கடலூர் மாவட்டம் ஶ்ரீ முஷ்ணம் வட்டாரத்தில் உள்ள ஶ்ரீ நெடுஞ்சேரி கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பயன்பாட்டிற்காக 2023-2024 ஆம் நிதியாண்டில் கழிவறை கட்டிடம் கட்டப்பட்டது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான கழிவறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுகளைக் கடந்தும், மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருப்பது மிகவும் வேதனையான விஷயமாக அப்பகுதியினர் கருதுகின்றனர்.
மேலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு களை கடந்தும், பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் மெத்தனமாக இருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்வதோடு, கழிவறை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக திறக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
_ பாலகிருஷ்ணன்
