நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் ஆகியோர் இப்படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினர் […]
சினிமாஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிப்பில், விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ஃப்ளவர்” (Red flower). ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆகஸ்ட் 8 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் […]
சினிமாபிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன், ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி […]
சினிமாதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டாமல் செயலற்ற நிலையில், இருப்பதை கண்டித்து சங்கத்தின் உறுப்பினர்களின் கண்டனம் மற்றும் ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசும்போது, சங்கத்தின் நிர்வாகிகள் வருடந்தோறும் கூட்ட வேண்டிய பொதுக்குழு கூட்டத்தைக் […]
சினிமாதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டாமல் செயலற்ற நிலையில், இருப்பதை கண்டித்து சங்கத்தின் உறுப்பினர்களின் கண்டனம் மற்றும் ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசும்போது, சங்கத்தின் நிர்வாகிகள் வருடந்தோறும் கூட்ட வேண்டிய பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டாமல் இருப்பதால், பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட வலியுருத்தியும், கலைஞர் நூற்றாண்டு விழா குறித்தான முறையான வரவு, செலவு கணக்கு வழக்குகளை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கேபிள் டிவி விவகாரத்தில் நிர்வாகிகளின் முடிவு என்னவென்பதை தெளிவாக தெரியப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இக்கூட்டத்தில் தங்க சேகர், திருமலை, ராஜேஸ்வரி, மணிமாறன், தமிழரசு, சண்முகம், ஜெயக்குமார், சிவக்குமார், வடிவேல், சுரேஷ் கண்ணன், வெற்றி வீரபாண்டி, இளமாறன், தீர்த்தமலை, ராஜ சிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டாமல் செயலற்ற நிலையில், இருப்பதை கண்டித்து சங்கத்தின் உறுப்பினர்களின் கண்டனம் மற்றும் ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசும்போது, சங்கத்தின் நிர்வாகிகள் வருடந்தோறும் கூட்ட வேண்டிய பொதுக்குழு கூட்டத்தைக் […]
சினிமாதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டாமல் செயலற்ற நிலையில், இருப்பதை கண்டித்து சங்கத்தின் உறுப்பினர்களின் கண்டனம் மற்றும் ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசும்போது, சங்கத்தின் நிர்வாகிகள் வருடந்தோறும் கூட்ட வேண்டிய பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டாமல் இருப்பதால், பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட வலியுருத்தியும், கலைஞர் நூற்றாண்டு விழா குறித்தான முறையான வரவு, செலவு கணக்கு வழக்குகளை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கேபிள் டிவி விவகாரத்தில் நிர்வாகிகளின் முடிவு என்னவென்பதை தெளிவாக தெரியப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இக்கூட்டத்தில் தங்க சேகர், திருமலை, ராஜேஸ்வரி, மணிமாறன், தமிழரசு, சண்முகம், ஜெயக்குமார், சிவக்குமார், வடிவேல், சுரேஷ் கண்ணன், வெற்றி வீரபாண்டி, இளமாறன், தீர்த்தமலை, ராஜ சிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக […]
சினிமாரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. .
இந்த நிகழ்வில் நடிகர் ராஜூ ஜெயமோகன் பேசும்போது, இந்த வாய்ப்பு கிடைக்கறதுக்கு முக்கியமான காரணம் பிக் பாஸ் ஷோ தான்னு நினைக்கிறேன். அதுக்கு வாய்ப்பு கொடுத்த பெரிய மனிதர்களுக்கும். அதுல எனக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வெச்ச அந்த மக்களுக்கு தான் நன்றி சொல்லணும். ஜியோ ஹாட்ஸ்டார்ல நானே எழுதி இயக்கி நடிச்சு அப்படி ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகி இருந்தேன். அந்த படத்த பண்ணிட்டு இருக்கும்போதுதான் இந்த வாய்ப்பு வந்தது. அது கொஞ்சம் தாமதமானதால் இதை பண்ணேன்.
இன்றைய ஜென்-சிக்கு ஒரு டீப்பான விஷயத்தை எப்படி ஷேர் பண்ணி கொடுக்கனும்னு தெரிஞ்ச ஒரு டைரக்டர். தான் ராகவ் மிர்தாத்.. எனக்கு ஒரு கிரவுண்ட் கொடுத்திருக்கீங்க. இது ஒரு படம். இவ்வளவு பேர் பாராட்டக்கூடிய ஒரு இடத்துல நிற்க வச்சிருக்கீங்க. உங்களுக்கு நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த படத்தோட எடிட்டர் ஜான் ஆப்ரகாம் இன்னொரு டைரக்டர்னு சொல்லலாம். தன்னோட டேபிள்ல படத்தை வேற மாதிரி மாத்துனாரு. அதுமட்டுமல்ல இது தயாரிப்பாளர் சுரேஷின் கதைங்கறதுனால ஈஸியா ஓகே ஆயிடுச்சு.
எல்லாருமே என்னை ஹீரோன்னு சொல்றாங்க. ஹீரோன்னா பொதுவா படத்துல அம்மாவ காப்பாத்துறவங்க, இல்ல. ஆபத்துல இருக்குறவங்களை காப்பாத்துறவங்க. ஆனா என்னை வெச்சி படம் எடுத்த தயாரிப்பாளரை காப்பாத்திட்டேன்னா அன்னைக்கு நான் ஹீரோன்னு. ஒத்துப்பேன்
எங்க படத்தை பார்க்குறதுக்கு ஒரு நல்ல காரணம் என்ன அப்படின்னா. தேவையில்லாத விஷயங்களெல்லாம் சொல்லாம உங்களை போட்டு தொந்தரவு பண்ணாம, உங்க டைம் மதிச்சு சீக்கிரமா முடியற மாதிரியான ஒரு படம் கொடுத்துருக்கோம். ஒரு முக்கியமான விஷயத்தை ஒரு நல்ல மெசேஜா சுகர் கோட் பண்ணி உங்களுக்கு கொடுத்திருக்கார் இயக்குநர். இந்த எல்லாத்துக்குமே வந்து இசையமைப்பாளர் நிவாஸ் தான் காரணம். இந்த படம் வர்றதுக்கு முன்னாடி, நான் நடிக்கிறதுக்கு முன்னாடி எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு முகம் நிவாஸ்
கண்டிப்பா நீங்க குடுக்கற பணம் வேஸ்ட் ஆகாது. நீங்க எல்லாரும் போய் குடும்பம், குழந்தைகளோட நம்பி பாக்கலாம். சொல்லப்போனா இது ஒரு மூணு ஹீரோ சப்ஜெக்ட். பப்பு, மைக்கேல், நான் எல்லாரும் சேர்ந்து நடிச்ச படம். இந்த படத்துல ஒரு குட்டி நயன்தாரா, ஒரு குட்டி அதிதி ராவ் ஹைதரி இருக்காங்க. இவங்க ரெண்டு பேருமே இந்த படத்துக்கு அப்புறம் அந்த ரெண்டு ஹீரோயின்களை விட பெருசா ஆகணும் அப்படின்னு சொல்லி வேண்டிக்கறேன்.
நானும் ஒரு டைரக்டர்னு. நினைக்கிறேன்ங்கறதுனால டைரக்டர்கிட்ட. அவர் சொல்றதை கீழ்ப்படிஞ்சு பண்ணி நடிக்கத்தெரியும். நான் அதை பண்ணிருக்கேன். இன்னைக்கு எந்த படம் ஓடும், எந்த படமும் ஓடாதுன்னு தெரியல. எந்த கதை நல்ல கதை, எந்த கதை எல்லாம் பண்ணக்கூடாதுன்னு தெரியல. ஒரு நைட்டுல எல்லாரும் என்ன வேணாலும் ஆகலாம். நாளைக்கு என்ன வேணாலும் ஆகும் அப்படின்ற மாதிரியான ஒரு இதுலதான் இருக்கு. இன்னைக்கு நீங்க பாக்குற ஒரே ஒரு புட் டெலிவரி ஆப்ல பார்த்தா நிறைய சாப்பாடு இருக்கும். எந்த சாப்பாட நீங்க ஆர்டர் பண்ணனும்னு தெரியாது. ஆனா பன் பட்டர் ஜாம் தான் எல்லா ஊர்லயும், எல்லா கடைகளிலும் கிடைக்கும். பசிக்குதுன்னா எந்த கடையில வேணாலும் பன் பட்டர் ஜாம் நம்பி சாப்பிடலாம். நாளைக்கு இந்த சினிமா எனக்கு எதாவது கொடுத்தா திருப்பி சினிமாவுல தான் இருக்கணும்னு ஆசை. எனக்கு படம் தயாரிக்கனும்னு விருப்பம் இருக்கு.
ஒருத்தர் ஒரே ஒரு போன் கால்ல எங்க படத்த தமிழ்நாட்டுல இருக்குற எல்லாரும் திரும்பி பார்க்க வெச்சாரு. தளபதி விஜய் ஒரு போன் கால்ல எனக்கு பண்ணி கொடுத்தாரு. அவரு என்னை எப்படி பாக்குறாரு? அவருக்கு என்னை பிடிக்குமா? இல்ல என்ன விஷயத்துக்காக எனக்கு இத வாழ்த்துனார் அப்படிங்கறதெல்லாம் வந்து எனக்கு ரொம்ப பிரமிப்பாவும் இருக்கு. அவர் சொன்ன விஷயம் தான் இன்னைக்கு நிறைய பேருக்கு எங்க படம் தெரிஞ்சிருக்கு சமீபத்துல ஒரு நிகழ்வுல. அவரோட ரசிகர்களை எல்லாம் பாத்து நீங்க எல்லாம் இல்லனா நான் என்ன பண்ண போறேன்னு தெரியலப்பா அப்படின்னாரு. நான் அவர்கிட்ட சொல்றேன் நீங்க இல்லனா நான் என்ன பண்ணுவேன்னு தெரியலண்ணா என்று பேசினார்.
நடிகர் விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் […]
சினிமாநடிகர் விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில். கடந்த 2013ல் விமலை வைத்து இவர் இயக்கிய தேசிங்கு ராஜா படம் வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்குப் பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்கு ராஜா-2 படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எழில்.
இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்தில் நடிகர் ஜனா அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக பூஜிதா பொன்னாடா, ஜூலி, ஹர்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, ரவிமரியா, சாம்ஸ், ரோபோ சங்கர், சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், மதுரை முத்து, விஜய் டிவி புகழ், விஜய் டிவி கோதண்டம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். மெலடி கிங் வித்யாசாகர் ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தை தொடர்ந்து 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் எழிலுடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை செல்வா கவனித்துள்ளார்.
வரும் ஜூலை 11ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் இயக்குநர் ஆர்,கே. செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் இயக்குநர் ஆர்,வி. உதயகுமார் மற்றும் செயலாளர் இயக்குநர் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் வித்யாசாகர் பேசும்போது, இயக்குநர் எழிலுக்கு என்னுடன் முதல் படம் ‘பூவெல்லாம் உன் வாசம்’. அதற்கு அடுத்த படத்தில் இணைவதற்கு 25 வருடங்கள் பிடித்திருக்கிறது. அந்த படத்தின் பாடல்கள் அவரை அவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என நினைக்கிறேன். அதிலிருந்து மீண்டு வந்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார். எழிலின் படங்கள் எப்பொழுதும் குடும்பத்தோடு பார்க்கும் படங்கள். ஆனால் இந்த படத்தை பார்க்கும்போது அதிரடியாக இருந்தது. இரண்டு படங்களிலும் பார்த்த எழிலுக்கு ரொம்பவே வித்தியாசம் இருக்கிறது.
முதல் பிரேமிலிருந்து கடைசி பிரேம் வரை எனக்கு எங்கே பின்னணி இசை வாசிப்பது என்பதில் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அந்த அளவிற்கு அனைவரும் பேசிக்கொண்டே, காமெடி பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள். ஜன்னல் ஓரம் படத்திற்குப் பிறகு மீண்டும் இசையமைக்கும் விமல் படமும் இதுதான். இந்த படத்தில் அறிமுகமாகி இருக்கும் ஜனா உள்ளிட்ட கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். டிஜிட்டலுக்கு மாறிய பிறகு இசைக்கருவிகளை கையாளுவது எளிதாக இருக்கலாம். ஆனால் இசையை உருவாக்க கற்பனை தேவை என்று பேசினார்.
நடிகர் சாம்ஸ் பேசும்போது, இந்த படத்தின் தயாரிப்பாளர் காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்பதற்காக செலவு பற்றி கவலைப்படாத ஒருவர். அவரது மகன் ஜனா இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். அவருக்கு இது வெற்றி படமாக அமையும். எழில் படங்களில் நடிக்கும் போது நிறைய காமெடி நடிகர்களும் உடன் நடிப்பதால் அவர்களைப் பார்த்து நான் இன்னும் அப்டேட் செய்து கொள்ள முடிகிறது. கமல், ரஜினி காலத்தில் கார்த்திக் ஒரு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துவார். இப்போதைய காலகட்டத்தில் விமலின் நடிப்பு அப்படித்தான் இருக்கிறது. வழக்கமாக ஹீரோ, ஹீரோயின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் என்பார்கள். இந்த படத்தில் எனக்கும் நடிகர் புகழுக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இந்தப் படத்தின் நான்காவது ஹீரோயின் புகழ் என்று சொல்லலாம் என்று கூறினார்.
ஒளிப்பதிவாளர் செல்வா பேசும்போது, எழிலின் முதல் படமான துள்ளாத மனம் துள்ளும் படத்தில் ஆரம்பித்து அவருடன் இந்த படம் வரை 25 வருடங்களாக உடன் பயணித்து வருகிறேன். இந்த படத்தில் நடிப்பதற்காக எழிலிடம் யார் வாய்ப்பு தேடி வந்தாலும் அவர்களை இல்லை என திருப்பி அனுப்பாமல் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வைத்திருக்கிறார். விஜய் முதல் இப்போதைய விமல் வரை இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. விமல் நடித்த களவாணி படத்தின் கன்னட ரீமேக் கிராதா படத்தில் நடிகர் யஷ்ஷை வைத்து ஒளிப்பதிவு செய்தது நான் தான்.
இந்த படத்தில் கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. போன வேகமே தெரியவில்லை. சீக்கிரமே முடிந்தது போன்று உணர்வு ஏற்பட்டது. என்னை பொருத்தவரை தயாரிப்பாளர்களுக்கு ஏற்ற மாதிரியான ஒரு நபர் நான். நிலாவே வா படத்தில் வித்யாசாகர் உடன் இணைந்து பணியாற்றினேன். அந்த படத்தில் ‘நீ காற்று நான் மழை’ பாடலுக்கு ஒளிப்பதிவு செய்தேன். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள நிலா பாடலுக்கு என்னால் முடிந்த அளவிற்கு காட்சிப்படுத்தி உள்ளேன் என்று கூறினார்.
நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது, இன்றுவரை குழந்தைகள் மத்தியில் கூட நான் தெரிவதற்கு காரணம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் காமெடிதான். அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காமெடிக்கான லீட் இருந்தது. இந்த படத்தில் அதற்கான வாய்ப்பை எனக்கு கொடுத்த எழில் சாருக்கு நன்றி. விரைவில் அவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கணும். ஒரு காமெடி போராட்டம் நடத்தியே ஆகணும் என்று பேசினார்.
நடிகர் ரவி மரியா பேசும்போது,
இந்த படத்திற்கும் தேசிங்குராஜா முதல் பாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதில் நடித்த விமல், நான், சிங்கம் புலி உள்ளிட்ட சில நடிகர்கள் இதில் நடித்திருக்கிறோம் என்பதை தவிர. இந்த கதைக்கு என்ன டைட்டில் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் தயாரிப்பாளர் விரும்பியதால் தேசிங்குராஜா 2 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தேசிங்கு ராஜா ஒரு காமெடி கலாட்டா என்றால் இந்த இரண்டாம் பாகம் ஒரு காமெடி களேபரம் என்று சொல்லலாம். வசந்தபாலன் என்னை வில்லனாக அறிமுகப்படுத்தினார். உங்களை யார் வில்லனாக நடிக்க வைத்தது உங்களுக்குள் காமெடி இருக்கிறது என்று கூறி என்னை மனம் கொத்தி பறவை மூலம் நகைச்சுவை பாதைக்கு திருப்பியவர் இயக்குனர் எழில் தான்.
வில்லனாக இருந்துகொண்டே நகைச்சுவை செய்வது என்பது இரண்டு பொண்டாட்டிக்காரன் கதை போலத்தான். அவர் என் மீது வைத்த நம்பிக்கை காரணமாக காமெடி படங்களை பார்த்து, பார்த்து ஹோம் ஒர்க் பண்ண ஆரம்பித்து விட்டேன். வெறும் வில்லனாக மட்டும் நடித்திருந்தால் என்னுடைய பயணம் இந்த அளவுக்கு நீண்டு இருக்காது. இப்போது வரை தொடர்ந்து நடிப்பதற்கு இயக்குனர் எழில் தான் காரணம். இந்த படத்தில் அறிமுகம் ஆகி இருக்கும் தயாரிப்பாளரின் மகன் ஜனா ஒரு ஆக்சன் ஹீரோவுக்கான எல்லா இலக்கணமும் அவரிடம் இருக்கிறது. நல்ல ஹீரோவாக அவர் நிச்சயமாக உருவாகி இருக்கிறார். அதற்கு நிறைய இடம் கொடுத்த விமலுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினார்.
நடிகை ஜூலி பேசும்போது, நான் மலையாளத்தை சேர்ந்தவள். படத்தில் ஜனாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். படத்தில் நடிக்க ஆரம்பிக்கும்போது எனக்கு அவ்வளவாக தமிழ் தெரியாது. அவர்தான் நிறைய சொல்லிக் கொடுத்தார். அவருக்கு நான் மலையாளம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். இதில் நடித்த மற்ற நடிகர்களுக்கு காமெடி காட்சிகள் நிறைய இருந்தாலும் எனக்கு சென்டிமென்ட் காட்சிகள் தான் இருந்தன என்று கூறினார்.
நடிகை ஹர்ஷிதா பேசும்போது,
இது என்னுடைய முதல் படம் என்பதால் அந்த அனுபவமே புதிதாக இருந்தது. நான் தெலுங்கை சேர்ந்தவள். அங்கே சந்திரமுகி படம் வெளியாகியதிலிருந்து வித்யாசாகரின் மிகப்பெரிய ரசிகை நான். அவருடைய இசையில் இந்த படத்தில் நடித்ததுடன் ஒரு அருமையான மெலடி பாடல் கிடைத்திருப்பது அதிர்ஷ்டம். நானும் இந்த படத்தில் ஜனாவுக்கு ஜோடியாக நடித்திருப்பதால் விமலுடன் குறைவான காட்சிகளிலேயே நடித்திருக்கிறேன். ஆனாலும் விமல் பழகுவதற்கு இனிமையான மனிதர் என்று கூறினார்.
நடிகர் ஜனா பேசும்போது,
மக்களை சிரிக்க வைக்கின்ற ஒரு கலகலப்பான படத்தில் நடிக்கலாமே என்கிற எண்ணம் இருந்தபோதுதான் எழில் சாரின் இந்த படத்தில நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னை சுற்றி இருக்கும் நடிகர்கள் நடிப்பது, காமெடியை இம்ப்ரூவ் செய்து பேசுவது என ஒரே கலாட்டாவாக இருக்கும். அவர்களை பார்த்து நானும் ஏதாவது இம்ப்ரூவ் பண்ணலாமா என உதவி இயக்குனர்களிடம் கேட்டால், நீங்கள் உங்களுடைய மீட்டருக்கு மேலே நடிக்க கூடாது. நீங்கள் காமெடி பண்ணக்கூடாது, உங்களை சுற்றி தான் காமெடியே நடக்கும் என்று சொல்லிவிட்டார்கள். விமல் சார் மற்றவர்கள் நடிப்பதற்கு நிறைய இடம் கொடுப்பார் என்று கூறினார்.
விஜய் டிவி நடிகர் புகழ் பேசும்போது, சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன். ஆனாலும் உங்களை குக்கு வித் கோமாளியில் பார்த்தது போல சினிமாவில் பார்க்க முடியவில்லை என்று பலரும் கேட்பார்கள். அந்த குறையை இந்த படத்தின் மூலம் எழில் சார் தீர்த்து வைத்துள்ளார். எனக்கு பெண் வேடம் மூலமாகத்தான் பெரிய அளவு பிரபலம் கிடைத்தது. இந்த படத்திலும் அப்படி ஒரு கதாபாத்திரத்திலே நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சினிமாவில் எப்போது காமெடி பண்ண போகிறீர்கள் என எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பதில் சொல்லும் படமாக இந்த தேசிங்குராஜா 2 இருக்கும் என்று பேசினார்.
இயக்குநர் ஆர்.கே செல்வமணி பேசும்போது, காமெடி படங்கள் எடுப்பது ரொம்பவே கஷ்டம். அதனால்தான் என்னுடைய படங்களில் பெரும்பாலும் காமெடியே இருக்காது. இசையமைப்பாளர் வித்யாசாகரை பொறுத்தவரை அவர் ஒரு இலக்கிய கவிஞர் என்று சொல்லலாம். பாடல்களில் வேற்றுமொழி வார்த்தைகளை கூட அனுமதிக்க மாட்டார். அவர் எப்படி இப்படி ஒரு பாடலை இந்த படத்தில் போட்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த 25 வருடத்தில் அவர் நிறைய மாறிவிட்டார். இளையராஜாவிற்கு பிறகு இசையை அதிகமாக நேசிப்பவர் வித்யாசாகர் தான்.
இயக்குனர் எழில் இந்த படத்தில் பத்து இயக்குனர்களை நடிக்க வைத்தது போல அடுத்த படத்தில் அவர் பத்து தயாரிப்பாளர்களை கட்டாயம் நடிக்க வைக்க வேண்டும். தயாரிப்பாளர் சங்கம், பெப்சி பிரச்சினைகளை பேசிவிட்டு வீட்டுக்கு டென்ஷனுடன் வருவதெல்லாம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் அந்த ஆறு மணி காமெடியை தான் பார்த்து ரிலாக்ஸ் ஆவேன். மக்களுக்கு என்ன தேவையோ அதை கொடுக்க வேண்டும் என்பதற்காக தன்னை மாற்றிக்கொண்டு படங்களை கொடுக்கக்கூடியவர் இயக்குநர் எழில்.
விமல் இந்த படத்தில் அழகாக இருக்கிறார். பிரபுதேவா போல டான்ஸ் ஆடி இருக்கிறார். எப்படி நம்மை படம் எடுக்க வேண்டாம் என்று சொன்னால் கோபப்படுவோமோ அதேபோலத்தான் யூடியூப்பில் விமர்சனம் பண்ணுபவர்களை பண்ண வேண்டாம் என்று சொன்னால் அவர்களுக்கு கோபம் வரும். அது மட்டுமல்ல ஒரு படத்தை பற்றி நல்லபடியாக விமர்சனம் பண்ணினால் அதை பார்ப்பதற்கு இங்கே ஆள் இல்லை. விமர்சனம் பண்ணுவதை தடுக்க முடியாது. ஆனால் படம் வெளியாகி ஒரு நாள் கழித்தாவது விமர்சனம் செய்யலாமே என்று பேசினார்.
இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது, இயக்குநர் எழில் இந்த டீசரில் என் கதாபாத்திரத்தை காட்டவில்லை. நான் என்ன கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன் என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார் போல. அப்படி ஒரு முதன்மையான மற்றும் முக்கியமான கதாபாத்திரம் அது. படத்தில் நான் இட்ட வேலையை செய்வதற்காகத்தான் அனைவரும் ஓடிக்கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு கதாபாத்திரம். இயக்குநர் எழிலுக்கு திரையுலகில் இது பொன்விழா ஆண்டு என்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக அமையும். இந்த படத்தில் நடிகராக அறிமுகம் ஆகி உள்ள ஜனாவை பார்க்கும் போது நடிகர் ராணாவை பார்த்த உணர்வு ஏற்படுகிறது. நடிகர் (விஜய் டிவி)புகழ் பெண்ணாக பிறந்திருக்கலாம். அந்த அளவுக்கு கலக்கி இருக்கிறார். நானும் செல்வமணியும் படம் இயக்கிய காலங்களில் இருந்த ஹீரோக்களில் வெள்ளந்தியாக பேசக்கூடியவரான நடிகர் விஜயகாந்துக்கு அடுத்ததாக நான் இப்போது பார்க்க கூடியவர் நடிகர் விமல் தான். எல்லாவற்றையும் அரவணைத்து போகக்கூடிய மனப்பான்மை கொண்ட விமலுக்கு தோல்வி என்பது கிடையாது. இந்த படம் வெற்றி படமாக அமையும் என்று பேசினார்.
நாயகன் விமல் பேசும்போது,
இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் இரண்டு படங்கள் அல்ல.. இரண்டேகால் படங்கள் பண்ணியிருக்கிறேன். கில்லி படத்தில் கொக்கர கொக்கரக்கோ பாடலில் நான் ஆடியிருக்கிறேன். இயக்குநர் எழிலுடன் இது எனக்கு இரண்டாவது படம். கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் எழிலுடன் இணைந்துள்ளேன். இதற்கு முன்பு நான் நடித்த விலங்கு என்கிற வெப்சீரிஸ், போகும் இடம் வெகு தூரம் இல்லை படம் எல்லாம் சீரியஸாக இருந்தன. அந்த சமயத்தில் தான் இயக்குனர் எழில் தேசிங்குராஜா 2 படத்திற்கு என்னை அழைத்தார். அப்படி சீரியஸாக நடித்துவிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோதே அவ்வளவு ரிலாக்ஸாக, ஜாலியாக இருந்தது
இது எழிலின் 25வது வருடம். அவர் இன்னும் பொன்விழா ஆண்டு காண வேண்டும். நிறைய நகைச்சுவை நடிகர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். இந்த படத்தில் நடித்துள்ள ஜனாவை பொருத்தவரை எப்போதுமே ஒரு தயாரிப்பாளரின் பையன் என்பதை காட்டிக் கொண்டதே இல்லை. படம் முடிவடையும் சமயத்தில் தான் நிறைய பேருக்கு அவர் தயாரிப்பாளர் மகன் என்றே தெரிய வந்திருக்கும். அவர் இன்னும் நிறைய உயரங்களை தொட வேண்டும் என்று பேசினார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது,
எழில் சாருக்கு இது 25வது வருடம். விமலை இப்படி வேட்டி சட்டையில் பார்க்கும்போது அவரது இயல்பிலும் சரி உடையிலும் சரி 100% விஜயகாந்த் மாதிரி தான் இருக்கிறார். இசையமைப்பாளர் வித்யாசாகர் மெலடியில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் கிங். என்னை கெடுத்ததே அவர்தான். திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு அருமையான மெலடி பாடல் ஒன்றை உருவாக்கி அதை சொல்வதற்காக அவர் கில்லி படப்பிடிப்பில் இருந்தபோது பார்க்க சென்றிருந்தேன். அங்கே வித்யாசாகர் இசையில் அப்படி போடு போடு என்கிற பாடல் காட்சி படமாகி கொண்டிருந்தது. அதை பார்த்ததும் நம் ரூட்டை மாற்ற வேண்டும் என நினைத்து தான், மீண்டும் அந்தப் பாடலை ‘அத்த பெத்த வெத்தலை’ என்கிற குத்துபாட்டாக மாற்றினேன். என்னை குத்துப்பாட்டு இயக்குனராக மாற்றியது வித்யாசாகர் தான். அவருடைய எதிரும் புதிரும் படத்தில் இடம்பெற்ற தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலில் கூட முதலில் சிம்ரன் நெப்போலியனும் ஆடுவதாக தான் இருந்தது. அதன் பிறகு தான் ராஜூசுந்திரம் மாஸ்டர் நடித்தார். இன்றைக்கும் அந்த பாடல் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ஒரு வகையில் நானும் எழில் சாரும் எதிரும் புதிருமாகத்தான் இருக்கிறோம். நான் ஸ்கிரிப்ட் தாண்டி யாரையும் பேச விட மாட்டேன். இவர் அப்படி பேசுவதற்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் என்று எல்லோரும் பேசுவதில் இருந்து தெரிந்து கொண்டேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள் என்று பேசினார்.
இயக்குநர் எழில் பேசும்போது,
ஒரு படத்தில் நடிக்கும் போது அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்பது பெரிய விஷயம் கிடையாது. படம் முடிந்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு அனைவரும் வந்து கலந்து கொள்வது என்பது தான் இந்த விழாவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம், இந்த படத்தின் வேலைகளை முடித்துவிட்டு நான் இன்னொரு பட வேலைகளை கவனிக்க சென்று விட்டேன். ஆனால் தயாரிப்பாளர் ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்தி அழகாக இதை முடித்துள்ளார். அந்த வகையில் சினிமாவை நேசிக்கக்கூடிய ஒரு தயாரிப்பாளர் நமக்கு கிடைத்துள்ளார். தேசிங்கு ராஜா படத்தில் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது விமல். இந்த இரண்டாம் பாகத்தின் வெற்றிக்கும் அவர்தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார். இத்தனை நடிகர்களை வைத்து நான் படம் பண்ணியது கிடையாது. இந்த படத்தில் ஸ்கிரிப்ட் வடிவமைப்பு வேற மாதிரி இருக்கும். மின்னல் மாதிரி போகும். வித்யாசாகர் சொன்னது போல ஒரு காமெடி சிரித்து முடிந்து உடனடியாக அடுத்த காமெடி வந்துவிடும். அவ்வளவு ஸ்பீடாக இருக்கும். இந்த படத்தில் காமெடி நன்றாகவே ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது. என்னுடைய மூன்றாவது படத்திலேயே வித்யாசாகர் இசையமைத்தார். அப்போது நல்ல பாடல்களாக கொடுத்து விட்டார். ஆனால் அவருடைய திறமை என்ன என்பது எனக்கு அப்போது தெரியவில்லை இப்போது மீண்டும் அவருடன் பணியாற்றும்போது தான் பிரமிப்பாக இருக்கிறது என்று பேசினார்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில், சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில், ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “3BHK”. கதைப்படி.. சென்னையில் வாடகை வீட்டில், வாசுதேவன் ( சரத்குமார் ), சாந்தி ( தேவயானி ) […]
விமர்சனம்சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில், சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில், ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “3BHK”.
கதைப்படி.. சென்னையில் வாடகை வீட்டில், வாசுதேவன் ( சரத்குமார் ), சாந்தி ( தேவயானி ) தம்பதி தங்களது மகன் பிரபு ( சித்தார்த் ), மகள் ஆர்த்தியிடன் ( மீதா ரகுநாத் ) வசித்து வருகின்றனர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சரத்குமார், தனது குழந்தைகளின் எதிர்கால நலனை நினைத்து சொந்தமாக மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடு வாங்க வேண்டும் என பல்வேறு வகையில் திட்டம் தீட்டுகிறார். பணமும் சேர்த்து வைக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ வகையில் தடைபடுகிறது. மகன் சித்தார்த் படிப்பில் குறைவான மதிப்பெண் பெறும் போதெல்லாம், மனம் சோர்ந்து விடாமல் தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே என பாசத்துடன் தேற்றி உற்சாகப்படுத்தி மகனின் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்.
மகன் பிரபு நன்றாக படித்து, நல்ல வேலைக்குப் போய் தனது சொந்தவீடு கனவை நிறைவேற்றுவான் என நம்பிக்கையுடன் இருக்கிறார். ஆனால் மகன் சித்தார்த் இஷ்டப்பட்ட வேலை கிடைக்காவிட்டாலும், கிடைக்கும் வேலையை செய்து தந்தையின் கஷ்டத்தில் பங்குபெற நினைக்கிறார்.
இருபது ஆண்டுகளாக சொந்தவீடு வாங்கவேண்டும் என்கிற வாசுதேவனின் கனவு நிறைவேறியதா ? இல்லையா என்பது மீதிக்கதை..
நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கை முறையையும், சென்னையில் வாடகை வீட்டில் வசித்துவரும் ஒவ்வொருவரின் சொந்தவீடு கனவுகளையும் எதார்த்தமாக கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் இயக்குநர். படம் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும், படத்தின் காட்சிகளில் ஏதோ வகையில் தங்களை கணெக்ட் செய்யும் அளவுக்கு திரைக்கதை நகர்கிறது.
சரத்குமார் பொறுப்பான தந்தையாக, சந்தோஷம், கோபம், வெறுப்பு என பல்வேறு விதமான முகபாவனையுடன் நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் மனதில் தனது கதாப்பாத்திரத்தை பதிய வைத்துள்ளார். அவரது மனைவியாக தேவயானி பொருத்தமான ஜோடி என்றாலும், அவ்வப்போது வந்து போகிறார்.
சித்தார்த், மீதா ரகுநாத் இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
மொத்தத்தில்.. நிகழ்காலத்தின் நிஜங்களை தேர்வுசெய்து, மக்களின் மனங்களில் இடம்பெறும் வகையில், ஒரு படைப்பை கொடுத்துள்ளது படக்குழு.
பிரேவ்மைன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், சூர்யா சேதுபதி, சம்பத், வரலெட்சுமி, தேவதர்ஷினி, அபி நட்சத்திரா உள்ளிட்டோர் நடிப்பில், அனல் அரசு தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பீனிக்ஸ் வீழான்”. கதைப்படி.. வடசென்னை பகுதியில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ சம்பத்தை பொது இடத்தில் சூர்யா […]
விமர்சனம்பிரேவ்மைன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், சூர்யா சேதுபதி, சம்பத், வரலெட்சுமி, தேவதர்ஷினி, அபி நட்சத்திரா உள்ளிட்டோர் நடிப்பில், அனல் அரசு தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பீனிக்ஸ் வீழான்”.
கதைப்படி.. வடசென்னை பகுதியில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ சம்பத்தை பொது இடத்தில் சூர்யா கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்கிறான். அவனுக்கு 17 வயது என்பதால் அரசு கூர் நோக்கு இல்லத்தில் அடைத்து, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிடுகிறது. கொலை செய்யப்பட்ட எம்.எல்.ஏ வின் மனைவி வரலெட்சுமி சூர்யாவை சிறையிலேயே கொலை செய்ய பல கட்டங்களாக ஆட்களை அனுப்புகிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் சூர்யா எதிரிகளை வீழ்த்தி தப்பித்து வருகிறான்.
எதற்காக ஆளும்கட்சி எம்.எல்.ஏ வை சூர்யா கொலை செய்தான் ? அவனது பின்னணி என்ன என்பது மீதிக்கதை..
சண்டை பயிற்சி இயக்குநர் படத்தின் இயக்குநர் என்பதால் படம் முழுவதும், கதையோடு ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளது. எளிய குடும்பத்து இளைஞனின் கனவுகள், குடும்ப சூழ்நிலையை எதார்த்தமாக கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் இயக்குநர். படத்தின் முதல்பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் இல்லை என்றாலும் சோர்வில்லாமல் கதை நகர்கிறது. அதேபோல் க்ளைமேக்ஸ் காட்சியில், சூர்யா பீனிக்ஸ் போன்றவன் என படத்தின் தலைப்பிற்கு ஜெயிலர் விளக்கம் சொன்னதோடு படத்தை முடித்திருக்கலாம்.
முதல் படத்திலேயே தன்னை ஒரு நடிகராக நிலைநிறுத்திக்கொள்ள சூர்யா கடுமையாக உழைத்திருக்கிறார். தனது உருவத்திற்கேற்ப கதையை தேர்வு செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம். திரையுலகில் இவரது தந்தை விஜய் சேதுபதி, நடிப்பில் எட்டடி கூட தாண்டாத நிலையில், அவரது மகன் பதினாறு அடிகளை தாண்டி இருக்கிறார் என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பை மகனோடு ஒப்பிட்டால், மகனிடம் வீழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு தொழில் நேர்த்தி சூர்யாவின் நடிப்பில் வெளிப்படுகிறது.
அதேபோல் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இசையமைப்பாளர் சாம் சி எஸ் இருவரும் தங்களது பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
வரலெட்சுமி, தேவதர்ஷினி இருவரும் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஜியோ ஹாட்ஸ்டார், ஜி.கே.எஸ் புரொடக்சன்ஸ், செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன், அஞ்சலி, அஜு வர்க்கீஸ், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடிப்பில், ராம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பறந்து போ”. […]
விமர்சனம்ஜியோ ஹாட்ஸ்டார், ஜி.கே.எஸ் புரொடக்சன்ஸ், செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன், அஞ்சலி, அஜு வர்க்கீஸ், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடிப்பில், ராம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பறந்து போ”.
கதைப்படி.. சென்னையில் சிவா, கிரேஸ் ஆண்டனி தம்பதியருக்கு எட்டு வயதில் பையன் இருக்கிறான். தாய் சேலை வியாபாரம் செய்துவருகிறார். கோவையில் நடைபெறும் கண்காட்சியில் ஸ்டால் போட்டு வியாபாரம் செய்வதற்காக கோவை செல்கிறார். பையன் மிதுன் தந்தை சிவாவுடன் இருக்கிறான். சிவா வெளியில் சென்றபோது வீட்டில் தனியாக விளையாடுகிறான். அப்போது சில பொருட்கள் உடைபடுகிறது. எண்ணெய் டின்னும் உடைந்து சிதறி கிடக்கும் நிலையில், தந்தை உள்ளே வந்ததும் சிறிது கோபப்படுகிறார். பின்னர் பையன் முகத்தில் லேசாக அரைகிறார். இதனால் பையன் கோபப்பட்டு சாப்பிடாமல் அடம்பிடிக்க, பின்னர் சமாதனமாகி தந்தையை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிட்டு வெளியே விளையாட செல்கிறான்.
தாய், தந்தையின் அரவணைப்பில் தூங்க வேண்டும், சந்தோசமாக வெளியே செல்ல வேண்டும் என்கிற ஆசை அவனுக்குள் இருக்கிறது. சிவா பையனை சமாதானப்படுத்தி பைக்கில் வெளியே அழைத்துச் செல்கிறார். வழியில் பைக் கடனை வசூலிக்கும் நபர் இவரைப் பார்த்து துரத்த, தப்பித்து ஓடுகிறார். இதற்கிடையில் அவ்வப்போது மனைவியிடம் அலைபேசியில் பேசுகிறார். வீட்டிற்கு சென்றால் கடன்காரன் வருவான் என நினைத்து, தனது அம்மா வீட்டிற்கு சென்று உதவி கேட்கலாம் என செல்கிறார். அப்போது பையன் சில விஷயங்களுக்காக அடம்பிடிக்கிறான்.
மகனின் ஆசையை சிவா நிரவேற்றினாரா ? கடன் பிரச்சினையிலிருந்து மீண்டு வந்தாரா என்பது மீதிக்கதை..
தந்தை கதாப்பாத்திரத்தில் சிவா அச்சு அசலாக பொருந்தியிருக்கிறார். தனக்கே உரிய வழக்கமான நையாண்டி நடிப்புகளை ஓரம் கட்டிவிட்டு, இயக்குநர் போக்கில் தன்னை ஒரு நடிகராக நிரூபித்துள்ளார்.
நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கை முறையையும், குழந்தைகளின் கனவுகளையும், பெற்றோர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை தனது அற்புதமான திரைக்கதையின் மூலம், அழகாக காட்சிப்படுத்திய விதம் சிறப்பு.
அஞ்சலியின் கதாப்பாத்திரம் ரசிக்கும்படியாக உள்ளது. ஒளிப்பதிவாளரின் பணி சிறப்பு.
படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் உறுப்பினர் சேர்க்கை முகாமை இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். மத்தியில் ஆளும் பாசிச பா.ஜ.க அரசு […]
அரசியல்இராமநாதபுரம் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் உறுப்பினர் சேர்க்கை முகாமை இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.
மத்தியில் ஆளும் பாசிச பா.ஜ.க அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு இழைத்து வரும் அநீதிகளுக்கு எதிராக திராவிட மாடல் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தையும், தமிழ் மொழியையும் வஞ்சித்து வரும் பாசிச பா.ஜ.க அரசிற்கு எதிராக தமிழ்நாட்டு மக்களை சந்தித்து, முதலமைச்சரின் மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் எடுத்துக் கூறி, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும், தொகுதிக்கு 90 ஆயிரம் உறுப்பினர்கள் வீதம் நான்கு தொகுதிகளுக்கு சுமார் நான்கு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர்,
தி.மு.க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் களப்பணியாற்றி அதிகளவு உறுப்பினர்கள் சேர்க்கும் முகாமிற்கான துவக்க நிகழ்ச்சி இராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமையில், இராமநாதபுரம் நகர் வடக்கு, தெற்கு, மண்டபம் மேற்கு ஒன்றியம், மண்டபம் மத்திய ஒன்றியம், மண்டபம் கிழக்கு ஒன்றியம், மண்டபம் பேரூர், மண்டபம் கிழக்கு ஒன்றியம், இராமேஸ்வரம் நடராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் வண்ணமான கருப்பு, சிவப்பு வண்ணத்தில் சட்டையணிந்து இராமநாதபுரம் தெற்கு நகரில் 10-வது வார்டிலும், வடக்கு நகரில் 13-வது வார்டிலும் வீடு, வீடாகச் சென்று ஒவ்வொருவர் வீட்டிலும் தரையில் அமர்ந்து, மத்தியில் ஆளும் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதிகளை எடுத்துக்கூறியதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை விளக்கி உறுப்பினர் சேர்க்கை நடத்தினார்.
இந்த நிகழ்வுகளுக்கு இராமநாதபுரம் வடக்கு நகர் செயலாளர், நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், இராமநாதபுரம் தெற்கு நகர் செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் டி.ஆர். பிரவீன் தங்கம், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவீன், மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் வீ.முத்துக்குமார், மண்டபம் பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர் கான், இராமேஸ்வரம் நகர் செயலாளர், இராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர் கே.இ. நாசர்கான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேற்கண்ட இடங்களின் தி.மு.க வார்டு செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
எஸ்.பி.ஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ‘மகேஸ்வரன் மகிமை’. இப்படத்தின் கதையை எழுதி இயக்கி தயாரித்து ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் ஆர். தவமணி.ஒரு முரட்டு சிவ பக்தனின் பக்தியை வெளிப்படுத்தும் வகையில், குடும்பம் சமூகம் சார்ந்த கதையாக […]
சினிமாஎஸ்.பி.ஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ‘மகேஸ்வரன் மகிமை’. இப்படத்தின் கதையை எழுதி இயக்கி தயாரித்து ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் ஆர். தவமணி.
ஒரு முரட்டு சிவ பக்தனின் பக்தியை வெளிப்படுத்தும் வகையில், குடும்பம் சமூகம் சார்ந்த கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன் மற்றும் சிறு முதலீட்டுப் படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச்செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
இந்தப் படத்தின் கதை நாயகனாக ஹரிஹரன் நடித்துள்ளார். ஸ்ரீ செழியன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் லொள்ளு சபா சாமிநாதன் நடித்துள்ளார். தயாரிப்பாளர் ஆர். தவமணி, ஆசிஃபா, சன் டிவி கோபி, மருது, தாமோதரன், மதுரை ரஜினி சோமு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாலமன் ஒளிப் பதிவு செய்துள்ளார். பாடல்களுக்கு ஆர்.டி ஜீவா இசையமைத்துள்ளார்.
பின்னணி இசை லெஷ்வின், படத்தொகுப்பு கிரி.
இவ்விழாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன் பேசும் போது, தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு 240 படம் தயாராகிறது, போன வருஷம் கணக்குப்படி. இதில் பூஜையோடு நின்ற படங்கள், கால்வாசி முடிந்த படங்கள், பாதி முடிந்த படங்கள், முடித்தும் வெளியிட முடியாத படங்கள் என்று எவ்வளவோ படங்கள் முடங்கிப் போய் உள்ளன. படம் எடுப்பதை விட வெளியிடுவது இன்னும் சிரமமாக உள்ளது. கியூபுக்கு பணம் கட்டுவது, பப்ளிசிட்டி என்று ஐம்பது லட்சம் தேவைப்படுகிறது. கியூப்புக்கு பணம் கட்ட முடியாமல் 60 -70 படங்கள் இருக்கின்றன.
சின்ன படங்கள் எப்போதும் குடும்பம், தர்மம் என்ற கதை கொண்டதாக இருக்கும். அவை மக்களுக்குத் தீங்கு செய்யாதவை. 200 கோடி 300 கோடி என்று எடுக்கப்படும் படங்களில் பெரிய பெரிய கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் மது, குடி, கூத்து, போதை மருந்து, வெட்டு குத்து என்று சட்ட விரோத செயல்கள்தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன. சமூகம் சீரழிய சினிமாவும் ஒரு காரணம் என்று சொல்லும் படி அந்த படங்கள் இருக்கும். பெரிய படங்களில் 70% இப்படித்தான் உள்ளன. இது மாதிரி சின்ன பட்ஜெட் படங்களில் அப்படிக் காட்டப்படுவதில்லை. கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து தீமையைப் பரப்புகிறார்கள். எனவே சின்ன பட்ஜெட் படங்களை ஆதரியுங்கள் வெற்றி பெறச் செய்யுங்கள்.
தயாரிப்பாளர் தவமணி இந்தப் படத்தை யாரிடமும் கடன் வாங்காமல் தனது சொந்தக் காசில் எடுத்து முடித்து இருக்கிறார். அவர் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவரை நான் பாராட்டுகிறேன். இப்படிப்பட்டவர்கள் சினிமாவுக்கு வரவேண்டும். இந்தப் படத்தை நான் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று பேசினார்.
சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச் செல்வன் பேசும்போது, நான் மிகவும் சிரமப்பட்டு தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். தயாரிப்பாளர்களின் நிலைமைகளை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆனால் சினிமாவுக்கு எதிரி வெளியிருந்து வருவதில்லை. சினிமாக்காரர்கள் தான் சினிமாவுக்கு விரோதியாக இருக்கிறார்கள். எந்தப் படத்தைப் பற்றியும் தவறாகப் பேசுவது எதிர்மறை விமர்சனங்களைப் பரப்புவது சினிமாக்காரர்கள் தான். படத்தை பார்க்காமலேயே நன்றாக இல்லை, தேறாது, ஓடாது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இப்போது நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் படங்களை எல்லாம் ஓடவில்லை என்கிறார்கள். ஏண்டா நீ படத்தை பார்த்தியா என்றால், அவன் சொன்னான் இவன் சொன்னான் என்கிறான். படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள். அதுவும் விமர்சனம் நீங்கள் செய்யக்கூடாது. நீ விமர்சகன் கிடையாது.
உங்களுக்கு பிழைப்பு தரும் சினிமாவை ஏன் நீங்கள் விமர்சனம் செய்கிறீர்கள் ?அதுதான் உன் வேலையா ? இது அநியாயம் இல்லையா? மரியாதையாகப் படத்தை பார்த்து விட்டுப் பேசு, எவனோ பார்த்ததைப் பற்றி நீ விமர்சனம் செய்யாதே. இப்படி சினிமாக்காரர்களே விமர்சனம் செய்தால் இந்தத் துறை எப்படி உருப்படும் ? சினிமாக்காரர்களே சினிமா விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்போதுதான் இந்த சினிமா உருப்படும். உண்மையிலேயே சினிமாவை நம்பினால் அது யாரையும் கைவிடாது என்று பேசினார்.
நிகழ்ச்சியில் படத்தில் நடித்திருக்கும் கதை நாயகன் ஹரிஹரன், ஆசிஃபா, லொள்ளு சபா சாமிநாதன், இசை அமைப்பாளர்கள் ஆர்.டி. ஜீவா, லெஷ்வின், இயக்குநர் சிதம்பரம், பாடல் ஆசிரியர்கள் செங்கதிர்வாணன், ஹேமந்த் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நியூ மாங்க் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், பிருதிவிராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள், வேலா ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் என். அரவிந்தன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “குட் டே”. கதைப்படி.. திருப்பூரில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் […]
விமர்சனம்நியூ மாங்க் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், பிருதிவிராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள், வேலா ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் என். அரவிந்தன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “குட் டே”.
கதைப்படி.. திருப்பூரில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சாந்தகுமார் ( பிருதிவிராஜ் ராமலிங்கம் ), அந்த நிறுவனத்தின் மேலாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, ஊரிலிருந்து மனைவி கூறும் குடும்ப பிரச்சினை போன்ற காரணங்களால் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, தங்கியிருக்கும் வீட்டு ஓனரிடம் பிரச்சினை செய்து அவரது மண்டையை உடைத்துவிட்டு ஓடுகிறார். பின்னர் சாலையில் லாரி டிரைவரின் செயலால் கண்ணாடியை உடைத்து பிரச்சினை, கல்லூரியில் தன்னோடு படித்த தோழியின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்று தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கேக் வெட்ட சொல்லுதல், காவல் நிலையத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில், ஆய்வாளரின் ஆடையில் வாக்கி டாக்கியிடன் தப்பிக்கிறார்.
போதையில் இருக்கும் ஒருவர், காவல் நிலையத்திலிருந்து தப்பிக்கும் அளவுக்கு காவல் நிலையத்தில் என்ன நடந்தது ? காவலர் உடையில், வாக்கி டாக்கியுடன் சென்ற நபர் சிக்கினாரா ? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது மீதிக்கதை…
திருப்பூரில் குடும்ப சூழலால், படித்த படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலை பார்க்கும் எண்ணற்ற தொழிலாளர்களின் வாழ்க்கை முறையையும், காவல்துறையினரின் வேலைப்பளுவையும், ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக உருவாக்கி, விடியும் அந்த நாள் ஒருவருக்கு “குட் டே” வா, “பேட் டே” வா என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ஒரு இரவில், ஒரு மனிதன் குடித்துவிட்டு அவன் செய்யும் சிறு தவறுகள், அவனது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய கதைக்களத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி, தயாரித்தும் இருக்கிறார் பிருதிவிராஜ் ராமலிங்கம்.
ஆடுகளம் முருகதாஸ், அவரது மனைவி குழந்தையுடன் தோன்றும் காட்சிகள் ரசிக்க வைத்தாலும், சிந்திக்க வைக்கிறது. இதேபோல் பல சம்பவங்கள் தினசரி செய்தித்தாள்களில் படித்தது ஞாபகம் வருகிறது. காளி வெங்கட் தோன்றும் காட்சிகள் பெரும்பாலும் தேவையில்லாதது, அதனை குறைத்து நேரத்தை மிச்சப்படுத்தி இருக்கலாம். வேலா ராமமூர்த்தி கூறும் சம்பவம் பல குடிமகன்களை சிந்திக்க வைக்கும் என்றே சொல்லலாம்.
படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.