GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் […]
சினிமா
ஜி.கே.ஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, […]
சினிமா
கடலூர் மாவட்டம் ஶ்ரீ முஷ்ணம் வட்டாரத்தில் உள்ள ஶ்ரீ நெடுஞ்சேரி கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பயன்பாட்டிற்காக 2023-2024 ஆம் நிதியாண்டில் கழிவறை கட்டிடம் கட்டப்பட்டது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான கழிவறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுகளைக் கடந்தும், மக்களின் பயன்பாட்டிற்கு […]
தமிழகம்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’. திரையரங்குகளில் மார்ச் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு […]
சினிமாஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’. திரையரங்குகளில் மார்ச் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திற்குப் பிறகு இன்னும் பெரிதாக என்ன செய்யலாம் என்று நாங்கள் காத்திருந்தபோது வந்த படம் தான் ‘பெருசு’. ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் 16ஆவது படம் இது. அடல்ட் ஃபிலிம் என்றாலே சில விஷயங்களை டார்கெட் பண்ணி தான் இந்தியாவில் படங்கள் இருக்கும். ஆனால், மேற்கத்திய நாடுகளில் இதை சுவாரசியமாகவும் முகம் சுழிக்காத விதமாகவும் எடுப்பார்கள். இந்த விஷயங்களை ‘பெருசு’ படத்தில் உடைத்து சிறப்பாக கொண்டு வந்திருக்கிறோம். அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம். இதை சாத்தியப்படுத்தி கொடுத்த இளங்கோவுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி. எங்களுடன் இணைந்து பவேஜா ஸ்டுடியோஸூம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள் என்றார்.
எழுத்தாளர் பாலாஜி பேசுகையில், எழுத்தாளராகத் திரைப்படங்களில் இதுதான் எனக்கு முதல் படம். இதற்கு முன்பு நான் வெப்சீரிஸில் எழுதியிருக்கிறேன். அடல்ட் காமெடி என்றாலும் பார்க்கும் யாரும் முகம் சுழிக்கும்படியாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக கதை எழுதியிருக்கிறோம். நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
நடிகை தனலட்சுமி பேசுகையில், படத்தில் என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படம் எனக்கு பெரிய வாய்ப்பு. என்னைப் பல பேர் ‘நக்கலைட்ஸ் மூலம் பார்த்திருப்பார்கள். காமெடி கதாபாத்திரத்தில் தான் இதுவரை நிறைய பேர் என்னைப் பாத்திருப்பீர்கள். ஆனால், இதில் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவும் வளர்ந்திருக்கிறேன். சாவு என்பது எல்லோராலும் தவிர்க்க முடியாதது. அந்த யதார்த்தத்தை இந்த படம் சொல்லியிருக்கிறது என்றார்.

நடிகர் சுவாமிநாதன் பேசுகையில், இயக்குநர் சுந்தர்.சி எப்படி படத்தை ஜாலியாக எடுப்பாரோ அதேபோல இளங்கோவும் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுப்பார். வைபவ், முனீஷ்காந்த், கிங்க்ஸி, பாலசேகரன், தனலட்சுமி, சுனில் என எல்லோரும் இயல்பாக சிறப்பாக நடிப்பில் பின்னியிருக்கிறார்கள். குடும்பத்துடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம் இது என்றார்.
நடிகர் கஜராஜ் பேசுகையில், எனக்கும் காமெடி வரும் என நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கும் இயக்குநர் ராமுக்கும் நன்றி. என் பையனும் நன்றாக நடித்திருக்கிறேன் என சொல்லியிருக்கிறார். மக்கள் நீங்களும் பார்த்துவிட்டு சொல்லுங்கள். படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டிக் கொள்கிறேன் என்றார்.

நடிகர் கருணாகரன் பேசுகையில், முதல்முறையாக எனக்கு ஒரு கதையை இயக்குநர் சொல்லவில்லை. தயாரிப்பாளர், நடிகர் வைபவ் என மற்றவர்கள்தான் கதை சொன்னார்கள். அருமையான படமாக வந்திருக்கிறது. தனலட்சுமி அம்மா, சுவாமிநாதன், சுனில், கிங்க்ஸ்லி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கிரேஸி மோகனின் அந்த டச் படத்தில் இருக்கும். ஜாலியான காமெடி படத்தில் நடித்தது மகிழ்ச்சி என்றார்.
நடிகர் முனீஷ்காந்த் பேசுகையில், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழு என அனைவருக்கும் நன்றி. கார்த்திக் சுப்புராஜிடம் அப்பாயின்மெண்ட் கேட்டிருந்தேன். அவர்தான் வைபவ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அடல்ட் படம் என்று இதை சொன்னாலும் கதையில் எந்த முகாந்திரமும் அதற்கானதாக இருக்காது. நல்ல படமாக வந்திருக்கிறது என்றார்.
நடிகர் கிங்க்ஸ்லி பேசுகையில், இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. எல்லாரும் சூப்பராக நடித்திருக்கிறார்கள். கருணாகரன் மீட்டரை மிஸ் செய்யாமல் சிறப்பாக நடிப்பார். கார்த்திக் சுப்புராஜின் அப்பாவுக்கும் நன்றி. தனலட்சுமி அக்கா, தீபா அக்கா இருவரும் படத்திற்கும் பெரும் பலம். சாந்தினி, நிஹாரிகா எல்லாரும் சூப்பர் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.

நடிகர் பால சரவணன் பேசுகையில், இந்தப் படத்தின் கதையை கேட்டதும் எப்படி படமாக்கப் போகிறார்கள் என்று ரொம்ப யோசித்தேன். அடல்ட் காமெடியை எல்லோரும் பார்க்கும்படி முகம் சுழிக்காத வண்ணம் படமாக்கியுள்ளார் இயக்குநர். இந்தப் படம் என் கரியரிலும் முக்கியமான படமாக இருக்கும். வாய்ப்பு தந்த கார்த்திக் சுப்புராஜுக்கும் நன்றி. எங்கள் அனைவரது வாழ்க்கையிலும் மறக்க முடியாத அனுபவமாக இந்தப் படம் இருக்கும். கார்த்திக் சுப்புராஜ் எல்லோருக்கும் ஃப்ரீடம் கொடுத்தார். ’பெருசு’ நின்னு பேசும் என்றார்.

நடிகை சாந்தினி பேசுகையில், இந்த வருடம் எனக்கு பெரிதாக அமைந்துள்ளது. மூன்றாவது படம் எனக்கு ரிலீஸ் ஆகிறது. சத்தியமாக இதுபோன்ற கதை இதற்கு முன்பு வந்தததில்லை. எப்படி இப்படி ஒரு கதையை இயக்குநர் யோசித்தார் என்பது ஆச்சரியம்தான். இந்தப் படம் வேலை பார்த்தபோது ஜாலியாக வேலை பார்த்தோம். அதற்கு முக்கியக் காரணம் நடிகர்கள்தான். ஷூட்டிங் முழுக்க சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்கள். எல்லா நடிகர்களும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டோம். தனலட்சுமி வேற லெவலில் நடித்துள்ளார். படத்தில் என்ன பெருசு என்பதை மார்ச் 14 அன்று திரையரங்கில் வந்து பாருங்கள். இந்தப் படம் நிச்சயமாக குடும்பமாக வந்து பார்க்கலாம் என்றார்.

நடிகை நிஹாரிகா பேசுகையில், பாலாஜிக்கு முதலில் நன்றி. அவர்தான் இந்தக் கதையை என்னிடம் சொன்னார். கார்த்திக் சுப்புராஜுடன் வேலை பார்த்தது எனக்கு பெருமை. நான் ஸ்கூல், காலேஜ் படித்த காலத்தில் இருந்து பார்த்து வளர்ந்த நடிகர்களுடன் சேர்ந்து நான் நடித்திருப்பது மகிழ்ச்சி என்றார்.

விநியோகஸ்தகர் சக்திவேலன் பேசுகையில், இந்த வருடம் ‘பெருசு’ படத்துடன் ஸ்டோன் பெஞ்ச்சுக்கு பாசிட்டிவாக தொடங்கும். ‘பெருசு’ நிச்சயம் பெரிய வெற்றி பெறும். ஸ்டோன் பெஞ்ச் மிகவும் விருப்பதுடன் படம் செய்யக்கூடியவர்கள். நல்ல சினிமாவை ரசிகர்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது தனி உற்சாகம். ’பெருசு’ படம் தொடங்கும்போதே பெரிய ட்விஸ்ட் இருக்கும். அதிலே நான் ஷாக் ஆகிவிட்டேன். படம் எடுத்துக் கொண்ட கதை எந்த இடத்திலும் முகம் சுழிக்க வைக்காது. தனலட்சுமி அம்மா எல்லாம் நமக்கு இன்னொரு மனோரம்மா மாதிரி. இவங்களும் தீபாவும் செம காம்பினேஷன். எல்லா நடிகர்களும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்றார்.

இயக்குநர் இளங்கோ ராம் பேசுகையில், படத்தை நல்லவிதமாக கொண்டு போய் சேர்க்க நல்ல பேனர் கொண்ட தயாரிப்பாளர்கள் முக்கியம். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி. ‘ஆண்பாவம்’, ‘இன்று போய் நாளை வா’ போன்ற எண்பதுகளில் வந்த படங்கள் எனக்குப் பிடிக்கும். அதுபோல, குடும்பத்துடன் வந்து ஜாலியாக பார்க்கும்படியாக இந்தப் படம் இருக்கும். வைபவ்- சுனில் இந்த கதைக்கும் மிகப்பொருத்தமாக இருந்தார்கள். தனம், சுவாமிநாதன், கஜராஜ், தீபா என எல்லாரும் சூப்பராக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை குடும்பத்துடன் வந்து பார்க்கலாம். எந்த இடத்திலும் முகம் சுழிக்க மாட்டீர்கள். நல்ல டீம் எனக்கு கிடைத்துள்ளது என்றார்.

நடிகர் வைபவ் பேசுகையில், குடும்பத்துடன் பார்க்கும்படியான சூப்பராக கதையாக வந்துள்ளது. மார்ச் 14 நீங்கள் திரையரங்கில் பார்க்கும்போது உங்களுக்கே அது புரியும். தனம் அம்மா நடிப்பில் பின்னியிருக்கிறார். கஜராஜ், ரெடின், முனீஷ்காந்த் எல்லாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் செம ஜாலியாக சென்றது. உங்களைப் போலவே நானும் படம் பார்க்க ஆவலாக உள்ளேன். என் அண்ணன் கூட முதல் முறையாக சேர்ந்து நடித்திருக்கிறேன் என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், “னநானும் ராமும் அடிக்கடி பேசிக் கொள்வோம். அவர் நல்ல படங்கள் வந்தால் என்னிடம் சொவ்லார். அப்படித்தான் ‘கூழாங்கல்’ படம் நாங்கள் பிரசண்ட் செய்வதாக இருந்தது. சில காரணங்களால் அது மிஸ் ஆனது. பின்பு ராம் சொன்ன படம் தான் இந்த ‘பெருசு’. மற்றவர்களை சிரிக்க வைப்பது கடினமான விஷயம். பாலாஜி சிறப்பாக செய்திருக்கிறார். கதையின் முக்கியமான விஷயமே நடிகர்கள்தான். நான்தான் வைபவ்வும் அவரது அண்ணனும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னேன். சமீபத்தில் படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. 18 வயதிற்கு மேல் இருப்பவர்கள் குடும்பத்துடன் நிச்சயம் பார்க்கலாம். நகைச்சுவையுடன் சேர்ந்து எமோஷனும் கதையில் இருக்கும். தனலட்சுமி சூப்பராக நடித்திருந்தார். சுவாமிநாதன், கருணா, கிங்க்ஸ்லி, முனீஷ்காந்த், சாந்தினி, நிஹாரிகா, சுனில் எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்றார்.
ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘லீச் ‘திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. முழுக்க முழுக்க புதிய மலையாளத் திரைக் கலைஞர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ். எம். புக் ஆப் சினிமா […]
சினிமாஆக்சன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘லீச் ‘திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. முழுக்க முழுக்க புதிய மலையாளத் திரைக் கலைஞர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ். எம். புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில், அனூப் ரத்னா தயாரித்துள்ளார். எஸ். எப். சி ஆட்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும் நடிகருமான அனூப்ரத்னா விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.

அவர் பேசும் போது. தமிழில் இது எனக்கு முதல் மேடை. இங்கே வருகை புரிந்துள்ள கே ராஜன், பேரரசு ஆகியோருக்கு நன்றி. எங்களின் புதிய முயற்சிக்கு ஊடகங்கள் ஆதரவு தர வேண்டும்.
நான் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட், மிமிக்ரி ஆர்டிஸ்ட், குறும்படங்கள் எடுத்திருக்கிறேன். ஆனால் சினிமா தான் எனது இலக்காக இருந்தது. நான் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கலாம் என முடிவு செய்தேன். அதன் மூலம்
புதிய புதிய எழுத்தாளர்கள், இயக்குநர்களுக்கு, கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று நினைத்துதான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினேன்.
முதலில் எந்த மாதிரியான படம் எடுப்பது என்று யோசித்தோம். பிறகு ஒரு ஆக்சன் த்ரில்லர் வகையிலான படம் எடுப்பதற்கு முடிவு செய்தோம். நமக்கு ஜாக்கிசானைத் தெரியும், ஜெட் லீ, சில்வஸ்டர் ஸ்டாலோன் எல்லாரையும் தெரியும். காரணம் அவர்கள் அனைவரும் ஆக்ஷன் ஹீரோஸ் என்று புகழ் பெற்றவர்கள். நம்மூரில் ரஜினி, சிரஞ்சீவி அனைவரையும் தெரியும். அவர்களும் ஆக்ஷன் ஹீரோவாகப் புகழ் பெற்றவர்கள் .
லீச் என்றால் அட்டைப்பூச்சி, அது நமக்குத் தெரியாமலேயே நம் ரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பது. அதை நாம் கவனிக்காமல் விட்டால் அது கடித்து ரத்தம் இழந்து உயிருக்கு ஆபத்தாகிவிடும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நல்லவரா கெட்டவரா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் கூடவே இருப்பார்கள். ஒருவனுக்கு அருகே இருக்கும் உறவினர்களும் நண்பர்களும் யார் நல்லவர் ? யார் கெட்டவர் ? என்று பார்த்தால் தெரியாது, ஆனால் ரத்தத்தை உறிஞ்சக் கூடியவர்களாக இருப்பார்கள். இதுதான் கதையின் அடிப்படையான ஆதார வரியாக இருக்கும். எங்களின் புதிய முயற்சிக்கு ஆதரவு தர வேண்டுகிறேன் என்றார்.

சண்டை இயக்குநர் டேஞ்சர் மணி பேசும் போது, ஒரு படத்தில் ஆண்களுடன் ஆண்கள் சண்டை போடுவதை எடுப்பதாக இருந்தால் சுலபம். பெண்களுடன் பெண்கள் சண்டை போடுவதும் அப்படித்தான். ஆனால் இதில் ஆண்களும் பெண்களும் சண்டை போடுவது போல காட்சிகள் உண்டு. அதனால் சிரமப்பட்டு எடுத்தோம். எனக்கு மலையாளம் தெரியாத போதும் சிரமப்பட்டுப் புரிந்து கொண்டு இந்தப் படத்தை முடித்தோம். படக் குழுவினர் அந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்றார்.
விநியோகஸ்தர் ஷிஜின்லால் பேசும் போது, இதை முதலில் மலையாளத்தில் மட்டும் எடுப்பதாக இருந்தது. நான் தான் சொன்னேன் இதைத் தமிழிலும், தெலுங்கிலும் கொண்டு வரலாம் என்று. ஏனென்றால் இங்கே உள்ள ரசிகர்கள் ஒரு படத்தில் நடித்திருக்கும் பெரும் நடிகர்களை மட்டும் பார்ப்பதில்லை. படம் எப்படி இருக்கிறது என்றுதான் பார்ப்பார்கள் என்று சொன்னேன். ஆனால் பிறகு பணிகளில் இறங்கியபோது தமிழ் மொழிக்கும் ஏற்றதாக இருந்தது. கேரளாவில் கதை மட்டும் முக்கியமாகப் பார்ப்பார்கள். அதை முன்னிட்டு சிக்கனமாக எடுப்பார்கள். ஆனால் இது எல்லோருக்கும் ஏற்ற மாதிரி ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும். படம் நன்றாக இருந்தால் தமிழ் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று நான் கூறினேன். நம்பி வாங்க என்று கூறினேன். அனூப் மலையாளத்தில் சுமார் 20 படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்திருப்பார். ஆரம்பத்தில் இதில் அவர் நடிப்பதாக இல்லை. ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் நடிகராக மட்டும் இருந்தார். அவருக்கு ஏற்ற மாதிரி இருந்ததால் தான் இதில் வந்தார்.
இதில் நன்றாக நடித்துள்ளார். படமும் நன்றாக வந்துள்ளது என்றார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரைப்படத் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே ராஜன் பேசும்போது, இந்தப் படத்தை அழகாக எடுத்திருக்கிறார்கள். இந்த விழாவில் கேரளாவில் இருந்து வந்திருந்த அவர்கள் தமிழ் பேசிய அழகே தனி. நான் இப்போது சொல்கிறேன் நீங்கள் பேசிய தமிழ் அழகு. கதாநாயகி கூட அழகாகத் தமிழ் பேசினார்.
கேரளாவில் இருந்து தமிழை நம்பி வந்திருக்கிறார்கள். தமிழையும், தமிழர்களையும் நம்பி வந்தால் எதுவும் தவறாகப் போகாது. தமிழர்கள், தான் கெட்டுப் போவார்களே தவிர அடுத்தவர்களை கெடுக்க மாட்டார்கள். வாழ வைப்பார்கள். படத்தின் பெயர் லீச் என்று உள்ளது. அப்படி என்றால் ரத்தம் உறிஞ்சும் அட்டை என்று பெயர். இன்று சமுதாயத்தில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள், கோடீஸ்வரர்கள் ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி கொண்டிருக்கிறார்கள்.
நம் நாட்டில் ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். கோடீஸ்வரன் மேலும் கோடீஸ்வரனாக உயர்ந்து கொண்டே போகிறான். உலகத்தில் மூன்றாவது பணக்காரர் யார் என்று உங்களுக்கே தெரியும். அவர் இந்தியாவைச் சேர்ந்தவர். திட்டமிட்டு ஒரு குடும்பத்தையே பணக்காரர் ஆக்கி கொண்டு வருகிறார்கள். ஏழைகள் எண்பது கோடி பேருக்கு 5 கிலோ அரிசி இனாம் என்கிறார்கள். ஏன் இனமாக, இலவசமாகப் போடுகிறீர்கள்? சுதந்திரமடைந்து 75 ஆண்டு காலமாகியும் ஏன் இலவசம் தரவேண்டும் ?
வேலைவாய்ப்பு இல்லை. அது இல்லாமல் சிரமப்படுகிறார்கள். வேலை வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டுமே தவிர இலவசம் கொடுக்கக் கூடாது. ஏழைகள் ஏழைகளாக இருப்பது, இந்தியாவில் இன்று பேசு பொருளாக இருக்கிறது. அதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். நாம் வாழ்வோம் அடுத்தவர்களை வாழ வைப்போம்.

ஆன்மா மூன்று வகைப்படும்.
ஆத்மா, புண்ணிய ஆத்மா, மகாத்மா என்றும் மூன்று வகைப்படும். ஆத்மா நமக்குள்ளே இருக்கிறது. நாம் நன்றாக இருக்கவேண்டும், நம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று உழைத்துப் பிழைத்து ஆத்மாவை காப்பாற்றுகிற வகை. இது சாதாரண ரகம். நாம் நன்றாக இருக்க வேண்டும் நாம் சம்பாதித்து மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கும் வகை அவன் புண்ணிய ஆத்மா. தன்னைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் பிறர் வாழ வேண்டும் என்று மட்டும் நினைப்பவன் மகாத்மா. அப்படிப்பட்ட மகாத்மாக்கள் நாட்டில் சிலர்தான் உண்டு. மகாத்மா காந்தி, அன்னை தெரசா, பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் அப்துல் கலாம் போன்றவர்கள் எல்லாம் மகாத்மாக்கள்.
இன்று தமிழ் சினிமா நொந்து போயிருக்கிறது, வெந்து கொண்டிருக்கிறது. இன்று சின்ன கம்பெனிகள் மட்டுமல்ல பெரிய கம்பெனிகளும் சிரமத்தில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் கார்ப்பரேட் கம்பெனிகள். அவர்கள் தான் சம்பளத்தை உயர்த்தி உயர்த்தி சின்ன தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க முடியாத அளவிற்கு செய்துவிட்டார்கள். எல்லாவற்றையும் விட கொடுமை என்ன தெரியுமா? தமிழ்த் திரையின் தலை மகன் தமிழ் சினிமாவின் அடையாளம் உலக நடிகர்களுக்கெல்லாம் தலைவன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நாடகங்களில் நடித்து திரைப்படங்களில் புகழ்பெற்று உலக நடிகனாக உயர்ந்து காட்டிய அவர் அண்ணாவால் தென்னாட்டு மார்லன் பிராண்டா என்று பாராட்டப்பட்டவர். நடிப்பால் உலகத்தையே கவர்ந்த அந்த சிவாஜி கணேசனின் வீடு இன்று ஏலம் போவதற்கு தயாராகி விட்டது. ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது நீதிமன்றத்தில் இருந்து ஆணை வந்துள்ளது.

செய்தியைப் படித்த போது வருத்தமாக வேதனையாக இருந்தது. மூன்று கோடி கடன் வாங்கி பேரப்பிள்ளை படம் எடுத்ததில் வட்டி ஏறி 9 கோடி ஆகி உள்ளது. இன்று ஏலம் விடப்படும் நிலைக்கு வந்துவிட்டது. எனக்கு வருத்தமாக இருந்தது. முடிந்தவர்கள் உதவி செய்யலாம்.
பெரிய நடிகர்கள் பத்து பேர் சேர்ந்தால் இதைத் தீர்க்க முடியும். சிவாஜியால் கலைஞரா? கலைஞரால் சிவாஜியா ?என்கிற அளவுக்கு ஒருவரால் ஒருவர் புகழ் பெற்றனர். சிவாஜிக்கு நெருக்கமானவர் கலைஞர். அந்த குடும்பத்தில் இருந்து வந்த முதல்வர் ஏதாவது செய்யலாம். தமிழக அரசு இதில் ஏதாவது செய்யலாம். தமிழக கதாநாயகர்கள் உதவி செய்யலாம். அல்லது நடிகர் சங்கம் உதவி செய்து அந்த சிவாஜியின் வீட்டைக் காப்பாற்றுங்கள். நான் யாரையும் குறை சொல்லவில்லை வேண்டுகோளாக வைக்கிறேன். இந்த லீச் பெரிய வெற்றி பெற்று மக்கள் மனதில் சென்று சேர வேண்டும். பெரிய படங்கள் தான் ஓடும் என்ற நிலை இல்லை. சின்ன படங்கள் சென்ற ஆண்டு வெளியானதில் 10 -12 படங்கள் வெற்றி பெற்றன. இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறி வாழ்த்தினார்.

அடுத்து இயக்குநர் பேரரசு பேசும்போது, இசைஞானி இளையராஜாவின் பாடல்களை கேட்போம் ரசிப்போம். கேட்கிறபோதும் ரசிக்கிறபோதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த மேடையில் அவர் பாடல்களை நிஜாம் பாடிய போது பதற்றமாக இருந்தது. ஏனென்றால் அந்த அளவுக்கு காப்பிரைட் விஷயம் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். அந்தப் பாடலைப் பாடும் போது ஒரு ஆத்ம திருப்தி, மகிழ்ச்சி கிடைக்கும். நீங்கள் கேட்பதற்கு மட்டும் தானா பாட்டு போடுகிறீர்கள் ? அதை நாங்கள் பாட வேண்டாமா?இல்லையென்றால் சொல்லிவிடுங்கள் என் பாட்டை யாரும் பாட வேண்டாம் என்று. படத்தில் இடம்பெறுவது, ஸ்டார் ஹோட்டல்களில், நட்சத்திர விடுதிகளில் பாடப்படுகிறது என்றால் அதற்காக காப்பிரைட் தொகை வாங்கிக் கொள்ளலாம். இங்கே அருமையாக நிஜாம் பாடினார். அவரது திறமை வெளிப்படுத்துவதற்கு இளையராஜா பயன்படுகிறார். அது ஒரு பாக்கியம் என்றே நினைக்க வேண்டும்.
ஆரம்பத்தில் எல்லா திரைப்படப் பாடல்களும் கிராமியப் பாடல்கள், கும்மிப் பாடல்கள் அடிப்படையாக வைத்து வெற்றி பெற்றன. பிறகு தான் தங்களது இசையை உள்ளே கொண்டு வருவார்கள். இந்தப் படத்தின் கதாநாயகி சந்தியாவாம். தமிழ்நாட்டுக்கு சந்தியாக்கள் மூன்று தலைமுறையாக வந்து கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் அம்மா ஒரு சந்தியா, காதல் படத்து சந்தியா ஒன்று, இப்போது மூன்றாவதாக இந்த சந்தியா வந்ந்திருக்கிறார். இன்று நமது நண்பர்கள் உறவினர்கள் அனைவருமே அட்டைகளாகி வருகிறார்கள். நம்மிடம் ரத்தம் இருக்கும் வரை அட்டைப் பூச்சிகள் ரத்தத்தை உறிஞ்சுதற்கு இருக்கும். இதில் மூன்று பாடல்களுமே நன்றாக உள்ளன. இது மாதிரியான பாடல் வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. இப்போது வந்துள்ளது. அந்தாதி ராகத்தில் ஒரு பாடல் வந்துள்ளது. எழுதிய கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

இதில் படக்குழுவினர் முழுக்க முழுக்க கேரளாவில் இருந்து வந்துள்ளார்கள். கேரளாவில் இருந்து வருபவர்கள் அந்த மலையாளம் கலந்த தமிழில் பேசியே புரிய வைத்து விடுவார்கள். ஆனால் நாம் தமிழ் கலந்த மலையாளம் பேசி அவர்களிடம் புரிய வைக்க முடியாது. இன்னொரு மொழி தெரிவது பிழையில்லை. இங்கு இவ்வளவு பேர் மத்தியில அவர்கள் மலையாளத்தில் பேசியே புரியவைத்தார்கள் அல்லவா? அப்படி நம்மால் முடியாது. குறிப்பாக என்னால் முடியாது. தமிழ் சினிமாவுக்கு மொழி பிரச்சினை இல்லை. நாம் அனைவரையும் அரவணைப்போம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 250 படங்களுக்கு மேல் நடித்தவர். பெரிய புகழ் பெற்றவர். தாத்தா 250 படங்களில் நடித்து சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தை எடுத்ததில் இழந்திருக்கிறார். அந்த வீடு ஜப்தி நடவடிக்கைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது என்றால் நினைத்துப் பாருங்கள். ஒரு படம் எடுத்தால் ஒட்டுமொத்த சொத்தும் போய்விடுமா ?

இது சிவாஜி கணேசன் வீட்டுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் அல்ல. தமிழ் திரை உலகத்திற்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் ஆகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு ஆபத்தில் இருக்கிறது சினிமா. இந்தச் செய்தியைப் பார்த்தால் யார் படம் எடுக்க வருவார்கள்?
அனைவருக்குள்ளும் ஒற்றுமை வேண்டும். நான் ஒரு செய்தியைப்படித்தேன். பாலிவுட் நடிகர் அமீர்கான் தான் நடிக்கும் படத்திற்குச் சம்பளம் எதுவும் வாங்குவதில்லை. முன்பணம் எதுவும் வாங்குவதில்லை. கதை பிடித்திருந்தால் நடிப்பார். அந்தப் படத்தின் வசூலில் ஒரு பகுதியை, லாபத்தில் ஒரு பகுதியை மட்டும் பெறுகிறார் என்று படித்தேன். என்ன ஒரு அருமையான திட்டம்! எப்படிப்பட்ட மனம் அவருக்கு! அந்த அளவுக்கு அவர் சினிமாவை நேசிக்கிறார். சினிமாவும் அவரைக் கைவிடாது.
இப்படிப்பட்ட நிலை இங்கு வருமா? இந்த புதிய படக் குழுவினரின் படம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் என்றார்.
முன்னதாக இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் நிஜாம் பல குரல்களில் பேசி, திரைப்படப் பாடல்களைப் பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
திமுக தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு செல்லும் அரசியல் கட்சினருக்கு, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பொண் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்து கட்சி கூட்டத்திற்கு அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதலில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை முழுமையாக மீண்டும் படியுங்கள். அதில் […]
அரசியல் தமிழகம்திமுக தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு செல்லும் அரசியல் கட்சினருக்கு, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பொண் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்து கட்சி கூட்டத்திற்கு அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதலில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை முழுமையாக மீண்டும் படியுங்கள். அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது, ஏதாவது ஒரு விஷயத்தை இதை எதிர்த்து, இதற்காக என எந்த ஒரு அஜெண்டாவும் குறிப்பிடப்படவில்லை. அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால் மத்திய அரசுக்கு எதிராக போராட தயாராக வேண்டிய சூழலை உருவாக்குவதற்காக கூட்டத்தை கூட்டுகிறார்கள்.
1962, 1967 அந்தக் காலகட்டங்களில் ஆட்சிக்கு வருவதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் என்னென்ன தந்திரங்களை எல்லாம் பயன்படுத்தினார்களோ கடைப்பிடித்தார்களோ அதே தந்திரங்களை மீண்டும் கொண்டுவரக் கூடிய வகையில் எட்டு கோடி தமிழர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை திணிப்பதற்காக, கிளர்ச்சியை ஏற்படுத்தவே அவர்கள் நடத்தக்கூடிய கூட்டமாகத்தான் இந்த அனைத்து கட்சி கூட்டத்தை பாரதி ஜனதா பார்க்கிறது என்றார்.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜூன், சார்லி, ரோகிணி, லாரா, இந்துஜா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில், பா. விஜய் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “அகத்தியா”. கதைப்படி.. படப்பிடிப்பிற்காக கலை இயக்குநர் […]
விமர்சனம்வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜூன், சார்லி, ரோகிணி, லாரா, இந்துஜா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில், பா. விஜய் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “அகத்தியா”.
கதைப்படி.. படப்பிடிப்பிற்காக கலை இயக்குநர் ஜீவா தனது நண்பர்களுடன், பாண்டிச்சேரியில் உள்ள பழைய பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்து, அமானுஷ்யங்கள் உள்ள பேய் பங்களாவாக வடிவமைக்கிறார். அப்போது ஆங்கிலேய காலத்து பியானோ மண்ணுக்குள் புதைந்த நிலையில் கிடைப்பதை பார்க்கின்றனர். அதை சேதமாகாமல் எடுத்து சுத்தம் செய்து வைத்ததோடு, அந்த பங்களாவை நிஜ பேய் பங்களாவாக மாற்றி விடுகிறார்கள். இதற்கிடையில் படப்பிடிப்பை ரத்து செய்வதாக தயாரிப்பாளர் ஜீவாவிடம் கூற ஒட்டுமொத்த குழுவும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

பின்னர் ராஷி கண்ணா ஆலோசனையின் பேரில் மாற்று ஏற்பாடாக அந்த பேய் பங்களாவை பொதுமக்கள் பார்வைக்கு விட்டு, செலவு செய்த பணத்தை மீட்க முடிவு செய்கிறார்கள். அப்போது ராஷி கண்ணா அந்த பியானோவை வாசிக்க, அதிலுள்ள ரகசிய அறை திறக்கிறது. அந்த சமயத்தில் ஏதோ ஒரு அமானுஷ்யம் ஜீவாவின் கண்களில் வந்து போகிறது. பின்னர் அந்த அறைக்குள் என்ன இருக்கிறது என தேடும்போது, பழங்கால படச்சுருல் ( பிலிம் ரோல் ), ஸ்டெதஸ் கோப், எழும்புக்கூடு போன்றவைகள் தென்பட, பிலிம் ரோலில் என்ன இருக்கிறது என பார்த்தபோது, 1940 ல் பாண்டிச்சேரி கவர்னராக இருந்த எட்வர்ட் என்பவரின் தங்கையை சித்த மருத்துவத்தில் அர்ஜூன் குணப்படுத்தியதாகவும், பின்னர் அவரைரையே திருமணம் செய்து கொண்டதாகவும் இருக்கிறது. மேலும் ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய்களை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். எழும்பு புற்றுநோய்க்கும் மருந்தை தயார் செய்து வைத்துள்ளார். அதோடு அந்த பிலிம் ரோலில் கதை முடிகிறது.

இதற்கிடையில் ஜீவாவின் தாய் எழும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுயநினைவு இல்லாமல் அவதிப்படுகிறார். தாயை குணப்படுத்த சித்த மருத்துவர் கண்டுபிடித்த மருந்தை தேடி அந்த பேய் பங்களாவுக்கு ஜீவா செல்ல முற்படும்போது, ஒரு அமானுஷ்ய சக்தி உள்ளே விடாமல் தடுக்கிறது.
ஜீவா பேய் பங்களாவுக்குள் சென்று மருந்தை எடுக்க முடிந்ததா ? அவரது தாயார் என்னானார் என்பது மீதிக்கதை…
தற்போதைய சூழ்நிலையில் விதவிதமான நோய்கள் புதிது புதிதாக தோன்றுகிறது. ஆனால் ஆங்கில மருந்துகள் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலையில், இயற்கை மருத்துவம் தான் உதவுகிறது. சமீபத்தில் கொரோனா காலத்தில் நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட மருந்துகளை மக்கள் பயன்படுத்தியதை அனைவரும் அறிவோம். அதேபோல் தீராத நோய்களுக்கும் நமது முன்னோர்கள் மூலிகைகள் மூலம் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். உலகிற்கே தமிழர்கள் முன்னோடிகள் என்பதை இயக்குநர் பா. விஜய் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

அதேபோல் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிகவும் தத்ரூபமாக, அந்த காலகட்டத்தை நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். பேய் படத்தில் காமெடியிடன் ஃபேண்டஸி, த்ரில்லர் கலந்து ரசிக்கும்படி திரைக்கதை அமைத்துள்ளார். பாடலாசிரியர் மட்டுமல்லாது, சிறந்த படைப்பாளி என நிரூபித்திருக்கிறார் பா. விஜய்.
அர்ஜீன் தோன்றும் காட்சியில் தான் படத்தின் கதை ஆரம்பிக்கிறது. இந்த படத்தில் அர்ஜூன் தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம். தமிழர்களின் பாரம்பரிய இயற்கை வைத்தியத்தின் மகத்துவத்தை பதிவு செய்த படத்தில், அடுத்த தலைமுறைக்கு பாடமாக அர்ஜூன் நடித்த காட்சிகள் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.
அதேபோல் நடிகர் ஜீவாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் சார்லி, ரோகிணி உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக ரோகிணி இந்த படத்திற்காக மொட்டை அடித்து நிஜமாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி போல் நடித்து, அந்த கதாப்பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார்.
ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ‘ஸ்வீட்ஹார்ட்’ திரைப்படத்தில் ரியோ […]
சினிமாஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
‘ஸ்வீட்ஹார்ட்’ திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். காமெடி வித் ரொமாண்டிக் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார். மார்ச் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பொன் ராம், தேசிங் பெரியசாமி, சுரேஷ், கார்த்திக் வேணுகோபாலன், ஹரிஹரன் ராம், கலையரசன் தங்கவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசுகையில், என் தலைவன் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கும், இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாம் நம்முடைய மனைவிக்கு லவ் யூ என்று சொல்கிறோமோ இல்லையோ ‘ஸ்வீட் ஹார்ட்’ என்று சொல்லாமல் கடக்க முடியாது. ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி அண்ணன், ஏண்டா அந்த கேள்வியை என்ன பார்த்து கேட்ட ? என ஒரு டயலாக் பேசுவார். அதே போல் இந்தப் படத்தில் அது போன்ற கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று இயக்குநருக்கு எப்படி தோன்றியது ? என்று தெரியவில்லை. இந்த படத்தில் நான் ஒரு சிறப்பான வேடத்தில் நடித்திருக்கிறேன். கடின உழைப்பு எப்போதும் தோல்வி அடையாது என சொல்வார்கள். அதற்கு எப்போதும் உதாரணம் ரியோ ராஜ் தான். அவன் நடித்த இந்தப் படமும் ஹிட்டாகும். அடுத்த படமும் ஹிட்டாகும். அவருடைய பயணம் இனி வெற்றி தான்.
பொதுவாக காதலை சொல்ல வேண்டுமென்றால் இளையராஜா, ஏ ஆர் ரகுமான் ஆகியோரின் பாடல்களை சொல்லித்தான் காதலைச் சொல்வார்கள். ஆனால் நான் என் வாழ்க்கையில் யுவன் சங்கர் ராஜாவின் பாடலைத் தான் காதலுக்காக சொன்னேன். இதற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசுகையில், ஸ்வீட்ஹார்ட் என்ற இந்த படத்தின் டைட்டில் நன்றாக இருக்கிறது. இந்த படத்தைப் பற்றிய அறிவிப்பு தொடர்பாக வெளியான காணொளி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்திற்கான போஸ்டரில் நான்கு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வடிவமைத்திருப்பது சிறப்பாக இருக்கிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற என்னுடைய படத்திலும் இதே போல் தான் போஸ்டரை வடிவமைத்திருப்பேன். அதை பார்ப்பது போல் இருக்கிறது. படத்தின் முன்னோட்டம் தரமான பொழுதுபோக்காக இருந்தது. ரியோவின் தோற்றம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அது நம் மண்ணின் தோற்றம். இந்த படத்தின் டிரைலரில் நல்லதொரு ‘வைப்’ ( Vibe) இருக்கிறது படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.
இயக்குநர் இளன் பேசுகையில், யுவனை சந்தித்த பிறகு தான் என் வாழ்க்கையில் மாற்றம் நிகழ்ந்தது. இந்தப் படத்தை பற்றி எதுவும் தெரியாது. நண்பர்களிடம் ‘பியார் பிரேமா காதல்’ போல் இருக்குமா ? என கேட்டேன். அதற்கு அவர் பணிவாக ‘இருக்கலாம்’ என்று சொன்னார். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு படம் சிறப்பாக இருக்கிறது. படத்தின் முன்னோட்டம் இளம் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. இப்படத்தில் உள்ள ‘ஆஸம் கிஸா..’ என்ற பாடல் வேற லெவலில் உள்ளது. யுவன் சங்கர் ராஜாவிற்கு ‘மார்டன் மாஸ்டரோ’, ‘கிங் ‘ என பல பெயர்கள் இருந்தாலும் அவருடன் பழகிய அனைவருக்கும் தெரிந்த ஒரே வார்த்தை தான் இந்த படத்தின் டைட்டில் அவர் ஒரு ஸ்வீட்ஹார்ட்.
இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் பொன்ராம் பேசுகையில், யுவனுடன் இணைந்து பாடல் கம்போசிங் செய்வது ஜாலியான அனுபவமாக இருக்கும். முதலில் அவரிடமிருந்து எப்படி பாடல்களை பெறுவது என்பதில் தயக்கம் இருந்தது. ஆனால் அவருடன் பத்து நிமிடம் பழகியவுடன் அவர் ஒரு ஸ்வீட் ஹார்ட் என்பதை தெரிந்து கொண்டேன். ரியோ நன்றாக நடிக்கிறார். அவரிடம் ஒரே ஒரு கோரிக்கையை வைக்கிறேன் பி & சி ரசிகர்களுக்காக ஒரு படத்தில் நடிக்க வேண்டும். ஏனெனில் பி & சி என்பது மிகவும் பவர்ஃபுல் மீடியம். அவர்களுக்காக ஒரு படத்தில் நடித்தால் உங்கள் வளர்ச்சி மேலும் சிறப்பாக இருக்கும். திரையில் ரியோவுக்கும், கோபிகாவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. இது இளம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இந்தப் படத்தில் இருக்கும் ‘கிஸா’ சாங் எனக்கு மிகவும் பிடிக்கும். மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படம் ஸ்யூர் ஹிட். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். புது இயக்குநர்களுக்கு யுவன் சங்கர் ராஜா வாய்ப்பளிப்பதை நான் வரவேற்கிறேன். புது இயக்குநர்களை அறிமுகப்படுத்துவது என்பது சாதாரண விசயம் அல்ல. இதற்கு நம்பிக்கை அதிகம் வேண்டும். இதற்காகவும் யுவன் சங்கர் ராஜாவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் திரைப்படத்தில் திங்க் மியூசிக் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். அழகான பீல் குட் ரொமான்டிக் திரைப்படம்.
இந்தப் படத்தில் பணியாற்றிய இயக்குநர் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படம் வெளியான பிறகு படத்தில் இடம் பெற்ற பாடல்கள் நிறைய ரசிகர்களைக் கவரும். இந்த படத்தின் இசையில் ஒரு இன்ப அதிர்ச்சி உள்ளது. யுவன் சங்கர் ராஜா லைவ் கான்சப்ட்டிற்காக ஒரு பாடலை உருவாக்கியிருந்தார். யுவனின் ரசிகர்களுக்கு அந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். அந்தப் பாடல் இந்த படத்தில் இடம் பிடித்திருக்கிறது என்றார்.
இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசுகையில், ஸ்வினீத் நான் பார்த்து பழகிய நபர்களில் பாசிட்டிவானவர். ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’வில் இவருடைய பங்களிப்பு அதிகம். இவரைப் போன்ற ஒருவர் நம்முடன் இருக்கும்போது நாம் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். இந்தப் படத்தின் கதையை ஒரு பயணத்தின் போது எங்களிடம் சொன்னார். சிரித்து சிரித்து வயிறு புண்ணானது. அவர் அனைவருக்கும் மரியாதை அளிப்பவர். அவர் இன்னும் கூடுதல் உயரத்திற்கு செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். இப்படி ஒரு இளம் குழுவினரை அறிமுகப்படுத்தும் யுவன் சங்கர் ராஜாவிற்கும் என்னுடைய வாழ்த்துக்களும், நன்றிகளும். என் முதல் ஹீரோ ரியோ ராஜ். ஸ்வீட்ஹார்ட் படத்தைப் பற்றி தொடர்ந்து நல்ல விதமாக கேள்விப்படுகிறேன். அவருக்கும் இந்த படம் பெரிய வெற்றியை வழங்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.

இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் பேசுகையில், முதல் படம். முதல் மேடை. நிறைய பேர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஜோ’ படத்தின் பணிகள் நடைபெற்ற தருணத்திலேயே ரியோ ராஜிடம் இப்படத்தின் கதையை சொல்லிவிட்டேன். அவரும் அடுத்த படம் இதுதான் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ‘ஜோ’ படம் ஹிட்டான பிறகு ஏராளமான தயாரிப்பு நிறுவனங்கள் அவரை அணுகியது. அவர் ஏற்கனவே என்னிடம் சொன்ன வார்த்தைக்காக இந்த ஸ்வீட்ஹார்ட் படத்தினை நிறைவு செய்து தந்திருக்கிறார். இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கோபிகா ரமேஷ், அருணாச்சலேஸ்வரன், ஃபௌசியா, சுரேஷ் சக்கரவர்த்தி, ரஞ்சி பணிக்கர், ரிது, கவிதா, மைதிலி, காயத்ரி, காத்தாடி ராமமூர்த்தி, துளசி என இப்படத்தில் நடித்த அனைவருக்கும் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் படப்பிடிப்பை 34 நாட்களில் நிறைவு செய்தோம். இதற்காக முழு ஒத்துழைப்பை வழங்கிய ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம், 25 வது படத்தில் பணியாற்றும் கலை இயக்குநர் சிவசங்கர், படத்தொகுப்பாளர் தமிழரசன் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தின் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர். அனைவரும் சொல்வது போல் நானும் யுவனின் பாடல்களை கேட்டு தான் வளர்ந்தேன். நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகன். என்றாவது ஒருநாள் அவரை நேரில் சந்தித்து விட மாட்டோமா..! என்ற ஏக்கத்துடன் இருந்திருக்கிறேன். அவருடைய இசை மற்றும் தயாரிப்பில் நான் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன் என்றால், அதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக ஒரு படத்திற்கு இயக்குநரை தான் கேப்டன் என்று சொல்வார்கள். ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை யுவன் சங்கர் ராஜா தான் கேப்டன். இந்த படத்தின் மூலம் என்னை போல் நிறைய பேர் அறிமுகமாகி இருக்கிறார்கள். இந்தப் படத்தில் ரெடின் கிங்ஸ்லி விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் சிக்கலான சூழலில் அந்த கேரக்டர் திரையில் தோன்றும். அவரும் அதை புரிந்து கொண்டு நன்றாக நடித்திருக்கிறார் என்றார்.

நடிகை கோபிகா ரமேஷ் பேசுகையில், ஸ்வீட்ஹார்ட் எனக்கு மிகப் ஸ்பெஷலான படம். இது என்னுடைய முதல் தமிழ் படம். தமிழ் பெண்ணாக இல்லை என்றாலும் தமிழ் ரசிகர்கள் என் மீது செலுத்தும் அன்பிற்கு நன்றி. மலையாளத்தில் உள்ளவர்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் ஃபேவரிட். எங்கள் வாழ்க்கையில் வலிகளை மறக்கச் செய்தவர் யுவன். அவர் தயாரிக்கும் இந்த படத்தில் நடித்திருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன். மனு என்ற கதாபாத்திரத்திற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்திற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதியன்று தேர்வானேன். இந்த ஒரு வருடத்தில் படக் குழுவினருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. ரியோ ராஜ் திறமையானவர். சௌகரியமான சக நடிகர். அவருக்கும் வரிசையாக வெற்றிகள் காத்திருக்கிறது. இதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், இந்த மேடையில் பேசிய அனைவரும் யுவனின் ரசிகர்கள் தான். அனைவருக்கும் யுவனை மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக அவரை பிடிக்கும். துள்ளுவதோ இளமை படத்தில் அவருடைய இசையை எட்டாவது படிக்கும் போது கேட்டு ரசித்தேன். அப்போது ஆடியோ கேசட் இருந்தது. அதன் பிறகு சிடி வந்தது. அதன் பிறகு கம்ப்யூட்டரில் ப்ளே லிஸ்ட் வந்த போதும் கூட அவருடைய பாடல்கள்தான் முதலில் இருக்கும். என்னுடைய தொகுப்பாளர் பணியிலும் கூட ‘சென்னை 28 ‘படத்தில் ஜெய் கதாபாத்திரத்திற்காக யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையை பயன்படுத்தி கொண்டேன். தற்போது இந்தப் படத்தில் எனக்காக யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதற்காக அவருக்கு மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு கம்ப்ளீட் ரொமான்டிக் டிராமா. யுவன் சங்கர் ராஜாவின் இசையை ரசித்து அனுபவிக்கலாம். இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் மீது நான் வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார். அவர் சினிமாவை மிகவும் நேசிக்கக் கூடியவர். ‘இவர் என் மாணவர்’ என பெருமையாக சொல்வேன்.
இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்வீட்ஹார்ட் அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக இருக்கும். இந்த திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி பிராண்ட் அம்பாசிடராக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பாடல் ஒன்றையும் எழுதி இருக்கிறேன். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில், இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தின் பணிகள் எப்படி நடைபெற்றது என்றால், முதலில் ஒரு இன்ட்ரோ வீடியோ ஒன்றை வெளியிட்டோம். அதில் எனக்கு எதுவும் தெரியாது ஆனால் படத்தின் பணிகள் முடிவடைந்திருக்கும். ஆனால் உண்மையில் இதுதான் நடந்தது. நான் டூர் போய்விட்டு வருவதற்குள் படத்தை நிறைவு செய்திருந்தார்கள். அதன்பிறகு படத்தை பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. அதன் பிறகு தான் எனக்கு உற்சாகம் ஏற்பட்டது. அதன் பிறகு இரண்டு பாடல்களை இணைத்தோம். அதன் பிறகு இன்றைக்கு ஸ்வீட்ஹார்ட் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது. இது இயக்குநர் ஸ்வினீத்தின் கனவு. இவரைப் போன்ற ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் ‘ஸ்வீட்ஹார்ட்: படத்தை பார்க்க திரையரங்குகளில் சந்திப்போம் என்றார்.
கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஸ்ரீ பிஇசையில், கலைமாமணி ஶ்ரீதர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா குரல்களில்A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் ஆல்பம் […]
சினிமாகவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஸ்ரீ பி
இசையில், கலைமாமணி ஶ்ரீதர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா குரல்களில்
A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது “செகண்ட் சான்ஸ்”. மகேஷ் சுப்பிரமணியம், அம்மு அபிராமி நடித்துள்ள இப்பாடல் படக்குழுவினருடன் கோலாகலமாக வெளியிடப்பட்டது. இளம் நட்சத்திரங்களான ரியோ, மாஸ்டர் மகேந்திரன் மற்றும் சௌந்தர் இவ்விழாவில் கலந்துகொண்டு பாடலை வெளியிட்டு, படக்குழுவை பாரட்டினர்.
இந்நிகழ்வினில் நடிகர் ரியோ கூறியதாவது.. இந்த பாடலில் மகேஷ் மற்றும் அபிராமி இருவரின் பர்ஃபாமன்ஸ் மிகப்பிரமாதமாக இருக்கிறது. நானும் மகேஷும், ஜோடி ரியாலிட்டி ஷோவில் ஒன்றாக பங்கேற்றோம். ஜிவி பிரகாஷ் மற்றும் நரேஷ் ஐயர் உடைய பாடல்கள் தனித்தனியாக பிரம்மாதமாக இருக்கும். இதில் அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் பாடி இருக்கிறார்கள். அது இன்னும் அற்புதமாக இருக்கிறது. ஹூக் ஸ்டெப்-க்கு பெயர் போன ஸ்ரீதருடைய நடன அமைப்பு இதில் பிரம்மாதமாக இருக்கிறது. இந்த பாடல் கேட்பதற்கு கேட்சியாகவும், ரசிக்கும் படியும் இருக்கிறது. ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள் என்றார்.

மகேந்திரன் கூறியதாவது.. இந்த பாடலின் தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துக்கள், இதுபோன்ற பாடல்களை நீங்கள் மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும். நடன இயக்குனர் ஸ்ரீதர் மிகவும் திறமையானவர் மற்றும் சினிமா மீது மிகவும் நேசம் கொண்டவர், அவர் இந்த பாடலை மிகச்சிறப்பான பாடலாக மாற்றியுள்ளார், இசையமைப்பாளருடைய பணியும், பேச்சும் மிகச்சிறப்பாக இருக்கிறது. பாடலின் கதாநாயகன் மகேஷ் மிக கடுமையான உழைப்பாளி. மஹேஷ் எப்போதும் சிறந்த முறையில் செயல்பட வேண்டும், மற்றும் திறமையான முறையில் முன்னேற வேண்டும் என கூறுவர். மகேஷ், இப்போது நீங்கள் இருக்கும் இந்த ஸ்டேஜ் மிகவும் சிறியது, விரைவில் நீங்கள் அதற்கு மேலான, மிகப்பெரிய ஸ்டேஜ்களில் சாதனை புரிவீர்கள். அபிராமி மிகவும் திறமையான, அனைத்து மொழி மக்களையும் ஈர்க்க கூடிய வகையில் தனது நடிப்பை கொடுத்து வருகிறார். அவருடைய திறமைக்கும், அடக்கத்திற்கும் அவர் மிகப்பெரிய வெற்றிய பெற வேண்டும். ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள் என்றார்.
நடிகர் சௌந்தராஜன் கூறியதாவது.. இந்த பாடலின் கதாநாயகன் மகேஷ் தான் என்னை அழைத்தார். நாங்கள் சில நிகழ்வுகளில் சந்தித்தோம். அவர் மிகவும் கடின உழைப்பாளி. நடிகை அபிராமி மிகவும் நுணுக்கமான எக்ஸ்பிரசன் கொடுப்பதில் வல்லவர். அவருடைய நடிப்பு மிக அற்புதமாக இருந்தது. இந்த பாடலில் எடிட்டிங் மற்றும் கதை சொல்லும் விதத்தில் ஒரு அழகான ரிதத்தை பின்பற்றி இருக்கிறார்கள். பாடல் வரிகள், இசை அமைப்பு, நடன அமைப்பு என அனைத்தும் இந்த பாடலில் மிகச்சரியாக இருக்கிறது. இந்த குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

நடன அமைப்பாளர் ஸ்ரீதர் கூறியதாவது.. மகேஷ் மற்றும் அம்மு அபிராமி இருவரும் மிக அழகாக நடித்து இருக்கின்றனர். கதையின் கருவை அவர்கள் தெளிவாக வெளிக்காட்டியுள்ளனர். இசையமைப்பாளருடைய கடின உழைப்பு, இந்த பாடலை மெருகேற்றியுள்ளது. ஜீவி பிரகாஷ் மற்றும் நரேஷ் உடைய குரலில் இந்த பாடல் மேலும் சிறப்பாக மாறியுள்ளது. இயக்குநர் மான்டேஜ் மற்றும் நடன அமைப்புகள் என இரண்டையும் சிறப்பாக கோர்த்துள்ளார். இந்த குழு மேலும் நிறைய படங்களை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.
இசையமைப்பாளர் ஶ்ரீ பி கூறியதாவது.., இந்த பாடலை மகேஷ் உணர்வுபூர்வமாக கடத்தி இருக்கிறார். ஜிவி பிரகாஷ் மற்றும் நரேஷ் இருவரும் மெர்சல் அரசன் பாடலிற்கு பிறகு, இந்த பாடலில் தான் இணைந்து இருக்கிறார்கள். அவர்கள் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். நடன இயக்குனர் ஸ்ரீதர் இந்த படத்தில் மெலடிக்கு ஏற்ற ஒரு நடன அமைப்பை கொடுத்து, பாடலை இன்னும் மெருகேற்றி இருக்கிறார். வைரமுத்துவின் பங்களிப்பு அளப்பறியது. இயக்குநர் இந்தப் பாடலுக்காக கடின உழைப்பை கொடுத்து இருக்கிறார். படக்குழுவினர் அனைவரும் கடின உழைப்பை கொடுத்து இந்த பாடலை அற்புதமான பாடலாக மாற்றி இருக்கிறார்கள் என்றார்.

நடிகர் மகேஷ் சுப்பிரமணியம் கூறியதாவது.. தயாரிப்பாளர்கள் மது மற்றும் கார்த்திக் இருவருக்கும் நன்றி என் குறும்படம் பார்த்து, எனக்கு இந்த வாய்ப்பை வழங்கினார்கள். ஒரு கதைக்கருவுடன் இந்த பாடலை உருவாக்கலாம் என்றார் இயக்குநர் சபரி. இது நிறைய பட்ஜெட் தேவைப்படும் பாடல் ஆனால் மிக அழகாக இதை உருவாக்கி விட்டார் சபரி. ராட்சசன் படத்திலிருந்து, நான் அம்மு அபிராமி ரசிகன் மிக அற்புதமான நடிகை என்னுடன் நடித்ததற்கு நன்றி. ஸ்ரீ என் நண்பர் இந்த ஆல்பம் பற்றி சொன்னவுடன் ஆர்வமுடன் வந்தார், மிக அழகான இசையை தந்துள்ளார். ஜீவி மற்றும் நரேஷ் ஐயர் ரசிகன் நான் இந்த பாடல் அவர்கள் பாடியது மகிழ்ச்சி. இந்த ஆல்பத்திற்கான பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார்.
ரியோ, அவரது பிஸியான கால அட்டவணை இருந்தபோதிலும், எனக்காக இந்த வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார். விஜய் டிவியின் ஜோடி நடன நிகழ்ச்சியில் இருந்து தொடங்கியது எங்கள் நட்பு.
மகேந்திரன் தனது படப்பிடிப்பில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் என்னுடைய எல்லா முக்கியமான நிகழ்வுகளுக்கும் எப்போதும் உடனிருப்பவர். எனது பெற்றோருக்கும், மனைவி பிரேமலதாவுக்கும் எனது மனமார்ந்த நன்றி. நான் தூங்கும் வரை அவள் தூங்க மாட்டாள், ஆரம்பத்திலிருந்தே அவள் ஒரு பெரிய ஆதரவாக இருந்தாள். கண்டிப்பாக அனைவருக்கும் இந்தப்பாடல் பிடிக்கும் என்றார்.

நடிகை அம்மு அபிராமி கூறியதாவது.. இங்கிருக்கும் அனைவரும் திறமையானவர்கள் என்பதைத் தாண்டி, அன்பானவர்கள். இந்த பாடல் குழு, ஒரு குடும்பமாக செயல்பட்டு, இந்த பாடலை உருவாக்கி இருக்கின்றனர். இந்த படக்குழுவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. புதுமுக கலைஞர்களுக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. குரல் கொடுத்த ஜீவி பிரகாஷ், நரேஷ் மற்றும் ரக்ஷித்ராவிற்கு நன்றி. ஸ்ரீதர் மாஸ்டர் மிகவும் நேர்த்தியான முறையில் பாடலை உருவாக்கி கொடுத்துள்ளார் என்றார்.
தயாரிப்பாளர் மது கூறியதாவது..
இது ஒரு சாதாரண மாலை உரையாடலுடன் தொடங்கியது, ஊடகத்துறையில் நுழைவது குறித்து எங்களிடம் எந்த தகுந்த அனுபவமும் இல்லை. மகேஷ் எங்களுக்கு எல்லாவற்றையும் விரிவாக விளக்கி சொன்னார், என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை அவர் தெளிவான பார்வையில் வைத்திருந்தார். மகேஷ், தான் என்ன செய்கிறார் என்பதில் உறுதியாக இருந்தார். நடிகர்கள் மற்றும் குழுவினர் யாரையும் நாங்கள் சந்திக்கவில்லை. இங்கு நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் மகேஷ் எங்களுக்கு பதிவிட்டு வந்தார். இயக்குனர் சபரி தான் செய்வதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார், அது எங்களுக்கு அதிக நம்பிக்கையை அளித்தது. இசையமைப்பாளர் ஸ்ரீ பி இசையில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

திறமையானவர்கள் அனைவரும் இந்த பாடலில் இணைந்துள்ளனர். அனைவரும் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். தெளிவான பார்வையுடன் இந்த பாடலை அவர்கள் உருவாக்கி இருக்கின்றனர். பாடல் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
இயக்குநர் சபரி மணிகண்டன் கூறியதாவது, மகேஷ் மூலம் தான் இந்த புராஜக்ட் ஆரம்பமானது, இதற்காக அவர் மிகக் கடினமான உழைப்பைத் தந்துள்ளார். நீங்கள் நடிகராக ஆசைப்படுகிறீர்கள் நான் இயக்குநராக ஆசைப்படுகிறேன் அதனால் இதில் கண்டிப்பாக கதை இருக்க வேண்டும் என்றேன், முழு அர்ப்பணிப்புடன் உழைப்பைத் தந்தார். மது அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார், கார்த்திக் மது இருவரும் எல்லாவற்றையும் எங்களிடம் நம்பி விட்டு விட்டார், அவருக்கு என் நன்றிகள். அம்மு அபிராமி இந்த பாடலை நம்பி வந்தார், ஷீட்டிங்கில் முழு ஒத்துழைப்பு தந்தார். அவருக்கு என் நன்றி. 10 மணிக்கு சொன்னால் 9 மணிக்கு வந்து விடுவார். ஸ்ரீதரின் நடன அமைப்பு, எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த முழுப் பாடலும் என் கூடவே இருந்தார், அவர் பெயரால் தான் இந்த பாடல் தெரிகிறது அவருக்கு என் நன்றி. என் தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோருமே என் நண்பர்கள். படம் வேலை பார்த்தால் கூட எனக்காக வந்து, செய்தனர். ஜீவி, நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா சுரேஷ்க்கு என் நன்றி, இந்தப்பாடல் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்படி செய்துள்ளோம் என்றார்.
காதலில் நாம் செய்யும் தவறுகள், ஈகோ, அவசரம் நம்மை மீறிய கட்டத்திற்கு இழுத்து காதலை அழித்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒருவனுக்கு அந்த தவறுகளை சரி செய்து கொள்ளும் வகையில் ஒரு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கிறது. அதனை அவன் எப்படி பயன்படுத்திக் கொள்கிறான் என்பது தான் இந்த ஆல்பம் பாடலின் கரு. இப்பாடலின் தீமை உருவாக்கி இன்றைய ரசிகர்கள் கொண்டாடும் வண்ணம் இயக்கியுள்ளார் இயக்குநர் சபரி மணிகண்டன்.
7G ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. இந்த படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். ‘ஈரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள இரண்டாவது படம் இது என்பதால் படத்தின் […]
சினிமா7G ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. இந்த படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். ‘ஈரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள இரண்டாவது படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா, எம்.எஸ் பாஸ்கர், ராஜீவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமானுஷ்ய திரில்லர் ஜேனரில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த படத்தின் நாயகன் ஆதி தனது கதாபாத்திரம் குறித்தும் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

நடிகர் ஆதி பேசும்போது, ’ஈரம்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் அறிவழகன் உடன் இணைந்துள்ள படம் இது. எனது இரண்டாவது படமே அறிவழகனுடன் தான். அந்த படம் உருவான சமயத்தில் அவரது எண்ண ஓட்டங்களே வித்தியாசமாக இருந்தது. அதனால் இந்த முறை சேர்ந்து பணியாற்றும் போது இருவருக்கும் ஒரு புரிதல் இருந்தது. அவர் காட்சிகளை உருவாக்கும் விதம், சின்ன சின்ன நுணுக்கங்களை மேற்கொள்வது எல்லாவற்றையும் அழகாக செய்வார். ஈரம் முடிந்த பிறகு நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். அடிக்கடி சில கதைகள் பேசுவோம். ஆனால் அதற்கான ஒரு சரியான டீம் அமையவில்லை. இந்த படத்திற்கு அது சரியாக அமைந்தது. இந்த படத்திற்குப் பிறகு நிறைய படங்கள் கொஞ்சம் விரைவாக பண்ண வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு தோன்றியிருக்கிறது. குறிப்பாக அறிவழகன் உடன் இணைந்து அடுத்தடுத்து பணியாற்ற விரும்புகிறேன்.
லட்சுமி மேனனும் நானும் இந்த படத்தில் நெருக்கமாக நடித்திருந்தாலும் அது மனதளவில் தானே தவிர உடல் ரீதியாக அல்ல. ஏனென்றால் அப்படி ஒரு காட்சி இந்த படத்திற்கு தேவைப்படவில்லை, இந்த படம் காதல் படம் அல்ல, ஆனால் காதலும் இருக்கும், லட்சுமி மேனன் மட்டுமல்ல சிம்ரன், லைலா, ராஜீவ் மேனன் எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட ஒவ்வொருவரின் பங்களிப்புமே இந்த படத்தில் முக்கியமானது.

இந்த படத்தில் அமானுஷ்யங்களை ஆராய்ச்சி செய்யும் பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்திய சினிமாவில் இதுவரை இந்த கதாபாத்திரம் வந்ததில்லை. அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் உண்மையிலேயே இருக்கிறார்கள். அப்படி யாருமே இதுவரை பண்ணாத ஒரு கதாபாத்திரம் செய்யும்போது அது ரொம்பவே சுவாரசியமாக இருக்கும். இதுகுறித்த விஷயங்களை அறிவழகன் ஆய்வு செய்து என்னிடம் விளக்கி சொன்னபோது ரொம்பவே சுவாரசியமாக இருந்தது. கௌரவ் திவாரி என்கிற பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர் இருந்தார். அவர் இப்போது இல்லை. அவரது மரணம் கூட இதுவரை மர்மமாகவே இருக்கிறது. அவரைப் பற்றி நிறைய படித்தேன். நிறைய வீடியோக்கள் பார்த்தேன். ரொம்பவே சுவாரசியமாக இருந்தது. ஒரு இடத்தில் அவருடைய வாழ்க்கையும் என்னுடைய வாழ்க்கையும் கூட பொருந்தி போனது. அவரைப் போலவே நானும் பைலட் பயிற்சி எடுக்க விரும்பினேன். ஆனால் சினிமாவுக்கு வந்துவிட்டேன். அவர் அப்படி பைலட் பயிற்சி எடுக்க சென்ற இடத்தில் தான் பாராநார்மல் நடவடிக்கைகளை உணர்ந்திருக்கிறார். அதற்கு பிறகு தான் அது பற்றி படிக்க வேண்டும் என நினைத்து அதில் முழுமூச்சுடன் இறங்கி மும்பையில் அலுவலகம் அமைத்து நிறைய விசாரணைகளை அவர் செய்திருக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமயங்களில் கூட சில அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தோம். அது எங்களுக்கு நன்றாகவே தெரிந்தது. உடனே மற்றவர்களையும் உஷார்படுத்தி சீக்கிரமாக படப்பிடிப்பை நடத்தி விட்டு கிளம்புவோம். சமீபத்தில் ஒரு டீம் இன்டர்வியூ நடைபெற்றபோது கூட அங்கு அந்த அமானுஷ்யத்தை உணர முடிந்தது. சில நாட்களிலேயே இது கொஞ்சம் பழகிவிட்டது என்று சொல்லலாம். ஈரம் படத்தில் பணியாற்றும்போது எனக்கு பேய்கள் மீது நம்பிக்கை இல்லை. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்காக சில ஆராய்ச்சிகளை நான் படிக்கும்போது, வீடியோக்களை பார்க்கும்போது அமானுஷ்ய விஷயங்கள் இருக்கலாம் என ஒரளவுக்கு நம்பத்தான் தோன்றுகிறது.

தமிழ், தெலுங்கு என மொழிகள் பிரித்துப் பார்த்து படம் பண்ணுவதில்லை. ஒருவர் கதை சொல்ல வரும்போது அது எந்த மொழி என்பதை விட, அது நமக்கு பிடிக்கிறதா, ஒத்து வருமா என்று தான் பார்க்கிறேன். தெலுங்கில் அதிகம் நடிப்பது போன்று தோற்றம் இருக்கலாம். ஆனால் இந்த வருடம் தமிழில் சப்தம், மரகத நாணயம்-2 என அடுத்தடுத்து படங்கள் வர இருக்கின்றன. மரகத நாணயம்-2 படப்பிடிப்பு அடுத்த மாதம் அதே குழுவினருடன் துவங்க இருக்கிறது.
தெலுங்கில் இப்போது பாலகிருஷ்ணா உடன் இணைந்து அகாண்டா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறேன். சப்தம் படத்தின் டிரைலரை அவரும் பார்த்து விட்டு பாராட்டினார். ஹீரோவா, வில்லனா எது அதிக விருப்பம் என்று கேட்டால் ஹீரோவை விட வில்லனாக நடிப்பதற்கு தான் விருப்பம். அந்த கதாபாத்திரத்துக்கு என பெரிதாக எல்லைகள் எதுவும் இருக்காது என்பதால் வில்லனாக நடிப்பது ஒரு சுவாரஸ்யம் தான். அஜித் விஜய் போன்றவர்களுக்கு வில்லனாக நடிக்க ஆசை இருந்தாலும், கதை தானே அதை தீர்மானிக்க வேண்டும். ஆனால் ஹீரோவே சில படங்களில் வில்லன் போல தான் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். அப்படி இருந்தால் தானே பிடிக்கிறது. ரசிகர்களுக்கு எது பிடிக்கிறதோ அதைத்தானே கொடுக்க வேண்டும்.
வெற்றி அடைந்த படத்துக்கு இரண்டாம் பாகம் எடுப்பது தவறில்லை. ஆனால் நல்ல கதை இருந்தால் மட்டுமே எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் முதல் பாகத்தின் பெருமையை குறைத்தது போல் ஆகிவிடும். மிருகம் இரண்டாம் பாகத்திற்காக என்னிடம் வந்தார்கள். அவர்கள் சொன்ன கதையில் எனக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை. அதனால் மறுத்து விட்டேன் வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளலாமா என்றார்கள். உங்கள் விருப்பம் என சொல்லி விட்டேன்.

ஒரு தயாரிப்பாளராக நான் இருந்தால் கமர்சியல் படம் எடுக்கத்தான் விரும்புவேன். ஆனால் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புதிய துணிச்சலான விஷயத்தை படமாக்க முன்வரும் தயாரிப்பாளர்கள் குறைவுதான். அதை நான் ஒப்புக் கொண்டாலும் கூட அதற்கு ஒரு டீம் அமைவது ரொம்பவே முக்கியம். அது சிரமமும் கூட. நான் படங்களை மெதுவாக பண்ணுவதற்கு அதுவும் ஒரு காரணம். டைரக்ஷனில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் ஒரு படத்தை டைரக்ஷன் பண்ணும் அளவிற்கு பொறுமை இல்லை. அது ரொம்பவே மன அழுத்தம் தரக்கூடியது. அதனால் நடிப்பு மட்டுமே இப்போதைக்கு போதும்.
திருமணம் ஆகிவிட்டதால் மனைவியுடன் இணைந்து தான் கதை கேட்பேன் என்பதெல்லாம் இல்லை. ஆனால் ஒரு கதை கேட்ட பின்பு நண்பர்களிடம் சொல்வது போல அவரிடம் சொல்லி அது குறித்து பேசி கொள்வேன். அவருக்கும் எனக்கு எந்த மாதிரி கதை பிடிக்கும் என்று தெரிவதால் என் பாயிண்ட் ஆப் வியூவில் இருந்துதான் யோசிப்பார். ஆனாலும் இறுதி முடிவை நான் தான் எடுக்கிறேன்.
இப்போது கதாநாயகிகளுடன் இணைந்து நெருக்கமாக நடிக்க வேண்டி இருந்தால் முன்கூட்டியே மனைவி நிக்கி கல்ராணியி’டம் அது பற்றி சொல்லி விடுவேன். அவரும் சினிமா துறையில் இருந்தவர் என்பதால் கதைக்கு தேவைப்படுகிறதா இல்லையா என்பதை புரிந்து கொள்வார். கதைக்கு தேவை இல்லை என்றால் நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார்.
யாவரும் நா காக்க படத்திற்கு பிறகு எனது சகோதரர் இன்னொரு கதை சொல்லியிருக்கிறார். ரொம்பவே சுவாரசியமாக இருக்கிறது. சரியான நேரம் வரும்போது அதில் நடிப்பேன் என்று கூறினார்.
கனா புரொடக்ஷன்ஸ், வி.பி கம்பைன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், பாலாஜி சக்திவேல், ஒய். ஜி மகேந்திரன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிப்பில், நிதின் வேமுபதி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கூரன்”. கொடைக்கானலில் ஒரு நாய் தனது குட்டியுடன் நடந்து […]
விமர்சனம்கனா புரொடக்ஷன்ஸ், வி.பி கம்பைன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், பாலாஜி சக்திவேல், ஒய். ஜி மகேந்திரன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிப்பில், நிதின் வேமுபதி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கூரன்”.
கொடைக்கானலில் ஒரு நாய் தனது குட்டியுடன் நடந்து செல்கிறது. அப்போது ஒருவர் குடித்துவிட்டு பாடாடிலை சாலையில் எறிந்து விட்டு வேகமாக அலைபாய்ந்து செல்லும் போது, நாயின் குட்டியை ஏற்றிவிட்டு உற்சாகமாக செல்கிறார். குட்டியின் மரணத்தை தாங்கமுடியாமல், அந்த காரை சிறிது தூரம் பின் தொடர்ந்து, பின்னர் காவல் நிலையம் செல்கிறது. காவல்நிலையத்தில் உள்ளவர்கள் விரட்டி அடிக்க, காவல்நிலைய வாசலிலேயே காத்திருக்கிறது.

இதற்கிடையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ( தர்மராஜ் ) எஸ்.ஏ சந்திரசேகர் காவல்நிலையத்திற்கு வருகிறார். அங்கு உதவி ஆய்வாளர் ஏன் நீங்கள் பத்து ஆண்டுகளாக எந்த வழக்குகளையும் எடுக்காமல் இருக்கிறீர்கள் ? உங்களைப் போன்ற திறமையான வழக்கறிஞர்கள் வாதாடினால்தானே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என கூற, அதை கேட்டுக்கொண்டே வெளியே வருகிறார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த நாய் அவரை பின்தொடர்ந்தது செல்கிறது. பின்னர் இரண்டு நாட்களாக அவரையே பின்தொடர, வழக்கறிஞர் தர்மராஜ் நாய் ஏதோ சொல்ல வருவதை உணர்ந்து, அதை பின்தொடர்ந்தது செல்ல, தனது குட்டி அடிபட்ட இடத்தையும், புதைக்கப்பட்ட இடத்தையும் காண்பிக்கப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து நடந்த சம்பவங்களை யூகித்து, நாய்க்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என புகார் மனுவுடன், காவல்நிலையத்திற்கு நாயுடன் செல்கிறார்.
புகார் மனுவை காவல்நிலையத்தில் ஏற்றுக்கொண்டார்களா ? குட்டியை பறிகொடுத்த தாய் நாய்க்கு நீதி கிடைத்ததா ? இல்லையா ? என்பது மீதிக்கதை…

படம் ஆரம்பித்ததிலிருந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது ஜான்சியின் ( நாய் ) நடிப்பு. இந்த உலகில் மனிதர்கள் மட்டுமல்ல, நாய் உள்ளிட்ட ஐந்தறிவு ஜீவன்களும் வாழத் தகுதி படைத்தவர்கள், அனைவருக்கும் ஒரே சட்டம் தான் என அரசியல் சாசனம் சொல்வதை, தனது திரைக்கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குநர். குட்டியை பறிகொடுத்த தாய் நாயின் உணர்வுகளையும், பார்வையற்றவரின் உணர்வுகளையும் ஆதாரங்களாக ஏற்று, நீதி வழங்கலாம் என்பதையும் இயக்குநர் பதிவு செய்துள்ளார்.
முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள எஸ்.ஏ. சந்திரசேகர், தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஓய்.ஜி. மகேந்திரன், ஜார்ஜ் மரியான், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு […]
சினிமாஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், சுதா கொங்காரா, பா. ரஞ்சித், அஸ்வத் மாரிமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி, அழகம்பெருமாள், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கும் இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, மார்ச் மாதம் ஏழாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினருடன் தமிழ் திரையுலகத்தின் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசுகையில், ‘கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்டத்தினை பார்க்கும் போது ஜீ.வி. பிரகாஷ் குமாரின் கடும் உழைப்பு தெரிகிறது. இப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கமல் பிரகாசுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சினிமா மீது பேரார்வம் கொண்டிருக்கும் தமிழகத்தின் குக்கிராமங்களில் உள்ள இளம் தலைமுறையினரை கண்டறிந்து அவர்களுக்கு அறக்கட்டளை மூலம் சினிமாவின் அனைத்து நுட்பங்களையும் கற்பித்து படைப்பாளிகளாக உருவாக்கும் உழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இயக்குநர் வெற்றிமாறனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இசைஞானி இளையராஜா , இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஆகியோருக்கு பிறகு பின்னணி இசையில் ஜீ வி பிரகாஷ் குமாரின் திறமை பளிச்சிடுகிறது. ‘அசுரன்’ படத்தினை தயாரித்தேன். அந்த திரைப்படத்திற்கு ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்தபோது அப்படத்தில் நடித்த வெங்கடேஷ், தமிழ் ‘அசுரன்’ திரைப்படத்தின் பின்னணி இசை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆலோசனை சொன்னார். அதனை ஜீ.வி பிரகாஷிடமும், வெற்றி மாறனிடமும் சொன்ன போது எந்தவித தயக்கமில்லாமல் உடனே பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்தனர். ஜீ வி பிரகாஷ் குமாரின் பின்னணி இசையால் அந்தப் படம் தெலுங்கிலும் பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ராசா’ பாடல் ஹிட் ஆகும்.
வெற்றிமாறனிடம் பேரலல் யுனிவர்ஸ் என்றால் என்ன? என கேட்டேன். எது உச்சமோ அதற்கு நிகரானது என பதிலளித்தார். அந்த வகையில் இந்த நிறுவனம் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெறும். இந்த நிறுவனம் புதிய இளம் திறமையாளர்களை கண்டறிந்து வாய்ப்பு கொடுத்து தொடர்ந்து படங்களை தயாரிக்க வேண்டும் என வாழ்த்தி விடைபெறுகிறேன் என்றார்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் பேசுகையில், அடியே படத்தின் படப்பிடிப்பின் போது ஜீ. வி. பிரகாஷ் குமார் இது போன்றதொரு புதிய ஜானரில் கதையைக் கேட்டிருக்கிறேன். அதில் பணியாற்றுகிறீர்களா? என கேட்டார். கதையைக் கேட்டு சம்மதம் தெரிவித்தேன். படத்தில் பணியாற்ற தொடங்கும் தருணத்தில் இந்த படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது. சர்வதேச தரத்தில் இந்த படைப்பு உருவாக வேண்டும் என அவருடைய விருப்பத்தை தெரிவித்தார். படத்தில் பணியாற்றும்போது ஒளிப்பதிவு தொடர்பான நுட்பங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர் என்பதால் இந்த படத்திற்காக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள் என்றார். அவர் சொன்னது போல் இந்த படத்தில் வி எஃப் எஸ் காட்சிகள், கருவிகள், ஒளி அமைப்பு, அரங்கம் என அனைத்து விசயத்திலும் பெரிய பங்களிப்பை வழங்கினார்.
இந்தப் படத்தை தயாரிப்பதுடன் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியமாக இருக்கிறது. அதற்காகவும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காகவும் இந்த படத்தில் பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்ததற்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் பணியாற்றிய ஏனைய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கலை இயக்குநர் எஸ். எஸ். மூர்த்தி பேசுகையில், இந்தப் படத்திற்காக கடலும், கப்பலும் இணைந்த வகையில் பிரத்யேக உள்ளரங்கம் ஒன்றை வடிவமைப்பது தான் சவாலாக இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கியதற்காக தயாரிப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் சுதா கொங்காரா பேசுகையில், ஜீவி பிரகாஷ் குமாரை எனக்கு 20 ஆண்டுகளாக தெரியும். அன்றிலிருந்து இப்போது வரை ஏதாவது புதிதாக சாதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். சினிமா மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை போல் வேறு யாரிடமும் நான் பார்க்கவில்லை. அவர் சொன்னது மட்டும் இல்லாமல் செய்து காட்டியிருக்கிறார். இசையமைப்பாளராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும்.. சினிமாவில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே இருக்கிறார். இவருடைய தயாரிப்பு நிறுவனம் என்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் போன்றது. இங்கு ஏராளமான இளம் திறமையாளர்களை காண்கிறேன். இயக்குநர் கமல் பிரகாஷின் உழைப்பு திரையில் தெரிகிறது. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார்.

இயக்குநர் கமல் பிரகாஷ் பேசுகையில், இந்த நாளுக்காக நான் எத்தனை நாள் கடுமையாக உழைத்திருக்கிறேன், கனவு கண்டிருக்கிறேன் என்பதை விட, இந்தப் படத்திற்கான எங்களுடைய உழைப்பு நிச்சயமாக திரையில் பேசும் என நம்புகிறேன். நான் மிகக் குறைந்த பட்ஜெட்டில் குறும்படங்களை இயக்குபவன். ஆனால் நமக்கு ஒரு ஐடியா தோன்றும். அந்த ஐடியாவிற்கு பட்ஜெட் கிடையாது. ஜீவி பிரகாஷிடம் தொடர்ந்து ஆறாண்டுகள் பயணித்திருக்கிறேன் அந்தப் பயணத்தில் ஒரு நாள் இப்படத்தை பற்றிய ஐடியாவை அவரிடம் சொன்னேன். 20000 ரூபாயில் குறும்படம் இயக்கும் என்னை நம்பி கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் முதலீடு செய்து ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் தயாரிப்பாளரான ஜீ வி பிரகாஷ் குமார். இதற்காக அவருக்கு முதலில் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வலிமை அதன் உருவாக்கம் தான். இதற்காக தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பை வழங்கிய ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், படத்தொகுப்பாளர், சண்டை பயிற்சி இயக்குநர், வி எஃப் எக்ஸ் குழு ஆகிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தின் திரைக்கதையில் ஆக்சன் தனித்து இல்லாமல் திரைக்கதையுடன் இணைந்தே இருக்கும். இதனால் சண்டை பயிற்சி இயக்குநர் திலிப் சுப்பராயனின் பங்களிப்பும் அதிகம். இதனால் திட்டமிட்ட நாட்களுக்குள் திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்தோம். இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் சேத்தன், அழகம்பெருமாள், குமரவேல் ஆகியோர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என உறுதியாக நம்புகிறேன் என்றார்.

நடிகை திவ்யபாரதி பேசுகையில்,
கிங்ஸ்டன் படத்தின் கதையை இயக்குநர் கமல் பிரகாஷ் என்னிடம் சொல்லும் போது, எந்த மாதிரியான தோற்றத்தில் கதாபாத்திரமாக திரையில் தோன்ற வேண்டும் என்பதற்கான முன்மாதிரி வீடியோ ஒன்றினை காண்பித்தார். அதை பார்த்தவுடன் இந்த படத்தில் நிச்சயம் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். ‘பேச்சுலர்’ படத்திற்குப் பிறகு ஜீவி பிரகாஷ் குமாருடன் இரண்டாவது முறையாக இணைந்து நடித்திருக்கிறேன். மிகவும் இனிமையாக பழகக்கூடியவர். நான் சில படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஜீ.வி. பிரகாஷ் குமாருடன் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் வெளியாகிறது. இதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குநர் கமல் பிரகாஷ் மிகவும் அமைதியானவர். பொறுமையானவர். நிதானமானவர். படப்பிடிப்பு தளத்தில் அவர் யாரிடமும் அதிர்ந்து பேசி நான் பார்த்ததே இல்லை. இதுவே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக இயக்குநர்களுக்கு நிறைய டென்ஷன் இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பின் போது தண்ணீரில் நனைந்து கொண்டே இருப்போம். எனக்கு தலை முடி நீளம் அதிகம் என்பதால் எப்போதாவது சின்ன அசௌகரியம் ஏற்பட்டாலும் உடன் நடிக்கும் நடிகர்கள் சகஜமாக பேசி அதனை இயல்பாக்கி விடுவார்கள். அதனால் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் நானும் சில ஆக்சன் காட்சிகளில் நடித்திருக்கிறேன் என்றார்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், இப்படத்தின் இயக்குநர் கமல் பிரகாஷ் என் நண்பர். அவரை கடந்த ஆறு ஆண்டுகளாக ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆதரவு வழங்கி வந்தார். அதற்காக ஜீ வி பிரகாஷ் குமாருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு முறை இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். பிரம்மாண்டமாக அரங்கம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்து வியந்தேன். மகிழ்ச்சியும் அடைந்தேன். இயக்குநரின் கற்பனைக்கு வடிவம் கொடுத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துக்களையும் நன்றியையும் சொல்கிறேன்.
திவ்ய பாரதியும், ஜீவி பிரகாஷ் குமாரும் ‘பேச்சுலர்’ படத்தில் நன்றாக நடித்திருந்தார்கள். அவர்களுடைய கெமிஸ்ட்ரியும் நன்றாகவே இருந்தது. இந்தப் படத்திலும் அது இருக்கும் என்று நம்புகிறேன்.
‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் ஜீவி பிரகாஷ் குமாரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ‘தலைவா’ படத்தில் வாங்கண்ணா வாங்கண்ணா படத்திலும் ஜீ வி பிரகாஷ் நடனமாடிருப்பார். ஆனால் அதன் பிறகு அவர் நடிகராகி கலக்கிக் கொண்டிருக்கிறார். இயக்குநர் கமல் பிரகாஷ் அடிப்படையில் தொழில்நுட்ப திறமை மிக்கவர். திரையுலகில் ஏதாவது புதிய தொழில்நுட்பம் அறிமுகம் ஆகியிருக்கிறது என்றால், அதை பற்றி எங்கள் குழுவில் முதலில் தெரிந்து கொண்டு அதை பகிர்ந்து கொள்பவர் கமல் பிரகாஷ். ‘முதல் முத்தம்’ எனும் என்னுடைய குறும்படத்திற்கு விருது கிடைக்கவில்லை என்றாலும்.. அந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், ‘நீ சிறந்த எழுத்தாளராக வருவாய்’ என வாழ்த்தினார். அவருடைய வாழ்த்துக்களால் தான் ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய படங்களை எழுதி, இயக்க முடிந்தது. என்னுடைய இந்த வெற்றிக்கு உங்களின் வாழ்த்துகள் தான் காரணம். அதனால் இந்த தருணத்தில் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் பா ரஞ்சித் பேசுகையில், இந்த படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து ஜீ.வி. பிரகாஷ் குமார் இப்படத்தைப் பற்றி எப்போதும் உற்சாகமாக பேசிக் கொண்டே இருப்பார். அதனால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். ஒரு முதல் பட இயக்குநருக்கு பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் அவருக்கு வாய்ப்பு அளித்த ஜீ.வி பிரகாஷ் குமாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கலைஞன் மீது வைக்கும் நம்பிக்கை மிக முக்கியமானது. புது கான்செப்ட் மீது நம்பிக்கை வைப்பது. அதிலும் குறிப்பாக வி எஃப் எக்ஸ் குழுவை நம்பி ஒரு படம் எடுப்பது சவாலானது. இது தொடர்பாக ஜீ வி பிரகாஷ் குமாரிடம் ஒரு முறை வி எஃப் எக்ஸ் பட்ஜெட் என்ன? என்று கேட்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் சொன்ன பட்ஜெட்டை விட படத்தின் தரம் உயர்வாக இருக்கிறது. இதை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பார். இது நிச்சயமாக திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்று முன்னோட்டத்தை பார்த்ததும் தெரிந்தது. நடிகர்கள், விசுவல் மியூசிக் எல்லாம் பிரம்மாண்டமாக இருந்தது.
இன்றைய சூழலில் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தை உருவாக்கி அதை வெளியிடுவதில் பெரிய சவால் இருக்கிறது. இதுபோன்ற கன்டென்ட் ஓரியண்டட் படங்கள் தான் மக்கள் விரும்புகிறார்கள். ஜீ.வி யுடன் இணைந்து பணியாற்றும் போது நாம் சொல்ல நினைக்கும் விசயங்களை சரியாக புரிந்து கொண்டு பணியாற்றுவார். அதுதான் அவருடைய தனித்துவம். என்னைப் போன்ற படைப்பாளிகளுக்கு இதுதான் தேவை. இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. அவர் இந்த குழு மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். அதனால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

அறிமுக இயக்குநர் கமலுக்கும் வாழ்த்துக்கள். முதல் பட இயக்குநருக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கிறது. முதல் படம் இயக்கி, இரண்டாவது படம் இயக்கும்போதும் பலருக்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. குறும்படத்தை இயக்கிய அனுபவத்துடன் இதுபோன்ற பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படத்தில் பணியாற்றுவது என்பது உங்களுக்கு கிடைத்த முக்கியமான விசயமாக நான் பார்க்கிறேன். இதில் பணி புரிந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
சின்ன பட்ஜெட் படங்கள், கன்டென்ட் படங்களுக்கு திரையரங்குகளில் ஏராளமான ரசிகர்கள் வருகை தருகிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதற்கு ‘குடும்பஸ்தன்’, ‘டிராகன்’ போன்ற படங்களின் வெற்றி தான் சிறந்த உதாரணம். சிறிய முதலீட்டு படங்களை தயாரிப்பதில் சவால் இருந்தாலும், அதனை வெளியிடுவதில் சவால் இருந்தாலும், ஓ டி டி தளத்தில் விற்பனை செய்வதில் சவால் இருந்தாலும், தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை திரையரங்குகள் தான். இதனால் என்னை போன்ற இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும், அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ஜீ.வி. பிரகாஷ் குமார் சோர்வே இல்லாமல் எப்போதும் உற்சாகமாக பணியாற்றிக் கொண்டே இருப்பார். இதுதான் அவரின் சிறப்பான அடையாளம். எந்த இயக்குநர் எந்த தருணத்தில் அவரை சந்திக்க வேண்டும் என்று அவரை தொடர்பு கொண்டாலும், உடனடியாக தொடர்பு கொண்டு சரியான பதிலை சொல்வார். அவர் பணி செய்வதற்கு ஒருபோதும் மறுப்பு சொன்னதே இல்லை. இது அவருடைய தனித்திறமை என்றே சொல்லலாம். பத்தாண்டு காலம் இசையமைப்பாளராக பணியாற்றிய பிறகு அவர் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அப்போது நான் இசை பணி நன்றாக தானே சென்று கொண்டிருக்கிறது எதற்கு திடீரென்று நடிப்பு ? என்று கேட்டேன். ஒரே அறையில் இருந்து பணியாற்றுவது சோர்வை தருகிறது. நான் வெளியில் வந்து பணி செய்ய விரும்புகிறேன் என்றார்.
ஆனால் அவர் நடிக்க வந்த பிறகு அவருடைய இசை திறமை மேலும் விரிவடைந்தது. அவரே நடிகராக மாறிப் போனதால் தன்னுடைய இசையை அவரால் எளிதாக மேம்படுத்தி கொள்ள முடிந்தது. அத்துடன் மட்டுமல்லாமல் அவர் கற்றுக் கொள்வதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறார். இந்தப் படத்திலும் ஒரு நடிகராகவும், இசையமைப்பாளராகவும், தன்னை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார். சிறிது நாள் முன் ஒரு நாள் திடீரென்று போன் செய்து நான் தயாரிப்பாளராக போகிறேன் என்றார். வாழ்த்து சொல்லிவிட்டு யார் இயக்குநர் ? என்று கேட்டேன். புது இயக்குநர். ஸீ ஃபேண்டஸி ஜானர் படம். இந்தியாவில் இதுதான் ஃபர்ஸ்ட் என உற்சாகம் குறையாமல் சொன்னார். இந்தப் படத்தின் மீது அவர் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்.

இந்த படத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான அரங்கத்தை பார்வையிட சென்று இருந்தேன். அந்த அரங்கம் உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்தியது. கடல் அலை, படகு, மழை, பனி அதன் இயக்கம் பற்றி தொழில்நுட்ப ரீதியாக விவரித்தார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு என் மனதில் ஒரு கணக்கை போட்டு பட்ஜெட் எவ்வளவு? என்று கேட்டேன். நான் எதிர்பார்த்த பட்ஜெட்டில் 10% தான் இதன் பட்ஜெட் என்று சொன்னார்கள். உண்மையில் அதிசயித்தேன். சின்ன பட்ஜெட்டில் பிரம்மாண்டமான அரங்கம். இதற்காகவே உழைத்த அனைவருக்கும் நன்றி. நடிகர்கள் குறிப்பிட்டது போல் இந்த பிரம்மாண்டமான அரங்கத்தில் நடிப்பது கடினம் தான். சவாலானது தான். அவர்களின் கடின உழைப்பு திரையில் ரசிக்கும் வகையில் இருக்கிறது.
இந்த அளவிற்கு அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வழங்கிய ஜீ.வி. பிரகாஷ் குமாருக்கும், அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழும் இயக்குநருக்கும் வாழ்த்துக்கள். இது அடிப்படையில் தொழில்நுட்ப ரீதியிலான படைப்பு. தொழில்நுட்பக் கலைஞர்கள் நேர்த்தியாக உழைத்திருக்கிறார்கள். இந்த படத்தின் கமர்சியல் வெற்றி ஜீ வி பிரகாஷ் குமார் போன்ற சினிமா மீது ஆர்வமுள்ள தயாரிப்பாளருக்கு மேலும் பல தயாரிப்புகளை உருவாக்குவதற்கு உதவும். ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர், இசையமைப்பாளர், நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், இயக்குநர் வெற்றிமாறன் நம்முடைய வீட்டில் இருக்கும் அம்மா போன்றவர். அம்மா எப்போதும் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக எச்சரிக்கை செய்து கொண்டு இருப்பார். அதன் பிறகு அவர்கள் தான் வழி காட்டுவார்கள். நான் நடிக்கிறேன் என்று சொன்னவுடன் முதலில் மறுப்பு தெரிவித்தாலும், அதன் பிறகு நடிப்பு பயிற்சிக்காக என்னை அனுப்பி வைத்ததும் வெற்றி மாறன் தான். 18 வருடங்களாக அவரும் நானும் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். தெறி’, ‘அசுரன்’ என இரண்டு படங்கள் தாணு தயாரிப்பில் பணியாற்றி இருக்கிறேன். இரண்டுமே வெற்றி. அதனால் அவர் எனக்கு ராசியான தயாரிப்பாளர். தற்போது ‘வாடிவாசல் ‘ படத்திலும் இணைந்திருக்கிறோம்.
இயக்குநர் சுதா கொங்காரா எனக்கு 20 ஆண்டுகால நண்பர் தான். அவர்கள் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தபோது, நான் ஏ ஆர் ரகுமானிடம் உதவியாளராக இருந்தேன். அவர்களுக்கு மேடை பயம் இருக்கிறது எப்போதும் மேடைக்கு வருகை தர மாட்டார். என்னுடைய அழைப்பிற்காக இங்கு வருகை தந்தார். அவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா ரஞ்சித்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். ‘தங்கலான்’ திரைப்படத்திற்கு இசையமைத்தேன். அது ஒரு மறக்க இயலாத அனுபவம். அவர் தன்னுடைய உதவியாளர்களை இயக்குநர்களாக உயர்த்துகிறார். அதனால் அவருடன் இணைந்து பணியாற்றும்போதெல்லாம் எனக்கும் புதிய உற்சாகம் பிறக்கும்.
படப்பிடிப்பு தளத்தில் நடிகை திவ்யா பாரதி நடிக்கும் போது மட்டும் எந்த ஒரு திருத்தத்தையும் இயக்குநர் கமல் சொல்ல மாட்டார். இது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அதன் பிறகு தான் அவருடைய மனைவி பெயரும் திவ்யபாரதி என்று தெரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் அவர் அவருடைய மனைவி மீது வைத்திருக்கும் அன்பை தெரிந்து கொண்டேன்.
இது ஒரு பெரிய கனவு தான். ஹாலிவுட்டில் வெளியாகும் ஹாரி பாட்டர் போன்ற படங்களை பார்க்கிறோம். இதுபோல் ஏன் நம்மால் உருவாக்க முடியாது என யோசிப்பேன். அவர்கள் அவர்களுடைய பாட்டி கதையை எடுக்கும் போது நாம் நம்முடைய பாட்டி கதையை எடுக்கலாமே என யோசித்தோம். நம்ம ஊரு பாட்டி கதை போன்ற கதை தான் கிங்ஸ்டன். ஒரு ஃபேண்டஸி. அதை நம்முடைய கதைக்களத்திலிருந்து சொல்ல வேண்டும். அதாவது நம்ம ஊரு ஹாரி பாட்டர் எப்படி இருப்பார்? இதுபோன்ற எண்ணங்களை கமல் என்னிடம் கதையாக சொன்ன போது எனக்குள் ஏற்பட்டது. இந்த திரைப்படத்தில் ஜீ ஸ்டுடியோ இணைந்து, முழு ஆதரவை வழங்கினார்கள். இதற்காக இந்த தருணத்தில் அக்சய் மற்றும் வினோத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் கனவில் அவர்களும் ஒரு பகுதியாக இணைந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் முதல் காட்சியை இயக்கி கொடுத்த கமல்ஹாசனுக்கும் நன்றி. அவரிடம் சென்று நான் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் தொடங்கும் முதல் படத்தின் முதல் காட்சியை நீங்கள் தான் இயக்க வேண்டும் என்று என் விருப்பத்தை சொன்னேன். அவரும் எந்தவித மறுப்பும் செல்லாமல் உடனடியாக வந்து இயக்கி தந்தார். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்தப் படத்திற்காக ஒத்துழைப்பு வழங்கிய ஜீ ஸ்டுடியோஸ், வி எஃப் எக்ஸ் டீம், திலீப் சுப்பராயன், நீரவ் ஷா, கோகுல் பினோய், எஸ். எஸ். மூர்த்தி, ஷான் லோகேஷ், பூர்ணிமா, பாடலாசிரியர்கள், நடன இயக்குநர்கள், கோபி பிரசன்னா, சிங்க் சினிமா, சரிகம, அழகம் பெருமாள், சேத்தன், குமரவேல், சபுமோன், ஆண்டனி, அருண், ராஜேஷ், திவ்யபாரதி, யுவராஜ், தீவிக், வெங்கட் ஆறுமுகம், தினேஷ் குணா, கமல் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
என்றார்.
தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் […]
சினிமாதமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பாராட்டை பெற்றுள்ளது.
இந்த நிலையில் மர்மர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், திரைப்படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், ஒலி வடிவமைப்பாளர் கெவின் ஃபிரடெரிக், படத்தொகுப்பாளர் ரோஹித் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் படத்தின் ஒலி வடிவமைப்பாளர் கெவின் பேசும் போது, இந்தப் படத்தின் இயக்குநரை முதலில் சந்தித்த போது, படத்தில் இசை இல்லை என்று கூறிவிட்டார். அது பெரிய சவாலாக இருந்தது. எல்லா படங்களும் இசையை சார்ந்து உருவாக்கப்படுகிறது. ஆனால், ஹாரர் திரைப்படத்தில் இசை இல்லாமல் எப்படி பணியாற்ற போகிறோம் என்று ஆலோசனை செய்தோம். அந்த வகையில், இந்தப் படம் வித்தியாசமாக உருவாகி இருக்கிறது. இவை அனைத்தும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.
கலை மற்றும் புரொடக்ஷன் இயக்குநர் ஹாசினி பேசும் போது, இந்தப் படம் மிகவும் வித்தியாசமான ஒன்று என்பதை டிரெய்லரில் இருந்தே தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஹாரர், திரில்லர், பழிவாங்கல் என பலவிதமான கதைகளை நாம் திரையில் பார்த்திருப்போம். ஆனால் ஃபவுண்ட் ஃபூட்டேஜில் இப்படியொரு கதையை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. இயக்குநரை பற்றி ஒருவிஷயம் மட்டும் சொல்ல வேண்டும். இந்தப் படம் ரிலீசுக்கு பிறகு இயக்குநரை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரியும். அவருக்கு நல்ல பெயரெடுத்துக் கொடுக்கும் என்றார்.
மர்மர் படத்தின் சிறப்பு ஒப்பனையாளர் செல்டன் பேசும் போது, இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். மிகவும் சவாலாக இருந்தது. இந்தப் படத்தில் வரும் உண்மை கதாபாத்திரத்தை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக உண்மையில் பார்த்தது நான் தான். இதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பிறகு திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து, அங்கு எனக்கு சுத்திப் போட்டார்கள். அதன்பிறகு வந்துதான் இந்தப் படத்தில் பணியாற்றினேன். ஆனால் நான் அதை அவர்களிடம் கூறவேயில்லை. படம் முடிந்த பிறகு இதை சொன்னதும் எல்லோரும் அலறினார்கள். இந்தப் படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கொடுத்த படக்குழுவுக்கு நன்றி. என்னைப் போல் மேலும், பல இளைஞர்கள் இந்த துறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கும் வாய்ப்பளித்து, ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

மர்மர் பட விநியோகஸ்தர் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் குகன் பேசியதாவது, “பத்திரிகை, ஊடகத்தினர் அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தை தயாரித்த எஸ்.பி.கே. பிக்சர்ஸ் பிரபாகரன், மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் இயக்குநர் ஹேமந்த் நாராயணன், படத்தொகுப்பாளர் ரோஹித், ஒளிப்பதிவாளர் ஜேசன், ஒலி வடிவமைப்பாளர் கெவின் மற்றும் கலை இயக்குநர் ஹாசினி ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒப்பனையாளர் செல்டன் தனது பணி குறித்து பேசினார். ஒட்டுமொத்த குழுவும் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். முதலில் இயக்குநர் இந்தப் படத்தின் கதையை சொன்ன பிறகு டிரெய்லரை காண்பித்தார். உங்களை போல் தான் நானும் டிரெய்லரை பார்த்தேன். அதன்பிறகு படத்தை போட்டு காண்பிப்பதாக கூறினார். தமிழில் ஒரு படம் முழுக்க ஃபவுண்ட் ஃபூட்டேஜ் மற்றும் மோஷன் சிக்னஸ் உள்ள முதல் படம் இதுதான். இந்த அற்புதமான குழுவினருக்கு வாழ்த்துக்கள். இது மிகவும் இளமையான குழு. சமீபத்தில் நாம் மோஷன் சிக்னஸ் வீடியோ பார்த்தோம். நடிகர் அஜித் குமார் ஓட்டிய காரின் கேபின் பகுதியில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கும். அது கார் எங்கெங்கு செல்கிறது என்பதை நமக்கு காட்டும். உண்மையில், அந்த கார் சென்ற வேகம் மணிக்கு 320 கிலோமீட்டர்கள் ஆகும். இத்தகைய கேமரா ரேசிங் பற்றிய அனுபவத்தை 100 சதவீதம் கொடுக்கும். மற்றொரு உதாரணம், 1260 அடி உயரம் கொண்ட கட்டிடத்தின் மேல் தளத்தில் கண்ணாடியில் நடக்கும் அனுபவத்தை கொடுக்கிறார்கள். துபாயில் உள்ள கட்டிடம் ஒன்றில் இதேபோல் 760 அடி உயரத்தில் கண்ணாடியில் நடக்க முடியும். அப்படி அங்கு நடக்கும் போது மோஷன் சிக்னஸ் ஏற்படும். அந்த மாதிரியான அனுபவங்கள் அனைத்தும் இந்தப் படத்தில் உள்ளது. இந்தப் படத்தின் மிகமுக்கிய ஜானர் அதுதான்.
இந்தப் படத்தின் கதை ஜவ்வாது மலையில் நடக்கும் சம்பவத்தை தொடர்ந்து ஒரு குழு அங்கு செல்கிறது. அவர்களுக்கு என்ன ஆனது என்பதே இந்தப் படத்தின் கதை. மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. இதன் ஒலி வடிவமைப்பு அருமையாக இருக்கிறது. இந்தப் படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் விநியோகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மார்ச் 7-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகிளில் வெளியாகிறது என்றார்.

விழாவில் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் பேசியதாவது, “பல இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். மர்மர் தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம். இதை பற்றி கொஞ்சம் விளக்கிக் கூறுகிறேன். உதாரணத்திற்கு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறினால், அதுபற்றிய விசாரணைக்கு முதலில் அங்கிருக்கும் சி.சி.டி.வி. வீடியோக்களை தான் முதலில் ஆய்வு செய்வார்கள். அந்த சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள் அவர்கள் தரப்பு ஆவணமாக இருக்கும். அதை படமாக காண்பிக்கும் போது, அந்த ஆவணத்தை தான் நாங்கள் படமாக காண்பிக்கிறோம். அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களை பதிவிடும் ஏழு யூடியூபர்கள் ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிசாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித்திரிவதை நேரடியாக பதிவு செய்ய செல்கிறார்கள். அவர்களுக்கு என்ன ஆனது, அவர்கள் செல்லும் வழியில் காணால் போகின்றனர். அவர்களை கண்டுபிடிக்க செல்லும் காவல் துறையினர் உடைந்து கிடக்கும் கேமராக்களை பறிமுதல் செய்கின்றனர். அவ்வாறு கேமராக்களில் உள்ள காட்சிகளை ஆவணப்படமாக வெளியிடுகிறார்கள். அதைத் தான் இந்தப் படத்தின் கதையாக வைத்திருக்கிறோம்.

படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை அதிகம் சிரமப்படுத்தியிருக்கிறேன். முதலில் ஒளிப்பதிவாளரிடம் இருந்து ஆரம்பிக்கிறேன். 12 நிமிடங்கள் ஒரே ஷாட் காட்சி. அதை படமாக்கும் போது பயிற்சி செய்தோம். எல்லா படங்களிலும் காட்சியை படமாக்கும் முன் நடிகர்கள் பயிற்சி எடுப்பார்கள். ஆனால், இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளரும் பயிற்சி எடுத்துக் கொண்டார். டிரெய்லரில் நடிகர்கள் கேமராவை அவர்களாகவே பிடித்து இயக்கிய படி பார்த்திருப்பீர்கள். உண்மையில், அவற்றை படம்பிடித்தது ஒளிப்பதிவாளர் தான். அவர்களின் கை அசைவுகளுக்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் கேமராவை இயக்க வேண்டும். இந்த ஒரே ஷாட் காட்சி எடுப்பதற்காக ஒருநாள் இரவு முழுக்க படப்பிடிப்பு நடத்தினோம். அதற்கு ஒளிப்பதிவாளர் குழுவை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். நான் பிசியோதெரபி கல்லூரி படிக்கும் போது நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். அப்போது குறும்பட போட்டியில் மட்டும் மருத்துவத் துறையை சார்ந்து யாரும் கலந்து கொள்ளாமல் இருந்தனர். ஆனால், நான் அப்படி இருக்க கூடாது என நினைத்து, கேமராவை வாடகைக்கு எடுத்து குறும்படம் எடுக்க தொடங்கினேன். கல்லூரி முடிந்தும் இரண்டு ஆண்டுகள் வரை குறும்படம் இயக்கியும், கதைகளை எழுதிக் கொண்டு இருந்தேன். நான் எடுத்த குறும்படங்களில் எனக்கு பிடிக்காதவற்றை நானே ஓரம்கட்டி விடுவேன். சில கதைகளை படமாக்க தயாரிப்பாளர்களை தேடி வந்தேன். மருத்துவராக கிடைக்கும் மரியாதை, இயக்குநருக்கு கிடைக்காது என்பதை புரிந்து கொண்டேன். அதன்பிறகு மேல்படிப்பு படித்தேன். மேல்படிப்பு முடித்ததும், எந்த மருத்துவமனையில் பணியாற்ற போகிறாய் என வீட்டில் கேட்டார்கள். நான் படமெடுக்க போகிறேன் என்று கூறினேன். அந்தப் படத்தின் டிரெய்லரை தான் தற்போது நீங்கள் பார்த்தீர்கள். குறும்படம் போன்றே, இந்தப் படத்தைய எடுக்கும் போதும் பிடிக்கவில்லை என்றால் ஓரம்கட்டிவிடலாம் என்றே நினைத்திருந்தேன். முதலில் வரும் போது சிறப்பாக வரவேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகவும் கடின உழைப்பை கொடுத்தார்கள். பலர் இங்கு வாங்கிய சம்பளத்தில் பெரும் பகுதியை மருத்துவத்திற்கே செலவு செய்திருப்பார்கள். நிறைய காட்சிகள் அங்கிருந்த இயற்கை வெளிச்சம் கொண்டே படமாக்கினோம். சில காட்சிகளில் தீ மூட்டி அதில் இருந்து கிடைத்த வெளிச்சம் கொண்டு படமாக்கினோம். அப்போது காட்சிக்கு பின்னணியில் இருப்பவர்கள் காட்சிக்கு ஏற்ப ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த சூழலில் எத்தனை முறை கேட்டாலும், ஒளிப்பதிவாளர் சிரமம் பார்க்காமல் படமாக்கி கொடுத்தார்.
அடுத்து படத்தொகுப்பாளர், இந்தப் படத்தில் அவர் படத்தொகுப்பு மட்டுமின்றி துணை இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார். எந்த பணியாக இருந்தாலும், எத்தனை முறை கேட்டாலும் செய்து கொடுத்தார். இந்தப் படத்தை கிட்டத்தட்ட 50 முறை எடிட் செய்திருக்கிறார். ஒருமுறை எடுப்பதை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இதற்கு ஒற்றை காரணம். படத்தின் சென்சார் வரை படம் எங்களிடம் இருக்கும். சமயங்களில் சென்சாருக்கு பிறகும் படம் எங்களிடம் இருக்கும். அந்த மாதிரி சூழ்நிலைகளில் நான் இல்லை என்றாலும், படத்தின் இறுதிக்கட்ட பணிகளை செய்து கொடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் கடைசியாக இணைந்தவர் ஒலி வடிவமைப்பாளர் கெவின், ஆனால் அவர் சிறப்பாக பணியாற்றிக் கொடுத்தார். இந்தப் படத்திற்காக ஒலி வடிவமைப்பாளரை தேடுவதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த வகையில், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் பரிந்துரையில் எங்களுக்கு கிடைத்தவர் கெவின். நான் கூறும் விஷயங்களை சரியாக புரிந்து கொண்டு பணியாற்றிக் கொடுத்தார். இதற்காக கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் வரை ஆனது.
ஒப்பனையாளர் செல்டன் சிறப்பாக பணியாற்றிக் கொடுத்தார். அவர் ஏற்கனவே பிரபலமாக இருந்த போதிலும், அத்தகைய பிம்பத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மிகவும் இயல்பாக பணியாற்றிக் கொடுத்தார். அவரது குழுவினர் முழு உழைப்பை கொடுத்தனர். அடுத்து கலை இயக்குநர். இந்தப் படத்தில் கலை பிரிவினருக்கு மிகப்பெரிய பொறுப்பு தீ அணையாமல் பார்த்துக் கொள்வது தான். அதைத் தாண்டி ஒரு கிராமத்தில் அனைவரும் எல்லா பணியையும் செய்தனர்.
நாங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. முதலில் வாகனங்களில் செல்வோம். அதன் பிறகு கரடுமுரடான பாதையை கடக்க வேண்டியிருக்கும். அங்கு எத்தனை திறமையான டயர்கள் என்றாலும் அவை பஞ்சர் ஆகிவிடும். அதன்பிறகு ஒன்றரை மணி நேரம் வரை நடந்து செல்ல வேண்டும். இப்படி நாங்கள் தினந்தோரும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதற்கே மூன்று மணி நேரம் ஆகிவிடும். அங்கு செல்லும் போதே நாங்கள் சோர்வடைந்து விடுவோம். அப்படி அங்கு செல்லும் போது எங்களுக்கு அந்த ஊர்மக்கள் அதிர்ச்சிகர செய்தியை சொன்னார்கள். அந்த பகுதியில் கன்னிகள் வாழ்வதால், நாங்கள் காலணி எதுவும் அணியக்கூடாது, மாமிசம் எதுவும் சாப்பிடக்கூடாது என்றார்கள். எனது கதை அவர்களுக்கு எப்படி தெரிந்தது என்று யோசித்தேன்.
இந்தப் படத்தில் ஹாசினி சிறப்பாக பணியாற்றினார். அவரது பணி பார்க்க எளிமையான ஒன்றாக தெரியும், ஆனால் அது அப்படியில்லை. ஒரு தீக்குச்சி சார்ந்த ஷாட் என்றாலும் அரை மணி நேரம் அதை வைத்து படப்பிடிப்பு நடத்த வேண்டும். அதற்கு ஏற்றவாரு தீக்குச்சியை செய்ய வேண்டும். அதேபோல் கிராமங்களில் உள்ள வீடுகளை மிக அழகாக செட் அமைத்து கொடுத்தார். அவை மிகவும் எதார்த்தமாக இருந்தது. அவர்களின் பணி போற்றுதலுக்குரியதாக இருந்தது. அடுத்தடுத்து நிறைய படங்களில் பணியாற்ற வாழ்த்துக்கள்.

பட விநியோகத்தில் சிறப்பான நிறுவனம் டிரீம் வாரியர்ஸ். படங்களை தேர்வு செய்து வெளியிடுவதை வாடிக்கயைாக கொண்டுள்ளனர். நானாகவே அவரை தொடர்பு கொண்டேன். முதலில் அவரை பிடிக்க முடியவில்லை. அதன்பிறகு படத்தின் டிரெய்லரை அனுப்பினேன். அதன்பிறகு அவருடன் பேசினேன். டிரீம் வாரியர்ஸ்-இல் எனக்கு மிகவும் பிடித்தது அவர்கள் எவ்வளவு பணிகளை செய்ய வேண்டி இருந்தாலும், அதனை முன்கூட்டியே தெரிவித்து விடுவார்கள். அப்படி அவர்கள் சொல்லும் நேரத்தில் அந்த இடத்திற்கு சரியாக வந்துவிடுவார்கள். அவர்களுக்கு நாம் மீண்டும் ஒருமுறை நினைவூட்ட வேண்டிய அவசியம் இல்லை. சரியான நேரத்தில் படத்தை பார்த்துவிட்டு, தனக்கு பிடித்திருந்ததாக கூறினார். இந்த துறைக்கு துளியும் சம்பந்தம் இல்லாத போதிலும் எனக்காக இந்தப் படத்தில் பணியாற்றிய என் நண்பர்கள் ஹரிஷ், உதயா, லோகேஷ், ஆண்ட்ரூ, அன்பரசன் மற்றும் தமிழ் செல்வன். அவர்களுக்கு ஊடகம் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு நன்றி. பிசியோதெரபி படித்து முடித்துவிட்டு படம் எடுக்க போகிறேன் என்று கூறிய போது எதுவும் சொல்லாமல் ஆதரவளித்தனர். தற்போது படமெடுத்துள்ளேன். இடையில் பிசியோ பணியை மேற்கொள்வேன். மீண்டும் படம் எடுக்க வருவேன். மாறி மாறி இதையே செய்து கொண்டிருப்பேன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அதற்கு உரிய அனுமதியை பெற்றிருந்தோம். அனுமதி பெற கொஞ்சம் கால தாமதம் ஆனது. இதற்கு ஒரு மாத காலம் வரை ஆனது. எனினும், அனுமதி கிடைத்த பிறகு தான் படப்பிடிப்பை தொடங்கினோம். முதலில் லொகேஷன் பார்க்க ஊட்டி சென்றிருந்தேன். அங்கு சிங்கம் அடித்துவிடும் என்றார்கள். வேறு இடத்திற்கு சென்றால் அங்கு புலி அடித்துவிடும் என்றார்கள். ஜவ்வாது மலையை பொருத்தவரை சீசன் உள்ள போது தான் யானை மற்றும் சிறுத்தை உள்ளிட்டவை வரும். நாங்கள் கோடை காலத்தில் தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். கோடை காலத்தில் அதெல்லாம் வராது என்று நம்பினோம், முதலில் கடினமாக இருந்தது பிறகு அனுமதி கிடைத்துவிட்டது. சிகிச்சைக்காக வந்தவர்களை தயாரிப்பாளராக்க வேண்டும் என்றால் நான் எப்போதோ இயக்குநராகி இருப்பேன். எனக்கு அவர் மட்டும் நோயாளி இல்லை, அவரும் ஒரு நோயாளி. நான் என் தொழிலை இங்கு கொண்டுவரவில்லை. தொழில் வேறு, இங்கு நான் இயக்குநராக மட்டும் தான் வந்திருக்கிறேன். இந்தப் படத்தில் பின்னணி இசையை பயன்படுத்தவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் பேய் நம்பிக்கை இல்லை. நான் நம்பாத ஒரு விஷயத்தை அனைவரும் கண்டு அஞ்சும் அளவுக்கு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். எனக்கு பேய் மீது நம்பிக்கையில்லை. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை உள்ளது. என் மீது நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையில் தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன் என்று கூறினார்.
புதுமையான படங்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு மர்மர் சிறப்பான திரை அனுபவத்தை வழங்கும். கதாபாத்திரங்கள் வழியே ஆழமான மற்றும் மர்மங்கள் நிறைந்த கதையம்சம் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. உண்மைக்கும், கற்பனைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை அழிக்கும் வகையில், பிரத்யேக ஸ்டைல் மற்றும் நுணுக்கங்களை கொண்டு இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும். இந்தப் படம் வருகிற மார்ச் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.