக் கூற, அவரை அழைத்துக்கொண்டு தான் மறைத்து வைத்திருந்த இடத்தில் வந்து பார்த்தபோது, சூட்கேஸ் காணமல் போனதை உணர்ந்து ஆவேசமாகிறார்.

அந்த சூட்கேஸ் யாருக்கு சொந்தமானது ? குண்டடிப்பட்ட நபர் கூறும் ரகசியம் என்ன ? சூட்கேஸ் யாருக்கு கிடைக்கிறது என்பது மீதிக்கதை…
பணத்திற்காக கேங்க்ஸ்டர் கும்பல் திட்டம் தீட்டுவதும், அதனை செயல்படுத்த அவர்கள் எடுக்கும் முயற்சிகளையும், குறுகிய காலத்தில் பணக்காரராக நினைத்து, முதலீடு செய்து ஏமாந்து, சீரழியும் மக்களின் நிலையும் கதைக்களமாக எடுத்துக்கொண்ட இயக்குநர், திரைக்கதையில் கவணம் செலுத்த தவறிவிட்டார்.

பிரஜினின் சண்டை காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஜீவா முழுக்கமுழுக்க ரஜினிகாந்தின் சாயலை படம் முழுவதும் பயன்படுத்தியுள்ளார். அவரது நடிப்பு பெரிதாக சோபிக்கவில்லை. விஜய் விஷ்வாவும் காதலியுடன் சிகரெட் புகைத்தவாறு ஓவர் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சன் சைன்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில், பாரதி மோகன் தயாரித்து, இயக்கியுள்ள படம் “காலிங்கராயன்”. இப்படத்தில் உதய் கிருஷ்ணா, தென்றல், குஷி, சைலஜா, மருது செழியன், ஆனந்த் பாபு, மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதைப்படி… மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பழங்குடியினர் […]
விமர்சனம்சன் சைன்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில், பாரதி மோகன் தயாரித்து, இயக்கியுள்ள படம் “காலிங்கராயன்”. இப்படத்தில் உதய் கிருஷ்ணா, தென்றல், குஷி, சைலஜா, மருது செழியன், ஆனந்த் பாபு, மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கதைப்படி… மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பழங்குடியினர் வசித்துவரும் மலை கிராமத்தில் உள்ள அருவியில் ஒரு பெண் துணிகளை துவைத்துக் கொண்டிருக்கும் போது, துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், ஒரு இளைஞன் தண்ணிக்குள் விழ, அந்தப் பெண் பதறிப்போய் அக்கம்பக்கத்து ஆட்கள் துணையோடு, நாட்டு வைத்தியரிடம் கொண்டு செல்கிறார்கள். வைத்தியர் ஆனந்த் பாபு நாடி பிடித்து பார்த்துவிட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்த, பின்னர் போக்குவரத்து வசதியின்மை காரணமாக, அவரே மருத்துவம் பார்த்து உயிரைக் காப்பாற்றுகிறார். ஆனால் நினைவு திரும்ப மூன்று மாதங்கள் ஆகிறது.

அந்த மூன்று மாதங்களும் நேரம் தவறாமல் அவருக்கு சரியான மருந்தை கொடுத்து அனைத்து பணிவிடைகளையும் அந்தப் பெண்ணே அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் நினைவு திரும்பிய நிலையில், இவர்கள் இருவரையும் இணைத்து, தவறாக பேசி வருகின்றனர். மேலும் மலைப் பகுதிகளில் தீவிரவாத கும்பல் நடமாட்டம் இருப்பதாகவும், குண்டு பாய்ந்த நிலையில் யாராவது வந்தார்களா என காவல்துறையினர் கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டடிபட்ட நிலையில் உயிர் பிழைத்த அந்த இளைஞர் யார் ? அவரது பின்னணி என்ன ? அவருக்கும் அந்த மலைவாழ் பெண்ணிற்குமான உறவு எத்தகையது என்பது மீதிக்கதை…

எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாது மனிதாபிமானத்துடன் உதவி செய்யும் மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வியலோடு, விவசாயம், குடிநீர் தேவைகளுக்காக பழங்குடியின மக்களுக்கு தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கி, கால்வாய் அமைத்துக் கொடுத்த ஜமீன் காலிங்கராயனின் வரலாற்றை இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற கருத்தையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
மேலும் பழங்குடியினரின் விளைநிலங்களை அபகரிப்பதற்காக அரசியல்வாதிகள் செய்யும் அடாவடிகளையும் தோலுரித்து காட்டியுள்ளார்.
நல்ல கதையோடு கலமிறங்கிய இயக்குநர், திரைக்கதையில் கவணம் செலுத்தி இருக்கலாம்.