நடிகை ஶ்ரீ தேவி விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து இளம் வயதிலேயே எம்ஜிஆர், சிவாஜி படங்களில் நடிக்கத் தொடங்கி, பின்னர் ரஜினி, கமல் என முன்னனி நட்சத்திரங்களுடனும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நடித்து புகழின் உச்சத்தில் இருக்கும் போது, இந்தி திரையுலகில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே குடியேறி இல்லற வாழ்க்கையை தொடங்கினார். சில காலம் கழித்து மீண்டும் நடிப்பை தொடர்ந்து தனது இறுதிக் காலங்களில் மீண்டும் தமிழ் திரையுலகில் இளைய தளபதி விஜய்யிடன் நடித்து தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தார்.

அவரைப் போலவே அவரது மகள் ஜான்வி கபூரும் தமிழ் திரையுலகில் தனது அம்மாவைப் போல் புகழ் பெற வேண்டும் என, தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது ஜான்வி கபூர், இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தில் நடிக்கப் போகிறார் என திரையுலகினர் மத்தியில் பேசப்படுகிறது. இரு தரப்பிலும் இது குறித்த விளக்கம் வெளியாகாத நிலையில், இந்தியில் அருண் தவானை வைத்து இயக்கவிருக்கும் படத்தில்தான் ஜான்வி கபூரை ஜோடியாக்க அட்லி திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள்.

உண்மையில் தமிழில் பக்காவான எண்ட்ரி கொடுக்கத்தான் நல்ல இயக்குனரைத் தேடி வருகிறாராம் ஜான்வி கபூர். இயக்குனர் சங்கர் தொடங்கி அ. வினோத் வரை அத்தனை இயக்குனர்களும் தற்போது மிகவும் பிஸியாக இருப்பதால், நல்ல கதையுடன் யார் வந்தாலும் ஓகே என்கிறாராம் ஜான்வி கபூர்.
