0 8 mths

சென்னை மயிலாப்பூரில் நாயன்மார்கள் வீதி உலாவில் விவேகானந்தர் தேர் எப்படி வந்தது என அறநிலையத்துறையிடம் கேள்வி எழுப்பி உள்ளனர் சிவாச்சாரியார்கள்.

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் தேர் திருவிழாவில், 63 நாயன்மார்கள் திருவீதி விழா நடைபெற்றது. அதன் ஒரு அம்சமாக கற்பகாம்பாள், விநாயகர், முருகன் என கடவுள்கள் வீதி உலா வருவது தான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக ராமகிருஷ்ண மடத்திலிருந்து புதிய தேர் ஒன்றில், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், சாரதா தேவி படங்களை வைத்து ஊர்வலமாக வந்துள்ளது.

இதற்கு அறநிலையத்துறை அனுமதி வழங்கியதாக சொல்லப்பட்ட நிலையில், சைவ சமய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இவர்கள் யார் ? இவர்களை எப்படி அனுமதித்தீர்கள் என அறநிலையத்துறை அதிகாரிகளை கேள்வி கேட்டுள்ளனர் சிவாச்சாரியார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *