கோயம்புத்தூர் மாவட்டம், கோவை வடக்கு வட்டாரத்தில் உள்ள விளாங்குறிச்சி கிராமத்தில், முருகன் நகர், விநாயகபுரம், சங்கரா நகர் ஆகிய இடங்களில் வசிக்கும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 34 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். இது சம்பந்தமாக […]
மாவட்ட செய்திகள்
இராமநாதபுரத்தில் சட்டமன்ற தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியை மெரா யுவா பாரத் (MY Bharat), நேரு யுவா கேந்திரா (NYK), இராமநாதபுரம் மற்றும் இளையோர் மன்றங்கள் இணைந்து Block Level Sports Meet 2025– ஐ, இராமநாதபுரம் SDAT மைதானத்தில் […]
மாவட்ட செய்திகள்
இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள மலையாள ஹாரர்–திரில்லர் படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ், ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். ZEE5-இல் வரும் செப்டம்பர் 26 முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், […]
சினிமா
E-5 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில், காமாட்சி ஜெய கிருஷ்ணன் தயாரிப்பில், விஜித் பச்சன், ஷாலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், கீதா கைலாசம், பவா செல்லத்துரை உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “பேரன்பும் பெருங்கோபமும்”. கதைப்படி.. அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் […]
விமர்சனம்E-5 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில், காமாட்சி ஜெய கிருஷ்ணன் தயாரிப்பில், விஜித் பச்சன், ஷாலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், கீதா கைலாசம், பவா செல்லத்துரை உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “பேரன்பும் பெருங்கோபமும்”.
கதைப்படி.. அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு, போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை கூறி சிறை செல்கிறார் ஜீவா ( விஜித் பச்சன் ). இவரது பின்னணியை விசாரணை செய்ய அவரது சொந்த கிராமத்திற்கு செல்கிறது போலீஸ். அங்கு குறிப்பிட்ட ஆதிக்க சாதியினர் வீட்டுப் பெண்ணை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பையன் காதலித்ததால், அடக்குமுறைக்கு ஆளாகி தீயிட்டு கொளுத்தப்படுகிறான். பின்னர் அந்தப் பெண்ணும் சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டு பைத்தியமாக சுற்றித்திரிகிறார்.

அதேபோல் ஜீவா கேராளாவில் படிக்கப்போன இடத்தில் காதலித்து அழைத்து வரும் சாராவும் ( சாலி நிவேகாஸ் ) சாதிய அடக்குமுறைக்கு ஆளாகி பலியானதும் போலீஸ் விசாரணையில் தெரியவருகிறது. இதற்கிடையில் அமைச்சர் ( மைம் கோபி ) ஜீவா விஷயத்தில் கோபமாகிறார்.
போலீசாரிடம் ஜீவா சொன்ன திடுக்கிடும் தகவல்கள் என்ன ? அமைச்சர் ஏன் ஜீவாவை கொள்ள துடிக்கிறார் என்பது மீதிக்கதை..

இளமையில் தான் பட்ட வேதணைகளுக்கு, முதுமையில் பழிவாங்கத்துடிக்கும் ஜீவா கதாப்பாத்திரத்தில் விஜித் பச்சன், இன்னும் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு நடித்திருக்க வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும். நாயகி ஷாலி நிவேகாஸ் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கிராமம், நீதிமன்றம் காட்சிகளில் லாஜிக் இல்லாமல் செயற்கைத் தனமாக காட்சிகள் நகர்வது அப்பட்டமாக தெரிகிறது. இயக்குநர் திரைக்கதையிலும், நடிகர்களை வேலை வாங்கியதிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒளிப்பதிவாளர் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி பரமக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், மாவட்ட அவைத் தலைவர் ராமநாதன் […]
அரசியல்ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி பரமக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், மாவட்ட அவைத் தலைவர் ராமநாதன் திருவாடானை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தர்மராஜ் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், மாவட்ட துணைச் செயலாளர் அசோகன் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள நான்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுக்கும் மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், மாவட்ட, நகர், ஒன்றிய, பேரூர், ஊராட்சி, கிளை மற்றும் வார்டு தே.மு.தி.க நிர்வாகிகள் அனைவரும் 2026-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக முழு ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், ராணி அஹில்யா பாய் 300-வது பிறந்தநாள் இன்று மாலை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சார்பில் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்ள பா.ஜ.க தேசிய அமைப்பு இணைச்செயலாளர் சிவப்பிரகாஷ், தமிழக பா.ஜ.க மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இன்று […]
அரசியல்ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், ராணி அஹில்யா பாய் 300-வது பிறந்தநாள் இன்று மாலை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சார்பில் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்ள பா.ஜ.க தேசிய அமைப்பு இணைச்செயலாளர் சிவப்பிரகாஷ், தமிழக பா.ஜ.க மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க அலுவலகம் வந்தடைந்தனர். அவர்கள் இருவருக்கும் மாவட்ட பொதுச்செயலாளர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். சண்முகநாதன் தலைமையில் பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

பின்னர் அச்சுந்தன்வயல் பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது.. மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை திட்டமிட்டே நடத்த விடாமல் தி.மு.க அரசு தடுக்கிறது. இம்மாநாடு நடைபெற்று விட்டால் எங்கே பெரும் எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் தி.மு.க உள்ளது. யாருக்கும் தொந்தரவு இல்லாத முருக பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் பொதுவான இடத்தில் நடைபெற உள்ள இந்த மாநாடு எங்கே வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டால் தமிழகத்தில் பா.ஜ.க அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து விடும் என்கிற பயமும் தி.மு.க-விற்கு வந்துவிட்டது.

அ.தி.மு.க-பா.ஜ.க எப்போது கூட்டணி அமைத்ததோ அன்றிலிருந்தே தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு தோல்வி பயம் வந்துள்ளது. கூட்டணி தொடர்பான விமர்சனம் நாளொரு வண்ணம், பொழுதொரு மேனியுமாக அரங்கேறி வருகிறது. மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு நீதிமன்றத்தின் அனுமதியுடன் நடைபெறும். எதிர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்காளர்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள் என கூறினார்.

முன்னதாக பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர்கள் பொன். பாலகணபதி, கருப்பு முருகானந்தம், முன்னாள் கயறு வாரிய தலைவர் குப்புராமு, ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் கி.முரளிதரன், மாவட்ட பொதுச்செயலாளர் கவுன்சிலர் ஜி.குமார், மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துச்சாமி, சௌந்தரராஜன், மாவட்ட செயலாளர்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன், சிவசங்கர், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் எஸ்.பி.குமரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பு அழைப்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
தமிழ் சின்னத்திரை உலகில், மக்களின் பேராதரவைப் பெற்ற, தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் “சின்ன மருமகள்”. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் தற்போது […]
சினிமாதமிழ் சின்னத்திரை உலகில், மக்களின் பேராதரவைப் பெற்ற, தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் “சின்ன மருமகள்”. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

பொதுவாகவே தமிழில் நெடுந்தொடருக்கு, தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப கதைகள், குடும்பத்தில் சிக்கி உழலும் பெண்களின் வலிகளைச் சொல்லும் கதைகளுக்கு, நம் தமிழ்ப்பெண்களிடம் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் மருத்துவராகும் கனவோடு திருமண வாழ்க்கையில் உழலும், தமிழ்செல்வியின் கதையை சொல்லும், “சின்ன மருமகள்” தொடர், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

இத்தொடரின் கதை, இப்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. மருத்துவருக்குப் படிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் தமிழ்ச்செல்வி, திருமணமான நிலையில், மாமியார் வீட்டின் சிக்கல்களால், தான் கர்ப்பமாக இருப்பதாகப் பொய் சொல்கிறாள். அந்த உண்மை தெரியவர, அவள் தந்தை வீட்டுக்கு விரட்டப்படுகிறாள். ஆனால் தந்தையும் கடன் வாங்கி குடித்துவிட்டுத் திரிய, தந்தை வீட்டை உதறுகிறாள். அவள் உண்மையிலேயே கர்ப்பம் என்பது தெரிய வர, அதை நம்ப மறுக்கும் கணவனையும் உதறி, நான் தனியாக என் கனவை அடைவேன் எனச் சவால் விட்டுக் கிளம்புகிறாள்.

தனியாகக் கணவனையும், தந்தையையும் எதிர்த்து வெளியே வரும் தமிழ்ச்செல்வி எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வாள்? தடைகளை மீறி அவள் ஜெயிப்பாளா?, அவள் மருத்துவகனவு என்னவாகும்? என, இந்தத் தொடர் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொடரின் புதிய எபிஸோடுகளை, விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்
ஜேஷன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீ தயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் […]
சினிமாஜேஷன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீ தயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார்.
தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், அக்யூஸ்ட் திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்திருக்கும் திரையுலக முன்னணியினர், ஊடக நண்பர்கள், மற்றும் படக்குழுவினரை வரவேற்கிறேன். இந்த படம் நல்லபடியாக நிறைவடைந்ததற்கும் இன்றைய நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறுவதற்கும் உதயா தான் முக்கிய காரணம். திரைப்படம் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் என்றார்.

தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார் பேசுகையில், உதயாவின் தந்தை ஏ.எல். அழகப்பனும் நானும் நீண்டகால நண்பர்கள். எனவே உதயாவை எனக்கு சிறுவயது முதலே தெரியும். திரையுலகில் நீண்ட காலமாக போராடி வருகிறார். ‘அக்யூஸ்ட்’ காட்சிகள் பார்த்தேன், உதயாவின் திறமை பளிச்சிடுகிறது. பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. இப்படம் உதயாவின் திரையுலகப் பயணத்தில் திருப்புமுனையாக திகழும். படக்குழிவினருக்கு வாழ்த்துகள் என்றார்.
‘அக்யூஸ்ட்’ படத்தில் நடித்துள்ள பவன், பிரபாகர், ஓ மரியா புகழ் டானி, சுபத்ரா, தீபா பாஸ்கர் ஆகியோர் பேசுகையில் இப்படத்தில் பங்காற்றியதற்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு, அனைவரின் ஒத்துழைப்போடு ‘அக்யூஸ்ட்’ மிகவும் சிறப்பாக உருவாகியிருப்பதாக கூறினர். படக்குழுவினர் அனைவரும் ஒரு குடும்பம் போல பழகியதாக அவர்கள் தெரிவித்தனர்.
‘அக்யூஸ்ட்’ படத்தின் இயக்குநர் பிரபு ஶ்ரீநிவாஸ் பேசுகையில், நான் இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை உதயாவிடம் கொடுத்த சிறிது நேரத்திலேயே அவர் அதை முழுவதும் படித்து ஓகே சொன்னதோடு, அவரது வேறு சில படங்களையும் இதற்காக தள்ளி வைத்தார். அதற்காக அவருக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை தந்தனர்.

படம் தொடங்கிய முதல் நாளிலிருந்து படப்பிடிப்பு நிறைவடையும் வரை உதயா தந்த ஒத்துழைப்பு அலாதியானது. அவர் மற்றும் அனைத்து குழுவினரின் ஒத்துழைப்போடு பிரேக்கே இல்லாமல் தொடர் படப்பிடிப்பை நடத்தினோம். இப்படத்தில் இடம்பெறும் பஸ் சண்டைக்காட்சி மிகவும் பேசப்படும். ஒட்டுமொத்த படமும் ரசிகர்களை கவரும் என்றார். அவரைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் மருதநாயகம்.ஐ மற்றும் கலை இயக்குநர் ஆனந்த் மணி பேசுகையில் படம் சிறப்பாக வந்திருப்பதாக கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் பேசுகையில், என் குழுவில் பணியாற்றிய அனைத்து இசை மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கும் மிக்க நன்றி. இங்கு வந்துள்ள அனைவரும் பாடலை பாராட்டினார்கள். அதற்கு முக்கிய காரணம் எனது குழுவினர் தான். ‘அக்யூஸ்ட்’ படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்தோம். எனவே உங்கள் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தயாரிப்பாளர்கள் மிகவும் எளிமையானவர்கள், இயக்குநர் நட்பானவர், உதயா மிகவும் இனியவர். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி என்றார்.
வீடியோ அழைப்பில் பேசிய நடிகர் யோகி பாபு, வேறொரு இடத்தில் இரவு படப்பிடிப்பில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த படத்தில் நான் பணியாற்றியது சிறப்பான அனுபவம். வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. படம் வெற்றி பெற வேண்டும் என்று ஆண்டவரை பிரார்த்திக்கிறேன் என்றார்.

பாடலாசிரியர் பத்மஜா ஸ்ரீராம் பேசுகையில், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் மிகுந்த சுதந்திரம் அளிப்பார். இப்படத்தில் பணியாற்றியது ஒரு மிக நல்ல அனுபவம். குழுவினர் அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகள் என்றார்.
பாடலாசிரியர் ஹைட் கார்த்தி பேசுகையில், நரேன் பாலகுமாரும் நானும் நீண்ட நாளாக ஒன்றாக பணியாற்றி வருகிறோம். இப்படத்தில் சுடச்சுட பிரியாணி என்ற பாடலை நான் எழுதியுள்ளேன், அதற்கு கிடைத்து வரும் வரவேற்புக்கு நன்றி. இந்த பாடலுக்கு நான் நடனமும் ஆடியுள்ளேன். டிரெய்லர் பார்க்கும் போதே ‘அக்யூஸ்ட்’ பெரிய ஹிட் ஆகும் என்று தோன்றுகிறது. பத்திரிகையாளர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
அடுத்ததாக, தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழு உறுப்பினர் அழகன் தமிழ்மணி, செந்தாமரை கண்ணன், ஜெயசீலன், ஜி.எஸ். முரளி, ராமச்சந்திரன், அன்பு, சுரேஷ், சாலை சகாதேவன், சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் மங்கை அரிராஜன் உள்ளிட்டோர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சண்டைக் காட்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா பேசுகையில், உதயாவின் குடும்பத்தில் ஒருவன் நான். அவர், அவரது தந்தை ஏ.எல். அழகப்பன், சகோதரர் விஜய் ஆகியோர் எனக்கு மிகவும் நெருக்கம். உதயாவின் விடாமுயற்சி எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் அனைத்தும் அருமையாக வந்துள்ளது. படமும் நன்றாக வந்துள்ளது. எனவே, ‘அக்யூஸ்ட்’ மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை என்றார்.

நடிகை ஜான்விகா பேசுகையில், என்னை நம்பி எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் உதயாவுக்கு நன்றி. சிறப்பான பாடல்களை தந்துள்ள இசையமைப்பாளருக்கு நன்றி. திறமைகளுக்கு தவறாமல் ஆதரவளிக்கும் தமிழ் ரசிகர்கள் எனக்கும் ஆதரவளிப்பாளர்கள் என்று நம்புகிறேன். ‘அக்யூஸ்ட்’ படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி. இந்த வாய்ப்புக்கு நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன். தமிழ் கற்றுக் கொண்டு வருகிறேன், விரைவில் முழுவதும் தமிழில் பேசுவேன் என்றார்.
நடிகர் அஜ்மல் பேசுகையில், இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் உதயாவுக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி திரையில் தெரியும். அவரை பார்த்து நிறைய கற்றுக்கொள்ளலாம். படத்தை சிறப்பாக உருவாக்கிய இயக்குநர் பிரபுவுக்கு நன்றி. நல்ல கன்டென்ட் உள்ள படம் இது. கட்டாயம் ஜெயிக்கும் என்றார்.
இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜன் பேசுகையில், கஷ்டப்பட்ட அனைவரும் வெற்றி பெற்றதில்லை, ஆனால் வெற்றி பெற்ற அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தவர்களே. உண்மையாக, நேர்மையாக கஷ்டப்பட்டால் நிச்சயம் வெல்லலாம், அப்படிப்பட்ட குழு இது, அனைவரும் மிகவும் திறமையானவர்கள். இவர்கள் வெற்றியடைந்தால் சினிமா மேலும் வெற்றி பெறும். ‘அக்யூஸ்ட்’ வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.

நடிகர் ஆனந்த்பாபு பேசுகையில், உதயா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். ஏ.எல். அழகப்பன் எனது தந்தையை போன்றவர். உதயாவின் 25வது ஆண்டு படமான ‘அக்யூஸ்ட்’ வெற்றி விழா கொண்டாடும் என்றார்.
பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், அக்யூஸ்ட் படவிழாவின் அழைப்பிதழே அருமை, உதயாவின் உழைப்பு அதிலேயே தெரிகிறது. அவருக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது. அனைவரும் ஒற்றுமையாக இங்கு இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் உதயா மீதும் அவரது தந்தையார் மீதும் நாம் வைத்துள்ள அன்பு தான். உதயாவை எந்த அவமானமும் பாதிக்காது, சிரித்த முகத்துடன் இருப்பார். விக்ரமுக்கு ‘சேது’ போல உதயாவுக்கு ‘அக்யூஸ்ட்’ அமையும். டிரெய்லர் மிரட்டுகிறது, மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. படம் மிகப்பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி பேசுகையில், இந்தப் படம் எப்படி தொடங்கியது, எப்படி உருவானது என்பது எனக்கு தெரியும். இவ்வளவு கஷ்டப்பட்டு இதை கட்டமைத்த சகோதரர் உதயாவுக்கு பாராட்டுகள். செல்வமணி சொன்னது போல உதயாவுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது, இதை அவர் பிடித்துக்கொள்ள வேண்டும். திறமையான குழு இப்படத்திற்காக இணைந்துள்ளது, டிரெய்லரும் பாடல்களும் அருமை. படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.
தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் பேசுகையில், எனது மகன்களின் முயற்சிகளுக்கு நான் ஆதரவாக நின்றாலும், அவர்களின் முடிவுகளில் நான் தலையிட மாட்டேன். உதயா அவரது உழைப்பு மூலம் சொக்கத்தங்கமாக ஜொலிக்கிறார். அவரது தாயார் இன்று இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார், அதே மகிழ்ச்சி எனக்கும் இருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.

நடிகர் உதயா பேசுகையில், எனது தாயார் கடவுளாக இருந்து என்னை வழிநடத்துகிறார். என்னை அவர் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார், ஆசீர்வதித்துக் கொண்டே தான் இருக்கிறார். திரையுலகத்தை விட்டே போய் விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன், ஆனால் எனது தன்னம்பிக்கை காரணமாக இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். எனவே அனைவரும் நம்பிக்கையுடன் உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
‘அக்யூஸ்ட்’ படம் எனது மிக முக்கிய படம். எனது 25வது ஆண்டில் இப்படி ஒரு படம் கிடைத்திருப்பது எனது பாக்கியம். இந்த படத்திற்காக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி. இயக்குநர் அற்புதமாக ‘அக்யூஸ்ட்’ படத்தை உருவாக்கியிருக்கிறார், அவருக்கு நன்றி. மிகச்சிறந்த இயக்குநர் அவர். நரேன் பாலகுமார் இசை அருமை. உடன் நடித்தவர்களுக்கும், பணியாற்றிய அனைவருக்கும் மிகுந்த நன்றி. இவர்கள் அனைவரும் எனது குடும்ப உறுப்பினர்கள் மாதிரி தான். எங்கள் அனைவரின் உழைப்பில் சிறப்பாக உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ படம் வெற்றி பெறும் என மனமார நம்புகிறேன். உங்கள் அனைவரின் வாழ்த்தையும், ஆதரவையும் கோருகிறேன் என்றார்.
நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம் சி. எஸும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு […]
சினிமாநிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம் சி. எஸும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
வ. கெளதமன், E. குறளமுதன், U.M. உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் வி.கே. புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல். அழகப்பன், மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் தயாரிப்பாளர் எம்.ஜே.எஃப். லயன் பி.ஆர்.எஸ். சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றனர். ‘பிக் பாஸ்’ புகழ் முத்துக்குமரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார். தயாரிப்பாளர்கள் கே. பாஸ்கர், E. குறளமுதன், U.M. உமாதேவன், நடன இயக்குநர்கள் தினேஷ் மாஸ்டர், ஸ்ரீதர் மாஸ்டர், ஐநா கண்ணன் உள்ளிட்டோர் படக்குழுவினரை வாழ்த்தி பேசினர்.

நடிகர் இளவரசு பேசுகையில், தமிழகத்திற்கு அறிமுகமான ஒரு மனிதனின் கதை இது. கதையை முன்னெடுத்து செல்லும் கதாபாத்திரம் ஒன்றில் நான் இப்படத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் கெளதமன் எனக்கு சுமார் 25 ஆண்டுகளாக பழக்கம். இந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பாக அவர் உருவாக்கியுள்ளர் என்றார்.
இயக்குநர் வி.சேகர் பேசுகையில், இப்படம் ஒரு கூட்டு முயற்சி என்று அறிகிறேன். என்னுடைய ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ உள்ளிட்டவையும் ஒற்றுமையை தான் வலியுறுத்தின. அத்தகைய ஒற்றுமை தான் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பலம். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
வழக்கறிஞர் கே. பாலு பேசுகையில், கெளதமன் ஒரு படம் எடுக்கிறார் என்று சொன்னால் அதில் உணர்வு இருக்கும், உயிர் இருக்கும் என்று பொருள். அவரது ‘சந்தனக்காடு’ தொடர் மிகுந்த வரவேற்பு பெற்றது. படையாண்ட மாவீரா என்று சொல்லும் போதே உள்ளத்தில் வீரம் கொப்பளிக்கிறது. வீரத்தின் எடுத்துக்காட்டாக வாழ்ந்த ஒரு மனிதனை பற்றிய படம் இது என்பது மிகவும் பெருமையான விஷயம். இப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.

கார்ட்டூனிஸ்ட் பாலா பேசுகையில், கெளதமன் பற்றி சொல்ல ஏராளம் உண்டு. எப்போதும் உணர்ச்சிப்பிழம்பாக இருக்கக்கூடியவர் அவர். மிகச்சிறந்த திரைக்கலைஞரான அவரது ‘படையாண்ட மாவீரா’ படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.
இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், கெளதமன் என்னுடைய நல்ல நண்பர். அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வோம். ‘படையாண்ட மாவீரா’ படம் மிகவும் பிரம்மாண்டமாக வந்துள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் செயல்கள் சாதாரண மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக, அழுத்தம் திருத்தமாக இப்படம் பேசுகிறது. கெளதமனின் மகன் தமிழ் கெளதமன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். விரைவில் பெரிய நாயகனாக அவர் வருவார் என்றார்.
சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா பேசுகையில், இயக்குநர் கெளதமன் மனிதநேயம் மிக்கவர், துன்பத்தில் தோள் கொடுப்பவர். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் மிகவும் அருமையாக வந்துள்ளன. அவரது போராட்ட குணம் அவற்றில் வெளிப்பட்டுள்ளது. படம் வெற்றியடைய அனைவரின் ஆதரவையும் கோருகிறேன் என்றார்.
தயாரிப்பாளர் மணிவண்ணன் பேசுகையில், படத்தின் சில காட்சிகளை பார்த்தேன், சிறப்பாக இருந்தன. குறிப்பாக புலிப்பாடல் மிகவும் எழுச்சியாக உள்ளது. இப்படம் வெற்றி பெறும் என நான் மிகவும் நம்புகிறேன் என்றார்.

தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் பேசுகையில், தமிழையும் தமிழ்நாட்டையும், தமிழ் சினிமாவையும் நம்பி வந்த யாரும் கெடுவதில்லை. இப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். தம்பி கெளதமன் சிறந்த மனிதர், சிறந்த படைப்பாளி. ‘சந்தனக்காடு’ தொலைக்காட்சி தொடரையே திரைப்படம் போல எடுத்தவர், ‘படையாண்ட மாவீரா’ பிரம்மாண்டத்தின் உச்சம், ‘புஷ்பா’ படம் போல இது இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெறும் என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், நல்ல கருத்துகளை தமிழன் கேட்டு தூங்கிவிடக்கூடாது, மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும். தமிழ் மற்றும் தமிழனுக்காக குரல் கொடுப்பவர் இயக்குநர் கெளதமன். அவரது ‘படையாண்ட மாவீரா’ வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் பேசுகையில், கெளதமனுக்கும் எனக்கும் நீண்ட நெடிய பழக்கம். இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் சொல்லும் போதே இதை எப்படியாவது உருவாக்கி விட வேண்டும் என்று தீர்மானித்தோம். இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றார்.
நீதிபதி கலையரசன் பேசுகையில், அருமையான வெற்றிப்படத்தை வழங்கியுள்ள கெளதமனை வாழ்த்துகிறேன். அறம் சார்ந்து இப்படத்தை அவர் எடுத்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்டு பல தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து ‘படையாண்ட மாவீரா’ படத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த திரைப்படம் வெற்றி பெற கடவுளை வேண்டிக்கொண்டு வாழ்த்துகிறேன் என்றார்.

‘படையாண்ட மாவீரா’ படத்தின் இயக்குநரும் நாயகனுமான வ. கெளதமன் பேசுகையில், இந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பது போலவே மற்றொருபுறம் எனது திரைத்துறையையும் நான் நேசிக்கிறேன். இது நான் இயக்கி நடித்திருக்கிற படைப்பு. உண்மையில் ஒரு படைப்பாளியின் படைப்பு தான் பேச வேண்டுமே தவிர அவன் பேசக்கூடாது என நான் நினைப்பேன். ஆனாலும் இந்த படத்தை பற்றி நான் பேசவேண்டியுள்ளது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்த படத்தை உருவாக்க முன்வந்தார்கள். திரைத்துறையில் நான் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் என விரும்பினார்கள். மக்களுக்கான கதையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம். இவற்றின் விளைவு தான் ‘படையாண்ட மாவீரா’. இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து இணைந்து மிகச் சிறந்த பாடல்களை வழங்கியுள்ளார்கள் புலிக்கொடி பாடல் உணர்வுப்பூர்வமாகவும், ஜிவி பிரகாஷும், மது ஸ்ரீயும் பாடிய பட்டாம்பூச்சி பாடல் அழகுணர்ச்சியுடனும் அமைந்துள்ளன. சாம் சி. எஸ். சிறப்பான பின்னணி இசையை தந்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டம், பாடல்கள் மிகுந்த சிலிர்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக அனைவரும் கூறினீர்கள், மிக்க நன்றி. முழுப்படத்தையும் பார்த்ததும் உங்கள் உள்ளங்களில் பேரதிர்வை அது ஏற்படுத்தும், அது உறுதி.
எத்தனையோ படங்களுக்காகவும் எத்தனையோ பிரச்சினைகளுக்காகவும் நான் குரல் கொடுத்த போதெல்லாம் அமைதியாக எனக்கு எந்த சாயமும் பூசாமல் இருந்தவர்கள் காடுவெட்டி குரு பற்றியும் ஒரு சமுதாயத்தை பற்றியும் தவறாக திரைப்படத்தில் காட்டிய போது அதற்கு எதிராக நான் நியாயமான கேள்விகளை எழுப்பியவுடன் என் மீது சாதி சாயம் பூசினார்கள். அந்த சமயத்தில் கௌதமன் கேட்டதில் என்ன தவறு என்று எனக்குத் தெரிந்த ஒரு ஊடக நண்பர், அப்படத்தின் இயக்குநரிடம் கேட்டபோது நான் தான் தாதா போன்று ரவுடி போன்று காட்டிவிட்டேன், வேண்டுமானால் ‘சந்தனக்காடு’ எடுத்தது போன்று குரு அவர்களை வாழ்க்கையை பற்றியும் கௌதமன் ஒரு படம் எடுக்கட்டுமே என்று கூறியுள்ளார். அந்த சவாலை ஏற்று தான் இந்த படமே தொடங்கியது.
இது தனி சாதி படமல்ல, தமிழ் சாதி படமாக இருக்கும். சாதி, மதம் கடந்து மனிதனாக இருப்பவர்கள் யார் பார்த்தாலும் அரங்கம் மட்டுமல்ல அவர்கள் ஆன்மாவும் அதிரும், அறம் சார்ந்த ஒரு மாவீரனை அவர்கள் தரிசிப்பார்கள்.
என்னுடைய வாழ்நாள் லட்சியமே மூன்று காடுகள் பற்றிய படங்கள் எடுப்பது தான். ஒன்று வீரப்பன் வாழ்ந்த சந்தனக்காடு, அதை நிறைவேற்றி விட்டேன். இரண்டாவது காடுவெட்டி குரு அவர்களும், தோழர் தமிழரசன் அவர்களும் வாழ்ந்த முந்திரிக்காடு, இதில் ஒருவரை பற்றி தற்போது படம் எடுத்துள்ளேன். மூன்றாவது என்னுடைய தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எனது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வன்னிக்காடு. லட்சிபப் பாதையில் உள்ள இரண்டு படங்களை முடித்துள்ளது போல் இன்னும் இருக்கும் இரண்டு படங்களையும் கட்டாயம் எடுப்பேன். தமிழ் இனத்தின் தலைநிமிர்விற்காக நான் இதை செய்யாமல் சாய மாட்டேன், அனைவரும் ஆதரவு தாருங்கள் என்றார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், கெளதமன் மிகுந்த உரிமையாக அழைத்ததால் வெளியூரில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன், அதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிக்கவும்.
உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் மாவீரன் பிரபாகரன் என்று பேசியவர் காடுவெட்டி குரு. ஒரு மாபெரும் சமூகமே மாவீரன் என்று வணங்கிக் கொண்டிருக்கும் குரு, பிரபாகரனை மாவீரன் என்று சொன்னது நாம் ஒரே ரத்தம் ஒரே மரபணு என்பதை காட்டுகிறது. அப்படிப்பட்ட காடுவெட்டி குருவின் வாழ்க்கையை தான் கௌதமன் ‘படையாண்ட மாவீரா’ என்று வீரமும், அறமும் சுமந்த படைப்பாக எடுத்துள்ளார்.
கெளதமனின் படைப்பாற்றலை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். ‘சந்தனக்காடு’, ‘மகிழ்ச்சி’ அவர் திறமைக்கான சான்றுகள். அவரின் அடுத்த படைப்பான ‘படையாண்ட மாவீரா’ மிகவும் அருமையாக வந்துள்ளது. இதை திரைப்படமாக மட்டும் சுருக்கிவிட முடியாது. மிகுந்த உழைப்பு, சிரமத்திற்கு பிறகு இப்படம் உருவாகியுள்ளது. முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்த்தேன், மிகச்சிறப்பு, படத்தை பார்க்க தூண்டுகின்றன. ‘படையாண்ட மாவீரா’ மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’வரும் ஜூன் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், […]
சினிமாமெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’
வரும் ஜூன் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்… பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது.. இந்தப்படம் எடுத்து முடித்த பிறகு தான் என்னைப் பாடல் எழுதக் கூப்பிட்டார்கள், காளி வெங்கட் நாயகன் என்றார்கள் அவர் எந்தப்படத்திலிருந்தாலும் அதில் ஒரு ஈர்ப்பு இருக்கும். அவர் மிகச்சிறந்த நடிகர். இந்தப்படம் பார்க்கப் போகும் போது வியாபாரத்திற்கு ஏதாவது இருக்க வேண்டுமே என நினைத்தேன் ஆனால் அதையெல்லாம் படம் மறக்கடித்துவிட்டது. அதன் பிறகு தான் இந்தப்பாடல் எழுதினேன். வடிவேலு பாடிய அந்தப்பாடலை நீங்கள் கண்டிப்பாக ரசிப்பீர்கள். இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் பாலசாரங்கன் இருவருக்கும் நன்றிகள். இந்தப்படத்தில் நானும் இருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. காளி வெங்கட் பசிக்கும் இன்னும் நிறையத் தீனி வேண்டும். இந்தப்படம் அதில் ஒன்றாக இருக்கும் வாழ்த்துக்கள். ரொம்ப சின்ன படம் ஆனால் ரொம்ப வலிமையான படம் என்றார்.

ஒளிப்பதிவாளர் ஆனந்த் ஜி. கே. பேசியதாவது.. ஆனந்த விகடனில் மாணவப் பத்திரிகையாளனாகத் தொடங்கிய பயணம், 15 வருடங்கள். இங்கு இருக்க ஒளிப்பதிவாளராக ஆனதற்குக் காரணமான, இப்படத்தின் வாய்ப்பைத் தந்த கார்த்திகேயனுக்கு நன்றி. இப்படம் கார்த்திக் உடன் இணைந்து 3 வருடங்கள் முன்பு தொடங்கியது. இப்படம் உருவாக தயாரிப்பில் உறுதுணையாக இருந்த மோனிகா, ஷான், வீரமணி, ஆகியோருக்கு நன்றி. மெட்ராஸ் மேட்னி வாழ்க்கையை உண்மையாகச் சொல்லும் படம், நீங்கள் கவனிக்க மறந்த, தவறவிட்ட தருணங்களை உங்களுக்கு இப்படம் ஞாபகப்படுத்தும் என்றார்.
இசையமைப்பாளர் பாலசாரங்கன் பேசியதாவது… இயக்குநர் கார்த்திகேயனுடன் மூன்று வருடம் முன்பு ஒரு குறும்படத்தில் ஆரம்பித்த பயணம், அதன் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் இந்தப்படம். முதல் படத்திலேயே வடிவேலு முதல் பல ஜாம்பவான்களுடன் பணியாற்றும் வாய்ப்பு. நான் கேட்ட அனைத்தையும் தந்தார்கள். இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்றார்.

நிர்வாகத் தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணன் பேசியதாவது…இந்தப்படம் செய்யக்காரணமான வாய்ப்புத் தந்த கார்த்திகேயனுக்கு நன்றி, தயாரிப்பாளராக அவர் எனக்கு பெரும் சுதந்திரம் தந்தார், அவர் இயக்குநராகத் தான் செயல்பட்டார், படம் நன்றாக வந்துள்ளது. இப்படத்தை எங்கு கொண்டு செல்வது என்று யோசித்த போது தான் ட்ரீம் வாரியர்ஸ் வந்தார்கள் அவர்களுக்கு நன்றி அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் சாம்ஸ் பேசியதாவது…
சின்னப்படம் பெரியபடம் என்பதெல்லாம் மக்கள் தீர்மானிப்பது தான். 20 கோடியில் எடுத்து வசூலில் மிரட்டும் டூரிஸ்ட் ஃபேமிலி படம் தான் பெரிய படம். ஒரு சில படங்களில் தான் நாம் நடிக்கும் பாத்திரம் நமக்குத் திருப்தி தரும். அந்த வகையில் இந்தப்படம் மிகுந்த திருப்தி தந்த படம். ஊறுகாய் விற்கும் என் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு மெனக்கெட்டார்கள், அது எனக்கு மிகவும் பிடித்தது. இப்படத்தில் சத்யராஜ், வடிவேலு என எல்லோரும் வந்தது மிகப்பெரிய விசயம். சத்யராஜ் படம் பார்த்து உள்ளே வந்துள்ளார். வடிவேலு வரக்காரணம் மோனிகா தான். நாம் ஆசைப்பட்டால் கேட்டுவிட வேண்டும். கேட்டால் ஆமாம் இல்லை ஆனால், கேட்காதவர்களுக்கு இல்லை மட்டும் தான். கார்த்திகேயன் இதில் ஆசைப்பட்டதெல்லாம் நடந்துள்ளது. படத்தை நம்பி ட்ரீம் வாரியர்ஸ் வந்தது பட வெற்றிக்குப் பிறகு வார்னர் பிரதர்ஸ் வரட்டும். காளி வெங்கட் நான் பொறாமைப்படும் நடிகர், அவருடன் நடிக்கும் போது, அவர் நடிப்பதே தெரியாது, அவர் தொட வேண்டிய உயரம் இன்னும் அதிகம் உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை ஷெல்லி பேசியதாவது… நான் மலையாளி எனக்குத் தெரிந்த தமிழில் பேசுகிறேன். இந்தப்படம் மிக சிறந்த அனுபவம், இப்படத்தில் எல்லோரும் சமமாக நடத்தப்பட்டார்கள் அது சினிமாவில் அரிதான விசயம், அதற்காக இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு நன்றி. அவர் மிக அமைதியாக, பொறுமையாக அனைவரையும் பார்த்துக்கொண்டார். அவரது எழுத்துக்கு நன்றி. இந்தப்படத்தில் காளி வெங்கட் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அவரும் நானும் இந்த படக் கதாபாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளோம். இந்த புரொடக்சன் சினிமாவுக்கு புதுசு, எல்லோரும் ஐடி வேலை பார்த்தவர்கள் யாருக்கும் சினிமா தெரியாது ஆனால் மிகச்சிறப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார்கள், ரோஷினி, விஷ்வா எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். இது நிஜமான வாழக்கையை சொல்லும் படம் என்றார்.

நடிகர் கலையரசன் பேசியதாவது… நான் இந்தப்படத்தில் நடிக்கவில்லை ஆனால் நான் நடித்த மாதிரி சந்தோசமாக உள்ளது. சின்னப்படம் பெரிய படம் என்பதெல்லாம் ரிலீஸ் வரை மட்டும் தான், அதன்பிறகு கண்டென்ட் தான் முடிவு செய்யும். இது ரொம்ப நல்ல படமா தெரிகிறது. நான் ரெண்டு மூன்று தடவை பாக்க வாய்ப்பு கிடைத்தும் மிஸ் பண்ணிட்டேன் சாரி. ஒரு நல்ல படம் வந்தால் எப்படியாவது இண்டஸ்ட்ரிக்குள் எங்கேயாவது அதைப் பற்றி பேச்சு வந்துவிடும், இப்படம் பற்றியும் நிறையப் பேர் சொல்கிறார்கள் மகிழ்ச்சி. பிரபு திரைத்துறையில் நிறையப் பேரை உருவாக்கியுள்ளார், நிறையச் சின்ன படங்களுக்கு ஆதரவு தருகிறார். ஒரு கதைக்கு வந்து முகங்கள் கதாபாத்திரங்கள் ரொம்ப முக்கியம். அதுக்கேத்த மாதிரி முகங்களை நடிக்க வைப்பது தான் நல்ல படமாக இருக்குமென்று நம்புகிறேன். இந்தப்படத்தில் எல்லோரும் கதைக்கான முகங்களாக இருக்கிறார்கள். காளி வெங்கட் கலைத்துறை தந்தை, அவருக்குள் நிறையக் கதைகள் இருக்கு ஷீட்டிங்கில் இருக்கும் போது, ஆறு மணிக்கு மேல பாடுவாரு, ஆடுவாரு, மிமிக்ரி பண்ணுவாரு, ஏதோதோ சொல்லுவாரு, நிறைய பேசுவாரு, ஜெபம் பண்ணுவார், அதே மாதிரி நிறையக் கதைகள் சொல்லுவார். அவர் ஊர்ல இருக்க ஒரு வளையல் தாத்தான்னு ஒரு கதை சொல்லியிருக்காரு, எனக்கு அதைப் படமா பண்ண ஆசை, அவரிடம் சொல்லியிருக்கிறேன். அவருக்குள்ள அழகா ஒரு பெரிய லைப் இருக்கு. இப்போதே அவருக்குள் 60 வயதுக்கான ஞானம் இருக்கிறது. இந்தப்படத்தில் எல்லோருமே ரொம்ப அழகா நடித்திருக்கிறார்கள். எல்லோரும் உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. கார்த்திகேயன் இந்த மாதிரி புதுமையா இன்னும் நிறையப் படங்கள் செய்யுங்கள், படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் என்றார்.

நடிகர் ரமேஷ் திலக் பேசியதாவது… இந்த மேடையை காளி வெங்கட் எனக்குத் தந்திருக்கிறார் நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் அதற்கு நான் மூன்று காரணங்கள் சொல்கிறேன், முதலி எஸ் ஆர் பிரபு இந்தப்படத்தை வாங்கியுள்ளார், இரண்டாவது டிரெய்லரும் பாடலும் அவ்வளவு நன்றாக உள்ளது, மூன்றாவது ஒரு படம் முடித்துவிட்டு டப்பிங் எல்லாம் முடித்து படம் நன்றாக வந்திருந்தால் அது நம் நடவடிக்கையில் தெரிந்து விடும், காளி வெங்கட் அண்ணாவுடன் தான் மூன்று மாதமாக சுற்றிக் கொண்டிருக்கிறேன். ஆணவத்தின் உச்சக்கட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார் அப்படியெனில் கண்டிப்பாகப் படம் ப்ளாக்பஸ்டர் தான். இவர் வாழும் இந்த நாட்டில் நானும் வாழ்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ப்ளாக் அன் ஒயிட் காலத்திலிருந்து, டிஜிட்டல் வரை, சினிமாவில் எல்லா அறிவுரைகளும் எங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் காளி வெங்கட் அவர்களுக்கு நன்றி. நான் இது மூலமா ஐநா சபைக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இந்த வருஷத்துக்கான நோபல் பிரைஸ் காளி அண்ணாவிற்குக் கொடுத்தே ஆகவேண்டும். உங்கள் குழுவிற்கு மிகப்பெரிய வாழ்த்துக்களும் நன்றிகளும் என்றார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசியதாவது… மெட் ராஸ் மேட்னி படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமா வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. இன்றைக்கு மொத்த இந்திய சினிமாவும் ஒரு முக்கியமான ஒரு காலகட்டத்தில இருக்குன்னு நினைக்கிறேன். சினிமாவின் மார்க்கெட் முழுக்க மாறியிருக்கு, கடைசி ஒரு வருடத்தில் என்ன படம் செய்வது என்பதில் எல்லோரிடமும் குழப்பம் இருக்கிறது, ஆனால் மக்கள் இன்னும் தியேட்டருக்கு நிறைய வந்து படம் பார்க்கிறார்கள். நல்ல படங்களை சப்போர்ட் பண்றாங்க. எல்லாரும் ஒரு படம் ஆரம்பிக்கிறப்போ, இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறணும். நமக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கணும். நம்முடைய கனவு நிறைவேறணும். நிறைய பணம் சம்பாதிக்கணும். பேர சம்பாதிக்கணும் இந்த மாதிரி நிறைய ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான விஷயத்தோட ரொம்ப பாசிட்டிவாதான் ஆரம்பிக்கிறோம். ஆனால் ஆரம்பிக்கிற எல்லா படங்களும் அதே மாதிரியான அவுட்புட்டோட வந்து முழுமை பெறறது இல்லை. அது ரொம்ப சிக்கலான ஒரு விஷயம். நிறைய வெவ்வேறு விதமான கலைஞர்களுடைய பணிகள் ஒரு படத்துக்கு தேவைப்படுது, அது அழகா அமைஞ்ச படமா மெட்ராஸ் மேட்னி படத்தைப் பார்க்கிறேன். சின்ன படம் பெரிய படம் அப்படின்னு எப்பவுமே நம்மளே வகைப்படுத்திட்டே இருக்கோம். அப்படி இல்லாம பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒரு மிடில் கிளாஸ் லைஃபை, ரொம்ப எதார்த்தமா அதே நேரத்துல ரசிக்கும்படியா இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டர்ஸும் நம்ம வாழ்க்கையில நம்ம பார்த்த கேரக்டர்ஸ திரும்பி பார்க்கிற மாதிரி இருந்தது. ஒரு மிடில் கிளாஸ் லைஃப் மேட்னி ஷோவா பாக்குற மாதிரியான ஒரு அனுபவம்தான் இந்தப்படம். நிறைய விஷயங்கள் ரொம்ப நாஸ்டாலஜிக்கா இருந்தது. கார்த்திகேயன்மணி மிகச்சிறப்பாக படத்தை தந்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் சினிமாவில் முக்கியமான ஆளாக வருவார், எல்லா நடிகர்களும் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார்கள். இசையமைப்பாளர் பாலசாரங்கன் இசை மிகச்சிறப்பாக இருந்தது. காளி வெங்கட்டை வைத்து ஒரு ஆக்சன் படமே எடுக்கலாம் அவர் நடிப்பு அவ்வளவு சிறப்பாக இருந்தது. இப்படத்தை ஒரு மாஸ் கமர்ஷியல் சினிமாவாகத்தான் நான் பார்க்கிறேன் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகை ரோஷினி பேசியதாவது… ஆனந்த் மூலமாகத் தான் இந்த வாய்ப்பு வந்தது அவருக்கு நன்றி, நாங்க எந்த ஒரு இடத்திலும் மேக்கப் போடாம அவ்வளவு அழகா நான் இருக்கிறேன் என்பதை இவரோடு பிரேம்ல தான் பார்த்து தெரிந்துகொண்டேன். நன்றி ஆனந்த். கார்த்திக் கதை சொன்னபோதே என் வீட்டு ஞாபகங்கள் வந்தது, படம் பார்க்கும் போது உங்கள் எல்லோருக்கும் உங்கள் வீட்டுச் சம்பவங்கள் ஞாபகம் வரும். எனக்கு வயதானால் கூட இப்படி ஒரு படம் நான் நடித்திருக்கிறேன் எனப் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன், அந்தளவு மனதுக்கு நெருக்கமான படம் இது. காளி வெங்கட்டுடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம், அவர் நடிப்பு பயங்கர அமேசிங்கா இருக்கும். ஸ்விட்ச் போட்ட மாதிரி ஒரு கேரக்டர்ல இருந்து வேற கேரக்டர்ல அவ்ளோ அழகா பண்ணுவார், இந்தப்படத்தில் அவர் தான் எனக்கு அப்பா. இந்த படத்தில் ஒரு அப்பாவுக்கும் ஒரு பொண்ணுக்கமான ரிலேஷன்ஷிப் தான் படம். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஷெல்லி மிக அழகா நடித்திருக்கிறார்கள். படத்தில் எல்லோரும் மிகச்சிறப்பா வேலை பார்த்திருக்கிறார்கள், இந்தப்படம் பார்க்கும் போது உங்களுடைய பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வரும். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

இயக்குநர் கார்த்திகேயன் மணி பேசியதாவது… என் அம்மா நிறைய இலக்கிய வட்டம் போவார்கள். தமிழ் மொழியின் சிறப்பை பற்றி நிறைய சொல்லுவார்கள், உண்மையிலேயே தமிழ் எவ்வளவு பழமை வாய்ந்தது என்ற கேள்வி எனக்குள் வந்தது, அதன் பிறகு நிறையப் புத்தகங்கள் படித்தேன். நம்மளோட வரலாறு இப்ப இருக்கங்களுக்கு யாருக்குமே தெரியலைன்றது எனக்கு மிகப்பெரிய வருத்தமா இருந்தது, ஒரு சில கவிதைகளை வச்சே நாலு படம் எடுக்கலாம் கிட்டத்தட்ட புறநானூறே 400 கவிதை இருக்கிறது. 300ன்னு ஒரு படம் வந்திருக்கும். ரொம்ப பிரபலமான படம். எனக்கு தெரிஞ்சு அந்த படம் தமிழ் படமாகத்தான் எடுத்திருக்கவேண்டும். ஏன்னா அந்த மாதிரி கதை இங்க எவ்வளவோ இருக்கிறது. அந்த மாதிரி கதைகள் நமக்கே தெரியவில்லை. அது வந்து உண்மையிலேயே வருத்தத்துக்கு ஒரு விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன், ஏன் மத்தவங்க எடுக்கலன்றத கேக்குறத விட்டுட்டு, நான் ஏதாச்சும் பண்ணனும்னு தான் இந்தப்படம் எடுக்க முயற்சி செய்தேன். நான் ஐடில இருந்தாலும் எனக்கு வந்து சினிமா மேல பயங்கரமான பேஷன் உண்டு. அதன் தொடக்கமாகத் தான் இந்தக்கதை எழுதினேன், நான் வாழ்க்கையில் சந்தித்த, பார்த்த அனுபவங்கள் தான் இந்தப்படம், ஒரு அப்பா பசங்களுக்காக நாய் மாதிரி ஓடுறாரு. திடீரென்று பார்த்தா பசங்களுக்கும் அவருக்கும் ஒரு கேப் இருக்கு. அந்த அப்பாவிற்கு எவ்வளவு வலிக்கும். இந்தக் கதையை நான் எழுதி முடித்த பிறகு, ஒரு நல்ல அப்பா கிடைக்கவேண்டுமென்று நான் வலைவீசி தேடிட்டு இருந்தேன். சரியான அப்பா கிடைக்கலைனா இந்தப்படம் எடுக்க வேண்டாமென்று முடிவு செய்திருந்தேன். அப்போதுதான் காளி இந்த கதைக்கு ஓகே சொன்னார், காளி வெங்கட் நடிப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை, காளி வெங்கட் நடிப்பு எல்லாமே ரொம்ப உண்மையா இருந்தது, ஷெல்லி, விஷ்வா, ரோஷினி எல்லோரும் உங்க வாழ்க்கையைப் பார்ப்பது போலவே நடிப்பைத் தந்துள்ளார்கள். சத்யராஜ் கேரக்டர் இந்த டிரெய்லர்ல மிடில் கிளாஸ் லைஃப்ல என்ன இருக்கும் நோ ஆக்ஷன், நோ அட்வென்சர், நோ ரொமான்ஸ், சோ சேட், அப்படின்னு சொல்லுவார். ஆனால் இதில் எல்லாமே இருக்கும். அது உங்க லைஃப்லயும் இருக்கு. இந்த படம் மூலமா உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை ஞாபகம் வரும். எடிட்டர் சதீஷ், ஹரிகிருஷ்ணன் இல்லையென்றால் இந்தப் படம் நடந்திருக்காது இருவருக்கும் நன்றி. எங்களை நம்பி இந்தப்படத்தை எடுத்துக்கொண்ட ட்ரீம் வாரியர்ஸ் எஸ் ஆர் பிரபு சாருக்கு நன்றி. இப்படம் ஜூன் 6 ஆம் தேதி வருகிறது என்றார்.

காளி வெங்கட் பேசியதாவது…
முதலில் எஸ் ஆர் பிரபுக்கு நன்றி, ஒரு படம் எப்படிப்பட்ட படம் என்பது நீங்கள் வாங்கும்போது தெரிந்துவிடும், அதற்காக அவருக்கு நன்றி, சத்யராஜ் சாருக்கு ரொம்ப ரொம்ப நன்றி. படம் முடியற ஸ்டேஜ்லதான் இயக்குநர் அவரை அணுகினார் ஆனால், எந்த தயக்கமும் இல்லாமல் படம் செய்து தந்தற்கு நன்றி. வடிவேல் சாருக்கு மிக்க நன்றி. அபிஷேக் மூலம் தான் இயக்குநரைச் சந்தித்தேன், வீட்டுக்கு கூப்பிட்டு கதை சொன்னார், அதுவே எனக்குப் புதிதாக இருந்தது, இந்தக்கதை சொன்னவுடனே எனக்குப் புரிந்துவிட்டது. எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்தது. எல்லோர் வாழ்க்கையிலும் இதை உணர்ந்திருப்பீர்கள், ஒரு கட்டத்தில் எல்லா அப்பாவும் தன் பிள்ளைகள் தன்னிடம் இருந்து பிரிந்து செல்வதை உணர்வார்கள், நான் அதிகம் சொல்லவில்லை படம் பார்க்கும் போது நீங்களே உணர்வீர்கள். ஆனந்த் கேமரா ஒர்க் மிகச்சிறப்பாக இருந்தது. ஷெல்லி உடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது, மிகச் சிறப்பாக நடித்துள்ளார். விஷ்வா, ரோஷினி எல்லோருக்கும் நன்றி. படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி என்றார்.
ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனம் சார்பில், அனுபமா விக்ரம் சிங் & வேணுகோபால். ஆர் தயாரிப்பில், சேது, சம்ருதி தாரா, பி.எல். தேனப்பன், சூப்பர் குட் சுப்பிரமணி, ரத்னகலா, சி.எம். பாலா உள்ளிட்டோர் நடிப்பில், ஏழுமலை இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் […]
விமர்சனம்ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனம் சார்பில், அனுபமா விக்ரம் சிங் & வேணுகோபால். ஆர் தயாரிப்பில், சேது, சம்ருதி தாரா, பி.எல். தேனப்பன், சூப்பர் குட் சுப்பிரமணி, ரத்னகலா, சி.எம். பாலா உள்ளிட்டோர் நடிப்பில், ஏழுமலை இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “மையல்”.
கதைப்படி.. இரவு நேரத்தில் தனியாக வசிக்கும் வயதான தம்பதியரை ஒரு கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச் செல்கிறது. பின்னர் அதிகாலையில் விஷயம் வெளியே தெரிந்ததும் கிராமமே பரபரப்பாகிறது. அதை நேரத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஆடுகள் அடைக்கப்பட்ட பட்டியில் நுழைந்து, சேது ஒரு ஆட்டை திருடிச்செல்கிறார். பின்னர் அவரை விரட்டிச் சென்றபோது, இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு, காட்டுப்பகுதியில் ஓடுகிறார். அப்போது கிணற்றுக்குள் தவறி விழுகிறார். விரட்டி வந்தவர்களும் திரும்பிச் செல்கின்றனர்.

இந்த இரண்டு சம்பவங்களையும் காவல்துறையினர் பரபரப்பாக விசாரணை செய்கின்றனர். பின்னர் அதிகாலையில் கிராம மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட சூன்யக்கார குடும்பத்தைச் சேர்ந்த அல்லி ( சம்ருதி தாரா ) கிணற்றுக்குள் கிடந்த சேதுவை காப்பாற்றி, வைத்தியம் பார்த்து அடைக்கலம் கொடுக்கிறார். வெளியூர் சென்ற சூனியக்கார கிழவி ரத்ன கலா வந்ததும் கிளம்புமாறு சேதுவிடம் அல்லி கூறுகிறார். இதற்கிடையில் இருவருக்கும் காதல் மலர்கிறது. இவர்களது காதலை அறிந்த பாட்டி, களவாணி பயலை நம்பி எப்படி பேத்தியை அனுப்புவது என காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊரில் பிரச்சினை முடிந்ததும், இரவு நேரத்தில் சேதுவை ஊருக்குள் அனுப்பி வைக்கிறார்.

ஊருக்குள் வந்த சேதுவை விசாரணைக்காக போலீஸ் அழைத்துச் செல்கின்றனர். பின்னர் அல்லியின் மீதுள்ள காதலால் திருந்தி வாழ நினைத்து, தனது பூர்வீக வீட்டை விற்று, அந்தப் பணத்தில் தாலி, புடவை எடுத்துக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள அல்லியின் வீட்டிற்கு செல்கிறார். அப்போது கொலை வழக்கு சம்பந்தமாக காவல்துறையினர் கொலையாளியை விரட்டிச் சென்றபோது, சேது சிக்குகிறார். இவரிடம் நகை, புதிய புடவை என இருந்ததால் காவல்நிலையத்திற்கு கூட்டிச் செல்கின்றனர்.
பின்னர் காவல்துறையினரிடம் இருந்து மீண்டு வந்தாரா ? சேது, அல்லியின் காதல் என்னானது ? வயதான தம்பதியர் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்பது மீதிக்கதை…

வயிற்றுப் பிழைப்புக்காக ஆடு திருடி பிழைப்பு நடத்தும் சேது, தன்னையும் ஒரு ஜீவன் விரும்புகிறதே என்பதை உணர்ந்து, திருந்தி வாழ நினைக்கும் போது, சந்தர்ப்பமும், சூழ்நிலையும் குற்றவாளியாக மாற்றுகிறது என்பதை சுவாரஸ்யம் இல்லாமல் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
அதே சமயம் தனது கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நாயகன் சேதுவும், சம்ருதி தாராவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். காவல் ஆய்வாளராக சி.எம் குமார், ஏட்டு சூப்பர் குட் சுப்பிரமணி இருவரும் நன்றாக நடித்துள்ளனர். வில்லனாக நடித்துள்ள பி.எல் தேனப்பன், கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
இந்தியாவின் 11வது ஜனாதிபதியும், இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் தேசிய சின்னங்களில் ஒருவருமான பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்த ஒரு பிரமாண்டமான திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை ‘தன்ஹாஜி தி அன்சங் வாரியர்’ புகழ் இயக்குனர் […]
சினிமாஇந்தியாவின் 11வது ஜனாதிபதியும், இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் தேசிய சின்னங்களில் ஒருவருமான பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்த ஒரு பிரமாண்டமான திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை ‘தன்ஹாஜி தி அன்சங் வாரியர்’ புகழ் இயக்குனர் ஓம் ராவத் இயக்குகிறார்.
தேசிய விருது பெற்ற நாயகனும், சர்வதேச புகழ் நடிகருமான தனுஷ், இந்தத் திரைப்படத்தில் இந்தியாவே ஒருமனதாக நேசிக்கும் மனிதரான, ஏபிஜே அப்துல் கலாம் பாத்திரத்தை, ஏற்று நடிக்கிறார்.
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தினை தயாரித்த, ‘அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் கீழ் அபிஷேக் அகர்வால் தயாரிக்க, ‘டி-சீரிஸ்’ நிறுவனத்தின் கீழ் பூஷன் குமார் இணைந்து தயாரிக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதையை ‘நீர்ஜா’, ‘மைதான்’ மற்றும் ‘பர்மானு தி ஸ்டோரி ஆஃப் போக்ரான்’ போன்ற புகழ்பெற்ற வாழ்க்கை வரலாற்றுப் படங்களுக்கு எழுத்துப் பொறுப்புகளை வகித்த சைவின் குவாட்ராஸ் எழுதியுள்ளார்.
ராமேஸ்வரத்திலிருந்து ராஷ்ட்ரபதி பவன் வரை, டாக்டர் கலாமின் வாழ்க்கை, ராக்கெட் அறிவியலின் கலவையாகவும், ஒரு அற்புதமான மனப்பான்மையுடன் இருந்தது. பெரும்பாலும் ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்று அழைக்கப்படும் அவர், எளிமையான தொடக்கத்திலிருந்து ஒரு புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானியாகவும், தொலைநோக்கு பார்வையாளராகவும், இறுதியில் மக்களின் ஜனாதிபதியாகவும் உயர்ந்தார். அவரது அதிகம் விற்பனையாகும் நினைவுக் குறிப்பான ‘அக்னி சிறகுகள்’ மூலம் அவரது கருத்துக்கள், தலைமுறை தலைமுறையாக நம் மக்களின் மனதைத் தொடர்ந்து தூண்டிவிடுகிறது.
இந்தியாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான தனுஷ், டாக்டர் கலாம் வேடத்தில் நடிக்கிறார். இந்த வேடம் அவரது திரை வாழ்க்கையின் மிக முக்கியமான மைல்கல்லாக இருக்கும். அவரது தனித்துவமான உணர்வுப்பூர்வமான நடிப்பினால் புகழ் பெற்ற தனுஷ், இப்போது இந்தியாவின் மிகவும் பிரியமான தொலைநோக்கு பார்வையாளர்களில் ஒருவரைச் சித்தரிக்கும் மகத்தான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். ஒரு நடிகராகவும், இந்திய கதைசொல்லலுக்கும் இத்திரைப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும்.
கேன்ஸ் திரைப்பட விழா என்பது, ஒரு அரிய உலகளாவிய அரங்கமாகும், அதனால்தான் இந்திய மண்ணில் ஆழமாக வேரூன்றிய, ஆனால் உலகளவில் எதிரொலிக்கும் ஒரு கதைக்கான அறிமுகத்தை, தயாரிப்பாளர்கள் கேன்ஸ் நிகழ்வில் அறித்துள்ளனர். ஓம் ராவத்தும் தனுஷும் படத்தைப் பற்றி விவாதிக்க சந்தித்தபோது, அவர்கள் தங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய படத்தை ஒன்றாக உருவாக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்தனர்.

இந்திய சினிமா மற்றும் சர்வதேச வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்கனவே அலைமோதத் தொடங்கிவிட்டது. இது கடந்த காலத்தைப் பற்றிய ஒரு கதை மட்டுமல்ல. அறிவியல் சேவையையும் அறிவின் மேன்மையும் சந்திக்கும் போது, டாக்டர் கலாம் வாழ்வின் மகிமைகளை, இந்தியா உருவாக்க வேண்டிய எதிர்காலத்தை நினைவூட்டும் ஒரு அற்புதமான கதை.
டாக்டர் கலாமின் மதிப்புகளுக்கு உண்மையாக இருக்கும் இந்தப் படம், ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் ஜனாதிபதி பதவிக்குப் பின்னால் உள்ள மனிதர், கவிஞர், ஆசிரியர், கனவு காண்பவர் என அவரின் பல முகங்களை ஆராயும், அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் அறிவியல் மற்றும் ஆன்மீகம் இரண்டையும் சம அளவில் எடுத்துச் செல்லும். ஒரு அரசியல் வாழ்க்கை வரலாற்றை விட, இந்தத் திரைப்படம் தலைமைத்துவம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல் பற்றிய நுண்ணறிவாக நிலைநிறுத்தப்படும்.
உண்மையான அரசியல்வாதிகளுக்கு பஞ்சமிகுந்த ஒரு காலத்தில், கலாம் அரசியல் மற்றும் அற்பத்தனத்திற்கு அப்பாற்பட்டவராக இருந்தார். கல்வியின் சக்தி, சிறந்து விளங்குதல் மற்றும் உள்நாட்டு கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்றவர் அவர் என்று ராவத் ஒரு அறிக்கையில் கூறினார், அவரது கதையை திரைக்குக் கொண்டுவருவது ஒரு கலைச் சவால் மற்றும் தார்மீக மற்றும் கலாச்சார பொறுப்பு. இது உலகளாவிய இளைஞர்களுக்கும், குறிப்பாக உலகளாவிய தென்னகத்து இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் ஒரு கதை. இது எனது வாழ்க்கையின் மிக முக்கியமான அனுபவம். மக்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்து வந்தாலும் அவர்களுக்கான அற்புதமான பாடம் அவரது வாழ்க்கை.
தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் மேலும் கூறுகையில்.., டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் காவிய வாழ்க்கையை பெரிய திரைக்குக் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்களுக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான தருணம். இந்திய சினிமாவின் ஜாம்பவான்களான டி-சீரிஸின் ஓம் ராவத், தனுஷ் மற்றும் பூஷன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் பெருமைப்படுகிறேன். இந்தக் கதையைச் சொல்வதில் நாங்கள் பாக்கியம் பெற்றுள்ளோம், மேலும் நமது உண்மையான பாரத ரத்னா கலாமின் பயணத்தை உயிர்ப்பிக்க நாங்கள் ஒவ்வொருவரும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவுள்ளோம். இது இந்திய சினிமாவின் மிகவும் மதிப்புமிக்க திட்டங்களில் ஒன்றாகும், மேலும் இது உலக அளவில் ஒரு பிரமாண்டமான திரைப்படமாக இருக்கும்.
தயாரிப்பாளர் பூஷன் குமார் மேலும் கூறுகையில், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை, பல தலைமுறைகளாக மில்லியன் கணக்கான மக்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் ஒரு கதை. டி-சீரிஸில், அத்தகைய அசாதாரண இந்தியரின் பயணத்தைக் கொண்டாடும் ஒரு திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இது ஓம் ராவத்துடனான எங்கள் மூன்றாவது கூட்டு முயற்சியாகும். இந்த திரைப்படத்தில் தனுஷ் மற்றும் அபிஷேக் அகர்வாலுடன் இணைவது இதை மேலும் சிறப்பானதாக்குகிறது. இது வெறும் படம் மட்டுமல்ல, கனவுகள், அர்ப்பணிப்பு மற்றும் பணிவு ஆகியவை ஒரு நாட்டின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்க முடியும் என்பதைக் காட்டிய ஒரு மனிதருக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு படம்.
படக்குழு படம் பற்றிய மற்ற தகவல்கள் குறித்து தற்போதைக்கு ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் ராவத்தின் மிகச்சிறப்பான கதைசொல்லல், அகர்வாலின் துணிச்சலான தயாரிப்புத் தேர்வுகள் மற்றும் தனுஷின் மாற்றத்தை ஏற்படுத்தும் நடிப்பு திறமை ஆகியவற்றால், எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக உள்ளன, மேலும் தேசிய விருது வென்ற ராவத் மற்றும் தனுஷ் இணைந்து பணியாற்றுவதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
உலகம் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், உலக பார்வையாளர்களுக்காக இந்திய வாழ்க்கை வரலாற்றுப் படங்களின் இலக்கணத்தை மீண்டும் எழுத ‘விங்ஸ் ஆஃப் ஃபயர்’ தயாராக உள்ளது.
இந்தப் படத்தை அபிஷேக் அகர்வால் மற்றும் பூஷன் குமார் ஆகியோர் இணைந்து வழங்க, மேலும் அபிஷேக் அகர்வால், பூஷன் குமார், கிருஷ்ணன் குமார் மற்றும் அனில் சுங்கரா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இது உலகையே கவனிக்க வைக்கும் ஒரு திரைப்படமாக இருக்கும்.
காதல் உணர்வை இழை பிரித்து, காதலர்களின் சின்ன சின்ன அசைவுகளைத் தோரணமாக்கி நெய்து இயற்கை சூழ்ந்த பின்னணியுடன் ‘ஆழி’ என்கிற சுயாதீன பாடல் ஆல்பம் உருவாகி உள்ளது. இந்த ஆல்பத்தை ஜெயின்ட் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் வசந்த் ராமசாமி தயாரித்துள்ளார். ஈஷான் […]
சினிமாகாதல் உணர்வை இழை பிரித்து, காதலர்களின் சின்ன சின்ன அசைவுகளைத் தோரணமாக்கி நெய்து இயற்கை சூழ்ந்த பின்னணியுடன் ‘ஆழி’ என்கிற சுயாதீன பாடல் ஆல்பம் உருவாகி உள்ளது. இந்த ஆல்பத்தை ஜெயின்ட் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் வசந்த் ராமசாமி தயாரித்துள்ளார். ஈஷான் இயக்கி உள்ளார். லட்சிய நடிகர் எஸ்.எஸ் . ராஜேந்திரனின் பேரன் ஆரியன் இசையமைத்துள்ளார். இப்பாடல் ஜெயின்ட் மியூசிக் தளத்தில் தயாரிப்பாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
‘ஆழி ‘ பாடல் ஆல்பம் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் எஸ் எஸ் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன், இயக்குநர் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர் .

நிகழ்ச்சியில் கே .ராஜன் பேசும்போது, தமிழ் சினிமா நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற எத்தனையோ நட்சத்திரங்களைப் பார்த்துள்ளது. அவர்கள் எல்லாம் கூட இயக்குநர்களின் விருப்பமறிந்து நடந்து கொண்டார்கள். மீண்டும் நடிக்கச் சொன்னால் நடிப்பார்கள். இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
ஆனால் இந்த ‘ஆழி’ பாடல் ஆல்பத்தில் நடித்துள்ள நடிகரும், நடிகையும் இந்த விளம்பர நிகழ்ச்சிக்கு வரவில்லை. வருத்தமாக இருக்கிறது. இன்று தயாரிப்பாளர்கள் மிகவும் சிரமத்தில் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட அலைகள் அடித்துக் கொண்டிருக்கின்றன. பல துன்ப அலைகள், நடுவே இன்பமான அலைகள் சில மட்டுமே அடிக்கும். ரஜினி, ஷங்கர் போன்றவர்களை வைத்து படம் எடுத்தவர்கள் எல்லாம் இன்று ஆளையே காணோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லாம் இன்று படம் எடுப்பதில்லை, போய்விட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று தமிழ் சினிமா இருக்கிறது .

ஒரு நடிகர் முதல் படத்தில் 25 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார். அந்தப் படம் ஓடியதும் அடுத்த படத்தில் இரண்டு கோடி என்றார். ஒரு படம் வெற்றி பெற்றால் இயக்குநர் தயாரிப்பாளரை விட நடிகருக்குத்தான் பலன் கிடைக்கும்.
இந்தப் பாடல் விளம்பர நிகழ்ச்சிக்கு நடிகர் நடிகை வரவில்லை. வந்திருந்தால் விளம்பரம் அவர்களுக்குத்தான். ஒவ்வொரு திரைப்பட விழாவிலும் வரும் நடிகர், நடிகைகளைத் தான் ஊடகத்தைச் சேர்ந்த புகைப்படக்காரர்கள் படம் எடுத்து விளம்பரப்படுத்துகிறார்கள். மற்றபடி அந்த இயக்குநர், தயாரிப்பாளர்களை அவர்கள் அந்த அளவுக்கு விளம்பரப்படுத்துவதில்லை. அதனால் வரக்கூடிய எல்லா பலன்களையும் நடிகர்கள் தான் அனுபவிக்கிறார்கள். தயாரிப்பாளர்களோ இயக்குநர்களோ அல்ல. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கே இந்த பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வராத நடிகர் கதிரவன் என்ற நடிகரையும் நமிதா கிருஷ்ணமூர்த்தி என்ற நடிகையையும் நான் கண்டிக்கிறேன். பிக்பாஸில் 100 நாள் தாக்குப் பிடிக்க முடியாமல் சில நாட்கள் மட்டுமே இருந்து விட்டு வெளியேற்றப்பட்ட அந்த நடிகருக்கு அதற்குள் இவ்வளவு ஆணவமா ? தான் நடித்த ஆல்பத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு அவர் வரவில்லை, அதேபோல் அந்த நடிகையும் வரவில்லை இப்படிப்பட்டவர்களைத் தமிழ் சினிமா புறக்கணிக்க வேண்டும்.

இந்தப் பாடல் ஆல்பத்துக்கு லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின் பேரன் ஆரியன் இசையமைத்துள்ளார். பாடலின் இசையும் வரிகளும் நன்றாக உள்ளன. அதே போல் நடித்திருப்பவர்களை நன்றாக நடிக்க வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இவர்களையே கதாநாயகன் கதாநாயகி ஆக்கி இவர்கள் அடுத்த படம் எடுக்கும் திட்டத்தில் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களின் நடவடிக்கையால் அந்த வாய்ப்பை இழக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு தர யோசிக்க வேண்டி இருக்கிறது. இந்த ‘ஆழி’ பாடல் ஆல்பம் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் நடிகர் கூல் சுரேஷ் மற்றும் ஆல்பம் தயாரிப்புக் குழுவினர் கலந்து கொண்டனர்.