பிரேவ்மைன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், சூர்யா சேதுபதி, சம்பத், வரலெட்சுமி, தேவதர்ஷினி, அபி நட்சத்திரா உள்ளிட்டோர் நடிப்பில், அனல் அரசு தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பீனிக்ஸ் வீழான்”. கதைப்படி.. வடசென்னை பகுதியில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ சம்பத்தை பொது இடத்தில் சூர்யா […]
விமர்சனம்
ஜியோ ஹாட்ஸ்டார், ஜி.கே.எஸ் புரொடக்சன்ஸ், செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன், அஞ்சலி, அஜு வர்க்கீஸ், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடிப்பில், ராம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பறந்து போ”. […]
விமர்சனம்
இராமநாதபுரம் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் உறுப்பினர் சேர்க்கை முகாமை இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். மத்தியில் ஆளும் பாசிச பா.ஜ.க அரசு […]
அரசியல்
சமீபத்தில் வெளியான நானியின் தசரா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை படைத்துள்ளது. இனி கதைத் தேர்வில் மிகுந்த கவனம் காட்டுவதே நல்ல எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் சொன்ன அறிவுரை, நானியை ரொம்பவும் யோசிக்க வைத்திருக்கிறது. இதனைத் […]
சினிமாசமீபத்தில் வெளியான நானியின் தசரா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை படைத்துள்ளது. இனி கதைத் தேர்வில் மிகுந்த கவனம் காட்டுவதே நல்ல எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் சொன்ன அறிவுரை, நானியை ரொம்பவும் யோசிக்க வைத்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து பலரிடமும் கதை கேட்ட நானி, அடுத்து மலையாள இயக்குனர் ஜித்து ஜோசப்புடன் கைகோர்க்க முடிவெடுக்கிறார். ஜித்து ஜோசப் சொன்ன க்ரைம் த்ரில்லர் கதை நானிக்கு ரொம்பவே பிடித்துப் போனதால் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.
நடிகை ஶ்ரீ தேவி விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து இளம் வயதிலேயே எம்ஜிஆர், சிவாஜி படங்களில் நடிக்கத் தொடங்கி, பின்னர் ரஜினி, கமல் என முன்னனி நட்சத்திரங்களுடனும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நடித்து புகழின் உச்சத்தில் இருக்கும் போது, இந்தி திரையுலகில் […]
சினிமாநடிகை ஶ்ரீ தேவி விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து இளம் வயதிலேயே எம்ஜிஆர், சிவாஜி படங்களில் நடிக்கத் தொடங்கி, பின்னர் ரஜினி, கமல் என முன்னனி நட்சத்திரங்களுடனும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நடித்து புகழின் உச்சத்தில் இருக்கும் போது, இந்தி திரையுலகில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே குடியேறி இல்லற வாழ்க்கையை தொடங்கினார். சில காலம் கழித்து மீண்டும் நடிப்பை தொடர்ந்து தனது இறுதிக் காலங்களில் மீண்டும் தமிழ் திரையுலகில் இளைய தளபதி விஜய்யிடன் நடித்து தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தார்.

அவரைப் போலவே அவரது மகள் ஜான்வி கபூரும் தமிழ் திரையுலகில் தனது அம்மாவைப் போல் புகழ் பெற வேண்டும் என, தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது ஜான்வி கபூர், இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தில் நடிக்கப் போகிறார் என திரையுலகினர் மத்தியில் பேசப்படுகிறது. இரு தரப்பிலும் இது குறித்த விளக்கம் வெளியாகாத நிலையில், இந்தியில் அருண் தவானை வைத்து இயக்கவிருக்கும் படத்தில்தான் ஜான்வி கபூரை ஜோடியாக்க அட்லி திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள்.

உண்மையில் தமிழில் பக்காவான எண்ட்ரி கொடுக்கத்தான் நல்ல இயக்குனரைத் தேடி வருகிறாராம் ஜான்வி கபூர். இயக்குனர் சங்கர் தொடங்கி அ. வினோத் வரை அத்தனை இயக்குனர்களும் தற்போது மிகவும் பிஸியாக இருப்பதால், நல்ல கதையுடன் யார் வந்தாலும் ஓகே என்கிறாராம் ஜான்வி கபூர்.
சசிக்குமார் இயக்கத்தில், சண்முகபாண்டியன் நடிப்பில் கைரேகை சட்டத்தின் வரலாற்றைச் சொல்லும் “குற்றப் பரம்பரை” கதையை ஹார்ட் ஸ்டார் ஓடிடி தயாரிக்க, படக்குழு படப்பிடிப்புக்கு கிளம்ப தயாராகி வருகிறார்கள். சினிமா, அரசியல் என இரண்டிலும் தனக்கென தனி பாணியை உருவாக்கி வெற்றி கண்டவர் […]
சினிமாசசிக்குமார் இயக்கத்தில், சண்முகபாண்டியன் நடிப்பில் கைரேகை சட்டத்தின் வரலாற்றைச் சொல்லும் “குற்றப் பரம்பரை” கதையை ஹார்ட் ஸ்டார் ஓடிடி தயாரிக்க, படக்குழு படப்பிடிப்புக்கு கிளம்ப தயாராகி வருகிறார்கள்.

சினிமா, அரசியல் என இரண்டிலும் தனக்கென தனி பாணியை உருவாக்கி வெற்றி கண்டவர் கேப்டன் விஜயகாந்த். இவரது இரண்டு மகன்களில் மூத்த மகன் பிரபாகரன் அரசியலிலும், இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவிலும் கவணம் செலுத்தி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் சண்முகபாண்டியன் குற்றப் பரம்பரை கதையில் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க பேசி வைத்திருந்தார்கள். அவரும் வருடக் கணக்கில் தாடி, மீசை வளர்த்து படப்பிடிப்புக்கு கிளம்ப தயாரானார்.

இந்த விஷயம் இயக்குனர் சீமானுக்கு தெரிய வந்ததும், தமிழ் பரம்பரையின் கதையில் அவருக்கு என்ன வேலை ? என இயக்குனர் சசிக்குமாரிடம் கேட்டிருக்கிறார். பரம்பரை கதையில் கேப்டன் பரம்பரையில் வந்த சண்முகபாண்டியன் நிச்சயம் சாதிப்பார் என அவருக்கு விளக்கம் சொல்லி போராடி வருகிறதாம் படக்குழு.
வருடக் கணக்கில் தாடி, மீசையுடன் காத்திருக்கும் சண்முக பாண்டியன், இந்த வரலாற்று கதையில் தனக்கு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா என்கிற குழப்பத்தில் இருந்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் பிரமாண்டமான பொருட்செலவில் படங்களை தயாரிக்கும் “லைகா” நிறுவனத்தில் கடந்த 16 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தார்கள். பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு சம்பளம் கொடுத்த வகையில், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக அதிகாரிகளுக்கு […]
அரசியல்தமிழ் திரையுலகில் பிரமாண்டமான பொருட்செலவில் படங்களை தயாரிக்கும் “லைகா” நிறுவனத்தில் கடந்த 16 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தார்கள். பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு சம்பளம் கொடுத்த வகையில், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிகாரிகள் சோதனை செய்திருக்கிறார்கள்.

இந்த சோதனையின் போது சிக்கிய ஓர் ஆவணம் அனைவரையும் அதிர வைத்திருக்கிறது. அந்த ஆவணத்தில் ரஜினியின் பெயரைக் குறிப்பிட்டு ஐம்பது கோடி என எழுதப்பட்டிருந்ததாம், நெருக்கடியான நேரத்தில் ரஜினி கேட்டதாகவும், ஒரே இரவில் மொத்த பணத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், விசாரணையில் தெரியவந்ததாம். ஆனால் லைகா நிறுவனம் தரப்பில் அதுகுறித்து வாய்திறக்க மறுக்கிறார்களாம். ரஜினியை காப்பாற்றத்தான் இந்த மௌனம் என நினைக்கிறார்கள் அதிகாரிகள்.

மேலும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு நெருக்கமான இரண்டு நபர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தியிருக்கிறது அமலாக்கத்துறை. ராஜா அண்ணாமலைபுரத்திலிருக்கும் ஒரு வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியிருக்கிறதாம். உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையை நடத்திவரும் பாபு என்பவர் அலுவலகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள், அவரை நேரில் வரவழைத்தும் விசாரித்திருக்கிறார்கள்.
லைகா நிறுவனத்தின் நிர்வாகி அமலாக்கத்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்துடனான சில பணப்பரிமாற்ற விவரங்களும் இருப்பதாக கூறுகிறார்கள் சில அதிகாரிகள். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திலிருந்து தான் விலகிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார் உதயநிதி, ஆனாலும் அமலாக்கத்துறையின் பிடி அந்த நிறுவனத்தை நோக்கி இறுகுவதாகத் தெரிகிறது.
ஏலியன்ஸ் -2042 என்கிற படம் வருகிற மே-26 அன்று உலகம் முழுவதும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஆறு மொழிகளில் வெளியாகிறது. 777 பிக்சர்ஸ் வெளியிடுகிறது. கதைப்படி… தாய் பூமியில் காணப்படும் நீர் ஆதாரங்களை திருடும் நோக்கில்,ஏலியன்கள் […]
விமர்சனம்ஏலியன்ஸ் -2042 என்கிற படம் வருகிற மே-26 அன்று உலகம் முழுவதும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஆறு மொழிகளில் வெளியாகிறது. 777 பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
கதைப்படி… தாய் பூமியில் காணப்படும் நீர் ஆதாரங்களை திருடும் நோக்கில்,
ஏலியன்கள் உலகின் அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் அனைத்தின் மீதும் ஒரு பெரிய தாக்குதலை நடத்துகிறார்கள். ஏலியன்களுக்கு எதிராக போராட உலக நாடுகள் ஒன்றுபடுகிறார்கள். மற்ற அனைத்து இராணுவப் படைகளும் தோற்கடிக்கப்பட்ட பிறகு, விட்டுச் சென்ற சீன இராணுவமும் தோற்கடிக்கப்படுகிறது. தப்பிப்பிழைத்தவர்களில் செங் லிங் என்ற ஆர்வமுள்ள இளைஞர் ஒருவர் காவோ ரெனுடன் காதலில் விழுகிறார். தனது காதலியின் மீதான காதலைத் தொடரும்போது, செங்கிற்கு உயிருக்கே ஆபத்து ஏற்படும்படியான கட்டாயம் ஏற்படுகிறது. வேற்று கிரக வாசிகளால் மனித இனத்தின் உயிருக்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் பொறுப்பை ஏற்க நேர்கிறது.

கர்டெய்ன் ரோசர் ( CURTAIN RAISER ) அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் ALIENS-1986 என்ற படம் சிறந்த அறிவியல் புனைகதைகளில் ஒன்றாக இப்போதுவரை இருக்கிறது. இந்த கதையில் பல தொடர்கள் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஃபாக்ஸ் ஆபிஸில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஆனால் இன்றும் ஜேம்ஸ் கேமரூனின் ALIENS-1986 இன்றும் சினிமா விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களால் இன்றும் மதிக்கப்படுகிறது.

வேற்று கிரக வாசிகள் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற கருத்தின் வரிசையில், இந்தப்படம் ஏலியன்ஸ் -2042 ( ALIENS-2042 ) மே-26 உலகம் முழுவதும் வெளியாகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது செம்மிபாளையம், இப்பகுதியில் உள்ள ராஜகணபதி நகரில் வசித்து வருபவர் தங்கமணி (53). விவசாயியான இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் உள்ளனர். மேலும் இவர்களுக்கு சுமார் 2 அரை கோடி மதிப்பிலான பூர்வீக சொத்து கே. அய்யம்பாளையத்தில் […]
மாவட்ட செய்திகள்திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது செம்மிபாளையம், இப்பகுதியில் உள்ள ராஜகணபதி நகரில் வசித்து வருபவர் தங்கமணி (53). விவசாயியான இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் உள்ளனர். மேலும் இவர்களுக்கு சுமார் 2 அரை கோடி மதிப்பிலான பூர்வீக சொத்து கே. அய்யம்பாளையத்தில் க.ச. எண் 324/2 ல் உள்ளது. இந்நிலையில் மேற்படி பூமியை விற்க மூவரும் முடிவெடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு கோவையை சேர்ந்தப் ஜோமி.டி.ஜோசப் என்பவருக்கு பொது அதிகார பத்திரத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேற்படி பொது அதிகாரப்பத்திரம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தங்கமணிக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து ரத்துப்பத்திர நகலை பெற்று பார்த்தபோது தங்கமணி அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். பத்திரத்தில் தங்கமணி காலமாகிவிட்டதாக பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் பத்திரப்பதிவை பல்லடத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் மூலமாக தயாரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பத்திரத்தில் இதற்கு சாட்சியாக ஆராக்குளம் அரசுப்பள்ளி ஆசிரியை சுலோச்சனா என்பவரும், அனுப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரும் சாட்சிக்கையெழுத்திட்டுள்ளனர். மேலும் பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் பாலமுருக பிரபாகர் பதிவு செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கமணி உயிரோடு இருக்கும் தன்னை இறந்ததாக கூறி மோசடியாக பத்திரப்பதிவு செய்த தனது சகோதரர் சாமிநாதன் மற்றும் உடந்தையாக பாத்திரத்தை தயாரித்த வழக்கறிஞர் பல்லடத்தை சேர்ந்த ராஜேஷ் மற்றும் சாட்சி கையெழுத்திட்ட ஆசிரியை சுலோச்சனா மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் மீது தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை சென்னை, பார் கவுன்சில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்துள்ளார். மேலும் பத்திரப்பதிவில் சொத்தில் பங்கிருக்கும் ஒருவர் இறந்துவிட்டால் இறப்புச்சான்று, வாரிசுச்சான்று போன்ற சான்றிதழ்களை இணைக்க வேண்டும். எவ்வாறு பதிவாளர் மேற்படி பத்திரப்பதிவில் இறப்புச்சான்றோ, வாரிசுச்சான்றோ இல்லாமல் சார்பதிவாளர் பாலமுருக பிரபாகர் பதிவு செய்தார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் சட்டம் படித்து பல்வேறு முக்கிய வழக்குக்களை கையாண்டு கொண்டிருக்கும் வழக்கறிஞர் ராஜேஷ் எவ்வாறு இது போன்று அடிப்படை சான்றில்லாமல் பத்திரம் தயாரித்தார்? மேலும் உயிரோடு இருக்கும் ஒருவர் இறந்ததாக அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவரே சாட்சி அளித்திருப்பது பத்திரப்பதிவுத்துறையையே கேளிக்கூத்தாக்கியுள்ளது. மேலும் சார் பதிவாளர் பாலமுருக பிரபாகர் பல்வேறு புகார்களில் சிக்கி விசாரணை வளையத்தில் இருக்கும் நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருப்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரிடம் ரூ.7 லட்சம் ரொக்கமாக பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டார்.

மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் உயிருடன் இருக்கும் விவசாயியை இறந்ததாக கூறி எந்த வித சான்றிதழையும் பெறாமல் சர்வ சாதாரணமாக லஞ்சத்திற்காக பதவியை விற்கும் இது போன்ற அரசு அதிகாரி மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த பொதுமக்கள் கூறுகையில் வழக்கறிஞர்கள் உயிரோடு இருப்பவர்களை இறந்ததாக கூறி மோசடி செய்வது ஒன்றும் புதிதல்ல எனவும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கறிஞர் ஒருவர் தனது மனைவி இறந்ததாக கூறி வேறோரு பெண்ணை கொலை செய்து பின்னர் போலீசாரின் விசாரணையில் தெரியவந்து கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் எனவும் தெரிவித்தனர்.
சட்டத்தின் மீதும் அரசின் மீதும் கல்வித்துறை மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட இது போன்ற கூட்டு மோசடியில் ஈடுபடுவர்களுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு […]
சினிமாதென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றவுள்ளார்.
‘பிகில்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படத்திற்காக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இணைகிறது. #Thalapathy68 என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது ஏஜிஎஸ்-ன் 25-வது படைப்பு என்பதோடு இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் உருவாக உள்ளது.

சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என கடந்த 25 படங்களாக முத்திரை பதித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், #தளபதி68 அதன் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. ஏஜிஎஸ், தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் இந்த அற்புதமான கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அனைத்து பார்வையாளர்களாலும் விரும்பப்படும் சிறந்த பொழுதுபோக்கு படமாக #தளபதி68 இருக்கும். சர்வதேச தரத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளார்கள். நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் மற்றும் படத்தலைப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோரின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள #தளபதி68, 2024-ம் ஆண்டு வெளியாகும்.
ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. இப்படம் உலகமெங்கும் 2023 ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது. […]
சினிமாஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. இப்படம் உலகமெங்கும் 2023 ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது. பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் கிருபாகரன் பேசியதாவது.. இந்த படத்தின் டிரெய்லரை முன்னதாகவே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, எனக்கு மட்டுமில்லை எங்களின் சென்னை குழு அனைவருக்கும் பிடித்திருந்தது, அதுமட்டுமில்லை மும்பையில் எங்கள் தலைமை நிறுவனத்திற்கும் இதனை அனுப்பினோம் எங்களுக்கு ஏற்பட்ட அதே உற்சாகம் அவர்களுக்கும் இருந்தது அன்றே இந்த படத்தை ஜூன் மாதம் 2 ஆம் தேதி அன்று வெளியிடலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். இப்படிபட்ட படைப்பை அளித்த இயக்குநர் முத்தையாவிற்கு மிகவும் நன்றி என்றார்.

நடிகர் நரேன் பேசியதாவது…
எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி, இது மாதிரி கதாப்பாத்திரம் நான் இதுவரை செய்ததில்லை. இது ஒரு புது அனுபவமாக இருந்தது.. இந்தப் படத்தில் எல்லோரும் உண்மையாகவே ஒரு குடும்பம் போலத் தான் இருந்தோம், படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றியடையும் என்றார்.
நடிகர் R.K விஜயமுருகன் பேசியதாவது..
இயக்குநருடைய இரண்டு படங்களில் நான் நடிக்க வேண்டியதாக இருந்தது, ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அது நடக்கவில்லை. இந்தப்படத்தில் அது நிறைவேறிவிட்டது. இந்தப் படத்தில் நான் டப்பிங் பேச மிகவும் சிரமப்பட்டேன், சண்டைக் காட்சிகளில் ஆர்யா நிறைய உதவி செய்தார், ஆர்யாவிற்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என்றார்.

நாயகி சித்தி இதானி பேசியதாவது…
என்னுடைய முதல் படம் வெந்து தணிந்தது காடு படத்திற்கு, நீங்கள் நல்ல ஆதரவு கொடுத்தீர்கள் அதே போல் இந்த படத்திற்கும் ஆதரவு தர வேண்டும், அனைவருக்கும் மிகவும் நன்றி மகிழ்ச்சியாக உள்ளது படத்தை தியேட்டரில் வந்து அனைவரும் பார்க்க வேண்டும். ஆர்யா மிகச்சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தார். இந்தப்படம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றார்.

இயக்குநர் முத்தையா பேசியதாவது…
இது என்னுடைய எட்டாவது படம். எனது அனைத்து படங்களும் ஒரு உறவைப் பற்றிய கதையாக இருக்கும் ஆனால் இந்த படத்தில் நன்றி உணர்வைப் பற்றிக் கூற முயற்சி செய்துள்ளேன், படத்தில் அனைத்து கதாபாத்திரமும் ஒரு உணர்வை மற்றும் உறவைச் சொல்லும், படத்தின் கதைக்களம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பது போல அமைந்துள்ளது, நிறைய நகரப் படங்கள் வருகிறது, இந்த கிராமத்து மண் படத்தையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும். இந்தப் படத்தில் அனைவரும் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளனர். தயாரிப்பாளர் மிகப்பெரிய ஆதரவு எனக்குக் கொடுத்தார், படம் மிகவும் அருமையாக வந்துள்ளது என்றார்.

நடிகர் ஆர்யா பேசியதாவது.. முத்தையா பயங்கரமான சிட்டி சப்ஜெக்டோட என்னிடம் வந்தாரு, இது வேண்டாம் ஒரு கிராமத்துப் படம் பண்ணனும் அதுவும் உங்க கூட பண்ணனும்னு சொன்னேன், அவர் இந்தக் கதையோடு திரும்ப வந்தாரு. அவரோட படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும், எமோஷன் எப்பவும் சூப்பரா இருக்கும், சீன் சொல்லும் போதே அழுதுருவாரு. அவர் மாதிரி என்னால நடிக்க முடியுமானு பயமா இருக்கும், நிறைய நிறையச் சம்பவங்கள் கதைகள் சொல்லிக்கொண்டே இருப்பாரு. மிகத்திறமையான இயக்குநர். தயாரிப்பாளர்கள் அவ்வளவு உறுதுணையா இருந்தாங்க. ஜீ ஸ்டூடியோஸ் எப்பவும் எனக்கு பெரிய சப்போர்ட் தந்திருக்காங்க, இந்தப்படத்துக்காகவும் தந்திருக்காங்க ஹீரோயின் என்ன விட அவங்களுக்கு டயலாக் அதிகம் அவங்களுக்கு நிறைய காட்சிகள் இருக்கு, சாதாரணமா வந்துட்டு போற ஹீரோயின் ரோல் இல்ல. சூப்பரா நடிச்சிருக்காங்க, ஒரு செம்மையான டீம் முத்தையா வச்சிருக்காரு. டெக்னிகலா எல்லோருமே அட்டகாசமா பண்ணிருக்காங்க. எல்லோரும் ஒரு குடும்பமா தான் இருந்தாங்க. என்னோட படங்கள்ல இந்தமாதிரி தோற்றம் பண்ணதே இல்லை என்றார்.
“காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்படம் உலகமெங்கும் 2023 ஜீன் 2 ஆம் தேதி படம் வெளியாகிறது.

Evolution entertainment நிறுவனம் Blueberry studios உடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்க, விஜய் டீவி புகழ் KPY நவீன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம், காட்டேஜ். ஃபர்ஸ்ட் லுக் மூலம் எதிர்பார்ப்பை […]
சினிமாEvolution entertainment நிறுவனம் Blueberry studios உடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்க, விஜய் டீவி புகழ் KPY நவீன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம், காட்டேஜ். ஃபர்ஸ்ட் லுக் மூலம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.
ஒரு காட்டேஜ், ஒரு தம்பதி, அவர்களை அமானுஷ்யமாக பின் தொடரும் ஒரு மனிதன் அப்போது நடக்கும் கொலை, அதை யார் செய்தது என்பதை இருக்கை நுனியில் பரபரப்பாகச் சொல்லும் மர்டர் மிஸ்டரி திரில்லர் தான் காட்டேஜ். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முழுக்க முழுக்க ஊட்டிப் பின்னணியில், நடக்கும் இப்படத்தின் மொத்தப்படப்பிடிப்பும் ஊட்டியில் 25 நாட்களில் நடத்தி முடித்துள்ளது படக்குழு.
இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் டிவி புகழ் KPY நவீன் முரளிதர் நாயகனாக அறிமுகமாகிறார். ஆரியா செல்வராஜ் நடிக்கிறார். கஜராஜ், தர்மா, விக்னேஷ் ராமமூர்த்தி, ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.