சமீபத்தில் வெளியான நானியின் தசரா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை படைத்துள்ளது. இனி கதைத் தேர்வில் மிகுந்த கவனம் காட்டுவதே நல்ல எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் சொன்ன அறிவுரை, நானியை ரொம்பவும் யோசிக்க வைத்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து பலரிடமும் கதை கேட்ட நானி, அடுத்து மலையாள இயக்குனர் ஜித்து ஜோசப்புடன் கைகோர்க்க முடிவெடுக்கிறார். ஜித்து ஜோசப் சொன்ன க்ரைம் த்ரில்லர் கதை நானிக்கு ரொம்பவே பிடித்துப் போனதால் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.
