தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்த இரண்டு நிகழ்ச்சிகள், சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி. இந்த வாரம் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றாக இணையும் ஒரு மெகா சங்கமம், தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நிகழவுள்ளது. தமிழக […]
சினிமா
RTS ஃபிலிம ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், திரில்லர் திரைப்படம் “ரைட்”.வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், […]
Uncategorized
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மகளிர் சுய உதவிக் குழு, பெண்கள் நல அறக்கட்டளை சார்பில் பரமக்குடி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்குக்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த 2020 – 2022 ஆம் ஆண்டு ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளனர். […]
மாவட்ட செய்திகள்
லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் கே. குமார் தயாரிப்பில், சூரி, ஐஸ்வர்யலெட்சுமி, ராஜ்கிரண், சுவாஷிகா, பாபா பாஸ்கர், பால சரவணன், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில், பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில், குமரன் ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ள திரைப்படம் “மாமன்”. கதைப்படி.. இன்பாவின் ( சூரி […]
விமர்சனம்லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் கே. குமார் தயாரிப்பில், சூரி, ஐஸ்வர்யலெட்சுமி, ராஜ்கிரண், சுவாஷிகா, பாபா பாஸ்கர், பால சரவணன், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில், பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில், குமரன் ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ள திரைப்படம் “மாமன்”.
கதைப்படி.. இன்பாவின் ( சூரி ) அக்காவிற்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், அவரது மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் மலடி அது இதுவென பேசி ஏளனம் செய்கின்றனர். இந்நிலையில் இன்பாவின் அக்கா கிரிஷா ( சுவாஷிகா ) கற்பமாகிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷத்தை கொண்டாடுகின்றனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக கிரிஷாவுடன், இன்பாவும் செல்கிறார். அங்கு இன்பா தனது அக்கா மீதுள்ள பாசத்தையும், குடும்ப உறவினர்களிடம் நடந்துகொள்ளும் விதத்தையும் பார்த்து பூரிப்படைகிறார் உதவி மருத்துவராக பணிபுரியும் ரேகா ( ஐஸ்வர்யலெட்சுமி ). அதன் பிறகு கிரிஷாவிற்கு ஆண் குழந்தை பிறக்கிறது. சம்பிரதாயப்படி தாய் மாமன் முதலில் குழந்தையை பார்க்க கூடாது என உறவினர்கள் கூற, வேதனையுடன் இன்பா தனியாக இருக்கும்போது, அதைப்பற்றி நான்தானே கவலைப்பட வேண்டும், நீ போய் குழந்தையைப்பார் என தனது காதலை வெளிப்படுத்துகிறார் ரேகா.

பின்னர் குழந்தைமீது அதீத அன்பு செலுத்தி, ஓவியமாக செல்லமாக வளர்க்கிறார் இன்பா. அந்த ஊரில் மதிப்பு, மரியாதையிடன் வாழ்ந்துவரும் சிங்கராயர் ( ராஜ்கிரண் ), விஜி சந்திரசேகர் தம்பதியர் தலைமையில் தான் அனைத்து நல்லது, கெட்டது எல்லாம் நடைபெறும். அவர்களுக்கு குழந்தை இல்லாததால், இன்பா குடும்பத்தினர்தான் அவர்களுக்கு எல்லமே. இதற்கிடையில் இன்பா, ரேகா காதலும் வளர உறவினர்கள் அனைவரும் சேர்ந்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர்.

திருமணத்தில் தாலி கட்டுவது முதல், முதலிரவு வரை மாமானை பிரியாமல் அந்தப் பையனும் இருக்கிறான். ரேகாவும் குழந்தையின் பாசத்தை உணர்ந்து பொறுத்துக் கொள்கிறார். இதே நிலை பலநாட்கள் நீடிக்கிறது. இருவரும் ஹனிமூன் செல்ல தயாராகும்போது, அந்தப் பையனும் வருவேன் என பாசத்தால் அடம்பிடிக்க, ஹனிமூன் பயணமும் தடைபடுகிறது. இதனால் கோபமடைந்த ரேகா, இன்பாவிடம் சண்டைபோட, அக்கா குடும்பத்திற்கும், இன்பாவின் மனைவிக்குமான மன வருத்தம் பெரிதாகி, குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு பிரிந்து செல்கிறார் ரேகா.

பின்னர் இன்பா, ரேகா தம்பதியர் மீண்டும் இணைந்தார்களா ? அக்காவிற்கும் மனைவிக்குமான பிரச்சினை தீர்ந்ததா ? அதன்பிறகு என்ன நடந்தது என்பது மீதிக்கதை…
இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பம் என்றாலே என்னவென்று தெரியாத இளம் தலைமுறையினருக்கு, உன்னதமான உறவுகளின் உண்மையை பிரதிபலிக்கும் வகையில் காட்சிப்படுத்திய இயக்குநருக்கு பாராட்டுக்கள். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் காட்சிகளோடு ஒன்றிப்போகும் அளவுக்கு திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர்.

தென் மாவட்டங்களில் தாய்மாமன் உறவு எவ்வளவு மகத்துவமானது, அந்த உறவின் மகத்துவத்தை உணந்ததாலோ என்னவோ, சூரி நடித்திருக்கிறார் என்பதைவிட, மாமனாக, அக்காவிற்கு தம்பியாக, அம்மாவிற்கு மகனாக, மருமகனாக, நண்பராக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். அதேபோல் ஐஸ்வர்யலெட்சுமியும் தனது கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அக்கா கதாப்பாத்திரத்தில் சுவாஷிகா தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும் ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், பால சரவணன் உள்ளிட்டோர் ஒவ்வொருவரும் போட்டிபோட்டு அவரவர் காதாப்பாத்திரத்தில் தங்களது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘ஏஸ்’ ( ACE). வரும் மே […]
சினிமாமக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘ஏஸ்’ ( ACE). வரும் மே மாதம் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வினில்… உடை வடிவமைப்பாளர் சப்னா கால்ரா பேசியதாவது, எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் ஆறுமுகத்திற்கு நன்றி. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மிக வித்தியாசமான ஸ்டைலீஷ் செய்துள்ளேன். மலேசியா சென்று அங்கு இருக்கும் வாழ்க்கைக்கு ஏற்ப ஸ்டைலீஷை இப்படத்தில் கொண்டு வந்துள்ளோம். கண்டிப்பாக இப்படம் பெரிய அளவில் ஜெயிக்கும், அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

எடிட்டர் பென்னி ஆலிவர் பேசியதாவது, என்னை நம்பி இத்தனை பெரிய புராஜக்டை தந்த இயக்குநர் ஆறுமுகத்திற்கு என் நன்றி. எனக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து தந்தீர்கள் நன்றி. விஜய் சேதுபதி நடிப்பை எடிட் செய்தது மகிழ்ச்சி. அவர் நடிப்பை எடிட் செய்வது மிகவும் கடினம், அவர் எல்லா ஷாட்டிலும் பிரமிக்க வைப்பார். எந்த ஷாட்டை வைக்க வேண்டும் என குழப்பமாக இருக்கும். இனிமேலாவது எங்களுக்காகக் கொஞ்சம் சொதப்பி நடித்தால் நன்றாக இருக்கும். ருக்மணி இப்படத்தில் நடிக்கிறாங்கனு சொன்ன பிறகு அவரது சைட் ஏ படம் பார்த்தேன், நடிப்பில் மிரட்டியிருந்தார். இப்படத்திலும் அற்புதமாக நடித்துள்ளார். அவினாஷ் கேஜிஎஃப் டெரர் வில்லன் இதிலும் அழகாக நடித்துள்ளார். காஸ்ட்யூம் எல்லாம் சூப்பராக இருந்தது. ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக இருந்தது. படம் மிக நன்றாக வந்துள்ளது. இந்தப்படத்திற்கு டிரெய்லர் கட் பண்ணித் தந்த ரூபனுக்கு நன்றி. அருமையான இசையை ஜஸ்டின் தந்துள்ளார். இப்படம் நல்ல கமர்ஷியல் படம், அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகர் கேஜிஎஃப் அவினாஷ் பேசியதாவது.. இந்தப்படத்திற்காக ஆறுமுகம் கால் பண்ணி விஜய்சேதுபதி, யோகிபாபு, ருக்மணி நடிக்கும் படத்தில் உங்களுக்கு ஒரு ரோல் என்றார், நான் உடனே யெஸ் யெஸ் என சொன்னேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய ஆறுமுகத்திற்கு நன்றி. விஜய் சேதுபதி மிக அற்புதமான மனிதர். நாங்கள் ஷீட் செய்யும் போது அவரைக் காண ஒரு பெரும் கூட்டம் எப்போதும் காத்திருக்கும். எல்லோரிடமும் பொறுமையாக நின்று பேசுவார். அவரைச் சுற்றி ஒரு அற்புதமான ஆரா உள்ளது. அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. யோகிபாபுவுக்கும், அவருக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி அற்புதம். இப்படம் கண்டிப்பாக ஜெயிக்கும் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகர் பப்லு பிரிதிவிராஜ் பேசியதாவது, இயக்குநர் ஆறுமுகம் முதன் முதலில் இப்படத்தில் சின்ன ரோல் என என்னை அழைத்தார். ரெண்டு சீன் தான் என்றார், விஜய் சேதுபதி படம் என்றவுடன் உடனே நடிக்கிறேன் என்றேன். ஆனால் சில நாட்களில், என் கேரக்டர் முக்கியமான ரோலாக மாறிவிட்டது என்றார். என் கதாப்பாத்திரம் பெரிதாக மாறிவிட்டது எனக்கு மகிழ்ச்சி. விஜய் சேதுபதி ஷீட்டில் என்னைப் பார்த்தவுடன், உங்களுக்கு குட் டைம் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்றார். அதே போல் நடந்து விட்டது, இப்போது தமிழில் 6 படம் செய்கிறேன், தெலுங்கில் 22 படம் செய்கிறேன் மகிழ்ச்சி. இந்தப்படத்தில் வேலை செய்தது மறக்க முடியாத அனுபவம். இப்படத்தில் நானும் இருப்பது பெருமை. இப்படம் மிக அருமையாக வந்துள்ளது. வரும் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது என்றார்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசியதாவது…,
எனக்கு இந்த வாய்ப்பை தந்த 7Cs என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கு, ஆறுமுகத்திற்கு என் முதல் நன்றி. விஜய் சேதுபதியுடன் எனக்கு இது 4 வது படம். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு பாஸிடிவ் ஆரா இருக்கும். இப்போது இன்னும் அழகாக ஆகிக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் உழைத்த மற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகை ருக்மணி வசந்த் பேசியதாவது… ‘ஏஸ்’ ( ACE) என் முதல் தமிழ்ப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல் படம். விஜய் சேதுபதியிடன் இணைந்து நடித்தது மிகுந்த மகிழ்ச்சி. படத்தில் எல்லோருமே எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள். அனைவருக்கும் நன்றி. இதுவரை நான் மிக அழுத்தமான படங்கள், கதாப்பாத்திரங்கள் தான் அதிகம் செய்துள்ளேன், ஆனால் ‘ஏஸ்’ ( ACE) கொஞ்சம் காமெடி கலந்த அழகான மூவி. விஜய் சேதுபதி, யோகிபாபு இருவரும் இம்ப்ரவைஸ் செய்வதைப் பார்க்க அழகாக இருக்கும். எனக்குக் கதை சொல்ல ஆரம்பித்ததிலிருந்து, படம் முடியும் வரை எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்த இயக்குநர் ஆறுமுகத்திற்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

இயக்குநர் ஆறுமுக குமார் பேசியதாவது… எனக்காக விஜய் சேதுபதி, எவ்வளவு பெரிய உதவி செய்துள்ளார் என் மீது எவ்வளவு அக்கரை எடுத்துக் கொண்டுள்ளார் என வார்த்தைகளால் சொல்ல முடியாது. எனக்கு அது மிகவும் பர்ஸனல். ருக்மணி அவர் நடிப்புத் திறமை பற்றி சொல்லத் தேவையில்லை. இப்படத்தில் அவரை நடிக்க கேட்ட போது, எனக்குத் தமிழ் வராதே எனத் தயங்கினார். பரவாயில்லை இங்கு எல்லோருமே தமிழ் தெரியாமல் தான் நடிக்கிறார்கள் என சமாதனப்படுத்தினேன். ஷீட்டிங்கில் டயலாக் பற்றி ஆர்வமாக கேட்டுக்கொண்டே இருப்பார், அவர் பியூட்டிபுல் மட்டும் கிடையாது அருமையான நடிகையும் தான். இந்தப்படத்தில் யோகிபாபு மிகப்பெரிய பாத்திரம் செய்துள்ளார். அவரது பாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும். அவினாஷின் லுக் ஒன்னே போதும். அவர் வந்தால் பயங்கர மாஸாக இருக்கும். பப்லு மிக வித்தியாசமான ரோல் செய்துள்ளார். காஸ்ட்யூமர் சப்னா, யோகி பாபுக்கு ஒரு காஸ்டியூம் கொடுத்தார். அதுக்கு அவார்டே கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஆர்ட் டைரக்டர் முத்து என் முதல் படத்திலிருந்து பணியாற்றி வருகிறார். அவருக்கு நன்றி. ஜஸ்டின் என் நெருக்கமான நண்பர், அவருடன் பணியாற்றுவது ஈஸி. இப்படத்தில் சாம் சி எஸ் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் கமர்ஷியல் படமாக இருக்கும் என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, முதலில் எடிட்டர் பென்னி ஆலிவர் அவரது பேச்சு மிக தெளிவாக இருந்தது. அனைவரையும் குறிப்பிட்டுப் பேசினார். அவர் சீக்கிரம் இயக்குநர் ஆவார் என நம்புகிறேன் வாழ்த்துக்கள். நான் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் என்னை நம்பி, என் திறமையை நம்பி என்னைப் படத்தில் சிபாரிசு செய்தவர் ஆறுமுகம். இருக்கும்போது வரும் உதவிகள் வேறு, ஆனால் நம்மை யாரென்றே தெரியாத காலத்தில், நம் மீது யாரோ ஒருத்தர் வைக்கிற நம்பிக்கைதான் மிகப்பெரியது. அதற்காக ஆறுமுகத்திற்கு நன்றி. இசையமைப்பாளர் ஜஸ்டின், எனக்கு இவரை ரொம்பப் பிடிக்கும். ஏனென்று தெரியாது. அவர் மியூசிக் டைரக்டர், நன்றாக இசையமைப்பாளர் என்பதால் இல்லை. அவரைச் சந்தித்த முதல் நாளிலிருந்தே அவரை எனக்குப் பிடிக்கும். ஒரு முறை கீரவாணி அவரைப் பத்தி பேசியபோது கேட்டேன். அவர் கூட பிறந்திருந்தால், அவர் வீட்டு ஆட்கள், எவ்வளவு சந்தோஷப்படுவாங்களோ எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது. நம்ம வீட்டு பிள்ளையைப் பத்தி இன்னொருத்தர் பேசுறது ஒரு மிகப்பெரிய ஆளுமை பேசுறதுங்கறது, எனக்கு பெரிய சந்தோஷமா இருந்தது.

ஜஸ்டினோட ஒர்க் இந்த படத்துல மிகப் பிரமாதம், ரொம்ப அழகா செய்து தந்துள்ளார். அவினாஷ் பார்க்க தான் கரடு முரடு, ஆனால் மனதில் ரொம்ப ஸ்வீட்டான ஆள். க்யூட். ருக்மணி மிகத் திறமையான நடிகை. மலேசியாவில் ஒரு இடத்தில் ஷீட் செய்தோம், அந்த இடத்தை பற்றிய வரலாறே சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி எனக்கேட்டேன், இங்கே வருவதால், இந்த இடம் பற்றி படித்து விட்டு வந்தேன் என்றார். இதிலிருந்தே உங்களுக்கு தெரியும் படத்திற்காக அவர் எவ்வளவு தயாராகியிருப்பார் என்று, மிக அற்புதமாக நடித்துள்ளார்.

பப்லு இவர் நல்லவரா? கெட்டவரா? என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் மிக நல்ல ரோல் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் கிரண் நான் காந்தி டாக்கீஸ் படம் செய்யும் போது பழக்கம், அவர் இப்படத்தில் அருமையாகச் செய்துள்ளார். கலை இயக்குநர் மிக அப்பாவியான மனிதர், இப்படி ஒரு மனிதருடன் தான் இருக்க வேண்டும் அந்தளவு நல்லவர். இப்படத்தில் சூப்பராக செய்துள்ளார். யோகிபாபு இந்தப்படத்தில் இன்னொரு ஹீரோ. அவரைப்பற்றி சமீபத்தில் தவறான செய்திகள் வருகிறது. அது உண்மையில்லை, அவர் நல்ல மனிதர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் அவரை எல்லோரும் ரசிப்பார்கள். இந்தப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.
வி.ஜெ கம்பைன்ஸ் நிறுவனம், தாஸ் பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்க, தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த்தின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் […]
சினிமாவி.ஜெ கம்பைன்ஸ் நிறுவனம், தாஸ் பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்க, தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த்தின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை கதையைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் படம் “படை தலைவன்”.

வரும் மே 23 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், L.K. சுதீஷ், ஹீரோ சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன், இயக்குநர் – நடிகர்கள் கஸ்தூரி ராஜா, சசிக்குமார், இயக்குநர்கள் A.R. முருகதாஸ், பொன்ராம் படத்தின் தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம், இயக்குநர் .U.K. அன்பு, ஒளிப்பதிவாளர் சுரேஷ், தயாரிப்பாளர்கள் T. சிவா, J.S.K சதீஷ், நடிகை யாமினி மற்றும் படக்குழுவினர் ஆகியோர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் வசனகர்த்தா பார்த்திபன் தேசிங்கு பேசியதாவது….
சினிமாவில் என் மானசீக குரு, இன்ஸ்பிரேஷன் எல்லாமே முருகதாஸ்தான், அவரது ஆசீர்வாதத்துடன் இங்கு இருப்பது மகிழ்ச்சி. நான் கேப்டனின் தீவிர ரசிகன். அவரது கேப்டன் பிரபாகரன் பட தலைப்பைத் தான் என் முதல் கதைக்கு வைத்தேன் அது கிடைக்கவில்லை. கேப்டன் உடன் வேலை பார்க்கும் எனும் என் ஆசை நிறைவேறவில்லை. படை தலைவன் வாய்ப்பு மூலம் அந்த கனவு நனவாகியுள்ளது. இந்தப்படத்திற்குத் தலைப்பு படைத் தலைவன். ஒருவன் பின்னால் ஒரு படையே நிற்கும் என்றால், அவன் தான் படை தலைவன், அது கேப்டன் மட்டும் தான். அவருக்குப் பிறகு, அது சண்முக பாண்டியனுக்குத் தான் பொருத்தமாக அமைந்துள்ளது. இந்தக்கதையை அன்பு முதலில் சொன்ன போது, நான் இதற்கு வசனம் எழுதுவேன் என நினைக்கவில்லை. இந்தப்படத்தில் நான் வேலை பார்த்தது எனக்குப் பெருமை. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

ஒளிப்பதிவாளர் சதீஷ் குமார் பேசியதாவது…, நான் இங்கு கேப்டனுடன் எனக்குக் கிடைத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன், அவருடன் ஒரு ஸ்டண்ட் காட்சியில் பணி புரிந்தேன், பெரிய அனுபவம் இல்லை என்றாலும் அனைவரின் சொல்லுக்கும் மதிப்பளிப்பவர் எங்கள் கேப்டன் அதை நான் அன்று உணர்ந்தேன், அதே போல் சண்முக பாண்டியனும் பொறுமையாகக் கோபம் கொள்ளாமல், எத்தனை டேக் சென்றாலும் அதை முடித்துக் கொடுத்து விட்டுத் தான் அங்கிருந்து கிளம்புவார், அவரிடத்தில் நான் என் கேப்டனை பார்க்கிறேன். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும், சண்முக பாண்டியனுக்குப் பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றார்.
நடிகர் ரிஷி பேசியதாவது..,
எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் அன்புவிற்கு நன்றி, என் தயாரிப்பாளருக்கும் நன்றி, நான் ஆரம்ப காலத்தில் சினிமாவில் பணி புரியும்போது எல்லோரும் கேப்டனின் ஸ்டண்ட் பற்றித்தான் பேசுவார்கள், அவரை நேரில் பார்க்க வேண்டும் என பல நாட்கள் காத்திருந்தேன், ஆனால் அவர் மகனுடன் நடிக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. மிகவும் பெருமையாக இருக்கிறது, இந்தப் படத்தில் கொடூரமான வில்லனாக நடித்துள்ளேன், என் கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது, படம் பார்க்கும் போது அனைவருக்கும் தெரியும் என்றார்.

நடிகை யாமினி சந்தர் பேசியதாவது, இந்தப் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கேப்டனின் வாழ்த்து நமக்குக் கிடைத்துள்ளது, அதுவே பெரிய பாக்கியம். இளையராஜா பாடல்களில் நான் நடித்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. சண்முக பாண்டியன் எங்கள் அனைவரையும் அன்பாய் பார்த்துக்கொண்டார். இதில் எங்களை விட, யானையுடன் தான் அவர் அதிக காட்சிகள் நடித்துள்ளார். இருவரும் இணை பிரியா நண்பர்கள் ஆகிவிட்டனர். இந்தப் படமும் அவர்களைப் பற்றித் தான். நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் என்றார்.

இயக்குநர், நடிகர் கஸ்தூரி ராஜா பேசியதாவது…, படத்தின் தலைப்பே படத்திற்கு யானை பலம், அதை விட முக்கியம் கேப்டனின் ஆசீர்வாதம், அவருடன் எனக்குப் பல அனுபவங்கள் உண்டு, அதைச் சொல்ல எத்தனை மேடைகள் இருந்தாலும் பத்தாது. இந்தப் படத்தில் ஓய்வின்றி கடினமாக உழைத்தவர் ஒளிப்பதிவாளர் தான், கஷ்டப்பட்டு காட்சிகளை வடிவமைத்துள்ளார் வாழ்த்துக்கள். சண்முக பாண்டியன் யானையுடன் இணைந்து செய்த காரியங்களுக்கு எல்லாம் அசாத்திய தைரியம் தேவை, அதற்கு என் கேப்டன் தான் காரணம், அவரின் அதே பாணியை இவரிடமும் கண்டேன். படப்பிடிப்பில் இப்படக்குழு பல சிரமங்களைச் சந்தித்தனர், அத்தனையும் தாண்டி இந்தப் படம் இங்கு வந்ததற்குக் காரணம் இயக்குநரும் தயாரிப்பாளரும் தான். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இந்தப் படத்திற்கு இசையமைத்தது இளையராஜா இந்தப் பெயரே போதும், அந்த இசையைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை, நிச்சயம் இந்தப் படம் பெரிய வெற்றி பெறும் என்றார்.

தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ் பேசியதாவது…, இந்தப் படத்தைத் தயாரித்த பரமசிவம் எனக்கு 25 ஆண்டு கால நண்பர், அவருடன் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன், அதனால் சொல்கிறேன் இந்தப் படம் இந்தியாவே பேசும் ஒரு படைப்பாக இருக்கும். கேப்டனின் ரசிகர்களுக்கு இன்னும் பெரிய விருந்து காத்திருக்கிறது. படத்தின் காட்சிகள் மெய் சிலிர்க்க வைத்துள்ளது, சண்முக பாண்டியன் பற்றி நான் சொல்ல தேவையில்லை, கேப்டனின் ரத்தம் அது அப்படியே இவரிடம் உள்ளது. அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகள். படக்குழு அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் என்றார்.
அம்மா கிரியேஷன் டி சிவா பேசியதாவது.., கேப்டன் போல மற்றொருவரைப் பார்க்க வேண்டுமெனில் அது சண்முக பாண்டியன் தான், கேப்டனின் தன்மை அப்படியே அவரிடம் உள்ளது. அது செட்டில் இருந்த அனைவருக்கும் தெரியும். சண்முக பாண்டியனின் வெற்றிக்கு மிகவும் சந்தோஷபடுபவன் நான்தான். நிச்சயம் நாம் அதைப் பார்க்கப் போகிறோம், இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றார்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் ஶ்ரீதர் பேசியதாவது…, இந்த காலத்தில் பெரிய நடிகர்கள் படம் என்று ஒரு சில படங்கள் மட்டும் தான் நல்ல வரவேற்பைப் பெறுகிறது. ஆனால் மற்ற நேரங்களில் சிறு படங்கள்தான் திரையரங்கை வாழ வைத்துக் கொண்டுள்ளது, இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இந்தப் படம் இருக்கும். கேப்டனின் ஆசிர்வாதம் சண்முக பாண்டியனுக்கு உள்ளது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் பொன்ராம் பேசியதாவது…, எனக்கு சண்முக பாண்டியனைப் பார்க்கும்போது அவர் தெரியவில்லை கேப்டன் தான் தெரிந்தார். அவரது இடத்தை யாராலும் இன்று வரை அடைய முடியவில்லை, அதைச் சண்முக பாண்டியன் அடைவார். அவரை பிரேமில் வைக்கும்போது அப்படி ஒரு பிரம்மாண்டம், படம் பார்க்கும்போது அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் இருவருக்கும் வாழ்த்துக்கள், பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளீர்கள் என்று டிரெய்லர் பார்க்கும்போதே தெரிகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.

எல் கே சுதீஷ் பேசியதாவது…,
இந்தப் படம் சண்முக பாண்டியனுக்கு பெரிய வெற்றிப்படமாக அமையும். கேப்டனின் ஆசீர்வாதம் இந்தப் படத்திற்கு உள்ளது. அது மட்டுமல்ல, இந்தப் படத்தை வாழ்த்த பல நல் உள்ளங்கள் இங்கு வந்துள்ளனர். அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் வெள்ளி விழாவில் அனைவரும் சந்திப்போம், என்றார்.

தே.மு.தி.க மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் பேசியதாவது…, இந்த மேடையில் நான் ஒரு ரசிகனாக தான் வந்துள்ளேன், சினிமா மேடையில் நான் பேசியது இல்லை, இது எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது, நான் என் தம்பிக்காக வந்திருக்கிறேன். என் அப்பா விஜயகாந்திற்கு நான் தான் முதல் ரசிகன், அதே போல் சண்முக பாண்டியனுக்கும் நான் தான் முதல் ரசிகன், கேப்டனை நீங்கள் பார்க்க நினைத்தால் சண்முக பாண்டியன் உருவத்தில் நாம் அவரை பார்க்கலாம். கேப்டனின் கட்டளைகள் பணிகள் இன்னும் காத்திருக்கிறது. அவரின் அனைத்து ஆசையும் நடக்கும், நாம் நடத்திக் காட்டுவோம். மேலும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார், அது ஒரு வரம் தான். படம் மிக நன்றாக இருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும், இந்தப் படத்தை நாம் அனைவரும் சுமந்து செல்வோம் என்றார்.

நடிகர் சசிகுமார் பேசியதாவது…, விஜயகாந்த் எங்கள் மண்ணின் மைந்தன், அவரை இயக்கும் ஆசை எனக்கு நிறைவேறாமல் போனது, ஆனால் சண்முக பாண்டியனை இயக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது, ஒரு ஷூட்டிங்கில் அவரது கண்ணைப் பார்த்து மிரண்டு விட்டேன், அப்படியே விஜய்காந்த் தான். கண்டிப்பாகச் சண்முக பாண்டியனை நான் இயக்குவேன். கேப்டனுடன் பயணிக்கும் அனுபவம் இல்லை, ஆனால் நிச்சயம் அவரது மகனுடன் அந்த அனுபவத்தைப் பெறுவேன். இந்தப் படை தலைவன் படம் நிச்சயம் பெரிய வெற்றி பெறும் என்றார்.

தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது.., அரசியல் மேடை இல்லாமல் ஒரு சினிமா சார்ந்த மேடையில் நான் பேசுவது இதுவே முதல்முறை. சண்முக பாண்டியனை இனிமேல் உங்களிடம் ஒப்படைக்கிறேன். தமிழ்நாட்டு மக்களிடமும், சினிமா துறை சார்ந்தவர்களிடமும் ஒப்படைக்கிறேன். கள்ளழகர் படத்தில் நடித்த போது, கேப்டன் யானையோடு நெருக்கமாக பழகி, வீட்டிற்கு யானையை அழைத்து வரவா ? என்று கேட்டார், அவ்வளவு பெரிய வீடு இல்லையே என்று கூறினேன். அதேபோன்று தான் சண்முக பாண்டியனும், தற்போது அவருடன் நடித்த மணியன் யானையை வீட்டிற்கு அழைத்து வரக் கேட்டார். இருவரும் யானை வளர்க்கவே விரும்புகின்றனர். நிச்சயம் ஒரு யானையை வளர்ப்போம். கேப்டனின் இடத்தை எனது இரண்டு மகன்களும் நிரப்புவார்கள். விஜய பிரபாகரன் அரசியலிலும், சண்முக பாண்டியன் சினிமாவிலும் தங்களை நிலைநிறுத்திக் கொள்வார்கள். அதில் எந்த ஐயமும் இல்லை இப்படம் மக்களுக்குப் பிடிக்கும் என்றார்.

படத்தின் கதாநாயகன் சண்முக பாண்டியன் பேசியதாவது.. இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம், காரணம் அப்பா இருக்கும்போது இந்த படத்தின் கதையைக் கேட்டிருந்தார். இந்த படத்தில் இருக்கும் இரண்டு சண்டைக் காட்சிகளையும் அப்பா பார்த்திருக்கிறார். எனவே இந்த படம் எனக்கு மிக மிக நெருக்கமான படம். படைத்தலைவன் படத்தைக் கும்கி அல்லது வேறு எந்த படத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இந்த படம் முற்றிலும் வேறு மாதிரியான கதைக்களத்தைக் கொண்டுள்ளது.
என்னுடைய முதல் ஷாட்டே ஐந்து யானைகளுடன் தான்.. எல்லாரும் நான் அப்பா மாதிரி இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் எனக்கு அப்படியே தெரியவில்லை, அவரை ஈடு செய்ய முடியாது. இந்த படத்திற்காக என்னால் முடிந்தவரை உழைத்துள்ளேன். நிச்சயம் இந்தப் படம் அனைவரையும் கவரும் என்றார்.

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசியதாவது…, ஏராளமான படங்களில் நடிகருக்கு நிகராக வில்லன்கள் அழகாக இருக்கும் டிரெண்டை செட் செய்தவர் விஜயகாந்த் தான். அதற்கென ஒரு பெரிய நம்பிக்கை வேண்டும், அதை விஜயகாந்த் செய்தார். எல்லோரும் விஜயகாந்த் குறித்துப் பேசி இருப்பார்கள். ஆனால் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் மட்டும்தான் விஜயகாந்த் உடன் பணியாற்றியுள்ளேன் என்று நினைத்தேன். ஆனால் கஸ்தூரி ராஜாவும் பணியாற்றியதாகக் கூறியபோது சற்று பொறாமையாக இருந்தது,
விஜயகாந்தின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் சண்முக பாண்டியனுக்கு வேண்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக உங்களைக் கைவிட மாட்டார்கள். இவ்வளவு கம்பீரமான நடிகர் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறார். விஜயகாந்தின் இரு கண்கள் அப்படியே சண்முக பாண்டியனுக்கு உள்ளது. சினிமாவில் வளர்ந்து வாருங்கள்… கண்டிப்பாக ரமணா 2படம் எடுக்கலாம். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் U அன்பு பேசியதாவது, என் தயாரிப்பாளர்களுக்கும், சண்முக பாண்டியனுக்கும் மிக்க நன்றி. என்னை நம்பி இந்த படைப்பை என்னிடம் கொடுத்துள்ளனர். அவர்களிடம் நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன் என்று நம்புகிறேன், எனக்கு உதவியாக இருந்த படக்குழு, அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், படத்தின் வெற்றி நிகழ்வில் மீண்டும் நம் சந்திப்போம் என்றார்.
கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ள ‘தி வெர்டிக்ட்’. திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்தப் படத்தை […]
சினிமாகொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ள ‘தி வெர்டிக்ட்’. திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்திற்கு ஆதித்ய ராவ் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணாவும், எடிட்டராக சதீஷ் சூர்யாவும் பணியாற்றி உள்ளனர். பாடல்கள் மதன் கார்க்கி, கிருத்திகா நெல்சன், ராகவன், நைனார் எழுதியுள்ளனர். அக்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ், என் கோபிகிருஷ்ணன் தயாரித்துள்ளனர். ஜகதா எண்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் இப்படத்தை வெளியிடுகிறது. இந்தத் திரைப்படம் மே மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
விழாவில் படத்தின் தயாரிப்பாளர் என். கோபிகிருஷ்ணன் பேசும்போது, இந்தப் படம் பல நெருக்கடிகளைக் கடந்து தான் உருவாகியுள்ளது.
நான் கேட்டவுடன் இப்படத்தில்
வரலட்சுமி, ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் என ஒவ்வொருவராக வந்து இணைந்தவுடன் படத்தின் அளவு பெரிதாகிவிட்டது. இது சின்ன படம் என்றாலும் நல்ல கதையுள்ள படம் என்றார்.

நாயகனும் தயாரிப்பாளருமான பிரகாஷ் மோகன் தாஸ் பேசும்போது,
இது எங்கள் முதல் இந்திய சினிமா முயற்சி. இதற்கு முன்பு அங்கே ஹாலிவுட்டில் செய்திருக்கிறோம். இவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் நடிக்க வைப்பது எங்களுக்கு வியப்பாகவும் மறக்க முடியாத அனுபவமாகவும் இருந்தது. இந்த வாய்ப்பைச் சாத்தியப்படுத்தியதற்கு கோபிக்கு மிகவும் நன்றி. படப்பிடிப்பில் நாங்கள் அவர்களின் நடிப்பைப் பார்த்துப் பார்த்துக் கற்றுக் கொண்டே இருந்தோம். ஒருவரும் இரண்டாவது டேக் வாங்காமல் நடித்துக் கொடுத்து அசத்தினார்கள். ஒரு திரைப்படத்திற்கு கதை தான் அரசன் என்பார்கள் அது இந்த படத்தைப் பார்த்தால் புரியும் அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் இயக்குநர் யூகி சேது பேசும்போது, இந்த படத்தைப் பார்க்க தயாரிப்பாளர் அழைத்த போது எப்படி இருக்குமோ என்று பயந்து கொண்டு சென்றேன். ஏதாவது சொல்லி நட்பு முறிந்து விடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு நேர்த்தியாக இஸ்திரி போட்டது மாதிரி அழகாக எடுத்திருக்கிறார்கள். பொதுவாக நீதிமன்றக் காட்சிகள் பார்ப்பதற்குப் பிடிக்காது. இதில் பார்க்கும் படி எடுத்திருந்தார்கள். இந்தப் படத்தில் முகங்களைச் சரியான படி பயன்படுத்தியிருந்தார்கள். ஒரு படம் எடுக்கும் போது எது தேவையில்லை என்பதை முதலில் தெரிந்து கொண்டு அவற்றை விலக்க வேண்டும். அப்படி தேவையானதை மட்டும் எடுப்பது சிரமம். அப்படி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள் .’வின்டர் லைட் ‘என்ற படத்தில் முகங்களைச் சரியாக பயன்படுத்தியிருப்பார்கள். அப்படி முகங்களை இதில் சரியான படி பயன்படுத்திருக்கிறார்கள்.

எஸ்கிமோ மக்களுக்குத் தான் வெள்ளை நிறத்தின் 17 ஷேட்ஸ்களைத் தெரியும் என்பார்கள். அப்படி இருட்டின் பல ஷேட்ஸ் தெரிந்தவர்கள் பி சி ஸ்ரீராம். அவரிடம் இருந்து வந்தவர் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். இருட்டை எப்படிப் பார்க்க முடியும் என்பதை இந்தப் படத்தில் காட்டி உள்ளார்கள்.
சத்தியஜித் ரே என் ஒரு குறும்படத்துக்கு இசையமைத்துள்ளார். அவர் பேசிய ஆங்கிலத்தைப் பார்க்கும்போது அது எந்த நாட்டு ஆங்கிலம் என்று புரியாதபடி இருக்கும். அப்படி இதில் ஜாக்கிரதையாக வரலட்சுமி ஆங்கிலம் பேசி உள்ளார்.
பார்த்திபன்’ கவிதை பாட நேரமில்லை ‘என்கிற என் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் நான்கு பேரில் ஒருவராக நடிக்க முடியாது என்று விலகிவிட்டார். தன் பாதையில் தனியே பயணம் செய்ய ஆரம்பித்து விட்டார். இங்கே வந்திருக்கும் சுஹாசினியின் நடிப்பின் நுணுக்கங்கள் சாதாரணமானதல்ல. படம் நன்றாக வந்திருக்கிறது.
என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்.
தயாரிப்பாளர் சித்ரா லெட்சுமணன் பேசும்போது, இந்தப் படத்தின் தயாரிப்பாளரான கோபிகிருஷ்ணன் நட்புக்கு இலக்கணமாக இருப்பவர்.
அவரிடம் எனக்குப் பிடித்தவை இரண்டு விஷயங்கள். ஒன்று நட்பு.
அவரது நட்பின் வலை மிகப் பெரியது. அதில் ஒரு சிறிய பகுதியைத்தான் இந்த படக்குழுவினர் மூலம் நாம் இங்கே பார்க்கிறோம்.
அடுத்தது நிர்வாகத் திறமை. அவரிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்து விட்டால் மிகச் சரியாகச் செய்து விடுவார். இதில் நடித்திருக்கும் வரலட்சுமி தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் இப்போது பிரபலமாக இருக்கிறார். அவர் தன் பணியைச் சிறப்பாகச் செய்கிறார். அந்த நிம்மதியில் தினமும் கர்வத்துடன் தூங்கலாம். அப்படிப்பட்ட நடிப்புத் திறமை கொண்டவர் அவர். படத்தின் இயக்குநர் ஒரு நாடக நடிகர் என்று அறிந்து வியந்தேன். இளையவர்கள் என்றாலும் இப்படத்தை நன்றாகத் திட்டமிட்டு எடுத்துள்ளார்கள். அதனால் தான் 23 நாட்களில் இந்த படத்தை எடுக்க முடிந்தது. அனைவரிடம் நன்றாக நடிப்புத் திறனை வெளிக்கொணந்து உள்ளார்கள். இங்கே யூகி சேது பேசியதைப் பார்க்கும்போது படத்தின் வெளியீட்டுக்கு முன்பு அவரது விமர்சனத்தை வாங்கி அதைப் பயன்படுத்தலாம். இந்த படத்திற்கு நல்ல தீர்ப்பு வழங்குங்கள் என்று கூறினார்.

படத்தின் இயக்குநர் கிருஷ்ணா சங்கர் பேசும்போது, என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்த நண்பர்களுக்கு நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.
இந்தப் படம் எனக்கு மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்தில் நடிப்பவர்களைத் தேர்வு செய்ய உதவிய தயாரிப்பாளர் கோபிக்கு நன்றி. அவர் அரை மணி நேரத்தில் இப்படிப்பட்ட நடிப்புக் கலைஞர்களை எனக்குத் தேர்வு செய்து கொடுத்தார். இந்தப் படத்தில் நடித்த தமிழ் நடிகர்களின் நடிப்பை பார்த்து அமெரிக்காவில் உள்ள நடிகர்கள் வியந்தார்கள். இங்கு உள்ள நம் நடிகர்கள் ஒவ்வொருவரும் 10 ஹாலிவுட் நடிகர்களுக்குச் சமமானவர்கள். இதை நான் சொல்லவில்லை அங்குள்ளவர்களே சொன்னார்கள். இதை நான் நேரில் பார்த்துப் புரிந்து கொண்டேன். ஒரு நீதிமன்றக் காட்சியில் வரலட்சுமி நடித்ததைப் பார்த்து அங்கு ஜூரிகளாக இருந்த மூன்று பேர் கண் கலங்கினார்கள். பநீங்கள் கண் கலங்கக் கூடாது நீங்கள் ஜூரிகள் என்ற போது இந்த பெண்ணின் நடிப்பைப் பார்த்து அசந்து விட்டோம் என்றார்கள். இங்கிருந்து வந்த அனுபவமுள்ள நட்சத்திரங்கள் கொடுத்த ஒத்துழைப்பால் தான் 23 நாட்களில் இந்தப் படத்தை முடிக்க முடிந்தது.
எனது உதவி இயக்குநர்கள் திரைப்படத்தைப் பற்றிய திருத்தமான தெளிவான அறிவோடு இருந்தார்கள். அதனால் தான் இந்தப் படத்தை இவ்வளவு குறைவான நாட்களில் எடுக்க முடிந்தது. அவர்களிடமும் நான் கற்றுக் கொண்டேன். என் உதவி இயக்குநர்கள் இந்த படத்திற்காக கொடுத்த உழைப்பு சாதாரணமல்ல. 18 மணி நேரம் படப்பிடிப்பு என்றால் மூன்று மணி நேரம் அதற்கு பின்பும் வேலை பார்த்தோம். அந்த அளவிற்கு எனக்கு அவர்கள் பக்கபலமாக இருந்தார்கள். இந்தப் படம் நிச்சயம் அனைவரையும் கவரும் என்றார்.

நடிகை சுஹாசினி பேசும்போது, இங்கே என்னைப் பலரும் புகழ்ந்து பாராட்டினார்கள். அதில் இரண்டு விஷயம் உணர்ந்தேன். ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் இன்னொரு பக்கம் நாம் சரியாகச் செய்ய வேண்டுமே, நாம் ஏதாவது சாதித்திருக்கிறோமா சாதிக்க வேண்டுமே என்ற ஒரு குற்ற உணர்ச்சியும் வரும். இங்கே பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் என்னை ஒப்பிட்டார்கள். ஆனால் நான் நினைப்பது அடக்கமாக இருக்க வேண்டும், மேலும் அடக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான்.
இப்போது ரீல்ஸ்களைப் பார்த்து ஒரு படத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பது பலருக்கும் மறந்து விட்டது. கறுப்பு இருந்தால் தான் வெள்ளைக்கு அழகு. இங்குள்ள தயாரிப்பாளர் கோபியை நான் எப்போது அழைத்தாலும் என் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு வருவார். எனது ‘நாம்’ தொண்டு நிறுவனத்திற்கும் சென்னை திரைப்பட விழா நிகழ்ச்சிகளுக்கும் அவரை அழைத்திருக்கிறேன். ஆனால் அவர் என்னைப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார். நான் அடிக்கடி நிறைய படங்களில் வந்தால் சலித்து விடும். எனவே தேர்ந்தெடுத்து செய்கிறேன்.
இந்த படத்தை நான் ஒப்புக்கொண்டது எப்படி தெரியுமா?
என் இருபதுகளில் லட்சுமி அவர்கள் நடித்த படத்தின் ரீமேக்காக இருந்தால் நான் தைரியமாக ஒப்புக்கொண்டு நடிப்பேன். அப்படி தமிழில் வந்த ‘சிறை’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ போன்ற படங்கள் மட்டுமல்ல கன்னடத்தில் அவர் நடித்த படங்களின் தெலுங்கு ரீமேக்கிலும் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதையை அவரிடம் சொல்லி ஆறு நாட்கள் என்றவுடன் முடியாது என்று மறுத்தார் என்று கேள்விப்பட்டேன். அப்போது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. அவர் ஓகே செய்த கதை என்கிற அடிப்படையில் இதை ஒப்புக்கொண்டு நடித்தேன்.

இப்போதெல்லாம் ஒரு நடிகர் 12 பேர் இல்லாமல் படப்பிடிப்பு கிளம்புவதில்லையே. நான் தனி ஒருவராகத்தான் சென்று நடித்தேன். அதனால் பலருக்கும் தொந்தரவு குறைவு. படப்பிடிப்பில் மற்றவர் நடித்த காட்சிகளை நான் வேடிக்கை பார்த்தேன். என்னுடன் நடித்த சுருதி ஹரிஹரன் ஒத்திகை பார்க்கலாம் என்று என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தார். இதில் நாங்கள் ஜாலியாக இருந்தோம்.
வீடுகளில் திருமண விழாக்களைப் பார்த்தால் பலருக்கும் பதற்றமாக இருக்கும். ஆனால் ஒரு நாள் படப்பிடிப்பு என்பதே ஒரு திருமண விழாவிற்குச் சமமாகும். படப்பிடிப்பு என்பதே தினம்தினம் திருமண விழாதான். அவ்வளவு கலாட்டாவாக இருக்கும். இந்த படப்பிடிப்பிலும் பல்வேறு கலாட்டாக்கள் நடந்தன.
இந்தப் படப்பிடிப்பு அனுபவத்தில் எனது வயதின் பலம் புரிந்தது. எங்களுடன் பல ஹாலிவுட் நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் சொந்த விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது நமது கேமரா மேன் சைலன்ஸ் என்று ஒரு சத்தம் போட்டார். அனைவரும் அமைதியானார்கள். வேலை கூட பார்க்காமல் அமைதியானார்கள். அப்புறம் அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. இப்படி இந்தப் படத்தில் பல்வேறு ருசிகரமான அனுபவங்கள் இருந்தன என்றார்.

நடிகை வரலட்சுமி பேசும்போது, முதலில் என்னை ஹாலிவுட் திரை உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநருக்கு நன்றி. நான் இது போன்ற ஆங்கிலம் பேசியதில்லை. நான் ஆங்கிலம் பேசினால் வேகமாக இருக்கும், யாருக்கும் புரியாது. என்னை இதில் மிதமான வேகத்தில் பேச வைத்தார்கள். இந்தப் படப்பிடிப்பில் நடித்த போது எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது. அங்குள்ள ஆனா என்ற அமெரிக்க நடிகையுடன் நான் நடித்தேன். நீதிமன்றத்தில் வழக்காடும் காட்சியில் அவருடன் நடிப்பது சவாலாக இருந்தது போட்டி போட்டு நடித்தேன். எப்போதும் எதுவாக இருந்தாலும் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பும் சுஹாசினி ஆன்ட்டி அவர்களின் அன்பு பெரியது. அவருடன் நடித்தது வித்தியாசமான அனுபவம். இங்கு வந்திருக்கும் பார்த்திபன் எழுத்துக்கு நான் ரசிகை. படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார்.
இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பேசும்போது, இங்கே பேசிய யூகி சேது எப்படிப்பட்டவர் என்று யூகிக்க முடியாத புத்திசாலி. இந்த படத்தின் காட்சிகளைப் பார்த்த போது ஒன்று தோன்றியது. ‘ஹேராம்’ என்கிற தமிழ்ப்படம் வெளிவந்த போது கமல் சாரிடம் இந்தப் படத்தின் தமிழ் உரிமையை எனக்குக் கொடுக்க முடியுமா ? என்று ராதிகா கேட்டாராம். இந்தப் படக் காட்சிகளைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றியது. ஏனென்றால் அந்த அளவுக்கு வெறும் ஆங்கிலமாக இருந்தது. சில ஐந்தாறு வார்த்தைகள் தான் தமிழில் இருந்தது. ‘வெர்டிக்ட்’ என்ற தலைப்பில் படத்தைத் தேடிய போது ஒரு ஆங்கிலப் படம் 1982ல் வந்ததைப் பார்த்தேன். இரண்டும் ஒரே மாதிரி தான் இருந்தது. கதையைச் சொல்லவில்லை. திரைப்பட உருவாக்கத்தில் அவ்வளவு தரமாக இரண்டும் ஒன்று போல் இருந்தது என்று சொல்கிறேன்.

எனது ‘இரவின் நிழல்’ படத்தில் வரலட்சுமி நடித்த போது எனக்கு பதற்றமாக இருந்தது. ஒரே ஷாட்டில் 2 மணி நேரத்தில் எடுக்க வேண்டும். சிறு தவறு நடந்தாலும் முதலில் இருந்து எடுக்க வேண்டும். ஆனால் அதில் வரலட்சுமி சரியாகச் செய்து பிரமாதமாக நடித்திருந்தார். இதில் தயாரிப்பாளர் நடிப்பதாக அறிந்தேன். தயாரிப்பாளர்கள் நடிக்க மட்டுமே சிலர் படம் எடுப்பார்கள். ஆனால் இதில் அப்படி இல்லை. இங்கே சுஹாசினியை பார்க்கும்போது, அவரது அழகின் திமிர் தெரிந்தது. அந்தத் திமிர் அவருக்கு அதிகம். எனக்கு 50 வயது என்று அவர் சொன்ன போது அந்தத் திமிர் தெரிந்தது. 28 வயதுக்கு மேல் பெண்கள் வயதை மறந்து விட்டால் திமிர் போல் ஒரு அழகு இருக்கும். அது பேரழகு. எனக்கு மணிரத்னம் மீது காதல், மணிரத்தினத்திற்கு சுஹாசினி மீது காதல். ஆறு பெண்கள் நடித்த ஒரு ரஷ்யப் படத்தைப் பார்த்தேன். அதேபோல் இது ஐந்து பெண்கள் திறமை காட்டியுள்ளார்கள் என்ற போது, சுஹாசினி குறிப்பிட்டு தனக்கு 63 வயது என்றார்.
ஒரு பெண்ணின் அழகு 30 வயதுக்கு மேல் அறிவாக மாறும் போது அழகு. அதை 30 வயதுக்கு மேல் அறிவாக மாற்றலாம், அந்த அறிவையே அமைதியாக மாற்றலாம். அறிவாக மாறியதற்கு சுஹாசினி உதாரணம். அமைதியாக மாற்றியதற்கு அன்னை தெரசா உதாரணம். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.
நிகழ்ச்சியில் படத்தின் முன்னோட்டத்தை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் நடிகர் பிரகாஷ் மோகன் தாஸ் எழுதிய ‘லங்கா’ என்கிற நூலை வெளியிட விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டார்கள்.
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஏ கார்த்திகேயன் தயாரிப்பில், எஸ். ராஜசேகர் இயக்கத்தில், அன்பு மயில்சாமி, அர்ஜுனன், சந்திரிகா ரேவதி, ஆர். சுந்தர்ராஜன், டி.பி. கஜேந்திரன், நளினி, நெல்லை சிவா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “எமன் கட்டளை”. கதைப்படி… […]
விமர்சனம்செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஏ கார்த்திகேயன் தயாரிப்பில், எஸ். ராஜசேகர் இயக்கத்தில், அன்பு மயில்சாமி, அர்ஜுனன், சந்திரிகா ரேவதி, ஆர். சுந்தர்ராஜன், டி.பி. கஜேந்திரன், நளினி, நெல்லை சிவா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “எமன் கட்டளை”.

கதைப்படி… அன்பு மயில்சாமி, அர்ஜுனன் ஆகிய இருவரும் சினிமாவில் இயக்குநராக எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால், ஒரு திருமண மண்டபத்தில் மணமகள் அறையில் வைத்திருந்த நகைகளை திருடிச் செல்கின்றனர். இதனால் அந்தப் பெண்ணின் திருமணம் நின்று போகிறது. பின்னர் செய்த தவறை உணர்ந்து மனம் வருந்தி தற்கொலை செய்து கொள்கிறார் அன்பு மயில்சாமி. இவரது ஆன்மா மேலோகம் சென்றதும், நீ செய்த தவறால் தான் அந்தப் பெண்ணின் திருமணம் நின்றுபோனது. அதனால் நீதான் அந்தப் பெண்ணின் திருமணத்தை நடத்த வேண்டும் என சில கட்டளைகளை வித்து பூலோகத்திற்கு அனுப்புகிறார் எமன்.
மேலோகத்திலிருந்தது பூலோகம் வருகிறார் அன்பு மயில்சாமி. பின்னர் எமனின் கட்டளைப்படி அந்தப் பெண்ணின் திருமணத்தை நடத்த முற்படுகிறார்.

திருமணம் நடந்ததா ? இயக்குநர் ஆகும் அவர்களது லட்சியம் என்னானது என்பது மீதிக்கதை…
படத்தில் அன்பு மயில்சாமி, சந்திரிகா ரேவதி, அர்ஜுனன் ஆகிய மூவரும் தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் ராஜசேகர் நாடக வடிவில் காமெடி கலந்த திரைக்கதையுடன், கலகலப்பாக கதையை நகர்த்திச் செல்ல முயற்சித்துள்ளார். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அனுபவம் வாய்ந்த சார்லி, டி.பி. கஜேந்திரன், நளினி, நெல்லை சிவா, வையாபுரி, டெல்லி கணேஷ், அனு மோகன், சங்கிலி முருகன், கராத்தே ராஜா, ஷகிலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில், இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’. இந்தத் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், இயக்குநர் […]
சினிமாஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில், இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’. இந்தத் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், இயக்குநர் ஏழுமலைக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். புதிய முயற்சியாக இந்தப் படத்தை எடுத்துள்ளார். பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது பழைய பாரதிராஜா படங்களைப் பார்ப்பது போல இருந்தது. இந்தப் படம் அறிவால் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. ஹீரோயினுக்கும் நம்ம வீட்டுப் பெண் போல அழகு உள்ளது. ஹீரோவுக்கும் நிச்சயம் பெரிய எதிர்காலம் உள்ளது. சிறந்த டெக்னீஷியன்ஸ் தான் சிறந்த படைப்புகளை உருவாக்குகிறார்கள். உருவாக்குவது கடினம். அதை உடைப்பது எளிது. கெட்ட எண்ணம் உள்ளவர்கள் நிர்வாகத்திற்கு வந்துவிட்டால் எல்லாம் முடிந்தது. அடுத்தவர்களைத் தூண்டி விடுவது எளிது. முரண்பாடுகளை சரிசெய்தால் மட்டுமே வேலைகள் சரியாக நடக்கும். சங்கத்தில் பிரச்சினைகள் வரும்போது அதை சரிசெய்யாமல், அடுத்தடுத்து சங்கங்கள் தொடங்கிக் கொண்டே இருந்தால் கடைசி வரை பிரச்சினைகள் முடியாது. இது ஒரு எச்சரிக்கை மணி. அடுத்து எப்படி வேண்டுமானாலும் திருப்பி விடப்படலாம். இந்தப் படத்தின் டெக்னீஷியன்ஸ் தான் இந்தப் படத்தை சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ’மையல்’ என்ற தலைப்புக்கே என்ன அர்த்தம் என்பதை இங்கே வந்திருக்கும் அனைவரும் அறியும்படி இயக்குநர் செய்திருப்பது சிறப்பு. பாடல், போஸ்டர் எல்லாம் பார்க்கும்போது ‘பருத்திவீரன்’ கார்த்தி, ப்ரியாமணி போல உள்ளது. ஆக்ஷன் மோடுடன் நல்ல திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுபோன்ற நிறைய நல்ல படங்கள் வரவேண்டும். ’டூரிஸ்ட் ஃபேமிலி’ போல இந்தப் படமும் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் அனுபமா விக்ரம் சிங், ’மையல்’ படக்குழு சார்பாக அனைவரையும் வரவேற்கிறேன். இந்தக் கதையில் ஆன்மா இருக்கிறது. இந்தப் படத்தை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேசுகையில், தேனப்பன் இதில் பணிபுரிந்திருப்பதும் மகிழ்ச்சி. டெக்னீஷியன்ஸ்தான் படத்தின் பலமே. சமந்தாவும் இல்லாமல் நயன்தாராவும் இல்லாமல் ஹீரோயினுக்கு இது என்ன புது பெயர் என்று யோசித்தேன். அமருக்கு பெரிய எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் ! கிராமத்து படம் எனும்போது லைவ்வாக இசை அமைய வேண்டும். அதை சரியாகக் கொண்டு வந்திருக்கிறார். பாடல்களும் படமும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.
பாடலாசிரியர் ஏகாதிசி பேசுகையில், படம் நன்றாக வந்துள்ளது. அமர் சிறந்த இசையமைப்பாளர். மூன்றாவது பாடல் என்னுடையது. அவருடன் இணைந்து வேலை செய்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசுகையில், படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் இயக்குநர் அழகாக செய்துக்கியுள்ளார். ‘மையல்’ இல்லை என்றால் மனிதமே இல்லை. ஆண் பெண் மீதும், பெண் ஆண் மீதும் மையல் கொள்ளவில்லை என்றால் இனப்பெருக்கமே இல்லை. இந்த ‘மையல்’ மிகப்பெரிய வெற்றியை மனிதக்குலத்திற்கு தர இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. தயாரிப்பாளர் ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை என்றால் ரஜினியோ, கமலோ உருவாகி இருக்க மாட்டார்கள். தயாரிப்பாளர் செய்வதை சரியாகச் செய்தாலே திரைத்துறை நன்றாக இருக்கும். கே.எஸ். ரவிக்குமார் எனக்குப் பிடித்த இயக்குநர். எல்லோரையும் அரவணைத்து அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். தான் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளரின் மகனது படத்தின் விழாவிற்கு கே.எஸ். ரவிக்குமார் அமர்ந்திருக்கிறார். அவருக்கு பெருமிதமான தருணம். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
மாஸ்டர் கனல் கண்ணன் பேசுகையில், படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன். அருமையாக வந்துள்ளது. அமர் இசையமைத்திருக்கும் படத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஹீரோவும், ஹீரோயினும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் மிகப்பெரிய வெற்றிப் பெற எனது வாழ்த்துக்கள் என்றார்.
தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் பேசுகையில், வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. இயக்குநர் மிகவும் நம்பிக்கையாக உள்ளார். படம் நிச்சயம் வெற்றி பெறும். செல்வமணி சொன்னதுபோல ஃபெப்சியை உடைக்க முடியாது.

பாடலாசிரியர் விவேகா பேசுகையில், ஆழமான சிந்தைனையோடு இந்தப் படம் உருவாகி இருக்கிறது. கே.எஸ். ரவிக்குமாரிடம் நிறைய படங்கள் பணிபுரிந்திருக்கிறேன். அவர் இந்தப் படத்திற்கு வந்து வாழ்த்தியது பெரிய விஷயம். படத்தின் கதாநாயகன் அதிகம் புத்தகங்கள் பற்றி என்னிடம் பேசுவார். நடிகர் புத்தகம் பற்றி பேசுவது ஆரோக்கியமான விஷயம். அமர் அழகான பாடல்களைக் கொடுத்துள்ளார். படத்திலும் அனைவரும் சிறப்பாகப் பணிபுரிந்துள்ளார். ‘மையல்’ அனைவருடைய இதயத்தையும் கொள்ளை கொள்ள வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், ரவிக்குமார் தலைமையில்தான் விழா நடந்து கொண்டிருக்கிறது. அவரது காலம் சினிமாவில் பொற்காலம். ஏனெனில் தயாரிப்பாளரை விட அதிக அக்கறை அவருக்கு இருக்கும். ‘திருப்பதி’ படத்திற்கும் வெளியீட்டுத் தேதி ஏப்ரல் மாதம் என்று ஃபிக்ஸ் செய்து தான் வேலைப் பார்த்தோம். ’மையல்’ எல்லோருக்கும் இருந்ததால்தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் என எல்லோரும் சினிமாவிலும் அரசியலிலும் ஜெயித்தார்கள். மையலை பல வகையாகச் சொல்லலாம். ஃபெப்சி தொழிலாளர்கள் நலன் கருதியிருக்கும் அமைப்பு. அதற்கு எதிராக ஒன்று ஆரம்பிக்கும்போது அது உழைப்பாளர்களுக்கு என்று ஆரம்பிப்பதா ? இல்லை, ஃபெப்சியை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிப்பது. அது தவறான நோக்கம். ‘மையல்’ திரைப்படத்திற்கு வருவோம். ‘மைனா’ படத்தில் கதாநாயகன் விதார்த்தாக இருக்கலாம். ஆனால், சேதுதான் அங்கு அடுத்த கதாநாயகன். இந்தப் படத்தில் அவருக்கு நல்ல ஜோடி அமைந்துவிட்டது. அமலாபால் போலவே இந்தப் படத்திலும் நல்ல ஹீரோயின் அமைந்து விட்டார். கதையும் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் ஏழுமலை பேசுகையில், இந்த ‘மையல்’ உருவாக காரணம் சேதுதான். எல்லாப் புகழும் என் கதாநாயகன் சேதுவுக்குதான். என் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. இயக்குநர் சங்கத்தில் இருந்து வாழ்த்த வந்திருக்கும் அனைத்து முன்னோடி இயக்குநர்களுக்கும் வாழ்த்துக்கள். சவுந்தர்யனுடைய மகன் அமர் இந்தப் படத்தில் அழகாக இசையமைத்திருக்கிறார். படத்திற்காக அயராது உழைத்திருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி என்றார்.
வாமா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகிபாபு நடிப்பில், விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “ஜோரா கைய தட்டுங்க”. இப்படத்தில் ஹரிஸ் பேராடி, வசந்தி, ஜாகிர் அலி, […]
சினிமாவாமா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகிபாபு நடிப்பில், விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “ஜோரா கைய தட்டுங்க”.
இப்படத்தில் ஹரிஸ் பேராடி, வசந்தி, ஜாகிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எஸ்.என். அருணகிரி இசையமைத்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர் மது அம்பாட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் வரும் மே 16 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஜாகிர் அலி பேசியதாவது… நான் ஒரு மலையாளி, தமிழ் மீதான நம்பிக்கையில், யோகிபாபு மீதான அன்பில், இப்படத்தை எடுத்துள்ளோம். யோகிபாபு இப்படத்திற்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். அனைவரும் ஆதரவு தாருங்கள் என்றார்.
எடிட்டர் சாபு ஜோசப் பேசியதாவது, இயக்குநரை 10 வருடம் முன்பிருந்தே தெரியும். அவர் இயக்கிய தீப்பிடிக்கும் பச்சை மரம் படத்திற்கு என் மனைவி தான் எடிட்டர், இப்போது பத்து வருடங்கள் கழித்து, இப்படத்திற்கு நான் எடிட்டர் மகிழ்ச்சி. என்னிடம் கதை சொல்லும் பல இயக்குநர்கள், யோகிபாபு தான் ஹீரோ என்பார்கள். யோகிபாபு எல்லோரும் அணுகக்கூடிய நாயகனாக இருக்கிறார். அவர் அதிக படம் செய்யும் போது, சினிமா நன்றாக இருக்கும். இந்தப்படத்திற்கு மது அம்பாட் கேமராமேன், பல தேசிய விருதுகள் வென்றவர், அவர் படத்தில் நான் இருப்பது எனக்குப் பெருமை. இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடன இயக்குநர், நடிகை வசந்தி பேசியதாவது, ஜோரா கைய தட்டுங்க படத்திற்கு என்னை அழைத்த விநீஷிற்கு நன்றி. யோகிபாபு நிறைய ஒத்துழைப்பு தந்தார். இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளில் உண்மையிலேயே அவரை அடித்துள்ளேன், பரவாயில்லை தயங்காமல் நடியுங்கள் என எனக்கு ஊக்கம் தந்தார். அவர் நிறைய உதவும் குணம் கொண்டவர். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது என்றார்.
நடிகர் ஶ்ரீதர் கோவிந்தராஜ் பேசியதாவது, இயக்குநர் விநீஷ், என்னை நம்பி மிகப்பெரிய கதாப்பாத்திரம் தந்துள்ளார். அவர் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளேன் என நம்புகிறேன். யோகிபாபுவிடம் ஒரு சாரி கேட்டுக்கொள்கிறேன். படத்தில் அவர் மீது பாட்டிலால் அடிக்கும் காட்சியில் உண்மையிலேயே அடித்து விட்டேன் ஆனால் அவர், கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல், கவலைப்படாதே இயக்குநருக்கு ஒகே இல்லை என்றால், ஒன்மோர் போகலாம் என்றார். என்னை ஊக்கப்படுத்தினார் அவருக்கு என் நன்றி. மது அம்பாட் படத்தில் நானும் நடித்திருப்பது எனக்குப் பெருமை என்றார்.
நடிகர் அருவி பாலா பேசியதாவது, இந்தப்படம் செய்யும் போது தான் வேட்டையன் பட வாய்ப்பு கிடைத்தது. மது அம்பாட் மூலம் தான் இந்த பட வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவருக்கு நன்றி. வாய்ப்பு தந்த இயக்குநர் விநீஷிற்கு நன்றி. தயாரிப்பாளருக்கு நன்றி. யோகிபாபு அண்ணன் நிஜத்திலும் அண்ணனாகவே நடந்து கொண்டார். அவருடன் பல படங்களில் நடித்துள்ளேன், என்னை கைட் பண்ணிக் கொண்டே இருப்பார். அவருக்கு நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் மது அம்பாட் பேசியதாவது,
இந்தப்படத்திற்காக விநீஷ் என்னை அழைத்தது மகிழ்ச்சி. யோகிபாபு மிக நல்ல நடிகர். சிறப்பாக நடித்துள்ளார். எல்லோரும் மிக சந்தோசத்துடன் வேலை பார்த்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன் என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, தயாரிப்பாளர் ஜாகிர் அலிக்கு வாழ்த்துகள். மது அம்பாட் இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர், அவர் இப்படத்தில் வேலை பார்த்துள்ளது பெருமை. அவர் எப்போதும் தேர்ந்தெடுத்துத் தான் படம் செய்வார். இது இப்படத்திற்குப் பெருமை. எல்லோரும் மிகவும் தன்னடக்கமாக இருக்கிறார்கள். யோகிபாபு பல சின்ன பட்ஜெட் படங்களில் தொடர்ந்து நடிக்கிறார். இது சினிமாவுக்கு நல்லது. எனக்கு இன்னும் படம் காண்பிக்கவில்லை, டிரெய்லர் நன்றாக உள்ளது. படமும் நன்றாக இருக்குமென நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள். யோகிபாபுவை கலகலப்பு படத்திலிருந்து பார்க்கிறேன், அவரது இந்த உயரத்திற்கு கடின உழைப்பு தான் காரணம். யோகிபாபு புரமோசன் வருவதற்கு 7 லட்சம் கேட்கிறார் என புகார் கூறுகிறார்கள், ஆனால் அவர் அப்படியில்லை என எனக்குத் தெரியும். அவர் 1 நாள் நடித்த படத்திற்குக் கூப்பிடுவது எல்லாம் அழகல்ல. அவர் பல படங்களுக்கு புரமோசனுக்கு வருகிறார். அவரைப் பற்றி தப்பாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

இயக்குநர் விநீஷ் மில்லினியம் பேசியதாவது, நான் கொஞ்சம் மலையாளி, மலையாளத்தின் தாய்மொழி தமிழ் தான். 2013 ல் புதுமுகங்களின் முயற்சியில் தீக்குளிக்கும் பச்சை மரம் படம் எடுத்தேன், பலருக்குத் தெரிந்திருக்கும். அப்போது என்னிடம் 400 பேர் நடிக்கக் கேட்டு வந்தார்கள், அப்போது ஒருவர் என்னிடம் வந்திருந்தார், அவருக்கு ஒரு நாள் 1000 ரூபாய் சம்பளம் பேசி 25 நாள் நடிக்கச் சொன்னேன், ஆனால் நான் நிறையப் படம் நடித்துள்ளேன், எனக்கு 2000 சம்பளம் தாருங்கள் என்றார், ஆனால் நான் நடிக்க விருப்பமிருந்தால் நடி இல்லையென்றால் ஓடிவிடு என்றேன். அவர் தான் யோகிபாபு. ஆனால் சில வருடம் கழித்து நான் போன் செய்த போது, அன்போடு என்னை அழைத்துப் பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் படம் செய்யப்போகிறேன் என்று சொன்ன போது, கதையெல்லாம் சொல்ல வேண்டாம், உங்களுக்காக நடிக்கிறேன் எனச் சொன்னார். அவருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்தப்படம் கண்டிப்பாக அவரது நடிப்பில் மிக வித்தியாசமான படமாக இருக்கும். மது அம்பாட் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவார், இப்போது சொன்னாலும் மலை ஏறுவார். இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர் என் படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எனக்குத் தமிழில் முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர் தாணுக்கு நன்றி. தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு நன்றி என்றார்.

கலைப்புலி தாணு பேசியதாவது,
இப்படத்தின் டிரெய்லர் பாடல்களை முன்பே பார்த்து விட்டேன். நண்பர் தயாரிப்பாளர் ஜாகிர் அலியை வரவேற்கிறேன். யோகிபாபு எல்லோருக்கும் நல்லவராகத் தான் இருக்கிறார். நான் போன் செய்தபோது, ஒரு தயாரிப்பாளருக்குப் பணமே வாங்காமல் நடித்துத் தந்தார். அவரது பெயருக்குக் களங்கம் வரக்கூடாது. இந்தப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என்றார்.

நடிகர் யோகிபாபு பேசியதாவது,
தயாரிப்பாளர் ஜாகிர் அலி மிகவும் கஷ்டப்பட்டு இப்படம் செய்துள்ளார், என்னால் இல்லை, அதற்கு வேறு பல காரணங்கள், ஆனால் படத்தை நன்றாக எடுத்துள்ளார். இயக்குநர் விநீஷ் சொன்னது உண்மை தான். தீக்குளிக்கும் பச்சை மரம் 2013ல் நடித்தேன், 1000 ரூபாய் சம்பளம். மீண்டும் பல வருடம் கழித்து போன் செய்து அவர் பேசியவுடனே சொல்லுங்கள் விநீஷ் என்றவுடன் ஆச்சரியப்பட்டார். நான் எப்போதும் பழசை மறக்க மாட்டேன். நான் எல்லோருக்கும் சப்போர்ட் செய்து தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். என்னிடம் உதவியாளராக இருந்தவர் ஹீரோவாக நடித்தார் அந்தப்படத்தில் ஒரு நாள் நடித்தேன், அந்தப்படத்திற்குத் தான் 7 லட்சம் கேட்டேன் எனப் புகார் சொல்லியுள்ளார்கள். இது நான் நடித்த படம் அதனால் நான் வரவேண்டும், வந்துள்ளேன். நான் என் சம்பளத்தை, நிர்ணயிப்பதில்லை, ஆனால் எனக்குச் சொன்ன சம்பளம் வருவதே இல்லை. எனக்கு வர வேண்டிய சம்பளம் மிகப்பெரிய லிஸ்ட் இருக்கிறது, அதனால் யாரும் தவறாகப் பேசாதீர்கள். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது எல்லோரும் ஆதரவு தாருங்கள் என்றார்.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன்’ திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன், சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். […]
சினிமாஇயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன்’ திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன், சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். தாய் மாமன் உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் சிதம்பரம் வழங்குகிறார்.
எதிர்வரும் 16ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், சிறுத்தை சிவா, பாண்டிராஜ், பொன் ராம், ரவிக்குமார், தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், டி. சிவா, அருண் விஷ்வா, கே. கலையரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், மிகவும் சந்தோஷமான மேடை. கடைக்குட்டி சிங்கம் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது நடிகர் கார்த்தி, ‘இப்படம் ஹிட்’ என சொன்னார். படத்தில் நடித்திருக்கும் முகங்களை பார்க்கும்போது தெரிகிறது என்று அதற்கு விளக்கமும் அளித்தார். அதேபோல் இந்தத் திரைப்படத்திலும் நடித்திருக்கும் முகங்களை பார்க்கும் போது இந்தத் திரைப்படம் வெற்றி பெறும் என உறுதியாக சொல்லலாம். இந்த அரங்கத்திற்கு உள்ளே வரும்போது ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், சுவாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி என அனைவரையும் பார்க்கும் போதே வெற்றி கூட்டணி என நம்பிக்கை வந்தது. அதனால் மாமன் நல்லதொரு குடும்பப் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

தயாரிப்பாளர் குமார் தொடக்க காலத்தில் நான் இயக்குநர் சேரனிடம் உதவியாளராக பணியாற்றிய போது அவரிடம் உதவி மேலாளராக பணியாற்றியவர். அவருடனான பயணம் மறக்க முடியாது. அவர் இன்று ஒரு தயாரிப்பாளராக உயர்ந்திருப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விரைவில் எனக்கும் ஒரு வாய்ப்பைத் தாருங்கள்.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் என்னுடைய உதவியாளர். நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு நான் நடுவராக பணியாற்றினேன். அந்த விழா நிறைவடைந்ததும் நான் மேடையில் பேசும்போது இங்கு வெற்றி பெற்ற இயக்குநர்கள் அனைவரும் திறமைசாலிகளாக இருக்கிறீர்கள். உங்களின் யாருக்கேனும் என்னிடம் உதவியாளராக சேர விரும்பினால் என் அலுவலகத்திற்கு வருகை தாருங்கள் என சொன்னேன். இதை சொல்லிவிட்டு நான் அலுவலகத்திற்கு செல்வதற்குள் அங்கு பிரசாந்த் பாண்டியராஜ் நின்றிருந்தார். அப்போது அவர் ஏற்கனவே நான் உங்களை ஃபாலோ செய்து கொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்னதும் உடனடியாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் என்றார். அன்றிலிருந்து இன்று வரை என் உடன் பயணிக்கிறார். ‘விலங்கு ‘என்றொரு வெப் சீரிசை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். அவர் திருச்சியில் அலுவலகம் வைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் பிரசாந்தின் இரண்டு பிள்ளைகளும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் முன்னோட்டத்தை என்னிடம் காண்பிக்கும் போது, இந்த முன்னோட்டத்தில் பசங்க 2- கடைக்குட்டி சிங்கம் -நம்ம வீட்டு பிள்ளை -ஆகிய படத்தில் இருந்து சில காட்சிகள் இருக்கும் என்று சொன்னார். பரவாயில்லை. இது மக்களுடைய வாழ்க்கையில் இருந்து எடுப்பது தானே என்று சொன்னேன்.
இந்த படத்தை பார்த்த திங்க் மியூசிக் சந்தோஷ் சூரிக்கு பிறகு எனக்கும் போன் செய்து இந்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலியை விட மிக சிறப்பாக இருக்கிறது . நிச்சயமாக வெற்றி பெறும் என்றார். சந்தோஷின் கணிப்பில் ஒவ்வொரு படமும் வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த படமும் வெற்றி பெறும்.

எனக்கு இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு சண்டைக் காட்சி, இரண்டு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளை காண்பித்தனர். அதைப் பார்த்த நம்பிக்கையில் தான் நானும் சொல்கிறேன். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்.
சூரியும், நானும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் தான் அறிமுகமானோம். அந்தப் படத்தின் போட்டோ சூட்டை சூரியையும் விமலையும் சேர்த்து வைத்து நடத்தினேன். இந்த படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

சிறுத்தை சிவா பேசுகையில், சூரியை எனக்கு நீண்ட நாட்களாகவே தெரியும். அவர் திரைத்துறையில் பணியாற்றி இன்று மிக உயர்ந்த இடத்திற்கு முன்னேறி உள்ளார். சில பேர் வெற்றி பெறும்போது மனதிற்குள் சந்தோசம் ஏற்படும். அந்த மகிழ்ச்சியுடன் தான் இங்கு நான் நின்று கொண்டிருக்கிறேன். கருடன் படத்தின் ட்ரெய்லர் வெளியானவுடன் சூரிக்கு போன் செய்து, ட்ரெய்லர் நன்றாக இருக்கிறது. படம் நிச்சயமாக ஹிட் ஆகும் என்று சொன்னேன். அதேபோல் மாமன் படத்தின் ட்ரெய்லரையும் பார்த்தேன். இரண்டரை மணி நேரம் படத்தை பார்த்துவிட்டு மனம் நெகிழ்வது என்பது சகஜம். அதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து விட்டு கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை. இந்த ட்ரெய்லரை உருவாக்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியும் , வாழ்த்துக்களையும் சொல்கிறேன். மேலும் இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். சூரி நீங்கள் மென்மேலும் வளர வேண்டும். உங்கள் உடன் இருப்பவர்கள் அனைவரையும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்றார்.

நடிகை சுவாசிகா பேசுகையில், படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியில் சிறப்பாக நடித்தால் நன்றாக நடித்திருக்கிறாய் என்ற பாராட்டை அனைவரும் பகிர்ந்து கொள்வார்கள். இது எனக்கு உற்சாகத்தை அளித்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் பாசிட்டிவ் வைப்( Vibe) புடன் இருந்தனர். இந்த திரைப்படத்தில் குடும்பத்தில் உள்ள உறவுகளை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். படத்தை பார்க்கும் போது எனக்கும் ஒரு சகோதரர் இருக்கிறார். அவரை நாம் தவறவிட்ட தருணங்களை நினைவுபடுத்துகிறது. தமிழகத்தை போல் தாய்மாமன்களுக்கான கலாச்சார ரீதியிலான முக்கியத்துவம் கேரளாவில் இல்லை என்றாலும், கேரளாவிலும் தாய் மாமன்கள் இருக்கிறார்கள். அவர்களை பார்த்தால் மனதில் பயம் இருக்கும். மரியாதை இருக்கும். எனக்கும் தாய் மாமன் இருக்கிறார். அவர்கள் அனைவருக்கும் இந்த படம் பார்க்கும்போது ஒரு நெருக்கம் ஏற்படும். படப்பிடிப்பு தளத்தில் மொழி பிரச்சனையை எதிர்கொள்வதற்காக உதவி இயக்குநர்கள் உதவி செய்தார்கள். படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் அனைவரும் ஒரு குடும்பம் போல் இருந்து மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம். இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். லப்பர் பந்து படத்திற்குப் பிறகு ‘மாமன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். படத்தைப் பற்றிய ரசிகர்களின் கருத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.
பாடலாசிரியர் விவேக் பேசுகையில், சில பேர் வெற்றி பெறுவார்கள். தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருப்பார்கள். அத்துடன் ஒரு பிம்பத்தையும் கட்டமைப்பார்கள். வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவர்கள் என்ற பிம்பத்தை கட்டமைப்பார்கள். அவர்களை நாம் ஆச்சரியமாக பார்ப்போம். ரசிப்போம். ஆனால் சூரி உன்னால் முடியும் உன் பக்கத்தில் தான் நான் இருக்கிறேன். உன்னை போல் நானும் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு இருக்கிறேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்டு இருக்கிறேன். ரோட்டில் அமர்ந்து போராடி இருக்கிறேன். அதன் பிறகு தான் இந்த வெற்றியை தொட்டிருக்கிறேன் என்ற ஒரு உண்மையை சொல்லிக் கொண்டே இருப்பார். இது நம் பக்கத்தில் இருக்கும் ஒருவருக்கு உத்வேகத்தை அளிக்கும். நம்மாலும் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை விதைக்கும். இந்த நம்பிக்கையை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருப்பதால் அவர் மென்மேலும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அவர் வெற்றி பெறுவது தான் முக்கியம் என கருதுகிறேன். இதற்கு நான் சிறு பங்காக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இரண்டு நிமிட ட்ரெய்லரை பார்த்தோம். அதில் இந்த சின்ன பையனுக்கு இவர்தான் மாமன் என்ற நம்பிக்கையை நமக்குள் ஏற்படுத்தினார். இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றார்.

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பேசுகையில், என் இசையில் தமிழில் வெளியாகும் முதல் திரைப்படம் ‘மாமன்’. இப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் ஜூம் மீட்டிங்கில் தான் சந்தித்து கதையை சொல்லத் தொடங்கினார். அந்தத் தருணத்தில் நான் வேறொரு படத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். அதன் பிறகு அன்று இரவு கதையை முழுவதுமாக சொன்னார். படத்தின் கதையை இடைவேளை வரை சொல்லும் போதே என் கண்களில் கண்ணீர் வரத் தொடங்கியது. அந்தத் தருணத்திலேயே இந்த படத்திற்கு நாம் இசையமைக்க வேண்டும் என தீர்மானித்து விட்டேன்.
பொதுவாக ஒரு கதையை முழுவதுமாக கேட்ட பிறகு அதனை என் மனைவியிடம் சொல்லி, விவாதித்து, அடுத்த நாள் காலையில் தான் இசையமைக்க ஒப்புக் கொள்வதா? வேண்டாமா? என்பதை தீர்மானிப்பேன்.
படத்தின் இரண்டாம் பாதியை கேட்டுவிட்டு உடனடியாக இயக்குநரிடம் இப்படத்திற்கு நான் இசை அமைக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அப்போது அவரிடம் நான் இதுவரை கேட்ட கதைகளிலே இது மிகவும் சிறப்பானதாக இருக்கிறது. எனக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் என்றேன்.
இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது என் மனைவியும் கண்ணீர் வடித்தார். இந்தப் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், மாமன் திரைப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு கண்ணீர் விட்டதாக பலரும் இங்கு சொன்னார்கள். இதற்கு காரணமாக இருந்த எடிட்டர் கணேஷ் சிவாவுக்கும், இசையமைப்பாளர் ஹேஷாமிற்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் ட்ரெய்லர் மே முதல் தேதி அன்று வெளியானது. இந்த திரைப்படம் 16ஆம் தேதி தானே வெளியாகிறது. அதற்குள் படத்தைப் பற்றிய விசயங்கள் தெரிந்து விடுமோ..! என கவலை அடைந்தேன். ஆனால் இதை யாரிடமும் நான் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் அந்த ரெண்டு நிமிடத்திற்குள் என்ன சொல்ல வேண்டும் அதனை சரியாக சொல்லியிருக்கிறார்கள் என்றார்.

நடிகர் ராஜ்கிரண் பேசுகையில், இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமிதமாக நினைக்கிறேன். இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சூரியும், அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யாவும், அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுவாசிகாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், ஜெயபிரகாஷ், நான் என பலர் இருக்கிறோம். எல்லோரும் அவங்களுடைய பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் நட்சத்திரங்கள் அனைவரையும் இயக்குநர் பிரசாந்த் அழகாக கையாண்டார். இந்த விழாவை சிறப்பிக்க வருகை தந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் பொன் ராம் பேசுகையில், இந்த திரைப்படத்தில் அவர் அழகாக இருக்கிறார். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. சூரியின் இந்த உயரம் அவருக்கு சாதாரணமாக கிடைக்கவில்லை. அதன் பின்னால் கடுமையாக உழைத்தார். சீம ராஜா படத்திற்காக சூரியிடம் சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு ஆறு மாத காலம் அவகாசம் வேண்டும் என்றார். ஆறு மாத காலமும் கஷ்டப்பட்டார். ஆனால் அந்த காட்சிகளை படப்பிடிப்பு தளத்தில் ஆறே நிமிடத்தில் படமாக்கினோம். அன்று அவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தார். அப்போதே இவர் ஹீரோவாக உயர்வதற்கு தகுதியானவர் என நினைத்துக் கொண்டேன். விடுதலை படத்தில் நடித்த போது அவருக்கு உடலெங்கும் தையல் இருந்தது. ஒவ்வொரு தையலிலும் அவருடைய வாழ்க்கை உயர்ந்தது. தற்போது மாமனாக நிற்கிறார் என்றால்.. அதற்குப் பின்னால் அவருடைய கடும் உழைப்பு இருக்கிறது. இதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.
தாய்மாமன் உறவு என்பது சாதாரணமானதல்ல. அப்பா அம்மாவிற்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பதுதான் தாய் மாமன். ஒவ்வொரு தாய் மாமனும் தன்னுடைய அக்கா குழந்தையையும், தங்கை குழந்தையையும் எதன் காரணமாகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்.
சமீபத்தில் நிறைய படங்களின் டிரைலர்களை பார்த்திருக்கிறோம். அதில் வெட்டு, குத்து அதிகமாக இருக்கும். ஆனால் மாமன் திரைப்படத்தின் முன்னோட்டத்தில் அற்புதமான குடும்ப கதையை சொல்லி இருக்கிறார்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த வகையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். இந்தத் திரைப்படத்தில் கலகலப்பு, உணர்வுபூர்வமான காட்சிகளும் இருக்கும் என்று நம்புகிறேன். இசையமைப்பாளர் குறிப்பிட்டது போல் இப்படத்தின் இடைவேளையில் ஏதோ விசயம் இருக்கிறது. அது படத்தை பற்றிய ஆவலை தூண்டுகிறது. அதற்காக காத்திருக்கிறேன். இந்தப் படத்தை இயக்கிய இயக்குநருக்கும், நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசுகையில், இது எங்களுடைய குடும்ப விழா. சூரி எங்கள் குடும்பத்தில் ஒருவர். இந்த விழாவில் நானும் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இயக்குநர் பிரசாந்த் இயக்கத்தில் வெளியான முதல் படம் வெற்றி பெறவில்லை என்றாலும், அதன் பிறகு விலங்கு என்ற ஒரு வெப்சீரிஸை இயக்கி வெற்றி பெற வைத்து அதன் மூலமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதற்காக நான் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படம் வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த இயக்குநரை வைத்து வெப்சீரிஸை தயாரித்திருக்கிறார்.

சூரி இந்த படத்தின் கதையை சொல்லும்போதும், பிரசாந்தின் இயக்கத்தை பற்றி சொல்லும் போதும் சந்தோஷமாக இருந்தது. அதனால் இயக்குநர் பிரசாந்திற்கும், தயாரிப்பாளர் குமாருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சூரி எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். பத்து வருடமாக அவரை எனக்குத் தெரியும். காமெடியாக நடித்த பிறகு ஹீரோவாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இது போல் இந்தியாவில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று தெரியவில்லை . இருந்தாலும் சினிமாவில் உள்ளவர்களுக்கு சூரியின் பயணம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். விடுதலை- கொட்டுக்காளி -கருடன் – என பல பரிமாணங்களை காட்டி தன் திறமையை நிரூபித்து இருக்கிறார். அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு தான் அவர் எவ்வளவு அப்பாவியாக இருந்தாலும்.. தெளிவாக யோசிப்பவர் என்பதும் தெரியும். அவரிடம் இருக்கும் கதை அறிவு சிறப்பானது. அவரிடமிருந்து வெளியாகும் முதல் கதை மாமன். இன்னும் அவரிடம் ஏராளமான கதைகள் இருக்கிறது. அதை எப்போதாவது ஒன்று இரண்டு என்று வெளியிட்டால் அவர் இன்னும் உயரம் அடையலாம். அதே நேரத்தில் மற்றவர்களின் கதையிலும் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும், சூரிக்கும் எமோஷனலான தொடர்பு உண்டு. இருவரும் ஒரே வீட்டிலிருந்து வந்திருப்பது போன்ற உணர்வு தான். நான் உதவி இயக்குநராக இருந்த காலகட்டத்தில் இருந்து நிறைய இரவுகள் அவருடன் செலவழித்து இருக்கிறேன். அப்போதெல்லாம் என் மனதில் இவர் இவ்வளவு இயல்பானவராக இருக்கிறாரே எனத் தோன்றும். நான் சூரியுடன் பழக தொடங்கிய போது அவருடைய மோசமான காலகட்டம் அது. அவருடைய காமெடி ஒர்க் அவுட் ஆகாமல் போன காலகட்டம் அது. இந்தப் படத்தில் சூரியின் ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்ய லட்சுமி திரைத்துறையில் அவருடைய இலக்கை சீக்கிரம் எட்டி விடுவார் என நம்புகிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் சுவாசிகா பற்றி சூரி என்னிடம், ‘இந்த பொண்ணு தமிழ் சினிமா இருக்கும் வரை நடிக்கும். அவ்வளவு திறமைசாலி. நடிப்பு பிசாசு’ என்றார். நிஜ மனிதர்களை நாம் கதாபாத்திரங்களாக மாற்றும் போது அதில் நடிகர்கள் சரியாக உணர்ந்து நடிக்கவில்லை என்றால்.. படப்பிடிப்பு தளத்தில் கடினமாக இருக்கும். நமக்குள் தங்கி வலியை ஏற்படுத்திய உறவுகளை கதாபாத்திரங்கள் ஆக்கி அதனை திரையில் வெளிப்படுத்தும்போது சரியாக இருக்க வேண்டும் என நினைப்போம். என்னைப் போன்ற படைப்பாளிகள் நினைப்பது என்னவென்றால்.. எங்களுடைய மனதில் இருக்கும் கதாபாத்திரங்களை நடிகர்கள் திரையில் துல்லியமாக பிரதிபலிக்க வேண்டும் என்பது தான். அப்படி ஒரு கதையில் உள்ள கதாபாத்திரங்களின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தக்கூடிய அனைத்து நட்சத்திரங்களும் இந்த படத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தலைவராக ராஜ்கிரண் இருக்கிறார்.

ராஜ் கிரணின் பாதிப்பு இல்லாமல் கிராமத்து படங்கள் இல்லை. இந்தத் திரைப்படமும் அவருடைய படங்களில் பாதிப்பிலிருந்து தான் உருவாகி இருக்கிறது. இந்த படம் மட்டுமல்ல என்னுடைய வாழை திரைப்படமும் உருவாகி இருக்கிறது. நாங்கள் அனைவரும் எப்போதும் ராஜ் கிரணுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்.
இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஹேஷாம் இனிய பயணத்தை தொடங்கி இருக்கிறார். அவரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
சூரி தனக்கான தேரை உருவாக்கி, அதில் அவரே அமர்ந்து, அவரே இழுத்துக்கொண்டு செல்கிறார். அதனால் அவரிடமிருந்து யாரும் தேரை பிடுங்க இயலாது. வாழ்த்துக்கள் என்றார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், இந்தப் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே வெற்றி பெறும் என சொல்ல முடிகிறது. மக்கள் அண்மை காலமாக லைட் ஹார்ட்டட் ஸ்கிரிப்ட்டுகளுக்கு கொடுக்கும் வரவேற்பு சந்தோசமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த மாமன் திரைப்படம் பெரிய வெற்றியைப் பெறும்.

சூரியின் வளர்ச்சியை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. இவருடைய வளர்ச்சி அனைவருக்கும் சந்தோசத்தை கொடுக்கிறது என சொன்னார்கள். உண்மையில் ஒருவருடைய வளர்ச்சியில் மற்றவர்கள் மகிழ்ந்தால் அதுதான் சிறப்பு.
நானும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படங்களை தயாரிக்க தொடங்கி இருக்கிறேன். இதில் பத்து கதைகள் வந்தால்.. அதில் ஐந்து கதைகளில் சூரி ஹீரோ என்கிறார்கள். அதை பார்க்கும் போது உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசுகையில், கடவுளுக்கு நன்றி. இந்த விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி. மாமன் படத்தை தாய் மாமன் என்ற உறவை வைத்து தான் தொடங்கினோம். ஆனால் இந்த படத்தில் அனைத்து உறவுகளும் இணைந்து இருக்கிறது. எல்லா குடும்பங்களிலும் நடைபெறும் விசயத்தை சூரி அண்ணன் கதையாக சொன்னார்.
விலங்கு மாதிரி ஒரு திரில்லரை மீண்டும் இயக்கக் கூடாது என்று தீர்மானித்திருந்தேன். அந்த தருணத்தில் இது போன்றதொரு கதையைக் கேட்டதும் ரொம்ப நெருக்கமானதாக இருந்தது. சவால் மிக்கதாகவும் இருந்தது. அதன் பிறகு கதை எழுதத் தொடங்கினோம். இந்தப் படத்தில் உள்ள முக்கியமான விசயங்கள் அனைத்தும் சூரி சொன்னது தான். அதை நாங்கள் சரியாக செய்திருக்கிறோம் என்று நம்புகிறேன்.
ஒரு தோல்வி படம் கொடுத்தவுடன் என்னை ஆழ்கடலில் புதைத்திருந்தார்கள். அதன் பிறகு எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் அவர்களின் உதவியுடன் விலங்கு என்ற ஒரு வெப்சீரிசை இயக்கினேன். அதன் பிறகு எனக்கு வாய்ப்பும் வாழ்க்கையும் கிடைத்தது.
நாங்கள் அனைவரும் நண்பர்களாக இணைந்து மாமனை உருவாக்கியிருக்கிறோம். இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகமாக சொல்கிறார்கள். அது எனக்கு பயத்தை அளிக்கிறது. மே 16ஆம் தேதி அன்று படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள். இந்தப் படத்தை என்னுடைய மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன் என்றார்.

நடிகர் சூரி பேசுகையில், இப்படத்தில் பணிகள் நிறைவடைந்த உடன் 20 நிமிட காட்சிகளை பார்த்துவிட்டு இப்படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்வதற்கான உரிமையை பெற்ற விநியோகஸ்தர் சிதம்பரம் அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவிற்கு வருகை தந்த சிறுத்தை சிவா, பாண்டிராஜ், லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ் என அனைத்து இயக்குநர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களிடம் இருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். இவர்கள் என் மீது செலுத்தும் அன்பின் காரணமாக நிறைய நம்பிக்கை கிடைத்திருக்கிறது. டி சிவா, அருண் விஷ்வா என இங்கு வருகை தந்த தயாரிப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாண்டிராஜ் படத்தில் இடம்பெறும் வசனத்தை போல் இந்த படத்திலும் இடம்பெற வேண்டும் என இயக்குநர் பிரசாந்திடம் சொல்லி இருக்கிறேன்.
பதினாறு வருடமாக என்னுடன் பயணித்துக் கொண்டிருக்கும் குமார் இன்று தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை தயாரித்து சொன்ன நேரத்தில் வெளியிடுவதற்காக கடுமையாக உழைக்கிறார். கருடன் படம் போல் இந்த திரைப்படமும் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என் நம்புகிறேன்.

ராஜ் கிரண் அப்பா இந்தப் படத்திற்காக நடிக்க ஒப்புக் கொண்டது எங்களுக்கெல்லாம் பெருமை. இந்தப் படத்தின் கதையை கேட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னதுடன் நடிக்கவும் ஒப்புக்கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து எங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியதற்கு நன்றி. கலைத்தாய் உங்களை நீடித்த ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்பை தமிழ் திரையுலகம் சார்பில் வரவேற்கிறேன். இதற்கு முன் நீங்கள் இசை அமைத்த ஒன்ஸ்மோர் படத்தின் பாடல்களும் ஹிட். இந்த படத்தின் பாடல்களும் ஹிட். படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது.. பாடல்களைக் கேட்டு எங்கள் குழுவினர் கொடுத்த நெருக்கடிகளுக்கும், தொல்லைகளுக்கும் இந்த தருணத்தில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சூரி மீது இருக்கும் அன்பின் காரணமாகவும், இந்தப் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டதாலும் இப்படத்திற்கு பாடல்களை எழுதுவதற்கு சம்பளம் எதுவும் வேண்டாம் என்று சொன்ன பாடலாசிரியர் விவேக்கிற்கு என்னுடைய நன்றி. அவர் மாமன் படத்தில் இணைந்திருப்பது படத்திற்கு பெருமை. நாங்கள் நினைத்ததை விட இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. அதிலும் மண் சார்ந்த உறவுகளுக்கு உங்களுடைய வரிகள் நெருக்கமாக இருக்கிறது. இதற்காக உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘சீம ராஜா’ படத்திற்காக இயக்குநர் பொன்ராம் என்னை சிக்ஸ் பேக் வைத்துக்கொள் என்றார். இதற்காக ஆறு மாத காலம் கடினமாக உழைத்தேன். என்னுடைய மனைவியும் உதவி செய்தார். இந்தப் படத்தை திரையரங்கத்தில் பார்ப்பதற்காக ஆவலுடன் குடும்பத்துடன் சென்றேன். ஆனால் அந்த சிக்ஸ் பேக் திரையில் 59 வினாடிகள் தான் இடம்பெற்றது. சிறிது ஏமாற்றமாக இருந்தாலும் அதுதான் என்னை இந்த அளவிற்கு உயர்வதற்கான நம்பிக்கையை விதைத்தது. அன்று அது போன்றதொரு வாய்ப்பை நீங்கள் எனக்கு வழங்கவில்லை என்றால்.. தற்போது என் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை இருந்திருக்காது. அதனால் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தை இயக்குநர் ரவிக்குமார் பார்த்து விட்டார். அவர் இங்கு வருகை தந்து படத்தைப் பற்றிய விமர்சனத்தை பதிவு செய்ததற்கு நன்றி.
இப்படத்தின் கதையை நான் எழுதி இருந்தாலும் எனது பெயர் வரவேண்டாம் என இயக்குநரிடம் சொல்லி இருந்தேன். ஆனாலும் இப்படத்தின் கதை என எனது பெயர் இடம் பிடித்திருக்கிறது. இதற்கு காரணமான திங்க் மியூசிக் சந்தோஷிற்கு நன்றி.
நான் இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய குடும்பம் தான் காரணம். இந்தப் படத்தில் ஒரு வசனம் இருக்கிறது ‘சாமிக்கு அடுத்து பொண்டாட்டி இல்லடா.. பொண்டாட்டி தான் சாமி’. இது என்னை மிகவும் நெகிழ வைத்தது. அதேபோல் எனக்கு சாமிக்கு அடுத்து குடும்பம் இல்லை குடும்பம் தான் சாமி என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்று எனக்கு பல விசயங்களை கற்றுக் கொடுத்தது குடும்பம் தான். இந்தப் படத்தின் கதை உருவானதும் இங்கிருந்து தான். நான் இந்த படத்திற்காக கதையை யோசித்து எழுதவில்லை. எங்கள் குடும்ப உறவுகளில் நடைபெற்ற சம்பவங்களை தான் சொல்லி இருக்கிறேன்.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் என்னை சந்தித்து இரண்டு கதைகளை சொன்னார். இரண்டும் நன்றாக இருந்தது. இருந்தாலும் தயாரிப்பாளர் குமார், உங்களிடம் இருக்கும் கதையை சொல்லுங்கள். அதை பிரசாந்த் திரைக்கதையாக மாற்றி இயக்குவார் என சொன்னார். நான் முதலில் தயங்கினேன். பிறகு இந்த படத்தின் கதையை அவரிடம் சொன்னேன். குடும்பத்தில் அம்மா அப்பா தாத்தா பாட்டி அண்ணன் தங்கை என எத்தனையோ உறவுகள் இருந்தாலும் ஸ்பெஷலான உறவு என்றால்.. அது தாய் மாமன் உறவு தான். தாய்க்குப் பிறகு தாய் ஸ்தானத்தில் இருக்கும் ஒரு உறவு என்றால் அது தாய் மாமன் தான். தாய் மாமனை பற்றி பல படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஒரு சின்ன பையனுக்கும் அவனுடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை சொல்லி இருக்கிறோம். இந்த கதையை இயக்குநர் வெற்றிமாறனிடம் ஒரு வருடத்திற்கு முன்பே சொல்லி இருக்கிறேன். அவரும் நன்றாக இருக்கிறது என சொன்னார். இந்த கதையை கேட்டதும் பிரசாந்த் பாண்டிராஜ், அண்ணே இந்த கதை என்னுடைய குடும்பத்திலும் நடந்திருக்கிறது என்றார். இந்த படம் இன்றைய காலகட்டத்திற்கு தேவையானதாக இருக்கிறது என சொல்லி இப்படத்தை இயக்கத் தொடங்கினார். இந்தப் படத்திற்கு முக்கியமான நடிகரே அந்த சின்னப் பையன் தான். அவர் யார்? என்று இயக்குநரிடம் கேட்டேன். அந்த கதாபாத்திரத்திற்காக தயாரிப்பாளர் மூன்று குழந்தை நட்சத்திரங்களை பரிந்துரைத்தார். நான் ஒரு பத்து குழந்தை நட்சத்திரங்களை பரிந்துரைத்தேன். காரில் பயணிக்கும் போது எதிரில் தென்படும் குழந்தைகள் எல்லாம் போனில் போட்டோ எடுக்க தொடங்கினேன். படப்பிடிப்பும் தொடங்கியது. அதன் பிறகு இயக்குநர் மாஸ்டர் பிரகீத் சிவனை அறிமுகப்படுத்தினார். அவர் இயக்குநரின் மகன் என்பது அதன் பிறகு தான் தெரியும். அந்த பையனும் மிகச் சிறப்பாக நடித்தார். படப்பிடிப்பு தளத்தில் அவனின் சேட்டைகளை அனைவரும் ரசித்தோம். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் குடும்பத்தை மே 16ஆம் தேதி அன்று திரையரங்கத்திற்கு சென்று பார்க்க போகிறீர்கள். பல குடும்பங்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கும் அல்லது எதிர்காலத்தில் நடக்கும் என்றார்.
முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, 104 கோடி வசூலைக் கடந்து, சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் […]
சினிமாமுன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, 104 கோடி வசூலைக் கடந்து, சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் லாபத்தில் 10 கோடி ரூபாயை, அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கியுள்ளார்.
இப்படம் திரையரங்குகளை திருவிழாகோலம் ஆக்கியதோடு, விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாரட்டுக்களை குவித்துள்ளது. இந்நிலையில், இன்று நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உட்பட படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில் மீடியா நண்பர்களுடன் நீண்ட நேரம் உரையாடி அன்பைப் பகிர்ந்து கொண்ட சூர்யா, அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். மீடியா நண்பர்கள் நடிகர் சூர்யாவுக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

ரெட்ரோ படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில், அரங்கு நிறைந்த காட்சிகளாக, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’. இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும், ஆராதியா நாயகியாகவும் நடிக்க, சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு, செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய், சாய்தீனா, மீசை […]
சினிமாஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’. இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும், ஆராதியா நாயகியாகவும் நடிக்க, சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு, செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய், சாய்தீனா, மீசை ராஜேந்திரன், ராணுவ வீரர் காமராஜ், குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த ‘குற்றம் தவிர்’ படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. முன்னோட்டம் மற்றும் பாடல்களை கங்கை அமரன் வெளியிட. விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அதிமுகவைச் சேர்ந்த பெங்களூர் புகழேந்தி, ஆன்மீகவாதி ஜெய்பிரகாஷ் குருஜி, தொழிலதிபர் பிரகாஷ் பழனி, இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், பேரரசு, பவித்ரன், ராஜகுமாரன், நடிகர் சித்தப்பு சரவணன் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
படத்தின் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் அனைவரையும் வரவேற்றுப் பேசும்போது.
நாங்கள் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருந்தாலும், படப்பிடிப்புகள் பெரும்பாலும் அங்கே நடந்திருந்தாலும் தமிழ்நாட்டு நடிகர்களையே முழுதாகப் பயன்படுத்தி படம் எடுத்து இருக்கிறோம். ஒரு திரைப்படத்தின் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடிகிறது. அவர்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிகிறது. இந்தப் படத்தை வெற்றி பெற வைத்தால் மீண்டும் படமெடுப்பேன். அதேபோல் நான் பலருக்கும் வேலை வாய்ப்பு கொடுப்பேன். எனவே இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முன்னோட்டம் மற்றும் பாடல்களை வெளியிட்டு இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் கங்கை அமரன் பேசும்போது, முதலில் கர்நாடகத்திலிருந்து படம் எடுக்க வந்துள்ள இவர்களை வரவேற்கிறேன். இங்கே கதாநாயகன் நாயகி தோன்றிய காட்சிகளைப் பார்த்தேன்.
பொதுவாக இதுபோல வெளியீட்டு நிகழ்ச்சிகளில் படத்தின் பாடல்களைப் போடுகிறார்கள், சண்டைக் காட்சிகளைப் போடுகிறார்கள். ஆனால், சென்டிமெண்ட் காட்சிகளையோ நகைச்சுவைக் காட்சிகளையோ போடுவதில்லை.
இனி அதையும் போட்டுக் காட்ட வேண்டும். அதையும் சேர்த்துக் காட்டுங்கப்பா, அதைப் பார்க்கும் போது தான் நடிகர்களுக்கு நடிப்புக்கான மதிப்பெண் கொடுக்க முடியும். இது ஒரு அறிவுரை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். எப்போதும் நான் வெளிப்படையாகப் பேசுவேன். ஏதாவது குறை இருந்தாலும் சொல்வேன். எனக்கு மனதில் தோன்றியதைச் சொன்னேன். அந்தச் சுவைகளுடன் இந்தச் சுவைகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா நன்றாக இசையமைத்துள்ளார். அவர் எனது உறவினர் தான். நம்ம வீட்டுப் பிள்ளை. இந்தப் படத்தின் தயாரிப்பாளரின் நண்பர் சுவாமிஜி இங்கே வந்திருக்கிறார். அவருக்கும் எனக்கும் நல்ல பழக்கம். என்னை அழைத்து அங்கே பெரிய மரியாதை எல்லாம் செய்தார்கள். இங்கே செண்ட்ராயன் வந்திருக்கிறார் அவர் எங்கள் பக்கத்து ஊர்க்காரர் தான். அவர் பிக் பாஸ் ரகசியங்களை இங்கே சொல்ல வேண்டும். பெங்களூரில் இருந்து படம் எடுக்க இங்கே வந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றவர் ‘மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே’ என்ற மூகாம்பிகைப் பாடலை முழுதாகப் பாடி முடித்துப் படக் குழுவினரை வாழ்த்தினார்.

இயக்குநர் கஜேந்திரா பேசும்போது, இது எங்களுக்கு முதல் படம். நாங்கள் புதிதாகப் படம் எடுக்க வந்திருக்கிறோம். அனைத்து நடிகர்களையும் சென்னையில் இருந்து வரவழைத்து ஒரு தமிழ்ப் படத்தை எடுத்திருக்கிறோம். இதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர் இல்லாமல் திரைப்படம் எடுக்க முடியாது. படப்பிடிப்பில் எந்தக் குறையும் இல்லாமல் அவர் எங்கள் அனைவரையும் நன்றாகப் பார்த்துக் கொண்டார் என்றார்.
கதாநாயகனாக நடிக்கும் ரிஷி ரித்விக் பேசும்போது, நான் வில்லனாக நடித்து வந்தேன். இப்போது இதில் கதாநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்கள். பெங்களூரிலிருந்து படம் எடுக்க வந்திருக்கிறார்கள் என்ற போது நான் முதலில் யோசித்தேன். ஆனால் தயாரிப்பாளர் உடனே ஒரு லட்ச ரூபாய் எனக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் செய்தார்கள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் படப்பிடிப்பு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. உடன் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. பருத்திவீரன் படத்தில் பார்த்து நான் வியந்த சரவணன் இப்படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் பாஸ்கர், எடிட்டர் ரஞ்சித் போன்றவர்களின் ஈடுபாடும் உழைப்பும் சாதாரணமானதல்ல. அனைவரும் சேர்ந்து விருப்பத்தோடு சிரமப்பட்டு எடுத்திருக்கிறோம்.
படம் ஒரு நல்ல கருத்தைப் பற்றிப் பேசுகிறது. இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
கதாநாயகி நடிகை ஆராதியா பேசும்போது, ‘மதிமாறன்’ படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதன் மூலம் என்னை அனைவருக்கும் தெரிய வைத்த இயக்குநர் மந்த்ராவுக்கு நன்றி. நான் இதுவரை 12 படங்கள் நடித்திருக்கிறேன். ஒன்றுதான் வெளியாகி இருக்கிறது. மற்றவை வெளிவர உள்ளன. இந்தப் படத்தில் தயாரிப்பாளர், அவரது குழுவினர் எங்களை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். முதன் முதலில் இதில் நடனமாடி நடித்திருக்கிறேன். அந்தக் காட்சியைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி என்றார்.

பருத்திவீரன் சரவணன் பேசும் போது, நான் இதில் வில்லனாக நடித்திருக்கிறேன். இந்த படப்பிடிப்பு பெங்களூர், கர்நாடகா பகுதி என்று நடந்தது. தமிழ்நாட்டில் இருந்து படப்பிடிப்புக்காக அங்கே செல்கிறோம் எப்படி இருக்குமோ என்று தயங்கியபடியே சென்றேன். ஆனால் ஏர்போர்ட்டில் இறங்கியது முதல் அவர்கள் என்னை வரவேற்று அழைத்துச் சென்று தங்க வைத்து உபசரித்தது வரை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பின் போதும் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள், இப்படிக் கடைசி வரை நடந்து கொண்டார்கள். அவர்களின் அந்த நல்ல மனதிற்காக இந்தப் படம் வெற்றி பெற வேண்டும். பாடல்கள் சிறப்பாக உள்ளன. தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள் என்றார்.
நடிகர் செண்ட்ராயன் பேசும்போது, இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் நல்ல சம்பளம் கொடுத்தார். பாக்கி வைக்காமல் அவ்வப்போது செட்டில் செய்து கொண்டே இருந்தார்கள். நான் பெங்களூர் படப்பிடிப்பு என்றதும் கர்நாடகாவில் இருப்பவர்களுக்குத் தமிழ் தெரியாதே என்று சில கன்னட வார்த்தைகளை எல்லாம் கஷ்டப்பட்டுக் கற்றுக் கொண்டு போனேன். ஆனால் அங்கே போய்ப் பார்த்தால் எல்லாருமே தமிழ் பேசினார்கள். பெங்களூரில் உள்ளவர்கள் தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு எல்லாமும் பேசுகிறார்கள். அது ஒரு பேன் இந்தியா நகரமாகத் தோன்றியது. அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்றார்.
நடிகர் மீசை ராஜேந்திரன் பேசும்போது, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய சினிமா எத்தனையோ வளர்ச்சியைப் பெற்று இன்று வளர்ந்து இருக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல பாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். பெரிய நட்சத்திரங்கள் இருந்தாலும், கதை இருந்தால் தான் படம் ஓடும். இதில் கதையை நம்பி படம் எடுத்திருக்கிறார்கள். இயக்குநர் தான் எதிர்பார்த்தது வரும் வரை விட மாட்டார். அந்த அளவிற்கு மெனக்கெடுவார். இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம் என்றார்.

நடிகை வினோதினி பேசும்போது,
இயக்குநருக்கு தமிழ் எழுதவே தெரியாது அதனால்தான் டயலாக் பேப்பர் எழுதவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தைச் சிறப்பாக முடித்தார். திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் தான் அடித்தளம். முதலில் தயாரிப்பாளரைப் பார்த்தபோது இந்த படத்தை எப்படி எடுப்பாரோ? என்று நினைத்தேன். இந்தப் படத்தை எப்படிக் கொண்டு போய் சேர்ப்பாரோ என்று கேள்வி இருந்தது. ஆனால் அவர் அனைத்தையும் தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்து, திட்டமிட்டுச் செய்தார். அனைத்தையும் தொடர்ச்சியாகப் பின்பற்றி வந்தார். திட்டமிட்டுச் செயல்படுவதில் அவர் என்னை ஆச்சரியப்படுத்தினார்.
ஒரு திரைப்பட விழாவுக்கு இத்தனை பேர் வந்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு அவர் உறவுகளைச் சேர்த்து வைத்துள்ளார். இந்த உறவுகளே அவருக்கு வெற்றியைத் தேடித் தரும். இந்தப் படத்தில் நான் ஒரு அம்மா பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பழம்பெரும் நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு உடன் இணைந்து நடித்திருக்கிறேன். அந்தக் குழந்தை சைந்தவி கூட நடித்தது மறக்க முடியாது. முதல் படம் போலவே தெரியவில்லை, சிறப்பாக நடித்தாள். நான் நடித்த அம்மா பாடல் சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி என்றார்.
ராணுவ வீரரும் நடிகருமான காமராஜ் பேசும்போது, இதுவரை தைரியம், ஐ, மெர்சல், சிங்கம் 3, சுல்தான் போன்ற படங்களில் நான் நடித்திருக்கிறேன், நான் இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறேன், எனது முகநூல் பார்த்து ஐ பட வாய்ப்பு கொடுத்த ஷங்கர் அவர்களை மறக்க முடியாது. இந்தப் படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் வருகிறேன். சினிமா ஆர்வம்தான் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. சினிமா அனைத்தையும் கற்றுக் கொடுக்கும், வாரம் ஒரு சினிமாவைக் குழந்தைகளுக்குக் காட்டுங்கள் என்றார்.

ஜெயபிரகாஷ் குருஜி பேசும் போது, எனக்குத் திரை உலகில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நான் கலந்து கொள்ளும் விழாக்கள் பிற விழாக்கள் பத்து என்றால் சினிமா விழாக்கள் நூறு என்று இருக்கும்.
அந்த அளவிற்குத் திரையுலகில் உள்ளவர்கள் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். கங்கை அமரன் அப்படி ஒரு நண்பர். தினம் என்னுடன் பேசுபவர். இந்தப் படத்தை வேறு மொழியிலும் வெளியிடுங்கள். வெற்றி பெறும் என்றார்.
அதிமுகவைச் சேர்ந்த ஈ. புகழேந்தி பேசும்போது, குற்றம் தவிர் என்ற படத்தின் தலைப்பே அழகாக இருக்கிறது. இந்த தலைப்புக்காக இந்தப் படம் ஓட வேண்டும். வெற்றியைத் தேடித்தரும். இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். ‘ரத்தக்கண்ணீர் ‘படம் அந்த காலத்தில் எம் ஆர் ராதா நடிப்பில் வெற்றி பெற்ற படம். அது வெளியாகி 60 -70 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னடத்தில் ரத்தக்கண்ணீரு என்று எடுத்தார்கள். அதை எடுத்தவர் எனது நண்பர். நான் அங்கு போய் பார்த்தபோது திரையங்குகளில் எல்லாம் போலீஸ் தடியடி நடக்கும் அளவிற்குக் கூட்டம் அலைமோதியது. படம் பெரிய வெற்றி. இதைக் கேள்விப்பட்டு திருவாரூர் தங்கராசு பெங்களூர் வந்திருந்தார். என்னைக் கேட்காமல் என் அனுமதி இல்லாமல் எப்படி கன்னடத்தில் எடுக்கலாம் என்று சத்தம் போட்டார். அந்தப் படம் எடுத்தவர் நண்பர் மிகவும் நல்லவர். தெரியாமல் செய்துவிட்டேன் என்று அவர் திருவாரூர் தங்கராசு காலைத் தொட்டு கும்பிட்டார். எவ்வளவு பணம் கேட்டாலும் தருகிறேன். ஆனால் இந்தப் படத்தை கர்நாடகா முழுதும் கொண்டு சேர்த்த எனது மகிழ்ச்சி பெரியது என்றார். இருவருமே எனக்குத் தெரிந்தவர்கள். நான் இருவரையும் சமாதானம் செய்து வைத்தேன்.

சினிமா தான் தலைவர்களை கொடுத்தது. சினிமாவில் ஜெயிப்பது நீச்சல் தெரியாதவன் நீச்சல் போட்டிக்கு வருவது போல. எம்ஜிஆர் பாடல் எங்கு பார்த்தாலும் ஒலிக்கிறது. எப்போதும் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். எம்ஜிஆர் படங்களில் குற்றவாளியைப் போலீஸ் கைது செய்வது போல் தான் இருக்கும். தண்டிப்பது போல கொலை செய்வது போல இருக்காது. ஆனால் இப்போது படங்களில் எல்லாம் கதாநாயகர்கள் கத்தியைத் தூக்கிக்கொண்டு வருகிறார்கள் என்றார் ஆதங்கத்துடன்.
இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா பேசும்போது, நான் ஒரு பாடல் காட்சியில் ஆடி நடித்தேன். அதன் படப்பிடிப்பு இரவு 7 மணிக்கு தொடங்கி 10 மணி வரை சென்றது. ஒரு குடிசைப்பகுதியில் நடந்தது. சுற்றிலும் மக்கள் கூடி இருந்தார்கள். பத்து மணிக்கு சாப்பாடு வந்திருந்தது. ஆடிய களைப்பு பசியாக இருந்தது. சாப்பிடலாம் என்று திரும்பிப் பார்த்தபோது சாப்பாடு எங்கள் கைக்கு வரவில்லை. தயாரிப்பாளர் பாண்டுரங்கன் அதை எல்லாம் கூடி இருந்த மக்களுக்குக் கொடுத்து விட்டார். சில நிமிடங்கள் பொறுத்து இருங்கள் என்று எங்களுக்குப் புதிதாக வரவழைத்துக் கொடுத்தார். அப்படிப்பட்ட நல்ல மனதுக்காரர் பாண்டுரங்கன்.
இந்தப் படத்திற்காக சிவகாசி மாதிரி பாடல்களைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். அந்த சிவகாசி வாய்ப்பை கொடுத்த பேரரசு இங்கே வந்திருக்கிறார். என்னை விஜய் படம் கொடுத்துப் பெரிய ஆளாக்கி விட்டவர் அவர். இந்தப் படத்தில் அப்பா பாடல் பாடியது சிறப்பானது. படம் வெற்றிபெறும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,
இங்கே பேசியவர்கள் பலரும் எம்ஜிஆர் பற்றிப் பேசினார்கள். எம்ஜிஆர் மட்டும் தான் வில்லனைக் கொல்ல மாட்டார். எந்தப் படத்திலாவது அவர் நம்பியாரைக் கொன்றிருக்கிறாரா ? கெட்டது செய்பவர்களைக் கூட திருந்தத் தான் வைப்பார். அதனால் தான் அவரைப் பற்றி இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போதெல்லாம் பழிவாங்க உடனே சுட்டு விடுகிறோம். கர்நாடகாவில் பல மொழி பேசுகிறார்கள் என்றார் செண்ட்ராயன். அப்படியானால் அவர் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தருகிறார் என்று கூறலாமா?
சினிமாதான் அனைத்து துறையினரையும் ஒன்றிணைத்து வாழவைக்கும் துறை. இங்கே பாருங்கள் ஆன்மீக துறையினர், அரசியல் துறையினர், ராணுவத்தினர், காவல்துறையினர், ஊடகத் துறையினர் என அனைவரும் இணைந்து இருக்கிறார்கள். ஒரு துறை விழா என்றால் அந்தத் துறை சார்ந்தவர்கள்தான் கலந்து கொள்வார்கள். ஆனால் சினிமாவில் தான் எல்லாத்துறையினரும் இணைகிறார்கள்.
இங்கே ஸ்ரீகாந்த் தேவா வந்திருக்கிறார் பாடல்கள் சிறப்பாக கொடுத்திருக்கிறார். அவர் சிவகாசி படத்திற்குப் போட்ட பாடல்கள் வெற்றி பெற்றன. அப்போதெல்லாம் இசையமைப்பாளர்களை மலேசியா, சிங்கப்பூர், பாங்காக் என்று அழைத்துக் கொண்டு போய் மெட்டுப்போட வைப்பார்கள். அவருக்கும் வெளிநாடு செல்லலாம் என்று ஆசை இருந்தது. கேட்டுக் கொண்டே இருந்தார்.
தருமபுரி படத்தில் பணியாற்றி வந்த போது விஜயகாந்த் கட்சி தேர்தல் என்று பரபரப்பாக இருந்தார். படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தது. அங்கே வரவழைத்து கேரவனிலேயே மெட்டுப்பட வைத்தேன். மூன்று பாடல்கள் அங்கேயே போட்டுக்கொடுத்தார். பழனி படம் வந்தபோது பழனிக்கும் திருவண்ணாமலை சமயத்தில் திருவண்ணாமலைக்கும் வரவழைத்து மெட்டுகளை வாங்கினேன். உள்ளூர் பெயரை வைத்துக் கொண்டு உலக நாடுகளுக்கு ஏன் செல்ல வேண்டும் என்று கேட்டேன். கடைசி வரை அவரது வெளிநாடு கனவு பலிக்கவே இல்லை.

குற்றங்களைத் தவிர்க்க வேண்டும். திரையரங்குகளில் படங்களைப் பார்க்க முடியாமல் இறுகப்பற்று, எம காதகி போன்ற படங்களை ஓடிடியில் பார்க்கும்போது எனக்குக் குற்ற உணர்ச்சியாக இருக்கும். அதுபோன்ற குற்றங்களை இனி தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். பாடல் காட்சிகளைப் பார்த்தோம். கதாநாயகன் ரிஷியும் நாயகி ஆராதியாவும் நன்றாக ஆடினார்கள். பாடல்களைப் பாடும் போது ஆராதியாவுக்கு லிப் மூவ்மெண்ட் சரியாக இருந்தது. ஆனால் ரிஷிக்கு சரியாக அமையவில்லை. கதாநாயகியின் இடுப்பைப் பார்த்துக் கொண்டே ஆடியதால் அதாவது ‘ஹிப்’பைப் பார்த்ததால், ‘லிப்’பைக் கோட்டை விட்டுவிட்டார். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்றார்.
விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும் படக் குழுவினருக்கும் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் பொன்னாடை போர்த்தி வரவேற்று கர்நாடகத்துப் பாரம்பரிய முறையில் தலைப்பாகை அணிவித்து மரியாதை செய்தது , எந்தவொரு தமிழ் திரைப்பட விழாவிலும் காண முடியாத பண்பாட்டுச் செயல் பாடாக இருந்தது.