விஷ்ணு விஷால் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில், ருத்ரா, விஷ்ணு விஷால், மிதிலா பால்கர், கருணாகரன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில், கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஓஹோ எந்தன் பேபி”. கதைப்படி.. சினிமாவில் இயக்குநராகும் கனவோடு உதவி இயக்குநரான ருத்ரா பிரபலமான […]
விமர்சனம்
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “உசுரே” திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, சுப்ரமணிய சிவா, வாலி, நடிகர் மிர்ச்சி சிவா இசையமைப்பாளர் சி சத்யா, லோகேஷ் […]
சினிமா
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயாரிப்பில், எம். கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘யாதும் அறியான்’ படத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், […]
சினிமா
இந்திய திரைத்துறையில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர், இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட […]
சினிமாஇந்திய திரைத்துறையில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர், இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் சார்பில் ஆதித்யாராம் இணைந்து தயாரித்துள்ளனர்.
‘கேம் சேஞ்சர்’ படத்தைத் தொடர்ந்து அதிக தமிழ் திரைப்படங்கள் மற்றும் பான் இந்தியா திரைப்படங்களை இணைந்து தயாரிக்க உள்ளதாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் இணைந்து அறிவித்துள்ளன. இந்த கூட்டணி முதல் முறையாக ‘கேம் சேஞ்சர்’ படத்திற்காக இணைந்துள்ளது. இது தொடர்பான நிகழ்வில் தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் ஆதித்யாராம் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜூ, 21 ஆண்டுகால பயணத்தில் இது எனது 50வது திரைப்படம் ஆகும். மூன்று ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ஷங்கர் என்னிடம் கூறிய கதைக்களம் எனக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. என் நண்பர் ஆதித்யாராம் நான்கு திரைப்படங்களை தெலுங்கு மொழியில் தயாரித்துள்ளார், அதன்பிறகு சென்னையில் அவர் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வந்தார். நான் அவரிடம் ‘கேம் சேஞ்சர்’ என்ற தெலுங்கு படத்தில் பணியாற்றி வருவதாக கூறி, இருவரும் இணைவது குறித்து பரிந்துரைத்தேன். ‘கேம் சேஞ்சர்’ மட்டுமல்ல, நாங்கள் தமிழ் மற்றும் பான் இந்தியன் திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்ற இருக்கிறோம்.
முதற்கட்டமாக லக்னோவில் வைத்து நவம்பர் 9 ஆம் தேதி திரைப்படத்தின் டீசரை வெளியிடுகிறோம். அதன்பிறகு அமெரிக்கா மற்றும் சென்னையில் வைத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஜனவரி மாத முதல் வாரத்தில் தெலுங்கானாவில் ஒரு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்தப் படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
எல்லா இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறக்கூடிய அம்சங்கள் இந்தப் படத்தில் உள்ளன. எப்போதுமே ஷங்கர் படங்கள் விசேஷமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். விசேஷ தீம் மட்டுமின்றி இந்தப் படத்தில் ஏராளமான பொழுதுபோக்கு விஷயங்களும் உள்ளன. ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ராம் சரண் நடிக்கும் படம் இது என்றார்.

ஆதித்யாராம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யாராம் பேசும் போது, நாம் பேசக் கூடாது, நமது வேலை தான் பேச வேண்டும்’ என்பதை நம்புவதால், நான் பொதுவாக யூடியூப் அல்லது வீடியோ நேர்காணல்கள் கொடுப்பதில்லை. எனினும், சூழ்நிலைகள் மாறிவிட்டதாலும், தில் ராஜூ கொடுத்த ஊக்கம் காரணமாகவும், இந்த மேடையில் நான் உரையாற்றிக் கொண்டு இருக்கிறேன்.
எங்கள் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே பிரபாஸ் நடித்த படம் உள்பட நான்கு தெலுங்கு திரைப்படங்களை தயாரித்துள்ளது. அதன்பிறகு, நான் ரியல் எஸ்டேட் மீது ஆர்வம் கொண்டு, திரைப்படத் துறையில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டேன். தற்போது தில் ராஜூன் ஆதரவுக்கு நன்றி கூறி, ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்துடன் கம்பேக் கொடுப்பதில் சுவாரஸ்யமாக இருக்கிறேன். இருவரும் அதிக தமிழ் மற்றும் பான் இந்தியன் படங்களை எடுக்க ஆர்வமாக இருக்கிறோம். தற்போது நாங்கள் சரியான இயக்குநர்கள் மற்றும் கதைகளை தேர்வு செய்து வருகிறோம். தில் ராஜூவிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவர் சரியான கதை மற்றும் இயக்குநரை தேர்வு செய்யும் விதம் தான். இத்துடன் அவரது அசாத்திய தயாரிப்பு பணிகள் என்னை கவர்ந்துள்ளது. அதிகளவு பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களை கொண்ட வெகு சில தயாரிப்பாளர்களில் அவர் ஒருவர். ஆதித்யாராம் மூவிஸ் அவருடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் கூட்டணி அமைக்க ஆர்வம் மற்றும் பெருமை கொண்டுள்ளது என்றார்.
நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னை பிரசாத் […]
சினிமாநகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் நகுல், இயக்குநர் பாலாஜி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாலாஜி பேசும்போது, இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சசிகுமார் வெளியிட்டுள்ளார். எனது முதல் படத்திற்கும் அவர்தான் வெளியிட்டார், அவரிடம் நான் உரிமையாகக் கேட்டபோது அவர் வெளியிட்டு உதவியுள்ளார். அந்த அளவிற்கு நான் அவரிடம் உரிமை எடுத்துக் கொள்வேன். இந்தப் படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. நகுலுக்கு இதில் நல்ல பெயர் கிடைக்கும். இதில் நடித்துள்ள இன்னொரு நடிகர் அலெக்ஸ். அவருக்கும் நல்ல பெயர் கிடைக்கும். மூன்று காலகட்டத்தில் மூன்று தோற்றங்களுக்கு அவர் மாற வேண்டி இருந்தது. அவர் அவ்வளவு உழைத்துள்ளார். நகுலைப் பல படங்களில் பார்த்திருக்கிறோம். இதுவரை பார்த்து வந்த நகுல் வேறு. இதில் வேறு மாதிரியாக நகுலைப் பார்ப்பார்கள். டி-3 படம் முடித்த பிறகு எனக்கு தோன்றியது ஒன்றுதான், இது தப்பான படம் இல்லை என்று தோன்றியது. அது கோவிட் கால கட்டத்தில் போராடி எடுத்த படம்.

ஒரு படம் வரவில்லை, வெற்றி பெறவில்லை என்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கும். அதற்கு முக்கியமான காரணம் படத்தை நல்ல விதமாக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். அது மிகவும் முக்கியம். ஏனென்றால் கடவுளுக்கே விளம்பரம் தேவைப்படும் காலம் இது. இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படத்தையும் நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதில் நாட்டார் கதையை வைத்து ஒரு திரில்லராக உருவாக்கி இருக்கிறோம். இந்த திரில்லர் வேறு மாதிரியாக இருக்கும். முதலில் இந்தப் படத்தை எடுக்கலாமா என்று யோசித்தபோது காந்தாரா படத்தின் வெற்றி எனக்குப் பெரிதும் நம்பிக்கை அளித்தது. படத்தில் ஆங்கிலத் தலைப்பை வைத்ததைப் பற்றிக் கேட்கிறார்கள். படத்திற்குப் பொருத்தமாக இருப்பதால் தான் அப்படி வைத்தோம். வேறு வழி இல்லை. மற்றபடி தமிழில் வைக்கக் கூடாது என்று எந்த உள்நோக்கமும் கிடையாது.
என்னைப் பொறுத்தவரை ஒரு இயக்குநருக்கு முடியாது என்று எதையும் சொல்லக்கூடாது என்று நினைப்பவன். நகுல் ஒரு கதாநாயகனுக்குரிய நடிகர். ஆனால் அவரிடம் இருந்து அந்த கதாநாயகத்தனத்தை இன்னும் சரியாக வெளியே கொண்டு வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நகுல் இந்தப் படத்தில் சொன்னபடியெல்லாம் கேட்டு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவருக்குக் கதை தெரியுமா என்று கூடத் தெரியவில்லை. அந்த அளவிற்கு அவர் ஒத்துழைப்பு கொடுத்தார். இந்தப் படம் எல்லா காவல் தெய்வங்களையும் நினைவுபடுத்தும். சிறுவயதில் கேட்ட கேள்விப்பட்ட அனுபவங்களை வைத்துத்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். பட்ஜெட் படமாக ஆரம்பித்தது ஆனால் செலவு ஏழரைக் கோடியை தாண்டி விட்டது. இந்தப் படம் நிச்சயமாக தப்பு பண்ணாது. அனைவருக்கும் பிடிக்கும். எனவே இந்தப் படத்தின் மீது அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றார்.

நடிகர் நகுல் பேசும் போது.. இதில் நான் போலீசாக நடித்திருக்கிறேன். நான் சினிமாவிற்கு வந்து இப்போதுதான் முதல் முறையாக இப்படி நடிக்கிறேன். எனவே முதலில் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. எனக்குச் சின்ன வயதில் இருந்து ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசை. காக்கி யூனிபார்ம் மீது எனக்கு ஒரு காதல் உண்டு. நான் நடிக்க வந்து 20 ஆண்டு ஆகிவிட்டது என்று இங்கே கூறினார்கள். ஆனால் நான் எதையுமே செய்யாதது போல் இருக்கிறது. இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. நான் எந்த ஒரு யோசனையும் இல்லாமல் தான் நடிக்க வந்தேன். இப்படி நடிக்க வேண்டும் அப்படி நடிக்க வேண்டும் என்றெல்லாம் கனவு அப்போது இல்லை. படிப்படியாக இப்போது 20 ஆண்டு கடந்து விட்டேன். இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறேன். சினிமா எனது வாழ்க்கை. நான் கடந்த காலத்தை பற்றிக் கவலைப்படுவதில்லை. அதை நினைத்துப் பார்ப்பதில்லை, இன்றைய இந்தத் தருணத்தை மட்டுமே இனிமையாக்க வேண்டும் என்று தான் நினைப்பேன். எதிர்காலத்தைப் பற்றி நான் நினைப்பதில்லை, ஒவ்வொரு நாளும் சிறு சிறு முன்னேற்றத்தைக் காண்கிறேன். ஒவ்வொரு நாளும் கேமரா முன் நிற்கும்போது நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. சிறுவயதில் யூனிபார்ம் மீது எனக்கு ஒரு ஆசை ஒரு கிரேஸ் இருந்தது. ராணுவம் போலீஸ் மூவி செய்ய ஆசை. ஏற்கெனவே கமல், சூர்யா என்று எல்லாம் ஒரு அடையாளமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சினிமாவில் போலீஸ் என்றால் ராகவன், அன்புச் செல்வன் என்று பாத்திரங்கள் நினைவுக்கு வருகின்றன. அந்த வரிசையில் இளம் பாரியும் இருக்கும். என் மீது நம்பிக்கை வைத்து பாலாஜி அழைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் பட்ஜெட்டை விட ஸ்கிரிப்டை முக்கியமாகப் பார்ப்பேன். நல்ல கதைதான் படத்திற்கு முக்கியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. நான் முடிந்த அளவிற்கு அனைவரையும் கவரும்படி இதில் நடித்துள்ளேன் என்று நம்புகிறேன். நான் இயக்குநர் பாலாஜியிடம் நிறைய கேள்வி கேட்பேன். எனக்குத் தெளிவாகும் வரை, விடமாட்டேன் கேட்டுக் கொண்டே இருப்பேன். ஆனால் பாலாஜி எப்போது கேட்டாலும் பதில் சொல்வதில் தெளிவாக இருந்தார். படப்பிடிப்பின் போது தனக்குத் தேவையானதை வாங்கிக் கொள்வதில் அவர் சமரசம் இல்லாமல் இருந்தார். அப்படியே இப்படத்தை முடித்து இருக்கிறார். திரைக்கதை நடிப்பு எல்லாமும் நன்றாக வந்திருக்கிறது. இது மாஸ் ஆக்சன் படம் போல் இல்லாவிட்டாலும் பாபநாசம் படத்தைப் பார்த்த அந்த உணர்வு ஏற்படும்.
என்னை நினைத்தால் எனக்கே வேடிக்கையாக இருக்கும். நான் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவன். நான் ஒரு தனிமை விரும்பி, யாரிடமும் அதிகம் பேச மாட்டேன். ஆனால் உடன் பேசுவரின் மனநிலை அறிந்து அதன்படி பழகுவேன். நான் முன்பே சொன்னேன் ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்று. அப்படிச் சாதாரணமாக நினைத்து விட முடியாது. அதற்கு ஒரு தைரியம் இருக்க வேண்டும்; லட்சியம் இருக்க வேண்டும்; தேசப்பற்று இருக்க வேண்டும். உடல் தகுதி வேண்டும்.

இப்படிப்பட்ட பாத்திரத்தில் நடிக்க,
யூனிபார்ம் போட்டால் மட்டும் போதாது. ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் ஆக இருந்தால் கூட அந்த யூனிஃபார்முக்கு ஒரு மரியாதை, சக்தி இருக்கிறது. அதை அணிந்த பிறகு வேறு மாதிரியான கம்பீர உணர்வு நமக்கு வரும். அதை நடித்த போது உணர்ந்தேன். நம்மைப் பார்த்து ஒருவர் சல்யூட் அடிக்கும் போது நாம் உணர்வது வேறு வகையிலானது. நான் இந்தப் பாத்திரத்தில் நடிக்கும் போது சிரித்ததே கிடையாது. யூனிஃபார்ம் அணிந்தவர்களின் குறிப்பாக போலீஸ் காவல்துறையின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்கள் எப்படி வேலையே வாழ்க்கையாக இருக்கிறார்கள். அது சுலபமானதல்ல, அவர்களுக்கு விடுமுறையே கிடையாது எங்கும் எப்போதும் இருப்பார்கள். 100 க்குப் போன் செய்தால் ஐந்து நிமிடத்தில் பேட்ரல் வண்டி வந்து விடுகிறது. ஸ்காட்லாந்து யார்டுக்குப் பிறகு தமிழ்நாடு போலீஸ் தான் என்பார்கள். அப்படி நான் இந்த இளம்பாரி கதாபாத்திரத்தில் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் அந்தப் பெயரையே நேசிக்கிறேன். காதலுடன் நான் சினிமாவில் இருக்கிறேன் ரசித்து ரசித்து செய்கிறேன். இன்னும் என்னவெல்லாமோ செய்ய வேண்டும் என்று ஆசைகள் உள்ளுக்குள் நிறைய உள்ளன. இந்தப் படத்தில் நடித்த போது ஒரு கிரிக்கெட் டீம் போல இருந்தோம். வெங்கட் பிரபுவின் சென்னை 28 குழுவினர் போல் நாங்கள் இருந்தோம். இதில் புதிது புதிதாக நடித்தவர்கள் எல்லாம் ஊரிலிருந்து வந்திருக்கிறோம் சினிமா வெறியோடு வந்திருக்கிறோம் என்றார்கள். அப்படி அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்கள், பணியாற்றினார்கள் என்றார்.
நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி ஆகியோருடன் படத்தில் நடித்தவர்களும் சின்னத்திரை, யூடியூப் என்று தனக்கான தனிப்பாதையில் பயணம் செய்து வளர்ந்து வரும் கலைஞர்களான
அலெக்ஸ் , அந்தோணி, கோதை சந்தானம், சரண், கேசவன், பிரதீப், சிவா ருத்ரன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள். இந்தப் படம் விரைவில் வெளிவர உள்ளது.
டி-3 படத்திற்கு பட்ட கடனுக்காகத் தனது காரை விற்றிருந்தார் இயக்குநர் பாலாஜி. இந்தப் படத்தில் இலங்கையில் இருந்து வந்து நடித்திருந்த நடிகர் சரண், அந்தக் காரை வாங்கியிருந்த வரிடம் தேடிப் பிடித்து மீட்டு எதிர்பாராத வகையிலான தனது அன்புப் பரிசாக அந்தச் சாவியை இயக்குநர் பாலாஜியிடம் அளித்தார். பாலாஜி நெகிழ்ச்சியால் கண்ணீர் விட்டார், விழாவுக்கு வந்திருந்த அனைவரும் ஒருகணம் ஸ்தம்பித்து நின்றனர்.
ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நட்ராஜ், சரண்யா ராவ் ரமேஷ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், ராஜேஷ் எம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பிரதர்”. கதைப்படி.. வழக்கறிஞர் படிப்பை பாதியிலேயே […]
விமர்சனம்ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நட்ராஜ், சரண்யா ராவ் ரமேஷ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், ராஜேஷ் எம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பிரதர்”.
கதைப்படி.. வழக்கறிஞர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, சட்டம் பேசி ஊர் வம்பை விலைக்கு வாங்கி திரிகிறார் கார்த்திக் ( ஜெயம் ரவி ). இவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள பிரச்சினை சம்பந்தமாக வழக்குத் தொடர்ந்ததால் தாய், தந்தைக்கு பிரச்சினை ஏற்படுகிறது.அங்கு இதனால் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் அவரது தந்தை. அவரைப் பார்ப்பதற்காக ஊட்டியிலிருந்து வரும் அவரது அக்கா பூமிகா, கார்த்தியை திருத்துவதற்காக ஊட்டிக்கு அழைத்துச் செல்கிறார்.

அக்கா வீட்டுக்கு சென்றதும் கார்த்தியின் செயல்பாடுகளால், அந்தக் குடும்பமே அமைதி இழந்து சின்னாபின்னமாகிறது. அப்போது அவரது தாய், தந்தை அங்கு வருகிறார்கள். கார்த்திக் பற்றிய சில உண்மைகளைக் கூறி, குடும்பத்தை ஒன்று சேர்க்காமல் என்னை அப்பா என அழைக்கக் கூடாது எனக்கூறி சென்னைக்கு செல்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார் கார்த்திக். அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா இல்லையா என்பது மீதிக்கதை..

குடும்பத்தில் பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், குடும்ப உறுப்பினர் பேசினால் ஏற்படும் சிக்கல்களை சொல்வதற்காக, எங்கெங்கோ செல்கிறது திரைக்கதை. ராஜேஷின் முந்தைய படங்களை ஒப்பிடுகையில், இந்தப் படத்தில் சுவாரஸ்யம் குறைவுதான்.
கலகலப்பு, லூட்டி, எமோஷன் என நடிப்பில் வித்தியாசங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெயம் ரவி. பிரியங்கா மோகன், நட்டி நட்ராஜ், சரண்யா, ராவ் ரமேஷ் உள்ளிட்ட நடிகர், நடிகையர் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். விடிவி கணேஷ் வரும் காட்சிகளில் சிரிக்கக் தோன்றுகிறது. மற்றபடி ராஜேஷ் படம் என்றால் காமெடி இருக்கும் என நினைத்துச் சென்றால் ஏமாற்றமே !
ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்துள்ள படம் “அமரன்”. கதைப்படி.. சென்னையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த முகுந்த் வரதராஜன் ( சிவ கார்த்திகேயன் ) ராணுவத்தில் சேர விரும்புகிறார். அவரது தாய் கீதாவுக்கு ( கீதா கைலாசம் […]
விமர்சனம்ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்துள்ள படம் “அமரன்”.
கதைப்படி.. சென்னையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த முகுந்த் வரதராஜன் ( சிவ கார்த்திகேயன் ) ராணுவத்தில் சேர விரும்புகிறார். அவரது தாய் கீதாவுக்கு ( கீதா கைலாசம் ) மகன் ராணுவத்துக்கு செல்வதில் விருப்பம் இல்லை. ஆனால் முகுந்த் வரதராஜனின் காதலி இந்து ரெபேக்கா ( சாய் பல்லவி ) துணை நிற்கிறார். பின்னர் ராணுவத்தில் சேர்ந்து காஷ்மீர் சென்று தனது திறமையின் காரணமாக கேப்டன், மேஜர் என உயர் பதவிகளை அடைகிறார்.

கேரளாவிலிருந்து சென்னையில் படிக்க வந்த இடத்தில் முகுந்துடன் ஏற்பட்ட காதலை இந்துவின் பெற்றோர் ஏற்க மறுக்கிறார்கள். முகுந்த் ராணுவத்தில் பணிபுரிவதால் மகளின் வாழ்க்கையை இழக்க நேரிடும் என்பதால் மறுக்கிறார்கள். பின்னர் இருவரும் சமாளித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கிறது.
பின்னர் காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்க RR -44 தனிப்படைக்கு தலைமை பொறுப்பில் நியமிக்கப்படும் மிகுந்த், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் சாதித்தாரா என்பது மீதிக்கதை..

காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்டு வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்திருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. முகுந்த், இந்து இருவருக்குமான காதல், உணர்வுப்பூர்வமான பரிமாற்றங்கள் என அனைத்து காட்சிகளும் ரசிக்கும் விதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். காஷ்மீர் எல்லையில் ராணுவம் எப்படி இயங்குகிறது, அங்கிருக்கும் சவால்கள், தீவிரவாதத்தால் அங்குள்ள மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை, நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.
சிவ கார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் “அமரன்” திரைப்படம் மறக்க முடியாத திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றே சொல்லலாம். அதேபோல் காதல், மனைவி, தாய் என பல்வேறு பரிமாணங்களில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சாய் பல்லவி. படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகையர் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், வெங்கட் அட்லூரி இயக்கத்தில், துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி, ராம்கி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “லக்கி பாஸ்கர்”. கதைப்படி.. மும்பையில் தனியார் வங்கியில் காசாளராக பணிபுரியும் பாஸ்கர் ( துல்கர் சல்மான் ), மனைவி சுமதி […]
விமர்சனம்சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், வெங்கட் அட்லூரி இயக்கத்தில், துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி, ராம்கி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “லக்கி பாஸ்கர்”.
கதைப்படி.. மும்பையில் தனியார் வங்கியில் காசாளராக பணிபுரியும் பாஸ்கர் ( துல்கர் சல்மான் ), மனைவி சுமதி ( மீனாட்சி சௌத்ரி ), மகன் கார்த்திக் ( ரித்விக் ), அப்பா, தம்பி, தங்கையிடன் வசித்து வருகிறார். நேர்மையாக தனது குடும்பத்துக்காக அர்ப்பணிப்புடன் வாழ்ந்துவரும் அவருக்கு, அன்றாட குடும்பம் நடத்தவே அவரது வருமானம் போதாததால், அக்கம்பக்கத்தில் கடன் வாங்கி குடும்பத்தை நடத்துகிறார்.

இந்நிலையில் வங்கியில் அவருக்கு பதவி உயர்வு வழங்க இருப்பதாக தெரியவருகிறது. பதவி உயர்வு வந்ததும் பல பிரச்சனைகளுக்கு முடிவு கட்டிவிட வேண்டும் என நினைத்திருக்கையில், வேறு நபருக்கு அந்த பதவி உயர்வு கிடைக்க, பாஸ்கர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, மேலாளரிடம் சண்டையிட்டு, சமாதானம் ஆகிறார். அப்போது வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பிக்க ராம்கி வருகிறார். பின்னர் நேர்மையாக இருந்தால் எதுவும் நடக்காது என புதிதாக ஒரு வழியைத் தேர்வு செய்கிறார் பாஸ்கர்.
பாஸ்கரின் அதிரடி முடிவால் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன ? அதிலிருந்து மீண்டு பாஸ்கர் எப்படி லக்கி பாஸ்கர் ஆனார் என்பது மீதிக்கதை…

மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் நடைபெற்ற மோசடிகள், அதற்கு வங்கிகள் எவ்வாறு துணை புரிந்தது, அதில் பெரும்புள்ளிகளின் பங்களிப்பு பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, தனது நேர்த்தியான திரைக்கதை மூலம் அற்புதமாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் அட்லூரி.
கடன்காரர்களை சமாளிப்பது, உறவினர்களின் அவமானம், குழந்தைக்கு உணவு வாங்கிக் கொடுக்க முடியாமல் தவிப்பது, குடும்பத்துக்காக தவறு செய்யும் போது வரும் பதட்டம் என ஒவ்வொரு காட்சியிலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் துல்கர் சல்மான்.
அதேபோல் மீனாட்சி சௌத்ரி, ராம்கி, சாய்குமார் உள்ளிட்ட நடிகர் நடிகைகளும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 31 அக்டோபர் 2024 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராம்கி, […]
சினிமாஇயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 31 அக்டோபர் 2024 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.

இதில் கலந்து கொண்ட நடிகர் ராம்கி, ‘லக்கி பாஸ்கர்’ படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தைத் தயாரித்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சினிமாத் துறையில் மிகப்பெரிய கம்பெனி. இந்தப் படத்தை தமிழுக்கு ஏற்றது போலவும் கொண்டு வந்திருக்கிறார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது. லக் என்றால் அதிர்ஷ்டம். நாம் ஒரு விஷயத்திற்கு தயாராக இருக்கும்போது வரும் வாய்ப்புதான் அதிர்ஷ்டம் என்போம். துல்கர் திறமையான நடிகர். அப்பா சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நம்மிடம் எளிமையாகப் பழகுவார். பழைய பாம்பேவை நம் கண் முன்னே செட் போட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். வெங்கி அட்லூரி அதட்டாமல் எல்லோரிடமும் அமைதியாக வேலை வாங்கி படத்தை சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். மீனாட்சி செளத்ரி அழகோடு சிறப்பாக நடிக்கவும் செய்திருக்கிறார். இந்தப் படமும் ரூ.100 கோடி வசூலைப் பெற்று எல்லோருக்கும் ‘லக்கி’யாக அமைய வாழ்த்துக்கள். தீபாவளிக்கு குடும்பத்தோடு இந்தப் படம் பாருங்கள் என்றார்.

இயக்குநர் வெங்கி அட்லூரி, இந்தப் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனெனில், ‘வாத்தி’ படம் முடித்ததும் அதிலிருந்து வித்தியாசமாக எதாவது படம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். கிரே ஷேட் கேரக்டரில் என் ஹீரோவை கொண்டு வர நினைத்து செய்ததுதான் ‘லக்கி பாஸ்கர்’. என் கனவின் மீது நம்பிக்கை வைத்து படம் தயாரித்துக் கொடுத்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸூக்கு நன்றி. படம் பிரம்மாண்டமாக வந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாமலை’ படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். அதில் ரஜினி வசனமே இல்லாமல் மாஸான பின்னணி இசையோடு நடந்து வருவதும், ‘கூட்டி கழிச்சு பாரு கணக்கு கரெக்ட்டா இருக்கும்’ என பன்ச் வசனமும் எனக்கும் மிகவும் பிடிக்கும். அதை மனதில் வைத்தும் இந்தக் கதையில் சில ஆக்ஷன் காட்சிகளைக் கொண்டு வர முயன்றேன். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திலும் சிறப்பான இசையும் பாடல்களும் கொடுத்துள்ளார். இந்திய சினிமாவில் வங்கியை மையப்படுத்தி குறைவான படங்களே வந்திருக்கும். அதில், ‘லக்கி பாஸ்கர்’ படமும் ஒன்று. படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகர் துல்கர் சல்மான் பேசியதாவது, நீண்ட இடைவேளைக்குப் பிறகு என் படம் ‘லக்கி பாஸ்கர்’ வருவதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பாஸ்கர் கேரக்டர் எல்லோருக்கும் கனெக்ட் ஆகும். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர் பாஸ்கர் என்பதால் அதை சுற்றி கதை இருக்கும். இப்போது என் உடல்நிலை சரியாகி இருப்பதால் இந்தப் படத்திற்கும் டப்பிங் கொடுத்திருக்கிறேன். ரிலீஸின் போது நிச்சயம் படத்தில் என் குரல் இருக்கும். ராம்கியின் மிகப்பெரிய ரசிகன் நான். அவருடைய கதாபாத்திரம் படத்தில் மிக முக்கியமானது. இரண்டு வருடங்களாக வெங்கியுடன் பணிபுரிந்திருக்கிறேன். இப்போது வெங்கி என்னுடைய பிரதர். பாஸ்கர் வாழ்க்கையில் முக்கியமான பங்கு மீனாட்சி செளத்ரிக்கு உண்டு. படம் முழுக்க வருகிறார். எனது மகனாக ரித்விக் நடித்திருக்கிறார். இந்த வயதில் மிகவும் திறமையான நடிகராக இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் படம் என்பதால் என் மனதுக்கு நெருக்கமாக உள்ளது. தீபாவளிக்கு ‘அமரன்’, ‘பிரதர்’, ‘ப்ளெடி பெக்கர்’ படங்களும் வருகிறது. இதில் ‘லக்கி பாஸ்கர்’ படமும் பார்த்து மகிழ்ச்சியாக இருங்கள் என்றார்.
டான் கிரியேசன்ஸ் L. கணேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்கும் புதிய படத்தின் துவக்கவிழா சென்னையில் படபூஜையுடன் துவங்கியது. விழாவில் கழுகு படத்தின் இயக்குனர் சத்யசிவா கலந்துகொண்டு கிளாப் அடித்து துவக்கி வைத்தார். நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 […]
சினிமாடான் கிரியேசன்ஸ் L. கணேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்கும் புதிய படத்தின் துவக்கவிழா சென்னையில் படபூஜையுடன் துவங்கியது. விழாவில் கழுகு படத்தின் இயக்குனர் சத்யசிவா கலந்துகொண்டு கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படமாக இந்தபடம் துவங்கியிருக்கிறார்கள்.
வர்ஷா விஷ்வநாத் கதாநாயகியாக நடிக்கிறார்

கிராமத்துக் கதையாக உருவாகவிருக்கும் இந்தப்படம் திருச்சி மற்றும் மதுரை புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. சஸ்பென்ஸ் மற்றும் ஆக்ஷன் நிறைந்த கமர்சியல் படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா.

விழாவில் இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் நாகர்ஜூன், இசையமைப்பாளர் சாம் cs,
கலை இயக்குனர் பாப்ப நாடு C . உதயகுமார், எடிட்டர் வெற்றி கிருஷ்ணன்,
மேனேஜர் துரை சண்முகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தொடக்கப் பள்ளி தொடங்கி, அதனை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தி, அது உயர்நிலைப் பள்ளியாக உயர்வது வரை, கல்விக்கு எதிரானவர்கள் நடத்தும் சூழ்ச்சிகள் எதிர்ப்புகள், போராட்டங்கள், வலிகள் என்பனவற்றைக் கருவாகக் கொண்டு, அவற்றைச் சரியான முறையில் காட்சிப்படுத்தி இருக்கும் திரைப்படம் சார். ஒரு […]
விமர்சனம்தொடக்கப் பள்ளி தொடங்கி, அதனை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தி, அது உயர்நிலைப் பள்ளியாக உயர்வது வரை, கல்விக்கு எதிரானவர்கள் நடத்தும் சூழ்ச்சிகள் எதிர்ப்புகள், போராட்டங்கள், வலிகள் என்பனவற்றைக் கருவாகக் கொண்டு, அவற்றைச் சரியான முறையில் காட்சிப்படுத்தி இருக்கும் திரைப்படம் சார்.
ஒரு கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்க நினைக்கிறார் ஒருவர். அது அவ்வூரில் இருக்கும் உயர் சாதியினருக்குப் பிடிக்கவில்லை. பல்வேறு இடையூறுகள் கொடுக்கிறார்கள். தலைமுறைகள் தாண்டியும் தொடரும் இச்சிக்கல் மூன்றாம் தலைமுறையினருடன் முடிவுக்கு வருகிறது. அது எப்படி ? என்பதைச் சொல்லியிருப்பதுதான் சார் திரைப்படம்.

நாயகனாக நடித்திருக்கும் விமல், துறு துறு இளைஞராகத் தொடங்கி பொறுப்பான ஆசிரியராக மாறும் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். எல்லா நிலைகளிலும் பொருத்தமாக நடித்து தன்னை நிருபித்திருக்கிறார். இறுதிக்காட்சியில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் அவருடைய நாயக பிம்பத்தைப் பன்மடங்கு உயர்த்தும் விதமாக அமைந்திருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் சாயாதேவியை படத்துக்கும், பாடல்களுக்கும் ஒரு நாயகி தேவை என்பதற்காக வைத்திருக்கிறார்கள் என்று எண்ணும் நேரத்தில், கதைக்குள்ளும் அவரைக் கொண்டு வந்துவிட்டார்கள்.
அவரும் இயல்பாக நடித்து இருக்கிறார்.
கறுப்புச் சட்டையோடு பள்ளி ஆசிரியராக வரும் நடிகர் சரவணன் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக்கத் துடிக்கிறார். அவர் பேசும் வசனங்கள், நடத்தும் பாடங்கள், மனநிலை தவறியவராக நடிக்கும் நடிப்பு ஆகியனவற்றில் முத்திரை பதிக்கிறார்.
வ.ஐ.ச. ஜெயபாலன் மற்றும் தயாரிப்பாளர் சிராஜ் ஆகியோர் எதிர்மறை வேடம் ஏற்றிருக்கிறார்கள். எதிரியை அடுத்துக் கெடுக்கும் முயற்சியில் இறங்கும் சிராஜ் அதற்கேற்ற வகையில் நடித்து அந்தப் பாத்திரத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

ரமா, எலிசபெத், சரவணசக்தி,
கஜராஜ் உள்ளிட்ட பிற நடிகர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
இனியன் ஒளிப்பதிவில், காட்சிகளில் தெளிவு, திரைக்கதைக்குப் பலம் கூட்டியிருக்கிறார்
சித்துகுமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கதையின் கருத்துகளை பாடல்வரிகளிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் போஸ்வெங்கட். கிராமங்களில் இன்றும் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் அவற்றின் விளைவுகள் ஆகியனவற்றைப் பின்புலமாக வைத்து கல்வியை முன்னால் நிறுத்தி கதை சொல்கிறார். கஜராஜ் கதாபாத்திரத்தை வைத்து ஆதிக்க சாதியினருள் இருக்கும் ஜனநாயக சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறார்.
கல்விக்கு எதிராக கடவுள் பக்தியை முன்னிறுத்தி சூழ்ச்சி செய்வதாகச் சொல்லியிருக்கிறார். சிறுதெய்வ வழிபாடுகள் வர்ணாஸ்ரமத்துக்குள் வராது என்பதைக் கவனத்தில் கொண்டிருக்கலாம்.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட அதே சமயம் ரசிகர்களுக்கு தரமான படங்களை மட்டுமே தருவது என்கிற குறிக்கோளுடன் படங்களை தயாரித்து வரும் நிறுவனம் பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ். ‘மாயா’, ‘மாநகரம்’ துவங்கி கடந்த வருடம் வெளியான ‘இறுகப்பற்று’ படம் வரை அந்த பணியை செவ்வனே […]
சினிமாவித்தியாசமான கதையம்சம் கொண்ட அதே சமயம் ரசிகர்களுக்கு தரமான படங்களை மட்டுமே தருவது என்கிற குறிக்கோளுடன் படங்களை தயாரித்து வரும் நிறுவனம் பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ். ‘மாயா’, ‘மாநகரம்’ துவங்கி கடந்த வருடம் வெளியான ‘இறுகப்பற்று’ படம் வரை அந்த பணியை செவ்வனே செய்து வரும் இந்த நிறுவனத்தின் சமீபத்திய படைப்பாக ‘பிளாக்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, ஸ்வயம் சித்தா, சிந்தூரி ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஜி.கே பாலசுப்பிரமணி இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையில் வெளியான இந்த சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வெற்றியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் விதமாக பிளாக் படக்குழுவினர் இதன் சக்சஸ் மீட்டை நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக நடத்தினார்கள்.

இந்த நிகழ்வில் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் பேசும்போது,
பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது படம் இது. ஆறுமே வெற்றிப்படங்கள். அதில் நான் மூன்று படங்களில் பணியாற்றி இருக்கிறேன் என்பதே மிகப்பெரிய பெருமை. படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பே தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினரிடையே நடைபெற்ற ஆரோக்கியமான விவாதம் தான் படத்தை இந்த அளவிற்கு ரசிகர்கள் புரிந்து கொள்ள காரணமாக அமைந்துவிட்டது. தயாரிப்பு நிறுவனம் இதற்கு முன்பு கொடுத்த படங்களை விட இதற்கு அதிக அளவு உழைப்பை கொட்டினார்கள். சாம் சி.எஸ்சுடன் இப்போதுதான் முதல் படத்தில் பணியாற்றுகிறேன். நாம் வழக்கமாக ஒரு ஷாட் எடுத்தால் கூட இவரது இசையில் அது வேறு மாதிரியாக மாறி விடுகிறது. இந்த படத்தில் புதிதாக ஒரு லென்ஸ் முயற்சி பண்ணி பார்க்கிறோம் என்பதால் அதை ஜீவாவிடம் முன்கூட்டியே சொல்லி ஒருவேளை சரியாக பதிவாகா விட்டால் ஒன்ஸ்மோர் கேட்போம் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என நாங்கள் கூறியதை எந்தவித மறுப்பும் ஈகோவும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு அழகாக ஒத்துழைப்பு கொடுத்தார் என்று கூறினார்.
படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் பேசும்போது, தொடர்ந்து வெற்றி படங்களின் எண்ணிக்கை கூடும்போது, மக்கள் மனதில் அது சென்று சேர்ந்து ஹிட் ஆகும் போது அந்த சந்தோஷம் அதிகமாக இருக்கும். அந்த சந்தோஷத்தில் தான் நான் இருக்கிறேன். பல காட்சிகள் இந்த படத்தில் திரும்பத் திரும்ப வருவது போன்று இருப்பதால் கதை விவாதத்தின் போது ஒவ்வொரு காட்சியையும் எப்படி எடுக்க வேண்டும் என விவாதித்து ரொம்பவே உதவியாக இருந்ததுடன் படத்திற்கு பிளஸ் ஆகவும் அமைந்துவிட்டது. கதை ஆரம்பித்து 15 நிமிடத்திற்கு பின்னால் படம் முழுவதும் ஹீரோ மீது பயணிக்கும் என்பதால் ரசிகர்களை கதையில் தக்க வைப்பதற்கு ஜீவா போன்ற ஒரு நடிகரின் நடிப்பு மற்றும் புகழ் இந்த படத்திற்கு ரொம்பவே உதவியது என்று கூறினார்.

நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது, ஒரு வெற்றியை ருசிப்பதற்கு தான் எவ்வளவு போராட்டம். ஸ்கிரிப்ட் வாசிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பது ஷார்ட் பிலிம் நடித்த காலத்திலிருந்தே எனக்குள் இருக்கிறது. படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பு அதை படிக்கவில்லை என்றால் ஏதோ தப்பு பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்கிற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அதிலும் இயக்குநர் என்னதான் விவரித்து கூறினாலும் கூட ‘பிளாக்’ போன்ற படத்தின் ஸ்கிரிப்ட்டை படிக்காமல் நீங்கள் நடிப்பது என்பது நிச்சயமாக கை கொடுக்காது. அதனால் அனைத்து படங்களிலுமே இது போன்ற ஸ்கிரிப்ட் வாசிப்பது, ஒர்க் ஷாப் போன்றவற்றை கட்டாயம் பண்ண வேண்டும். அது எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்பதற்கு இந்த பிளாக் படத்தின் வெற்றி ஒரு உதாரணமாக இருக்கும். தமிழ் சினிமாவில் இதுபோன்று ஒரு வெற்றி கிடைத்தால் மட்டுமே அதை பிடித்துக் கொண்டு அடுத்தடுத்து நிறைய ஜானர்களில் படங்கள் வர வாய்ப்பு இருக்கிறது. அந்த நம்பிக்கையும் அடுத்து வருபவர்களுக்கு நாம் கொடுக்க முடியும். அதனால் பிளாக்கிற்கு முன் பிளாக்கிற்கு பின் என தமிழ் சினிமாவை கண்டிப்பாக பிரிக்க முடியும்.

வழக்கமாக இருக்கும் ஜானர்களை உடைத்து விட்டு ஒரு பெரிய பிளாட்பார்மில் ஒரு படம் பண்ண முடியும் என்கிற நம்பிக்கையை பிளாக் படம் கொடுத்துள்ளது. எந்த இடத்தில் ஒரு பொருளை விற்க வேண்டும், எந்த நேரத்தில் விற்க வேண்டும் என்பதை பொறுத்து தான் அந்த பொருள் சரியாக எல்லோரிடமும் சென்று சேரும். பொட்டென்ஷியல் நிறுவனம் எடுக்கும் எல்லா படங்களின் தரமும் எப்படி இருக்கிறது நாம் எல்லோருமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்த பிளாக் படமும் அவர்களுக்கு மிக முக்கியமான படமாக இருக்கும். இந்த படத்தை புரிந்து கொண்டு திரும்ப பார்க்க வரும் ரசிகர்கள் ஒரு பக்கம், முதலில் புரியாமல், அதனால் மீண்டும் பார்க்கலாமே என்று வரும் ரசிகர்கள் ஒரு பக்கம் என ரிப்பீட் ரசிகர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இது போன்ற படங்கள் மூலம் தான் தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டே இருக்கும்.
எல்லா கதைக்கும் பொருந்தக்கூடிய ஒரு அற்புதமான அழகான நடிகர் ஜீவா. இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்பார். என்ன கொடுக்க வேண்டுமோ அதை சரியாக வெளிப்படுத்துவார். மேயாத மான் படத்திலிருந்து பிரியா பவானி சங்கருடன் எனக்கு வெற்றி கூட்டணி தான். ஒரு தயாரிப்பாளர், இயக்குநர் மீது அவர் நம்பிக்கை வைத்து விட்டார் என்றால் 100% அவருடைய பங்களிப்பை கொடுப்பார்.
இந்த படத்தில் எனக்கு கிடைத்த கதாபாத்திரம் போல இனி எத்தனை வருடங்கள் கழித்து எனக்கு கிடைக்குமோ என்று தெரியாது. இதுபோன்ற ஒரு கதாபாத்திரம் கிடைப்பது ஒரு நடிகனுக்கு மிகப்பெரிய கிஃப்ட். அந்த வகையில் இயக்குனர் பாலாவிற்கு மிகப்பெரிய நன்றி. தமிழ் சினிமாவின் பொக்கிஷம் அவர். 12 வருடத்திற்கு முன்பு அவர் இயக்கிய கிளைக்கதை என்கிற குறும்படம் பாருங்கள். பிளாக்கில் இரண்டு கதாபாத்திரங்களில் நீங்கள் ரசித்ததை அதில் பத்து கதாபாத்திரங்களில் ரசிக்கலாம். அந்த அளவிற்கு ஒரு திறமையான மனிதர் என்று கூறினார்.

இயக்குநர் ஜி.கே பாலசுப்பிரமணி பேசும்போது, இந்த படத்திற்காக ஒரிஜினலாக போடப்பட்ட செட்டையும் படத்தில் பார்க்கும் செட்டையும் ஒப்பிட்டு பார்த்தால் தான் கலை இயக்குநர் சதீஷின் பணி எவ்வளவு அற்புதமானது என தெரியவரும். ஒரே சண்டைக் காட்சி என்றாலும் அதில் டபுள் ஆக்சனை மிகச்சரியாக புரிந்து கொண்டதுடன் மட்டுமல்ல டெக்னிக்கலாகவும் அழகாக செய்து கொடுத்திருந்தார் மெட்ரோ மகேஷ். நாங்கள் படப்படிப்பில் சில காட்சிகளை அதிகப்படியாக எடுத்ததாக நினைத்தாலும் அதில் சரியானவற்றை அழகாக கோர்த்து ரசிகர்கள் எதை எல்லாம் ரசிப்பார்கள் என கணித்து சரியான மீட்டரில் இந்த படத்தை தொகுத்திருந்தார் எடிட்டர் பிலோமின் ராஜ். ஒளிப்பதிவாளரை பொறுத்தவரை படப்பிடிப்பில் நாங்கள் இருவருமே ஒன்றாகி விட்டோம். படத்தைப் பார்த்ததும் காட்சிகளாகட்டும், சண்டைக்காட்சி ஆகட்டும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வை கொடுக்கும் விதமாக பின்னணி இசையை கொடுத்திருந்தார் சாம் சி.எஸ். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பும் மிகச் சரியாக இதில் சேர்ந்து கொண்டது.
நடிகர் என்பதைவிட விவேக் பிரசன்னா பத்து வருடங்களுக்கு மேலாக ஒரு நண்பராக என்னுடன் பயணித்து வருகிறார். இன்று இந்த படத்தை மாஸ் ஆடியன்ஸிடமும் கொண்டு போய் சேர்க்க முடிந்திருக்கிறது என்றால் அதற்கு நடிகர் ஜீவாவும் முக்கிய காரணம். பிரியா பவானி சங்கர் கொடுத்த ஒத்துழைப்பு மிக அதிகம். ஜீவாவுக்கு விவரிப்பதை விட குறைவாக அவருக்கு விளக்கினாலே போதும். புரிந்து கொள்வார். இந்த படத்தை இன்று ஒரு தரமான முறையில் கொடுத்திருக்கிறோம் என்றால் முழு காரணம் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, எஸ்.ஆர் பிரகாஷ் பாபு மற்றும் தங்க பிரபாகரன் ஆகியோர் தான், பொட்டென்சியல் நிறுவனத்தில் ஏற்கனவே வந்திருக்கும் படங்கள் அனைத்துமே ஹிட் என்பதால் அந்த பெருமையை நானும் தவற விட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன் என்று கூறினார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசும்போது, நாங்கள் ஒவ்வொரு படத்தையும் எடுப்பதற்கு கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொள்வோம். அது ஒவ்வொரு படத்தை பொறுத்து தானாகவே அமைந்து விடும். ‘பிளாக்’ கொஞ்சம் அதிகமாகவே நாட்கள் எடுத்துக் கொண்ட படம். 2018லேயே இந்த ஸ்கிரிப்ட் எங்களிடம் வந்தது. படத்தை எடுக்க வேண்டும் என்கிற சுவாரசியமும் ஏற்பட்டது. அதே சமயம் இதன் ஒரிஜினலான படத்தை அப்படியே எடுக்க விரும்பாமல் இங்கே நம்ம ஊரில் இந்த படத்தை பார்ப்பவர்கள் நம்பும்படியாக இயக்குநர் பாலா இதை அழகாக எழுதியிருந்தார். இந்த படத்தை தயாரிப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால் இதிலுள்ள செலவுகள் எதுவுமே கண்ணுக்கு தெரியாது. படப்பிடிப்பிற்கு செல்வதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்வது, 40 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் இருந்தாலும் அவை கிராபிக்ஸ் தான் என தெரியாமல் பார்த்துக் கொள்வது என நிறைய விஷயங்கள் இருந்தன.
நமக்கு இந்த கதை புரிந்து தான் இந்த படத்தை தயாரிக்கிறோம் ஆனால் படம் பார்ப்பவர்களுக்கு அதே போல புரியுமா என்கிற எண்ணம் இருந்தது. காரணம் இது போன்ற புதிய முயற்சிகளை எடுப்பதற்கு ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் தேவை. அதனால் அவர்கள் மீது இருந்த நம்பிக்கையில் தான் ரஜினியின் படம் வரும்போதும் இந்த படத்தை ரிலீஸ் செய்யலாம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு கிடைத்தது.
படம் பார்க்கும்போது ரசிகர்கள் இந்த இடங்களில் எல்லாம் ரொம்பவே உற்சாகமாவார்கள் என நாங்கள் நினைத்தது போலவே திரையரங்குகளிலும் அது எதிரொலித்தது என்றால் இதை அப்படி அழகாக கொடுத்த இந்த மொத்த படக்குழுவினர் தான் காரணம். குறிப்பாக அந்த டபுள் ஆக்சன் சண்டைக்காட்சி நன்றாக இருந்தது என எல்லோரும் சொன்னார்கள். அதை உருவாக்கிய மெட்ரோ மகேஷுக்கு மிக்க நன்றி. இதுபோன்ற ஒரு திரில்லர் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டு நடிகர் ஜீவா உள்ளே வந்த போதுதான் இந்த படத்திற்கே ஒரு முழுமை கிடைத்தது என்று கூறினார்.

நடிகர் ஜீவா பேசும்போது,
ஹைதராபாத்தில் ஒரு படப்படிப்பில் இருந்தபோது தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஒரு கதையை என்னிடம் சொல்ல விரும்புகிறார் என தகவல் வந்தது. அந்த இயக்குநர் அங்கே நேரிலேயே வந்து கதை சொன்னார். அதில் எனக்கு சிறப்பு தோற்றம் தான். அந்த படம் தான் இறுகப்பற்று. அப்போது தயாரிப்பாளரிடம் கடந்த ஐந்து வருடங்களாக எல்லா படத்திலும் இதேபோல சிறப்பு தோற்றத்தில் தான் நடித்து வருகிறேன்.. வேறு சிறப்பான கதையை சொல்லுங்கள் என்று சொன்னேன். அதன் பிறகு பி.ஆர்.ஓ. ஜான்சன் மூலமாக தான் இந்த பிளாக் படத்தின் கதையை கேட்டேன். அவர்களது பேச்சிலிருந்து அவர்கள் வித்தியாசமான கதைகளை படமாக்க வேண்டும், மக்களுக்கு பிடிக்கும் விதமாக கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இருப்பதை உணர முடிந்தது.
இந்த படத்தில் ஒப்பந்தமான பிறகு ஒரு முறை விமானத்தில் நடிகர் கார்த்தியிடன் பயணித்தேன். இந்த தகவலை அவரிடம் சொன்னபோது பொட்டென்ஷியல் நிறுவனம் சாதாரணமாக ஒரு படத்தை வெளியிட்டு விட மாட்டார்கள் அனைத்து தரப்பிலும் நன்கு விவாதித்து, பார்த்து பார்த்து செதுக்கி தான் ரிலீஸ் செய்வார்கள் என்று சொன்னார். ஆனால் ரிலீஸ் சமயத்தில் மட்டுமல்ல படப்பிடிப்பிற்கு முன்பும் படப்பிடிப்பு சமயத்திலும் கூட செதுக்கும் வேலை நடந்து கொண்டு தான் இருக்கும். அவர்களைப் பொறுத்தவரை நடிகர்களின் புகழை விட ஸ்கிரிப்ட்டுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இதையே எங்களது சூப்பர்குட் நிறுவனத்தில் சொல்லியிருந்தால் என் தந்தை என்னடா ரீல்களை மாற்றி மாற்றி போட்ட மாதிரி இருக்கிறதே என்று கமெண்ட் பண்ணி இருப்பார். சில பேர் கதை சொல்லும்போது லவ் ஸ்டோரியாக இருக்கும் படமாக எடுக்கும் போது சைக்கோ லவ் ஸ்டோரியா மாறிவிடும். மேலும் எங்களைப் போன்ற நடிகர்களுக்கு பாடல் வேணும் சண்டைக்காட்சி வேணும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்தும் ஒரு அழுத்தம் இருக்கும். ராம், கற்றது தமிழ் போன்ற படங்கள் ஒரு நடிகராக என்னை மாற்றினாலும் திரையரங்குகளில் சென்று பார்க்கும் போது அதற்கான வரவேற்பு குறைவாகவே இருந்தது. அதனால்தான் கொஞ்சம் ரூட்டை மாற்றி ஈ, கோ போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் அது போன்ற படங்களை எடுக்க துவங்கி விட்டார்கள். அந்த வகையில் இந்த பிளாக் படத்தை மக்களை யோசிக்க வைக்கும் ஒரு படமாக எடுக்க வேண்டும் என்று தான் அவர்கள் நினைத்தார்கள். ஒரு சிக்கலான கதையை எவ்வளவு எளிதாக பண்ண முடியுமோ அதைத்தான் செய்திருக்கிறோம். அதற்கு இயக்குநர் பாலாவுக்கு நன்றி. அவரது குறும்படத்தை இன்னும் பார்க்கவில்லை. அதை பார்த்திருந்தால் ஒருவேளை இந்த படத்தை இன்னும் முன்கூட்டியே முடித்திருப்பேன் என்று நினைக்கிறேன்.
அறிவாளியாக இருக்கிறேன், அதனால் படம் பார்ப்பவர்களின் அறிவாளியாக மாற்றுகிறேன் என படம் எடுக்க முடியாது. மார்க்கெட்டில் மூட்டை தூக்குகிறவன் இப்படி ஒரு படம் பார்க்கும்போது என்னை எதுக்குப்பா இவ்வளவு யோசிக்க வைக்கிறீங்க என்று கேட்பார். ஆனால் அவகளும் இன்று மாறி விட்டார்கள். அவர்கள் திரையரங்குகளில் சந்தோஷமாக பார்ப்பதற்கு ஏற்ற மாதிரி கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலா. இந்த படத்திற்கு இரண்டாவது பாகம் எப்போது எடுக்கிறீர்கள் என எல்லோரும், ஏன் எங்கள் வீட்டிலும் கூட கேட்கிறார்கள். இந்த கம்பெனி என்னிடம் இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எடுத்து தான் ஆக வேண்டும்.
இதற்குமுன் வணிக ரீதியான படங்களில் தான் நடிக்க வேண்டிய ஒரு தேவை இருந்தது. அதனால் தான் எனக்கு சில சரிவுகள் ஏற்பட்டது. கோ போன்ற படத்திற்குப் பிறகு இப்படி ஒரு படத்தில் நடிக்க ரிஸ்க் எடுக்கிறேன் என்றால் அந்த சரிவு கூட ஒரு காரணமாக இருக்கலாம். எல்லா படமும் நன்றாக ஓட வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் காலையில் கேமரா முன் நிற்கிறோம். படம் பார்த்தவர்கள் நீங்கள் நன்றாக நடித்து இருக்கிறீர்கள் என கூறினார்கள். நான் சாதாரணமாகத்தான் நடித்திருந்தேன். அதனால் இந்த பாராட்டுக்களுக்கு படக்குழுவினர் தான் காரணம்.

கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கோஸ்டல் பாரடைஸில் தான் இந்த படப்பிடிப்பை நடத்தினோம். இந்த படத்தில் நடித்த பிறகு ஒரு வருடமாக அந்த பக்கம் போகவில்லை. ஏனென்றால் தினசரி ஒரு லூப்பில் மாட்டிக்கொண்ட மாதிரி இருந்தது. அதன் பிறகு என் நண்பர்கள் அந்தப்பகுதிக்கு கூப்பிட்ட போது கூட நான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால் அதே கோஸ்டல் பாரடைஸில் நமக்குள்ளாக ஒரு சக்சஸ் மீட் நடத்திக் கொள்ளலாம் என தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். இது போன்ற சக்சஸ் மீட்டை பார்த்து எனக்கு ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இப்படி சக்சஸ் மீட்டை கொண்டாடுவதற்காகவே இன்னும் நிறைய நல்ல படங்கள் பண்ண வேண்டும். அதிலும் பொட்டென்ஷியல் நிறுவனத்துடன் இணைந்து இன்னும் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறினார்.
ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ் சார்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், நடிகர் கவின் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. இந்தப் […]
சினிமாஃபிலாமெண்ட் பிக்சர்ஸ் சார்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், நடிகர் கவின் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பேசுகையில், படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் என்னுடைய நன்றி. காமெடி செய்து போர் அடித்திருந்த சமயத்தில் என் நடிப்புக்கு தீனி போடும் விதமாக சீரியஸ் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறேன். நல்ல வாய்ப்பு ! ஹேப்பி தீபாவளி ! என்றார்.
ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் பேசுகையில், இயக்குநர் சிவபாலன் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். கமர்ஷியலாக அழகாக படம் வந்திருக்கிறது. இவருடன் பணிபுரிந்ததில் நிறைய விஷயங்கள் சவாலாகவும், புதிதாக கற்றுக் கொள்ளும் அனுபவமாகவும் இருந்தது. படத்தின் கதை கேட்டபோது இது எப்படி படமாக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் இருந்தது. அதை சரியாகக் கொண்டு வந்திருக்கிறார். கவின் சிறப்பான நடிகர். சிங்கிள் டேக்கில் ஒரு காட்சியை நடித்துக் கொடுத்திருக்கிறார். படத்தில் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் அசாத்திய உழைப்பைக் கொடுத்திருக்கின்றனர் என்றார்.

நடிகை பிரியதர்ஷினி பேசுகையில், நெல்சன் தயாரிப்பில் நான் நடித்திருப்பதை இப்போது வரையிலும் நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது வித்தியாசமான பிளாக் காமெடி படம். எல்லோரும் சின்சியராக நடித்திருக்கிறார்கள். என்னுடைய காமெடி சென்ஸ் நடிப்பை இன்னும் இம்ப்ரூவ் செய்ய கவின் உதவினார். தீபாவளிக்குப் படம் வெளியாகிறது என்றார்.
திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், கவின் மற்றும் சிவபாலனுக்காக நெல்சன் இந்தப் படத்தை சிறப்பாகக் கொண்டு வந்துள்ளார். எல்லோரும் 100% உழைப்பைக் கொடுத்துள்ளனர். படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.
ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசுகையில், ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் தமிழக விநியோக உரிமையை எனக்குக் கொடுத்த நெல்சனுக்கு நன்றி. இந்தப் படம் தீபாவளி சரவெடி. கவினுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய வாழ்த்துகள் என்றார்.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசுகையில், என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் ‘ப்ளடி பெக்கர்’. ஏனெனில், இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் எனக்குத் திருமணம் நடந்தது. எல்லோரும் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். சிவபாலன் தனக்கு என்ன வேண்டும் என்பதை மிகச்சரியாக எடுத்துள்ளார். டிரெய்லருக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது. நிச்சயம் படமும் பெரிய வெற்றி பெறும். இந்தப் படத்துக்குப் பிறகு கவினின் நடிப்பிற்கு பெரிய பாராட்டு கிடைக்கும். நான் வாழும் வாழ்க்கை, சாப்பாடு, டிரஸ் எல்லாமே நெல்சன் கொடுத்தது. அவருக்கு நன்றி என்றார்.
இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் பேசுகையில், நான் இந்த இடத்திற்கு வர நிறைய பேர் உதவியிருக்கிறார்கள். அதில் நெல்சன் முதன்மையானவர். அவருக்கு நன்றி. இயக்குநராக அவர் எங்களிடம் நிறைய கேள்வி கேட்பார். என் படத்தை தயாரிக்கும்போதும் அப்படித்தான் இருப்பார் என நினைத்தேன். ஆனால், எனக்கான எல்லா சுதந்திரமும் கொடுத்தார். அவருக்குப் படம் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். படம் ஆரம்பிக்கும் முன்பிருந்தே கவின் எனக்கு நல்ல நண்பன். நான் எழுதியிருந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். ரெடின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும். என்னுடைய டெக்னிக்கல் டீம் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட். அவர்களுக்கு நன்றி என்றார்.

இயக்குநர், தயாரிப்பாளர் நெல்சன் பேசியதாவது, வேட்டை மன்னன்’ படத்தின் போது என்னிடம் சிவபாலன் சேர்ந்தார். ’ஜெயிலர்’ படம் வரையிலுமே என்னிடம் வேலை பார்த்தார். ‘ஜெயிலர்’ பட சமயத்தில்தான் இந்தக் கதை சொன்னார். நீண்ட நாட்கள் என்னிடம் வேலை பார்த்ததால் அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், ‘ஜெயிலர்’ வெற்றிப் பெற்றால் மட்டுமே சிவபாலன் படம் தயாரிப்பேன் என்று சொல்லியிருந்தேன். இதனால், ‘ஜெயிலர்’ படம் வெற்றி பெற வேண்டும் என அவர்தான் மிகவும் எதிர்பார்த்திருந்தார். படம் வெற்றி பெற்றதும் ‘ப்ளடி பெக்கர்’ தயாரிப்பது உறுதியானது. கவினை வைத்து செய்யலாம் என சிவபாலன் சொன்னார். ஆனால், இந்தக் கதைக்கு கவின் சரியாக இருப்பார் எனத் தோன்றவில்லை. தனுஷ், விஜய்சேதுபதி என சில பெயர் சிவபாலனிடம் சொன்னேன். ஆனால், அவர் கவின் தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து லுக் டெஸ்ட் செய்தார். அப்போதே இந்தக் கதையில் சிவபாலன் எவ்வளவு டீடெய்லிங்காக செய்திருக்கிறார் என்பது தெரிந்தது. படத்தின் முதல் பாதி நன்றாகவே செய்திருந்தார்கள். அதன் பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. முழுப்படமும் பார்த்தபோது சிவபாலனுக்குப் பிறகு சிறப்பாக வேலை செய்திருப்பது கவின்தான். பல காட்சிகளில் சிறப்பாக கவின் நடித்திருக்கிறார். கவின் வேண்டாம் என்று ஆரம்பத்தில் நிராகரித்து நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்பது அப்போதுதான் புரிந்தது. த்ரில்லர் படமான இதில் டார்க் காமெடி, எண்டர்டெயின்மெண்ட் என எல்லாமே இருக்கும். தீபாவளிக்கு ‘அமரன்’, ‘பிரதர்’ படங்களும் வெளியாகிறது. அந்தப் படங்களுக்கும் வாழ்த்துகள் என்றார்.

நடிகர் கவின் பேசுகையில், ஒருவர் மீது மற்றொருவருக்கு இருந்த நம்பிக்கைதான் இந்தப் படம் உருவாக காரணம். நான் இதுவரை என்னென்ன விஷயங்கள் கற்றுக் கொண்டேனோ அதை எல்லாம் முடிந்த அளவுக்கு இந்தப் படத்தில் கொண்டு வரவேண்டும் என நினைத்தேன். எனக்கு சினிமாவில் ஒரு இடத்தைக் கொடுத்தவர் நெல்சன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இது இருக்கும். ஏனெனில், சிவபாலன் இயக்கும் முதல் படம், நெல்சன் தயாரிக்கும் முதல் படம். நமக்கு அமைந்த நல்ல மனிதர்களுக்காக எந்த விஷயமும் செய்யலாம் என்பதுதான் என் நம்பிக்கை. ’ப்ளடி பெக்கர்’ எளிமையான கதைதான். அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறோம். படத்தில் என்னுடன் நடித்த நடிகர்கள் எல்லோருமே அவ்வளவு எனர்ஜியாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். டெக்னிக்கல் டீமும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். ‘அமரன்’, ‘பிரதர்’ மற்றும் ‘ப்ளடி பெக்கர்’ படங்கள் பார்த்து தீபாவளியை கொண்டாடுங்கள் என்றார்.