0 1 min 3 weeks

ஜி. எஸ். ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் லெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’. இப்படம்  வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் படம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஜி அருள்குமார் பேசியதாவது..,
இப்படத்தில் எனக்கு ஒப்புதல் தந்து உழைத்த அனைவருக்கும் நன்றி. நான் பூ வித்து வளர்ந்தவன், நான் அர்ஜுனின் ஜெண்டில்மேன் படம் பார்த்துள்ளேன். அவரின் ரசிகன் இன்று அவரை வைத்துப் படமெடுத்துள்ளேன் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனக்குத் தேதி தந்து படத்தில் நடித்த ஐஸ்வர்யா, அபிராமி மற்ற நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. அண்ணன் லோகு எனக்கு நிறைய உதவிகள் செய்தார். படத்தை வெளியிட உதவிய தேவராஜ் அண்ணாவுக்கு நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு பேசியதாவது.., ஒரு படத்தின் டிரெய்லர் எவ்வளவு முக்கியம் என எல்லோருக்கும் தெரியும். படம் மிக நன்றாக வந்துள்ளது. அர்ஜூன் , ஐஸ்வர்யா நிறைய சப்போர்ட் செய்தார்கள் என்றார்.

நடிகர் லோகு பேசியதாவது.., ஒரு பெரிய படத்தில், இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளம் உள்ள  படத்தில், எனக்கு  வாய்ப்பு தந்த இயக்குநர் தினேஷுக்கு என் நன்றிகள். தயாரிப்பாளர் அருள்குமார் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்துள்ளேன், அவர் குழந்தை மனதுக்காரர், அவர் மனதுக்கு இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்றார்.

இசையமைப்பாளர் பரத் ஆசிவகன் பேசியதாவது.., தினேஷ் அண்ணனை பல வருடங்களாகத் தெரியும். நான் அஸிஸ்டெண்டாக வேலை பார்த்து வந்தேன். நிறையப் படத்தில் வேலை பார்த்தாலும் கிரடிட் கிடைக்காது. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு தினேஷ் அண்ணனுக்கு நன்றி. தயாரிப்பாளர் அருள்குமார் சாருக்கு நன்றி. நான் நன்றாக வேலை பார்த்துள்ளேன் என நம்புகிறேன். அர்ஜூன் சார் படம் பார்த்து வளர்ந்தவன் நான் அவர் படத்திற்கு வேலை பார்த்தது மகிழ்ச்சி. படத்தில் நாலு பாடல்கள், எல்லாம் நன்றாக வந்துள்ளது. சமீபத்தில் அர்ஜூன் சாருக்காக ஒரு பாடல் செய்தோம், கெனிஷா பாடித்தந்தார். பாடல் அனைவருக்கும் பிடிக்கும், படம் நன்றாக வந்துள்ளது என்றார்.

தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் பேசியதாவது.., இயக்குநர் தினேஷ் மிகக் கடின உழைப்பாளி. அவருக்கு இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் பூ வியாபாரி என்றார்கள். அவர் பெரிய வெற்றி பெற்று கோயம்பேட்டில் கடை போட வாழ்த்துக்கள். அர்ஜூன் சார் படம் பார்த்ததாக சொன்னார்கள். நான் சின்ன வயதில் சங்கர் குரு பார்த்தேன் இன்றும் அப்படியே இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு படம் ஒத்துக்கொள்வது கடினம். இருவரும் சேர்ந்துள்ள இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

பிராங்ஸ்டர் ராகுல் பேசியதாவது.., தினேஷ் எவ்வளவு கஷ்டப்பட்டார் என எனக்குத் தெரியும். இந்தப்படத்தில் ஒரு காமெடி கேரக்டர் செய்துள்ளேன், வாய்ப்பு தந்ததற்கு நன்றி. அர்ஜூன் சாருடன் நடித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. நான் ஒரு படம் இயக்கி வருகிறேன் அதற்கும் ஆதரவு தாருங்கள், இப்படம்  வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை அபிராமி பேசியதாவது..,
இயக்குநர் தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. ஐஸ்வர்யா எப்போதும் மிக இனிமையானவர். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. அர்ஜூன் சாரை எப்போது பார்த்தாலும் ஸ்டைலாக இருக்கிறார். அவர் படத்தில் இருப்பது மகிழ்ச்சி. நான் ஒரு அம்மாவாக நடித்துள்ளேன். குழந்தைகள் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வை இப்படம் தரும் என்றார்.

நடிகர் தங்கதுரை பேசியதாவது..,
இயக்குநர் தினேஷ் இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்துள்ளார். இப்படத்தில் எனக்கே தெரியாத பல லோகேஷன்களை சென்னையில் காட்டினார். எனக்கு நல்ல ரோல் தந்துள்ளார். அர்ஜூன் சாரின் தீவிர ரசிகன். சின்ன வயதில் அவரை நானும், என் நண்பர்களும் போலீஸ் எனத்தான் நினைத்தோம். அவர் படம் பார்த்தால் நாட்டுப்பற்று வரும். அவருடன் நான் நடித்தது எனக்கு பெருமை. ஐஸ்வர்யா ஒரு வெர்சடைல் ஆக்டர் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது என்றார்.

நடிகை பிரியதர்ஷிணி பேசியதாவது.., தீயவர்கள் குலை நடுங்க இந்தப்படத்திற்காக நான் நீண்ட காலம் காத்திருந்தேன், தயாரிப்பாளர் பேசியது மிக உணர்வுப்பூர்வமாக இருந்தது. நான் ஒரு அம்மாவாக நடித்துள்ளேன் மிக நல்ல ரோல். படத்தில் நடித்தது மிக நல்ல அனுபவமாக இருந்தது. அர்ஜூன் சார் எல்லோருக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஐஸ்வர்யா மேடம் நேச்சுரல் ஆக்டர் அவர்களுடன் நடித்தது மகிழ்ச்சி. சமூகத்திற்கு முக்கியமான கருத்தைச் சொல்லும் படம். அனைவரும் இப்படம் பிடிக்கும் என்றார்.

பிரவீன் ராஜா பேசியதாவது.., சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடித்திருந்தேன். அதைப்பார்த்த என் நண்பர் மூலம் இப்பட வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் ஓகே சொன்ன பிறகு தான் அர்ஜூன் சார் ஐஸ்வர்யா மேடமுடன் நடிக்கப் போகிறேன் எனத் தெரிந்தது. உண்மையில் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் உடன் நடித்த போது இருவரும் அவ்வளவு ஆதரவாக இருந்தார்கள். படம் மிக நன்றாக வந்துள்ளது. 4 மொழிகளில் படம் வருகிறது என்றார்.

எழுத்தாளர் அஜயன் பாலா பேசியதாவது.., தமிழில் வரவர எல்லாம் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் போது, தமிழ் தலைப்பு வைத்துள்ள இந்த குழுவிற்கு நன்றி. தயாரிப்பாளரைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக உள்ளது. இம்மாதிரி தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் வர வேண்டும். அர்ஜூன் சாரை திரையில் பார்க்கப் பொறாமையாக உள்ளது. உடலை அவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் மிக நல்ல நடிகை. இசையமைப்பாளர் மிக அற்புதமான பாடல்களைத் தந்துள்ளார். இந்தப்படம் வெற்றி பெற எல்லா அம்சங்களும் படத்தில் உள்ளது என்றார்.

இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது.., அறிமுக இயக்குநர் தினேஷுக்கு வாழ்த்துக்கள். அவருக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளருக்கு நன்றி. அர்ஜூன் சாரின் மிகப்பெரிய ரசிகன், தமிழ் நாட்டிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருக்கலாம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஸ்டார் அர்ஜூன் சார் தான். அட்டகத்தி படத்திலிருந்து ஐஸ்வர்யா மேடம் வளர்ச்சியைப் பார்த்து வருகிறேன். இன்று சோலோ ஹீரோயினாக வளர்ந்துள்ளதற்கு அவரின் நம்பிக்கையும் உழைப்பும் தான் காரணம். அவர் ஒரு படத்தை ஓகே செய்தால் அந்தப்படம் வெற்றி எனலாம். சரியானதை மட்டுமே செய்யும் இருவர் இப்படத்தில் இருக்கிறார்கள். படம் கண்டிப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தில் பெரிய ஹீரோக்கள் படத்தில் வெற்றி தோல்வியில் பங்கு கொள்ள வேண்டும் என தீர்மானம் போட்டுள்ளார்கள் அதை நான் வரவேற்கிறேன். தமிழ் திரையுலகில் நிறையப் பிரச்சனைகளைச் சரி செய்ய வேண்டியுள்ளது. புது தயாரிப்பாளர்கள் பலர் திணறுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இதற்குத் தீர்வு காண வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

வேலூர் திரையரங்கு உரிமையாளர் வி எம் தேவராஜ் பேசியதாவது.., நான் படம் பார்த்துவிட்டேன் அர்ஜூன் சார் மிக அற்புதமாக நடித்துள்ளார். படம் அருமையாக வந்துள்ளது. சக்ஸஸ் மீட்டில் இன்னும் அதிகம் பேசுகிறேன். தயாரிப்பாளருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்றார்.

தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ் மோகன் பேசியதாவது.., சினிமாவில் கனவுகளோடு அலைபவர் தான் தம்பி தினேஷ். அவர் சொன்ன கதையை நம்பி அவருக்கு வாய்ப்பு தந்த அர்ஜூன் சாருக்கு நன்றி. நடிகைக்கென போடப்பட்ட வட்டத்திற்குள் சிக்காத ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் குழந்தை நட்சத்திரம் மிக அற்புதமாக நடித்துள்ளார். வீடும் நாடும் நன்றாக இருக்க வேண்டுமானால் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும் என ஒரு கருத்தைச் செய் நேர்த்தியுடன் செய்துள்ள தினேஷுக்கு வாழ்த்துக்கள். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

விசிக கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னியரசு பேசியதாவது.., தினேஷ் இலெட்சுமணனுக்கு என் வாழ்த்துக்கள். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். கலைஞர் தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு என அறிவித்தார். இப்போது அவரது மகன் ஆட்சியில் இருக்கிறார். இன்று அருமையான தமிழில் தலைப்பு வைத்துள்ள, நல்ல கருத்தைச் சொல்லும் இம்மாதிரி படங்களுக்கு வரிவிலக்கு தர வேண்டுமென முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகள் எப்படி எளிதாக தப்பிக்கிறார்கள், அரசும் அதிகார வர்க்கம் எப்படி துணை போகிறது என்பதை இப்படம் பேசுகிறது. இதில் உண்மையான நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறப்பான ஆக்சன் நாயகியாக நடித்துள்ளார். ஆக்சன் கிங் அர்ஜூனை பக்கத்தில் வைத்து அவர் ஆக்சனில் நடித்திருப்பது சிறப்பு. ஆக்சன் கிங் அர்ஜூன், இப்படத்திற்கு முழு ஆதரவு தரும் அவரது பண்புக்கு வாழ்த்துக்கள். அடுத்தடுத்து இப்படக்குழு மிகப்பெரிய படங்கள் செய்து ஜெயிக்க வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது.., இப்படம் ஒரு உண்மையான சம்பவம், இயக்குநர் சொன்ன போது எனக்கு உடல் நடுங்கி விட்டது. உண்மையான கதையைச் சொல்லும் போது மக்கள் நெருக்கமாக உணர்வார்கள். அவர்களுக்குப் பெரிய விழிப்புணர்வை அது தரும். கமர்ஷியல் சினிமா உலகில் இப்படி உண்மைக் கதையை சொல்ல முயற்சித்த தினேஷுக்கு நன்றி. அர்ஜூன் சார் ரியல் லைஃபில் உண்மையாகவே ஜெண்டில்மேன். அவர் மேஜிக்கை நேரில் பார்த்தது நல்ல அனுபவம். நான் நன்றாக ஃபைட் செய்ய அவர் தான் காரணம். அவர் தான் இந்தப்படத்தில் ஹீரோ என்றார்.

இயக்குநர்  தினேஷ் இலெட்சுமணன் பேசியதாவது.., என் 15 வருட ஏக்கம் தான் இந்தப்படம். என்னவாக வந்தோம், என்னவாக இருக்கிறோம் என்னவாக போகிறோம் என்பது முக்கியம், என என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்த அனைவருக்கும் நன்றி. என் அப்பா அம்மாவிற்கு நன்றி. என் அப்பா தான் சினிமா ஆசையை என்னுள் தூண்டியவர். தயாரிப்பாளர் அருள்குமார் அவருக்கு ஊரில் அவ்வளவு மரியாதை, அவர் ரெண்டு படம் சரியாகப் போகவில்லை. ஆனால் அவர் உனக்கு ஒரு படம் தருகிறேன் என்றார். எனக்கு அவர் மேல் இருந்த நம்பிக்கையை விட அவர் என் மேல் வைத்த நம்பிக்கை அதிகம். என்னிடம் எந்த கேள்வியும் கேட்க மாட்டார். அவர் நம்பிக்கைக்கு நன்றி. டெக்னீஷியன்ஸ் எல்லோரும் எனக்கு முழு ஒத்துழைப்பு தந்தார்கள். இப்படம் பார்க்கும் போது இசையமைப்பாளரின் திறமை உங்களுக்குப் புரியும். எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் முழு உழைப்பைத் தந்தார். எழுத்தாளர் நவனீத்திற்கு நன்றி. அர்ஜூன் சார் ஷீட்டிங்கில் நிறைய கரக்சன் சொல்வார், அப்போது நிறைய விவாதிப்போம். அதெல்லாம் படம் முடிந்து பார்க்கும் போது  தான் அவரின் எக்ஸ்பீரியன்ஸ் எனக்குப் புரிந்தது. அவ்வளவு ஆதரவாக இருந்தார். ஐஸ்வர்யா மேடம் மிகக் கடுமையாக உழைத்துள்ளார். அர்ஜூன் சாருக்கு சமமான பாத்திரம். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் நிறைய நடிகர்கள் எல்லோரும் கதைக்கு முக்கியத்துவமாக இருப்பார்கள். இந்தப்படத்தில் அனிகா குழந்தை நட்சத்திரம் முக்கியமான கேரக்டர் அதை அவ்வளவு தத்ரூபமாக சூப்பராக நடித்துள்ளார். லோகு சார் இப்படத்தில் அருமையாக நடித்துள்ளார். இங்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகர் அர்ஜூன் பேசியதாவது..,
எனக்கு இது மிக முக்கியமான படம், எனக்கு எல்லா படமுமே முதல் படம் போலத்தான். தயாரிப்பாளர் அருள்குமார் பூ வித்தாகச் சொன்னார்கள், ஆனால் அவர் சினிமா மீது வைத்திருக்கும் அன்பு தான் அவரை தயாரிப்பாளர் ஆக்கியுள்ளது. எல்லோரையும் மதிக்கும் அவரது பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மனதிற்காகவே இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். நான் நிறைய புதிய இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளேன், இயக்குநர் தினேஷ், என்னுடன் நிறைய விவாதித்தாக சொன்னார் ஆனால் எல்லாமே படத்திற்காகத் தான், படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். இப்படத்தில் ஹீரோ அவர் தான், இவர் தான் என்றார்கள், ஆமாம் இப்படத்தில் மூன்று ஹீரோ, பிரவீன் ஒரு ஹீரோ, ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னொரு ஹீரோ. ராஜேஷ் அவரது தந்தையின் பெயர், அவர் சின்ன வயதில் தவறிவிட்டார். அவரும் நடிகர் தான், அவருடன் நான் சில படங்களில் நடித்துள்ளேன் அவர் எனக்கு சிறந்த நண்பர். ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறந்த நடிகை, அவர் இன்னும் வளர வாழ்த்துக்கள். தங்கதுரையுடன் ஷீட்டிங்கில் அதிகம் சுற்றிக்கொண்டிருப்பேன் நல்ல மனிதர். எல்லோருடைய ஆசீர்வாதமும் அன்பும் இப்படத்திற்கு கிடைக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *