அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ் சார்பில் TS. கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் த.ஜெயவேல் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ஹீரோவாக நடிக்க, பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராம் அப்துல்லா ஆண்டனி”. ஆண்டனி கதாபாத்திரத்தில் […]
சினிமா
அழகு மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள “பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஜாகுவார் தங்கம், “லவ் டுடே” படத்தின் இயக்குனர் பாலசேகரன், நடிகர் ஜாவா சுந்தரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, “பூங்கா” படத்தின் […]
சினிமா
மகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘வீர தமிழச்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் […]
சினிமா
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி, நிமிஷா சஜயன் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட ‘DNA’ திரைப்படம், ரசிகர்களின் ஆதரவுடன் […]
சினிமாஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி, நிமிஷா சஜயன் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட ‘DNA’ திரைப்படம், ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றியை நோக்கி பயணிக்கிறது. இதை தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா ஒன்றினை ஒருங்கிணைத்திருந்தனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஒரு நாள் கூத்து’ படத்திலிருந்து அவரை பின் தொடர்கிறேன். அவர் இயக்கத்தில் வெளியான ‘ஃபர்கானா ‘படத்தின் படப்பிடிப்பின் போது இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எங்கள் இருவருக்கும் இடையே நல்லதொரு புரிதலும், நட்பும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து டிஎன்ஏ படத்திற்கான வாய்ப்பை வழங்கினார். அவர் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கின்றேன் என நினைக்கிறேன். இந்தப் படத்தின் உணர்வை சிதைக்காமல் ஒளிப்பதிவு செய்திருப்பதாக நம்புகிறேன். இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி என்றார்.

இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா பேசுகையில், இது என்னுடைய இருபது ஆண்டுகால கனவு பயணம். இந்த தருணத்திற்காக மகிழ்ச்சியுடன் காத்திருந்தேன். இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கதையில் இடம்பெறும் விசயங்கள் அனைத்தும் உண்மையானவை தான். கடந்த பதினைந்து ஆண்டு கால இதழியல் துறையில் பணியாற்றிய அனுபவம் தான் இந்த கதையை எழுதுவதற்கு உதவியாக இருந்தது. ‘ புனைவுகளில் உண்மைத் தன்மை அதிகம் இருந்தால், அந்த புனைவு வெற்றி பெறும்’ என என்னுடைய குரு சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இந்த கதையில் 90 சதவீதம் உண்மைத் தன்மை இருக்கிறது. பத்து சதவீதம் தான் கற்பனை கலந்திருக்கிறது.
இந்தப் படத்தில் இடம்பெறும் பாட்டி கதாபாத்திரத்தில் சாத்தூர் ஜெயலட்சுமி என்பவர் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரமும் என்னுடைய வாழ்வில் சந்தித்த பெண்மணியை முன்னுதாரணமாக கொண்டு எழுதினேன். எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை – கோஷா ஆஸ்பத்திரி, ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் என உண்மை சம்பவங்களை தழுவித்தான் இப்படத்தின் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு அமைந்திருக்கும். இப்படத்தின் வெற்றிக்கு இத்தகைய உண்மைக்கு நெருக்கமான விசயங்களும் காரணம் என கருதுகிறேன். இதனால் எழுத்தாளர்களையும், அனுபவம் மிக்க பத்திரிகையாளர்களையும் இயக்குநர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன். இயக்குநர் நெல்சன் தான் என்னை தேடி கண்டுபிடித்து எழுத அழைப்பு விடுத்தார்.
நான் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்து எழுதிய பல காட்சிகளை திரையில் அற்புதமான நடிப்பால் அதர்வாவும் , நிமிஷாவும் வெளிப்படுத்தி இருந்தார்கள். இதற்காக அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ஏதேனும் ஒரு கதாபாத்திரம் மற்றொரு கதாபாத்திரத்திற்கு உதவும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருப்போம். இந்த உதவி செய்யும் மனப்பான்மை எப்போது வணிகத்தனம் மிக்கதாக மாறுகிறதோ..! அங்கு குற்ற சம்பவம் நிகழ்கிறது.
இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது. உதவி என்பது ஆத்மார்த்தமாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். இந்த மனிதநேயத்தை முன்னிறுத்திய இந்த திரைப்படம் ரசிகர்களிடம் சரியான முறையில் சென்றடைந்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு துணையாக நின்ற ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், கேரளாவில் ஒரு படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றால், அங்கு ஐந்து கேரவன் இருந்தால், அதில் ஒரு கேரவன் ரைட்டர்ஸ்காக இருக்கும். அந்த அளவில் கதாசிரியர்களுக்கு அங்கு மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்தப் படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிய அதிஷாவை மேடையேற்றி, பாராட்டு தெரிவித்ததற்காக இயக்குநர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆரோக்கியமான பயணம். என்னை பொறுத்தவரை கதாசிரியர், வசனகர்த்தா என்பது தனி பிரிவு, அந்த பிரிவு வலிமையாக இருந்தால் எந்த படமும் தோற்காது. இது என்னுடைய கருத்து என்றார்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசுகையில், தமிழ் சினிமாவின் தற்போதைய சூழலில் ஒரு படத்தின் வெற்றி என்பது ஒரு இயக்குநர் நல்ல படத்தை இயக்குவதில் மட்டுமில்லை. அந்தத் திரைப்படம் சரியான தேதியில் வெளியாக வேண்டும். இது இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படத்திற்கு சரியான விளம்பரம் கிடைக்கப் பெற வேண்டும். அதுவும் இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படம் விநியோகஸ்தர்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதுவும் அந்த இயக்குநரின் கைகளில் கிடையாது. அதனைத் தொடர்ந்து அந்தப் படத்திற்காக போஸ்டர் ஒட்டுவது முதல் விளம்பரப்படுத்துவது வரை உழைப்புதான் வெற்றியை தீர்மானிக்கிறது. அந்த வகையில் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் பலர் ஒன்று கூட வேண்டியதிருக்கிறது. பலரின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்க வேண்டும். அந்த வகையில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு பின்னணியில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனந்துக்கும், திவ்யாவுக்கும் இடையேயான கதை 2009 ஆம் ஆண்டிலிருந்து என்னிடம் இருக்கிறது. ஆனந்தும், திவ்யாவும் பெயர்தான் வேறு வேறு. ஆனால் இந்த கதாபாத்திரங்களை நான் என்னுடைய வாழ்வில் சந்தித்திருக்கிறேன். அவர்களின் வலியை இதில் பதிவு செய்திருக்கிறேன். இவர்களின் வாழ்வில் திருமணம் என்பது நடைபெறுமா ? என என்னுடைய மனதில் எழுந்த கேள்விதான் இந்தப் படத்தின் கதையை எழுத தூண்டியது. இதன் மூலம் ஒரு வலிமையான கதை, ஒரு வலிமையான உணர்வுடன் இணைந்து சொல்லும்போது அதற்கு வெற்றி கிடைக்கிறது. இதனை இன்னும் நான் பத்து ஆண்டுகள் கழித்த பின்னர் சொன்னாலும் வெற்றியைப் பெறும். அதற்கான வரவேற்பும், அன்பும் மக்கள் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. அந்த உண்மையான ஆனந்திற்கும், அந்த உண்மையான திவ்யாவிற்கும் இந்த திரைப்படத்தின் வெற்றியை சமர்ப்பிக்கிறேன். இந்த படத்தில் தான் முதன்முதலாக என்னுடைய கதையை தயாரிப்பாளர் அம்பேத்குமார் என் முன்னிலையில் மற்றவரிடம் நான் எப்படி சொன்னேனோ, எப்படி சொல்வேனோ அதேபோல் சொன்னார். அவருடைய கதை சொல்லும் திறமையை கண்டு வியந்தேன். அப்போது என் கதை பிடித்திருக்கிறது. புரிந்திருக்கிறது என்ற சந்தோஷமும் மனதில் எழுந்தது. அந்தத் தருணம் என்னால் மறக்க இயலாது.
இன்றைய சூழலில் ஒரு திரைப்படத்தை காண மக்களையும், ரசிகர்களையும் திரையரங்கத்திற்கு வரவழைக்க வேண்டும் என்றால் பல தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கிறது. இதன் மூலம் நிறைய நல்ல சினிமாக்கள் வரவேண்டும் . ஆரோக்கியமான சினிமா சூழல் உருவாக வேண்டும் என்ற இலக்குடன் தான் பயணிக்கிறோம். சினிமா மூலம் மக்களும் பயனடைய வேண்டும். அதில் பணியாற்றிய கலைஞர்களும் பயனடைய வேண்டும். அந்த வகையில் ஒரு திரைப்படத்தின் விமர்சனமும், பார்வையும் அமைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் படைப்பாளிகளும், விமர்சகர்களும் கைக்குலுக்கி, ஆரோக்கியமான சினிமா சூழலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பது குறித்து மனம் திறந்து விவாதிக்க விரும்புகிறேன். என்னுடைய திரை பயணத்தில் தொடர்ந்து ஆதரித்து வரும் ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகை நிமிஷா சஜயன் பேசுகையில், பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகும் போது இந்த படம் ஹிட் ஆகுமா ? ஹிட்டாகாதா ? என்ற பதட்டம் இருந்து கொண்டிருக்கும். ஆனால் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிட்ட பிறகு கிடைத்த விமர்சனத்தால் படம் வெளியான தருணத்தில் நான் எந்த வித பதட்டமும் இல்லாமல் நிம்மதியாக உறங்கினேன். இருந்தாலும் இரண்டு மணி அளவில் இயக்குநர் நெல்சன் போன் செய்து படம் வெற்றி என சொன்ன போது மகிழ்ச்சி அடைந்தேன். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று பாராட்டினால் அது இயக்குநரைத் தான் சாரும். அவர் சொல்லிக் கொடுத்ததை தான் நான் செய்திருக்கிறேன். நான் எப்போதும் போல் இயக்குநரின் கலைஞராகத்தான் இருக்க விரும்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து திவ்யா கதாபாத்திரத்தை அளித்ததற்காக நன்றி. ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஏதேனும் ஒரு விசயத்தை கற்றுக் கொள்கிறேன். இந்த படத்தில் நான் இரண்டு விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒன்று இயக்குநர். மற்றொன்று அதர்வா.
படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது மனதிற்கு நெருக்கமாக இருந்த படங்களில் இதுவும் ஒன்று. சக நடிகரான அதர்வா மிகுந்த திறமைசாலி. அர்ப்பணிப்பு உள்ளவர். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்தார். அவருடைய ஒத்துழைப்பு மறக்க முடியாது. அவரின் ஆதரவு இல்லை என்றால் திவ்யா இல்லை. இந்தப் படத்தில் பிறந்து நாற்பது நாட்களான குழந்தையை நடிப்பதற்காக மனமுவந்து வழங்கிய அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகர் அதர்வா முரளி பேசுகையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல படத்தில் நடிக்கிறோம் என்ற உணர்வுடன் தான் கலந்து கொண்டேன். இந்தப் படம் எந்த அளவிற்கு வெற்றி பெறும், எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும், யாருக்கு பிடிக்கும் என்றெல்லாம் யோசிக்கவில்லை. படப்பிடிப்பு நிறைவடையும்போது நல்ல படத்தில் நடித்து விட்டோம் என்ற உணர்வு தான் ஏற்பட்டது. படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை நேரில் காண்பதற்காக திரையரங்கத்திற்கு சென்றோம். அப்போது வயதான பெண்மணி ஒருவர் என்னை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு படத்தை பாராட்டினார். இந்த படத்தின் வெற்றி எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது எனச் சொன்னார். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை அவர்கள் தங்களின் வெற்றியாக கொண்டாடினார்கள். இதை காணும் போது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தத் தருணத்தில் உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக என்னை நான் உணர்கிறேன்.
இயக்குநர் நெல்சன் என்னை சந்தித்து இப்படத்தை பற்றி சொன்னபோது, ‘உங்களுடைய திரையுலக பயணத்தில் நல்லதொரு திரைப்படத்தை அளிப்பேன்’ என நம்பிக்கையுடன் சொன்னார். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் அம்பேத்குமார் தயாரிப்பில், அதர்வா, நிமிஷா சஜயன், சேத்தன், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சுப்பிரமணியம் சிவா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “டி என் ஏ” ( DNA […]
விமர்சனம்ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் அம்பேத்குமார் தயாரிப்பில், அதர்வா, நிமிஷா சஜயன், சேத்தன், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சுப்பிரமணியம் சிவா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “டி என் ஏ” ( DNA ).
கதைப்படி.. வசதியான வீட்டுப் பையனான ஆனந்த் ( அதர்வா ) காதல் தோல்வியால் மது, கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி, குடும்பத்தினரால் வெறுக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டு வருகிறார். அதேபோல் பார்டர் லைன் பெர்சனால்டி டிசார்டர் என்கிற மனநலம் தொடர்பான பிரச்சினையில் இருக்கும் திவ்யா ( நிமிஷா சஜயன் ), தன்னை பெண் பார்க்க வந்த அனைவராலும் புறக்கணிக்ப்படுகிறார். இதனால் அவரது தாய் விஜி சந்திரசேகர் வேதனைப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆலோசனை பெறுகிறார்.

இந்நிலையில் இருவரது குடும்பத்தினர் சம்மதத்துடன் ஆனந்த், திவ்யா திருமணம் நடைபெறுகிறது. திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக செல்கிறது. திவ்யா தாய்மை அடைகிறார். பின்னர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆண் குழந்தை பிறக்கிறது. இருவரது குடும்பத்தினரும் சந்தோஷமாக இருக்கின்றனர். சிறிது நேரத்தில் அந்த குழந்தைக்குப் பதிலாக வேறொரு குழந்தையை வைத்துவிட்டு யாரோ குழந்தையைத் தூக்கிச் சென்றுவிடுகின்றனர். மருத்துவமனை நிர்வாகம், அனைத்து அடையாளங்களும் சரியாக இருக்கும்போது குழந்தை மாறியதாக கூறுவதை ஏற்க மறுக்கின்றனர். ஆனால் திவ்யா உறுதியாக இருக்கிறார்.

அதன்பிறகு தனது குழந்தையை தேடும் முயற்சியில் இறங்குகிறார் ஆனந்த். குழந்தை கிடைத்ததா ? இவர்களிடம் உள்ள குழந்தை யாருடையது ? எதற்காக குழந்தை மாற்றம் ஏற்பட்டது என்பது மீதிக்கதை…
படம் துவங்கும் போதே 1980 என ஆரம்பித்து, மருத்துவமனையில் கனினியை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இந்தியாவில் கனினி பொதுப் பயன்பாட்டிற்கு வந்ததே 1990 காலகட்டத்தில் தான். தற்போது தாய்மை அடைந்த மூன்றாவது மாதத்திலேயே அனைத்து மருத்துவமனைகளிலும் DNA பரிசோதனை செய்து, சான்றிதழ் வழங்குகின்றனர். இது போன்று ஆங்காங்கே லாஜிக் இல்லாமல் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

குழந்தை கடத்தல் சம்பந்தமான கதைகளில், இது ஒரு புதுவிதமான பயணம் என்றாலும் அடுத்தடுத்த காட்சிகளை, பார்வையாளர்கள் யூகிக்கும் படியாக திரைக்கதை நகர்வதால் சுவாரஸ்யம் இல்லாமல் செல்கிறது. இறுதிக்கட்ட காட்சிகள் பிரமாதம். அதர்வா தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நிமிஷா சஜயன் புதுவிதமாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தில் நடத்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஶ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில், தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்பு, கே. பாக்கியராஜ் உள்ளிட்டோர் நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “குபேரா”. கதைப்படி.. நாட்டிலேயே மிகப்பெரிய தொழிலதிபரான நீரஜ் ( ஜிம் சர்பு ) […]
விமர்சனம்ஶ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில், தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்பு, கே. பாக்கியராஜ் உள்ளிட்டோர் நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “குபேரா”.
கதைப்படி.. நாட்டிலேயே மிகப்பெரிய தொழிலதிபரான நீரஜ் ( ஜிம் சர்பு ) ஒப்பந்தம் தொடர்பாக, மத்திய அமைச்சர் உள்ளிட்ட ஆளும் வர்க்கத்திற்கு ஒரு லட்சம் கோடி கருப்பு பணத்தை, வெள்ளையாக மாற்றி கொடுப்பதற்காக, சிறையிலிருக்கும் நேர்மையான அதிகாரியான தீபக்கை ( நாகர்ஜுனா ) தேர்வு செய்கிறார். முதலில் மறுப்பு தெரிவித்த தீபக், தன்னை வெளியில் எடுத்ததும் சம்மதிக்கிறார்.

முதலில் ஐம்பதாயிரம் கோடியை அனுப்புவதற்காக வெவ்வேறு பகுதிகளிலிருந்து நான்கு பிச்சைக்காரர்களை தேர்வு செய்கிறார். அவர்களை பினாமிகளாக மாற்றி அவர்கள் மூலம் பணத்தை அனுப்புகிறார் தீபக், அவர்களில் திருப்பதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒருவர் தேவா ( தனுஷ் ). வேலை முடிந்ததும் பினாமிகளை கொலை செய்யும் நீரஜ் கும்பலிடமிருந்து தேவா மட்டும் தப்பிக்கிறார். அந்த கும்பல் துரத்துகிறது.. தேவா ஓடிக்கொண்டே இருக்கிறார். அந்த சமயத்தில் சமீரா ( ராஷ்மிகா மந்தனா ) உதவ அவருடனே தேவாவும் பின்தொடர்கிறார்.
தேவாவை நீரஜ் கும்பல் பிடித்ததா ? தீபக் என்ன ஆனார் ? தேவா, சமீரா இடையேயான உறவு எத்தகையது என்பது மீதிக்கதை…

சட்டவிரோத பண பரிமாற்றம் செய்யும் அதிகார வர்க்கத்தினரின் அட்டகாசங்களை தோலுரிக்கும் விதமாகவும், கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து வேலை வாங்கிய விதத்திலும் தான் ஒரு கைதேர்ந்த இயக்குநர் என்பதை நிரூபித்துள்ளார் சேகர் கம்முலா.
அதேபோல் பிச்சைக்காரர் கதாப்பாத்திரத்தில் எத்தனையோ நடிகர்கள் நடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். உடைந்த கை, குப்பை மேடு, குப்பை வண்டி பயணம் என ஒவ்வொரு காட்சியிலும், கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
நாகர்ஜுனா, ஜிம் சர்பு இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ராஷ்மிகா மந்தனாவுக்கு குறைவான காட்சிகள் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
படம் இரண்டாம் பாதியில், நீண்ட நேரம் காட்சிகள் இழுத்துக் கொண்டே செல்வதால் பார்வையாளர்களை சோர்வடைய செய்கிறது.
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட் நடித்திருக்கும் ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் […]
சினிமாஅஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட் நடித்திருக்கும் ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் நடிகர், இயக்குநர் முருகானந்தம் பேசுகையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஜூனியர்கள் சீனியர்களை இயக்குவது போல் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் கலைஞர்களை அவர்கள் கையாண்ட விதம் நன்றாக இருந்தது. ஒரு குடும்பம் போல் படப்பிடிப்பு தளம் கலகலப்பாக இருந்தது. ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைக்கும். இந்தப் படத்தில் நடிக்க தொடங்கி நிறைவை எட்டிய போது, ஆஹா ! படத்தின் படப்பிடிப்பு இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என்ற ஏக்கத்தை உண்டாக்கியது. இதுதான் இயக்குநர் சண்முக பிரியனுக்கு கிடைத்த முதல் வெற்றி. அந்த அளவிற்கு ஒட்டுமொத்த படக் குழுவையும் அவர் நேர்த்தியாக அரவணைத்தார். லவ் மேரேஜ் திரைப்படத்திற்கு அரேஞ்ச் மேரேஜ்க்கு வரும் கூட்டம் போல் அனைவரும் வருகை தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ பேசுகையில், எல்லோருக்கும் அவர்களுடைய முதல் குழந்தை ஸ்பெஷலானது. அது கடவுளின் ஆசி என்று சொல்வார்கள் அந்த வகையில் எங்களின் அஸ்யூர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் படம் லவ் மேரேஜ். நான் வணங்கும் பெருமாளின் அருளுடன் ஜூன் 27ஆம் தேதியன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் நடிகர் தனுசுக்கு நன்றி.
இப்படத்தின் கதையை இயக்குநர் சண்முக பிரியன் முதன் முறையாக சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது. இதுதான் எங்களின் முதல் படமாக இருக்க வேண்டும் என தீர்மானித்தோம். இந்த கதையை மிகவும் திறமையாகவும் இயக்கியிருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கும் வகையில் படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் என்றார்.

நடிகை சுஷ்மிதா பட் பேசுகையில், இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆண்டவனின் ஆசியாகவே பார்க்கிறேன். இதற்குக் காரணமாக இருந்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழில் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறேன். இந்தப் படத்தில் அனுபவம் மிக்க இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன். இப்போது அவர்கள் அனைவரும் என்னுடைய குடும்பமாக ஆகிவிட்டனர். விக்ரம் பிரபு பற்றி சொல்ல வேண்டும் என்றால் திறமையானவர். நட்பாக பழகக் கூடியவர். இந்தப் படத்தில் அனைவரும் தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். இதற்காக அனைவருக்கும் வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசுகையில், லவ் மேரேஜ் படத்தின் ட்ரெய்லரை.. 90ஸ் கிட்ஸ்களின் எதிரொலியாகத்தான் பார்க்கிறேன். இந்த படத்தின் முன்னோட்டத்துடன் என்னால் எளிதாக தொடர்பு கொள்ள முடிந்தது. இப்படத்தில் மிஷ்கின் பாடிய பாடலை கேட்டவுடன் இந்தப் பாட்டு ஹிட் ஆகும் என சொன்னேன். ஒரு படத்திற்கு பாசிட்டிவிட்டியை முதன்முதலாக பரப்புவது அப்படத்தின் டைட்டிலிருந்து தொடங்கும் என்பதை நம்புபவன். அந்த வகையில் லவ் மேரேஜ் என்பது எல்லா தரப்பினரும் இயல்பாக கேட்டிருக்கும் பார்த்திருக்கும் வார்த்தை.
நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் யாராவது காதலித்திருப்பார்கள் அல்லது காதலித்துக் கொண்டிருப்பார்கள். காதல் என்பது திருமணம் வரை செல்லக்கூடியது தான். இதனால் இந்தப் படத்திற்கு டைட்டிலே மிகப்பெரிய வெற்றியைத் தரும். இதற்காக இயக்குநருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் ரசிகன் நான். அவரை நீண்ட காலமாக பின் தொடர்கிறேன். அவருடைய இசையில் ஒலிகள் வித்தியாசமாக ரசிக்கக் கூடிய வகையில் இருக்கும். அந்த ஓசை இளைய தலைமுறையினர் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
விக்ரம் பிரபு கடினமாக உழைக்கக்கூடிய நடிகர். பக்கத்து வீட்டு பையனாக இந்த படத்தில் அவர் நடித்திருக்கிறார். இதற்காகவே இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். அவர் வில்லனாகவும் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பரிசோதனை முயற்சியாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். அவர் இயல்பாக நடித்திருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்றார்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், தமிழர்களின் திருமண கலாச்சாரத்தில் மாப்பிள்ளை அழைப்பிற்கான பாடல் மிக அரிதாகத்தான் இருக்கிறது. அந்தக் குறையை போக்குவதற்காக இந்த படத்தில் ஒரு மாப்பிள்ளை அழைப்பிற்கான பாடல் இருக்கிறது. பாடல் நிறைவு பெற்ற பின் இயக்குநர் சண்முகப்பிரியன் என்னை தொடர்பு கொண்டு இந்தப் பாடலில் எங்கேனும் சில வார்த்தைகள் திரும்பத் திரும்ப வர வேண்டும் என விரும்புகிறேன் என்றார். அதன் பிறகு புதிதாக நான்கு வரிகளை சேர்த்த பிறகு பாடலின் தரம் மிக உயர்ந்ததாக இருந்தது. இந்தப் படத்தில் நான் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறேன். ஷான் ரோல்டனுடன் இணைந்து பணியாற்றிய பிறகுதான் எனக்கு சிறந்த பாடலாசிரியருக்கான ஆனந்த விகடன் விருது கிடைத்தது. இதற்காகவும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், இயக்குநர் என்னை சந்தித்து கதை சொன்ன பிறகு கதையைப் பற்றிய ஒரு விசுவல் பேலட்டை ( காட்சி மொழிக்குரிய சித்திரங்கள் ) காண்பித்தார். அதைப் பார்த்தவுடன் இந்த படத்தில் பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.
நான் ஒரு 90ஸ் கிட்ஸ். அதனால் திரையரங்கத்திற்கு செல்லும் போது தமிழ் படம் பார்க்க வேண்டும் என்று தான் செல்வோம். தற்போது பான் இந்திய திரைப்படங்களை பார்க்கிறோம் தென்னிந்திய திரைப்படங்களை பார்க்கிறோம். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தமிழ் படத்தை பார்த்த மன நிறைவை ஏனைய திரைப்படங்கள் ஏற்படுத்துமா? என்று கேட்டால் தெரியாது. வேற்று மொழி திரைப்படங்களும் இங்கு வெற்றி பெறுகிறது. ஆனால் தமிழர்களுக்கு என ஒரு அடையாளம் இருக்கிறது. அந்த அடையாளம் இந்த படத்தின் கதையைக் கேட்கும் போது இருந்தது. இயக்குநர் சண்முக பிரியன் இசைமீது பற்று கொண்டவர். இப்போது அவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஆகிவிட்டார். அவருக்கு திரைத் துறையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் உண்டு.
நான் நூல் தான். அந்த நூலில் கட்டப்பட்ட பூக்கள் தான் மோகன் ராஜாவின் பாடல் வரிகள். இதனால் பூமாலையில் அவர் பூவாக இருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றுவது எப்படி இருக்கும் என்றால் நல்ல குளிரான சூழலில் கதகதப்பான நெருப்பிற்கு முன் உட்காருவது போல் சௌகரியமாக இருக்கும். அவர் தமிழ் சினிமாவில் பாடல்கள் மூலம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு பல தமிழ் வார்த்தைகளையும், தமிழ் தத்துவங்களையும் சாமர்த்தியமாக உள்ளே புகுத்தி வருகிறார். இந்தப் படத்தில் கூட காதலுக்கான அழகான வரிகளை எழுதி இருக்கிறார். இந்தப் படத்தை அனைவரும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு சென்று கண்டு ரசிக்கலாம். இந்தப் படம் சிறந்த படமாக இருக்கும். அனைவருக்கும் திருப்தியை அளிக்கும் படமாகவும் இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

இயக்குநர் சண்முக பிரியன் பேசுகையில், இந்தப் படத்தின் பணிகள் தொடங்குவதற்கு காரணமாக திகழ்ந்த என்னுடைய இயக்குநர் ரா. கார்த்திக்கு நன்றி. 2017 ஆம் ஆண்டின் சினிமாவில் உதவிய இயக்குநராக சேர்வதற்கு முயற்சி செய்தேன். அந்த தருணத்தில் நானும், தயாரிப்பாளர் யுவராஜும் இணைந்து குறும்படத்தினை உருவாக்கினோம். அன்றிலிருந்து இன்று வரை அவருடனான நட்பு தொடர்கிறது. இயக்குநர்கள் ஆனந்த் சங்கர், ரா. கார்த்திக் ஆகியோருடன் பணியாற்றியிருக்கிறேன்.
படத்தின் தயாரிப்பாளரான ஸ்வேதா ஸ்ரீ என்னுடைய நண்பர் தான். அவருடைய வீட்டிற்கு ஒரு முறை சென்ற போது உணவருந்தி கொண்டே படத்தைப் பற்றிய விசயங்களை பேசினேன். நானே தயாரிக்கிறேன் என அவரே ஆர்வத்துடன் முன் வந்தார். இந்தப் படத்திற்கு என்ன பட்ஜெட் என்று அவர் கேட்கவில்லை. ஆனால் நான் கேட்டது எல்லாம் கிடைத்தது. சுதந்திரமாக இந்த படத்தினை உருவாக்கி இருக்கிறேன். இதற்காக தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்திற்கு விக்ரம் பிரபு தான் நாயகன் என தீர்மானித்து விட்டேன். ஆனால் என்னுடைய நண்பர்கள்தான் அவர் ஆக்சன் ஹீரோ, இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பாரா ? என்ற சந்தேகத்தை எழுப்பினார்கள். அப்போதுதான் அவருடைய நடிப்பில் ‘இறுகப்பற்று ‘என்ற படம் வெளியானது. அதில் அவருடைய நடிப்பில் வேறு ஒரு பரிமாணம் வெளிப்பட்டது. இது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. அதன் பிறகு அவரை நேரில் சந்தித்தேன். அவர் நடிக்க சம்மதம் தெரிவித்த உடன் இப்படத்தின் பணிகள் வேகம் எடுத்தது. படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை எந்த கேள்வியும் என்னிடம் கேட்கவில்லை. என் மீது முழு நம்பிக்கை வைத்தார். தற்போது இந்த படத்தை பார்த்த பிறகும் என் மீதான நம்பிக்கை விலகவில்லை என நம்புகிறேன். இவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இசையப்பாளர் ஷான் ரோல்டனை சந்தித்த போதும் விக்ரம் பிரபுவிடம் சொன்னது போல் எனக்கு கதை சொல்ல தெரியாது. திரைக்கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் என்றேன். அதன் பிறகு அவரிடம் ஒன்றரை மணி நேரம் கதையை சொன்னேன். அவரும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் பணியாற்ற தொடங்கினார். அந்தத் தருணத்தில் விக்ரம் பிரபுவுக்கு சிறந்த ஆல்பம் ஒன்றை இந்த முறை நான் தருவேன் என்று என்னிடம் சொன்னார். அந்த வகையில் இதுவரை வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை தொடர்ந்து பாடலாசிரியர் மோகன் ராஜன், நடிகர் ரமேஷ் திலக், விநியோகஸ்தர் சக்தி வேலன், அருள் தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு, சுஷ்மிதா பட் ஆகிய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்கும். கல்யாணம் ஆகாத அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கல்யாணத்திற்காக காத்திருக்கின்ற எல்லா ஆண்களும், பெண்களும் இந்த படத்தை பார்க்கலாம். இந்த சமூகம் வயதுடன் பல விசயங்களை ஒப்பிட்டு பேசிக் கொண்டே இருக்கிறது. அது தொடர்பான கேள்வியையும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. பொதுவாக யாருக்கும் மற்றவர்கள் கேள்வி கேட்டால் பிடிக்காது. அந்த வகையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்றார்.

நடிகர் விக்ரம் பிரபு பேசுகையில், நாங்கள் இங்கே அனைவரும் குடும்பமாக இணைந்து ஒரு குடும்ப படத்தை வழங்குகிறோம்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தருணத்தில் கிடைத்த மகிழ்ச்சி இதற்கு முன் எந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் கிடைத்ததில்லை. நான் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கோபிசெட்டிபாளையம் செல்கிறேன் என்று அப்பாவிடம் சொன்னதும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அத்துடன் மட்டும் நிற்காமல் அங்கு சென்றால் இன்னார் வீட்டுக்கு செல்.. இன்னார் வீட்டுக்கு செல்.. என்று ஏராளமானவர்களை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அவர்களை அங்கு சந்தித்தபோது மகிழ்ச்சி இரட்டிப்பானது.
அந்தத் தருணத்திலேயே இந்த படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற அழுத்தம் எனக்குள் ஏற்பட்டது. இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என நான் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த பட குழுவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றியது.
ஷான் ரோல்டனை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் இந்த படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றினோம். இந்தப் படத்திற்கு இசை மிகப்பெரிய பலம். அவர் அழகாக செய்து இருக்கிறார் நல்ல ஆல்பமாக கொடுத்து சாதித்து இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு மாத காலம் வரை குடும்பமாக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம். இது மறக்க இயலாத அனுபவம். இந்தப் படத்தில், இந்த கதாபாத்திரத்தில், நடிகை சுஷ்மிதாவை தவிர வேறு யாராலும் பொருத்தமாக நடித்திருக்க முடியாது. அந்த அளவிற்கு அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள். தமிழ் சினிமா சார்பில் அவரை மனதார வரவேற்கிறேன்.
இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். லவ் மேரேஜ் படத்திலும் வித்தியாசமாக குடும்பத்தினர் அனைவரும் கண்டு களிக்கும் வகையிலான குடும்ப படமாக உருவாக்கி இருக்கிறோம். எப்போதும் போல் என் மீதும், என் படங்கள் மீதும் அன்பு செலுத்தி, படத்தை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதனைத் தொடர்ந்து ‘லவ் மேரேஜ் ‘ படத்தின் முன்னோட்டத்தை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றபின் வழங்கப்படும் பணி நீட்டிப்பை, மே 31 வரை நீட்டித்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ ஜியோ […]
தமிழகம்ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றபின் வழங்கப்படும் பணி நீட்டிப்பை, மே 31 வரை நீட்டித்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் போது, கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெற்றால், மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணியில் தொய்வு ஏற்படும் என்பதற்காக, ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு இறுதி நாள் வரை (மே-31) பணிநீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை 115-ல், இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இடையில் பணி ஓய்வு பெற்றால், அவர்கள் கல்வி ஆண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரைதான் பணி நீட்டிப்பு பெற முடியும் என்று அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு இருந்ததால் அரசாணை செயல்படுத்தப்படாமல் பழைய நிலையே தொடர்ந்து இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 13.06.25 ல் பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செயல்முறையில், கல்வி ஆண்டின் இடையில் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, கல்வி ஆண்டின் பள்ளி இறுதி வேலைநாள் வரைதான் பணி நீட்டிப்பு வழங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாணை 115 மற்றும் இயக்குநரின் செயல்முறைகள் பல ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற இருக்கும் ஆசிரியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. அரசின் கூற்றுப்படி பார்த்தால், ஆசிரியர்கள் மே மாதம் பணியே செய்வதில்லை என்ற கருத்தை வைத்து, அதனடிப்படையில்தான் அரசாணையும், அதனை தொடர்ந்து செயல்முறையும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை என்றாலும், ஆசிரியர்கள் மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்தல் மற்றும் தேர்ச்சி அறிக்கை தயாரித்து வெளியிடுதல் போன்ற கல்வி செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பிரச்சாரங்கள் மற்றும் வகுப்பறைகள், பள்ளி வளாகத்தை தயார் செய்தல் போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர்.
எனவே, கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டியின் இறுதி நாளான மே-31 வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பெயர் சூட்ட வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை முன்பு தென் தமிழர் கட்சியின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ம. பாலமுரளி தலைமையில் […]
மாவட்ட செய்திகள்ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பெயர் சூட்ட வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை முன்பு தென் தமிழர் கட்சியின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ம. பாலமுரளி தலைமையில் வருகிற ஜுன் 23 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அக்கட்சியின் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த ஆர்பாட்டத்தில், தாய்தமிழர் கட்சியின் தலைவர் பி.ம. பாண்டியன், த.மு.மு.க மாவட்ட செயலாளர் கே.அப்துல் ரஹீம், தமிழர் முன்னனியின் பொதுச்செயலாளர் இமயம், சரவணன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர். மேலும் பல்வேறு சமுதாய இயக்க நிர்வாகிகள், அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ், கீதா கைலாசம் மற்றும் பலர் […]
சினிமாமெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ், கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்களும் நல்ல படைப்பு என்ற விமர்சனத்தை வழங்கி வருகிறது. இதனால் இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் ‘லொள்ளு சபா’ சாமிநாதன் பேசுகையில், இந்தப் படத்தில் என்னுடைய வழக்கமான பாணியில் நடிக்காமல் இயக்குநர் சொன்னதை கேட்டு நடித்தேன். படப்பிடிப்பு தளத்திற்கு மதியம் ஒரு மணிக்கு சென்றேன். இரண்டு மணிக்கு காட்சிகளை படமாக்க தொடங்கினர். நான்கு மணிக்கு என்னுடைய பங்களிப்பு நிறைவு என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு படத்திற்கு பின்னணி பேசுவதற்காக சென்றேன். அங்கும் எனக்கு வித்தியாசமான அனுபவம் தான் கிடைத்தது. இப்படத்தின் இயக்குநரை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் ரசனையுடன் சொல்லிக் கொடுத்தார் என்றார்.

இசையமைப்பாளர் கே. சி. பால சாரங்கன் பேசுகையில், படத்தை தங்களுடைய படமாக நினைத்து அனைவரிடமும் பகிர்ந்து கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. இந்த படத்திற்கு சிறப்பான திரையரங்க அனுபவத்தை ஒலி மூலம் வழங்கிய தொழில்நுட்பக் கலைஞர் ரூபனுக்கு நன்றி. என்றார்.
நடிகர் விஷ்வா பேசுகையில், இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி. வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் வித்தியாசமான அனுபவங்களை சந்திக்கிறேன். எனக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. குறிப்பாக என் மீது நம்பிக்கை வைத்து தினேஷ் கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் .

நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் பேசுகையில், சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் எங்களின் கனவு பெரிதாக இருந்தது. கனவும், ஆசையையும் வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொடங்கும்போது பேப்பரில் இருந்த இந்த கதையை திரைக்கு கொண்டு வந்து, அந்த உணர்வை அனைவரும் உணர்ந்து ரசித்து பாராட்டும் போது அதை சொல்வதற்கு வார்த்தை இல்லை. நாங்கள் அனைவரும் இணைந்து நடித்த ஒரு படத்திற்கு அனைவரும் தங்களின் இதய பூர்வமான ஆதரவை தெரிவித்ததை நேரில் பார்க்கும் போது உற்சாகமாக இருந்தது. ரசிகர்கள், ரசிகைகள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தை வெளியிட்ட ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், இந்த படத்தை பார்த்து பாராட்டிய திரையுலக பிரபலங்களுக்கும் நன்றி என்றார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விநியோகிஸ்தர் குகன் பேசுகையில், இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவும், வரவேற்பும் மிக அதிகம். இதற்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் கோடான கோடி நன்றிகள். இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டிய திரையுலக பிரபலங்களுக்கு நன்றி. மெட்ராஸ் மேட்னி’ நடுத்தர குடும்பத்து மக்களின் கதை. இதில் என்ன கதையை இவர்கள் சொல்ல வருகிறார்கள்..? இது ஒரு சாதாரண கதை. ஆனால் இதை ஒரு திரைப்படமாக உருவாக்குவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். மேலும் இந்த கதை மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்.
சாதாரண கதையை, அசாதாரணமான திரைக்கதை மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருந்தார். அதனால் தான் இந்தப் படத்தை பார்த்த மக்கள் அனைவரும் பாராட்டினார்கள். படத்துடன் உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்டார்கள். படம் வெளியான பிறகு படத்தைப் பார்த்த ரசிகர்களிடத்தில் அதன் தாக்கம் அதிகம் இருந்தது. படத்தின் கதையை கேட்டு நடித்த நடிகர்கள் அனைவரும் இதனை எப்படி புரிந்து கொண்டிருப்பார்கள். அதை திரையில் வழங்கிய விதம் இன்னும் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.
இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என அனைவரும் புதுமுக கலைஞர்கள். சினிமா மீது அர்ப்பணிப்புடன் கூடிய ஆர்வத்துடன் இருப்பவர்கள். இதன் காரணமாகத்தான் இவர்களால் இப்படி ஒரு படைப்பை உருவாக்க முடிந்தது என நான் நினைக்கிறேன். இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனத்துடன் இணைந்து பயணித்த திரையரங்கு உரிமையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் நிறுவனம் கலந்து கொள்ளும் மூன்றாவது நன்றி அறிவிப்பு விழா இது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் மூன்று படங்களில் பணியாற்றியவர்கள் அனைவரும் புதுமுக படைப்பாளிகள் என்பது தான் என்றார்.

இயக்குநர் கார்த்திகேயன் மணி பேசுகையில், மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படத்தை ஏன் முதலில் இயக்கினேன் என்றால்.. இது வரை சொல்லப்படாத ஒரு கதை. உண்மையான ஹீரோ யார் என்பதை சொல்லும் கதை இது. தான் முன்னேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் ஓயாமல் ஓடும் நம்முடைய அப்பா அம்மாக்கள் தான் என்னைப் பொறுத்தவரை ரியல் ஹீரோ.
அவர்களுடைய கதையை ஒரு திரையரங்க அனுபவத்துடன் கூடிய கதையாக சொல்ல வேண்டும் என நினைத்தேன். இந்த நோக்கத்தில் உருவானது தான் இந்த திரைப்படம்.
புது தயாரிப்பு நிறுவனம், புது இயக்குநர், புது தொழில்நுட்பக் கலைஞர்கள், சின்ன பட்ஜெட் படம், நாங்கள் எளிதாக காணாமல் போயிருக்கலாம். அதற்கான வாய்ப்பும் அதிகம் இருந்தது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எனும் பிரபலமான நிறுவனம் எங்களுடன் இணைந்ததால் இந்த வெற்றி சாத்தியமானது. இதற்காக அந்த நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு மற்றும் குகனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகர் காளி வெங்கட் பேசுகையில், இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசரான அபிஷேக் ராஜா மூலம் இயக்குநர் அறிமுகமாகி கதையை சொன்னார். அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தை சொன்னார். அது என்னுடைய தந்தையை நினைவு படுத்தியது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்தப் படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை தெரிந்து கொள்வதற்காக திரையரங்கத்திற்கு சென்ற போது, சிலர் என்னை கட்டிப்பிடித்து அழுதனர். என் சட்டை ரசிகர்களின் கண்ணீரால் நனைந்தது. இந்த அனுபவம் புதிதாக இருந்தது மறக்க முடியாததாகவும் ஆகிவிட்டது. நடிக்கும்போது அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. கலையில் மட்டும் தான் அழுவதை கூட ரசிக்க முடியும். இது சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். நான் இதற்கு முன்பு அதிகமாக பார்த்த படம் கார்கி. தற்போது அதைவிட அதிகமாக பார்த்த படம் மெட்ராஸ் மேட்னி. ஏனெனில் இந்தப் படத்தின் ஒலி அமைப்பு மிகச் சிறப்பாக இருந்தது.
ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை படமாக்குவதில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு இயக்குநர் இந்த படத்தை பதிலாக அளித்திருக்கிறார். இதனால் நான் இயக்குநரை மனதார பாராட்டுகிறேன். மேலும் இந்தக் கதையை.. அவர் சொன்ன விதத்தை நான் முக்கியமானதாக பார்க்கிறேன். ஒரு கவிதையை மொழிபெயர்த்து அதனை திரைப்படமாக உருவாக்குவது போல் இருந்தது. இயக்குநர் கார்த்திகேயன் மணி தொடர்ந்து இது போன்ற படங்களையும் இயக்க வேண்டும். மேலும் இந்தப் படம் ஏராளமானவர்களுக்கு புது நம்பிக்கையை அளித்திருக்கிறது. இதற்காகவும் இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி கிஷோர், ரோஷினி, ஜார்ஜ் மரியம் உள்ளிட்டோர் நடிப்பில், கார்த்திகேயன் மணி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “மெட்ராஸ் மேட்னி”. கதைப்படி.. ஆட்டோ ஓட்டுநரான காளி வெங்கட் மனைவி மற்றும் மகள், […]
விமர்சனம்மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி கிஷோர், ரோஷினி, ஜார்ஜ் மரியம் உள்ளிட்டோர் நடிப்பில், கார்த்திகேயன் மணி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “மெட்ராஸ் மேட்னி”.
கதைப்படி.. ஆட்டோ ஓட்டுநரான காளி வெங்கட் மனைவி மற்றும் மகள், மகனுடன் அன்றாட கிடைக்கும் வருமானத்தை வைத்து சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தான் பட்ட கஷ்டங்களை தனது பிள்ளைகள் படக்கூடாது என நன்றாக படிக்க வைக்கிறார். தனது மகள் வேலைக்குப் போனதும், குடும்ப சுமையை பிள்ளை தலையில் சுமத்திவிட்டோமே என, மனம் வருந்தி மகளின் திருமணத்திற்கு ஏதாவது பணம் சேர்க்க வேண்டும் என கார் ஓட்ட முயற்சிக்கிறார்.

மகள் தேர்வு செய்த பையனை வேண்டாம் என உதறிய வருத்தத்தில், வேறு ஒருவரை தேர்வு செய்து மகளை பார்க்கச் சொல்கிறார். பையனின் குடும்பத்தினர் மகளின் மனம் வருந்தும் படியாக சில தகவல்களை கேட்கின்றனர்.
அதன்பிறகு என்ன ஆனது என்பது மீதிக்கதை…

அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை கண்முன்னே நிறுத்திய இயக்குநர், படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். வந்த காட்சிகளே மீண்டும் மீண்டும் வருவதால் எப்போது படம் முடியும் என்கிற மனநிலை உருவாகிறது.
காளி வெங்கட் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றிருக்கிறார். அதேபோல் அவரது மனைவியாக நடித்துள்ள ஷெல்லி கிஷோர் சிறப்பாக நடித்திருக்கிறார். மகள் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ரோஷினி, மகனாக நடித்துள்ள இருவருமே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ராஜ் கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், கமல், அபிராமி, த்ரிஷா, சிம்பு, ஐஸ்வர்ய லெட்சுமி, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், பகவதி பெருமாள், நாசர், வடிவுக்கரசி, வையாபுரி உள்ளிட்டோர் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “தக் லைஃப்”. […]
விமர்சனம்ராஜ் கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், கமல், அபிராமி, த்ரிஷா, சிம்பு, ஐஸ்வர்ய லெட்சுமி, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், பகவதி பெருமாள், நாசர், வடிவுக்கரசி, வையாபுரி உள்ளிட்டோர் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “தக் லைஃப்”.
கதைப்படி.. டெல்லியில் சக்திவேல் ( கமல்ஹாசன் ) பெரிய கேங்ஸ்டராக இருக்கிறார். அவரது அண்ணன் நாசர், ஜோஜூ ஜார்ஜ், பகவதி பெருமாள் ஆகிய மூவரும் சக்திவேலுக்கு துணையாக இருக்கிறார்கள். இவரை சுட்டுக்கொள்ள வில்லன் மஞ்ச் ரேக்கர், போலீஸ் துணையிடன் திட்டம் தீட்டி, போலீஸ் கமலை சுற்றி வளைக்க, எதிர் தாக்குதலில் பேப்பர் போட வந்தவர் குண்டு பாய்ந்து பழியாகிறார். அருகில் பேப்பர் போட்டுக்கொண்டிருந்த சிறுவன் சிம்பு கதறி அழுகிறான்.

பின்னர் அந்தப் பையனை கமல் வளர்க்கிறார். காலப்போக்கில் கமலும் தொழிலில் அபார வளர்ச்சி அடைகிறார். கமல் செய்யும் பல சம்பவங்களுக்கு சிம்புவம் துணையாக இருக்கிறார். இவர்களின் சாம்ராஜ்யத்தை அழிக்க எதிர் அணியினர் தீட்டும் திட்டத்தில், கமல் சிறை செல்ல நேரிடுகிறது. அப்போது கமலின் இடத்திற்கு வர நாசர் ஆசைப்படுகிறார். அவர் சிம்புவின் துணையோடு திட்டம் தீட்டுகிறார். இந்நிலையில் தன் மகன் போல் வளர்த்த சிம்புவும் கமலுக்கு எதிராக, கமலை பழிவாங்க நினைக்கிறார்.

பின்னர் நாசரின் திட்டம் நிறைவேறியதா ? சிம்பு கமலை பழிவாங்க தீட்டும் திட்டம் என்னானது ? என்பது மீதிக்கதை..
வழக்கமான கேங்ஸ்டர் கதைதான் என்றாலும், மணிரத்தினத்தின் மேக்கிங் பிரமிக்க வைக்கிறது. கமலின் அசாத்தியமான நடிப்பு, சிம்பு கூட்டனி, அபிராமி, த்ரிஷா கதாப்பாத்திரங்கள் சிறப்பு. இடையிடையே நிகழ்கால டெல்லி அரசியல் வசனங்கள் என மணிரத்னம் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
லெட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு, இயக்கத்தில், விமல், சாயாதேவி, எம்.எஸ் பாஸ்கர், அருள்தாஸ், கூல் சுரேஷ், ஶ்ரீ ரஞ்சனி, மணோஷ் குமார், காதல் சுகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “பரமசிவன் பாத்திமா”. கதைப்படி.. திண்டுக்கல் மாவட்டத்தில் […]
விமர்சனம்லெட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு, இயக்கத்தில், விமல், சாயாதேவி, எம்.எஸ் பாஸ்கர், அருள்தாஸ், கூல் சுரேஷ், ஶ்ரீ ரஞ்சனி, மணோஷ் குமார், காதல் சுகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “பரமசிவன் பாத்திமா”.
கதைப்படி.. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமம் ஒன்றில் இந்து, முஸ்லிம், கிருஸ்தவம் என மூன்று பிரிவுகளாக பிரிந்து தனித்தனி குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்து இளைஞர்களும், கிருஸ்தவ இளைஞர்களும் அடிக்கடி மோதலில் ஈடுபடுகின்றனர். பின்னர் கிருஸ்தவ குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் ஒருவரையும், இந்துக்கள் வாழும் குடியிருப்பில் ஒரு இளைஞரையும் பரமசிவன் ( விமல் ), பாத்திமா ( சாயாதேவி ) இருவரும் கொலை செய்கிறார்கள். இதனால் இரண்டு குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இருவரும் மேலும் சிலரை கொலைசெய்ய திட்டமிடுகின்றனர்.

இதற்கிடையில் இரண்டு குடியிருப்பு மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தி, கொலையாளியை கண்டுபிடிக்க போலீஸ் முயற்சி செய்கிறது. ஆனாலும் குற்ற சம்பவங்களும், மோதலும் தொடர்கிறது. கொலை செய்யப்பட்டவர்களுக்கும் பரமசிவன், பாத்திமா ஜோடிக்கும் என்ன சம்பந்தம் ? எதற்காக கொலை செய்கிறார்கள் என்பது மீதிக்கதை…

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், பிறப்பால் அனைவரும் சமம், மதங்களால் பிளவுபட்டு சண்டையிடாமல், மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தியதோடு, வசதி வாய்ப்புகளுக்காக சிலர் மதம் மாறினாலும், மனதளவில் மாறவில்லை என்பதையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குநர்.
விமல் பரமசிவன் கதாப்பாத்திரத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் சாயா தேவியும் சிறப்பாக நடித்திருக்கிறார். எம்.எஸ் பாஸ்கர் ஃபாதர் கதாப்பாத்திரத்தில் உடல், மொழி அனைத்திலும் கச்சிதமாக பொருந்தி, கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.